Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

தற்போது தான் இந்த அவியலை பார்த்தேன் 

இது பற்றி கொஞ்சம் விரிவாக எதிர் பார்க்கிறோம் 😭

அது கருணாவே கூறியது.  ஒவ்வொரு  தரப்பும் தமது தமது நடவடிக்கைகளை முடிவுகளை நியாயப்படுத்த ஏதோ ஒரு காரணத்தை கூறும். அதிலொன்றுதான் இதுவும்.  எமக்கு உள்ள சொந்த அறிவை பயன்படுத்தி  இவ்வாறாக தம்மை நியாயப்படுத்த ஒவ்வொரு தரப்புகள் கூறும் காரணங்களை காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்து பார்பபதே உண்மையை அறியும் வழி. 

சமஸ்டி உடன்பாடு ஏற்பட்டடது 2002 டிசம்பர். கருணா பிரிந்தது 2004 மார்ச் . ஆகவே சமஸ்டி உடன் பாட்டுக்கும் கருணா பிரிவுக்கும. தொடர்பு இருப்பதாக நான் நம்பவில்லை. 

  • Replies 196
  • Views 15.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • 1997 ல் மாகாண சபையை தவற விட்டோம். 2005ல் சமஷ்டியை தவறவிட்டோம்.  2005ல் கைகூடி வந்த சமஷ்டியை/மாநில சுயாட்சியை ஏற்றிருந்தால் இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்தான் தென்னாசியாவின் இராஜாக்கள். ஏனென்றால்

  • சமஷ்டி(உள்ளக) என்கிற அடிப்படையில் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பும் இணங்கியிருந்தன என்பதுதான் என் புரிதல்.  தற்போது அது தொடர்பான தரவுகள் என்னிடம் இல்லை. முடிந்த அளவு தேடிப்பார்த்த

  • நீங்கள் கேட்கும் மாற்று திட்டம் என்பது,    பேச்சுவார்த்தை முறிவடையும் தறுவாயில் மீண்டும் முன்னரை விட கடுமையாக ஆயுதப் போராட்டத்தை நடத்தி தமிழீழம் என்ற இலட்சியத்தை  அடையலாம் அல்லது அதற்குரிய பலத்தை முன்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, island said:

சமஸ்டி உடன்பாடு ஏற்பட்டடது 2002 டிசம்பர். கருணா பிரிந்தது 2004 மார்ச் . ஆகவே சமஸ்டி உடன் பாட்டுக்கும் கருணா பிரிவுக்கும. தொடர்பு இருப்பதாக நான் நம்பவில்லை. 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

கந்தையா 

போராட்டமும்  வேண்டாம், பேச்சுவார்த்தையும் வேண்டாம்,  சும்மா குந்தொயிருப்போம் என்கிறீர்கள். 

😩

போராட்டம் போரடிய. முறை. பிழை என்று சொல்ல வேண்டாம் அது சரியானதாகும் தமிழ் ஈழம் அரசையும் பகுதியளவில். நிறுவிக்கொண்டு போரடினார்கள். 

இந்த உங்களுக்குகான. தீர்வு என்று ஒரு தீர்வு முன் வைக்கும் தீர்வை தரக்கூடிய தகுதியை கொண்டிருக்கும் தரப்புடன் பேசலாம்   

குந்தியிருக்காது  முஸ்லிம்கள் போல்  நாலு திருமணம் செய்து  இருபது பிள்ளைகள் பெறுங்கள்  தமிழன் பெரும்பான்மையாக முடியும்  இலங்கையை ஆளவும் முடியும்   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஒஸ்லோ பேச்சின் பின்னணியில் கருணா சமஸ்டியை ஏற்றுக்கொள்ள விரும்பியதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று hotel  திரும்பி  இலங்கையில் தலைமையுடன் தொடர்புகொண்டபோது கருத்து வேறுபாடு எழுந்தது  என்று கதைகள் உலாவியதாக ஞாபகம். 

(இப்ப நீங்கள் தாழிச்சுக் கொட்டுங்கோ) 

கந்தையர் நாய் கறிச்சட்டியை கவ்விக்கொண்டு கொல்லையைச் சுத்தி ஓடுறமாதிரி ஓடுவாரே  தவிர, ஒரு உருப்படியா ஒன்றையும் சொல்ல மாட்டார். 

ஆமாம் உலாவிய கதைகள். இது தான் உள்ளது உங்களிடம். 

பேச்சு வார்த்தை நடந்தநேரம் அவர் பிரான்சில் இருந்த நாட்கள் முழுவதும் எம்முடன் தான் இருந்தார். அப்பொழுது அவர் அது பற்றி எம்முடன் இப்படி ஏதும் பேசவில்லையே. சோனிகளை ஒழிக்க வேண்டும் என்று புலிகளின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்டத்தில் அல்லவா அதிகம் கவனம் செலுத்தினார். (எமக்கே வெறுப்பு வரும் அளவிற்கு)

ஆனால் கடைசியில் யாரின் கையைப்பிடித்தபடி ஓட்டம் பிடித்தார்????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Guten Morgen   கந்தையர்! 
அன்றைய இன்றைய அரசியல்வாதிகள் என்ன செய்திருக்க வேணும்? என்ன செய்திருக்கலாம் எண்டுறியள்?

அரசியலை முழு நேரமாக. செய்து இருக்க வேண்டும்   சட்டத்தரணிகள் பாராளுமன்றம் புகுந்து இருக்க கூடாது  ஏனெனில் பாராளுமன்றத்தை நீதிமன்றம் என்று நினைத்து பேசுவார்கள். 😂

இரண்டு தடவைகள் மட்டுமே ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி வகிக்க வேண்டும்    ஏனைய தமிழ் இளைஞர்களுக்கு வழி விட்டு அரசியல் கற்று கொள்ள சந்தர்ப்பங்கள் வழங்கி அவர்களின் சிந்தனைகள் எண்ணங்களை செவி மடுத்து அலசி ஆராய்ந்து இருக்க வேண்டும்    மரணம் அடையும் வரை பாராளுமன்றம் போக வேண்டும் என்று நினைத்து இருக்க கூடாது   

சிங்ஙளவனை விட எமக்கு எது இல்லையே அதனை பெற முயற்சிகள் செய்து இருக்க வேண்டும்  அதாவது இனப்பெருக்கம் ஊக்குவிப்பு ஊக்கத்தொகை  போன்றவற்றை செய்து இருக்கலாம்  இதனை  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு  அவர்களின் தலைவர் அசாத் அலி  செய்து உள்ளார்   ஐனதிபதி  விசாரணை கமிஷன் முன் அவரை விசாரணை செய்வதை பார்க்கலாம் 

தமிழ் மக்களை பயமுறுத்திய நிலையில் வைத்து இருக்க படாது  மககளுடன். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் தவிர்த்து ஏனைய நேரங்களில் சிநேகித பூர்வமாக பழகியதை நான் பார்க்கவில்லை    

பேச்சுவார்த்தைகளில் எல்லாளன் ஆண்ட பகுதியையும். தருமாறு கேட்டிருக்கணும்  எப்போதும் கேட்பதை விட குறைத்து தான் பெற முடியும்  அதுவும் சிங்களவனிடம். கேட்பதையே பெற முடியாது  எனவே  அனுரதபுரத்தையம். தமிழன் ஆண்ட பகுதி தமிழ் பகுதி ஆகவே தாருங்கள்”   என்று கேட்டுயிருக்கலாம்  😂🤣

மலையகம் தமிழர்கள் முஸ்லிம்கள். மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள்  ஒரே கூட்டணியாக இணைந்து  இலங்கையில்  பிரதமராக ஐனதிபதியாக  முயற்சிகள் செய்ய வேண்டும்  

அதாவது  தமிழன் இலங்கையை ஆளுவான். ஆள முடியும்  என்று எடுத்து காட்டுதல் வேண்டும்   இலங்கை தமிழர்களை புலம்பெயர் தமிழர்கள்  இலங்கையில் வாழும் தமிழர்கள் என்று பிரிக்க கூடாது  தமிழன்  எங்கே வாழ்ந்தாலும். தமிழன் தான்   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

1) போராட்டம் போரடிய. முறை. பிழை என்று சொல்ல வேண்டாம் அது சரியானதாகும் தமிழ் ஈழம் அரசையும் பகுதியளவில். நிறுவிக்கொண்டு போரடினார்கள். 

2) இந்த உங்களுக்குகான. தீர்வு என்று ஒரு தீர்வு முன் வைக்கும் தீர்வை தரக்கூடிய தகுதியை கொண்டிருக்கும் தரப்புடன் பேசலாம்   

3) குந்தியிருக்காது  முஸ்லிம்கள் போல்  நாலு திருமணம் செய்து  இருபது பிள்ளைகள் பெறுங்கள்  தமிழன் பெரும்பான்மையாக முடியும்  இலங்கையை ஆளவும் முடியும்   😂

1) யாரும் போராட்டத்தையோ அதன் வழிமுறையையோ குற்றம் சொல்லவில்லை 

2) இலங்கை அரசைத் தவிரஉ வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். வேறு யாராவது இருக்கின்றனரா? 

3) உங்கள் வயதிற்கு ஏற்ற நகைச்சுவை இது  அல்ல என்பது என் அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

1) ஆமாம் உலாவிய கதைகள். இது தான் உள்ளது உங்களிடம். 

2) பேச்சு வார்த்தை நடந்தநேரம் அவர் பிரான்சில் இருந்த நாட்கள் முழுவதும் எம்முடன் தான் இருந்தார். அப்பொழுது அவர் அது பற்றி எம்முடன் இப்படி ஏதும் பேசவில்லையே. சோனிகளை ஒழிக்க வேண்டும் என்று புலிகளின் கொள்கைகளுக்கு எதிரான ஆட்டத்தில் அல்லவா அதிகம் கவனம் செலுத்தினார். (எமக்கே வெறுப்பு வரும் அளவிற்கு)

3) ஆனால் கடைசியில் யாரின் கையைப்பிடித்தபடி ஓட்டம் பிடித்தார்????

1) சமஸ்டி தொடர்பாக பேசப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

2) கருணா உங்களுடன் இருந்தார் /இல்லை, உங்களுடன் என்ன பேசினார் என்பது இங்கே விவாதிக்கப்படவில்லை

3) இதுவும் எங்கள் கரிசனைக்கு உட்பட்டதல்ல. 

விதைத்து, காவல் காத்து, விளைச்சலை அறுப்பது வீட்டிற்கு கொண்டுவருவதற்கே. 

இடைவழியில் கள்ளன் அறுத்துவிட்டான், சூட்டிற்கு நெருப்பு வைத்துவிட்டான் என்று கூறுவது கமக்காறனுக்கு அழகல்ல. 

(கமக்காறன்= ஈழத் தமிழர்)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

1) யாரும் போராட்டத்தையோ அதன் வழிமுறையையோ குற்றம் சொல்லவில்லை 

2) இலங்கை அரசைத் தவிரஉ வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். வேறு யாராவது இருக்கின்றனரா? 

3) உங்கள் வயதிற்கு ஏற்ற நகைச்சுவை இது  அல்ல என்பது என் அபிப்பிராயம். 

2,...இருக்கிறார்கள்   யாரா??? இந்தியா .. தமிழர்கள் பிரச்சனையை. விரைவில் தீருங்கள். இல்லாவிட்டால்  தமிழ் ஈழம் அமைத்து கொடுப்போம்  இலங்கை தமிழருக்கு  என்று ஒரு மிரட்டல் போதும்   நிச்சயம் சுயாட்சி கிடைக்கும்  ....ஏன் சொல்லுகிறார்கள் இல்லை??பயமா?? இல்லை இல்லாவே இல்லை   தமிழ்நாட்டிக்கும். சுயாட்சி கொடுக்க வேண்டி வரும்  அதாவது இப்போது உள்ளதை விட மேலதிகமாக 

3.    நகைச்சுவை இல்லை நாங்கள் பெரும்பான்மை ஆக  வேண்டியது அவசியமாகும்  நாங்கள் இலங்கையில் ஆட்சி அமைக்கும் வல்லமையுள்ளவர்கள் ஆகும் போது  கூட்டணி அல்லது தனியாக  பிரிந்து போகும் படி  கோருவார்கள் இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

1) சமஸ்டி தொடர்பாக பேசப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

2) கருணா உங்களுடன் இருந்தார் /இல்லை, உங்களுடன் என்ன பேசினார் என்பது இங்கே விவாதிக்கப்படவில்லை

3) இதுவும் எங்கள் கரிசனைக்கு உட்பட்டதல்ல. 

விதைத்து, காவல் காத்து, விளைச்சலை அறுப்பது வீட்டிற்கு கொண்டுவருவதற்கே. 

இடைவழியில் கள்ளன் அறுத்துவிட்டான், சூட்டிற்கு நெருப்பு வைத்துவிட்டான் என்று கூறுவது கமக்காறனுக்கு அழகல்ல. 

(கமக்காறன்= ஈழத் தமிழர்)

அது சரி தான்   போராட்டம் தொடங்கிய போது  இல்லாத பல தடங்கல்கள் போராடி கொண்டுடிருக்கும் போது தமிழ் ஈழம் இந்த மலரும் என்ற நிலையில்  வந்தது  

இயக்கம்  பயங்கரவாதிகள் என்று பல நாடுகளில் தடை செய்யப்பட்டது 

ஆயுதங்களையும் உணவுகளையும் மருந்துகளையும் உரிய நேரம் பெற்று கொள்ள முடியவில்லை 

இலங்கைக்கு பல  நாடுகள் உதவியாக இருந்தது  

கண்டவன் நின்றவன். எல்லாம் வெறும் கையுடன் நின்ற இலங்கையுடன் பேசு பேசு என்றார்கள்  

மேற்படி  தடங்கல்கள் இல்லை எனில் போராட்டம் வெற்றி பெற்று இருக்கும்  

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

கந்தையா,

தமிழீழம் மலரும் நிலை என்பது,  “அரசியல் ரீதியில் எமக்கு சாதகமான நிலை உலகில் ஏற்பட்டு உலக நாடுகள் பலவற்றால்,  குறைந்தது சக்திவாய்த நாடுகளான மேற்கு நாடுகளாலாவது தமிழீழம் என்ற நாடு அங்கீகரிக்கப்படும் நிலை” ஆகும். அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கான சமிஜ்கைகளாவது இருந்திருக்க வேண்டும். ஒரு நாட்டை உருவாக்குவதென்றால் அந்த அங்கீகாரமே இன்றியமையாதது. 

அந்த வகையில் தமிழர் போராட்டத்தில் தமிழீழம் மலரும் நிலை என்று எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.  

விடுதலைப்புலிகள் பல வெற்றிகளைப் பெற்று இராணுவநிலையில் பலமாக இருந்த  காலப்பகுதியில் கூட தமிழீழம் மலரும் என்ற நிலை உலகில் இருக்கவில்லை என்பதே நிதர்சனம்.  இராணுவ பலம் உச்சதில் இருந்த காலப்பகுதியில் கூட அரசியல்/ ராஜதந்திரப் பலம் தமிழரிடம் இருக்க வில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

1) சமஸ்டி தொடர்பாக பேசப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

2) கருணா உங்களுடன் இருந்தார் /இல்லை, உங்களுடன் என்ன பேசினார் என்பது இங்கே விவாதிக்கப்படவில்லை

3) இதுவும் எங்கள் கரிசனைக்கு உட்பட்டதல்ல. 

விதைத்து, காவல் காத்து, விளைச்சலை அறுப்பது வீட்டிற்கு கொண்டுவருவதற்கே. 

இடைவழியில் கள்ளன் அறுத்துவிட்டான், சூட்டிற்கு நெருப்பு வைத்துவிட்டான் என்று கூறுவது கமக்காறனுக்கு அழகல்ல. 

(கமக்காறன்= ஈழத் தமிழர்)

விதைத்து வயலில் நின்றவன் மட்டுமே பேசமுடியும். வரம்பில் நின்று வம்பு வளர்த்தவர்கள் அல்ல அல்ல அல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

விதைத்து வயலில் நின்றவன் மட்டுமே பேசமுடியும். வரம்பில் நின்று வம்பு வளர்த்தவர்கள் அல்ல அல்ல அல்ல.....

உண்மைச் சம்பவம். 👇

அவர் ஒரு ஆரம்பகால ஆயுதப் போராட்டத்தின் முக்கியஸ்தர்களில்  ஒருவர். சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டு, ஆனையிறவு, பலாலி, குருநகர் ஐந்து மாடி இராணுவ முகாம்களில் வைத்திருந்து, வெலிகடைக்கும் இறுதியில் மகசின் சிறைச்சாலையில் என  ஏறக்குறைய ஐந்து வருடங்கள் சிறையில் கழித்தவர். பின்னர் இடயில் கைவிடப்பட்ட கல்வியைத் தொடர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்திருந்தார். மீண்டும்  உயிராபத்து காரணமாக 2000களில் வட அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்திருந்தார். 

அவர் வட அமெரிக்கா வந்து சில மாதங்களில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டைத் தட்டிய போராட்டத்திற்கு பணம் சேகரித்த சிலர் போராட்டத்திற்கு பண உதவி செய்யும்படி இவரை கேட்டிருக்கின்றனர. அவரோ, தான் இங்கே வந்து சில மாதங்களே ஆகியிருக்கின்றன. ஆதலால் தன்னால் தற்போது உதவி செய்ய முடியாது என மறுத்திருக்கிறார. வந்தவர்களோ விட்டபாடாயில்லை. 

தாங்களே ஆயுதம் தூக்கி அடிபட்ட ஆட்கள் என்கிற வகையில் அவிழ்த்துவிட்டதுடன் ஒருவகையில் மிரட்டவும் செய்திருக்கின்றனர். இறுதியில் அவர் தனது சுயரூபத்தைக் காட்டியவுடன் ஓடியவர்கள்தான் இன்றுவரை திரும்பி வரவேயில்லை. 🤣

விசுகர், 

பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டிய கதைதான் உங்கள் எழுத்தைப் பார்த்தவுடன் நினைவிற்கு வந்தது. 

ஆமை நூறு முட்டையிட்டும் அமைதியாகச் செல்லுமாம் ஆனால் ஒரு முட்டையிட்ட கோழி கொக்கரித்து ஊரெல்லம் காட்டிக் கொடுக்குமாம். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

கந்தையா,

தமிழீழம் மலரும் நிலை என்பது,  “அரசியல் ரீதியில் எமக்கு சாதகமான நிலை உலகில் ஏற்பட்டு உலக நாடுகள் பலவற்றால்,  குறைந்தது சக்திவாய்த நாடுகளான மேற்கு நாடுகளாலாவது தமிழீழம் என்ற நாடு அங்கீகரிக்கப்படும் நிலை” ஆகும். அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கான சமிஜ்கைகளாவது இருந்திருக்க வேண்டும். ஒரு நாட்டை உருவாக்குவதென்றால் அந்த அங்கீகாரமே இன்றியமையாதது. 

அந்த வகையில் தமிழர் போராட்டத்தில் தமிழீழம் மலரும் நிலை என்று எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.  

விடுதலைப்புலிகள் பல வெற்றிகளைப் பெற்று இராணுவநிலையில் பலமாக இருந்த  காலப்பகுதியில் கூட தமிழீழம் மலரும் என்ற நிலை உலகில் இருக்கவில்லை என்பதே நிதர்சனம்.  இராணுவ பலம் உச்சதில் இருந்த காலப்பகுதியில் கூட அரசியல்/ ராஜதந்திரப் பலம் தமிழரிடம் இருக்க வில்லை. 

இதில் எற்றுகொள்ளக்கூடிய கருத்துகள் உண்டு”  அப்படியென்றால் இலங்கைக்கு எந்தவொரு நாடும் போருக்கு உதவியாக இருக்கவில்லை  புலிகள் போரில் வென்று தங்களுடைய பகுதிகளை தொடர்ந்து நிர்வாகம் செய்து வந்தால்????

34 minutes ago, Kapithan said:

ஆமை நூறு முட்டையிட்டும் அமைதியாகச் செல்லுமாம் ஆனால் ஒரு முட்டையிட்ட கோழி கொக்கரித்து ஊரெல்லம் காட்டிக் கொடுக்குமாம். 

ஏனென்றால் ஆமைக்கு கொக்கரிக்கும். ஆற்றல் இல்லை  கோழிக்கு உண்டு”  🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

ஏன் இந்த வேண்டாத வேலை. 

விடயங்களை புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லையென்றால் விட்டுவிடுங்களேன். Please 😭

என்னிடம் பிழை இல்லை  நாங்கள் மனிதர்கள்  எங்களது போராட்டம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்  நீங்கள்  தான் பறவைகள் மிருகம்களை புகுத்தியது    புகுத்தாமால்  வாதங்களை முன் வைக்கவும்.  

  • கருத்துக்கள உறவுகள்

On 18/1/2024 at 14:39, Kandiah57 said:

என்னிடம் பிழை இல்லை  நாங்கள் மனிதர்கள்  எங்களது போராட்டம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்  நீங்கள்  தான் பறவைகள் மிருகம்களை புகுத்தியது    புகுத்தாமால்  வாதங்களை முன் வைக்கவும்.  

விசுகரது எழுத்தில் போராட்டம் மக்களுக்கானது என்பது மறைந்து, போராட்டம் போராடியவர்களுக்கானது அத்துடன் அது தொடர்பாக வேறு எவரும் கதைக்க முடியாது எனும் ஒற்றைச் சிந்தனை தொக்கு நிற்கிறது. 

அதனால்தான் கொஞ்சம் கடினமாக கருத்துரைக்கப்பட்டது. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

புலிகளால் , அவர்களது வெற்றிடத்திற்கு பின்னால் காத்திரமான மக்களுக்காய் போராட கூடிய ஒரு அரசியல்வாதியை கூட உருவாக்க தெரிந்திருக்கவில்லை /உருவாக்கவில்லை /விருப்பமில்லை 

அனைத்து கட்சிகளும் சேர்ந்த (புலிகளின் எதிரிகளையும் கூட சேர்த்து) கூட்டமைப்பின் உருவாக்கம். 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

அவசியமற்ற விடயங்களுக்குள் விவாதம் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. 

விசுகரது எழுத்தில் போராட்டம் மக்களுக்கானது என்பது மறைந்து, போராட்டம் போராடியவர்களுக்கானது அத்துடன் அது தொடர்பாக வேறு எவரும் கதைக்க முடியாது எனும் ஒற்றைச் சிந்தனை தொக்கு நிற்கிறது. 

அதனால்தான் கொஞ்சம் கடினமாக கருத்துரைக்கப்பட்டது. 

😏

அப்படியானால் மக்களில் பிழை சரி சொல்லுங்கள்

புலிகளில் உரோமம் புடுங்குறீர்கள். புடுங்கினால் ????

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ரதி said:

புலிகளால் , அவர்களது வெற்றிடத்திற்கு பின்னால் காத்திரமான மக்களுக்காய் போராட கூடிய ஒரு அரசியல்வாதியை கூட உருவாக்க தெரிந்திருக்கவில்லை /உருவாக்கவில்லை /விருப்பமில்லை 

வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்   அப்படியானாவர்கள்.   இலங்கையில் இருந்து அரசியல் செய்ய இலங்கை அரசு அனுமதிக்குமா  ?? பாதுகாப்பு வழங்கும?? இல்லையே ! எனக்கு தெரிந்த  பத்து பேர் வரை  2009.  ஆறாம் மாதத்தின் பின்  ஆயுதம் ஏந்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுளளார்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

தமிழீழம் மலரும் நிலை என்பது,  “அரசியல் ரீதியில் எமக்கு சாதகமான நிலை உலகில் ஏற்பட்டு உலக நாடுகள் பலவற்றால்,  குறைந்தது சக்திவாய்த நாடுகளான மேற்கு நாடுகளாலாவது தமிழீழம் என்ற நாடு அங்கீகரிக்கப்படும் நிலை” ஆகும். அல்லது அங்கீகரிக்கப்படுவதற்கான சமிஜ்கைகளாவது இருந்திருக்க வேண்டும். ஒரு நாட்டை உருவாக்குவதென்றால் அந்த அங்கீகாரமே இன்றியமையாதது. 

உங்கள் எண்ணம் தவறு.

எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன.

நான் நினைக்கிறேன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களை அல்லது இன்னமும் புலிகளின் பயணம் இருக்கு என்றபடியாலோ என்னவோ யாருமே வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

புலிகளால் , அவர்களது வெற்றிடத்திற்கு பின்னால் காத்திரமான மக்களுக்காய் போராட கூடிய ஒரு அரசியல்வாதியை கூட உருவாக்க தெரிந்திருக்கவில்லை /உருவாக்கவில்லை /விருப்பமில்லை 

ரதி கடைசி நேரத்தில் கடைசி ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாது விட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு விடையாக இருந்திருக்கும்.

இதை அறிந்திருந்த இந்தியாவே அதை முறியடித்து அத்தனை பேரையும் கொன்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

புலிகளில் உரோமம் புடுங்குறீர்கள். புடுங்கினால் ????

புலிகளில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் எவருக்கும்  இல்லை.

ஆனால் ஆய்வு செய்யும்போது புலிகளைத் தவிர்க்க முடியாது. இது உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன். 

அதுதவிர, போராட்டத்திற்கும், புலிகளுக்கும் நீங்கள் மட்டுமே உரிமையாளர் எனும் உங்கள் சிந்தனைப் போக்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. 

உங்கள் கோபத்தில் நியாயம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

புலிகளில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் எவருக்கும்  இல்லை.

ஆனால் ஆய்வு செய்யும்போது புலிகளைத் தவிர்க்க முடியாது. இது உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன். 

அதுதவிர, போராட்டத்திற்கும், புலிகளுக்கும் நீங்கள் மட்டுமே உரிமையாளர் எனும் உங்கள் சிந்தனைப் போக்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. 

உங்கள் கோபத்தில் நியாயம் இல்லை. 

நான் மட்டுமே உரிமையாளர் என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் தூற்றுதல்களுக்கு முன்னர் ஓரளவேனும் பங்கு இருக்கணும். அதற்கு தமது பங்கை சொல்லணும். இல்லை பொத்திக்கொண்டு இருக்கணும். 

இங்கே வந்து தமிழனா பிறந்தேன் கேள்வி கேட்பேன் என்பதெல்லாம் வெறும் வசனமே.

மிகப்பெரிய தியாகம் மற்றும் தம்மையே ஈகை செய்தவர் மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள். தயவு செய்து. இல்லை என்றால் என்னிடம் இருந்து நற்சொற்கள் வராது வரக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில் அவர்களுடன் 15 வருடங்கள் அவர்களுடன் நின்றவன். அது  மட்டும் அல்ல உங்கள் கருத்துப்படி அதில் இறங்கி நின்றவன். எனது வாழ்வின் பெரும் பகுதியை பெரும் செல்வத்தை கொடுத்தவன். நானே அவர்களின் எந்த குறையும் கண்டதில்லை. பார்த்ததில்லை. குறிக்கோள் ஒன்றிற்காகவை நின்றார்கள். அது மட்டுமே அவர்களுக்கு மக்களால் போராளிகளால் மாவீர்களால் கரும் புலிகளால் விடப்பட்டிருந்த ஒரேயொரு வழி. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

1) உங்கள் எழுத்து எல்லாம் விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள்அட்டுமே உரிமை கோர முடியும் என்பதாய்த்தான் இருக்கிறது 

2) இங்கே ஒருவரும் போராளிகளைத் தூற்றவில்லை. சரி பிழைகளை ஆய்வு செய்ய முற்படும் எல்லோரையும் காயடித்தே விரட்டிவிடுகிறீர்கள். இதனால் உண்மைபற்றாளர்கள் எல்லோரும் ஓடி ஒழிகிறார்கள். 

3) பொத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்? உங்களுக்குத் தரப்படும் மரியாதை என்பது உங்கள் பங்களிப்புக்கான அங்கீகாரம். அதை உங்களுக்கான அதிகாரமாக  நினைப்பீர்களானால் அது தவறு. உங்களைப்போலவே பிறருக்கும் பதிலளிக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள்

4) உங்கள் வாழ்த்துக்காகவும் Like ற்காகவும் நற்சொல்லுக்காகவும்   யாழ் களத்தில் ஒரு சிலரே உள்ளனர் . அந்த வட்டத்திற்குள் நான் இல்லை. உங்கள் நற்சொல்லுக்காக எனது கருத்தை மாற்றிக்கொள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

41 minutes ago, விசுகு said:

ஏனெனில் அவர்களுடன் 15 வருடங்கள் அவர்களுடன் நின்றவன். அது  மட்டும் அல்ல உங்கள் கருத்துப்படி அதில் இறங்கி நின்றவன். எனது வாழ்வின் பெரும் பகுதியை பெரும் செல்வத்தை கொடுத்தவன். நானே அவர்களின் எந்த குறையும் கண்டதில்லை. பார்த்ததில்லை. குறிக்கோள் ஒன்றிற்காகவை நின்றார்கள். அது மட்டுமே அவர்களுக்கு மக்களால் போராளிகளால் மாவீர்களால் கரும் புலிகளால் விடப்பட்டிருந்த ஒரேயொரு வழி. 

தனது நான்கு பிள்ளைகளை கரும்புலிகளாகக் கொடுத்த ஒரு தாயை எனக்குத் தெரியும். அவர் நிதானமாகத்தான் இருக்கிறார். 

😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.