Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷ சகோதர்கள் காரணம் – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, பி.பி.ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1358675

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை  வானோ வேறு நிற  வானோ நீதிபதிகள் வீட்டுக்கு வரா விட்டால் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மகிந்த, பசில் காரணம் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

14 NOV, 2023 | 04:22 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின்  முன்னாள் ஆளுநர் உட்பட முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த பலர் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்அடங்கிய   குழுவினர் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதிவாதிகள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் தீர்மானித்தது. இருப்பினும் மனுதாரர்களுக்கு தலா 150,000  ரூபாவை செலவுத் தொகையாக வழங்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, புவேனக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு  இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/169281

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

வெள்ளை  வானோ வேறு நிற  வானோ நீதிபதிகள் வீட்டுக்கு வரா விட்டால் சந்தோசம்.

நிச்சயமாக வழக்குத்தொடர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் இந்த பயங்கரவாத கும்பல் மண்டையில் போடும்.

இனிமேல்தான் ராஜபக்சே கும்பலுக்கு பிரச்சினை இருக்குது. இந்த பொருளாதார சீரழிவால் பாதிக்கப்படட நிறுவனங்கள் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்

இது அணில்தான் வழக்கும் போடுவிச்சு....நீதவானையும் கொண்டு தீர்ப்பையும் வழங்கியிருக்கும்.... அணிலை  தூக்க அவைக்கும் ஒருசந்தர்ப்பம் ....பார்ப்பம் என்ன நடக்குது என்று..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே காரணம் – நாமல்.

தாம் எப்போதும் நீதித்துறையை மதிப்பவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷ சகோதர்கள் உள்ளிட்டோரே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் எழுத்துமூலமான சாட்சியங்களை மாத்திரமே பரிசீலித்துள்ளதாகவும், வாக்குமூலங்கள் எதுவும் கோரப்படவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடி பற்றி நீண்ட நேரம் விவாதிக்க சிறந்த இடம் நாடாளுமன்றம் என்றும் ஆகவே இந்த விடயம் குறித்து தெரிவுக்குழுவை நியமித்து ஆராய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1358889

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ஸ தரப்பிடம் இருக்கிறது.

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MAசுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் உரிய முறையில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் பொறுப்புடையவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் பணியை இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்போதைய ஜனாதிபதியாக செயற்பட்ட மகிந்த ராஜபக்ஸ, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய பலரால் அரசாங்கம் மற்றும் பொது மக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டதனாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இழப்பீடு வழங்குமாறும், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திறைச்சேறிக்கு கொண்டு வரும் படியும் ராஜபக்ஸ குடும்பத்தினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1358872

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார கொலைகாரர்கள் யார் என்பதை வெளிப்படுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - சஜித்

15 NOV, 2023 | 03:54 PM
image

(எம்.ஆர்.எம்.. வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.

என்றாலும் தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (15)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடி மூலம் மக்களின் அடிப்படை உரிமை, மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் போராட்டத்தின்போது தெரிவித்திருந்தன.

அதேபோன்று இந்த பொருளாதார நெருக்கடி மனிதர்களால் உருவாக்கப்பட்டது என இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவித்திக்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த மிக் மூர் தெரிவித்திருந்தார். 

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது வியோன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது இது நிர்மாணிக்கப்பட்ட பேரழிவு என தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் ஜனாதிபதியான பின்னர் இந்த பேரழிவை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்களைக்கொண்டு தெரிவுக்குழு ஒன்றை அமைத்தார். அதனால் நாங்கள் அந்த தெரிவுக்குழுவில் இருந்து நீங்கிக்கொண்டாேம்.

அத்துடன் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் இந்த நாட்டின் பொருளாதார பெரழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்தோம். 

அதற்காக எங்களுக்கு முன்னாள் சிறந்த 3புத்திஜீவிகள், திறமையான சட்டத்தரணிகளும் இருந்தனர். நாட்டை வங்குராேத்து நிலைக்கு கொண்டுசென்றவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது.

அதாவது இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கிறது.

மக்களின் நம்பகத்தன்மை என்ற காெள்கைகளை கோத்தாபய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், நிவாட் கப்ரால், டபிள்யூ.டீ. லக்ஷ்மன், பீ.பீ. ஜயசுந்தர, ஆட்டிகல மற்றும் நாணயச்சபை மீறியுள்ளதாக  4 நீதிபதிகளில் 3 பேர் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தது யார் என்பது தொடர்பாக கருத்தாடல்கள் இடம்பெற்று வந்திருந்தன. என்றாலும் இந்த பொருளாதார வங்குராேத்து நிலைக்கு யார் காரணம் என்பதை உயர் நீதிமன்றம் தெளிவாக பெயர் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறது.

எனவே நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்து பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தருப்பவர்களே இந்த நிலைக்கு காரணமாகும்.

ஒட்டுமொத்த சமூகமும், ஒவ்வொருவரும், வங்குரோத்து தன்மையால் வாழ்வாதாரம் அழிந்த தரப்பினர் போன்றவர்கள், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பராபட்சத்திற்கு இந்த நபர்களிடம் இழப்பீடு கோரலாம்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நீதிமன்றத்தைப் பயன்படுத்தி,நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் யார் என்பதை நிரூபிக்க முடிந்துள்ளது.  இதனை வெளிப்படுத்த  காரணமான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் பேரவை மற்றும் சட்டத்தரணிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/169358

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த.

பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களை தாம் வாய்ப்பு கிடைக்கும் போது விளக்கமளிப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த கட்சி மாநாடு பிரமாண்டமாக நடத்தப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359104

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவினர் யுத்த வெற்றியை பயன்படுத்திக்கொண்டு செய்த விடயங்களே நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியுள்ளன - தலதா அத்துக்கோரள

18 NOV, 2023 | 08:32 PM
image

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

யுத்த வெற்றியை முன்னிலைப்படுத்திக்கொண்டு ராஜபக்ஷவினர் நாட்டில் மேற்கொண்டுவந்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்போது  அம்பலமாகி இருக்கிறது. அத்துடன் நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் அதனை வீதியில் சொல்லிக்கொண்டிருக்காமல் நீதிமன்றத்துக்கு சென்று தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பணங்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இந்த நாட்டின் சிரேஷ்ட நபர் ஒருவருக்காக நடத்தப்பட்ட நிகழ்வில்  படித்த நபர் என நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ள ஒருவர், ராஜபக்ஷ்வினருக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை  ஏற்றுக்கொள்வதும் இல்லை, ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதும் இல்லை. 

தேவை என்றால் எங்களுக்கு பொது மக்களை வீதிக்கு கொண்டுவர முடியும் என தெரிவித்திருந்தார். நாடு தற்போது சரியான திசைக்கு பயணிக்க ஆரம்பித்திருக்கும்போது ராஜபக்ஷ்வினரை பாதுகாக்க இருக்கும் இந்த படித்தவர்கள் என்ற குழுவினர், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நாட்டு மக்களை பலிக்கடாவாக்க முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

அத்துடன் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பதை ஏற்றுக்கொள்வதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த திர்ப்பு தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரலாறு எங்களுக்கு தெரியும். தெரிவுக்குழு அமைத்து நாட்டில் நீதித்துறையின் உயர் பதவிக்கு கைவைத்த வரலாறு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கிறது. அன்று பிரதம நீதியரசராக இருந்த ஷிரானி பண்டார நாயக்கவை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டுவந்து அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை சமர்ப்பித்து அவரை அந்தபதவியில் இருந்து நீக்கிய வரலாற்றை எங்களுக்கு மறக்க முடியாது.

அதனால் இந்த வாரலாற்றுக்குள் இருந்து தொடர்ந்தும் நாங்கள் செயற்படுவதென்றால். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க முடியாது என்றால், அது தொடர்பில் பல்வேறு கீழ் மட்டத்தில் இருந்து கதைத்துக்கொண்டிருக்காமல்  அதனை நீதிமன்றத்துக்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் யுத்தம் செய்து நாட்டை பாதுகாத்ததாக தெரிவித்தாலும் யுத்தத்துக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியுமாகியது, ஜேஆர். ஜனாதிபதி 77இல் ஆட்சிக்கு வந்து நாட்டில் புதிய தொழிற்சாலைகளை ஆரம்பித்து ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க எடுத்த வேலைத்திட்டங்கள் மூலமாகும். அதனால் ராஜபக்ஷ்வினர் யுத்த வெற்றியை முன்னலைப்படுத்திக்கொண்டு செய்த விடயங்களால், தற்போது நாடு ஏற்றுக்கொண்டுள்ள நிலைப்பாடுதான் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் ராஜபக்ஷ்வினர் பொறுப்புக்கூற வேண்டும் என்பதாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/169649

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே காரணம் – நாடாளுமன்றில் குழப்பம்!

adminNovember 21, 2023
Parliment-in-one-site.jpg?fit=800%2C534&

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த தீர்ப்பு குறித்து நாடாளுமன்றில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் விசேட  அறிக்கை ஒன்றை  விடுத்து ஆற்றிய  உரையை தடுக்கும் வகையில், ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். அத்துடன், சபைக்கு நடுவே சென்றும்  எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதியும் பொறுப்பாளி என உயர் நீதிமன்றம் கடந்த 14 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மட்டுமன்றி நிதி அமைச்சர்களாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஸ மற்றும் பசில் ராஜக்ஸ, ஜனாதிபதியின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கி ஆளுநர்களாக இருந்த அஜித் நிவாட் கப்ரால் மற்றும் டபிள்யூ டி. லக்ஷ்மன, திறைசேரி செயலாளராக இருந்த எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் நிதிச்சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் சபையை கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்துச் சென்றார்..

 

https://globaltamilnews.net/2023/197568/

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார ரீதியில் எம்மீது சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன் : மஹிந்த ராஜபக்ஷ

Published By: DIGITAL DESK 3    21 NOV, 2023 | 04:32 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எமக்கெதிராக பொருளாதாரம் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நாம்  முற்றாக நிராகரிக்கின்றோம். நிதி தொடர்பான அனைத்து தீரமானங்களும் பாராளுமன்றத்தின் அனுமதியுடனே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் நோக்கங்களுக்காக சேறு பூசுபவர்கள் பின்னர் சேற்றை அப்பிக்கொள்ள நேரும்  என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21)  இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டம் வாசிப்பு மீதான ஏழாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கெதிராக சபையில் பெரும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. அந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாம் நிராகரிக்கிறோம். ஒவ்வொருவருடைய உரிமையை இல்லாதொழிப்பதற்கு முயற்சிப்பவர்கள் கடந்த காலங்களில் செயல்பட்டமை தொடர்பில்  எமக்கு நினைவில் உள்ளது. சேறு பூசல்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. சேறு பூசினால் சேற்றை அப்பிக்கொள்ள வேண்டி வரும் என்பதையே நாம் அவ்வாறானவர்களுக்கு கூற விரும்புகின்றோம்.

எவரது உரிமையை இல்லாதொழிப்பதற்காக பேசுகின்றவர்களுக்கு நாம் தெரிவிப்பது, நாம் வாழ்நாளெல்லாம் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுக்கவும் மக்களை பாதுகாக்கவுமே அர்ப்பணித்துள்ளோம்..

அதனால் உரிமைகளை இல்லாதொழிப்பதற்காக செயல்படுவார்கள் அதனை பாதுகாப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை உணர வேண்டும்.

கடந்த காலங்கள் மறக்கப்பட்டுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கு முன் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக் கொண்டே நாம் தீர்மானங்களை எடுத்து வந்துள்ளோம். தன்னிச்சையான விருப்பத்தில் அவ்வாறு செயற்பட எவராலும் முடியாது.

இப்போது அரசியல் நோக்கங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக சிலர் இவ்வாறு பேசுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் அவ்வாறு இல்லை. அனைவருக்கும் இந்த உயரிய பாராளுமன்றத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உண்டு.

அந்த வகையில் வரவு செலவு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என  அழைப்பு விடுக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/169866

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷர்களை கர்மவினை தொடரும் : எதிர்காலத்திலும் பல சம்பவங்கள் நிகழும் - சரத் பொன்சேகா

21 NOV, 2023 | 05:14 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

எனது மருமகனின் வியாபாரத்தை நான் அறிந்திருக்க வேண்டும் என்று எனக்கு எதிராக வாதாடிய  முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனராலுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அவர்தான் இன்று ராஜபக்ஷர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார். இதுவே கர்மவினை என்பார்கள்.

கர்மவினை தொடரும் என  ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். இந்த முன்மொழிவுகள் வெற்றிப்பெற்றால்  மக்களுக்கு நன்மை பயக்கும்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி இவ்வாறான பல முன்மொழிவுகளை வழங்கினால் ஆனால் அந்த முன்மொழிவுகள் ஏதும் செயற்படுத்தபடவில்லை.

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது.

தேர்தல் ஒன்று இடம்பெறுமாக இருந்தால் இவ்வாறான வாக்குறுதிகளை முன்வைக்கலாம்.தேர்தலும் எப்போது இடம்பெறும் என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பினால் சமூக விரோத செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரடைந்துள்ளன.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது எனது தனிப்பட்ட  நிலைப்பாடாகும்.

பொருளாதார படுகொலையாளிகளை நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது.இந்த குற்றத்தை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் நான் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்தேன்.

அப்போது எனக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்னிலையான அப்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால் 'எனது மருமகனின் வியாபாரம் தொடர்பில் நான் அறிந்திருக்க வேண்டும் ' என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அக்காலப்பகுதியில் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர் தான் தற்போது ராஜபக்ஷர்களை பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தியுள்ளார். இதனையே கர்மவினை என்பார்கள்.ராஜபக்ஷர்களை கர்மவினை தொடரும் எதிர்காலத்திலும் பல சம்பவங்கள் நிகழும் என்றார்.

https://www.virakesari.lk/article/169898

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் தீர்ப்பு வந்தாலும் ராஜபக்சக்களை ஒன்றும் செய்ய முடியாது. நேற்றைய பாராளுமன்ற கூடத்தில் அவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசியல் குற்றவாளிகளை தண்டிப்பது  என்பது இலங்கை சரித்திரத்தில் இடம் பெறுவது மிகவும் அபூர்வமே. எனவே இந்த மோசடி , கொள்ளை, லஞ்சம் எல்லாம் தொடரவே செய்யும். யார் வந்தாலும் இதுதான் நிலைமை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.