Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3    04 NOV, 2023 | 08:02 PM

image

ஆர்.ராம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு நடைபெறவுள்ளது.

அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநாட்டுக்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே, கட்சியின் அரசியல் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி மாநாட்டுக்கான திகதியை இறுதி செய்தல் விடயம் மட்டுமே கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், கட்சியின் புதிய யாப்பு தொடர்பிலும் அதில் திருத்தப்பட வேண்டிய சில விடயங்கள் தொடர்பிலும் உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

மேலும், சில உறுப்பினர்கள், சம்பந்தனை இராஜினாமச் செய்யுமாறு சுமந்திரன் பொதுவெளியில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலும் கேள்வி எழுப்பவுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேநேரம், சுமந்திரன் தரப்பிலும், குறித்த விடயம் சம்பந்தமாக கேள்விகள் எழுப்படுகின்ற போது அதற்கான தக்கபதில்களை வழங்குவதற்கான தயார் நிலைமைகள் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது. 

குறிப்பாக, ஏற்கனவே கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக, சம்பந்தனிடத்தில் பதவி விலகும் விடயத்தினை பக்குவமாக பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி சுமந்திரன் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/168506

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வவுனியாவில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்   

05 NOV, 2023 | 02:29 PM
image

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (05) நடைபெறுகிறது.    

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்று வரும் இக்கூட்டத்தில் செயலாளர் ப.சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.  

இக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் மாநாடு, சமகால அரசியல் நிலைமைகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விவகாரம், கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் விவகாரம், காணி அபகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unnamed.jpg

https://www.virakesari.lk/article/168565

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமத்திரன் மீது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காகஅனந்திக்கும் ரவிகரனுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த மாதிரி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 minutes ago, புலவர் said:

சுமத்திரன் மீது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காகஅனந்திக்கும் ரவிகரனுக்கும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த மாதிரி. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?. 

ஒழுங்காற்று நடவடிக்கை எடுப்பது என்றால்,
தமிழரசு கட்சியின் தலைவர் என்ற முறையில்... மாவை சேனாதிராஜாதான் எடுக்க வேண்டும்.
அதுக்கு... அவர், சரிப்பட்டு வர மாட்டார்.  😂

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவங்கட கட்சி தலைமை பதவி தான்.. இப்ப தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சனையாகிவிட்டது. போடாங்க்... 🥵

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nedukkalapoovan said:

இவங்கட கட்சி தலைமை பதவி தான்.. இப்ப தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சனையாகிவிட்டது. போடாங்க்... 🥵

விளக்குமாத்தின்ரை திறத்திலை.. குஞ்சம்  தேவைப்படுகுதாம். 😂



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.