Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015ஐ விட 2023இல் அதிக மழை பெய்ததா? தரவுகள் என்ன சொல்கின்றன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை வெள்ளம், மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளமும் 2023-ஆம் ஆண்டு மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட வெள்ளமும் தொடர்ந்து ஒப்பிடப்பட்டு வருகின்றன.

இரு சந்தர்பங்களிலும் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்ததாலும் இந்த விவாதம் தீவிரமாக சமூக வலைதளங்களில் சூடாக பரவிவருகிறது. எந்த ஆண்டு அதிக மழை பெய்தது, எத்தனை நாட்கள் பெய்தது என எண்ணிக்கைகளைக் கொண்டு முரணான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

மிக்ஜாம் புயலின் போது பெய்த மழை 47 ஆண்டுகளில் இல்லாத மழை என்று தமிழக அரசு கூறியது. இந்திய வானிலை ஆய்வு மையம் X தளத்தில் வெளியிட்டிருந்த தரவுகளின் படி, ஒரு நாளில் பெய்த மழை அளவு 2023-ஐ விட 2015-ஆம் ஆண்டே அதிகமாக இருப்பதாக கூறுகிறது.

இந்நிலையில், தரவுகள் என்ன சொல்கின்றன, அவற்றை எப்படிப் புரிந்து கொள்வது?

 

இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகள் அனைத்தும் காலை 8.30 மணி முதல் மறு நாள் காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் மழை எவ்வளவு பெய்துள்ளது என்பதைக் கணக்கிடுகிறது. அதன் படி, 2015-ஆம் ஆண்டு அதிக மழை பெய்த டிசம்பர் 2-ஆம் தேதி சென்னையில் 29 செ.மீ மழை பதிவாகியது.

அதே முறையில் கணக்கிடும் போது, 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி மிக்ஜம் புயல் தாக்கிய நாளில் சென்னையில் 23 செ.மீ மழை பதிவாகியது.

பெரு மழை பெய்த நாட்களுக்கு முந்தைய நாளும், அடுத்த நாளும் எவ்வளவு மழை பெய்தன என்ற தரவுகள் உள்ளன. 2015-ஆம் ஆண்டில், டிசம்பர் 1-ஆம் தேதி 3.9 செ.மீ மழையும், டிசம்பர் 3-ஆம் தேதி1.6 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 1, 2, மற்றும் 3 தேதிகளில் மொத்தம் 34.9 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.

அதே போன்று 2023-ஆம் ஆண்டில் டிசம்பர் 3-ஆம் தேதி 6.2 செ.மீ மழையும், டிசம்பர் 5ம் தேதி 23.8 செ.மீ மழையும் பதிவாகியது. அதாவது டிசம்பர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் மொத்தம் 53.1 செ.மீ மழை சென்னையில் பதிவாகியது.

 
2023 வெள்ளம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

'2015-இல் தீவிர மழை இல்லை'

புயல், மழை வெள்ளம் ஆகியவற்றை பற்றி ஒப்பிட்டு பேசும்போது, மழை அளவு தரவுகளை தவிர மற்றும் வேறு சில அம்சங்களும் உள்ளன.

“கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால். 2015-இல் புயல் ஏதும் உருவாகவில்லை. கிழக்கிலிருந்து காற்றாழுத்த தாழ்வு நிலை உருவானது. 2023-இல் மழை தொடங்கிய டிசம்பர் 3-ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி இரவு 8.30 மணி வரையிலான 24 மணி நேரங்களில் 40 செ.மீ மழை பெய்துள்ளது. இந்த அளவுக்கான தீவிர மழை 2015-ல் பெய்யவில்லை,” என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ் பிபிசி தமிழிடம் கூறினார்.

ஒவ்வொரு புயலும் தனித்துவமானது, அவற்றை ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாது என்கிறார் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியரும் நீர் குறித்த விரிவான பல ஆய்வுகளை நடத்தி வரும் எஸ். ஜனகராஜ்.

"2015-ஆம் ஆண்டு அடையாற்றின் மேல் படுகையில் தான் அதிக மழை பெய்தது. அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலேயே சென்னையை விட அதிக மழை பெய்தது. சென்னையின் தென் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு காரணம், அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தான். அதற்கு காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை திடீரென திறந்துவிட்டது ஆகும்,” என்றார்.

 

சென்னைக்கு 30 கி.மீ தொலைவில் புயல்

2023 வெள்ளம்

பட மூலாதாரம்,IMD

2015-ஆம் ஆண்டில் 14 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தது. ஏரி உடைந்துவிடும் ஆபத்து இருந்ததால் ஒரே நேரத்தில் 29,400 கன அடி நீர் செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கத்திலிருந்து 900 கன அடி மட்டுமே நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் திடீரென 29,000 கன அடி திறக்கப்பட்டது, நிலைமையை மோசமாக்கியது. அடையாற்றின் கரை ஓரங்களில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம் புயலினால் பெய்த மழை காராணமாகவே ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் மிக நீண்ட நேரம் நிலை கொண்டு இருந்ததன் காரணமாக அதி கனமழை தொடர்ந்து பெய்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் சென்னைக்கு மிக நெருக்கமாக வெறும் 90 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டிருந்தது. மணிக்கு 10 - 18 கி.மீ. வேகத்தில் செல்லும் புயல் வெறும் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது அதன் வேகம் மேலும் குறைந்து மணிக்கு 5 கி.மீ. என்று இருந்தபோது புயல் கிட்டத்தட்ட சென்னைக்கு அருகிலேயே ஸ்தம்பித்து நிற்பது போல் ஆனது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ், “மிக்ஜாம் புயல் 16 முதல் 18 மணி நேரங்கள் சென்னைக்கு அருகிலான கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்தது. புயலின் மைய பகுதி, சென்னையிலிருந்து 80-90 கி.மீ அருகில் இருந்தது. ஆனால், புயலின் வெளிப்புற பகுதியில் தான் தீவிர காற்றும் மேகங்களும் இருக்கும். அந்த பகுதி சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் இருந்தது. அதனால் தான் மழை தீவிரமாக பெய்தது,” என்றார்.

மிக்ஜாம் புயல் எப்போது உருவாகும், புயலின் பாதை என்னவாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கூறியிருந்தாலும், புயல் இவ்வளவு நேரம் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருக்கும் என்பது யாரும் எதிர்ப்பார்க்காதது.

 

மிக்ஜாம் போன்ற 1976 புயல்

2023 வெள்ளம்

பட மூலாதாரம்,IMD

மிக்ஜாம் புயல் சென்னை கரைக்கு மிக அருகில் வந்து, சென்னையை உரசி உரசி சென்று மேலும் வடக்கு நோக்கி நகர்ந்தது.

1976-ஆம் ஆண்டு உருவான புயலின் பாதையும் இதுவாகவே இருந்தது என்கிறார் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஒய்.இ.எ ராஜ்.

“சென்னையில் அதிக அளவிலான வெள்ளத்தை முதல் முறையாக ஏற்படுத்தியது அந்த புயல். மிக்ஜாம் புயல் கடந்து சென்ற அதே பாதையில் சென்றது, ஆனால் மிக்ஜாம் போல வடக்கு நோக்கி செல்லவில்லை. அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் 24 மணி நேரத்தில் 45 செ.மீ மழை பதிவானது. இப்போதும், இதுவே 24 மணி நேரங்களில் சென்னையில் பதிவான அதிகபட்ச மழையாகும்,” என்றார்.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ் முன்னாள் பேராசிரியர் எஸ். ஜனகராஜ், “1976-க்கு பிறகு, சென்னையில் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்தது இதுவே முதல் முறையாகும். எனவே 47 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை இது என கூறலாம். ஆனால், மழையின் தாக்கம் 1976-ஐ விட இப்போது தான் அதிகமாக உள்ளது. இப்போது, நீர் வழிப்பாதைகள், ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பூமியின் உள் செல்வதற்கான நிலம் குறைந்துக் கொண்டே வருகிறது. பெய்யும் மழையில் 95% ஆறுகளில், கடல்களில் கலக்கிறது,” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cw0d5ep5y64o

  • கருத்துக்கள உறவுகள்

☝️ மேலே இருக்கும் வரைபுகளின் நெடுக்கு (Y) (எங்கள் நெடுக்கர் அல்ல😎!) அச்சைக் கவனியுங்கள்: மில்லிமீற்றரில் இருக்கிறது.

இதன் படி மிக்ஜாம் புயலின் போது இரு பிரதேசங்களிலும் 100, 120 சென்ரிமீற்றர் மழை தினசரி சேர்ந்திருக்கிறது. மேலே செய்தியிலோ, மிக்ஜாம் புயலின் போது 3 நாட்களில்பெய்த மொத்த மழை (சென்னையில்) 53 சென்ரிமீற்றர் என இந்திய வானிலை அவதான நிலையம் கணித்திருக்கிறது. 21 சென்ரிமீற்றருக்கு மேற்பட்ட மழையை இந்தியாவில் "வெகுவான கனமழை" என வரையறை செய்கிறார்கள் - வெள்ளம் சேரும் சாத்தியம் அதிகமென்பதால்.

என் கேள்வி: மேல் வரைபுகளை எக்ஸ் தளத்தில் தயாரித்துப் பகிர்ந்த அஸ்வத்தாமனுக்கு மில்லி, சென்ரி குழப்பமா? அல்லது "திருட்டுத் திராவிடத்தை பொய் data கொண்டு அடித்தாலும் தகும்!" என்ற தேசியப் பற்றா😂?

மீனம்பாக்கத்திலும், நுங்கம்பாக்கத்திலும் மழை வீழ்ச்சி பற்றி இந்திய வானிலை அவதான நிலையத்தின் தகவலைக் கொண்ட கட்டுரை கீழே இருக்கிறது.

https://timesofindia.indiatimes.com/city/chennai/michaung-dumped-more-rain-than-2015-cyclone/articleshow/105767336.cms

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

என் கேள்வி: மேல் வரைபுகளை எக்ஸ் தளத்தில் தயாரித்துப் பகிர்ந்த அஸ்வத்தாமனுக்கு மில்லி, சென்ரி குழப்பமா? அல்லது "திருட்டுத் திராவிடத்தை பொய் data கொண்டு அடித்தாலும் தகும்!" என்ற தேசியப் பற்றா😂?

என்ன பொய்யை சொன்னாலும் அதை பகிர்வதற்கும் நம்புவதற்கும் தேவையான அளவு மடையன்கள் இருக்கின்றார்கள் என்ற துணிவு தான் அஸ்வத்தாமனுக்கு.  

அஸ்வத்தாமனின் பொய், புரளி வரைபைக் கவனித்து சுட்டிக்காட்டியதற்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

"திருட்டுத் திராவிடத்தை பொய் data கொண்டு அடித்தாலும் தகும்!" என்ற தேசியப் பற்றா😂?

 

சொல்லி தெரிவதில்லை பொய் சொல்லும் கலை🤣.

இவர்களுக்கும் போலிகாவை கொண்டு வந்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

மொக்கு தமிழன் எதை சொன்னாலும் நம்புவான் என நினைக்கிறார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

சொல்லி தெரிவதில்லை பொய் சொல்லும் கலை🤣.

இவர்களுக்கும் போலிகாவை கொண்டு வந்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

மொக்கு தமிழன் எதை சொன்னாலும் நம்புவான் என நினைக்கிறார்கள்.

 

 

தீவிர திராவிட எதிர்ப்பாளர்களாக இருப்பவர்களுக்கு எப்பவும் வரைபுகளோடு பிரச்சினை வருவதைக் கண்டிருக்கிறேன். சில ஆண்டுகள் முன்பு, தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய காலாண்டு வீதத்தை (quarterly growth - அது ஏறு முகமாக இருந்த காரணத்தினால்😂) "காலாண்டு வீதங்களைக் கூட்டி 12 ஆல் பிரித்துத் தான் ஏற்றுக் கொள்வேன்" என்று அடம் பிடித்த கணித வித்துவான்களும் இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை தமது வாக்கு அரசியலுக்காக உபயோகிக்கும் சீமான் தரப்புகள் எப்போதும் திராவிடத்தை ஈழப்போராட்ட எதிரியாக சித்தரிப்பதன் மூலம் தமது அரசியலை நடத்துகின்றனர். காமராஜர், ம.பொ.சி, பசும் பொன் முத்துராமலிங்கம் போன்றவர்களே பச்சைத் தமிழ் தலைவர்கள் போலச் கதையளக்கின்றனர். 

எனது கேள்வி ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில்  இவர்களால் பச்சைத் தமிழர்களாக  கூறப்படும் காமராஜர், ம.பொ.சி, பொன்போமுத்துராமலிங்கம்   போன்வறர்களில் வழிவந்தவர்கள் ஏராளமாக  தமிழ் நாட்டில் பலர் இருந்தும்  திராவிட இயக்கத்தினர் மட்டுமே ஈழப்போராளிகளுக்கும்  உறுதுணையாக இருந்ததும் பெரியார்  திடல் ஈழ ஆதரவு கூட்டங்கள் தளமாக இருந்ததும் ஏன்?

காமராஜரின் ஆதரவாளர்கள் எவரும  ஈழப்பிரச்சனையை திரும்பிக் கூட பார க்கவில்லை. 

 பாண்டி பஜார் சம்பவத்தின் பின்னர் பிரபாகரன், உமா மகேஸவரன் ஆகியோரை தம்மிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு இந்திய அரசை வலியுறுத்தியபோது  அவர்களை  இலங்கையிடம் ஒப்படைக்க கூடாது என்று பாரிய அழுத்தத்தை அன்றைய எம். ஜி.ஆர் அரசுக்கும் மத்திய அரசுக்கும் கொடுத்தவர்கள் திராவிட இயக்க தோழர்களே. அன்று திமுகவில் இருந்த வை கோ உடனடியாக சிறைச்சாலை சென்று பிரபாகரனை சந்தித்து அதை தமிழ் நாட்டில் பேசு பொருளாக்கி ஈழ போராளிகளுக்கான ஆதரவு எழுச்சி அலையை தமிழ் நாட்டில் உருவாக்கினர்.  1991 ம் ஆண்டின் பின்னர் தடா- பொடா என்ற போன்ற கடுமையான சட்டங்களை மீறி விடுதலைப்புலிகளை ஆதரித்தவர்கள் கொளத்தூர் மணி. வைகோ, சுபவீ போன்ற திராவிட இயக்கத்திரே.  அவர்களை இன்று தமிழின எதிரிகளாக சித்தரிப்பது நன்றி கெட்ட தனம் அல்லவா? 

அவர்கள் எல்லோரும. 100 வீதம் அப்பழுகற்றவர்கள் என்று நான் இங்கு கூறவரவில்லை. ஆனால் அவர்கள் எமக்கு செய்த பல நன்மைகளை மறந்து  அவர்களை எதிகளாக சித்தரிக்கும் சுயநல அரசியல் பொய் பிரச்சாரத்தை ஈழமக்கள் ஆதரிப்பது பக்கா நன்றி கெட்ட தனம். 

Edited by island

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.