Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    22 NOV, 2023 | 05:14 PM

image

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இதன் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற கரிசனை காரணமாக அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது எனவும் பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட நீதிக்கான சீக்கியர் என்ற அமைப்பின் குர்பட்வன்ட் சிங் பன்னும் என்னும்  நபரே இலக்குவைக்கப்பட்டார் என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் எதிர்ப்பினால் இந்த சதிமுயற்சி கைவிடப்பட்டதா அல்லது எவ்பிஐயினர் தலையிட்டு திட்டத்தை முறியடித்தனரா என்ற விபரம் தெரியவரவில்லை என பினான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/169991

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் விட்ட விளையாட்டுக்களை மேற்கு நாடுகளிலும் கட்டவிழ்த்து விட்டு இந்தியா மாட்டிக் கொள்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாத செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்வதற்கான முயற்சிகளை அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்ப இனி இந்திய யுடியுப் கூட்டம் இந்தியா அமெரிக்கா மீது அந்த தடை இந்த தடை கடைசியில் அமெரிக்கன் பயந்து விட்டான் என்று அலம்பரை பன்னபோரான்கள் அதை நினைக்கத்தான் வேர்க்குது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்தியா சதித் திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு

இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,GETTY IMAGES

24 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் ஒரு காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதியில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

செய்தியறிக்கையின்படி, இந்த சதித் திட்டத்தின் இலக்கு குர்பத்வந்த் சிங் பன்னு. இவர் சீக்கிய தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதி. காலிஸ்தானை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 'நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் வழக்கறிஞர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார்.

இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் 'பயங்கரவாதி' என்று அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செப்டம்பர் மாதம், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவின் தொடர்பு குறித்து 'நம்பகமான குற்றச்சாட்டுகள்' இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை ‘ஆதாரமற்றது, அபத்தமானது’ என்று கூறியிருந்தது. இருப்பினும், இந்த முறை, அமெரிக்காவில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் குறித்துக் கூறப்படும் செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இந்தியா கூறியுள்ளது.

 
இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,NIA/SOCIAL MEDIA

படக்குறிப்பு,

இந்தியாவில் இருக்கும் பன்னுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மீது என்ன குற்றச்சாட்டு?

பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை பின்வருமாறு கூறுகிறது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு, பன்னுவை கொல்ல நடந்த சதித் திட்டம் பற்றிய தகவல்களை அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது.

ஜூன் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு பயணம் செய்த பிறகு, இது தொடர்பாக அமெரிக்கா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

அமெரிக்கா, ராஜ்ஜீய மட்டத்தில் இந்தியாவை எச்சரித்தது. மேலும் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் ஒருவர் மீது நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது, என்று அந்த செய்தித்தாள் ஒரு அதிகாரியை மேற்கோள் காட்டி எழுதியுள்ளது.

தற்போது, இந்த வழக்கை பகிரங்கப்படுத்த வேண்டுமா அல்லது நிஜ்ஜாரின் மரணம் தொடர்பான விசாரணையை கனடா முடிக்கும் வரை காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறை விவாதித்து வருவதாகவும் அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது.

வான்கூவரில் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனேடிய அதிபர் ட்ரூடோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அமெரிக்கா இது பற்றிய விரிவான தகவல்களை அதன் நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டது. இந்த வழக்குகளின் ஒரே மாதிரியான வடிவம் குறித்து இந்த நாடுகள் கவலை தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கையின்படி, அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐ இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு கவுன்சிலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதோடு 'சட்ட விஷயங்கள்' மற்றும் 'ரகசிய இராஜதந்திர தகவல்தொடர்புகள்' குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதில்லை என்றும் கூறியது.

இந்தியா ஆட்சேபனை தெரிவித்த பிறகு சதித்திட்டம் தீட்டியவர்கள் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொண்டார்களா, அல்லது எஃப்.பி.ஐ தலையிட்டு சதித்திட்டத்தை முறியடித்ததா என்பதை இந்த விஷயத்தைப் பற்றி அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என்றும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியறிக்கை கூறுகிறது.

 
இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,

நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் பன்னு அறியப்படுகிறார்.

யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னு?

குர்பத்வந்த் சிங் பன்னு காலிஸ்தான் ஆதரவாளரான அமெரிக்க வழக்கறிஞர். அவரது வயது 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

இவர் அமிர்தசரஸ் அருகே உள்ள கான்கோட் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மகிந்தர் சிங் பஞ்சாப் மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் பணிபுரிந்தவர்.

பன்னு 1990களில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இப்போது அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ளார். கனடாவில் காலிஸ்தான் சார்பு நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அவர் அடிக்கடி காணப்படுகிறார்.

நியூயார்க்கில் இருந்து இயங்கும் காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்களின்’ நிறுவனர் மற்றும் தலைவராகவும் இவர் அறியப்படுகிறார்.

பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, அவரைப் படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் குறித்து அமெரிக்க நிர்வாகம் அவருக்குத் தெரிவித்ததா இல்லையா என்பதைக் கூற பன்னு மறுத்துவிட்டார். அவர், “அமெரிக்க மண்ணில் இந்திய ஏஜெண்டுகளால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தட்டும்,” என்றார்.

பன்னு மேலும், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாகும். பைடன் நிர்வாகம் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று நான் நம்புகிறேன்," என்றார்.

கடந்த வாரம், பன்னு, ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று சீக்கியர்களுக்கு எச்சரித்திருந்தார். அவ்வாறு செய்வது ‘உயிருக்கு ஆபத்தானது’ என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பாக, இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை பன்னு மீது ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

 
இந்தியா, அமெரிக்கா, கனடா, பஞ்சாப், காலிஸ்தான், குர்பத்வந்த் சிங் பன்னு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பினையும் பாதிப்பதாகவும், அதனால் இதை இந்தியா தீவிரமாக விசாரித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவின் பதில் என்ன?

பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சமீபத்தில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, குழுவாகச் செயல்படும் குற்றவாளிகள், சட்டவிரோத துப்பாக்கி வியாபாரிகள், பயங்கரவாதிகள், மற்றும் பலர் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது,’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், "இந்தத் தகவல் இரு நாடுகளுக்கும் கவலையளிக்கும் விஷயம். இது குறித்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், இது இந்தியாவின் தேசப் பாதுகாப்பையும் பாதிப்பதாகவும், அதனால் இந்தியா இதைத் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்கா வழங்கிய தகவல்களை சம்பந்தப்பட்ட துறைகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c2q21lpx6d9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியப் பிரிவினைவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக இந்தியர்மீது குற்றம் சுமத்திய அமெரிக்கா - என்ன நடந்தது?

பணம் கொடுக்கும் காட்சி

பட மூலாதாரம்,US DEPARTMENT OF JUSTICE

29 நவம்பர் 2023
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீக்கியப் பிரிவினைவாதத்தை ஆதரித்த ஒரு அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய நடந்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தை முறியடித்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

இந்தச் சதித்திட்டம் நியூயார்க்கில் நடத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, நிகில் குப்தா என்ற இந்தியர் மீது புதன்கிழமை (நவம்பர் 29) குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவரை இந்திய அரசாங்க ஊழியர் ஒருவர் இயக்கியதாகக் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

இந்த விஷயத்தில், அவர்மீது கூலிக்குக் கொலை செய்ய முயன்றக்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் இருந்து திட்டமிடப்பட்டதாக வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

ஒருவருக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் கொடுத்து சீக்கியரை கொலை செய்ய முயன்றதாக அவர்கள் கூறினர். ஆனால் அடியாள் என நினைத்து பணம் கொடுக்கப்பட்ட நபர் அமெரிக்காவின் ரகசிய ஏஜென்ட் எனவும் அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், யாரைக் கொலை செய்ய இந்தத் திட்டம் தீட்டப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

 
அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அதிகாரிகளின் எதிர்வினை என்ன?

இதுதொடர்பில் அமெரிக்கா தனது பாதுகாப்பு விஷயங்கள் குறித்து எழுப்பியக் குற்றச்சாட்டில், விசாரணையைத் தொடங்கியுள்ளதாக இந்திய அரசு முன்னதாக கூறியிருந்தது.

குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த விவகாரத்தை இந்திய அரசாங்கத்தின் மிக மூத்த மட்டங்களில் எழுப்பியதாக அமெரிக்க அரசாங்கம் கூறியிருக்கிறது. அதற்கு இந்திய அதிகாரிகள் ‘ஆச்சரியம் மற்றும் கவலையுடன்' பதிலளித்ததாக அமெரிக்கா கூறியிருக்கிறது.

"சீக்கியர்களுக்கு இறையாண்மை கொண்ட அரசை நிறுவ வேண்டும் என்று பகிரங்கமாக வாதிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகனை, நியூயார்க் நகரில் கொலை செய்யப் பிரதிவாதி இந்தியாவில் இருந்து சதி செய்தார்," என்று அமெரிக்க வழக்கறிஞர் டாமியன் வில்லியம்ஸ் கூறினார்.

மேலும் அவர், "அமெரிக்க மண்ணில் அமெரிக்கக் குடிமக்களைப் படுகொலை செய்யும் முயற்சிகளை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்," என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் யார்?

குற்றப்பத்திரிகையின்படி, நிகில் குப்தா சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர். அவர் இந்தக் கொலைத்திட்டத்திற்காக இந்திய அரசாங்க அதிகாரி ஒருவரால் நியமிக்கப்பட்டார்.

மேலும், இத்திட்டம் குறித்து அமெரிக்காவில் உள்ள ஒரு கூட்டாளியைத் தொடர்பு கொள்ளுமாறு நிகில் குப்தாவிடம் அந்த இந்திய அதிகாரி சொன்னதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது. நிகில் குப்தா, நியூயார்க் நகரில் இந்தக் கொலையைச் செய்யக்கூடிய ஒருவரைச் சந்திக்க எண்ணியிருந்தார் என்றும் அது கூறுகிறது.

ஆனால், அதற்கு பதிலாக, அந்த நபர் குப்தாவை, மாறுவேடத்தில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் அறிமுகப்படுத்தியது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. அவர், ஒரு லட்சம் டாலர்களுக்கு இந்தக் கொலையைச் செய்வதாக கூறியதாகவும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.

நிகில் குப்தா ஜூன் 9 அன்று ஒரு கூட்டாளி மூலம் $15,000 முன்பணமாகச் செலுத்தினார், என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஜூன் 30-ஆம் தேதி அமெரிக்க வழக்கறிஞர்கள் நிகில் குப்தாவுக்கு எதிராக முதற்கட்டக் குற்றச்சாட்டை வெளியிட்டனர். சிறிது நேரத்திலேயே செக் குடியரசில் உள்ள அதிகாரிகள் அவரைல் கைது செய்தனர். நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர்கள் அவரை இன்னும் காவலில் வைத்துள்ளனர்.

ஆவணங்களில் இந்தச் சதியின் இலக்கு குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் சீக்கிய பிரிவினைவாதக் குழு ஒன்றின் அமெரிக்கத் தலைவர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

பட மூலாதாரம்,X

படக்குறிப்பு,

குர்பத்வந்த் சிங் பன்னு

இதற்கு முன்னர் எழுந்த குற்றச்சாட்டு

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குர்பத்வந்த் சிங் பன்னு, எனும் சீக்கியத் தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதியைக் கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளித்த இந்தியா, ‘குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது,' என்று கூரியிருந்தது.

அதைத்தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 29) இந்தியா இந்த விஷயத்தை விசாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது என்று வெளியுறவுத்துறைச் செயலாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, சீக்கியப் பிரிவினைவாதம்

பட மூலாதாரம்,SIKH PA

படக்குறிப்பு,

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையும் கனடாவின் குற்றச்சாட்டும்

கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இந்த மரணம் அவரது ஆதரவாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே உலகளாவிய பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் பரபரப்பான வாகன நிறுத்துமிடத்தில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை முகமூடி அணிந்த இரண்டு பேர் அவரது டிரக்கில் வைத்து சுட்டுக் கொன்றனர்.

அப்போது நிஜ்ஜாரின் மரணத்துக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். நிஜ்ஜாரின் மரணத்திற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ‚நம்பகமான அம்சங்களை‘ கனடா உளவுத்துறை அடையாளம் கண்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கொலை தொடர்பான உளவுத்துறைத் தகவல்களை அமெரிக்காதான் கனடாவுக்கு வழங்கியதாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இந்தியா-கனடா உறவில் குறிப்பிடத்தகுந்த அளவில் விரிசல் ஏற்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c518leq9ynyo

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் சீக்கிய தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்திய பிரஜை ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் கனடாவில் கடந்த ஜூன் மாதம், சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

 

 

இந்தியா - கனடா உறவில் விரிசல்

எனினும் இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் நிராகரித்திருந்ததோடு, இந்த விவகாரம் இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில், தற்போது கனடாவை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

https://tamilwin.com/article/us-govt-khalistan-assassination-gurpatwant-1701367186

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடாவில் கொலை

அமெரிக்காவில் கொலை முயற்சி

முழு தகவல்களும் இரட்டை ஏஜென்ட் மூலம் அம்பலம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீக்கியர்களின் போராட்டமும் எங்களின் போராட்டமும் பல ஒற்றுமைகளை கொண்டது முக்கியமாய் இந்தியா எனும் பிராண்டுக்காக பெயருக்காக பலியிடப்படும் இனம்களில் முதன்மையானது எமது தமிழ் இனமும் சீக்கிய இனமும்தான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னுன் விவகாரம்: அமெரிக்க எஃப்.பி.ஐ இயக்குநர் அடுத்த வாரம் இந்தியா செல்கின்றார்

08 DEC, 2023 | 02:45 PM
image
 

புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெற அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ fbi இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியாசெல்கின்றார் 

காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தற்போது அவர் அறிவித்துள்ளார். 

இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள அவரை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வைத்து கொலை செய்வதற்கான சதியில் நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க நிகில் குப்தா இந்த செயலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பிய சிபிஐ கட்சி எம்.பி ஜான் பிரிட்டாஸ் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் இதேபோன்ற குற்றச்சாட்டை கனடா ஏற்கெனவே முன்வைத்திருப்பது குறித்தும் ஜான் பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். 

பதில் அளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ''அமெரிக்கா உடனான இந்தியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக சில தகவல்களை அந்நாடு எங்களுக்கு வழங்கியுள்ளது. அந்த தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன. ஏனெனில் அவை கடத்தல் மற்றும் பிற விஷயங்களுடன் தொடர்புடையவை. இது நமது தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கனடாவைப் பொறுத்த வரையில் குறிப்பிட்ட ஆதாரங்களோ தகவல்களோ நமக்கு வழங்கப்படவில்லை. எனவே கனடாவின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கவில்லை . இது இரண்டு நாடுகளிடையே பாரபட்சமான அணுகுமுறை கிடையாது. ஆதாரங்கள் அளித்தவர்களையும்; அளிக்காதவர்களையும் ஒரே மாதிரியாகக் கருத முடியாது'' என தெரிவித்தார்.

இந்நிலையில் குருபத்வந்த் பன்னு விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக எஃப்.பி.ஐ. இயக்குநர் கிறிஸ்டோபர் ரே அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி இதனை தெரிவித்துள்ளார். வரும் 11-ம் தேதி கிறிஸ்டோபர் ரே புதுடெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/171261

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

பன்னு

பன்னு பன்னு என்று முதலும் செய்திகள் வர 

என்னடா இவங்கள் பணீஸ் திங்கிறதுக்கு அடிபடுறாங்களோ என்று எண்ணிவிட்டேன்.

இப்ப தான் தெரியுது பன்னு என்றால் என்ன? யார் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பன்னூன் கொலை சதி: இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை

பன்னு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இந்திய வம்சாவளி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெய்பால்

16 டிசம்பர் 2023, 09:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தா பற்றி அமெரிக்க அரசாங்கம் ஐந்து இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் அளித்துள்ளது.

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக கொலை செய்யப்படவிருந்த பிரிவினைவாத தலைவர் பற்றிய தகவலை அமெரிக்க அரசு தரப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, வழக்கறிஞர் மற்றும் சீக்கிய பிரிவினைவாத தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொலை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பன்னூனைக் கொலை செய்ய பணம் கொடுத்ததாக நிகில் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் அமி பெரா, பிரமிளா ஜெய்பால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். நிகில் குப்தா மீதான குற்றச்சாட்டு குறித்து பைடன் நிர்வாகம் நடத்திய ரகசிய விசாரணைக்குப் பிறகு எம்.பி.க்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதில், '‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு நாங்கள் மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறோம். நிகில் குப்தா மீதான அமெரிக்க அரசின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் கவலையளிக்கின்றன,’' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், 'பன்னூன் கொலைச் சதி குறித்து விசாரிக்க குழு அமைக்க இந்திய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதனுடன், இந்திய அரசு இந்த விஷயத்தை முழுமையாக ஆய்வு செய்வதும் முக்கியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட அனைவரையும் பொறுப்பேற்க வைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,’' என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல் வருமா? அமெரிக்க எம்.பி.க்கள் எச்சரிக்கை

ஐந்து எம்.பி.க்களின் அறிக்கையில், 'இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களின் வாழ்க்கையில் சாதகமான, நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன என்பதும், கவனிக்கப்படாவிட்டால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியமான உறவுகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதே எங்கள் கவலையாக இருக்கிறது,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பைடன் நிர்வாகம் தங்களுக்கு வெளிப்படையாக பல தகவல்களை அளித்துள்ளதற்கு தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த எம்பிக்கள் தெரிவித்துள்ளனர்.

52 வயதான நிகில் குப்தா பணம் கொடுத்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குப்தாவுக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொலை செய்ய ஒரு கொலையாளிக்கு சுமார் 80 லட்சம் ரூபாய் தருவதாக குப்தா உறுதியளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பன்னூன் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 30 அன்று செக். குடியரசு நாட்டில் குப்தா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்த இந்திய அரசு ஏற்கனவே ஒரு குழுவை அமைத்துள்ளது.

இதற்கிடையில், காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’, இந்திய-அமெரிக்க எம்.பி.-க்களுக்கு பைடன் நிர்வாகம் வழங்கிய விளக்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பன்னூன் இது குறித்துக் கூறுகையில், ‘'அமெரிக்க எம்.பி.-க்கள் அமெரிக்க குடிமக்களின் உயிர்களையும், அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் அவர்களின் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்க தயாராக உள்ளனர் என்பதற்கு இது உறுதியளிக்கும் நடவடிக்கையாகும். உண்மையில் இதுவே அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படை,” என்றார்.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நிகில் குப்தா இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா மனு

இந்நிலையில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் மீதான குற்றச்சாட்டு குறித்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் வாதிட்டு வரும் வழக்கறிஞர் ரோகினி மூசா கூறுகையில், ஜனவரி 4-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தெரிவித்தார்.

நிகில் குப்தா, தான் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ரோகினி மூசா, "அவருக்கு எதிராக நாடு கடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவு நகல் எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அவர் நாடு கடத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெறவோ அல்லது அவர்களைப் பற்றி எதுவும் அறியவோ முடியாத நிலைதான் உள்ளது," என்றார்.

நிகில் குப்தாவின் குடும்பத்தினரால் அவருக்கு எந்தவிதமான உதவியும் செய்ய முடியவில்லை என்றும் மூசா கூறுகிறார்.

குப்தாவின் குடும்பத்தினர், அவர் எந்தவிதமான கைது வாரண்டும் இன்றி 'அமெரிக்காவின் பிரதிநிதிகள் என தங்களைத் தாங்களே அடையாளப்படுத்திக் கொண்ட அமெரிக்க ஏஜெண்டுகளால்' கைது செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அமெரிக்காவின் சார்பில் கைது செய்யப்பட்ட அவருக்கு இதுவரை நியாயமான சட்ட நடவடிக்கைகள் அல்லது உதவிகள் எதுவும் அளிக்கப்படாமல் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அடிப்படை உரிமைகள் மீறப்பட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
பன்னு வழக்கு
படக்குறிப்பு,

நிகில் குப்தா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார்

அவர் தனது மத நம்பிக்கைகளுக்கு முரணாக மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை உண்ணும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம், நியூயார்க் நகரில் ஒரு அமெரிக்க குடிமகனை கொலை செய்ய சதி செய்ததாக அமெரிக்க நீதிமன்றம் அவர் மீது குற்றம் சாட்டியது.

தான் அரசியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், யாரையும் அறியாத, யாருக்கும் தெரியாத அமெரிக்க குடிமகனைக் கொலை செய்வதற்கு இந்திய அரசுடன் கூட்டுச் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் நிகில் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

குப்தாவின் விடுதலைக்காக இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு நியாயமான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட உதவிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குப்தாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனுடன், அமெரிக்கா மற்றும் செக். குடியரசில் தனக்காக வாதாட ஒரு இந்திய வழக்கறிஞரையும் குப்தா கோரியுள்ளார்.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,

இந்த விவகாரத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி விசாரிக்க இந்தியா சார்பில் சிறப்புக் குழு

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "அமெரிக்க குடிமகனைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த குற்றப்பத்திரிகையில் எந்த இந்திய அதிகாரியின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்று அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.

அப்போது பேசிய பாக்சி, "அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பயங்கரவாதிகள், ஆயுத வியாபாரிகள் மற்றும் பிறரின் தொடர்பு குறித்து அமெரிக்க தரப்பு சில உள்ளீடுகளை பகிர்ந்து கொண்டதாக நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை இந்தியா அமைத்துள்ளது," என்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது இங்கே கவனிக்கத்தக்கது.

 
பன்னு வழக்கு

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு,

பன்னூனைக் கொலை செய்ய ரூ.80 லட்சம் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

யார் இந்த குர்பத்வந்த் பன்னூன்?

அமெரிக்காவைச் சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவர் 'ஜஸ்டிஸ் ஃபார் சிக்ஸ்' அமைப்பின் நிறுவனர் மற்றும் வழக்கறிஞர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்றவும், காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கவும், பஞ்சாபியர்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் இந்த அமைப்பை பன்னூன் நிறுவி, தமது கோரிக்கைகளுக்கான ‘பொது வாக்கெடுப்பு-2020’ பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

இதன் கீழ், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மற்றும் உலகெங்கிலும் வசிக்கும் சீக்கியர்கள் ஆன்லைனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் வாக்களிப்பதற்கு முன்பே, இந்த அமைப்பு மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவான 40 இணையதளங்களை இந்திய அரசு தடை செய்தது.

இந்த அமைப்பு தன்னை ஒரு மனித உரிமை அமைப்பு என்று அடையாளப்படுத்திக் கொள்கிறது, ஆனால் இந்தியா அதை 'பயங்கரவாத' அமைப்பாக அறிவித்துள்ளது.

பன்னூனிடமிருந்து வந்த மிரட்டல் வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புக்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி, பன்னூன் கடந்த 2020 ஜூலையில் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

பிபிசி ஆசிய நெட்வொர்க்குடன் பேசிய குர்பத்வந்த் சிங் பன்னூன், "காலிஸ்தான் பொது வாக்கெடுப்பு நடத்துவது மரணத்தை விளைவிக்கும் என்றால், அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்," என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw50ly2kwxzo

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு எந்த வகையிலும் ஆப்பு இறங்கினாலும் மகிழ்ச்சியே. 

  • 10 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீக்கியரை கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் ரா அதிகாரி மீது குற்றச்சாட்டு - யார் இந்த விகாஷ் யாதவ்?

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம்,US JUSTICE DEPARTMENT

படக்குறிப்பு, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள விகாஷ் யாதவின் புகைப்படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், செரில்லன் மொல்லன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல முயன்றதற்காக முன்னாள் இந்திய அரசு அதிகாரி விகாஷ் யாதவ் மீது "கொலை செய்ய கூலிப்படையை ஏவுதல் மற்றும் பணமோசடி" ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்கின் தெற்கு மாகாணத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

விகாஷ் யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, ஒரு படுகொலை முயற்சியில் இந்திய அரசை நேரடியாகச் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை.

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, பிராக் (Prague) சிறையில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

அமெரிக்கா, கனடா என இரட்டைக் குடியுரிமை பெற்ற பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்திய பிரமுகர்கள் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆர்வலர் என்பதால் பன்னுனை இந்திய அரசு `பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியது. இந்திய அரசின் குற்றச்சாட்டுகளை பன்னுன் மறுத்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ``அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் 'சிசி-1' என்று குறிப்பிடப்பட்ட நபர் தற்போது இந்திய அரசால் பணியமர்த்தப்பட்ட ஒருவர் இல்லை” என்று கூறினார். இருப்பினும், அவர் இந்தக் கருத்தை சம்பந்தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார். எனவே அவர் யாதவைதான் குறிப்பிடுகிறார் என்று யூகிக்கப்பட்டது.

 

விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டு என்ன?

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம்,GURPATWANT PANNUN/FB

படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுன்

குற்றப் பத்திரிகையின்படி, விகாஷ் யாதவ் என்பவர் பன்னுனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்தவர். மேலும் இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த அவர் குப்தா என்பவரை நியமித்தார்.

"மே 2023இல் குப்தாவுக்கு எதிராக இந்தியாவில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு ஈடாக இந்தப் படுகொலையைச் செயல்படுத்த அவரை விகாஷ் யாதவ் பணியமர்த்தியதாக" குற்றப் பத்திரிகை கூறுகிறது.

அதோடு, "ஜூன் 2023இல் அல்லது அதற்குப் பிறகு, படுகொலைக்கான சதித் திட்டத்தைச் செயல்படுத்த, குப்தாவிடம் விகாஷ் யாதவ் குர்பத்வந்த் சிங் பன்னுன் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வழங்கினார்.

இந்தத் தனிப்பட்ட தகவல்களில், நியூயார்க் நகரில் இருக்கும் பன்னுனின் வீட்டு முகவரி, அவருடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள், அவரின் தினசரி விவரங்கள் ஆகியவை அடங்கும்" என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளின் தலையீடு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ள நிலையில், யாதவ் மீதான குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது.

 

யார் இந்த விகாஷ் யாதவ்

அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்திய அதிகாரி சதித் திட்டம் தீட்டியதாக நியூயார்க் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்லச் சதி செய்ததாக முன்னாள் இந்திய அதிகாரி விகாஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விகாஷ் யாதவ் மீதான குற்றப் பத்திரிகை, "இந்திய குடிமகன், இந்தியாவில் வசிப்பவர்" என்று அவரை விவரிக்கிறது. அவரை விகாஸ் மற்றும் அமானத் என்ற பெயர்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் இந்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் பணியில் இருந்தார். அதன் கீழ்தான் இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பான `ரா’ (RAW) செயல்படுகிறது. `ரா’ உளவு அமைப்பு பிரதமர் அலுவலகத்தினுடைய (PMO) அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது.

"பாதுகாப்பு மேலாண்மை" மற்றும் "உளவுத்துறை" ஆகிய பிரிவுகளில் பணி புரியும் "மூத்த கள அதிகாரி" (Senior Field Officer) என்று யாதவ் தனது பதவியை விவரித்ததாகக் குற்றப் பத்திரிகை கூறுகிறது.

அவர் இந்தியாவின் துணை ராணுவ மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணியாற்றியதாகவும், "போர்க் கருவிகள் மற்றும் ஆயுதங்களில்" பயிற்சி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

`படுகொலை சதி’ என்று கூறப்படும் இந்த வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருப்பதால் கனடா உடனான இந்தியாவின் உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

கனடா குறிப்பிடும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சில நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்களை நாடு கடத்துமாறு கனடாவிடம் இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு கனடா தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை என்றும் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசு அதிகாரிகள், பிஷ்னோய் கும்பலைப் பயன்படுத்தி "கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறைச் செயல்கள்" மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் ஆதரவாளர்களைக் குறிவைத்தல் ஆகிய குற்றங்களைச் செய்வதாக கனடிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தக் குற்றங்கள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விகாஷ் யாதவிற்கு முன்பு இவர்கள் 'ரா' ஏஜென்டுகளாக வெளிநாடுகளில் செயல்பட்டார்களா?

விகாஷ் யாதவ் விவகாரம்  - இதற்கு முன்னர் வெளிநாடுகளில் குற்றச்சாட்டப்பட்ட `ரா’ அதிகாரிகள்
படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக விகாஷ் யாதவ் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது

கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்திய குடிமகன் விகாஷ் யாதவ் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் 29 அன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியில், ''வெள்ளை மாளிகையில் மோதியை, அதிபர் பைடன் வரவேற்கும் வேளையில், இந்திய உளவு அமைப்பான 'ரா' அதிகாரி ஒருவர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்வதற்காக ஏவிய கூலிபடைக்கு ஆலோசனைகளை வழங்கினார். குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்காவில் மோதியை கடுமையாக விமர்சிப்பவர்.”என குறிப்பிட்டுள்ளது

ரகசிய தகவலின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த செய்தியின்படி, இந்திய ஏஜென்ட் விக்ரம் என்ற விகாஷ் யாதவ், பன்னுனின் நியூயார்க் முகவரியை கூலிப்படைக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், பன்னுனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அப்போதைய 'ரா’ தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்தார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

''யாதவ் ஒரு சிஆர்பிஎஃப் அதிகாரி, எனவே அமெரிக்க உளவுத்துறை வலையமைப்பில் சிக்காமல் இருக்கும் தேவையான பயிற்சியும் திறமையும் அவருக்கு இல்லை” என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னுனைக் கொல்ல ரா அதிகாரியால் அமர்த்தப்பட்ட நிகில் குப்தா, அமெரிக்க அரசாங்கத்தின் உளவாளியாக இருக்கும் ஒரு நபரிடம் தெரியாமல் இந்த கொலைக்கான திட்டம் பற்றி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தியை 'ஆதாரமற்றது மற்றும் உண்மையற்றது' என்று விவரித்தார்.

''ஆபரேஷன்களை செய்து முடிக்க பல மாதங்கள் ஆகும். சிலவற்றை முடிக்க வருடக்கணக்கு கூட ஆகும். ஆனால், ரா-வின் மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய மூத்த அதிகாரிகள் ஆப்ரேஷன்களை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பார்கள். ரா அமைப்புக்கு அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம் என்பதையும் தவிர்க்க முடியாது'' என பெயர் கூற விரும்பாத முன்னாள் ரா சிறப்பு செயலாளர் ஒருவர் கூறுகிறார்.

''நிகில் குப்தா இதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் ரா ஏஜென்சியின் செயல்பாடுகளில் உதவியவர். ஆனால், மேற்கத்திய நாடுகளில் நடந்த ஆபரேஷனில் அவர் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை'' என்கிறார்கள் நிகிலின் பின்னணியை அறிந்தவர்கள்.

 

குல்பூஷன் ஜாதவ் வழக்கு

விகாஷ் யாதவ் விவகாரம்  - இதற்கு முன்னர் வெளிநாடுகளில் குற்றச்சாட்டப்பட்ட `ரா’ அதிகாரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஜாதவ் இன்னமும் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார்

இந்தியர் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்படுவது அல்லது நாடு கடத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்துள்ளன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, குல்பூஷன் ஜாதவ், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாகிஸ்தான் - இரான் எல்லையில் பிடிபட்டார்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஜாதவ் இன்னும் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார். அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும், 'ரா’ ஏஜென்டுகள் என கூறப்படுபவர்களுக்கும், அந்தநாடுகளின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பினருக்கு இடையே பல மோதல்கள் நடந்துள்ளன.

இந்த நாடுகளில், ரா உளவாளிகள் என்று கூறப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன் போஸ்டின் இந்திய செய்தி அலுவலகத்தின் தலைவர் கேரி ஷே, "காலிஸ்தான் இயக்கத்தை இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இந்திய அரசால் கருதப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள இந்திய புலனாய்வு அதிகாரிகள் காலிஸ்தான் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்திய அதிகாரிகளின் இந்த செயல்பாடுகளை சில சமயங்களில் அந்த நாடுகளின் அரசுகள் விரும்புவதில்லை'' என 'தி வயர்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

ஜெர்மனியில் சிறையில் அடைக்கப்பட்ட 'ரா ஏஜென்டுகள்'

விகாஷ் யாதவ் விவகாரம்  - இதற்கு முன்னர் வெளிநாடுகளில் குற்றச்சாட்டப்பட்ட `ரா’ அதிகாரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

“2019-ஆம் ஆண்டில், ஜெர்மனியில் வசிக்கும் சில சீக்கியர்கள் ரா ஏஜென்டுகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களை ஜெர்மன் பாதுகாப்பு ஏஜென்சிகள் கைது செய்து வழக்கு தொடர்ந்தன. காலிஸ்தான் மற்றும் காஷ்மீர் செயற்பாட்டாளர்களை உளவு பார்த்ததற்காகவும், ரா அமைப்புக்கு தகவல் தெரிவித்ததற்காகவும் இந்தியத் தம்பதிகளான மன்மோகன் மற்றும் கன்வால்ஜித் ஆகியோருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது” என்றார் பெயர் கூற விரும்பாத முன்னாள் ரா அதிகாரி ஒருவர்.

ஜெர்மன் ஊடகமான Deutsche Welle ஒரு செய்தியில், "மன்மோகன் 2015 ஜனவரியில் ராவுக்காக உளவு பார்க்கும் பணியைத் தொடங்கினார். ஜூலை 2017 முதல் அவரது மனைவி கன்வால்ஜித்தும் அவருடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். ரா ஏஜென்சி, அவர்களின் சேவைகளுக்கு ஈடாக 7,200 யூரோக்களை வழங்கியது. விசாரணையின் போது, இருவரும் இதனை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ரா அதிகாரிகளை பலமுறை சந்தித்ததையும் ஒப்புக் கொண்டனர்." என குறிப்பிட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இரண்டு ரா ஏஜென்டுகள்

2020-21-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலும், 'ரா ஏஜென்டுகள்' என்று கூறப்படும் இரண்டு பேர், அங்குள்ள உளவுத்துறை அமைப்பால் பிடிபட்டனர். அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி ஆஸ்திரேலியா கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரம் நடந்த சமயத்தில் இரண்டு முன்னணி ஆஸ்திரேலிய ஊடகங்களான சிட்னி மார்னிங் ஹெரால்டு மற்றும் ஏபிசி நியூஸ் ஆகியவை ஒரே நாளில் பெரிய கட்டுரையை வெளியிட்டன. அதில், "ஒரு பெரிய உளவு நெட்வொர்க் நாட்டில் இருந்து அகற்றப்பட்டது. உளவாளிகள் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு ஏபிசி நியூஸ் வெளியிட்ட செய்தியில்,''இந்தியாவின் மோதி அரசாங்கம் ஆஸ்திரேலியாவில் உளவாளிகளின் நெட்வொர்க்கை அமைத்துள்ளது'' என குறிப்பிட்டுள்ளது.

''ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மக்களைக் கண்காணித்ததாகவும், ஆஸ்திரேலியாவின் ரகசிய பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அதன் வணிக உறவுகள் பற்றிய தகவல்களை சேகரித்ததாகவும் அந்த நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது'' என்கிறது அந்த செய்தி

விகாஷ் யாதவ் விவகாரம்  - இதற்கு முன்னர் வெளிநாடுகளில் குற்றச்சாட்டப்பட்ட `ரா’ அதிகாரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2020-21 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவிலும், 'ரா ஏஜென்டுகள்' என்று கூறப்படும் இரண்டு பேர், அங்குள்ள உளவுத்துறை அமைப்பால் பிடிபட்டனர்.

பிரிட்டனில் காலிஸ்தான் செயற்பாட்டாளர்களை கண்காணித்த குற்றச்சாட்டு

2014-15 இல், சமந்த் கோயல் லண்டனில் ரா ஏஜென்சியின் நிலையத் தலைவராக இருந்தபோது, பிரிட்டனின் உளவுத்துறை பிரிவான MI-5, சமந்த் லண்டனில் நிலையத் தலைவராக இருக்கும் வரம்புகளை மீறுவதாக எச்சரித்தது'' என வாஷிங்டன் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

''அந்த சமயத்தில் பிரிட்டன் அதிகாரிகள் அவரை நாட்டை விட்டு வெளியேற்றவும் நினைத்தனர். மேலும் இந்திய ஏஜென்டுகள் காலிஸ்தான் தலைவர் அவதார் சிங் கந்தாவை பின்தொடர்ந்ததாகவும் மிரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது'', எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, ''பிரிட்டன் அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கோயல் கோபமாக, 'இந்தியப் பாதுகாப்புக்கு இவர்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். எனவே அவர்களைக் கையாள்வது எங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டது' என்று கூறியுள்ளார்''.

கோயல் லண்டனில் இருந்து டெல்லி திரும்பினார். ரா பிரிவின் தரவரிசையில் உயர்ந்து, 2019 இல் அதன் தலைவர் பதவியை அடைந்தார்.

 
விகாஷ் யாதவ் விவகாரம்  - இதற்கு முன்னர் வெளிநாடுகளில் குற்றச்சாட்டப்பட்ட `ரா’ அதிகாரிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அரசு, 'நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு' எங்களது கொள்கைகளில் இடமில்லை என்று கூறி வருகிறது.

பிரிட்டன் ஊடகமான கார்டியனில், ஏப்ரல் 4, 2024 அன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், ''பாகிஸ்தானில் காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையவர்களை குறிவைத்து கொலை செய்யும் முயற்சியில் ரா பிரிவு ஈடுபட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில், இந்த செய்தி தயாரிக்கப்பட்டதாக கார்டியன் கூறுகிறது.

இந்தியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது, ''நாங்கள் எதிரிகளின் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்பது, எதிரிகளுக்கும் தெரியும்'' என பிரதமர் நரேந்திர மோதி பேசியது, இந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்த்தது.

ஆனால், இந்திய அரசு, 'நீதிக்குப் புறம்பான கொலைகளுக்கு' எங்களது கொள்கைகளில் இடமில்லை என்று கூறி வருகிறது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள், பன்னுன் மற்றும் நிஜ்ஜார் போன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

1980ல் காலிஸ்தான் செயற்பாட்டாளர் தல்விந்தர் சிங் பர்மர் மீது இந்தியா புகார் அளித்தும் கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா கனிஷ்கா குண்டுவெடிப்புக்கு பர்மர் மூளையாக செயல்பட்டார். இதில் 329 பேர் கொல்லப்பட்டனர்.

பாபர் கல்சா என்ற கடும்போக்கு அமைப்பின் முதல் தலைவர் பர்மர் ஆவார். 1992 இல் இந்தியாவில் பஞ்சாப் காவல்துறையினருடன் நடந்த என்கவுன்டரில் பர்மர் கொல்லப்பட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.