Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தில் மூழ்கியது முல்லைத்தீவு!

adminDecember 17, 2023
Mullai-flood.jpg?fit=650%2C433&ssl=1

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது பெய்கின்ற சிறிய மழையிலும் மிக பெரிய அழிவுகளை எதிர் நோக்குகின்ற நிலைமைக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்

இவ்வாறான பின்னணியில் நேற்று மதிய வேளையில் திடீரென பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன் இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம இளைஞர்கள் இராணுவத்தினர் இணைந்து மக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதோடு, வான் பாய்கின்ற நீர் மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளமையினால் மக்கள் மிக அவதானமாக செயல்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று (16.12.23) மாலை 4 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன, கூழாமுறிப்பு,கனகரத்தினபுரம் காதலியர்சமனங்குளம், தண்டுவான, ஒட்டுசுட்டான் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 166 குடும்பங்களை சேர்ந்த 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் , மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 104 குடும்பங்களை சேர்ந்த 323 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்கள் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு, உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 283 குடும்பங்களை சேர்ந்த 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 880 குடும்பங்களை சேர்ந்த 2687 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களை சேர்ந்த 201 பேருமாக 73 குடும்பங்களை சேர்ந்த 243 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள் கிராம அலுவலர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர் .

 

https://globaltamilnews.net/2023/198689/

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்........!  😴

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தால் ஒட்டுசுட்டானில் பலர் பாதிப்பு : 102 பேர் பாதுகாப்பாக மீட்பு

17 DEC, 2023 | 09:42 AM
image
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் முல்லைத்தீவு மாட்ட மக்கள் அழிவுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு  மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.       

அந்தவகையில் சனிக்கிழமை (16)  திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தில் உள்ள  32 குடும்பங்களை சேர்ந்த 102 பேர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டு கருவேலன்கண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேரும்  முல்லைத்தீவு மாவட்டத்தில்  மொத்தமாக 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_20231216_21261816.jpg

IMG_20231216_21272743.jpgIMG_20231216_21272743.jpg

IMG_20231216_21273898.jpg

IMG_20231216_21255345.jpg

https://www.virakesari.lk/article/171855

  • கருத்துக்கள உறவுகள்

Flood Warning ️ Mullaitivu | Rj Chandru Report

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் தொடரும் மழை : 56 கிராமங்கள் பாதிப்பு, 68 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைப்பு

18 DEC, 2023 | 11:33 AM
image
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக  பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சி. கோகுலராஜா தெரிவித்துள்ளார். 

இதில் 56 கிராமங்களை சேர்ந்த 976 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இவர் மேலும் தெரிவித்தார். 

received_1854612701661336.jpeg

அதிகமாக குளங்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து குளங்களும் நீர் நிரம்பி வழிகின்றன முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

இந்த குளங்களின் கீழ் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் வெள்ள நீர் வழிந்து ஓட முடியாத நிலையில் பல்வேறுபட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 56 கிராம சேவகர் பிரிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 976 குடும்பங்களைச் சேர்ந்த 3010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 

received_347973544616175.jpeg

இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் 68 குடும்பங்களை சேர்ந்த 222 அங்கத்தவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள் அதிகளவான வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் 15 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் குடியிருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பண்டாரவன்னி  கிராமத்தைச் சேர்ந்த 63 குடும்பங்களை சேர்ந்த 201 அங்கத்தவர்கள் கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் புளியங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் ஐந்து குடும்பங்களை சேர்ந்த 21 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு சமைத்த உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கும்  நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளனர்.

received_1435706027352863.jpeg

கிராமத்தில் உள்ள மக்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் கிராம சேவையாளர்களுக்கு தகவல்களை வழங்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது. 

இவ்வாறு மழைநீர் தேங்குவதற்கான காரணம் நீரோட கூடிய பாதைகள் பகுதிகளில் அத்துமீறிய கட்டிடங்கள் மற்றும் அத்துமீறிய செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதால் அதிகளவான நீர் வழி செல்ல முடியாத நிலையில் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. 

received_740165974133223.jpeg

தற்போது பெய்து வரும் பருவ மழையானது இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு  தொடரக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதால் மேலும் ஒரு காற்றழுத்தம் ஒன்று வங்கக் கடலில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதால் மக்கள் இதனை கவனத்தில் கொண்டு அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  பிரிவு அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/171923

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 1039 பேர் இடைத்தங்கல் முகாம்களில்!

672110105.jpeg

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1586 குடும்பங்களை சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  341 குடும்பங்களை சேர்ந்த 1039 பேர் இடைத்தங்கல் முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


 முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில்(18) மாலை 4 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 286 குடும்பங்களை சேர்ந்த 952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு ,கனகரத்தினபுரம் ,காதலியார்சமணங்குளம் ,பழம்பாசி, தண்டுவான்,ஒட்டுசுட்டான் ,பேராறு ,மணவாளன்பட்டமுறிப்பு , கணேசபுரம்,முத்துவிநாயகபுரம்  ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 354 குடும்பங்களை சேர்ந்த 1076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ,கொக்கிளாய் வடக்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை,தண்ணீறூற்று, கணுக்கேணிமேற்கு,அளம்பில் வடக்கு,மாமூலை ,அம்பலவன்பொக்கணை,வண்ணாங்குளம் , குமாரபுரம் ,முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு ,அளம்பில் தெற்கு ,உப்புமாவெளி   ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 352 குடும்பங்களை சேர்ந்த 1097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம்,உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் ,மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம் ,அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம்,துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 254 குடும்பங்களை சேர்ந்த 782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம்,மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 336 குடும்பங்களை சேர்ந்த 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில்  4 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1586 குடும்பங்களை சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளர்.  பாதிக்கப்பட்டவர்கள்  ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களை சேர்ந்த 24 பேரும் புளியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும்,   பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களை சேர்ந்த 223 பேரும் கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலையில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும், கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 61 குடும்பங்களை சேர்ந்த 178 பேரும் கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும், முத்துவிநாயகர்புரம் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 45 குடும்பங்களை சேர்ந்த 131 பேரும் முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமிலும்,  பேராறு கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட23குடும்பங்களை சேர்ந்த 65 பேரும் , பேராறு தமிழ் வித்தியாலயத்தில்   உள்ள இடைத்தங்கல் முகாமிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு  கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 2 குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 135 குடும்பங்களை சேர்ந்த 408 பேருமாக மன்னாகண்டல் அ.த.க பாடசாலையில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு மாவட்டத்தில் 7  இடைத்தங்கல் முகாம்களில்  341 குடும்பங்களை சேர்ந்த 1039 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்  பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர்கள்   பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் ,சுகாதார ஊழியர்கள் , இராணுவத்தினர், கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.  

 

https://newuthayan.com/article/முல்லைத்தீவு_மாவட்டத்தில்_கனமழையால்_1039_பேர்_இடைத்தங்கல்_முகாம்களில்! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்நேரங்களில் காச்சல்,மலேரியா போன்ற பல நோய்களும் பரவக்கூடிய காலம்......மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்........!

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலை

Published By: VISHNU   20 DEC, 2023 | 09:33 PM

image
 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

IMG-20231220-WA0163.jpg

மழை சற்று குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றதனால் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG-20231220-WA0165.jpg

அந்தவகையிலே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் புளியங்குளம் பண்டாரவன்னி கூழாமுறிப்பு பேராறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் செவ்வாய்க்கிழமை (19) மாலை முதல் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்து வீட்டினுள் வசித்து வருகின்றனர்.

IMG-20231220-WA0167.jpg

இருப்பினும் அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளான குடிநீர் மலசல கூட வசதிகளை பாவிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

IMG-20231220-WA0161.jpg

குடிநீர் கிணறுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் நீரை பருக முடியாத நிலையிலும் நீர் தேங்கியுள்ள நிலையில் மலசல கூடங்களை பாவிக்க முடியாத நிலைகளும் இடங்களில் காணப்படுகிறது.

IMG-20231220-WA0145.jpg

வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் நனைந்து விட்டதாகவும் உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் குறிப்பாக மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகளுக்குரிய கற்றல் உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் நனைந்துள்ளதாகவும் அவ்வாறான பின்னணியில் மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டில் இருந்த பல பொருட்கள் வெள்ளநீருடன் அடித்து செல்லப்பட்டு இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

IMG-20231220-WA0143_1_.jpg

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவல் அடிப்படையில் இன்று (20) காலை 9.30 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 333 குடும்பங்களை சேர்ந்த 1076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

IMG-20231220-WA0157.jpg

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு ,கனகரத்தினபுரம் ,காதலியார்சமணங்குளம் ,பழம்பாசி, தண்டுவான், ஒட்டுசுட்டான் ,பேராறு ,மணவாளன்பட்டமுறிப்பு , கணேசபுரம்,முத்துவிநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 592 குடும்பங்களை சேர்ந்த 1748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை , தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ,கொக்கிளாய் வடக்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, தண்ணீறூற்று, கணுக்கேணி மேற்கு, அளம்பில் வடக்கு, மாமூலை ,அம்பலவன் பொக்கணை,வண்ணாங்குளம் , குமாரபுரம் ,முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு ,அளம்பில் தெற்கு ,உப்புமாவெளி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான் ,மல்லாவி,யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம் ,அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம்,துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம்,மாணிக்கபுரம்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு மற்றும் வள்ளிபுனம் மன்னாகண்டல் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 472 குடும்பங்களை சேர்ந்த 1277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 15 குடும்பங்களை சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அனர்த்த நிலைமை ஓரளவு குறைந்து வருகின்ற நிலையில் தற்போது 2 இடைத்தங்கல் முகாம்களில் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊழியர்கள்,பிரதேச சபை ஊழியர்கள் ,சுகாதார ஊழியர்கள் , இராணுவத்தினர், கிராம அலுவலர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் மக்களுக்கான சமைத்த உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/172174

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் கனமழையால் 2,327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிப்பு!

22 DEC, 2023 | 10:18 AM
image
 

கனமழையினால் ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக  முல்லைத்தீவு மாவட்டத்தில் 2327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையில்  412  குடும்பங்களை சேர்ந்த 1,215 பேர் இடைத்தங்கல் முகாம்களின் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறான நிலையில் மழை சற்று குறைவடைந்த நிலையில் வெள்ளநீர் வடிந்தோடிய நிலையில் ஏழு  இடைத்தங்கல் முகாம்களின் பாதுகாப்பாக  தங்க வைக்கப்பட்டிருந்த   412  குடும்பங்களை சேர்ந்த 1,215 பேரும் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளர். 

IMG-20231216-WA0188.jpg

அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்ட   இடைத்தங்கல் முகாமில் இருந்த புளியங்குளம்  கிராம அலுவலர் பிரிவின் 6 குடும்பங்களை சேர்ந்த 24 பேரும், கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் இருந்த பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவின்   63 குடும்பங்களை சேர்ந்த 201 பேரும் கருவேலங்கண்டல் கிராம அலுவலர் பிரிவின்  6 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும்  கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் இருந்த  கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவின்  73 குடும்பங்களை சேர்ந்த 203 பேரும் முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட   இடைத்தங்கல் முகாமில் இருந்த முத்துவிநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவின்  37 குடும்பங்களை சேர்ந்த 104 பேரும் தட்டயர்மலை கிராம அலுவலர் பிரிவின் 18 குடும்பங்களை சேர்ந்த 50 பேரும் பேராறு தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் முகாமில் இருந்த பேராறு கிராம அலுவலர் பிரிவின்   24 குடும்பங்களை சேர்ந்த 70 பேரும் 19.12.2023 அன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

IMG-20231220-WA0233.jpg

இதேபோன்று மன்னாகண்டல் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 173 குடும்பங்களை சேர்ந்த 498 பேரும்   கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய் வடக்கு முன்பள்ளியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் இருந்த கொக்குதொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில்  பாதிக்கப்பட்ட12 குடும்பத்தை சேர்ந்த 43 பேரும் நேற்று (21) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் . 

இவ்வாறான நிலையில்  மாவட்டத்தில் அமைக்கப்பட்ட  ஏழு இடைத்தங்கல் முகாம்களும்  முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனத்ர்த நிலைமை தொடர்பாக   முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின்  வியாழக்கிழமை  மாலை  4.30 மணிக்கு வெளியிடப்பட்ட  அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG-20231221-WA0064.jpg

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 333 குடும்பங்களை சேர்ந்த 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம்,  புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு, கனகரத்தினபுரம் ,காதலியார்சமணங்குளம், பழம்பாசி, தண்டுவான், ஒட்டுசுட்டான்,பேராறு, மணவாளன்பட்டமுறிப்பு, கணேசபுரம்,முத்துவிநாயகபுரம், தட்டையர்மலை, வித்தியாபுரம், அம்பகாமம், முத்துஐயன்கட்டுக்குளம் கற்சிலைமடு, திருமுருகண்டி    ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 795 குடும்பங்களை சேர்ந்த 2,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

IMG-20231221-WA0064.jpg

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, தண்ணீறூற்று கிழக்கு, கணுக்கேணி மேற்கு, அளம்பில்வடக்கு, மாமூலை அம்பலவன்பொக்கணை, வண்ணாங்குளம், குமாரபுரம், முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு, அளம்பில் தெற்கு, உப்புமாவெளி, கேப்பாபுலவு  மதவளசிங்கன்குளம், கொக்குத்தொடுவாய், முள்ளியவளை மத்தி  குமுழமுனை மேற்கு  ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம், அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம், துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

IMG-20231220-WA0159_1_.jpg

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு வடக்கு, விசுவமடு மேற்கு, வள்ளுவர்புரம், மன்னாகண்டல், தேராவில், இரணைப்பாலை, ஆனந்தபுரம், உடையார்கட்டு தெற்கு மல்லிகைத்தீவு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 480 குடும்பங்களை சேர்ந்த 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் கல்யாணபுர, நிக்கவெவ தக்குண, ஜனகபுர, கஜபாபுர    ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 18 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர்  பாதிக்கப்பட்டுள்ளர்.  32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது  என தெரிவிக்கப்படுகிது. 

IMG-20231216-WA0161.jpg

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேரு பகுதிகளிலும் இடையிடையே மழை பெய்துவருகிறது குறிப்பாக  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் உலருணவு பொருட்களை வழங்கி வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/172256

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.