Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    25 DEC, 2023 | 06:47 PM

image

(எம்.மனோசித்ரா)

உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கவனத்தில் கொள்ளாத போக்கே இன்று எம்நாட்டில் காணப்படுகிறது. ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பிரதான நள்ளிரவு ஆராதனை கட்டான - ஹல்பே புனித பிரான்ஸிஸ் சேவியர் தேவாலயத்தில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பேராயர்,

இலங்கையில் ஒருவேளை உணவைக்கூட சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் 8 மில்லியன் மக்கள் காணப்படுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.

அந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காகியிருக்கக் கூடும். எதிர்கால கனவுகள் அனைத்தும் சிதைந்து போன நிலையிலேயே நாட்டிலுள்ள பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு மத்தியில் வரி சுமைய அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து, தொழில்களை இழந்து, பிள்ளைகளின் பசியைப் போக்க முடியாத பலரும் இன்று இந்த நாட்டில் உள்ளனர்.

இவ்வாறான நிலையிலும் உலகில் ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றமை உண்மையில் கவலைக்குரியதாகும்.

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கூட கவனத்தில் கொள்ளாத, நீதியும் நியாயமும் அற்ற நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அதிகார மோகத்திலுள்ளவர்களாலேயே நாடு ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறானவர்களால் இம்முறை நத்தார் பண்டிகையில் வறுமையிலுள்ளவர்களுக்கு கை கொடுப்பதற்கானதாக அமைந்துள்ளதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே இல்லாதோருக்கும் வறியவருக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு சகல கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கமல்லாத மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/172471

  • கருத்துக்கள உறவுகள்

இராசபக்ச ஆட்சியை வரவேற்கிறாறோ? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இராசபக்ச ஆட்சியை வரவேற்கிறாறோ? 

இப்போது இவர் பெரிதாக கதைக்கிறார். இவர்தான் ராஜபக்சக்களை வளர்த்து விடடவர். பொதுவாக எந்த இனவாத சிங்கள அரசியல் வாதிகளையும் தாராளமாக ஆதரித்தவர்.

தமிழர்களை அழிப்பதென்றால் இவருக்கு மிகவும் சந்தோசம். இப்போது அதே நிலைமை அவருக்கும் அவர் சார்ந்த இனத்துக்கும்  வந்துள்ளதால் போர்க்கொடி தூக்குகிறார்.

எல்லாம் காலம் செய்யும் கோலம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா...........

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Cruso said:

சாத்தான் வேதம் ஓதுதல் என்பது இதுதானோ? (காடினல் மல்கம் ரஞ்சித் )

🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

சாத்தான் வேதம் ஓதுதல் என்பது இதுதானோ? 

🤣

நாம் போப்பணடவரை பின் பின்பற்றுபவர்கள்  என்பது உங்களுக்கு தெரியாதா? அப்படி எல்லாம் சொல்ல மாட்டொம். 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

நாம் போப்பணடவரை பின் பின்பற்றுபவர்கள்  என்பது உங்களுக்கு தெரியாதா? அப்படி எல்லாம் சொல்ல மாட்டொம். 😜

போப்பாண்டவரின் எதைப் பின்பற்றுகிறீர்கள்? அவர் அணிந்திருக்கும் ஆடையையா? 

சும்மா போங்கள்,அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல்.

😁 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

போப்பாண்டவரின் எதைப் பின்பற்றுகிறீர்கள்? அவர் அணிந்திருக்கும் ஆடையையா? 

சும்மா போங்கள்,அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல்.

😁

 உண்மையாகவே எனக்கு அவரின் பாவாடை பிடிக்கும். ஓர் பாலின திருமணம் பிடிக்கும், ஹோமோசெக்ஸ் பிடிக்கும் , இப்படி நிறைய எழுதலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Cruso said:

 உண்மையாகவே எனக்கு அவரின் பாவாடை பிடிக்கும். ஓர் பாலின திருமணம் பிடிக்கும், ஹோமோசெக்ஸ் பிடிக்கும் , இப்படி நிறைய எழுதலாம். 😂

நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனது  கரிசனைக்குட்பட்டது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனது  கரிசனைக்குட்பட்டது அல்ல. 

நமது ஆன்மீக தலைவர் போப்பாண்டவர் சொல்லும்போது செய்யாமல் இருக்க கூடாதுதானே. கீழ்ப்படியுங்கள். 😛

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Cruso said:

நமது ஆன்மீக தலைவர் போப்பாண்டவர் சொல்லும்போது செய்யாமல் இருக்க கூடாதுதானே. கீழ்ப்படியுங்கள். 😛

நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனது  கரிசனைக்குட்பட்டது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நீங்கள் ஓரினச் சேர்க்கையாளர் என்பது எனது  கரிசனைக்குட்பட்டது அல்ல. 

ஆனாலும் நமது ஆன்மீக தலைவர் போப்பாண்டவர் கரிசனை உள்ளவராக இருக்கிறாரே?😂

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Cruso said:

ஆனாலும் நமது ஆன்மீக தலைவர் போப்பாண்டவர் கரிசனை உள்ளவராக இருக்கிறாரே?😂

தங்களைப் போன்றோரிடல் அவர் கரிசனையுடன் இருப்பது நல்ல விடயம்தானே,......

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தங்களைப் போன்றோரிடல் அவர் கரிசனையுடன் இருப்பது நல்ல விடயம்தானே,......

ஆமாம் அவரின் ஆசீவாதம் எப்போதுமே எமக்கு இருக்கிறது. இயேசு சொன்னார் குருடனே குருடனுக்கு வழி காட்டும் ஆன்மீக தலைமைகள் என்று . மக்கள்தான்  அறியாமல் செய்கிறோம் என்றால் ஆன்மீக தலைமையும் அதனை ஆசீர்வதிக்கிறது. வாழ்க போப்பாண்டவரின் ஆன்மீக தொண்டு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

ஆமென். 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ராஜபக்ஸ கும்பல் அடித்த 52 பில்லியன் காசினை பறிக்க முடியாத ஏலாவாளிகள் நீங்கள் .
தில் இருந்தால் அதனை செய்து மக்கள் மேல் சுமத்தும் வரியை இல்லாமல் செய்யுங்கள் .

இன்னுமொரு அரளயவை செய்து கள்ளரை விரட்டி அடியுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

ஆமென். 

ஆமென் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? அதாவது போப்பாண்டவரின் இந்த மேன்மையான தொண்டை ஆதரிக்கிறீர்கள். ஆமென். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/12/2023 at 17:36, ஏராளன் said:

உயர் நீதிமன்றத்தின் ஆணையை துளியளவும் கூட கவனத்தில் கொள்ளாத, நீதியும் நியாயமும் அற்ற நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அதிகார மோகத்திலுள்ளவர்களாலேயே நாடு ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உங்களைப் போன்ற ஆன்மீகவாதிகள் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி போராட வேண்டும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

உங்களைப் போன்ற ஆன்மீகவாதிகள் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறங்கி போராட வேண்டும்.🤣

ஊதி ஊதி எரியவிட்ட சிங்கள இனவாதத்தின் பெறுபேறுகளைத் தாம் அனுபவிக்கும்போது வலிக்கிறதுபோலும். இவர்களை ஆன்மீகவாதி என்று சுட்டுவது பொருந்தாதென நினைக்கிறேன். இவரொரு இனவாதி.இல்லையென்றால் இனஅழிப்புக்கு ஆதரவாகச் செயற்பட்டிரார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.