Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பிரதிநிதிகள் நாளை (11) முதல் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என்றும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகளை ஆராய்வதற்காக இந்த குழு விஜயம் செய்யவுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னர், நாட்டின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளும் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சுகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடல்களை முன்னெடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/287721

 

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் அதிகாரிகளையே யுத்த காலத்தில் சமாளித்த இவர்களுக்கு, இந்த பொருளாதார யுத்த காலத்தில் IMF கார்களை சமாளிப்பது ஒன்றும் கஷடமான காரியம் இல்லை.

இந்த அதிகாரிகள் உண்மையாகவே நீதியாக வேலை செய்பவர்களாக இருந்தால் நாட்டில் கொள்ளையடித்த பணத்தை மீட்பதட்கு அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும்.

சும்மா வந்து உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு போவதில் பயனில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMF பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை

Digital News Team 

imf-300x200.jpg

சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி குழுவினருடன் இவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அவர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தின் அண்மைய போக்குகளை ஆய்வு செய்வதே சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் முக்கிய நோக்கமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியுடன் நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் குறித்த குழு கண்காணிக்கவுள்ளதாக நிதி அமைச்சு மேலும் கூறியுள்ளது.

https://thinakkural.lk/article/287835

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!

14 JAN, 2024 | 03:37 PM
image

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (13) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச்  சந்தித்து கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் பீட்டர் ப்ரூயர் (சிரேஷ்ட பணித் தலைவர்), சர்வத் ஜஹான் (IMF வதிவிடப் பிரதிநிதி), சோபியா ஜாங் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), ஹுய் மியாவ் (சிரே்ஷ்ட நிதித்துறை நிபுணர்), ஹோடா செலிம் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), டிமிட்ரி ரோஸ்கோவ் (சிரேஷ்ட பொருளாதார நிபுணர்), சந்தேஸ் தூங்கானா (பொருளாதார நிபுணர்), மற்றும் மனவே அபேயவிக்ரம (உள்ளூர் பொருளாதார நிபுணர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG-20240114-WA0007__1_.jpg

IMG-20240114-WA0006.jpg

IMG-20240114-WA0005.jpg

https://www.virakesari.lk/article/173944

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட சர்வதேச நாணயநிதிய பிரதிநிதிகள்

Published By: VISHNU   15 JAN, 2024 | 07:15 PM

image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

01__3_.jpeg

01__2_.jpeg

01__6_.jpeg

01__7_.jpeg

01__9_.jpeg

01__8_.jpeg

01__11_.jpeg

01__10_.jpeg

01__13_.jpeg

01__12_.jpeg

01__19_.jpeg

01__18_.jpeg

01__22_.jpeg

01__20_.jpeg

01__25_.jpeg

01__24_.jpeg

01__23_.jpeg

01__28_.jpeg

01__26_.jpeg

01__30_.jpeg

01__29_.jpeg

https://www.virakesari.lk/article/173999

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IMF பிரதிநிதிகள் – இலங்கை அதிகாரிகள் இன்று கலந்துரையாடல்

imf-srilanka.jpg

நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்(IMF) குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று(16) ஆரம்பமாகவுள்ளது.

6 பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து, பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்துள்ளமை தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

இக்குழுவினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

https://thinakkural.lk/article/288185

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜோர்ஜியாவாவை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

17 JAN, 2024 | 05:07 PM
image

சுவிற்ஸர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்  சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva) மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் (Gita Gopinath) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் உடனிருந்தார்.

https://www.virakesari.lk/article/174186

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2024 at 04:55, ஏராளன் said:

6 பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களை ஒரு வழி பண்ணாமல் போகமாட்டாங்க போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மக்களை ஒரு வழி பண்ணாமல் போகமாட்டாங்க போல.

வெள்ளைகாரனுகள் சிலோனுக்கு எந்த பிரச்சனையாய் வந்தாலும் தேத்தண்ணியும் வடையும் முக்கிய ஐயிட்டம்......முந்தி கொஞ்சநாள் கிளிநொச்சிக்கு அடிக்கடி போய் தேத்தண்ணியும் வடையும் அமுக்கிக்கொண்டு வேவு பார்த்தினம்.....இப்ப?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சிடம் வலியுறுத்திய விடயம் !

Published By: DIGITAL DESK 3   18 JAN, 2024 | 02:27 PM

image

பொருளாதார மீட்சிக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்கள் மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பொருளாதார மீட்சிக்காக அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/174239

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.