Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடம் மாறும் அரசியல் தலைமைகளின் மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜின் நினைவுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
09 NOV, 2023 | 05:08 PM
image

(கொல்லங்கலட்டியான்)

தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்த மாமனிதர் சட்டத்தரணி நடராஜா ரவிராஜின் நினைவுதினம் நவம்பர் 10ஆம் திகதியாகும். 

மாமனிதர் நடராஜா ரவிராஜின் அரசியல் பயணமும் அவரது கொள்கைகளும் இன்றைய தலைவர்களுக்கு காலத்தால் அழியாத கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன. நேர்மையும், தைரியமும், மக்களின் அபிலாஷைகளை அடைவதற்காக அவர் கொண்டிருந்த இதயபூர்வமான அர்ப்பணிப்பும், எவரையும் மதிக்கும் சுபாவமும், தனது உறுதியான கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடும்போது அவர் பேணும் அரசியல் நாகரிகமும் அரசியல் களத்தில் வேறுபடுத்தி இனங்காட்டும் ஆளுமைமிக்க தலைவராக அவரை மாற்றியிருந்தன. 

இந்த சூழலில் அவரோடு இணைந்து தமிழ் தேசிய அரசியல் தளத்தில் பயணித்த மூத்த கட்சி உறுப்பினர்களில் மாவை சேனாதிராசா, குலநாயகம், சம்பந்தன், கனகசபாபதி போன்ற சிலரே தமிழரசு கட்சியின் நீண்டகால செயற்பாட்டாளர்களாக திகழ்கிறார்கள். ஏனைய மூத்த செயற்பாட்டாளர்கள் தமிழர் விடுதலை கூட்டணியோடு ஐக்கியமாகிவிட்டார்கள். 

இன்றுள்ள பலர் பழைய வீட்டில், புதிய குடியிருப்பாளர்களாக குடியமர்ந்துள்ளார்கள். இந்த நிலையில் பழைய வீடான தமிழரசு கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் பல்வேறு தளம்பல்கள் ஏற்பட்டுள்ளன. 

கட்சி என்பது தான் சார்ந்த மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். ஆனால், அவை தடம் மாறி, பதவிகளை பெறுவதற்கான ஒரு கட்டுமரமாகவே இக்கட்சி பயன்படுத்தப்படுகிறது. 

இக்கட்சியின் கொள்கைகளுக்காக பல்வேறு பொதுமக்கள், தலைவர்கள் தமது உயிரை ஆகுதியாக கொடுத்தார்கள். பல்வேறுபட்டவர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சி இன்று வழிமாறிப் பயணிக்கிறது.

குறிப்பாக, கட்சியின் மத்திய குழுவில் அங்கத்துவம் பெறும் பலர் சுய பிரக்ஞை அற்றவர்களாக, தனிநபர் துதிபாடிகளாக, தமது பதவி நலம் கருதிக் கூஜா தூக்குபவர்களாகவுமே இருக்கிறார்கள். பல்வேறு தொண்டர்களின் அர்ப்பணிப்பை, துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

தற்போது கட்சித் தலைமைக்கான போட்டி பல்வேறு தளங்களில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

இந்நிலையில், மாமனிதர் ரவிராஜின் வாழ்வியல் பற்றிய மீள்பார்வை அவசியமாகிறது. கூட்டமைப்பை கட்சிகளாக பிளந்து, தமிழரசு கட்சியை அணிகளாக உடைத்து, தமிழர் எதிர்காலத்தை சிதைத்து நானே அக்கட்சியின் தலைவர் இந்த கோதாவில் வலம் வந்துகொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழினத்தின் ஒரு சாபக்கேடு.

தமிழரசு கட்சியின் குறித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சித் தலைவராய் வருவதற்காக நீண்டகால நிகழ்ச்சித்திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்தி வந்தார், ரவிராஜ். அதில் அவர் வெற்றியும் கண்டார். 

அவர் தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களாக தனது அணிக்குச் சார்ந்தவர்களை உள்ளீர்த்துக்கொண்டார். எதிரிக்கு எதிரி நண்பர் என தனக்கான ஆதரவுத்தளத்தை பெருக்கினார். மாவட்ட கிளைகளூடாக குறிப்பாக, பருத்தித்துறை, கோப்பாய், சாவகச்சேரி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை என தனது ஆதரவுத்தளத்தை சட்ட உதவி எனும் பெயரில் பெருக்கினார். 

ஆயினும், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களை அவரால் வீழ்த்த முடியவில்லை. தான் கட்சித் தலைமையைப் பெறுவதற்குரிய அனைத்து, ஏற்பாடுகளையும் செய்துமுடித்துவிட்டு, பதவிக்காக காத்திருந்தார். 

அவர் கட்சித்தலைவராக வந்தால், தமிழ் மக்களின் கட்சிக்கான வாக்கு வங்கி, பெருமளவில் சரியும். 22 நாடாளுமன்ற உறுப்பினரோடு அங்குரார்ப்பணமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி இன்று 11 நாடாளுமன்ற உறுப்பினராக இவரால் வந்ததோ, அதுபோன்ற இழிநிலை தமிழரசு கட்சிக்கும் ஏற்படுவது தவிர்க்க முடியாத விடயமாகிவிடும். 

மரத்தில் இருந்து தவறி விழும் கனிகள் தமது கூடைகளுக்குள் விழவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் காய் நகர்த்த தொடங்கிவிட்டன.

இந்நிலையில், தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் சுமந்திரன் வெற்றி பெறுவது உறுதியானால், 1960களில் தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் அண்ணாத்துரை சொன்ன வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது. 

'ஆட்சியில் வென்றுவிட்டோம் கட்சியில் தோற்றுவிட்டோம்' என்ற நிலை போல, தமிழரசு கட்சியின் தலைமையை சுமந்திரன் அணி கைப்பற்றி, அக்கட்சி மக்கள் ஆதரவுத்தளத்தை இழந்து தோற்றுவிடும் நிலைதான் ஏற்படப்போகிறது. 

அது மாத்திரமன்றி, தமிழரசுக் கட்சி தனது நோக்கத்திலிருந்து பிறழ்வுபட்டு வேறொரு திசையிலேயே பயணப்பட ஆரம்பிக்கும். கட்சியினுடைய பதவிக்காக போட்டியிடும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் யாருமே ரவிராஜின் இடத்தை பெறமுடியாதவர்கள் அல்லது ரவிராஜின் உச்சத்தை தொட முடியாதவர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் விலை போகக்கூடியவர்கள் என்பது பெரும்பாலான மக்கள் மனதில் பதிந்திருக்கும் எண்ணம். ஆனாலும் யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டிய நிலைக்குள் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.

ஓர் இளம் துடிப்புள்ள பாராளுமன்ற உறுப்பினராக தனக்கு வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை கருத்தில் கொண்டு இன ஒற்றுமையை மனதில் கொண்டு போராடிய ஒரு தலைவரே மாமனிதர் ரவிராஜ். தனது மக்களின் விடிவுக்காக தனது உயிரையே கொடுக்க தயாராக இருந்த ஒரு தலைவர் மத்தியில் இன்று தங்களுடைய பணப்பெட்டிகளையும் வாக்கு வங்கிகளையும் நிரப்பும் நோக்கில் செயற்படும் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் ரவிராஜின் அரசியல் பயணத்திலிருந்து பெறவேண்டிய பெறுமதியான படிப்பினைகளை உள்வாங்குவதில் தவறிவிட்டார்கள்.

கஜேந்திரகுமார் வெளியேற்றம் முதல் கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவு வரை தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் முடிவுகளும் அவர்களின் நடத்தை கோலங்களும் 'சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது' என்பது போல அரசியல் முதிர்ச்சியற்றவையாகவே இருக்கின்றன.

மாகாண சபையை செயற்படவிடாது தடுத்ததில் தமிழரசுக் கட்சி தலைமைக்கு முக்கிய வகிபாகம் உண்டு. அதை தொடந்து பல சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பை சிதைக்கும் நடவடிக்கையை ஒருவர் முன்னெடுக்க அதைக் கண்டும் வாழவிருந்த தலைவர்களே இன்று தமிழரசுக் கட்சி தலைமைக்காக போட்டியிடுகின்றனர்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழர் எதிர்காலத்திலும் அவர்கள் அபிலாஷையிலும் அக்கறை கொண்ட ஒரு தலைவனாக இதய சுத்தியுடைய ஒரு அரசியல் ஆளுமையாக புடமிடப்பட்டிருந்த ரவிராஜின் வாழ்க்கையிலிருந்து, தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது.

தமிழர் தேசிய மன உணர்வை சிதைத்து, கலாசார விழுமியங்களை மழுங்கடித்து மென்வலு எனும் தீர்க்கதரிசனமற்ற சொல்லாடல் மூலம் தமது செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என நினைத்த தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆசனம் ஒன்றைப் பெறுவதற்காக தேர்தல் முறைகேடுகள் வரை செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவானது.

மாமனிதர் ரவிராஜிடம் நாம் கண்ட துணிச்சலையோ இதயசுத்தியான நடத்தையையோ எந்த தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரிடமோ, அதன் தலைவரிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆயினும் மக்களின் நலன் சார்ந்தும் தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்தும் அவர்கள் செயற்பட வேண்டும். சரியான ஒரு தலைமை தெரிவு செய்யப்படாத பட்சத்தில் தமிழரசுக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மேலும் வீழ்ச்சியடையும். 

பாராளுமன்ற ஆசனத்தை பெறுவதற்காக மீண்டும் ஒரு தடவை தேர்தல் முறைகேடுகள் வரை பயணப்பட வேண்டியிருக்கும்.

https://www.virakesari.lk/article/168936

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் இவரை கொலை செய்தவர்களின் தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என்றார். என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மனோ கணேசன் இவரை கொலை செய்தவர்களின் தகவல்களை வெளிப்படுத்துகிறேன் என்றார். என்னாச்சு?

இன்னமும் பேரம் பேசுகிறார்.

மாமனிதர் ரவிராஜ் அவர்களுக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர் ரவிராஜ் அவர்களுக்கு என் நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ரவிராஜின் நினைவு தினம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(10)  தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின் நினைவுருவச் சிலை முன்பாக உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, அரசியல் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன்,வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
 
mavai.jpg?resize=600,328&ssl=1
 
 
#################   ##############   #####################
 
அமரர் ரவிராஜ் அவர்களுக்கு நினைவு அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.