Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2023 at 05:51, ஈழப்பிரியன் said:

இப்போது உள்ள நிலையைவிட இன்னும் கேவலமான நிலைக்கே தமிழர்களை தள்ளும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இல்லை என மறுதலிக்கவில்லை, இந்த இமாலய தீர்வு திட்டம் ஒரு பாதகமான சூழ்நிலையினை உருவாக்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளமைக்கான காரணிகளை புறந்தள்ள முடியாது என்பதனை இப்போது உணர்ந்துள்ளேன்., ஆனால் இந்த தீர்வினை பற்றி கூறுபவர்கள் கூட அதன் எவ்வாறான தாக்கத்தினை உருவாக்கும் என கூறவில்லை.

இதனை வரவேற்பவர்கள் பெரும்பாலும் தற்போதய நிலையினை விட இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையிலேயே ஆதரிக்கிறார்கள் என கருதுகிறேன் ( மற்றவர்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் எனது நிலை அவ்வாறானதாகவே உள்ளது, ஆனால் கோசான் மற்றும் பலரது கருத்துகளை பார்ர்கும் போது ஒரு தவறான விடயத்தினை ஆதரித்துவிட்டதாக உணருகிறேன்)

தற்போது இந்த தீர்வுதிட்டக்குழுவினர்தான் இந்த விடயத்தினை தெளிவுபடுத்தவேண்டும்.

  • Replies 131
  • Views 11.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது கருத்து, 1. இந்த பிரகடனம் பற்றி எனக்கு இந்த திரி வரும் வரை தெரியவில்லை.  எனக்கு மட்டும் இல்லை புலவர் உட்பட பலருக்கு தெரியவில்லை. இது எமது பிழையா? அல்லது இப்படி ஒன்றை தனியே தமிழ் காடியனில் மட

  • குமாரசாமி
    குமாரசாமி

    எழுதுங்கள். ஒரு சில இடங்களில் பிரச்சனைகள் வந்தால் அது ஒட்டுமொத்த பிரச்சனையாகாது.   ஒரு சில பல இடங்களில்  நீங்களும் நானும் முரண்பட்டாலும் உங்கள் எழுத்தின் வாசகன் நான்.

  • ரணிலின் தந்திரங்களை தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்களே? எனக்கு ஏதோ பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி செயட்படுவது போலத்தான் தெரிகின்றது. தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா இரு

  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2023 at 06:16, nunavilan said:

 

இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல

இந்நாடு சிங்கள நாடல்ல, தமிழ்நாடுமல்ல

 

இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற சிந்தனையும் மறைய வேண்டும். 

சகலருக்கும் சொந்தமான, இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, சிறந்த இலங்கைக்கான சங்க (பெளத்த) மன்றம், உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுடனான சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், பெளசி, திகாம்பரம், வேலுகுமார், உதயகுமார், தவ்பிக் ஆகியோரும் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு பற்றி ஊடகங்களுடன் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சிங்கள - பெளத்த நாடு என்ற சிந்தனை, இலங்கையில் நிரந்தர அமைதி, வளர்ச்சி, மகிழ்ச்சி ஏற்பட தடையாக இருக்கிறது என சந்திப்பில் கலந்துக் கொண்ட தேரர்களை நோக்கி சிங்கள மொழியில் கூறினேன். 

அதேவேளை இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும் என சந்திப்பில் கலந்துக் கொண்ட உலகத் தமிழர் பேரவை அங்கத்தவர்களை நோக்கி தமிழிலும், ஆங்கிலத்திலும் கூறினேன்.

உங்களது இந்த முயற்சியை நாம் வரவேற்கிறோம். அரசியல்வாதிகளை, அரசியல் கட்சிகளை விலத்தி வைத்து விட்டு நேரடியாக நீங்கள் இந்த முயற்சி செய்வதும் இந்த முதற்கட்டத்தில் சரிதான். 

முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டால், அடுத்த கட்டத்தில் அது அரசியல் கட்சிகளிடம்தான் வரவேண்டும். பாராளுமன்றத்தில்தான்  இன்றைய சட்டங்கள் திருத்தப்பட முடியும். புதிய சட்டங்கள் உருவாக்கப்பட முடியும். ஆகவே அது  வரும்போது வரட்டும்.

ஆனால், இலங்கை ஒரு பன்மைத்துவ நாடு என்ற அடிப்படையே உங்கள் நடவடிக்கைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும். இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். 

இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையும் மறைய வேண்டும். இந்த அடிப்படை  ஆரம்ப புள்ளியாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் இந்த முயற்சிபயனற்றதாகி விடும்.

“76 விகிதம் சீனர்களை கொண்ட சிங்கப்பூர், அரசியல் சட்டப்படி தம்நாட்டு பன்மைத்துவத்தை கொண்டாட முடியும் என்றால், ஏன் இலங்கையில் எம்மால் அதை கொண்டாட முடியாது?” என்ற கேள்வியை முயற்சியில் ஈடுபடும் தேரர்களை நோக்கி நான் எழுப்பவில்லை. 

ஏனெனில் இம்முயற்சி வெற்றி பெறுவது பெருமளவில் அவர்கள் தரப்பில்தான் உள்ளது என்பது எனது அபிப்பிராயம். முதலிலேயே அவர்களை தளர்வடையச்செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், அடுத்த முறை இதை நான் கேட்பேன். இத்தகைய கேள்விகளை ஏற்கனவே பாராளுமன்றத்திலும், உள்நாட்டு மேடைகளிலும் நான் பலமுறை எழுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.  

https://tamil.adaderana.lk/news.php?nid=181386

 

இனரீதியாக மக்களிடம் பாகுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு வசதிகள், வாய்ப்புக்கள் பெருன்பான்மை இனத்திற்கு செல்லும்வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்ததே இலங்கையில் சிறுபான்மை இனத்தினர் தனிநாடு சிந்தனை நோக்கி செல்வதை வலுப்படுத்தியது. 

எனவே, இயற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பெருன்பான்மை மக்களின் நலன்களை மையப்படுத்தி சிறுபான்மை மக்களை நலிவுறசெய்யும் சட்டங்கள், நடைமுறைகள் படிப்படியாக இரத்து செய்யப்பட்டால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு எனும் கோட்பாடு வெற்றி பெறும். 

மனோகணேசனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக தென்படுகின்றது. 

பேச்சுவார்த்தையில் பங்காளிகளான தரப்புக்கள் விட்டுக்கொடுப்புக்கு தயார் இல்லை என்றால் பேச்சுவார்த்தை பயன் தராது. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

ஆனால் இந்த தீர்வினை பற்றி கூறுபவர்கள் கூட அதன் எவ்வாறான தாக்கத்தினை உருவாக்கும் என கூறவில்லை.

இதில் இன்னமும் தீர்வுகளைப் பற்றி சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இதில் இன்னமும் தீர்வுகளைப் பற்றி சொல்லவில்லை.

உண்மைதான், இது ஒரு பொதுவான சட்ட திருத்தம் போலவே உள்ளதாகவே நானும் கருதியிருந்தேன் அந்த வகைய்லேயே அது ஒரு நல்ல விடயம் என கூறியிருந்தென்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

1) இதனை வரவேற்பவர்கள் பெரும்பாலும்

2) தற்போதய நிலையினை விட இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையிலேயே ஆதரிக்கிறார்கள் என கருதுகிறேன் ( மற்றவர்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் எனது நிலை அவ்வாறானதாகவே உள்ளது,

3) ஆனால் கோசான் மற்றும் பலரது கருத்துகளை பார்ர்கும் போது ஒரு தவறான விடயத்தினை ஆதரித்துவிட்டதாக உணருகிறேன்)

தற்போது இந்த தீர்வுதிட்டக்குழுவினர்தான் இந்த விடயத்தினை தெளிவுபடுத்தவேண்டும்.

1) யாரும் இந்த முன்மொழிவுகளை வரவேற்றதாகத் தெரியவில்லை. ஆனால் யார் குற்றினாகும் அரிசிதான் வேண்டும் என்கிற   நிலையில் இதனைக் குழப்பாதிருப்போம் என நினைக்கிறார்கள் என நம்புகிறேன். 

2) உண்மை நிலை அதுவே. இன்னும் 10 -15 வருடங்களுக்குப் பின்னர் எமது  நிலையை( நிலத்திலும்-புலத்திலும்) கற்பனை செய்து பார்த்தால் உண்மை புலப்படும். 

3) எந்த முயற்சியும் தவறு அல்ல. தவறு என்று கூறுபவர்கள, அதனைக் கூறுவதோடு நிற்காமல் தாங்கள் ஏதாவது ஒரு  அடியைத்தானும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது சொற்கள் வெறும் காற்றில் வாள் வீச்சு மட்டுமே. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

1) யாரும் இந்த முன்மொழிவுகளை வரவேற்றதாகத் தெரியவில்லை. ஆனால் யார் குற்றினாகும் அரிசிதான் வேண்டும் என்கிற   நிலையில் இதனைக் குழப்பாதிருப்போம் என நினைக்கிறார்கள் என நம்புகிறேன். 

2) உண்மை நிலை அதுவே. இன்னும் 10 -15 வருடங்களுக்குப் பின்னர் எமது  நிலையை( நிலத்திலும்-புலத்திலும்) கற்பனை செய்து பார்த்தால் உண்மை புலப்படும். 

3) எந்த முயற்சியும் தவறு அல்ல. தவறு என்று கூறுபவர்கள, அதனைக் கூறுவதோடு நிற்காமல் தாங்கள் ஏதாவது ஒரு  அடியைத்தானும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்களது சொற்கள் வெறும் காற்றில் வாள் வீச்சு மட்டுமே. 

இதனை ஆதரித்த எனக்கு எவ்வாறான திட்டமாக இது இருக்கும் என்பதனை ஊகத்தினடிப்படையில் ( அது தவறாகவும் இருக்கலாம்) கருதகூடியதாக இருந்தது, இந்த நிலையினை உருவாக்காமல் மக்களின் முன் தமது திட்டத்தினை தெளிவாக தெரிவித்திருந்தால் மக்கள் மனதில் சஞ்சலம் இருந்திருக்காது, அந்த விடயத்தில் தவறு செய்துவிட்டதாக கருதுகிறேன்.

இது மக்களுகான திட்டம் எனும் பட்சத்தில் மக்களிடம் தெளிவாக தமது திட்டத்தினை தெரிவித்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதாகவே கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

இதனை ஆதரித்த எனக்கு எவ்வாறான திட்டமாக இது இருக்கும் என்பதனை ஊகத்தினடிப்படையில் ( அது தவறாகவும் இருக்கலாம்) கருதகூடியதாக இருந்தது, இந்த நிலையினை உருவாக்காமல் மக்களின் முன் தமது திட்டத்தினை தெளிவாக தெரிவித்திருந்தால் மக்கள் மனதில் சஞ்சலம் இருந்திருக்காது, அந்த விடயத்தில் தவறு செய்துவிட்டதாக கருதுகிறேன்.

இது மக்களுகான திட்டம் எனும் பட்சத்தில் மக்களிடம் தெளிவாக தமது திட்டத்தினை தெரிவித்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதாகவே கருதுகிறேன்.

எந்தத் தீர்வு முன்மொழிவும் மக்கள் முன் கொண்டு செல்லப்பட  வேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்லை. 

ஆனால் மறு தரப்பைச் சந்தித்ததற்காக  சேற்றை வாரியிறைக்கும் செயல் மக்கள் விரோதச் செயலே.  

👇

இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.
கனடிய தமிழர் பேரவையின் முழுமையான ஊடக அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------
கனடிய தமிழர் பேரவை ஊடக வெளியீடு 
21/12/2023
கனடியத் தமிழர் பேரவை (CTC) இமாலயப் பிரகடனத்தைக் கையளிப்பதற்காக மகிந்த ராஜபக்சாவை சந்தித்தமையால் எமது மக்களுக்கு ஏற்பட்ட வலியை உணர்ந்துஆழமாக வருந்துகிறது.
இந்த ஆண்டு 2023 ஏப்ரலில் உலகத் தமிழர் பேரவையின் (GTF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள பல்வேறு பௌத்த உயர் மதபீடங்களின் மூத்த பௌத்த பிக்குகள் நேபாளத்தின் நாகர்கோட்டில் உரையாடல்களை மேற்கொண்டு இமாலயப் பிரகடனத்தை உருவாக்கினார்கள்.
(பிரகடனத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது).
இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, இரு தரப்பினரையும் உள்ளடக்கிய தூதுக்குழு இலங்கையில் பல்வேறு சந்திப்புகளை நடத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, சுவிஸ் மற்றும் கனடா நாட்டு இராஜதந்திரிகள் உட்பட இலங்கையின் முக்கியமான அனைத்து மதத் தலைவர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், இலங்கைஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பெரும்பாலான தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள்ஜனாதிபதிகள், முன்னாள், இன்னாள் சபாநாயகர்கள், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும்தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடியிருந்தார்கள்.
இமாலயப் பிரகடனத்தைக் கையளித்து, தேசிய உரையாடலை ஆரம்பிக்க நாடுமுழுவதும் உள்ள மக்களிடம் இந்த முன்னெடுப்பு எடுத்துச் செல்லப்படும் என்பதைத் தெரிவிப்பதே இந்தச் சந்திப்புகளின் பிரதான நோக்கமாகும்.இமாலயப் பிரகடனத்தைப் பெற்றுக்கொண்ட அனைவரும் இந்த முன்னெடுப்புக்குத் தமது முழு ஆதரவைத் தருவதாக கூறியதோடு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் தலைமையில் இலங்கையில் நிரந்தர சமாதானத்துக்கான அரசியல் முன்னெடுப்புகள் நடைபெறக்கூடிய சூழலை உருவாக்க இத் தேசிய உரையாடல் உபயோகமாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
இமாலயப் பிரகடனத்தின் பன்மைத்துவ ஈடுபாட்டிற்கான ஆணையின் ஒரு பகுதியாக, தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவையும் தூதுக்குழுவினர் சந்தித்திருந்தனர். இமாலயப் பிரகடனம் மற்றும் அர்த்தமுள்ள உரையாடலுக்கான முக்கியத்துவத்தைப் பற்றி இலங்கையில் செல்வாக்குள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பு மற்றும் சந்திப்பின் படங்கள், புலம்பெயர் தமிழர்களிடமும், கனடியத்தமிழர்களிடமும் வேதனை தரும் வகையில் தீவிரமாக உணர்வுகளைத் தூண்டியுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். கனடியத் தமிழர் பேரவை உண்மையிலேயே இது குறித்து ஆழமாக வருந்துகிறது. இவ்வாறான வேதனை உணர்வினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதைக் கனடியத் தமிழர் பேரவை தனது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இமாலயப் பிரகடனத்தின் முதன்மையான நோக்கமும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அனைத்துச் சந்திப்புகளும், ஈழத்தமிழர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தேசிய உரையாடலை ஆரம்பிப்பதாகும். அத்துடன் தீவில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களையும் இந்த முயற்சியில் ஈடுபடுத்துவதாகும். நாங்கள் அரசியல் தீர்வுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. அவ்வாறான வேலைத்திட்டம் இலங்கையில் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களைச் சார்ந்த விடயமாகும்.
கனடிய தமிழர் பேரவை 2009 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்கேற்பது உட்பட உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அதற்கான பொறுப்புக்கூறல் மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காகக் கடுமையாக முன்னின்று உழைத்து வருகின்றது.
இலங்கையில், குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டங்களில், இலங்கையில் நடந்த மனித உரிமை அநியாயங்களுக்கு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை அடைவதற்கு உழைப்பது கனடியத் தமிழர் பேரவையின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் நிலையான நீண்டகால சமாதானத்தை உருவாக்குவதற்கான செயல்முறைக்கும் ஆதரவளிக்கும் போது, கனடியத் தமிழர் பேரவையானது இலங்கைத் தமிழ் மக்களின் நலன்களுக்கான ஆணையை விட்டுக் கொடுக்காது, சமரசம் செய்யாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.
தூரதிர்ஷ்டவசமாக, இமாலயப் பிரகடனத்தின் உண்மையான நன்நோக்கம் குறித்துத் தவறான விளக்கங்கள் பரப்பப்பட்டுக் கனடியத் தமிழர் பேரவை அலுவலகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராகத் தேவையற்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன. நீண்டகாலமாக கனடியதமிழர் பேரவையின் பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் சமாதானத்துக்கான பணியையும் முன்னேற்றத்தையும் இழிவுபடுத்தும் இத்தகைய செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மேலதிக தகவல்கள் மற்றும் ஊடக விவரங்களுக்கு, கீழுள்ள மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்: info@canadiantamilcongress.ca
 
உபயம்: நுணாவிலான் 

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.