Jump to content

வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொலிப்பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மகா சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.

அரசாங்கத்தின் பொறுப்பு இது. 500 மகா சங்கத்தினரை அழைத்துக் கொண்டு வடக்கு – கிழக்கிலுள்ள விகாரைகளுக்குச் செல்ல நான் தயார்.

அங்குள்ள விகாரைகளை நாம் பார்வையிடுவோம். தொல்பொருட்கள் தொடர்பாக தேடிப் பார்ப்போம்.

இவற்றை பாதுகாக்க நாம் தவறிவிட்டால், எதிர்க்காலத்தில் தர்ம யுத்தத்திற்கு முகம் கொடுக்க நேரிடும்.

பௌத்தர்கள் எழுந்தால், அவர்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது. இப்போதே நாம் தாமதப்படுத்திவிட்டோம்.

அம்பிட்டிய சுமன ரத்ன தேரர், எமக்கான எச்சரிக்கையொன்றைத்தான் விடுத்துள்ளார். வடக்கு- கிழக்கின் பல இடங்களில் விகாரைகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அங்கு கோயில்கள் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பிரித் ஓதக்கூட அங்கு அனுமதியில்லை.

இதற்கு அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாம் அரசாங்கத்திற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைத்து போராடுவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1356408

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு ஸ்ரைலில, அட வாப்பா, நம்ம ஏரியாவுக்கு வா... என்று சொல்லத்தான் இருக்குது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடு முதலாளிகளின் பாதுகாப்பில் பெளத்த விகாரைகள்......சூப்பரோ சுப்ப்ர்...🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர வேண்டும். வந்து.. பெளத்த தேரர்களை பத்திரமாக வீட்டுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அவர்களும் பாவம் தானே.. சிங்கள பெளத்த பேரினவாத பேராசை அரசியல்வாதிகளின் பேச்சைக்கேட்டு எவ்வளவு காலம் தான் ஆட்டம் போடுவது. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடியும் வரைக்கும் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டே இருக்கும். சடடம் ஒழுங்கு இல்லாத நாட்டில் யாரும் எதையும் பேசலாம் செய்யலாம். இந்த நாய் எப்போது யாரை கடிக்கும் எண்டு சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.