Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து உள்துறை மந்திரி பொறுப்பில் இருந்து சுவெல்லா பிரேவர்மென் நீக்கம்- ரிஷி சுனக் அதிரடி 

spacer.png

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.

லண்டன்,

இங்கிலாந்தில் கடந்த வாரம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து உள்துறை மந்திரி சுவெல்லா பிரேவர்மென் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. பலரும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில், இங்கிலாந்து அமைச்சரவையில் இருந்து சுவெல்லா பிரேவர்மெனை பதவி நீக்கம் செய்து ரிஷி சுனக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவெல்லா பிரேவர்மென், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.சுவெல்லா பிரேவர்மென் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து உள்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.

https://www.dailythanthi.com/News/World/rishi-sunak-sacks-uk-interior-minister-suella-braverman-1082638

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கமரூன் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை பிரித்தானியாவின் பிரதமராக பணியாற்றிய நிலையில் பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

வழக்கத்துக்கு மாறானது

தற்போது பிரித்தானியாவின் பிரதமராகவுள்ள ரிஷி சுனக் தனது உயர்மட்ட குழுவை மாற்றியமைத்துள்ள நிலையில் 57 வயதான டேவிட் கமரூன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் | Former Uk Pm David Cameron As Foreign Secretary

இந்த நியமனம் வழக்கத்துக்கு மாறானது என்றும் பிரித்தானிய வரலாற்றிலேயே முன்னாள் பிரதமர்ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவது இதுவே முதல் தடவை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்

"பிரித்தானியாவின் பிரதமர் ரிஷி சுனக் என்னிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்கும் படி கேட்டுக்கொண்டார், அந்த கோரிக்கையினை நான் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டேன்,

The Prime Minister has asked me to serve as his Foreign Secretary and I have gladly accepted.

We are facing a daunting set of international challenges, including the war in Ukraine and the crisis in the Middle East. At this time of profound global change, it has rarely been more…

— David Cameron (@David_Cameron) November 13, 2023

ஏனென்றால், இப்போது பிரித்தானியா பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது ரஷ்யா உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளின் செயற்பாடுகளால் ஏற்படும் நெருக்கடிகள் என பல்வேறு பிரச்சினைகளால் பிரித்தானியாவும் பாதிக்கப்படுகிறது,

இவ்வாறான ஒரு நெருக்கடியான நிலையில் நான் நாட்டுக்காக இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன், நான் 6 வருடங்கள் பிரதமராக பணியாற்றி இருக்கிறேன் எனது அனுபவங்களின் வாயிலாக நிச்சயம் என் பணிகளை சிறப்பாக ஆற்றுவேன்" என தனது வெளியுறவுத்துறை அமைச்சு பதவி தொடர்பாக டேவிட் கமரூன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

https://ibctamil.com/article/former-uk-pm-david-cameron-as-foreign-secretary-1699873510

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம் - ரிசி சுனாக் அதிரடி தீர்மானம்

Published By: RAJEEBAN13 NOV, 2023 | 04:59 PM

image

பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட்கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள ரிசி சுனாக் உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மனை பதவியிலிருந்து நீக்கி ஜேம்ஸ் கிலெவெர்லியை அந்த பகுதிக்கு நியமித்துள்ளார்.

2016வரை பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த டேவிட் கமரூன் புதிய பதவியை ஏற்பதற்காக அவருக்கு பிரபுக்கள் சபையில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/169215

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன்

பிரித்தானியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்டேவிட் கமரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசியல் மாதிரி இருக்கே?
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசியல் மாதிரி இருக்கே?
 
அப்படிதான்.

ஆனால் இரண்டு ஆசிய முகங்களால் மத்திய கிழக்கு பிரச்சணையை சமாளிக்க முடியாது.

சுலேலா தனது அனுபவமே இல்லாத நிலையை காட்டியதால், ரிசிக்கும் வேற வழி இல்லை.

அநேகமாக அமேரிக்க வேண்டுதல் பின்னால் இருக்கும்.

கமரனும், இலங்கை அங்கை இங்கை எண்டு திரிஞ்சு காசு உழைக்கப் பார்த்தார்.

போரீஸ் ராஜினாமா செய்து போய்விட்டதால் இவர் வாறார். அடுத்த தேர்தலில் ஆசிய ரிசி வெள்ளை மக்கள் வாக்குகளை பெறமாட்டார். ஆகவே கட்சி இவரை இறக்குது.

அடுத்த தேர்தலுக்கு முன் கட்சி தலவராகி பிரதமர் வேட்பாளராவார்.

அதேவேளை எங்கண்ட தமிழ் கன்சர்வேட்டிக் கட்சியினர் தூசு தட்டிக் கொண்டு கிளம்புகினம்.

லேபர் தான் வெல்லுமெண்டு, தமிழ் லேபர் நிக்க, இவையள் ஒரு தெம்போட புன்சிரிப்பை உதிர்கிறார்கள். ஏனெண்டால், மகிந்தாவுக்கு எதிராக இவர் காட்டிய மிடுக்கு.

முதல் முதலாக பொங்கல் வாழ்த்து வைத்தவர், யாழ்ப்பாணம் போய் வந்தவர் எண்டு அவயளுக்கு சொல்ல விசயம் இருக்கிறதும் உண்மைதான்.

அதேவேளை மத்திய கிழக்கு பிரச்சணைக்கு இப்படி heavyweight தேவை தான்.

https://www.bbc.co.uk/news/live/uk-politics-67370421

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இலங்கை அரசோடு  வியாபாரம் செய்பவரும் இவர் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசியல் மாதிரி இருக்கே?
 
பிரதமர் இந்திய வம்சாவளியாக இருக்கும்போது அரசியல் மட்டும் எப்படி தப்பிப் பிழைக்க முடியும்? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இலங்கை அரசோடு  வியாபாரம் செய்பவரும் இவர் தானே?

அதெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது. 😜

மகிந்தவுடன் அல்ல. மேற்கு விரும்பும் ரணிலுடன் என்பது முக்கியமானது. 

இவருக்கு, எங்களது வாக்குகள் தேவை கண்டியளே....லண்டனில நாங்கள் ஸ்ட்ரோங்.

போன உள்ளூர் தேர்தலில், பல சகாப்தங்களாக, லேபர் வென்று கொண்டிருந்த, நான் வாழும் காரோ மாநகர சபையை கன்செர்வேட்டிவ் பிடித்தது. 

ரிஷி தலைவராக இருந்தால், அடுத்த தேர்தலில் லேபர் வெல்லும் என்ற நிலையில், இவர் வந்தால், போட்டி இருக்கும். அப்போது எங்களது வாக்குகளுக்கு போட்டி இருக்கும். சில வாக்குறுதிகளை தர வேண்டி இருக்கும்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.