Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Ministry_of_Education.jpg?resize=750,375

பாடசாலைக் கல்வித் தரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் : கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சபை முதல்வாரன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு பிள்ளையும், 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5 ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கி போட்டியை நீக்குவதற்கும் கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

அத்தோடு, உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

இதற்கிடையில், சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9 இல் இருந்து 7 ஆகக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 517.05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாவும், பாடசாலை சீருடைக்காக 6 மில்லியன் ரூபாவும், 7 இலட்சத்து 28 ஆயிரத்து 480 பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை வழங்குவதற்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சுமார் 1.07 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தற்போது மதிய உணவு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இதன்போது கூறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

https://athavannews.com/2023/1362090

  • Confused 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

17 வயதில் படிப்பு முடியும் என்றால் நேசரி ஐந்து வயது முதலாம் வகுப்பு ஆறு வயது, ஓ.எல் பதினைந்து வயது, ஏ.எல் பதினேழு வயது?

பொருளாதார நெருக்கடி காரணமாக வகுப்புகளையும், பாடங்களையும் குறைக்கின்றார்களோ? இலவச கல்வி என்றால் வளங்களை வழங்குவது ரொம்ப கஸ்டம் தான். 

இனி கொஞ்சம் வேளைக்கே பல பெண்கள் திருமணம் செய்வார்கள். கொஞ்சம் வேளைக்கே பிள்ளையை வீட்டில் நிப்பாட்டி வைப்பார்கள். பலர் இனி வெட்டியாக ஒரு வருடம் முன்னரே வீட்டில் நிற்கலாம். பெற்றோருக்குத்தான் தலையிடி.  

இலங்கையின் கல்வி தரம் வெளிநாட்டி அளவுகோலின் நிமித்தம் குறைக்கப்படலாம்.

ஒன்பது பாடங்களை எட்டாக குறைக்கலாம். ஏழாக குறைப்பது பல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஏழு இலங்கைக்கு அதிர்ஷ்ட எண்ணோ?

அது சரி.. இப்படி மாற்றங்கள் எல்லாம் செய்யப்படும் முன் பாராளுமன்றத்தில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டு மற்றவர்கள் ஆலோசனை பெறப்படுமா அல்லது இவை ஒரு தலைப்பட்சமான முடிவுகளா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயம் said:

17 வயதில் படிப்பு முடியும் என்றால் நேசரி ஐந்து வயது முதலாம் வகுப்பு ஆறு வயது, ஓ.எல் பதினைந்து வயது, ஏ.எல் பதினேழு வயது?

பல வருடமாக இங்கே யூகேயில் இதுதான் வழமை. பிறகும் மாதத்தை பொறுத்து 17/18 இல் ஏ எல் எடுப்பார்கள். அதே வருடம் செப்டெம்பரில் யூனி. 20/21 இல் வெளியே வந்து விடுவார்கள். வெளியேறும் சராசரி வயது 21.  

இலங்கையில் ஏ எல் சோதனை எடுக்கும் போதே 19 யூனி போக 20 மினிமம். வெளியே வர 23 (ஸ்டிரைக் இல்லாட்டில்). 90 களில் யூனி போகவே 23 வயதாகியது என நினைக்கிறேன்.

இது தேவையான மாற்றம்தான்.

 

5 hours ago, நியாயம் said:

ஒன்பது பாடங்களை எட்டாக குறைக்கலாம். ஏழாக குறைப்பது பல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஏழு இலங்கைக்கு அதிர்ஷ்ட எண்ணோ?

8 ஆக இருந்து, பின் 89/90 இல் 6 ஆகி, பின் எட்டாகி, ஒன்பதாகி, பத்தாகி…..இனி ஏழரை மட்டுமே பாக்கி🤣.

5 hours ago, நியாயம் said:

இலங்கையின் கல்வி தரம் வெளிநாட்டி அளவுகோலின் நிமித்தம் குறைக்கப்படலாம்.

கல்வி திட்டம் 48 இல் இருந்து ஒரு 3 வருட இடைவெளி விட்டு…இங்கிலாந்த்தின் சிஸ்டத்கை 90% ஈயடிச்சான் கொப்பிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயம் said:

அது சரி.. இப்படி மாற்றங்கள் எல்லாம் செய்யப்படும் முன் பாராளுமன்றத்தில் இந்த விடயங்கள் விவாதிக்கப்பட்டு மற்றவர்கள் ஆலோசனை பெறப்படுமா அல்லது இவை ஒரு தலைப்பட்சமான முடிவுகளா?

இப்படியான முடிவுகள் முதன்மை சட்டம் மூலம் மாற்றப்படுவதில்லை. எனவே இவை பாராளுமன்றில் விவாதிக்கப்படுவது குறைவு.

ஆனால் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தேசிய கல்வி கொள்கை உள்ளது, அதன் தொடர் மீளாய்வு நடக்கும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப பரீட்சைகள் எல்லாம் தள்ளித்தானே போகுது. 17 வயதில் ஏ.எல் என்று மாற்றம் கொண்டு வந்தால்தான் பிள்ளை 20 வயசிலாவது பல்கலைக்கழகம் போகலாம். 

தேவை இல்லாத பாடங்களில் சமய பாடத்தை அகற்றலாம். 

தேவையான பாடங்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சுகாதாரம், சமூகக்கல்வி (இப்போது வேறோர் பெயர் போல), அத்துடன் சிங்களம் (சிங்கள மாணவர்கட்கு தமிழ்) உள்ளடக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிப்படையில் ஒரு மாற்றமும் இல்லை. இது தான் முன்னர் நடைமுறையில் இருந்தது. 

பாலர் வகுப்பு 4 வயது.

முதலாம் வகுப்பு 5 வயதில் தொடங்கி..

12ம் வகுப்பை.. 17 இல் முடிக்க முயலினம்.

முன்னர்

இதே பாலர் வகுப்பு - 5 வயது.

முதலாம் வகுப்பு.. 6 வயது..

12ம் வகுப்பு.. 18 வயதில் அடைவதாக இருந்தது..

அதுவே சிறந்ததும் கூட.

பின்னர் ஒரு தேவையும் இல்லாமல்... ஆண்டு கொண்டு வந்தார்கள். பின்னர் மீண்டும் வகுப்புக்கு பதில் தரத்திற்கு போனார்கள்.. எனி... மீண்டும்.. பழைய முறைக்கு திரும்பப் போகிறார்கள்.

அதே போல்.. ஓ எல் 6 பாடமாக இருந்தது.

பின்னர் நீண்ட காலம் 8 பாடமாக இருந்தது.

பின்னர் 10.

பின்னர் 9 

எனி.. 7.

ஆக மொத்தத்தில் அரசாங்கங்களுக்கு ஒரு நிரந்தரமான தெளிவான கல்விக்கொள்கை கிடையாது. ஆகவே கல்வியின் தரம் தேவை என்பதைப் பொறுத்து அதனை வடிவமைத்து வழங்கும் பொறுப்பை பல்கலைக்கழகங்கள் சார் சுயாதீன ஆலோசனை வழங்கும் அமைப்புகளிடம் கையளிப்பதும்.. அதன் படி அரசுகள் அமைச்சுக்களூடு.. சட்டமியற்றி நடைமுறைப்படுத்துவதுமாக அமைந்தால் அன்றி..

கல்வி அமைச்சருக்கு ஒரு கல்விக் கொள்கை என்றால்.. சொறீலங்கா.. கல்வியிலும் தொடர்ந்தும்.. பிந்தங்கி இருக்கும் நிலையே தோன்றும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்[சிங்களம் ], சமய பாடங்கள்,இசை [நடனம் ,ஓவியம்] போன்றவை  5ம் வகுப்பிற்கு மேல் தேவையில்லை
சுகாதார கல்வியை விஞ்ஞான  பாடத்தோடு சேர்க்கலாம்.
சமூக கல்வியையும், வரலாற்றையும் ஒன்றாக்கலாம் 
15 வயதில் ஓ /எல் முடித்தால், 18 வயதிற்குள் ஏ/லெவல் முடிக்கலாம் 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
    • நன்றி ஐயா. போற்றப்பட வேண்டியவர்கள்.🙏
    • தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே.  அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎 சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன். மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை
    • உந்த சுத்துமாத்து எல்லா இடமும் இருக்கு.....  நான் அறிய சுத்தமான தேன் .........கிடைப்பது கடினம்.😒
    • வீட்டில் செயற்கையாக தேனீ/தேன்கூடு வளர்ப்பவர்கள் தேனீக்கு சீனிப்பாணி கொடுக்கின்றார்கள் என கேள்விப்பட்டேன். கடையில் விற்பனை செய்யப்படும் தேன் எப்படிப்பட்ட தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதோ யார் அறிவார். உண்மையான தேன் குளிர்காலத்தில் கட்டியாகாது என நினைக்கின்றேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.