Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

roshan.jpg?resize=720,375&ssl=1

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தம்.

இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்த இடைக்கால குழுவில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.ஐ. இமாம், ரோஹினி மாரசிங்க, ஐரங்கனி பெரேரா, கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, பட்டய கணக்காளர் ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் உள்ளடங்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்த புதிய இடைக்கால குழு நியமனத்துடன், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாக சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1357317

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் வாரியம் அடியோடு கலைப்பு - ரணதுங்கா தலைமையில் இடைக்கால குழு அமைப்பு

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,NEWS 1ST

6 நவம்பர் 2023

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் அவ்வப்போது செய்திகளில் வரும் கிரிக்கெட் வாரியம் பற்றி இலங்கை விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான பார்வை இல்லை என்பதே இப்போதைய நிலை.

இந்த பின்னணியில், தேர்தல் நடைபெறும் வரை அல்லது மேலும் அறிவிப்பு வரும் வரை இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நடத்த இடைக்கால கிரிக்கெட் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை அணி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது. இந்த நேரத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த இடைக்கால கிரிக்கெட் குழு இலங்கையின் விளையாட்டு ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திசையில் கிரிக்கெட்டை வழிநடத்த முடியுமா?

இடைக்கால குழு ஏன் நியமிக்கப்பட்டது?

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஐ. இமாம், ரோகினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏரங்கனி பெரேரா, சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் உபுல் தர்மதாச ஆகியோர் இடைக்கால குழுவின் பிற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தமானி அறிவிப்பின்படி, புதிய இடைக்கால குழுவுக்கு மூன்று அடிப்படை பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த பொறுப்புகள் என்னவென்றால்:

  • இலங்கை கிரிக்கெட் வாரிய முறைகேடுகள் குறித்த தணிக்கை அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த தேவையான விசாரணைகளை நடத்துதல் மற்றும் உரிய நடவடிக்கை எடுத்தல்.
  • சம்பந்தப்பட்ட விசாரணைகள் சுயாதீனமாக, வெளிப்படையாகவும் நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் பொருட்டு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ள காலத்திலும், இடைக்கால நிர்வாகக் குழு மேற்கொள்ளும் விசாரணைகள் நிறைவடைந்து, சீரமைப்பு நடவடிக்கை டுக்கப்படும் வரை, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் முறையாக பராமரிக்கப்படும்.
  • தொடர்புடைய தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்குதல் மற்றும் நடவடிக்கைகளைத் தயார் செய்தல்.
இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடைக்கால கிரிக்கெட் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து திசைகளிலும் எதிர்ப்பு

புதிய இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் அர்ஜூனா ரணதுங்கா , நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட் அணியை உருவாக்குவதே தனது முதன்மை நோக்கம் என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

"என் முதல் பணி, நாட்டை நேசித்து நாட்டுக்காக விளையாடும் அணியை உருவாக்குவதாகும். மேலும், கடந்த காலத்தில் நாட்டின் கிரிக்கெட் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணத்தை தனித்தனியாக கண்டறிய முயற்சிப்பேன். கிரிக்கெட்டை ஊக்குவிக்க அனைத்து மூத்த வீரர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுகிறேன்."

"நாங்கள் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நாட்டை நேசிக்கும் வீரர்களின் குழுவை உருவாக்க விரும்புகிறோம். 2.2 கோடி மக்களை நேசிக்கும் ஒரு குடும்பத்தைப் போன்ற ஒரு அணியை உருவாக்க விரும்புகிறோம்." என்று அவர் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,SRILANKAN MINISTRY OF SPORTS

நடப்பு உலகக்கோப்பையில் தொடர் தோல்விகள் காரணமாக ரசிகர்கள் உட்பட பல தரப்பினரும் இலங்கை கிரிக்கெட் வாரியம் மற்றும் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் முன்பு ரசிகர்கள் உட்பட மக்கள் தர்ணா மற்றும் சத்தியாகிரகம் நடத்தி தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பின்னணியில்தான் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா கடந்த சனிக்கிழமை (நவம்பர் 5) தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த ஆண்டு செயல்பாடு என்ன?

இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி உட்பட இலங்கை அணி இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது.

இதில் இலங்கை அணி 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மற்றும் 13 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்த வகையில் இலங்கைக்கு எதிராக ஆடிய ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஓமன், நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை இந்த ஆண்டு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

1975 முதல், இலங்கை அணி 907 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் 415 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தோல்வியடைந்த போட்டிகளின் எண்ணிக்கை 448.

ஐந்து போட்டிகள் டிரா ஆகியுள்ளன மற்றும் 39 போட்டிகள் முடிவின்றி முடிந்துள்ளன.

ஒருநாள் போட்டிகளில், இலங்கை அணியின் வெற்றி விகிதம் 45.75 சதவீதமும், தோல்வி விகிதம் 49.39 சதவீதமும் ஆகும்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை 8வது இடத்தில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

"இது ஒரு சுவிட்சை அணைப்பது போல் இல்லை"

இலங்கை கிரிக்கெட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுக்க புதிய திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்று பிபிசி சிங்களத்துடன் பேசும்போது மூத்த கிரிக்கெட் வர்ணணையாளர் ரோஷன் அபேசிங்க தெரிவித்தார்.

"இதை கட்டமைப்பது, சுவிட்சைப் போட்டு அணைப்பது போல் இல்லை. அடிப்படையிலிருந்து திட்டங்களைத் தயாரிக்க வேண்டியது அவசியம்."

"இந்திய அணியிடம் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இலங்கை கிரிக்கெட் முடிந்துவிட்டது என்று நான் சொல்லவில்லை. நாங்கள் போட்டிகளில் வென்றிருக்கிறோம். நாங்கள் ஆசியாவின் T20 சாம்பியன்கள் மற்றும் ஆசியாவின் 50 ஓவர் தொடரின் இரண்டாவது இடம் பிடித்தவர்கள். பிறர் சொல்வது போல் முற்றிலும் தடம் மாறிப்போகவில்லை. அப்படி இருந்தால், உலகக் கோப்பைக்கு தகுதி பெறக்கூட முடியாது. ஆனால் நாங்கள் விளையாடிய விதத்தில் எங்கள் கிரிக்கெட் நல்ல இடத்தில் இருப்பதாக சொல்ல முடியாது" என்றார்.

"எங்கு தவறு நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம்"

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை கிரிக்கெட் அணி தாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை உடனடியாக கண்டறிய வேண்டும் என்றார்.

கிரிக்கெட் நிர்வாகம் விரைவில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

"இந்தப் பிரச்சினை குறித்து நாம் ஆராய வேண்டும். கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் இந்தப் பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது மற்றும் எங்கு தவறு செய்தோம் என்பதை அறிய இப்போதே விசாரணை நடத்த வேண்டும்."

"இது பயிற்சியில் ஏற்பட்ட தவறா, வீரர்களால் ஏற்பட்ட தவறா, அல்லது எங்கள் உயர் செயல்திறன் மையத்தில் ஏற்பட்ட தவறா? வெளியில் இருந்து பார்ப்பதை நாங்கள் கூறுகிறோம், ஆனால் இன்னும் ஆழமாக சென்று எங்கு தவறு செய்தோம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்."

"எங்கள் உள்நாட்டு போட்டிகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன, 19 வயதுக்குட்பட்ட மற்றும் பள்ளி கிரிக்கெட் முறை ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டும். வீரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது எளிதில் செய்யக்கூடிய ஒன்று அல்ல என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

"இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு தெளிவான திட்டம் இருக்க வேண்டும்"

முன்னணி வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்க இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு இப்போது முதலே தெளிவான திட்டம் இருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கும் 2027 உலகக் கோப்பை ஒருநாள் தொடருக்கும் இப்போதே திட்டம் தேவை என்று கூறினார்.

"இந்த ஆண்டு உலகக் கோப்பை முடிந்துவிட்டது. 2027 உலகக் கோப்பையில் நாம் எங்கு இருக்கப் போகிறோம் என்பதற்கு தெளிவான திட்டம் தேவை.

இந்த இலக்குகளை தெளிவாக அடையாளம் கண்டுள்ளோமா? அவற்றுக்கு என்ன தேவை? அவற்றை நாம் தயார் செய்ய வேண்டும்.

இந்தியாவுடன் நடக்கும் போட்டியில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தால், அது முழு நாட்டையும் காயப்படுத்தும். அது வெட்கக்கேடானது. மக்கள் நடந்து கொள்ளும் விதம் நியாயமானதே.

எங்கள் கிரிக்கெட் தடம் மாறிவிடவில்லை, ஆனால் வளர்ச்சி இருக்க வேண்டும். நாங்கள் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

"பயிற்சியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை."

பிபிசி சிங்களம் இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பயிற்சியாளர்கள், அவர்கள் விளையாடிய போட்டிகள் மற்றும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகள் குறித்து ரோஷன் அபேசிங்கிடம் கேட்டது.

"இது மிகவும் தவறு. அவர்களின் அறிவு மற்றும் திறனை அவர்கள் விளையாடிய போட்டிகளால் அளவிட முடியாது." என்று அவர் பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், "நவீத் நவாஸ் அவரது காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் விளையாடிய தேசிய அணியைப் பார்க்கும்போது, அவர் அணிக்குள் நுழைய முடியவில்லை. அது அவரது தவறு அல்ல. அவருக்கு நல்ல அனுபவம் உண்டு. பியால் விஜேதுங்கவுக்கும் அப்படித்தான்.

இங்கு இருக்கும் பயிற்சியாளர்களின் பயிற்சித் திறனை அவர்கள் விளையாடிய போட்டிகளைப் பார்த்து நீங்கள் மதிப்பீடு செய்ய முடியாது.

பின்னர் மைக் ஹெஸன் நியூசிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவர் ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. ஜான் புக்கானன் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். அவர் ஒரு முதல் தரப் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் அவர்கள் வெற்றிகரமான பயிற்சியாளர்கள்.

ஒரு பயிற்சியாளர் தனது அணியும் அதன் வீரர்களும் விளையாடும் விதத்தால் வெற்றி பெறுகிறார். பயிற்சியாளரால் செய்யக்கூடியது இவ்வளவுதான். அவர் மைதானத்துக்குச் சென்று பேட் செய்ய முடியாது. நாம் பயிற்சியாளர்களை குறை கூறுகிறோம்.

 

ஆனால் பயிற்சியாளர்கள் எங்கு தவறு செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக, மனரீதியாக. ஆனால் பேட்ஸ்மேன்களின் வெற்றிக்கும் அணியின் வெற்றிக்கும் பயிற்சியாளர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஒவ்வொரு வீரருக்கும் குறிப்பிட்ட பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு திட்டம் இருக்கிறது. அந்தத் திட்டம் தவறாக இருந்தால் கண்டுபிடிக்க வேண்டும்.

குற்றத்தை யார் மீது சுமத்த வேண்டும் என்று நாம் தேடுகிறோம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளில், நாம் சரியான நடைமுறையைப் பின்பற்றி, எங்கு தவறு நடந்தது என்பதை துல்லியமாக கண்டறிய வேண்டும்" என்றார்.

இந்திய அணியை கண்டு நடுக்கமா?

மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்க, இந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இலங்கை அணி மிகக் குறைந்த ரன்களுக்கு தோல்வியடைந்ததற்கான மனநிலையை ஆராய வேண்டும் அல்லது இந்தியாவுடன் போட்டியில் உள்ள பிரச்சனையை ஆராய வேண்டும் என்று கூறினார்.

இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன்களுக்கு தோல்வியடைந்த போதிலும், உலகக் கோப்பையின் மற்ற போட்டிகளில் இலங்கை அணி நன்றாக விளையாடியதாக ரோஷன் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.

உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு எதிராக போட்டிகளில் நன்றாக விளையாடிய இலங்கை அணிக்கு இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ஏதேனும் அச்சம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

"55 ரன்களுக்கு இந்தியாவிடம் தோல்வியுற்ற அதே அணி, உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. மேலும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோற்ற போதிலும் 320 ரன்கள் எடுத்தது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 340 ரன்கள் எடுத்தது.

இவ்வாறு மற்ற அணிகளை வீழ்த்திவிட்டு ஒரு அணிக்கு எதிராக இவ்வாறு விளையாடுவதில் என்ன சிக்கல் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

 

இந்தியாவை கண்டு பயம் இருந்தால், அதை ஆராய வேண்டும். அதற்கு உளவியல் ஆலோசகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியைப் பெற்று பிரச்சனை உள்ள பகுதிகளைக் கண்டுபிடித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இது மட்டைக்கும் பந்துக்கும் இடையே விளையாடப்படும் விளையாட்டு. இதுபோன்ற விஷயங்களை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மனரீதியான உதவி தேவைப்பட்டால், அது வழங்கப்பட வேண்டும்.

இந்த உலகக் கோப்பையில் மற்ற அணிகளுடன் நன்றாக விளையாடியதால் இந்தியாவில் இருந்து அதிக அழுத்தம் உள்ளது, மற்ற அணிகளிடமிருந்து அழுத்தம் இல்லை என்பதை நான் பார்க்கிறேன்." என்றார்.

இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களின் தொடர் காயங்கள் குறித்தும் ரோஷன் அபேசிங்க கருத்துத் தெரிவித்தார்.

வீரர்களுடன் பணிபுரியும் பயிற்சியாளர்கள், உடல் சிகிச்சையாளர்கள் மற்றும் மருத்துவர்கள் காயங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

அவர் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது வீரர்களின் உடல்நிலையைக் கவனிக்க பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழு உள்ளது என்றும் கூறினார்.

ஒரு வீரர் காயமடைந்தால், அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்பவர்கள் அதைத் தவிர்க்க முடியாது என்றும் கூறினார்.

"தாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று முன்வந்து கூற வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது. உதாரணமாக, வனிது ஹசரங்க பற்றிய ஒரு கதை இருந்தது. அவர் உடல்நலத்துடன் வந்தார், ஆனால் பயிற்சியின் போது அவர் மீண்டும் காயமடைந்தார். அது எப்படி நடந்தது என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியை கண்டு  இலங்கைக்கு பயமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

மேலும், துஷ்மந்த சமீராவின் உடல்நிலை எல்பிஎல் போட்டியில் விளையாட தகுதி இல்லை என்றால், வீரர்களின் உடல்நிலை கண்காணிப்பவர்கள், அவர் இப்படி விளையாடினால் ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பையில் விளையாட முடியாது என்று கிரிக்கெட் வாரியத்திடம் கூற வேண்டும்.

அவர் LPL போட்டியில் விளையாடாததால் அவருக்கு ஏதேனும் நிதி இழப்பு இருந்தால், கிரிக்கெட் வாரியம் ஒரு முடிவை எடுத்து அவருக்கு வழங்க வேண்டும். வனிது ஹசரங்காவிற்கும் இதேதான் செல்லும். இதுபோன்ற முக்கிய விஷயங்களில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

உலகின் பிற நாடுகளிலிருந்தும் வீரர்கள் லீக் தொடர்களில் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் நமது வீரர்களை விட அதிகமாக லீக் தொடர்களில் விளையாடுகிறார்கள். ஏன் அவர்கள் காயமடைவதில்லை? பிரச்சனை லீக் தொடர்களில் இல்லை, வீரர்கள் மருத்துவ ரீதியாக நிர்வகிக்கப்படும் விதத்தில் உள்ளது." என்றார்.

இதற்கிடையில், இலங்கை பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்து திறமையான வீரர்களின் குழுவை கண்டுபிடிக்கும் வாய்ப்பு இலங்கை அணிக்கு இருந்ததாக அவர் கூறினார்.

"LPL தொடர் இலங்கை அணிக்கு டி20 ஆசிய கோப்பையை வெல்ல உதவியதாக நான் நம்புகிறேன். இத்தகைய சூழ்நிலையைப் பார்க்கும்போது, லீக்கில் எந்த தவறும் இல்லை." என்றார்.

இலங்கை அணி மீண்டு வர முடியுமா?

இலங்கை கிரிக்கெட் தனது தற்போதைய நிலையில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளதா என்று மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கேவிடம் கேட்டோம்.

அவர், 1996ம் ஆண்டு உலக சாம்பியன்களாக இருந்த இலங்கை அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற 1999ம் ஆண்டு உலகக் கோப்பையில் பெரும் தோல்வியை சந்தித்ததாக கூறினார். இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்த இலங்கை மீண்டும் எழுந்து நின்றதாக சுட்டிக்காட்டினார்.

"இந்த நாடு ஒருபோதும் ஏமாற்றப்பட முடியாது. இந்த நாட்டில் பிறவித் திறமைகள் நிறைந்த பல வீரர்கள் உள்ளனர். அதனால்தான் தில்ஷன் மதுசங்க, மதிஷா பத்திரண, பத்தும் நிசங்கா போன்ற வீரர்களை பார்க்க முடிந்தது. இந்தியாவிடம் 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் இந்த நாட்டில் கிரிக்கெட் முடிந்துவிடாது.

நாங்கள் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் விளையாடும்போது, தோற்ற அந்தப் போட்டிகளை மறந்துவிடுவோம். ஆனால் அது நாங்கள் மீண்டு வந்தோம் என்று அர்த்தம் இல்லை. போட்டியில் வெற்றி பெற்றதால் எங்கள் கிரிக்கெட் நல்ல நிலையை எட்டியது என்று அர்த்தமல்ல.

 

படிப்படியாக முன்னேற ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும். அது எப்போதும் ஒரு சவால் தான்.

நாங்கள் சிறந்த அணி என்று யாரும் சொல்ல முடியாது. இங்கிலாந்து அணிக்கு என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். கடந்த முறை 50 ஓவர் உலக சாம்பியன்களுக்கு இந்த முறை உத்தரவாதம் இல்லை.

வீரர்கள் கடினமாக உழைக்க வேண்டும். புதிய திட்டங்கள் தேவை. இந்த விளையாட்டு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. அதன்படி, நாங்கள் மாற வேண்டும் மற்றும் ஒரு திட்டத்தின்படி முன்னேற வேண்டும். பிறகு வெளியே வருவோம்.

கிரிக்கெட் ஒரு போட்டி மிகுந்த விளையாட்டு. எனவே நீங்கள் எப்போதும் முதல் இடத்தில் இருக்க முடியாது. இந்த போட்டியை எதிர்கொள்ள ஒரு அணியாக தயாராக இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cp6ped848y2o

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளியேறினார்!

Published By: DIGITAL DESK 3   07 NOV, 2023 | 12:52 PM

image

இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின்  தலைவராக நேற்று நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க, நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழைமை (07)  பிறப்பித்த இடைக்கால உத்தரவின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து  வெளியேறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் நேற்று (06)  நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழு மற்றும் இலங்கை கிரிக்கெட்  நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, கிரிக்கெட்  இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/168723

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத அரசுக்கு இதுவும் வேண்டும். இன்னும் வேண்டும்.
அனுபவமுள்ள பயிற்சியாளர், வீரர்களின் தெரிவு மிக முக்கியம். இரண்டிலும்  கோட்டை விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட்டை கடவுளே காப்பாற்ற வேண்டும்; சூழ்ச்சியின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பதை நிச்சயம் வெளிப்படுத்துவேன் - அர்ஜூன

Published By: VISHNU   07 NOV, 2023 | 09:08 PM

image

(எம்.வை.எம்.சியாம்)

பொறுப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் பதவிக்கு வரவில்லை. கிரிக்கெட் மீது கொண்ட பற்றின் காரணமாகவே வந்தோம். சரிந்துள்ள கிரிக்கெட் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது. இருப்பினும் சிலரின் செயற்பாடுகள் மிகுந்த கவலையளிக்கிறது. 

நாட்டையும், நாட்டின் கிரிக்கெட்டையும் இனிமேல் கடவுளே காப்பாற்ற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பின்னடைவு, அது தொடர்பில் நாடு முழுவதும் எழுந்துள்ள அதிருப்தி காரணமாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாக சபையை  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நியமித்தார். 

எவ்வாறாயினும் செவ்வாய்க்கிழமை (7) இந்த புதிய இடைக்கால நிர்வாக சபைக்கு நீதிமன்றம் 14 நாட்களுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (7) ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புதிய கிரிக்கெட் சபைக்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை ஊடகங்கள் மூலமாகமே அறிந்து கொண்டோம். நாட்டின் பிரஜை என்ற வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படுகிறோம்.

பதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என நான் வரவில்லை. இருப்பினும் இறுதி முயற்சியாக ஒரு தடவை சரிந்துள்ள கிரிகெட்டை கட்டியெழுப்பலாம் என்றே வந்தேன். இலங்கை கிரிகெட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. இருப்பினும் பதவி பொறுப்புகளில் இருந்து  ஊழல், மோசடி செய்தவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று தடையுத்தரவை பெறுவார்களாயின் இவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.

நாடு நெருக்கடிக்குக்கு முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் குறைந்தது இலங்கை கிரிகெட்டையேனும் சரி கட்டியெழுப்ப முடியும் என நினைத்தேன். இருப்பினும் இந்த செயற்பாடு மிகுந்த கவலையளிக்கிறது. நாட்டின் கிரிக்கெட் அதளபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது.  எதிர்காலத்தில் நாட்டுக்கும், இளம் சமுதாயத்துக்கும் கிரிக்கெட் என்ற ஒன்று இல்லாமல் போகும்.  இலங்கை கிரிக்கெட்  எதிர்காலத்திலும் இதை விட மிக மோசமான நிலைக்கு செல்லும் நாள் வரும். அப்போது நான் கூறுவேன். இந்த நெருக்கடி ஏற்பட யார் காரணம்? 

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அனைத்தையும் மாற்றியவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதை மக்களுக்கு கூறுவேன்.

இந்த 14 நாட்களுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பது ஷம்மி சில்வாவுக்கு தெரியும். அவர் எதற்கு திரும்பவும் உள்ளே வந்துள்ளார் என்பதை நாட்டு மக்களும் நன்கறிவர். கிரிக்கெட் மேலும் நெருக்கடிக்கு தள்ளப்படும் போது இவர்களுக்கு நாட்டு மக்கள் அடுத்த தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள். அப்போது நான் உண்மைகளை வெளிப்படுத்துவேன்.

இங்கு அரசியல் தலையிடு காணப்படுகிறது. என்னால் முடியுமான அளவு நாட்டுக்காக செய்துள்ளேன். விளம்பரங்களுக்காக எதையும் செய்யவில்லை. கொள்கைகளை மதித்து செயல்படுபவன். ஆனால் இங்கு கொள்கைகள் இல்லாதவர்களை சமுதாயத்தில் உள்ளவர்கள் மதிக்கிறார்கள். இனிமேல்  நாட்டையும், கிரிக்கெட்டையும்  கடவுளே காப்பாற்ற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/168767

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன் : அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே புதிய குழு அமைக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இடைநிறுத்தி, புதிய குழுவொன்றை சிறிது காலத்திற்கு நியமித்திருந்தோம்.

தற்போது இந்தக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 20-20 போட்டித் தொடரில் நேர்ந்த, ஊழல் மோசடிகள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளரினால் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்கவே, நாம் இந்தக் குழவை நியமித்திருந்தோம்.

இன்று இந்தக் குழுவுக்கே தற்போது நிதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதன்ஊடாக, மீண்டும் ஊழல்வாதிகள் இன்று முதல் பணியில் இணைந்துக் கொள்வார்கள்.

இந்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், கிரிக்கெட் நிர்வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரியமைக்கு இணங்கத்தான் நான், இந்த மாற்றங்களை செய்திருந்தேன்.

இந்த நிலையில், நாளைய தினம் நான் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற அனைத்து ஊழல் – மோசடிகள் தொடர்பாகவும் விசேட உரையாற்றவுள்ளேன்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1357659

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் கொடுத்தார் – நாடாளுமன்றில் அமைச்சர் ரொஷான்

இடைக்கால குழுவை நியமிப்பதற்கான தனது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ரணில் விக்ரமசிங்க தனக்கு அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தான் இந்த விடயத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என ரொஷான் ரணசிங்க, இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தாம் நியமித்த இடைக்கால கட்டுப்பாட்டு குழுவை நீக்கவே முடியாது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் நியமித்த இடைக்கால குழு குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவின் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1357655

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

case.jpg?resize=700,375&ssl=1

அர்ஜுன ரணதுங்கவின் கிரிக்கெட் குழுவிற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு.

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட இடைக்கால குழு மற்றும் வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்கால குழு நியமனம் தொடர்பான வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டுக்கு இடைக்கால குழுவை நியமிப்பதற்கான விளையாட்டுத்துறை அமைச்சரின் முடிவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து நேரிய அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டுள்ளது.

இதன் போது, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சரவைக்கு உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1357633

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

400116978_725825022915806_26650879482354

 

399907357_725826769582298_12377106315913

 

 

400442028_725828839582091_22522777986807

 

 

spacer.png

 

399872943_725558162942492_25350574814145

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

குடும்ப ஆதிக்கமே கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு காரணம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஜ குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள், இன்றைய தினத்திற்குள் இராஜினாமா செய்ய வேண்டும்.
இது மட்டும்போதாது.

கிரிக்கெட் விளையாட்டின் எதிர்க்காலம் தொடர்பான முறையான வரைப்படமொன்று தேவைப்படுகிறது.

இலங்கை கிரிக்கெடிலிருந்து அரசியலை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஊழல்வாதிகள், போதைப்பொருள் மாபியாக்கள், பாதாள குழுவினரின் தலையீடு இல்லாத கிரிக்கெட்டை உருவாக்க வேண்டும்.

இதற்கான நடவடிக்கையை 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுக்க வேண்டும்.

ஊழல் நிறைந்த நிர்வாக சபை, தூரநோக்கற்ற செயற்பாடு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், நட்பு மற்றும் குடும்ப ஆதிக்கத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு இன்று மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்போது கிரிக்கெட் சபையானது, அரசியல் அழுத்தத்தினால்தான் கிரிக்கெட் விளையாட்டு மோசமடைந்துள்ளதாக உலகத்திற்கு கூறியுள்ளார்கள்.

இந்த கருத்தானது பொய்யென நாம் அனைவரும் ஒன்றிணைந்து இன்று ஐ.சி.சி.க்கும், சர்வதேச கிரிக்கெட் சபைக்கும் காண்பிக்க வேண்டும்.

கொள்ளை மற்றும் ஊழல் காரணத்தினால்தான் கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் இதிலிருந்து தப்பிக்கவே அரசியல் அழுத்தம் இடம்பெற்றதாக இவர்கள் கூறுகிறார்கள் என்பதை நாம் நிரூபிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1357959

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

அம்பலமானது கிரிக்கெட் சபையின் பணம் பறிக்கும் திட்டம்.

அரச வங்கியொன்றின் கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் தற்போது முயற்சித்து வருவதாக விளையாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உட்பட ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபையை நீக்குதல் என்ற தலைப்பில் இலங்கை கிரிக்கெட் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர் அந்த அதிகாரிகளில் ஒருவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.

https://athavannews.com/2023/1357976

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

spacer.png

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ கேடு கெட்ட‌ அணி உல‌க‌ கோப்பைக்கு தெரிவாக‌ட்டி ஒரு சொல் தெரிவாக‌ வில்லை என்று

அவ‌மான‌க் கேடு 55 ஓட்ட‌ம் எடுத்த‌ அணி........புள்ளி ப‌ட்டிய‌லில் இன்றோடு க‌ட‌சி இட‌த்தை பிடிக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு


உல‌க‌ கோப்பை வ‌ர‌லாற்றில் இல‌ங்கை அணி ஒரு போதும் இப்ப‌டி விளையாடின‌து கிடையாது

இல‌ங்கை அணியில் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இப்போது அற‌வே இல்லை

ஒரு கால‌த்தில் ம‌லை போல் இருந்த‌ அணியில் இப்ப‌டி அருவ‌ருக்க‌ த‌க்க‌ வீர‌ர்க‌ள் விளையாடுவ‌தை நினைக்க‌ வெறுப்பு தான் வ‌ருது

இல‌ங்கை அணியில் இருந்த‌ பெரிய‌ பெரிய‌ ஜ‌ம்ப‌வான்க‌ளுக்கு
இந்த‌ பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ உண்மையில் அவ‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் வ‌லிக்கும்


 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/p/QnypfqEuHLonNniW/?mibextid=WC7FNe

கிரிக்கட் சபை முன் பாரிய போராட்டம்.

வீதிகள் மூடப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தவறான பதிவு நீக்கப்பட்டது.

Edited by ஏராளன்
தவறான பதிவு நீக்கப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம் !

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட ஊழல் வாதிகளை பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டது.
 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4d0da26b-wimal-weerawansa-4_850x460_acf_

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம்? : விமல் சந்தேகம்!

இலங்கை கிரிக்கெட் குழப்பத்தின் பின்னணியில் இந்தியாவின் ஆதிக்கம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

ஐ.சி.சி. தலைவர் தனியார் விமானத்தில் வருகைத் தந்து, ஜனாதிபதி மற்றும் சாகல ரத்னாயக்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கை கிரிக்கெட் சபைக்கு உள்ள அநாவசிய அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார் என எமக்கு தெரியவந்துள்ளது.

அவரைப் பொறுத்தவரை இலங்கைக் கிரிக்கெட் சபையை பாதுகாக்க வேண்டும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்னர் எதற்காக எல்.பி.எல். போட்டியை நடத்த வேண்டும்.

இதனால்தான் சிறந்த வீரர்கள் காயமடைந்தார்கள். உலகக் கிண்ண தொடரிலும் இவர்களால் விளையாட முடியாமல் போனது.

ஐ.சி.சி.யின் தலைவர்தான் எல்.பி.எல். போட்டியை உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இடம்பெற சிறிது காலத்திற்கு முன்பாக நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பணித்தாரோ தெரியவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1358037

 

##############    ##############    #################

 

spacer.png

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இரகசிய வலயம் : உண்மையை போட்டு உடைத்த விமல்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றி அவர் இதனை தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1358065

 

#################    ################    #################

 

sarath-werasekara-700x375-1.webp?resize=

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்திலேயே அக்கறை : சரத் வீரசேகர!

கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தாய் நாடு அக்கறை உள்ளதா அல்லது அவர்களுக்கு வெறும் பணத்தில் மீதுதான் அக்கறை உள்ளதா எனும் சந்தேகம் இன்று மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில், அமைச்சர் ரொஷான் ரணசிங்க உலகக் கிண்ணத் தொடர் இருப்பதால், எல்.பி.எல். போட்டிகளில் விளையாட வேண்டாம் என கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், பணத்திற்காக சில வீரர்கள் எல்.பி.எல். போட்டியில் விளையாடினார்கள். இவ்வாறு விளையாடிய சிறந்த வீரர்களில் ஐவர் காயமடைந்தனர்.

இதனால், உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாத நிலைமை இவர்களுக்கு ஏற்பட்டது.

தனது நாட்டுக்காக அன்றி பணத்திற்காக இவர்கள் எல்.பி.எல்.இல் விளையாடினார்கள்.

இதனால்தான், இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1358033

 

####################    ####################    ##################

 

Kanchana.Wijesekera.jpg?resize=700,350&s

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு தடை விதித்தால் 225 பேரும் பொறுப்பு – காஞ்சன

இலங்கை கிரிக்கெட் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் நோக்கம் தேசிய அணியையோ அல்லது நிர்வாகத்தையோ தேர்ந்தெடுப்பது அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தற்செயலாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு தடை விதிக்க முடிவு செய்தால், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1358029

 

################   #############   #################

 

Marikkar-1.jpg?resize=700,375&ssl=1

சட்டத்தை மாற்றாமல் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற முடியாது : எஸ்.எம்.மரிக்கார்!

விளையாட்டுச் சட்டத்தை மாற்றாமல் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“விளையாட்டுச் சட்டத்தை மாற்றியமைக்காமல், இலங்கை கிரிக்கெட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

சூதாட்டக்காரர்களும், ஊழல்வாதிகளும் இதில் நுழைவதை நிறுத்த வேண்டும். கிளப் மாபியாவை இல்லாது செய்ய வேண்டும்.

அப்போதுதான், சிறப்பான நிர்வாகக் குழுவை ஸ்தாபித்து, கிரிக்கெட்டை முன்னேற்ற முடியுமாக இருக்கும்.
இதற்குள் அரசியலும் மூக்கை நுழைக்கிறது.

கிராமத்தில் உள்ளவர்களும் கிரிக்கெட் அணிக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1358040

 

##################    ##################    ################

 

sanakiyan.png?resize=720,375&ssl=1

அரசியல்வாதிகள் தலையிடாதவாறு சட்டம் இயற்றப்பட வேண்டும் : இரா. சாணக்கியன்!

இலங்கை கிரிக்கெட்டின் செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் தலையிடவே முடியாதவாறு சட்டங்கள் இயற்றப்படுமானால் அதற்கு ஆதரவளிப்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை கிரிக்கெட்டின் நிலைமையும் நாட்டின் நிலைமையும் ஒன்றாகத் தான் இன்று இருக்கிறது.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இடைக்கால குழுவொன்றை தற்போது நியமிக்க முடியுமாக இருந்தால், ஏன் இதற்கு முன்பே இடைக்கால குழுவை அமைச்சர் நியமிக்கவில்லை?

அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட்டில், அரசியல்வாதிகள் தலையிடவே முடியாது.

அப்படியானதொரு சட்டம் கொண்டுவரப்படுமானால், நாமும் நிச்சயமாக ஆதரவு வழங்குவோம்.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தினால் எந்தவொரு மாற்றமும் நிகழ்ந்துவிடாது” என சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1358043

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

 

400941887_726946279470347_36037589223974

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.