Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு திம்புக்கோட்பாடுகளான, தமிழர் தேசம், தமிழர் தாயகம், தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபட வேண்டும்

 
ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு குறித்து பல்வேறு புலம்பெயர்அமைப்புகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய பொது நிலைப்பாட்டில் (Common Principles) அடிப்படை விடயங்களாக அமைய வேண்டும்”
— விசுவநாதன் ருத்ரகுமாரன்

NEW YORK, UNITED STATES, January 2, 2024 /EINPresswire.com/ -- 

2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு செய்தியில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, திம்புக்கோட்பாடுகளான, தமிழர் தேசம், தமிழர் தாயகம், தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம்ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஈழத்தமிழரின் அரசியல் தீர்வு குறித்து பல்வேறு புலம்பெயர்அமைப்புகள் ஒருங்கிணைந்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் 23 ஆம் திகதி உருவாக்கிய பொது நிலைப்பாட்டில்(Common Principles) உள்ளடக்கப்பட்ட பின்வரும் விடயங்கள், அடிப்படை விடயங்களாக அமைய வேண்டும் என்பதனைஇப்புத்தாண்டுச் செய்தியில் வலியுறுத்த விரும்புகிறேன். 

* 1) இலங்கை தீவின் வடகிழக்கு பிராந்தியத்தில் (வடக்குமற்றும் கிழக்கு மாகாணம்) 1948 க்கு முன்பிருந்து வாழ்ந்தமக்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் பங்கேற்புடன் ஒருஜனநாயகவழி, மற்றும் அமைதியான நிரந்தர அரசியல் தீர்வுகாண்பதற்காகத் தமிழர்களின் பெருவிருப்புக்களைப் பூர்த்திசெய்யும், சர்வதேச அளவில் நடத்தப்பட்டதும் மற்றும்கண்காணிக்கப்பட்டதுமான, பொது சன வாக்கெடுப்பு ஒன்றை அனுமதித்தல். 

* 2) இலங்கைத் தீவின் வடகிழக்கு பகுதியில் இடைக்காலசர்வதேச பாதுகாப்பு பொறிமுறை.

* 3) இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தைநீக்குதல்.

* 4) இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல்நீதிமன்றத்திற்கு இலங்கையில் நிலவும் நிலைமையைபரிந்துரைத்தலுடன், இனப்படுகொலைக் குற்றத் தடுப்பு மற்றும்தண்டனை மற்றும் சித்திரவதைக்கு எதிரான தடுப்புதொடர்பான மாநாட்டின் அடிப்படையின் கீழ் சர்வதேசநீதிமன்றத்தின் முன் இலங்கைக்கு எதிரான சட்ட நடவடிக்கை.

இந் நிலைப்பாடுகளைத் தமிழர் தரப்பு தனது அடிப்படைநிலைப்பாடுகளாகக் கொள்ளல் முக்கியமானது. இந்நிலைப்பாடுளில் தமிழர் தேசம் சமரசம் செய்து கொள்ளமுடியாது. இங்கு நடைமுறைச் சாத்தியம் என்று கூறி இந்நிலைப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முயற்சிகளும் எதிரிக்குச் சேவகம் செய்யக் கூடியவை என்பதனை நம்மவர்கவனத்தில் வைத்துக் கொள்ளல் அவசியம்.


அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழ் மக்களுக்கு நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது ஆங்கிலப்புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வுஅடைகிறேன்.

புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கும் இத் தருணத்தில், கடந்தஆண்டு தொடர்பான சில கருத்துக்களையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.

கடந்து போன ஆண்டில் தமிழ் மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்கமாற்றங்கள் ஏதும் நடைபெறவில்லை.

உலக அரங்கில், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலின்கொடூரமான தாக்குதல்களால் சொல்லணாத் துயரங்களைஅனுபவித்த ஆண்டாக கடந்த ஆண்டு அமைந்திருந்தது.

கடந்த ஆண்டில் பாலஸ்தீன மக்கள் அனுபவித்த துயரம் நாகரிகஉலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் அமைந்ததோடு, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்காலத்தில் நமது மக்கள்சந்தித்த பெருந்துயரையும் எமக்கு நினைவு படுத்தியிருந்தது. மலர்ந்துள்ள புத்தண்டிலாவது இம் மக்களின் வாழ்வுபாதுகாப்பானதாக மாற வழிவகை பிறக்கும் என நம்புவோம்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக அமைப்புகள் எவையும்நீதியின் பக்கம் நின்று உலகப்பிரச்சினைகள் எதனையும் தீர்த்துவைக்கும் திராணியற்றவை என்பதனை தற்போதுபாலஸ்தீனம்தில் நடைபெறும் நிகழ்வுகள் மீண்டுமொருமுறைவெளிப்படுத்தி நிற்கின்றன.

எமது சூழலை எடுத்துக் கொண்டால், கடந்த ஆண்டில்அனைத்துலக அரசுகள் சிலவற்றின் அரவணைப்புடன் ‘ஹிமாலயா பிரகடனம்’ என்ற பெயரில் நடைபெற்ற அரசியல்பித்தலாட்டம் ஒன்றையும் நாம் காண நேர்ந்தது.

இப் பிரகடனமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்றகாட்சிகளும் எந்தவகையி்லும் தமிழ் மக்களின் நன்மைகருதியதாக அமையவில்லை.

தமிழ் டயாஸ்பொறவின் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டையும், தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமை போராட்டத்துக்குசார்பான நிலைப்பாட்டையும் நீர்த்துப் போகச் செய்ய விரும்பும்அனைத்துலக அரசுகள் சில தமக்குச் சேவகம்செய்யக்கூடியவர்களை தமிழர் தரப்பில் இருந்து இப்பிரகடனத்துக்காகத் தெரிவு செய்துள்ளது போலத் தெரிகிறது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் எந்த வகையிலும்தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களைப் பிரதிபலிப்பவர்கள்அல்ல.

இதனால், இவர்களின் எந்தப் பிரகடனமும் தமிழ் மக்களுக்கு ஒருபொருட்டு அல்ல. இதனைத் தாயகத்திலும் டயாஸ்பொறாவிலும்இருந்து வெளிவந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன.இதேவேளை, தென்னிலங்கையிலும். அனைத்துலகதூதுவராலயங்கள் மட்டத்திலும் இப் பிரகடனம் குறித்தும், அதனைத் தொடர்ந்த காட்சிகள் குறித்தும் ஓரு வகையானபரபரப்புக் காட்டப்பட்டதை உணர முடிந்தது.

அனைத்துலக தூதுவராலயங்கள் காட்டிய இப் பரபரப்பின்பின்னால் தமிழ் டயாஸ்பொறாவின் தமிழ்த் தேசிய அரசியலைமழுங்கடிக்கும் ஆர்வமும், ரணில் விக்கிரசிங்காவைசிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதியாக்கும் விருப்பும்புதைந்திருக்கலாம். ஆனால், இந்த ‘ஹிமாலயப் பிரகடன’நகர்வால் ஓரணு கூட அசையப் போவதில்லை என்பதேநடைமுறை உண்மையாக அமையும்.

பிறந்திருக்கும் புத்தாண்டில், உலகளாவியரீதியில் முக்கியமானசில நாடுகளில் தமது ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கானதேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கியஇராச்சியம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும்தேர்தல்கள் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பன.

ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியாவின்பாராளுமன்றத்துக்கு 2024 இல் நடைபெறும் தேர்தல்கள்கூடுதல் கவனத்துக்கு உரியவை. தமிழ்நாட்டிலும், இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் குறித்த கவனத்தை ஏற்படுத்துவதில்தமிழர் தரப்பு கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். அரசியல்கட்சிகள் மத்தியில் நமக்குச் சாதகமான நிலைப்பாட்டைஎடுக்கச் செய்து, அவற்றை தேர்தல் விஞ்ஞாபனங்களில்உள்ளடக்க உள்ள வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்.

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலும் இவ் வருடம்நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் தமிழ் மக்கள் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மக்கள் என்ற நிலையில் இருந்து தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிந்தித்தல்வேண்டும்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்நாலாவது அரசவைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது தேர்தலில்எவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களித்தார்களோ, அதே போன்று இம்முறையும் புலம்பெயர் ஈழத்தமிழர்தேசம்பங்களித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவிழுமியங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும் என இப்புத்தாண்டுச்செய்தியில் உங்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

உலகின் தற்போதைய அனைத்துலக கட்டமைப்புகள்நீதியின்பாற்பட்டு இயங்குபவையாய் இல்லை. இதனால், நீதியின்பால் நின்று செயற்படக்கூடிய புதிய கட்டமைப்புகள்உருவாக்கப்பட வேண்டும். இது நடைமுறைக்குக் கடினமானஇலட்சிய நிலைப்பட்ட கோரிக்கையாக இருக்கலாம்.இருப்பினும், புதிய மாற்றத்துக்கான அவசியம் காலத்தின்தேவையாக உள்ளது. உலகின் ஏனைய அரசற்ற தேசங்கள், அறிவுஜீவிகள். அனைத்துலக சிவில் சமூகம், சமூகவலைத்தளங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுடன்இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் புதியமாற்றத்துக்கான முயற்சியில் ஈடுபடும்.

நிறைவாக, மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத் தமிழர் தேசம்தனது இலட்சியத்தில் முன்னோக்கிப் பயணிக்கும் என்றநம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போமாக!

* தமிழர் தலைவிதி தமிழர் கையில்
* தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

https://www.einpresswire.com/article/678677981/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு செய்தியில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன், ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, திம்புக்கோட்பாடுகளான, தமிழர் தேசம், தமிழர் தாயகம், தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம்ஆகியவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். 

IMG-5374.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை விடுவதற்கு என்றே  ஒரு அமைப்பு. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

IMG-5374.jpg

பல்லாண்டுகள் கழித்தும் அறிக்கைகள் வெளியிட அனைத்து தமிழ் தேசிய அமைப்புகளும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாயகம், தேசியம், தன்னாட்சிவடகிழக்கு இணைப்பு போன்ற  சொற்களை உள்ளீடு செய்து ஒரு நிலையான கட்டளையை (Standing order)  செய்து வைப்பது நல்லது.   இவர்கள் இல்லாத காலத்திலும் இவ்வாறான அறிக்கைகள் வந் து கொண்டிருக்கும். 😂

போலி துவாரகா நாடகம் பற்றி வாய் திறக்காமல், மவுனமாக இருந்ததன் மூலம் ஒத்து ஊதிய  அமைப்புகள் எல்லாமே தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்யும் அமைப்புகளே. அதில், இந்த நட்டுக் கழன்ற அமைப்பும் விதி விலக்கல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

போலி துவாரகா நாடகம் பற்றி வாய் திறக்காமல், மவுனமாக இருந்ததன் மூலம் ஒத்து ஊதிய  அமைப்புகள் எல்லாமே தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்யும் அமைப்புகளே. அதில், இந்த நட்டுக் கழன்ற அமைப்பும் விதி விலக்கல்ல.

 

41 minutes ago, ஈழப்பிரியன் said:

 

பகிர்வுக்கு நன்றி.

என் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

பல்லாண்டுகள் கழித்தும் அறிக்கைகள் வெளியிட அனைத்து தமிழ் தேசிய அமைப்புகளும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாயகம், தேசியம், தன்னாட்சிவடகிழக்கு இணைப்பு போன்ற  சொற்களை உள்ளீடு செய்து ஒரு நிலையான கட்டளையை (Standing order)  செய்து வைப்பது நல்லது.   இவர்கள் இல்லாத காலத்திலும் இவ்வாறான அறிக்கைகள் வந் து கொண்டிருக்கும். 😂

அந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் வரும்படி அவர்கள் சேர்த்தால் சிறப்பு.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.