Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை மையப்படுத்தி பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதென ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

அத்துடன், இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் காலத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளது.

மன்னரில் உள்ள ரெலோவின் அலுவலகத்தில் வார இறுதியில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1357332

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆபத்தான விசையம் காரணம் தமிழ் கட்சிகளுக்கிடையில் இதுவரையில் கொள்கை ரீதியில் எந்த ஒற்றுமையும் காணப்படவில்லை அதாவது அனைத்துத் தமிழ் கட்சிகளும் பிரிந்து நின்றாலும் இறுதி இலக்குபற்றிய ஒரு பொதுவான கருத்தோ அல்லது முடிவோ இல்லாமல் இந்தியாவினது ஏனைய பிற சக்திகளினதும் கைப்பாவையாகச் செயற்படுகிறார்கள் இவர்கள் பொது வேட்பாளரைக் களமிறக்கினால் நிச்சயம் எதிர்காலத்தில் சிங்களத்தரப்பு அதை உதாரணத்துக்கு இழுத்துவிடும் "பாருங்களேன் இவர்களது அரசியல் தீர்வுபற்றி உலக அரங்கில் முன்வைத்த கோரிக்கையைச் சொந்த மக்களே நிராகரித்துவிட்டார்கள் ரணில் தரப்புக்கும் மகிந்த தரப்புக்கும் போடப்பட்ட வாக்குகள் அனைத்தும் இவர்களது தீர்வு வேண்டிய கோரிக்கைகளை நிராகரித்தகாகவே கருதவேண்டும்" எனக்கூறி அனைத்தையும் நடுத்தெருவில விட்டுவிடுவார்கள்

முள்ளிவாய்க்கால் முடிவுற்ற கையோடு நடந்த அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்குக்கூட கணிசமான வாக்குகள் வடக்கிலிருந்து பெறப்பட்டது. இப்போதைக்குப் போதாக்குறைக்கு அங்கயன் வடமாகணத்தில் அதிகூடிய வாக்குகளை அதுவும் தேசியத்தலைவர் பிறந்த ஊரை உள்ளடக்கிய உடுப்பிட்டியில் பெற்றுக்கொண்டதும் டக்ளஸ் தனக்கான வாக்கை தக்கவைத்திருப்பதும் விஜயகலா தனக்கு என வாக்கு வங்கி வைத்திருப்பதும் முதலில் கணக்கில் எடுக்கப்படல்வேண்டும் 

இந்தப் பொது வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட எண்பது விகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால்தான் கரிசனைக்கு உட்படுத்தப்படும். அதாவது அவர்கள் இந்ததேர்தலின்மூல வைக்கப்படும் செய்தி அனைத்துத் தரப்புக்கும் கொண்டுபோய்ச்சேர்க்கப்படும். 
ஆனால் இந்த அரசியல் தற்குறிகளால் எதையும் சாதிக்க முடியாது முறவெளியில் மாட்டுவண்டிச் சவாரிக்குப் பூட்டிய மாடுகள் இடமாகவும் வலமாகவும் இழுத்துகோண்டு ஓடுவதுபோல் இவர்களது அரசியல் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் : ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானம்.

ரணிலை ஓரங்கட்ட இந்தியா எடுக்கும் முதல் முயற்சி.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

ரணிலை ஓரங்கட்ட இந்தியா எடுக்கும் முதல் முயற்சி.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இனி என்ன இந்தியா சூழ்ச்சிசெய்யிறது. எவன் வந்தாலும் சீன சார்பு அரசுதான். இந்தியா என்னதான் சிலம்பம் அடித்தாலும், இலங்கை சீன சார்பு நாடுதான். இங்கு தமிழன் இருக்கிறதால்தான் கொஞ்சமாவது இந்தியா பாதுகாப்பாக இருக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

ரணிலை ஓரங்கட்ட இந்தியா எடுக்கும் முதல் முயற்சி.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இல்லை.

தமிழர்கள், இந்த தேர்தலை ஒரு குடியொப்பமாக மாத்த வேண்டும்.

ஆனால், இவர்கள் நோக்கம் அது என்று நான் நிணைக்கவில்லை. பணம் பெறவோ என்று தெரியவில்லை!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.