Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஏராளன் said:

2 ஓவர்களுக்கு 7 ஓட்டம் தான் வியாஸ்காந்த் கொடுத்துள்ளார்.

large.IMG_7393.jpeg.185f08a7812c0c8706bba29a146d189b.jpeglarge.IMG_7394.jpeg.ef94397506dd24b934911da65f46b426.jpeg

  • Like 2
  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐ.பி.எல் இல் களமிறங்குகிறார் யாழ் மைந்தன் வியாஸ் காந்த்

08 MAY, 2024 | 07:39 PM
image
 

லக்னோ அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் களமிறங்குகிறார் யாழின் மைந்தன் வியாஸ் காந்த்.

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் தடவையாக யாழைச் சேர்ந்த வீரர் ஒருவர் விளையாடுகின்றார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இன்றைய 57 ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சுப்பர் ஜெயண்டஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் இடம்பெறுகின்றது.

இன்றை ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் 11 பேர் கொண்ட பெயர் பட்டியலில் வியாஸ் காந்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த இன்று தனது முதலாவது ஐ.பி.எல். போட்டியில் களமிறங்கி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது பலரின் எதிர்பார்ப்பு.

https://www.virakesari.lk/article/183013

BOWLERS O M R W Econ 0s 4s 6s This spell
(rf) 2.4 0 25 1 9.37 5 2 1 0.4 - 0 - 7 - 0
(lb) 4 0 27 0 6.75 8 2 1 1 - 0 - 12 - 0
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 165 ஓட்டங்கள். 166 இலக்கு .......!

பின் ஆடிய ஹைதராபாத் முதல் ஆட்டக்காரர்கள் இருவருமே அவுட்டாகாமல்  10 ஓவருக்குள் 166 இலக்கை எட்டி .......லக்னோவை துவைத்து எடுத்து விட்டார்கள்....... ஒற்றை ஓட்டங்களை விட  6ம் 4ம் தான் அதிகம் ...... இப்படி ஒரு அடியை நான் இதுவரை பார்க்கவில்லை...... காவ்யா ஹாப்பி ..........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பையை வெளியேற்றிய ஹைதராபாத்தின் வரலாற்று வெற்றி - சிஎஸ்கே அணிக்கு சரிவு

ஹைதராபாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 ஆட்டங்கள் வரை நடந்தும் எந்த அணியும் அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாத சூழல் இருந்து வந்தது. ஆனால், நேற்றைய சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்களில் வென்றாலும்கூட 4 புள்ளிகள் பெற்று அதிகபட்சமாக 12 புள்ளிகள்தான் பெற முடியும். இது ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்துக்குக்கூட போதாது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இன்று நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். அதேபோல லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே வரும் 14ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். இரு அணிகளும் தற்போது 12 புள்ளிகள் பெற்றுள்ளன.

 
ஐபிஎல் - ஹைதராபாத் - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் படைத்த சாதனை என்ன?

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த லக்னோ அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதுநாள்வரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை 62 பந்துகள் மீதமிருக்கையில் சேஸிங் செய்த முதல் அணியாக சன்ரைசர்ஸ் அணி இடம் பெற்றது. இதற்குமுன், பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 157 ரன்களை 60பந்துகள் மீதமிருக்கையில் பிரிஸ்பேன் ஹீட் அணிசேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதேபோல டி20 கிரிக்கெட்டில் 10 ஓவர்களுக்குள் லக்னோ அணிக்கு எதிராக 167 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது, இதுவரை எந்த அணிக்கும் எதிராக எடுக்காத ஸ்கோராகும். இதற்கு முன் 2018-இல் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கு எதிராக வொர்ஸ்டர்ஷையர் 162 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும்.

 
ஐபிஎல் - ஹைதராபாத் - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணியின் நிலை என்ன?

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டில் மைனசில் இருந்த சன்ரைசர்ஸ் மாபெரும் வெற்றியால், 0.406க்கு என்று உயர்வான நிலையை அடைந்தது. சிஎஸ்கேஅணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், 3-ஆவது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணியைவிட நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி உயர்வாக இருப்பதால், அடுத்த ஆட்டத்தில் வென்றால், 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறும். 3-ஆவது, 4-ஆவது இடத்தைப் பிடிப்பதில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அடுத்துவரும் சிஎஸ்கேவுக்கான 3 ஆட்டங்களில் ஒன்றில்தோற்று 2-இல் வென்று, சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்றால், சன்ரைசர்ஸ் 3-ஆவது இடத்தையும், சிஎஸ்கே 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் தோற்று ஒன்றில் வென்று, சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்றால் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.

அல்லது சிஎஸ்கே அணி ஒன்றில் தோற்று 2 ஆட்டங்களில் வென்று, சன்ரைசர்ஸ் அணியும் ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றால் இரு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெறும், 4-ஆவது இடத்துக்கு கூடுதலாக டெல்லி கேபிடல்ஸ் அல்லது லக்னோ அணிகளும் போட்டியிடும் சூழல் வரலாம். அப்போது எந்த அணியின்நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 3-ஆவது இடத்தையும், அடுத்த உயர்வாக இருக்கும் அணி 4வது இடத்தையும் பிடிக்கும்.

ஐபிஎல் - ஹைதராபாத் - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னோ ப்ளே ஆஃப் செல்லுமா?

அதேசமயம், லக்னோ அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்வியால் லக்னோ நிகர ரன்ரேட் மிகமோசமாக சரிந்து மைனஸ் 0.769 எனக் குறைந்துவிட்டது. அடுத்துவரும் இரு ஆட்டங்களிலும் லக்னோ அணி வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று உறுதி எனக் கூற முடியாது.

நிகர ரன்ரேட் உயர்வாக இருக்க வேண்டும், டெல்லி அணி, சன்ரைசர்ஸ்அணி ஆகியவை தலா ஒரு போட்டியில் தோற்க வேண்டும், சிஎஸ்கே அணி 2 ஆட்டங்களில் தோற்க வேண்டும் இவையெல்லாம் நடந்தால் லக்னோ அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்க முடியும்.

ஐபிஎல் - ஹைதராபாத் - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணியின் பிரமாண்ட வெற்றி எப்படி சாத்தியமானது?

சன்ரைசர்ஸ் அணி நேற்று வரலாற்று சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாச்தில் வெற்றி பெற்றதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட்(89), அபிஷேக் சர்மா(75) ஆகிய இருவர்தான் காரணம். இதில் 16 பந்துகளில் அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர், 8பவுண்டரிகள் அடங்கும். அபாரமான ஆட்டத்தைவெளிப்படுத்திய டிராவிஸ்ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த ஐபிஎல் ஆட்டத்தில் மட்டும் ஹெட் 20 பந்துகளுக்குள் 3 முறை அரைசதம் அடித்துள்ளார்.

ஹெட்டுக்கு துணையாக பேட் செய்த அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து, 28 பந்துகளில் 75 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவரும் சேர்ந்து 58 பந்துகளைச் சந்தித்து அதில் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்களை விளாசினர். இந்த சீசனில் மட்டும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் 146 சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இந்த சாதனையைச் செய்ததில்லை.

சன்ரைசர்ஸ் அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களையும், 5.4 ஓவர்ளில் 100 ரன்களையும் சன்ரைசர்ஸ் எட்டியது. பவர்ப்ளே ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 107 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 2-ஆவது அதிகபட்சமாக அமைந்தது. இருவரின் அதிரடி ஆட்டத்தால் பந்து சிக்ஸர், பவுண்டரி என பறந்தது, ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 8.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களை எட்டியது. 9.4 ஓவர்களில் இலக்கை அடைந்து சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

ஐபிஎல் - ஹைதராபாத் - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சிலும் மிரட்டிய சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணியின் புவனேஷ்வர், கம்மின்ஸ் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். புதிய பந்தில் புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டீகாக்(2), ஸ்டாய்னிஸ்(2) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். பவர்ப்ளேயில் புவனேஷ்வர் பந்துவீசி முடிக்கும்போது 2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து லக்னோ ரன்ரைட்டை இழுத்துப் பிடித்தனர்.

கேப்டன் ராகுல் (29)அணியை மீட்க போராடிய நிலையில் கம்மின்ஸின் தந்திரமான பந்தில் டீப் பேக்வேர்ட் பாயின்டில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் நிகோஸல் பூரன்(48), பதோனி(55) ரன்கள் சேர்த்த்து லக்னோ அணியை கரை சேர்த்தனர். லக்னோ அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்தது. இரு அணிகளுக்கு இடையிலான பவர்ப்ளே ஸ்கோர் வித்தியாசம் 80ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
ஐபிஎல் - ஹைதராபாத் - லக்னோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

“பேச வார்த்தைகள் இல்லை”

போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இவர்களின் பேட்டிங்கை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம், இப்போதுதான் நேரடியாகப் பார்த்தோம், நம்பமுடியாமல் இருக்கிறது. ஹெட், அபிஷேக் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறித்தது. சிக்ஸர் அடிப்பதற்காகவே பிரத்யேக பயிற்சி எடுத்து கடினமாக உழைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கூட இருவரும் வழங்கவில்லை. விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுசெய்யக்கூட வாய்ப்பு வழங்கவில்லை. முதல் பந்தைச் சந்தித்தது முதலே இருவரும் மிகச்சுதந்திரமாக, கட்டுப்பாடின்றி பேட் செய்தனர். விக்கெட் வீழ்த்தினால்தான் பவர்ப்ளேயில் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்களால் அதை கடைசிவரை செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cv2xqdgx2p8o

ipl-pt-08-05.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கே.எல்.ராகுலுக்கும் லக்னெள அணி உரிமையாளருக்கும் இடையே நடந்தது என்ன? சமூக வலைத்தளம் கொந்தளிப்பது ஏன்?

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கே.எல்.ராகுல்
4 மணி நேரங்களுக்கு முன்னர்

புதன்கிழமை (8.5.2024) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

ஆனால், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் தோல்வியை விட அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவுக்கு இடையில் நடந்த விவாதமே தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி படுதோல்வி அடைந்துள்ளது.

நேற்றைய போட்டி முடிவடைந்த பிறகு கே.எல்.ராகுலும், சஞ்சீவ் கோயங்காவும் நீண்ட நேரம் விவாதம் செய்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அந்த விவாதம் அவ்வளவு நிதானமானதாக காட்சியளிக்கவில்லை. நீண்ட நேரம் கோபத்தில் கே.எல்.ராகுலிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தார் சஞ்சீவ். ராகுலும் அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இடையிடையே ராகுல் பேச முற்பட்டபோதும் கூட, சஞ்சீவ் சமரசம் ஆவது போன்று தெரியவில்லை.

இதை பார்த்துக் கொண்டிருந்த வர்ணனையாளரும், இது போன்ற விவாதங்களை கேமராக்கள் முன்னால் செய்யக் கூடாது. தனியாக அறையில் பேசிக்கொள்ளலாம் என்று மைக் வழியாக சொல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதில் ராகுலுக்கும், சஞ்சீவுக்கும் என்ன உரையாடல் நடந்தது என்பது கேட்கவில்லை என்றாலும், சஞ்சீவ் கோயங்காவின் கோபமான சைகைகளே சமூக வலைத்தளங்களில் சூடான விவாதங்களை கிளப்பியுள்ளது.

குறிப்பாக எக்ஸ் வலைத்தளத்தில் விவாதித்து வரும் பயனர்கள் பலரும், லக்னெள அணியின் தோல்வியின் காரணமாக ராகுலை சஞ்சீவ் திட்டியுள்ளார் என்று பேசி வருகின்றனர். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஆல்பா  என்ற எக்ஸ் பயனர் தனது ட்வீட்டில், "நீங்கள் பணத்திற்காக விளையாடும் போது, இப்படித்தான் நடத்தப்படுவீர்கள்" என்று பகிர்ந்துள்ளார்.

கொந்தளிக்கும் வலைத்தளவாசிகள்

கபர் சிங்க் என்ற எக்ஸ்(ட்விட்டர்) பயனர், "எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இது போன்ற ஒரு நடத்தையை எதிர்கொள்ள கூடாது. உங்கள் அணியின் கேப்டனையே அனைவரது முன்னிலையிலும் அவமானப்படுத்துகிறீர்கள். கொஞ்சமாவது கண்ணியத்தோடு நடந்துக் கொள்ளுங்கள். ஒருவரது கடினமான நேரத்தில் ஆதரவாக இருக்க வேண்டும். அது அணியின் உரிமையாளராகவே இருந்தாலும் கூட இது ஏற்கத்தக்கது அல்ல" என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆல்பா என்ற எக்ஸ் பயனர் தனது ட்வீட்டில், "நீங்கள் பணத்திற்காக விளையாடும் போது, இப்படித்தான் நடத்தப்படுவீர்கள்" என்று பகிர்ந்துள்ளார்.

சமீரா என்ற பயனர், "நான் கேஎல் ராகுலின் ரசிகர் அல்ல, ஆனாலும் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. கோயங்கா அவர்களே எல்எஸ்ஜி அணியின் மீது நீங்கள் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால், இந்தியாவின் ஒரு உச்ச கிரிக்கெட் வீரரை இப்படி நடத்துவது முறையல்ல. இந்த விவாதம் தனியிடத்தில் நடந்திருக்க வேண்டும். ராகுல் விரைவில் எல்எஸ்ஜியை விட்டு வெளியேற வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

மகேஷ் என்ற ட்விட்டர் பயனர், "கே.எல்.ராகுலை வசைபாடும் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர் மோசமான ரசனை கொண்டவராக இருக்கிறார். அவமானம். மோசமாக விளையாடினாலும் கூட இது போன்ற அழுத்தம் சிஎஸ்கே வீரர்களுக்கு இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

 
லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"எங்களது வீரர்கள் பவர் பிளேயில் ஆட்டமிழந்த போதே, எங்களது வேகத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்" என்றார் ராகுல்.

தோல்விக்கு பிறகு கேஎல் ராகுல் கூறியது என்ன?

நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய கேஎல் ராகுல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விளக்கினார்.

கே.எல்.ராகுல் பேசுகையில், "என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இதுபோன்ற ஆட்டத்தை நாங்கள் டிவியில் தான் பார்த்திருக்கிறோம். இப்போதுதான் நேரடியாகப் பார்க்கிறோம்."

"ஹெட் மற்றும் அபிஷேக் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறித்தது. சிக்ஸர் அடிப்பதற்காகவே பிரத்யேக பயிற்சி எடுத்து கடினமாக உழைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கூட இருவரும் வழங்கவில்லை. விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்யக்கூட வாய்ப்பு வழங்கவில்லை."

"முதல் பந்திலிருந்தே இருவரும் கட்டுப்பாடின்றி அபாரமாக பேட் செய்தனர். விக்கெட் வீழ்த்தினால்தான் பவர்ப்ளேயில் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்களால் அதை கடைசிவரை செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், " நீங்கள் தோல்வியடையும் நிலையில் இருக்கும்போது, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் மீதும் கேள்வி எழும். முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவிக்க விரும்பினோம். ஆனால், 40-50 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. எங்களது வீரர்கள் பவர் பிளேயில் ஆட்டமிழந்த போதே, எங்களது வேகத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்" என்றார் ராகுல்.

"நாங்கள் 250 ரன்கள் அடித்திருந்தாலும் கூட அவர்கள், எங்களை வென்றிருப்பார்கள்" என்று கூறினார் அவர்.

தனது அணியில் ரன்களை குவிக்க போராடிய ஆயுஷ் படோனி மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகியோரையும் பாராட்டினார் கே.எல்.ராகுல்.

https://www.bbc.com/tamil/articles/cd1w7j58g8wo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

MI, PBKS அணிகள் நாக்-அவுட்: பிற அணிகளுக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு என்ன?

christopherMay 10, 2024 10:57AM
IPL 2024 Playoffs Race

IPL 2024: 2024 ஐபிஎல் தொடரில் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. 58 லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 12 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில் அந்த டாப் 4 இடங்களில் ஒரு இடத்தை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது.

இப்படியான சூழலில், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக MI அணி நாக்-அவுட் ஆனது.

இதை தொடர்ந்து, பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்ததை அடுத்து, அந்த அணியும் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து நாக்-அவுட் ஆனது. இப்போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற எந்த அணிக்கு எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை இங்கு பார்ப்போம்.

KKR vs RR Playing 11 IPL 2024: Kolkata Knight Riders vs Rajasthan Royals  Team News, Predicted Lineup - myKhel

KKR, RR அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் தலா 16 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள், கிட்டத்தட்ட 99% தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. தற்போது உள்ள சூழ்நிலையில், அவர்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்றாலும் கூட, அவர்களின் பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

SRH vs CSK Head To Head Stats, Results & Record in Rajiv Gandhi Stadium,  Hyderabad Ahead of IPL 2024 Match 18 - myKhel

SRH, CSK அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

இவர்களை தொடர்ந்து, 14 மற்றும் 12 புள்ளிகளுடன் 3வது மற்றும் 4வது இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் வென்றாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடலாம் என்ற நிலையில் உள்ளது. ஒருவேளை, இந்த அணிகள் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றாலும் கூட மற்ற அணிகளின் வெற்றி தோல்வி, ரன்-ரேட் ஆகியவற்றின் அடிப்படையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகளை பெற்றுள்ளது.

Lucknow Super Giants vs Delhi Capitals IPL 2024 preview, head-to-head  record and predicted playing XIs – India TV

LSG, DC அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

அடுத்தபடியாக, தலா 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5வது, 6வது இடத்தில் உள்ள டெல்லி, லக்னோ அணிகள், பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள தங்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதை தொடர்ந்து, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் 2 போட்டிகளில் தோல்வியடைந்தால், இந்த 2 அணிகளும் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு உள்ளது.

ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், இந்த தொடரின் 64வது லீக் போட்டியில், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் தோல்வியடையும் அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

RCB vs GT: Revealed - Who are the impact players nominated by RCB and GT  for match 52 of IPL 2024

RCB, GT அணிகளுக்கான வாய்ப்பு என்ன?

பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், இன்னும் அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், 8 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உள்ள பெங்களூரு, குஜராத் அணிகள், முதலில் தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.

பின், ஐதராபாத் அணி தங்களுக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதேபோல, சென்னை, லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஒன்றுக்கும் அதிகமான வெற்றியை பெறக்கூடாது.

இவை எல்லாம் நடக்கும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில், இன்னும் சில போட்டிகளே மீதமுள்ள நிலையில், 8 அணிகள் இன்னும் பிளே-ஆஃப் ரேஸில் உள்ளதால், இந்த தொடர் கூடுதல் சுவாரஸ்யம் பெற்றுள்ளது.

 

https://minnambalam.com/sports/ipl-2024-playoffs-qualification-race-which-team-will-win-the-ipl-2024-prediction/

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விராட் கோலியின் 'மின்னல் வேக' ரன் அவுட், அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்; பிளேஆப் கனவை தக்கவைத்த ஆர்சிபி

விராட் கோலி

பட மூலாதாரம்,SPORTZPICS

3 மணி நேரங்களுக்கு முன்னர்

அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் கூடிய 92 ரன்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டம்பைத் தகர்த்த ரன் அவுட் என பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் பிளே ஆப் வாய்ப்பை இன்னொரு போட்டி வரை நீட்டித்துக் கொண்டிருக்கிறது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி.

அதே நேரத்தில் ஐபிஎல் டி20 2024 சீசனில் இருந்து 2-ஆவது அணியாக பஞ்சாப் கிங்ஸ் வெளியேறியது. ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருந்தாலும் அதில் இரண்டிலும் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளுக்கு மேல் பெற இயலாது.

தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. 242 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 17ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

 

இன்று நடக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஆமதாபாத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால் போட்டித் தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை சிஎஸ்கே அணி தோற்றால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை அடுத்தபோட்டி வரைக்கும் தக்கவைத்துக்கொள்ளும். சிஎஸ்கே அணியின் நிலை சிக்கலாகி கடைசி 2 போட்டிகளிலும் கட்டாயமாக வெல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படும்.

 
ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபி பிளேஆப் செல்ல என்ன செய்ய வேண்டும்?

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 7-ஆவது இடத்தில் நீடிக்கிறது. 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணியைவிட சிறப்பாக 0.217 என்ற ரீதயில் இருப்பதால், அடுத்த ஒரு ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால், 5-ஆவது இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

டெல்லி அணி நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.316 ஆகவும், லக்னெள அணி மைனஸ் 0.769 ஆகவும் பின்னடைவுடன் இருக்கிறது. இரு அணிகளும் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால்தான் 16 புள்ளிகளைப் பெற முடியும், 4-ஆவது இடத்துக்கும் போட்டியிட முடியும். இரு அணிகளும் தங்களுக்குரிய 2 ஆட்டங்களில் ஒன்றில் தோற்று, மற்றொன்றில் வென்றால், ஒருவேளே ஆர்சிபி அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் வென்றால், ஆர்சிபி 5ஆவது இடத்தைப் பிடித்துவிடும்.

ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெல்ல வேண்டும், மற்ற இரண்டில் தோற்கவேண்டும். அல்லது சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும்.

மேலும், லக்னெள, டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களுக்கு இருக்கும் கடைசி இரு ஆட்டங்களிலும் ஒன்றில் வெல்ல வேண்டும், மற்றொன்றில் தோற்க வேண்டும். இவை நடந்தால், ஆர்சிபி ப்ளே ஆஃப் கனவு சாத்தியமாகும்.

 
ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம்,SPORTZPICS

போட்டியை ஆக்கிரமித்த விராட் கோலி

பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் விராட் கோலிதான். பவர்ப்ளேயில் கூட 14 பந்துகளைச் சந்தித்த கோலி, அதன்பின் ‘பழைய’ கோலியாக பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 32 பந்துகளில் அரைசதம் அடித்து, 47 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்து விராட் கோலி ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 7பவுண்டரிகள் என 195 ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி பேட் செய்தார். இந்த ஐபிஎல் சீசனில் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் கோலி ஆடியது இந்தப் போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட கோலி, போட்டியை தன்வசமாக்கும் திறன் கொண்ட சஷாங் கிங்கை ரன்அவுட் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். அருமையான “டைரெக்ட் ஹிட்” த்ரோ செய்து ஆட்டத்தில் இந்தத் திருப்புமுனையை ஏற்படுத்தினார் கோலி. ஆட்டநாயகன் விருதும் அவருக்கே கிடைத்தது.

ஆர்சிபி அணியன் ஸ்கோர் உயர்வுக்கு நடுவரிசையில் களமிறங்கி விளாசிய ரஜத் பட்டிதாரின் 23 பந்துகளில் 55 ரன்கள், கேமரூன் கிரீனின் 27 பந்துகளில் 46 ஆகிய பங்களிப்பும் முக்கியக் காரணமாக அமைந்தது. விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பட்டிதார் 32 பந்துகளில் 76 ரன்களும், கேமரூன் கிரீன் 46 பந்துளில் 92 ரன்களும் சேர்த்து பஞ்சாப் கிங்ஸ் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தனர்.

அதேபோல பந்துவீச்சில் ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர்கள் கரன் ஷர்மா, ஸ்வப்னில் சிங் இருவரும் நடுப்பகுதி ஓவர்களில் பஞ்சாப் பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியளித்து ரன்ரேட்டை உயரவிடாமல் இழுத்துப் பிடித்து, விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கரன் ஷர்மா, ஸ்வப்னில் இருவரும் சேர்ந்து 6 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 9-வது ஓவரிலிருந்து 12 ஓவர்வரை இருவரும் ஆதிக்கம் செய்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை திணறவிட்டனர்.

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம்,SPORTZPICS

பிரமாண்ட வெற்றி பற்றி டூப்பிளசிஸ் கூறியது என்ன?

வெற்றிக்குப்பின் ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ எங்களின் தவறுகள் குறித்து தொடர்ந்து ஆலோசித்து, வீரர்களிடம் பேசியதில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. அதில் பேட்டிங்கில் நல்ல ஆவேசம் காணப்படுகிறது, பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க வேண்டும். ஆனால், அதுநடக்கவில்லை. அது குறித்தும் வீரர்களிடம் பேசியுள்ளோம். எங்கள் அணியிலும் நன்றாகப் பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற வேட்கையுடன் வீரர்கள் இருந்தார்கள், அவர்களைக் கண்டுபிடித்தோம் அவர்களை ஃபார்முக்கு கொண்டுவரப் போராடினோம்.இப்போது சில வீரர்கள் உண்மையில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள், நாங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தின் பாணியை நாங்கள் விளையாட விரும்புகிறோம், அதைச் செய்தால் நாங்கள் ஒரு நல்ல அணி என்பதை நிரூபிப்போம்” எனத் தெரிவித்தார்

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம்,SPORTZPICS

திரும்பி வந்துவிட்டாரா ‘பழைய’ விராட் கோலி?

நடப்பு ஐபிஎல் டி20 சீசனில் விராட் கோலி அதிகமான ரன் குவித்த பேட்டர்களில் 12 போட்டிகளில் ஒருசதம், 5 அரைசதங்கள் உள்பட 634 ரன்கள் சேர்த்து ஆரஞ்சு தொப்பியைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

ஆர்சிபி அணியில் கேப்டன் பதவியை துறந்தபின் கடந்த இரு சீசன்களாக கோலி சிறப்பாக பேட் செய்து வருகிறார். இந்த ஆட்டத்திலும் பவர்ப்ளேயில் 14 பந்துகளைச் சந்தித்த கோலி, அதன்பின்புதான் அதிரடிக்கு மாறினார். வில் ஜேக்ஸ்(12), டூப்பிளசிஸ்(9) ஏமாற்றியபின், பட்டிதாருடன் சேர்ந்த பின் கோலியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. மிட்விக்கெட், கவர்ஸ் திசையிலும் பவுண்டர்கள் பறந்தன, கால்களை அருமையாக நகர்த்தி, பிரமாதமான ஃபுட்வொர்க் செய்தும், கைமணிக்கட்டில் அருமையான ஷாட்களையும் ஆடி கோலி பேட் செய்தார். கோலியின் ஆட்டத்தை நேற்றுப் பார்க்கும்போது ‘வின்டேஜ்’ கோலியின் ஆட்டத்தைப் பார்த்த உணர்வு இருந்ததாக தொலைக்காட்சி விமர்சகர்கள் கூறினார்கள்.

அதிலும், சாம்கரன் வீசிய 16-வது ஓவரில் ஸ்வீப் ஷாட் அடிக்கும் வகையில் காலை மடக்கிக் கொண்டு கோலி அடித்த சிக்ஸர் பழைய கோலியை நினைவூட்டியதாக ரசிகர்கள் பலரும் அந்தக் காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரில் அவுட்சைட் ஆப்பில் லென்த்தில் வீசப்பட்ட பந்தை அப்பர்கட்டில் அடித்த சிக்ஸரும் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகிறது.

அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 92 ரன்கள் சேர்த்து சதத்தை நோக்கி நகர்ந்தபோது, அர்ஷ்தீப் ஓவரில் ரூஸோவால் கேட்ச்பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். விராட் கோலி களத்துக்கு வந்தபோது ரன் ஏதும் சேர்க்காமல் இருந்த நேரத்தில், அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்காமல் பஞ்சாப் வீரர்கள் தவறவிட்டனர், அதன்பின் கோலி 10 ரன்கள் சேர்த்திருந்தபோது அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிக்கத் தவறினர்.

ஐபிஎல் விராட் கோலி

பட மூலாதாரம்,SPORTZPICS

பீல்டிங்கிலும் கோலி நேற்று படு உற்சாகமாக செயல்பட்டார். பஞ்சாப் அணிக்கு 39 பந்துகளில் 92 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது. சஷாங்க் சிங், சாம் கரன் என இரு ஆபத்தான பேட்டர்கள் களத்தில் இருந்தனர். 14வது ஓவரின் 4வது பந்தில் சாம்கரன் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடி 2வது ரன் ஓட சஷாங் சிங்கை அழைத்தார்.

அப்போது, டீப் மிட்விக்கெட்டில் பீல்டிங் செய்த கோலி, வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து தாவிச் சென்று ஸ்டெம்ப்பைப் பார்த்து எறிந்து சஷாங்க் சிங்கை ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கோலி டைவ் செய்து ஸ்டெம்ப்பை நோக்கி துல்லியமாக பந்தை எறிவார் என சஷாங்சிங் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. களத்தில் நன்றாக செட்டில்ஆகி 19 பந்துகளில் 39 ரன்களுடன் ஆடிய சஷாங்க் சிங் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்றார்.

இந்த விக்கெட்தான் ஆட்டத்தின் திருப்புமுனையைாக அமைந்தது, அடுத்த 30 ரன்களுக்குள் பஞ்சாப் அணி மீதமிருந்த 5விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.

 
ஐபிஎல் ப்ரீத்தி ஜிந்தா

பட மூலாதாரம்,SPORTZPICS

பஞ்சாப் அணி ஏமாற்றம்

கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை சேஸிங் செய்து மிரட்டிய பஞ்சாப் அணி நேற்று ஆடிய ஆட்டத்தைப் பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பஞ்சாப் அணி பவர்ப்ளேயில் அதிரடியாகத் தொடங்கி 75 ரன்கள் சேர்த்தனர். ஆனால், அதன்பின் அவர்களால் பெரிய இலக்கை துரத்தும் வகையில் பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை.

ரூஸோ 61 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் அதிகபட்சமாகும். சஷாங் சிங் (37),பேர்ஸ்டோ(27), சாம்கரன்(22) ஆகியோர் ஓரளவு பங்களிப்பு செய்தனர். 12 ஓவர்களில் 126 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த பஞ்சாப் அணி அடுத்த 6 ஓவர்களில் 55 ரன்களுக்கு மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. 14வது ஓவரிலிருந்து 17-வது ஓவர் வரை ஒவ்வொரு ஓவருக்கும் விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்து தோல்வியை ஒப்புக்கொண்டது.

https://www.bbc.com/tamil/articles/cd13wnj1xqko

ipl-pt-09-05.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று குஜராத் & சென்னை ஆட்டம் ......முதல் துடுப்பு போட்ட குஜராத்தின் முதல் ஆட்டக்காரர் இருவரும் முறையே சுதர்சன் & கில் ஆளாளுக்கு 100 க்கு மேல் அடித்து இந்த வறட்சியான நேரத்தில் சென்னைக்கு தண்ணி காட்டியிருக்கிறார்கள்....... இனி சென்னை தண்ணி குடித்துத் தாகம் தீர்க்குமா இல்லை சுருண்டு படுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, suvy said:

இன்று குஜராத் & சென்னை ஆட்டம் ......முதல் துடுப்பு போட்ட குஜராத்தின் முதல் ஆட்டக்காரர் இருவரும் முறையே சுதர்சன் & கில் ஆளாளுக்கு 100 க்கு மேல் அடித்து இந்த வறட்சியான நேரத்தில் சென்னைக்கு தண்ணி காட்டியிருக்கிறார்கள்....... இனி சென்னை தண்ணி குடித்துத் தாகம் தீர்க்குமா இல்லை சுருண்டு படுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.......!   😂

LIVE
59th Match (N), Ahmedabad, May 10, 2024, Indian Premier League
Gujarat Titans FlagGujarat Titans                       231/3
Chennai Super Kings FlagChennai Super Kings          (2.5/20 ov, T:232) 10/3

CSK need 222 runs in 103 balls.

Current RR: 3.52     • Required RR: 12.93
Win Probability:CSK 1.35%  GT 98.65%
அண்ணை படுத்தே விட்டார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்தடுத்த ஆண்டுகளில் சுதர்சனுக்கான பணம் பன்மடங்காகும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:
LIVE
59th Match (N), Ahmedabad, May 10, 2024, Indian Premier League
Gujarat Titans FlagGujarat Titans                       231/3
Chennai Super Kings FlagChennai Super Kings          (2.5/20 ov, T:232) 10/3

CSK need 222 runs in 103 balls.

Current RR: 3.52     • Required RR: 12.93
Win Probability:CSK 1.35%  GT 98.65%
அண்ணை படுத்தே விட்டார்கள்.

சென்னை தண்ணீர் குடித்தார்கள் ஆனால் தாகம் தீரவில்லை அதனால் என்ன வெற்றி தோல்விக்கு அப்பால் "தோனி" களமிறங்கி ஓரிரு ஆறும் நாலும் அடித்தாலே போதும் அவரது ரசிகர்களுக்கு அதற்கேற்றாற் போல் இன்று தோனியும் களமிறங்கி நல்ல விருந்து பரிமாறினார் ..........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

GT vs CSK: சாதனைகளை முறியடித்த கில், சுதர்சன் - சி.எஸ்.கே ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல்

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த அணிகள்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைசி இடத்தில் இருந்த அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறது.

இதுபோன்ற சுவரஸ்யமான திருப்பங்கள் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் கிடைத்து வருகின்றன. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்றைய தோல்வியால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஒரே பலம் நிகர ரன்ரேட் மட்டும்தான். அந்த நிகர ரன்ரேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் 3வது இடத்தை அல்லது 2வது இடத்தைப் பிடிக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில் இப்போது 4வது இடத்தைப் பிடிக்கவே கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாகி இருக்கிறது.

 

ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

 

சிஎஸ்கே-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPOTZPICS

இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான பாதை குறுகியுள்ளது. சிஎஸ்கே அணி தற்போது 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேவுக்கு இணையாக டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன.

ஆனால், இந்த இரு அணிகளின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், சிஎஸ்கே அணியைவிட பின்தங்கியுள்ளன. ஆனால் சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் இந்தத் தோல்வியால்கூட பெரிதாக பாதிக்காமல் நிகர ரன்ரேட் 0.491 என வலுவாக இருப்பதால் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

சிஎஸ்கே, அடுத்து வரும் 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலும், அதன்பின் ஆர்சிபியுடன் பெங்களூருவிலும் சிஎஸ்கே மோதுகிறது. இந்த இரு அணிகளும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால், இரு அணிகளையும் வீழ்த்துவது சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருக்கும்.

ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான சாத்தியங்கள் என்ன?

ஒருவேளை சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது, டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகள் தங்களுக்குரிய 2 ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த இரு அணிகளில் எந்த அணியின் நிகர ரன்ரேட் சிறப்பாக இருக்கிறதோ அந்த அணி 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை லக்னெள, டெல்லி அணிகள் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்று தலா 14 புள்ளிகளுடன் முடித்து, ஆர்சிபி அணியும் 14 புள்ளிகளுடன் முடித்து, குஜராத் அணியும் 14 புள்ளிகளுடன் முடித்தால், கடைசி இடத்துக்கு சிஎஸ்கே, டெல்லி, லக்னெள, ஆர்சிபி, குஜராத் ஆகிய 5 அணிகள் போட்டியிடும், நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி உயர்வாக இருக்கிறதோ அந்த அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறும்.

இந்தக் கணக்கீட்டின்படி, சிஎஸ்கேவுக்கு நிகர ரன்ரேட்டில் சவாலாக இருப்பது ஆர்சிபி மட்டும்தான். ஆர்சிபி 0.217 என்ற அளவில் இருப்பதால் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு இணையாக வந்துவிடும். அப்போது 14 புள்ளிகளுடன் போட்டியிடும்போது, சிஎஸ்கே அல்லது ஆர்சிபி என்ற போட்டியும் வரலாம்.

 

குஜராத் அணிக்கு வாய்ப்பு குறைவு

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.063 எனப் பின்தங்கியுள்ளது. குஜராத் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் வென்றால் 14 புள்ளிகள் பெறலாம்.

ஆனால், நிகர ரன்ரேட்தான் அந்த அணிக்குப் பெரிய சிக்கலாக உள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றால், குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகலாம், அது மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால்தான் அது சாத்தியம்.

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

போட்டியை ஆக்கிரமித்த கில், சுதர்சன்

குஜராத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், தமிழக வீரர் சாய் சுதர்சன் இருவரும்தான். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி விளையாடி பெரிய ஸ்கோருக்கு அணியைக் கொண்டு சென்றனர்.

ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமே சதம் அடித்த 3வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். இதற்கு முன் விராட் கோலி, ஏபிடி ஜோடி 2016இல் குஜராத் லயன்ஸுக்கு எதிராகவும், ஆர்சிபிக்கு எதிராக 2019இல் வார்னர், பேர்ஸ்டோ ஜோடியும் சதம் அடித்திருந்தனர்.

கேப்டன் சுப்மன் கில் 51 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (7 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இவருக்குத் துணையாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து (6 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 210 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

 
IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் குஜராத் அணி சேர்த்தது என்பது ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் சேர்ப்பது 2வது முறை. இதற்கு முன் 2022இல் கொல்கத்தா அணிக்கு எதிராக கே.எல்.ராகுல், டீகாக் ஜோடி 210 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். அது மட்டுமல்லாமல் இது சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

அது மட்டுமல்லாமல் ஆமதாபாத்தில் குஜராத் அணி சேர்த்த 231 ரன்கள் என்பது ஐபிஎல் தொடரில் அந்த அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 233 ரன்கள் சேர்த்திருந்தது குஜராத் அணி.

சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி 150 ரன்களுக்கு மேல் சாய் சுதர்சன், கில் சேர்த்ததுதான் அதிகபட்சம். இதற்கு முன் 2015இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரஹானே, வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்திருந்ததுதான் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது.

கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் ஆட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து பேட் செய்தனர். சான்ட்னர் வீசிய முதல் ஓவரிலேயே கில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார், ஜடேஜா ஓவரை வெளுத்த சாய் சுதர்சன் 21 ரன்கள் சேர்த்து சுழற்பந்துவீச்சாளர்களை மிரட்டினார். சுதர்சன் 32 பந்துகளில் அரை சதத்தையும், கில் 25 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தனர்.

 

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது. ஆனால் குஜராத் அணி ஸ்கோரையும், ரன்ரேட்டையும் உயர்த்தியது 7 முதல் 15வது ஓவர்களுக்கு இடையேதான்.

இந்த 8 ஓவர்களில் மட்டும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். குறிப்பாக 9 முதல் 14 ஓவர்களுக்கு இடையே மட்டும் 100 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே முடிவில் 58 ரன்கள் இருந்த குஜராத் அணி 9.3 ஓவர்களில் 100 ரன்களையும், 12.4 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 16.2 ஓவர்களில் 200ரன்களை குஜராத் அணி எட்டியது.

சாய் சுதர்சன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார், கில் 50 பந்துகளில் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். இருவரையும் 18வது ஓவர் வரை சிஎஸ்கே பந்தவீச்சாளர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை.

தேஷ் பாண்டே வீசிய 18வது ஓவரில் ஆஃப் சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை விரட்டி அடிக்க முற்பட்டு சாய் சுதர்சன் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கில் 103 ரன்கள் சேர்த்தநிலையில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை மட்டும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் வீசியதால், 30 ரன்கள் மட்டும் குஜராத் அணியால் சேர்க்க முடிந்தது.

 

சிஎஸ்கே அணி தோற்றது ஏன்? செய்த தவறுகள் என்ன?

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து சுழற்பந்துவீச்சை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருவது நேற்றைய ஆட்டத்திலும் ஒரு விமர்சனமாக வர்ணனையாளர்களால் வைக்கப்பட்டது.

புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா இரு அணிகளுமே சுழற்பந்துவீச்சை சிறப்பாகப் பயன்படுத்தி அந்த இடத்தை அடைந்தவை. ஆனால் சிஎஸ்கே அணியில் சான்ட்னர், ஜடேஜா, மொயின் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

மொயீன் அலி சர்வதேச அளவில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியவர், டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய நீண்ட அனுபவமுடையவர். ஆனால், இரு இடதுகை பேட்டர்கள் களத்தை 15 ஓவர்களுக்கு மேலாக ஆக்கிரமித்து விளையாடும்போது, அவர்களை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னரான மொயீன் அலியை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து வர்ணனையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

ஜடேஜா, சான்ட்னர் ஓவர்களில் ரன்கள் அதிகமாகச் சென்றவுடன் இருவருக்கும் 2 ஓவர்களோடு கெய்க்வாட் நிறுத்தினார், ஆனால் இருவருமே விக்கெட் டேக்கர்கள் என்பதை மறந்துவிட்டு, டேரல் மிட்ஷெலுக்கு ஓவரை வழங்கினார். ஆனால், மிட்ஷெல் 4 ஓவர்கள் வீசி 52 ரன்கள் கொடுத்தார். சிமர்ஜித் சிங் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார். இவர்கள் இருவர் மட்டுமே 112 ரன்களை வழங்கினர்.

 

'ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டோம்'

IPL 2024: GT vs CSK

பட மூலாதாரம்,SPORTZPICS

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “எங்களின் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை, 10 முதல் 15 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். மற்ற வகையில் சிறப்பாகவே செயல்பட்டோம். அதிலும் மிட்ஷெல், மொயீன் அலி ஆட்டம் அற்புதமாக இருந்தது. எங்களின் அடுத்த ஆட்டம் சென்னையில் நடக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற வலிமையான அணிக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

அதேபோல பவர்ப்ளேவில் ரன்களை சேர்க்கவும் சிஎஸ்கே அணி தவறவிட்டது. பவர்ப்ளே ஓவர்களுக்குள் ரஹானே(1), ரவீந்திரா(1), கெய்க்வாட்(0) என 3 முக்கிய பேட்டர்களை 10 ரன்களுக்குள் இழந்தது. குறிப்பாக கெய்க்வாட் இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராகக் களமிறங்கி சிறப்பாக பேட் செய்து வரும்போது, திடீரென ஒன்டவுனில் களமிறங்கியது ஏன் என்ற கேள்வியும் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. ரஹானே இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இல்லை, இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது ஏன் எனத் தெரியவில்லை.

டேரல் மிட்ஷெல்-மொயீன் அலி இருவரும் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் சிஎஸ்கே அணியின் ஆறுதலான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மொயீன் அலி 31 பந்துகளில் அரைசதத்தையும், டேரல் மிட்ஷெல் 27 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர்.

இருவரின் ஆட்டமும் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் அதை மோகித் சர்மா உடைத்தார். மோகித் சர்மா பந்துவீச வராத வரைக்கும் சிஎஸ்கே ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த 3 ஆட்டங்களாக மோசமாகப் பந்துவீசிய மோகித் சர்மா நேற்று சிஎஸ்கே பேட்டர்களை மிரட்டினார். தனது பந்துவீச்சு வேரியேஷனில் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார்.

மிட்ஷெல், மொயீன் அலி, ஷிவம் துபே ஆகிய 3 பேரின் விக்கெட்டையும் தனது ஸ்லோ பால், நக்குல் பால் தந்திரத்தால் மோகித் சர்மா வீழ்த்தினார். மிட்ஷெல் 63 ரன்களிலும், மொயீன்ன் அலி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவர் சேர்த்த ஸ்கோர்தான் சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாகும்.

https://www.bbc.com/tamil/articles/c6py9l14x8no

ipl-pt-10-05.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

puthiyathalaimurai%2F2024-05%2Ff8eb2971-
 

இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும்.

அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது.

அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

KKR vs MI: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா தகுதி - திருப்புமுனை ஏற்படுத்திய ரஸல், ராணா

ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தன.

ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், அதை உறுதி செய்ய ஏதாவது ஒரு வெற்றி தேவையாகவே இருந்து வந்தது. அந்த வெற்றியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் முதல் அணியாகத் தகுதி பெற்றது. அதேநேரம், முதல் இரு இடங்களைப் பிடிக்கவும் கொல்கத்தாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மழையால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

முதல் இரு இடங்களில் கொல்கத்தா

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளே ஆஃப் சுற்றையும் முதல் அணியாக உறுதி செய்தது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா அணி வலுவாக 1.428 என இருக்கிறது. கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரணமாக வென்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைக்கும்.

ஒருவேளை இரு ஆட்டங்களிலும் தோல்வி அடையும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்திருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் இருப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மற்றொரு ஆட்டத்தில் வென்றால்கூட கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம்.

 
ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

ஆனால், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று மற்ற இரு ஆட்டங்களில் வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முடித்து நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் முடித்தால் ராஜஸ்தான் அணிதான் முதலிடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் முடிவு செய்யப்படும்.

அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணியைவிட வலுவாக கொல்கத்தா இருக்கிறது. அடுத்த இரு வெற்றிகளால் கொல்கத்தா அணி இன்னும் புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை வலுப்படுத்தும். ஆனால், ராஜஸ்தான் அணி 0.426 என கொல்கத்தா ரன்ரேட்டைவிட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிப்பது மாபெரும் வெற்றிகளைப் பெற்றால்தான் சாத்தியம். ஆதலால், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதி.

மும்பை அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் ஆறுதல் வெற்றிக்காக நேற்று களமிறங்கி 9வது தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி இதுவரை 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.

தனது கடைசி லீக்கில் லக்னெள அணியை மும்பை அணி வரும் 17ஆம் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை அணி வென்றால், லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை லக்னெள அணி வென்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும்.

 

தமிழக வீரர் வருணுக்கு ஆட்டநாயன் விருது

ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பந்துவீச்சாளர்கள்தான். ஈரப்பதமான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி, மும்பை பேட்டர்களை ரன்சேர்க்கவிடாமல் திணறவிட்டனர்.

குறிப்பாக சுனில் நரைன், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருவரும் மும்பை பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போடும் வகையில் பந்து வீசினர். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே இருவரும் விட்டுக்கொடுத்தனர்.

இதில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து, அடுத்த 5 ஓவர்களை வருண், நரைன் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க மும்பை பேட்டர்களை அனுமதித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் நெருக்கடி அளித்தனர்.

ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

ரஸல், ராணா திருப்புமுனை

ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் பந்துவீச்சில் நேற்று 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே நரைன், வருண் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் திணறி வந்தனர். இதில் ரஸலும் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி, ஸ்லோவர் பால், நக்குல் பால், ஸ்லோ பவுன்சர் என வீசி ஸ்கை பேட்டரை திணறவிட்டார்.

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்கை 11 ரன்களில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல டிம் டேவிட் வந்தவேகத்தில் ரஸல் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரஸல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித் தரக் காத்திருந்த திலக் வர்மா, நமன் திர் இருவரையும் ஹர்சித் ராணா வெளியேற்றினார். இந்த 4 பந்துவீச்சாளர்கள்தான் கொல்கத்தா அணி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து டிபெண்ட் செய்து கொடுத்தனர்.

 

கொல்கத்தாவின் பேட்டிங் எப்படி இருந்தது?

ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

கொல்கத்தா அணிக்கு வழக்கமாக அதிரடியான தொடக்கம் அளிக்கும் நரைன்(0), பில் சால்ட் (6) ஸ்ரேயாஸ்(7) மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவர்ப்ளேவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

வெங்கடேஷ்(42), நிதிஷ் ராணா(33), ரஸல்(20), ரிங்கு சிங்(20) ஆகியோர் சிறிய கேமியோ ஆடி சேர்த்த ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். எந்த பேட்டரும் அரைசதம்கூட அடிக்கவில்லை, அனைத்து வீரர்களின் பங்களிப்பால் 157 ரன்கள் எனும் ஸ்கோரை கொல்கத்தா அடைந்தது.

பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு

ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை நேற்று எதிர்கொண்ட சுனில் நரைன் நிச்சயமாக சில வினாடிகள் திகைத்திருப்பார். பும்ரா வீசிய பந்து யார்க்கராக ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று நரைன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த பந்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் நரைன் டக்-அவுட்டில் வெளியேறினார். இந்த சீசனில் நரைன் டக்-அவுட் ஆவது இதுதான் முதல்முறை.

பும்ரா வீசிய முதல் ஓவர் முதல் பந்து, பும்ராவின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கிச் சென்றது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் ஸ்விங் ஆகி நரைனின் ஆஃப் ஸ்டெம்பை தட்டிவிட்டு க்ளீன் போல்டாக்கியது.

அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி பந்து செல்கிறது என நினைத்து பேட்டை தூக்கியவாறு நரைன் நிற்க பந்து ஸ்டெம்பை தட்டிவிட்டு சென்றதைப் பார்த்து நரைன் சில வினாடிகள் திகைத்து நின்றார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

‘நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை’

ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “எங்களுக்கு இந்த சீசனும், இந்த ஆட்டத்தின் தோல்வியும் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் அதை நடுவரிசையில் வந்தவர்கள் பயன்படுத்தாதற்கு விலை கொடுத்துவிட்டோம். ஆடுகளம் கண்டுபிடிக்க முடியாத அளவு வித்தியாசமாக இருந்தது, ஆனால், தருணம்(மொமென்ட்டம்) என்பது முக்கியமானது, அந்தத் தருணத்தை, வாய்ப்புகளை நாங்கள் கைப்பற்ற முடியவில்லை."

"இந்தச் சூழலுக்கு இந்த இலக்கு அடையக்கூடியதுதான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மழை காரணமாக, பந்துகள் பவுண்டரி சென்றாலே ஈரமாகிவிடுகிறது. கொல்கத்தா அணியும் சிறப்பாகப் பந்துவீச்சில் செயல்பட்டனர்.

அடுத்து வரும் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை இந்த சீசனில் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார்

ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோஹித் சர்மா

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலை நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை அடித்து வரும் நிலையில் ரோஹித் சர்மா விருப்பமில்லாமல் பேட் செய்தார். அதிலும் குறிப்பாக வருண் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க பலமுறை ரோஹித் முயன்றும் பந்து அவருக்கு மீட் ஆகவில்லை.

பவர்ப்ளே ஓவர்கள் முழுவதும் களத்தில் இருந்த ரோஹித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வருவது நேற்று கடினமாக இருந்தது. 24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 19 ரன்கள் சேர்த்தார் இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும்.

ஐபிஎல் 2024: KKR vs MI

பட மூலாதாரம்,SPORTZPICS

ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 79 ஆக இருந்தது. இஷான் கிஷன் அதிரடியாக பேட்டை சுழற்றியதால்தான் பவர்ப்ளேவில் மும்பை 59 ரன்கள் சேர்த்தது.

டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ரோஹித் சர்மா இப்படி ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணியின் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளதும் பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது.

நம்பிக்கையளித்த பேட்டர்கள்

சூர்யகுமார் யாதவ்(11) நடுவரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(0), நேஹல் வதேரா(3), ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா, நன் திர் இருவரும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர்.

கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஸ்கோர் எட்டக்கூடியதுதான். ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் திலக் வர்மா சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். நமன் திர் உற்சாகமடைந்து, ரஸல் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார்.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா, நமன்திர் மீது நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் திலக் வர்மா(32), நமன்திர்(17) இருவரும் விக்கெட்டை இழக்க மும்பையின் கதை முடிந்தது.

https://www.bbc.com/tamil/articles/cnd6jw30dj9o

ipl-pt-11-05.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
பார்ம்ல இருக்கவன பார்ம் அவுட் பண்ணனுமா...
பார்ம்ல இல்லாதவனுக்கு ஓப்பனிங் பேட் வேணுமா
டேபிள் கடைசில இருக்க அணிய டேபிள் டாப் கொண்டு போகனுமா
மத்த டீம் கிட்ட அடி வாங்குனவன் எல்லாம் 100 அடிக்கனுமா
டாஸ் வின் பண்ணி மேட்ச் தோக்கனுமா
திறமையான பிளேயர்ஸ் எல்லாரையும் வருச கணக்கா பெஞ்ச்ல உக்கார வைக்கனுமா
அணுகுவீர் சென்னை சூப்பர் கிங்ஸ்... சேப்பாக்கம் மைதானம்.... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.....
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜஸ்தானை வென்று மூன்றாவது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேற்றம் - ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன?

CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 42 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் பாதையை விசாலமாக்கியுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை என்பதால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு டென்ஷன் நீடிக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மந்தமான ஆட்டம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கமாக அதிரடியாகத் தொடங்கக்கூடிய இருவரும் நிதானமாக ஆடினர். தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள்தான் எடுத்தனர். தீக்சனா வீசிய 2வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் ராஜஸ்தான் பேட்டர்கள் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில்தான் பட்லர் முதல் பவுண்டரியை அடித்தார். தீக்சனா வீசிய 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரி என 13ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஷர்துல் வீசிய 5வது ஓவரில் ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் மட்டுமே சேர்த்து. இந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் இழப்பின்றி ஒரு அணி பவர்ப்ளேயில் சேர்த்த குறைந்த ஸ்கோராகும்.

 
CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு

7வது ஓவரை வீசி சிமர்ஜீத் சிங் அழைக்கப்பட்டார். அவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்தநிலையில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த சாம்ஸன், பட்லருடன் இணை சேர்ந்தார். ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் பட்லர், சாம்ஸன் இருவரும் ரன்சேர்க்கத் தடுமாறினர்.

8-வது ஓவரை மீண்டும் சிமர்ஜீத் சிங் வீசினார். அப்போது ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்ற பட்லர் 21ரன்களில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் வந்தவுடனே சிக்ஸர் விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆடுகளத்தில் பேட்டர்களை நோக்கி பந்து வருவது மெதுவாக இருந்ததால், ரன் சேர்க்க ராஜஸ்தான் பேட்டர்கள் திணறினர். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜடேஜா வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் ஸ்விட்ச் ஹிட் ஷாட் அடிக்க டீப் கவர் திசையில் நின்றிருந்த தேஷ்பாண்டே அந்த கேட்சை தவறவிட்டார். சாம்ஸன், ரியான் பராக் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க சிரமப்பட்டு, ஒரு ரன், இரு ரன்களாகவே சேர்த்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வீதமே சேர்க்க முடிந்தது.

15-வது ஓவரை சிமர்ஜீத் சிங் வீசினார். ரன் சேர்க்க ஏற்கெனவே சாம்ஸன் தடுமாறி வந்தார். அவர் நினைத்தபடி எந்த ஷாட்களையும் அடிக்க முடியாததால் விரக்தியில் இருந்தார். சிமர்ஜித் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தை சாம்ஸன் தூக்கி அடிக்க முற்பட்டு, மிட்ஆஃப் திசையில் கெய்க்வாட்டிடம் கேட்சானது. சாம்ஸன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 
CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணி ரன் சேர்க்க திணறல்

அடுத்து ஜூரெல் களமிறங்கி, பராக்குடன் சேர்ந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் ஜூரெல் டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர் பறக்கவிட ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கடந்தது. சிமர்ஜீத் வீசிய 17-வது ஓவரில் ஜுரெல், பராக் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர்.

கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். அவுட்சைட் ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை ஜூரெல் தூக்கி அடிக்க ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் துபே, வந்த வேகத்தில் ஸ்லோவர் பாலை அடித்து ஷிவம் துபேயிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டாகினார். அந்த ஓவரில் ரியான் பராக் சிக்ஸர் அடித்து 10 ரன்கள் சேர்த்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 47 ரன்களுடனும், அஸ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

சிஎஸ்கே தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இவர்கள் தவிர ஜடேஜா, தீக்சனா இருவரும் நடுப்பகுதி ஓவர்களிலும், தொடக்கத்திலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ராஜஸ்தான் ரன்ரேட்டை உயர விடாமல் பார்த்து கொண்டனர்.

CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணி அதிரடி தொடக்கம்

142 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணியின் ரவீந்திரா, கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில் ரவீந்திரா ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். போல்ட் வீசிய 3வது ஓவரில் ரவீந்திரா சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் சேர்த்தார்.

சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியில் இடதுகை பேட்டர் இருப்பதால் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அஸ்வின் வீசிய ஓவரில் 4வது பந்தை ரச்சின் ரவீந்திரா தூக்கி அடிக்க அஸ்வினிடமே கேட்சானது. ரவீந்திரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கினார்.

சந்தீப் சர்மா வீசிய 5வது ஓவரில் மிட்ஷெல் இரு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் வீசிய 6-வது ஓவரிலும் மிட்ஷெல் 2 பவுண்டரிகளை விளாசி சிஎஸ்கே ரன்ரேட்டை உயர்த்தினார். பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது.

CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிக்கனம்

7வது ஓவரை ஆந்த்ரே பர்கர் வீசினார், இந்த ஓவரில் பவுன்சராக வீசப்பட்ட பந்தை கெய்க்வாட் சிக்ஸர் விளாச 10 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் மாற்றம் செய்து சஹல் அழைக்கப்பட்டார். சஹல் வீசிய 8-வது ஓவரில் கால் காப்பில் வாங்கி மிட்ஷெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார்.

ஆவேஷ் கான் வீசிய 9-வது ஓவரில் சிஎஸ்கே பேட்டர்கள் 7 ரன்களும், அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் 3 ரன்களும் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்தனர்.

11வது ஓவரை பர்கர் வீசினார். தொடக்கத்தில் இருந்தே திணறிய மொயின் அலி, டீப் கவர் பாயின்ட் திசையில் சிக்ஸருக்கு முயல, ஆவேஷ்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். மொயின் அலி 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

 
CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிக்ஸர் துபே ஏமாற்றம்

அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். சஹல் வீசிய 13-வது ஓவரில் துபேவும், கெய்க்வாட்டும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 14-வது ஓவரை அஸ்வின் வீசினார், முதல் பந்திலேயே துபே, ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸருக்கு விளாசினார், 2வது பந்தில் துபே பவுண்டரி விளாசினார். அஸ்வின் வீசிய கடைசிப்பந்தில் துபே சிக்ஸருக்கு முயற்சிக்க ரியான் பராக்கிடம் கேட்சானது. துபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

துபே விக்கெட்டை வீழ்த்திய போது, அஸ்வின் முக்கிய மைல்கல்லை எட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50-வது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.

சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டன. 15-வது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடிக்க, ஜடேஜா சிக்ஸருக்கு முயன்றார். ஆனால் பவுண்டரி அருகே நின்றிருந்த பட்லர் கேட்ச் பிடித்த நிலையில் எல்லைக்கோட்டின் மீது விழுவதற்கு முன்பே பந்தை தூக்கி எறிந்ததால் கேட்சாக மாறவில்லை.

CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜடேஜாவின் அரிதான ரன்அவுட்

ஆவேஷ் கான் 16-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தை சந்தித்த ஜடேஜா தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஒரு ரன் எடுத்த நிலையில், 2 வது ரன்னுக்கு ஓடி வரவே கெய்க்வாட் மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஜடேஜா ஓடும்போது, ஸ்டெம்பை மறைத்துக்கொண்டு ஓடினார். தன்னுடைய ஓடும் பகுதியையும் மாற்றி, பீல்டர் ரன்அவுட் செய்ய இடையூறு செய்யும் வகையில் ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடினார்.

பந்தை பிடித்து எறிந்த சாம்ஸன், ரன்அவுட் செய்ய முயல, பந்து ஜடேஜா கையில் பட்டது. ரன்அவுட்டுக்கு இடையூறாக ஓடியதாக ஜடேஜா மீது 3வது நடுவரிடம் சாம்ஸன் அப்பீல் செய்தார். இதை ஆய்வு செய்த 3வது நடுவர், ஜடேஜா ரன்அவுட் செய்யவிடாமல் ஸ்டெம்பை மறைத்து ஓடியது உறுதி செய்து அவுட் வழங்கினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஸ்வி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார்.

கெய்க்வாட் பொறுப்பான பேட்டிங்

CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே வெற்றிக்கு 24 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டன. சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் ரிஸ்வி பவுண்டரி உள்பட 8 ரன்கள் சேர்த்தார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன.

ஆந்த்ரே பர்கர் வீசிய 18-வது ஓவரில் கெய்க்வாட் ஒரு சிக்ஸர் விளாசி ரசிகர்களின் பதற்றத்தைக் குறைத்தார். போல்ட் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். 2வது பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். 18.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை அடைந்தது. கேப்டன் கெய்க்வாட் 42 ரன்களிலும், ரிஸ்வி 15 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன?

இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் என்பதால், சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளிக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்திருந்தனர். அரங்கமே மஞ்சள்மயமாகக் காட்சியளித்தது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஏகோபித்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு வெற்றியுடன் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானத்தை வலம் வந்து நன்றி செலுத்தினர். அது மட்டுமல்லாமல் தோனி டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை ரசிகர்கள் மத்தியில் அடித்து அவர்களை மகிழ்வித்தார்.

ஆட்டநாயகன் சிமர்ஜீத் சிங்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அச்சாரமாக இருந்தது சிமர்ஜீத் சிங்கின் பந்துவீச்சும், கேப்டன் கெய்க்வாட்டின் ஆங்கர் ரோல் பேட்டிங்கும்தான். பதீராணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையில் சிமர்ஜீத் பந்துவீச்சு, சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாக மாறியுள்ளது.

சிமர்ஜீத் தொடக்கத்திலேயே பட்லர், ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். இந்த அழுத்தத்தில் இருந்து ராஜஸ்தான் அணி கடைசி வரை மீள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார்.

CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணி ஏன் தோற்றது?

அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி இதுவரை பேட்டர்களுக்கு சாதமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு, சேப்பாக்கத்தில் மந்தமான ஆடுகளத்தில் விளையாடும் போது ஸ்கோர் செய்யத் திணறியதும் தோல்விக்கான காரணம். 141 ரன்கள் சேர்த்து அதை ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வது கடினமானது,

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தான் அணியை விட உயர்ந்து 0.528 என வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும். ஏற்கெனவே வலுவான நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி இருப்பதால், 16 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ், டெல்லி, லக்ளெ அணிகள் போட்டியிட்டாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.

ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியுடன் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணி இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றாலும், 14 புள்ளிகளுடன் இரு அணிகளும் கடைசி இடத்துக்கு போட்டியிடும். ஆனால், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே வலுவாக இருப்பதால், குறைந்தபட்சம் 4வது இடம் கிடைக்க வாய்ப்புண்டு.

 
CSK vs RR

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தானுக்கு 2வது இடம் கிடைக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தாலும், ராஜஸ்தான் அணி தனது 2வது இடத்திலிருந்து கீழே இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் பெரிதாக குறையாமல் 0.349 என நீடிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வென்றாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் ராஜஸ்தானுக்கு சவாலாக இருக்கும். இன்னும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால்கூட 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும்.

அதேநேரம், சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால், ராஜஸ்தான் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்று, ராஜஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் தீர்மானிக்கப்படும்.

https://www.bbc.com/tamil/articles/cjq581v213go

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐபிஎல்: பிளேஆப் வாய்ப்பு அதிகரித்தாலும் ஆர்சிபி அணியில் வெளிப்பட்ட பலவீனம்

ஆர்சிபி - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது.

ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருந்த டெல்லி கேபிடல்ஸ் அணி அதற்கான வாய்ப்பை மெல்ல இழந்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 62-ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 19.1ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்து 47 ரன்களில் தோல்வி அடைந்தது.

ஆர்சிபி - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

இந்த வெற்றியால் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு உயிர்ப்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகளில் ஆடிய ஆர்சிபி அணி 5 வெற்றிகள் உள்பட 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டிலும் லக்னெள, டெல்லி அணிகளைவிட சிறப்பாக 0.367 என்று வலுவாக இருக்கிறது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை கொல்கத்தா அணியிடம் ஒரு ரன்வித்தியாசத்தில் தோற்று 6வது தோல்வியை எதிர்கொண்டபோது, ஆர்சிபி அணி 5வது இடத்துக்கு முன்னேறியும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இப்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் ஆர்சிபி அணி, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வென்றால் 14 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற அணிகளின் முடிவுகள் ஆர்சிபிக்கு சாதகமாக இருக்க வேண்டும். அதாவது ஆர்சிபி அணி சிஎஸ்கே அணியை வென்று 14 புள்ளிகளுடன் இருக்கும்போது, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்றால் ஆர்சிபி வெளியேற்றப்படும்.

லக்னெள அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஏதாவது ஒன்றில் லக்னெள தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட் ஆர்சிபியைவிட மோசமாக இருக்கும். அப்போது இயல்பாக போட்டியிலிருந்து இரு அணிகளும் வெளியேறிவிடும்.

அது மட்டுமல்லாமல் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெல்ல வேண்டும், அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 200 ரன்கள் ஸ்கோர் செய்ய வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே ரன் ரேட்டைவிட ஆர்சிபி ரன்ரேட் அதிகரித்து ப்ளே ஆஃப் சுற்றில் 4வது இடத்தை அடையும்.

ஆர்சிபி - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு சாத்தியமா?

டெல்லி கேபிடல்ஸ் அணி 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டில் லக்னெள அணியைவிட சுமாராக இருந்து மைனஸ் 0.482 ஆக இருக்கிறது.அடுத்து வரும் லக்னெள அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கண்டிப்பாக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி இருக்கிறது. ஒருவேளை லக்னெளவை வென்றால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்கும் என்றாலும், நிகர ரன்ரேட் மைனஸ் 0.482 என இருப்பது பெரிய பின்னடைவு. ஒருவேளை லக்னெளவிடம் தோற்றால், டெல்லி அணி 12 புள்ளிகளுடன் வெளியேறும்.

டெல்லி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பு பெற வேண்டுமென்றால், சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த இரு லீக் ஆட்டங்களிலும் படுமோசமாகத் தோற்க வேண்டும், அதாவது ஒவ்வொரு ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்யும் அணிகள் 200 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும். லக்னெள அணியை 64ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோற்கடிக்க வேண்டும். இவை நடந்தால், சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட்டைவிட டெல்லி அணியின் ரன்ரேட் உயர்ந்திருக்கும். இவ்வாறு நடந்தால் டெல்லி அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு செல்லும். ஆதலால் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த கடைசி லீக்கில் லக்னெளவை வென்றாலும் டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு நனவாகாது.

ஆர்சிபி - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாம் பாதியில் தடுமாறிய ஆர்சிபி பேட்டர்கள்

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பேட்டிங்கில் ரஜத் பட்டிதார்(52), வில் ஜேக்ஸ்(41) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கும், கேமரூன் கிரீனின் (32) கேமியோவும்தான். இவர்களால்தான் ஆர்சிபி அணி ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை எட்டமுடிந்தது, பந்துவீச்சாளர்களும் துணிச்சலாக ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடிந்தது.

அதிலும் பேட்டிங்கில் 32 ரன்களும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய கேமரூன் கிரீன் ஆட்டநாயகன் விருது வென்றார்.

ஆர்சிபியின் நடத்திர பேட்டர்கள் டூப்பிளசிஸ், விராட் கோலியை விரைவாக இழந்தபின் ஆர்சிபி அவ்வளவுதான் எனரசிகர்கள் எண்ணினர். ஆனால், ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ் இருவரும் அணியைக் கட்டமைத்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் வில் ஜேக்ஸ் ஆட்டமிழந்தபின் ஆர்சிபி சரிவைச் சந்தித்தது. ஒரு கட்டத்தில் 220 ரன்கள் வரை அடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி. 174 ரன்கள் வரை ஆர்சிபி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது, அடுத்த 13 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேகமான விக்கெட் வீழ்ச்சிகளுள் இதுவும் ஒன்றாகும்.

ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு பவர்ப்ளே ஓவருக்குள் டெல்லி அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். பவர்ப்ளேயில் 4 விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி பாதி தோற்றுவிட்டது. அதிலும் அதிரடி பேட்டர் மெக்ருக்கின் விக்கெட்டை வீழ்த்தியபோது ஆர்சிபியின் வெற்றி ஏறக்குறைய உறுதியானது. ஏனென்றால் களத்தில் மெக்ருக் நின்றிருந்தால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை திருப்பக்கூடியவர். 86 ரன்கள் வரை டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில் அடுத்த 54 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆர்சிபி - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோலியை வென்ற இசாந்த்

விராட் கோலி தனது 250-வது ஐபிஎல் போட்டியில் நேற்று விளையாடினார். தொடக்கத்திலிருந்தே கோலி அதிரடியாக பேட் செய்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார்.

இசாந்த் சர்மா வீசிய ஓவரில் கோலி முதல் பந்தில் பவுண்டரியும், அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரும் விளாசி சிரித்தார். ஆனால் அடுத்த இரு பந்துகளில் இசாந்த்தின் அற்புதமான அவுட் ஸ்விங்கில் விக்கெட் கீப்பர் அபிஷேக்கிடம் கோலி கேட்ச் கொடுத்து 27 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி ஆட்டமிழந்து செல்லும்போது இசாந்த் சர்மா வேண்டுமென்றே கோலியை தடுத்து நகைச்சுவை செய்தார், இதை கோலியும் ரசித்து சிரித்துக்கொண்டே பெவிலியின் திரும்பினார்.

ரஜத் பட்டிதார் இந்தசீசனில் 11 போட்டிகளில் 8 முறை வேகப்பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தார். ஆனால், நேற்று நிதானமாக ஆடிய பட்டிதர் 8 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 15 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அக்ஸர் படேல், குல்தீப் ஓவர்களில் அதிரடியாக ஆடிய பட்டிதரால் பவர்ப்ளேயில் ஆர்சிபி 2 விக்கெட்இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது.

குல்தீப், அக்ஸர் ஓவர்களை வெளுத்த பட்டிதார் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் பட்டிதார் 4வது அரைசதத்தை நிறைவு செய்தார், பெங்களூருவில் இந்த சீசனில் முதல் அரைச் சதத்தை அடித்தார். பட்டிதாரை ஆட்டமிழக்கச் செய்ய 4 வாய்ப்புகள் வந்தும் அனைத்தையும் டெல்லி வீரர்கள் தவறவிட்டனர்.

ஆர்சிபி - டெல்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லியின் தோல்விக்கு காரணம் என்ன?

டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் படேல் கூறுகையில் “ சரியான நேரத்தில் கேட்ச் பிடித்திருந்தால் 20 முதல் 30 ரன்களைக் குறைத்திருப்போம், 150 ரன்களை எளிதாக சேஸிங் செய்திருப்போம். பவர்ப்ளேயில் நாங்கள் 4 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணம். 160 முதல் 170 ரன்கள் வரை எட்டக்கூடிய இலக்குதான். ஏனென்றால், இரவில் பந்து பேட்டர்களை நோக்கி வேகமாக வரவில்லை, வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பந்து விக்கெட்டில் பட்டு நின்று வந்ததால் அடித்து ஆட சிரமமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நடந்தது எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை என்பதை காண்பிக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல எதுவேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்” எனத் தெரிவித்தார்

அக்ஸர் படேல் போராட்டம்

டெல்லி அணியின் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் நேற்று பேட்டிங்கில் ஒற்றை வீரராகப் போராடி அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேலுக்கு ஒத்துழைத்து எந்த பேட்டரும் பேட் செய்யவில்லை. பவர்ப்ளே ஓவருக்குள் வார்னர்(1), ப்ரேசர்(21), அபிஷேக்(2), ஹோப்(29) என விக்கெட்டுகளை இழந்தபோதே டெல்லி அணி பாதி தோற்றுவிட்டது. 4 ஆட்டங்களுக்குப்பின் நேற்று பேட் செய்த வார்னர் ஒரு ரன்னில் ஸ்வப்னில் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். யாஷ் தயாலின் பவுன்ஸரில் அபிஷேக் போரெல் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை ஆர்சிபி வீழ்த்தியது 2வது முறையாகும், இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தியது.

நடுப்பகுதி ஓவர்களில் சரியான திட்டத்துடன் வந்த ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் லைன் லென்த்தில் துல்லியமாக வீசி டெல்லி பேட்டர்களை திணறவிட்டனர். 8-ஆவது ஓவரிலிருந்து 11வது ஓவர்கள் வரை ஆர்சிபி அணி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது. அக்ஸர் படேல் மட்டும் அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினார். மற்றவகையில் குமார்(2),ஸ்டெப்ஸ்(3) இருவருமே ஏமாற்றினர். கடைசி 4 விக்கெட்டுகளை டெல்லி அணி 13 ரன்களுக்குள் இழந்தது.

https://www.bbc.com/tamil/articles/c8vz33z04eyo

ipl-pt-12-05.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

441928064_977012720463683_91973441825292

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

441219685_1033625548132099_1151170847383

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடும் மழையினால் ஐபிஎல்லில் குஜராத்தின் ப்ளே ஓவ் வாய்ப்பு பறினோனது; கொல்கத்தாவுடன் அடுத்த 3 இடங்களுக்கு 6 அணிகள் போட்டி

Published By: VISHNU   14 MAY, 2024 | 02:05 AM

image

(நெவில் அன்தனி)

அஹமதாபாத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையிலான இண்டியன் பிறீமியர் லீக்கின் 63ஆவது போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் குஜராத்தின் ப்ளே ஓவ் வாய்ப்பு அற்றுப்போனது.

இப் போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதற்கு அமைய குஜராத் டைட்டன்ஸ் 13 போட்டிகளில் 11 புள்ளிகளைப் பெற்று முதல் சுற்றுடன் வெளியேற நேரிட்டுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இப்போதைக்கு 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. அவ்வணி மாத்திரமே ப்ளே ஒவ்வில் விளையாடுவதை இப்போதைக்கு உறுதிசெய்துகொண்டுள்ளது.

அணிகள் நிலையில் 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலுள்ள ராஜஸ்தான் றோயல்ஸுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. அதில் ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் ராஜஸ்தான் றோயல்ஸ் ப்ளே வாய்ப்பை உறுதிசெய்துகொள்ளும்.

14 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கும் சென்னை சுப்பர் கிங்ஸுக்கு ஒரே ஒரு போட்டியே மீதம் இருக்கிறது. 12 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசிப் போட்டியில் எந்த அணி வெற்றிபெற்றாலும் அந்த அணிக்கு ப்ளே ஓவ் வாப்ப்பு கிடைக்கும் என்று கூறமுடியாது.

ஏனேனில் 14 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு 2 போட்டிகள் மீதம் இருப்பதுடன் 12 புள்ளிகளுன் 7ஆம் இடத்திலுள்ள லக்னோவ் சுப்பர் ஜய்ன்ட்ஸுக்கும் 2 போட்டிகள் மீதமிருக்கின்றன.

இந்த இரண்டு அணிகளும் சிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் வெற்றிபெற்று 16 புள்ளிகளைப் பெற்றால் சென்னை சுப்பர் கி;ங்ஸுக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் திண்டாட்டம்தான்.

இங்கு குறிப்பிடப்பட்ட 5 அணிகளில் ஏதாவது 3 அணிகள் 14 புள்ளிகளுக்கு அப்பால் பெறாமல் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் தனது கடைசிப் போட்டியில் அதிசிறந்த நிகர ஓட்ட வேகத்துடன் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றிகொண்டால் டெல்ஹி நான்காவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும்.

ஆக, இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மாத்திரம் ப்ளே ஒவ் வாய்ப்பை உறுதி செய்துகொண்டுள்ள நிலையில் ப்ளே ஓவுக்கான அடுத்த 3 இடங்களுக்கு ஆறு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

https://www.virakesari.lk/article/183457

ipl-pt-13-05.jpg

Edited by ஏராளன்
மீளவும் இணைக்கப்பட்ட பிபிசி தமிழ் செய்தி மாற்றப்பட்டது
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

427997153_122170900022034101_84975595570

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெல்லியின் வெற்றியைக் கொண்டாடும் ஆர்சிபி ரசிகர்கள் - என்ன காரணம்?

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தியதால், “நானும் போகக்கூடாது, நீயும் முன்னேற முடியாது” என்ற ரீதியில் முடிவு இரு அணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால், இரு அணிகளின் முடிவு ராஜஸ்தான் அணிக்கு சாதகமாகி ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 64-வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியால் டெல்லிக்கு பயன் உண்டா?

லக்னெள அணியை டெல்லி அணி வீழ்த்தி 14 புள்ளிகளுடன் முடித்தாலும், அதன் நிகர ரன்ரேட் ஆர்சிபி அணியைவிட மோசமாகச் சரிந்துள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணியை ஆர்சிபி வென்றால் நல்ல ரன்ரேட் பெறும்போது டெல்லி தானாகவே ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். ஆதலால், கணித ரீதியாக வெளியேறிவிட்டது, ஆனால், அதிகாரபூர்வமாக வெளியேற்றப்படவில்லை.

சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும் சேர்த்து 194 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் ஸ்கோர் செய்ய வேண்டும். இதெல்லாம் நடந்தால் சன்ரைசர்ஸ் நிக ரன்ரேட்டைவிட டெல்லி அணி நிகர ரன்ரேட் உயர்ந்து, ப்ளே ஆப் செல்லலாம்.

 
ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னெள அணியின் நிலைமை என்ன?

அதேபோல லக்னெள அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது. 7-வது இடத்தில் இருக்கும் லக்னெள அணி 13 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்று, நிக ரன்ரேட் ரேட் மைனஸ் 0.787 எனச் சரிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை லக்னெள அணி கடைசி லீக்கில் வென்றாலும் அந்த அணிக்கு எந்த விதத்திலும் உதவாது. 14 புள்ளிகளுடன் லக்னெள முடித்தாலும், நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லாமல் வெளியேறும்.

ராஜஸ்தானுக்கு ‘ஆடாமலேயே கிடைத்த’ பிளேஆப் வாய்ப்பு

லக்னெள, டெல்லி அணிகள் 14 புள்ளிகளுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஆர்சிபி அணியும் கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றாலும் 14 புள்ளிகளுக்கு மேல் பெற வாய்ப்பில்லை. சிஎஸ்கே தற்போது 14 புள்ளிகளோடு இருப்பதால், கடைசி லீக்கில் ஆர்சிபியை வென்றால் 16 புள்ளிகள் பெறும், தோல்வி அடைந்தால் 14 புள்ளிகளோடு முடிக்கும். ஆதலால், 16 புள்ளிகள் பெறுவதற்கு வாய்ப்புள்ள அணிகளில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகள் மட்டுமே உள்ளன.

ஏற்கெனவே கொல்கத்தா அணி அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிட்டநிலையில் 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணியும் ப்ளே ஆஃப் சுற்றை நேற்றைய டெல்லியின் வெற்றியால் உறுதி செய்துள்ளது.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

2-ஆவது இடத்துக்கு இடத்துக்கு கடும் போட்டி

சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிகளும், சிஎஸ்கே வெற்றியையும் பொருத்து, ராஜஸ்தான் அணியின் இடம் உறுதியாகும். ஆனால், ராஜஸ்தான் அணி கடைசி இரு லீக் போட்டிகளில் தோற்றாலும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாது. ஆதலால், அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் ராஜஸ்தான் அணி “மிகுந்த ரிலாக்ஸாக டென்ஷன்” இன்றி விளையாடலாம்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டங்களிலும் வென்றால் 18 புள்ளிகள் பெறும், ராஜஸ்தான் அணியும் கடைசி இரு லீக் ஆட்டங்களில் வென்றால் 20 புள்ளிகளோடு முதலிடத்தைப் பிடிக்கும், ஒரு ஆட்டத்தில் வென்றால், சன்ரைசர்ஸ் அணியோடு 2-வது இடத்துக்கு மல்லுகட்டும். எந்த அணியின் நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 2வது இடத்தையும், அடுத்த அணி 3வது இடத்தைப் பிடிக்கும்.

சிஎஸ்கேவுக்கு வாழ்வா-சாவா போட்டி

சிஎஸ்கே அணி 16 புள்ளிகள் பெற்றால் 4-ஆவது இடத்தை சிக்கலின்றி உறுதி செய்யும். ஒருவேளை ஆர்சிபியிடம் தோல்வி அடைந்தாலும், பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோற்காமல் அதன் ரன்ரேட்டை பாதிக்காமல் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் ஆர்சிபி ப்ளே ஆஃப் செல்ல வழிவகுத்துவிடும்.

தற்போது டெல்லி அணி லக்னௌவை வீழ்த்தியிருப்பதன் மூலம், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளுக்கும் நன்மை செய்திருக்கிறது என்றே கூற வேண்டும். குறிப்பாக ஆர்சிபி ரசிகர்கள் டெல்லியின் வெற்றியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், பிளேஆப்பின் மீதமிருக்கும் இரு இடங்ளுக்கு அதிக வாய்ப்பு கொண்ட பட்டியலில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுடன் ஆர்சிபியும் இப்போது சேர்ந்து கொண்டது. கடைசி போட்டியில் வெல்லும்பட்சத்தில் ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்புக் கிடைக்கும்.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது எப்படி?

டெல்லி அணி 2024 ஐபிஎல் சீசனை முடிக்கும்போது ஆறுதலான வெற்றியோடு முடித்துள்ளது. தொடக்கத்திலிருந்தே சரியான தொடக்க ஆட்டக்காரர்கள் அமையாமல், நடுவரிசை பேட்டர்கள் அமையாமல் பல தோல்விகளைச் சந்தித்தது. ஆனால், அனைத்தும் ஒன்றுகூடி வரும்போது, வாய்ப்புகள் போதுமான அளவில் டெல்லி அணிக்கு இல்லை.

டெல்லியில் மீண்டும் ஒருமுறை 200 ரன்களுக்கு மேல் டெல்லி கேபிடல்ஸ் அணி குவித்தது. முதல் 4 பேட்டர்களின் அருமையான பங்களிப்பால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டியது. அதிரடிபேட்டர் மெக்ருக் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் அபிஷேக் போரெல் (58) டிரிஸ்டென் ஸ்டெப்ஸ்(57) ஆகியோரின் அரைசதம் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.

பந்துவீச்சில் இம்பாக்ட் ப்ளேயராக வந்த இசாந்த் சர்மா தொடக்கத்திலேயே லக்னெள அணியின் பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்து பாதி தோற்க வைத்தார். 4 ஓவர்கள் வீசிய இசாந்த் சர்மா 34 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

இருப்பினும் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய லக்னெள அணியை நிகோலஸ் பூரன்(61), அர்ஷத் கான்(58நாட்அவுட்) இருவரும் மீட்டு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏமாற்றிய பிரேசர்ஸ் மெக்ரூக்

டெல்லி அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரேசர் மெக்ருக் 2வது முறையாக நேற்றைய ஆட்டத்தில் அர்ஷத் கான் ஓவரில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஆனால், 2வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப், அபிஷேக் போரெல் இருவரும் பவர்ப்ளேயில் ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக் கொண்டனர்.

குறிப்பாக மோசின் கான் ஓவரில் அபிஷேக் 3 பவுண்டரிகளையும், அர்ஷத் கான் ஓவரில் சிக்ஸரும் விளாசினார். யுத்விர் சிங் ஓவரை குறிவைத்த ஹோப் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். 4 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 51 ரன்களை எட்டியது. நவீன் உல் ஹக் முதல் ஓவரை வெளுத்த ஹோப், போரெல் 17 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் 16 பந்துகளில் 43 ரன்களை அதிரடியாகச் சேர்த்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

சுழற்பந்துவீச்சாளர்களால் திணறிய டெல்லி

ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் லக்னெள அணியின் பிஸ்னோய், க்ருணல் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் டெல்லி அணியின் ரன்ரேட்டை உயரவிடாமல் இறுக்கிப்பிடித்தனர். 2வது விக்கெட்டுக்கு அபிஷேக்-ஹோப் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிஸ்னோய் உடைத்து, ஹோப்பை 38 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

நவீன் உல்ஹக் மெதுவான பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயன்று அபிஷேக் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணி 7-ஆவது ஓவரிலிருந்து 12 ஓவர்கள் வரை 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பவர்ப்ளேயில் 73 ரன்கள் சேர்த்தநிலையில் அடுத்த 5 ஓவர்களில் டெல்லி ரன் சேர்ப்பு குறைந்தது.

ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் அதிரடி

கேப்டன் ரிஷப் பந்த் கேமியோ ஆடி 33 ரன்களில் நவீன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 15 ஓவர்கள்வரை டெல்லி அணி 200 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் வந்தபின் ரன்ரேட் எகிறத் தொடங்கியது. அர்ஷத் வீசிய 16-ஆவது ஓவரில் ஸ்டெப்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரையும்,நவீன் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி ஸ்டெப்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் டெல்லி அணி 72 ரன்கள் சேர்த்து 200 ரன்களைக் கடந்தது. டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 25 பந்துகளில் 57 ரன்கள்சேர்த்ததுதான் டெல்லி அணி 208 ரன்களை எட்ட காரணமாக அமைந்தது.

அதிர்ச்சி அளித்த இசாந்த்

209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இசாந்த் சர்மாவின் பந்துவீச்சில் லக்னெளவின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர். முதல் 3 ஓவர்களில் குயின்டன் டீ காக்(12), கேஎல் ராகுல்(5), தீபக் ஹூடா(0) ஆகியோர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

அக்ஸர் படேல் பந்துவீச்சில் ஸ்டாய்னிஸ் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். இதனால் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து லக்னெள தடுமாறியது. ஆனால், நிகோலஸ் பூரன் களத்துக்கு வந்தது முதல் சிக்ஸர் பவுண்டரி என வெளுத்ததால், பவர்ப்ளேயில் லக்ளென 4 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி 6 ரன்களில் ஸ்டெப்ஸ் வெளியேற்றினார். இதனால் 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி திணறியது.

 
ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லக்னெளவை மீட்ட பூரன், அர்ஷத் கான்

ஆனால், நிகோலஸ் பூரனின் அற்புதமான ஆட்டம் ஸ்கோரை மெல்ல உயர்த்தியது. அக்ஸர் படேலின் ஓவரில் பூரன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 20 ரன்கள் விளாசினார். குல்தீப் யாதவ் ஓவரையும் விட்டுவைக்காத பூரன் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டு 20 பந்துகளில் பூரன் அரைசதம் அடித்தார். முகேஷ் குமார் ஷார்ட் பாலில் கேட்ச் கொடுத்து பூரன் 27 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 101 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து லக்னெள மோசமானநிலைக்கு சென்றது.

ஆனால் “அன்கேப்டு” வீரர் அர்ஷத் கான் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தில் சூடு பிடித்தது. டெல்லி பந்துவீச்சை பறக்கவிட்ட அர்ஷத் கான் 5 சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு லக்னெள அணி வெற்றியை நோக்கி நகரத் தொடங்கியது. அர்ஷத் கான் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் லக்னெள வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. அர்ஷத் கான் இருந்தவரை லக்னெள வெற்றி பெற்றுவிடும் என எண்ணப்பட்டது. ஆனால், முகேஷ் குமார், ரசிக் சலாம் இருவரும் டெத் ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசியதால், 19 ரன்களில் டெல்லி வென்றது. அர்ஷத் கான் 33 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c98z8g8xv51o

ipl-pt-14-05.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜஸ்தான் தோற்றதால் 2-ஆவது இடத்துக்கு போட்டியிடும் 3 அணிகள்

ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,SPORTZPICS

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன். ஆர்சிபி அணி தொடர்ந்து 5 போட்டிகளை வென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது.

ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட தோல்வியால், அந்த அணி 2-ஆவது இடத்தைப்பிடிக்கும் வாய்ப்பை இழந்து 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்துக்கான போட்டிக்குத் தள்ளப்பட்டுள்ளது.

குவஹாத்தியில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 65-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எந்தவிதமான ஏற்றமும் கிடைக்கப் போவதில்லை என்றாலும், ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை அசைத்துப் பார்த்துவிட்டது. பஞ்சாப் 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது என்றபோதிலும், தன்னுடன் மோதும் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ள அணிகளின் வாய்ப்பை இடைமறிப்பதில் இதன் பங்கு அதிகமாகும். அதுதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கு நடந்துள்ளது.

 
ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப்பில் எந்த இடம் கிடைக்கும்?

ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4-ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 0.273 நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா அணியுடன் மிகக்கடுமையானதாக, சவாலானதாக இருக்கக்கூடும்.

ஏனென்றால், ராஜஸ்தான் அணியிலிருந்து ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சென்றுவிட்டதால் பெரியபேட்டரை இழந்துவிட்டது பெரிய பின்னடைவு. அதேபோல, கொல்கத்தா அணியிலிருந்து பில் சால்ட் இங்கிலாந்து சென்றுவிட்டார். வெளிநாட்டு முக்கிய வீரர்கள் இரு அணியிலிருந்து கிளம்பி இருப்பதால் வெற்றிக்காக கடுமையாக இரு அணிகளும் போராடும்.

ஒருவேளை கொல்கத்தா அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானிடம் தோற்றால், முதலிடத்தை தக்கவைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், ராஜஸ்தான் அணி வென்றால் 18 புள்ளிகள் பெற்றாலும் 2-ஆவது இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணிக்கு 2 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கின்றன.

அந்த இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும். கடைசி இடத்தை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே பிடிக்கலாம்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றால் 16 புள்ளிகள் பெறும். ராஜஸ்தான் அணியும் கடைசி லீக்கில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். 3 அணிகளும் 16 புள்ளிகள் பெற்று கடைசி 3 இடத்துக்கு மல்லுக்கட்டும். அப்போது வலுவான நிகர ரன்ரேட் வைத்திருக்கும் சிஎஸ்கே 2வது இடத்தையும், 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடம் ராஜஸ்தானுக்கும் கிடைக்கலாம்.

இப்போதுள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தை கொல்கத்தா அணி பிடிக்கும், தக்கவைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மற்ற 3 இடங்களில் எந்தெந்த அணி அமரும், யாருடன் யார் ப்ளே ஆஃப் சுற்றில் மோதப் போகிறார்கள் என்பதைக் கணிக்க இன்னும் சில போட்டிகள் காத்திருக்க வேண்டும்.

பஞ்சாப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் அணி வென்றது எப்படி?

பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறினாலும், நம்பிக்கையை கைவிடவில்லை. கடைசிப்போட்டிவரை வெற்றிக்காக போராடுவோம் என்று தங்களின் போராட்டக் குணத்தை நேற்று வெளிப்படுத்தினர். இந்த வெற்றியால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும் தங்களின் வெற்றி, புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை மட்டும் புரிந்திருந்தனர்.

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவண் காயத்தால் பல போட்டிகளில் ஆடாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட சாம்கரன் அற்புதமாக செயல்பட்டார். இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சாளர்களை சிறப்பா ரொட்டேட் செய்து, ராஜஸ்தான் அணியை 144 ரன்களுக்குள் சுருட்டினார்.

சாம் கரன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆகச்சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடிய சாம் கரன் 63 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சிலும் பட்டையக் கிளப்பிய சாம்கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தானை சுருட்ட உதவி செய்தார்.

பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கவில்லை. நேதன் எல்லீஸ், ஹர்சல் படேல், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிஹ், சாம் கரன் அனைவருமே விக்கெட் வீழ்த்தி தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால்தான் ராஜஸ்தான் அணி 144 ரன்களில் சுருட்ட முடிந்தது.

சேஸிங்கின்போது பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தும், 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங்(6), பேர்ஸ்டோ(14), ரூஸோ(22), சஷாஹ் சிங்(0) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர்.

பராக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் அணியை மீட்ட சாம் கரன்-ஜிதேஷ் ஜோடி

பஞ்சாப் அணி தோல்விப் பாதைக்கு செல்லும் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகும் என ஒரு கட்டத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்து கணிப்புகளையும் கேப்டன் சாம் கரன், ஜிதேஷ் சர்மா கூட்டணி உடைத்தது.

5-ஆவது விக்கெட்டுக்கு சாம்கரனுடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மா 63 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 20 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே ஜிதேஷ் சர்மா சேர்த்தாலும், சாம் கரனுக்கு அவர் அளித்த ஒத்துழைப்பு ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த உதவியாக இருந்தது.

ஜிதேஷ் சர்மா-சாம்கரனைப் பிரிக்க அஸ்வின், சஹல், போல்ட் எனபல பந்துவீச்சாளர்களை சாம்ஸன் பயன்படுத்தியும் பலனில்லை. மாறாக அனைவரின் ஓவரிலும் சாம் கரன் பவுண்டரி, சிக்ஸர் விளாசி சாம்ஸன் கணிப்பை பொய்யாக்கினார்.

கடைசி 6 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜிதேஷ், சாம் கரன் அதிரடிக்கு மாறினர். அஸ்வின் ஓவரில் சாம்கரன் சிக்ஸர் அடிக்க, சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சிக்ஸர் அடிக்கமுயன்று ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஷுதோஷ் சிங்கால் வெற்றி எளிதானது. அஷுதோஷ் சிறிய கேமியோ ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.

சாம்கரன் 38 பந்துகளில் அரைசதம் அடித்து, 41 பந்துகளில் 63 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஷுதோஷ் சிங் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

சாம் கரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி நேற்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. ராஜஸ்தான் அணியின் பேட்டர், உள்ளூர் ஹீரோ ரியான் பராக் சேர்த்த 48 ரன்களைக் கழித்துப் பார்த்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட கடக்காது.

ஜெய்ஸ்வால் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஃபார்மின்றி தவிக்கும் இவரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்கரன் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். கரீபியன் ஆடுகளங்களில் ஜெய்ஸ்வால் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை.

சாம்ஸன் என்ன சொல்கிறார்?

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த விக்கெட்டை நாங்கள் மிகச்சிறப்பாக எதிர்பார்த்தோம். 140 ரன்களுக்குள் அடிக்க முடியும் ஆடுகளமாக நினைக்கவில்லை, குறைந்தபட்சம் 160ரன்கள் வரை சேர்க்கத் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பேட் செய்யஆடுகளம் கடினமாக இருந்தது. எங்கள் தோல்விகளை ஏற்கிறோம்."

"எங்கு தோற்றோம் என்பது குறித்து ஆலோசிப்போம். அணியில் எந்த இடத்தில் யார் சரியாகச் செயல்படவில்லை, எங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை ஆலோசிப்போம். எங்களிடம் தனி ஒருவனாக அணியை வெல்ல வைக்கும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அனைவரும் முயற்சித்தால் வெற்றி எளிதாகும். இது குழுவான விளையாட்டு. இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c72p2kq08ezo

ipl-pt-15-05.jpg




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.