Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 DEC, 2023 | 03:55 PM
image

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கரகுவா நாட்டிற்கு 303 இந்தியர்களுடன் பயணித்த விமானம் பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு விமானம் சென்றுகொண்டிருந்தது.

இதனிடையே, துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதா என்பதை சரிபார்ப்பதற்காகவும் செல்லும் வழியில் பிரான்ஸ் நாட்டின் வட்ரே நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானிகள் அனைவரும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது, விமான நிலையம் வந்த பிரான்ஸ் பொலிஸார், பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். துபாயில் இருந்து ஒரு விமானத்தில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நிக்கரகுவா நாட்டிற்கு செல்வது குறித்து சந்தேகமடைந்த பிரான்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயில் இருந்து ஒரே விமானத்தில் வெளிநாட்டிற்கு செல்வது மனித கடத்தல் தொடர்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிரான்ஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போதுவரை விசாரணை நீடித்து வருகிறது.

https://www.virakesari.lk/article/172333

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஏராளன் said:

300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் துபாயில் இருந்து ஒரே விமானத்தில் வெளிநாட்டிற்கு செல்வது மனித கடத்தல் தொடர்பாக இருக்கலாம்

கப்பலை வேண்டிப் போய் இறங்கின காலம் போய் விமானத்தையே அமர்த்தி அகதிகளாகப்போகும் நிலைக்கு உலகம், உலக மாந்தரை வளர்த்துவிட்டுடிருப்பதே 21ஆம் நூற்றாண்டின் பெருமையாக இருக்குமோ. மோடியின் அரசு அசுர வளர்ச்சிதான். 

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டை உடைசல் கப்பலாக இல்லாமல் ஒழுங்காய் பறக்கிற விமானமாய் பிடித்திருக்கிறார்கள்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியின் கைலாசத்திற்கு போகும் பக்தர்கள்.. பக்தைகளாக இருக்குமோ..??!

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

ஓட்டை உடைசல் கப்பலாக இல்லாமல் ஒழுங்காய் பறக்கிற விமானமாய் பிடித்திருக்கிறார்கள்......!  😁


உண்மைதான். ஆனால்,வட அமெரிக்க எல்லைக் காவற்படைகள் ஈரடுக்கு விழிப்புநிலைக்கு வந்திருக்குமே. பாவம் இவர்கள்.சொத்துகளை விற்றுவிட்டும் புறப்பட்டிருப்பர். இவர்களோடு எத்தனை இந்திய அரசினது உளவாளிகளோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு மனித கடத்தலா? 300 இந்திய பயணிகளுடன் பிரான்சில் விமானம் தடுத்து நிறுத்தம்

பிரான்ஸ் விமான நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் சென்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று பிரான்சில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது.

இந்த விமானம் மனித கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அது தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் பிரான்ஸ் ஊடகங்களில் கூறப்படுகிறது.

இந்த ஏர்பஸ் ஏ340 விமானம் துபாயில் இருந்து நிகரகுவாவின் தலைநகரான மனகுவாவுக்குச் சென்று கொண்டிருந்ததாக பிரான்சில் உள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால், புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த தகவலுக்குப் பிறகு, அது பிரான்சில் உள்ள வெட்ரி விமான நிலையத்தில் (பாரிஸிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில்) நிறுத்தப்பட்டது.

விமானத்தில் இருந்த சிலரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். இதையடுத்து விமான நிலையம் சீல் வைக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு, விமானம் நிகரகுவாவுக்கு எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பதை கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் இந்த விஷயத்தை உறுதி செய்துள்ளதோடு, இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

துபாயில் இருந்து நிகரகுவா செல்லும் இந்திய வம்சாவளி குடிமக்களை ஏற்றிச் செல்லும் விமானம், மார்னே பகுதியில் உள்ள வெற்றி விமான நிலையத்தின் தொழில்நுட்ப நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகமும் விசாரணை நடத்தி வருகிறது.

விமான பயணிகள் எங்கே?

பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம்

பட மூலாதாரம்,@INDIAEMBFRANCE

இந்த விமானம் ரோமானிய சார்ட்டர் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. விசாரணையில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க நிறுவனம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் செய்தி சேனலான பிஎஃப்எம்டிவியிடம் நிறுவனத்தின் வழக்கறிஞர் லிலியானா பகாயோகோ கூறியுள்ளார்.

இன்னும் சில நாட்களில் மீண்டும் அங்கிருந்து விமானம் புறப்பட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்சில் குற்றங்களுக்கு எதிரான தேசிய அமைப்பான ஜுனால்கோ இந்த வழக்கின் விசாரணையை எடுத்துக்கொண்டதாக பிரெஞ்சு செய்தித்தாள் 'லா மொண்டே' தெரிவித்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்தவர்கள் விமானத்தில் இருந்த அனைவரையும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், விசாரணை இன்னும் முடியவில்லை.

விமானம் பிரான்சில் தரையிறங்கிய பின்னர், பயணிகள் விமானத்திலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், சிறிது நேரம் கழித்து, பயணிகள் வெற்றி விமான நிலையத்தின் பிரதான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் தங்குவதற்கு படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. விமான நிலையம் முழுவதும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

பிரான்ஸில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகம், விமானம் குறித்த உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் பயணம் செய்தவர்கள் மனித கடத்தலுக்கு இலக்காகி இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

 
விமானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மனித கடத்தலா?

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

சமீப காலமாக, ஐரோப்பாவும் அமெரிக்காவும் தங்கள் குடியேற்ற விதிகளை கடுமையாக்கியுள்ளன. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் போன்ற காரணங்களால் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மனித கடத்தல்காரர்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்து இந்த மோசடிகளை நடத்தும் நபர்கள் சட்டவிரோதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மக்களை அழைத்துச் செல்கின்றனர்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் சிலர், இந்த மோசடி நபர்களின் உதவியுடன் விமானத்தில் நிகரகுவா போன்ற மத்திய அமெரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து தரை வழியே அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர். இதில் பலர் பிடிபட்டுள்ளனர். சிலர் இந்த முயற்சியில் உயிரையே பறி கொடுத்துள்ளனர்.

இருப்பினும், வெளியில் இருந்து வருபவர்களுக்கு இந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு குடும்பங்களை அழைத்து வருபவர்கள் ஆண்டு 38,700 பவுண்டுகள் சம்பாதிக்க வேண்டும் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இந்தச் சட்டம் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும் என்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

தற்போது, பிரிட்டனில் ஆண்டுதோறும் 18,600 பவுண்டுகள் சம்பாதிக்கும் நபர் ஒரு குடும்பத்தை அழைத்து வர முடியும்.

சில நாட்களுக்கு முன், பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி, குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க ஐந்து அம்ச திட்டத்தை அறிவித்தார்.

கடந்த வருடம் மூன்று லட்சம் பேர் பிரிட்டனுக்கு வரத் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் பிரிட்டனுக்கு வர முடியாது. 2022 இல் 7,45,0000 புலம்பெயர்ந்தோர் பிரிட்டனுக்கு சென்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c982wlwe250o

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2023 at 15:29, ஏராளன் said:

தற்போது, பிரிட்டனில் ஆண்டுதோறும் 18,600 பவுண்டுகள் சம்பாதிக்கும் நபர் ஒரு குடும்பத்தை அழைத்து வர முடியும்.

இந்த சம்பளத்தில் ஒரு மாத வீட்டு வாடகை கட்ட முடியாது சாப்பாட்டுக்கு ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   27 DEC, 2023 | 10:22 AM

image

மனித கடத்தல் முறைப்பாடு காரணமாக விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதால் பிரான்ஸில் சிக்கித் தவித்த 276 இந்தியர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மும்பையைச் சென்றடைந்துள்ளனர்.

இந்நிலையில், 27 பேர் பிரான்ஸில் தங்க அனுமதி கோரி உள்ளனர். 

லெஜெண்ட் ஏர்லைன்ஸ் விமானம் துபாயிலிருந்து 11 சிறுவர்கள் (தனியாக) உட்பட 303 பேருடன் கடந்த வாரம் நிக்கரகுவாவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பிரான்ஸின் வாட்ரி விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது.

அதில் மனித கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, பிரான்ஸ் அதிகாரிகள் அந்த விமானத்தை சுற்றி வளைத்தனர். அதில் இருந்தவர்களை விமான நிலையத்தில் தங்க வைத்தனர். பயணிகளில் இருவரிடம் பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் 4 நாட்களாக விசாரணை நடத்தினர். மேலும் பயணிகளிடம் நீதித்துறை விசாரணை நடைபெற்றது. இதில், பயணிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த விமானம் அங்கிருந்து புறப்பட அனுமதி வழங்கினர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் வாட்ரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு மும்பையை சென்றடைந்துள்ளது.

இதில் 276 பயணிகள் மட்டுமே சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களாவர். 5 சிறுவர்கள் உட்பட 25 பேர் பிரான்ஸிலேயே தங்க அனுமதி கோரியதாகக் கூறப்படுகிறது. அங்கேயே தங்கி உள்ள அவர்கள் எந்த நாட்டினர் எனத் தெரியவில்லை. சர்வதேச சட்டப்படி, அடைக்கலம் கோருவோரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது.மேலும் ஆட்களை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்திய 2 பேர் பிரான்ஸிலேயே உள்ளனர்.

இந்த விமானத்தில் மும்பை வந்த பயணிகள் காலை 8.30 மணி அளவில் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளியில் சென்ற அவர்கள் தங்கள் முகத்தை மூடியபடியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தங்கள் பயணம் குறித்த தகவலை ஊடகங்களிடம் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், “சொந்த செலவில் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்" என ஒரு பயணி தெரிவித்தார். எனினும், இதுகுறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்கள், மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கரகுவா சென்று அங்கிருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழைவதுண்டு. இந்நிலையில் தான் நிக்கரகுவா சென்ற விமானம்தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Hindutamil

https://www.virakesari.lk/article/172521

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.