Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு, சர்வதேச நாணய நிதியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அனபெல் லியாங்
  • பதவி, வணிகச் செய்தியாளர்
  • 16 ஜனவரி 2024, 11:15 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது.

வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும்.

ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு செய்யத்துவங்கும். இது மனித பணியாளர்களுக்கான தேவையைக் குறைக்கும், ஊதியத்தை பாதிக்கும், மேல்லும் சில வேலைகளை இல்லாமலே செய்துவிடும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அதேசமயம் வளர்ந்துவரும் நாடுகளில் செயற்கை நுண்ணறிவு 26% வேலைகளை பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு, சர்வதேச நாணய நிதியம்

பட மூலாதாரம்,IMF

‘ஏற்றத்தாழ்வுகள் மோசமடையக்கூடும்’

இதனால், ஏற்கனவே இருக்கும் பொதுவான ஏற்றத்தாழ்வுகள் மேலும் மோசமடையும் என்கிறார் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜார்ஜியேவா. சட்டம் இயற்றுபவர்கள் இந்த ‘கவலையளிக்கும்’ விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார். இல்லையெனில் சமூகச் சிக்கல்கள் மேலும் மோசமடையும் என்றார்.

“[வளர்ந்துவரும் நாடுகள்] செயற்கை நுண்ணறிவின் பலன்களை உபயோகித்துக்கொள்ளும் அளவுக்கு உட்கட்டமைப்போ திறன்மிக்க பணியாளர்களோ இல்லை. இதனால் நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கக் கூடும்,” என்கிறார் ஜார்ஜியேவா.

இந்த ஆய்வு முடிவுகள், கோல்ட்மன் சாக்ஸ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு அறிக்கை முடிவுகளை ஒத்திருக்கிறது. அந்த அறிக்கை, 30 கோடி முழுநேர வேலைகளைக் காலி செய்துவிடும் என்று கூறியிருந்தது. ஆனால், அதற்கேற்றாற்போல் புதிய வேலைகளும் உற்பத்தித்திற்ன் பெருக்கமும் இருக்கும் என்று கூறியிருந்தது.

 

யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?

பொதுவாக அதிக ஊதியம் பெறுபவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஊதியம் செயற்கை நுண்ணறிவினால் மிக அதிகமாக உயரும். ஆனால் குறைந்த ஊதியமுள்ளவர்கள் முதியவர்கள் ஆகியோரின் ஊதியம் குறையலாம் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

“இதனால் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும், பாதிக்கப்படக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சித்திட்டங்களையும் உலகநாடுகள் உருவாக்க வேண்டும்,” எ ந்கிறார் ஜார்ஜியா. “அப்படிச் செய்தால் செயற்கை நுண்ணறிவுக்கான மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வாழ்வாதாரங்களை பாதுகாப்பதாகவும், எற்றத்தாழ்வுகளை குறைப்பதகவும் அமையும்,” என்கிறார் ஜார்ஜியேவா.

ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மன்றத்தைப் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அய்வு வெளிவருகிறது. இந்த மன்றத்தில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மன்றத்தில், ChatGPT போன்ற செயலிகளின் வளர்ச்சி குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு, சர்வதேச நாணய நிதியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செயற்கை நுண்ணறிவு பாதுகப்பு குறித்த சட்டங்கள் இயற்றியுள்ளன

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த சட்டங்கள்

பல நாடுகளும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சட்டங்களை இயற்றி வருகின்றன. கடந்த மாதம் ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான உலகின் முதல் சட்டங்களை முதற்கட்டமாக முடிவுசெய்தனர்.

தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவுச் சட்டங்களை முதலில் அமுல்படுத்தியது சீனா. இந்தச் சட்டங்கள் அல்காரிதம் எவ்வாறு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் சொல்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் பைடன் மென்பொருள் உருவாக்குபவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாதுகாப்புத் தரவுகளை அரசாங்கத்துடன் பகிருந்துகொள்ளுமாறு ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார்.

அதற்கு அடுத்த மாதம், இங்கிலாந்து செயற்கை நுண்ணறிவு பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தியது. அதில் பல நாடுகளும் பாதுகாப்பான தொழில்நுட்பம் சார்ந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டன.

 
செயற்கை நுண்ணறிவு, வேலைவாய்ப்பு, சர்வதேச நாணய நிதியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது ஒரு கணினியை கிட்டத்தட்ட ஒரு மனிதனைப் போலவே செயல்படவும், எதிர்வினை ஆற்றவும் வைக்கிறது. மனிதனைப் போலவே ஒரு விஷயத்தை கணித்து, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலை கணினிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அளிக்கிறது.

கணினியைக் கொண்டு ஒரு பணியை முடிப்பதற்காக அவசியம் பின்பற்றப்பட வேண்டிய முறையான விதிமுறைகளின் தொகுப்பையும் (Algoritms), தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பெரிதும் நம்பியுள்ளது.

அலெக்சா மற்றும் சிரி போன்ற மெய்நிகர் முறையில் செயல்படும் தொழில்நுட்பங்களின் பின்னணியிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளது. இதனை கொண்டு ஸ்பாட்டிஃபை, யூடியூப் மற்றும் பிபிசி ப்ளேயரில் செயல்பாடுகளை வழிநடத்தலாம்.

அத்துடன் பயனாளர்களுக்கு எந்த பதிவைகளை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கும் இத்தொழில்நுட்பம் உதவலாம்.

வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கத்தை பகுப்பாய்வு செய்ய அமேசான் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உபயோகிக்கிறது. அத்துடன் போலி ரிவ்யூகளை களையவும் இந்த நவீன தொழில்நுட்பத்தை அமேசான் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

https://www.bbc.com/tamil/articles/c25y40x2xj0o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேலைகளை கற்று இருந்தால் என்றுமே பிரச்சனையில்லை:

1) விவசாயம்

2) சமையல் முறைகள்

3) தலை மயிர் வெட்டுதல்

3 வதை தான் கற்க முடியவில்லை, அது ஒரு தனி கலை👍

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் தொழில் வாய்ப்புக்களை பறிக்குமா?

09 MAR, 2025 | 11:02 AM

image

கேணல் ரமணி ஹரிஹரன் 

ஏ.ஐ. என்று சொல்லப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது அதிகம் பேசு பொருளாகிவிட்டது. எளிதாக விளக்கம் கூறினால் ஏ.ஐ. என்பது இயந்திரங்கள் மனிதர்களைப் போல கற்றுக் கொள்ளவும், பகுத்தறிந்து செயல்படவும் அனுமதிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். ஏ.ஐ. அமைப்புகளால் தரவைச் செயலாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், அவற்றின் நடத்தையை மாற்றியமைக்கவும் முடியும்.

ஏ.ஐ உபயோகம். ஏற்கனவே அசுர வேகத்தில் அதிகரித்து வருவதால் அதனால் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்று அறிவதில் எல்லா நாடுகளும் நாட்டம் காட்டி வருகின்றன. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியாவும் அமெரிக்காவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையொப்பம் இட்டுள்ளன.

அவற்றில் முக்கியமான ஒன்று ட்ரஸ்ட் (TRUST) என்று கூறப்படும் “மூலோபாயத் தொழில் நுட்பத்தை பயன்டுத்தி உறவை மாற்றுதல்” ஒப்பந்தமாகும். இதன்படி இந்தியாவும் அமெரிக்காவும் இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்கட்டமைப்பை விரைவுபடுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளன.

அதன் செயலாக்கம் பாதுகாப்பு, எரி சக்தி, விண்வெளி ஆகிய துறைகளைத் தவிர உயர் தொழில் நுட்பத்துறையிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் செயல்முறைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இதனால் தற்போதைய வேலைகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் உலக அளவில் வேலை வாய்ப்பில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை அனுமானிக்க கடந்த ஜனவரி 7 ஆம் தேதி உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வேலைகளின் எதிர்கால அறிக்கை: 2025 (Future of Jobs report 2025) என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலகில் உள்ள 22 தொழில்கள் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஆய்வு செய்த பிறகு தயார் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மற்றும் குறைந்து வரும் வேலைத் துறைகளின் பட்டியல்கள் உள்ளன. இவை வரும் ஆண்டுகளில் உலக சந்தையின் பல்வேறு தொழில்களில் வேலைகளின் போக்குகள் மற்றும் அவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் விவரிக்கின்றன. மக்கள்தொகை மாற்றங்கள், புவிசார் அரசியல் மோதல்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

வரும் ஆண்டுகளில் எந்தெந்த தொழில்கள் ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்து சமூக ஊடகங்களில் ஏராளமான பதிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. உலக பொருளாதார மன்ற அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்

முதலாவதாக, 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 170 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை கணித்துள்ளது. இருப்பினும், இதே கால அளவில், தோராயமாக 92 மில்லியன் பேர் வேலை இழக்க வாய்ப்புண்டு. கூட்டி கழித்துப் பார்த்தால், உலகில் 78 மில்லியன் நிகர புதிய வேலைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம்.

இவற்றில் ஐந்து வேலைகளில் ஆள்களுக்கான தேவைகள் சிறப்பான வளர்ச்சியைக் காணும். இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இலகுரக டிரக் அல்லது விநியோக சேவை ஓட்டுநர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குனர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் கடை விற்பனையாளர்கள் ஆகியவை அடங்கும்.

பல நாடுகள் மிகவும் நிலையான எதிர்காலத்திற்காக எடுத்துவரும் பசுமை முயற்சிகளால் விவசாயத் துறையில் வேலை செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இவற்றைத் தொடர்ந்து உணவு பதப்படுத்துதல் மற்றும் அதில் தொடர்புடைய தொழிலாளர்கள் கார், வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் நர்சிங் நிபுணர்கள் உணவு மற்றும் பான சேவை ஊழியர்கள் செயல்பாட்டு மேலாளர்கள்; சமூகப் பணி மற்றும் ஆலோசனை நிபுணர்கள் திட்ட மேலாளர்கள், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்வி ஆசிரியர்கள்; இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு உதவியாளர்கள் இவர்களின் தேவை அதிகரிக்கும்.

பின்வரும் வேலைகள் அடுத்த பத்தாண்டுகளில் மிக வேகமாக வளரும் என்று அறிக்கை கூறுகிறது:

செயற்கை நுண்ணறிவு மற்றும் பெருந்தரவுப் (Big data) புரட்சி இதன் பின்னணியில் இருக்கும். பெருந்தரவு நிபுணர்கள், நிதி தொழில்நுட்ப பொறியாளர்கள், இயந்திர கற்றல் நிபுணர்கள், மென்பொருள் மற்றும் பயன்பாட்டு உருவாக்குநர்கள் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை நிபுணர்கள் ஆகிய ஐந்து வேலைவாய்ப்புகள் வளரும். அதிக சம்பளம் பெறுகிறவர்களாக இவர்கள் மாறுவர்.

இதற்கு மாறாக, பல பாரம்பரிய ஆபீஸ் வேலைகள் வேகமாக குறைந்து வரும் வேலைகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. தபால் சேவை ஊழியர்கள், வங்கி காசாளர்கள் மற்றும் உதவியாளர்கள், தரவு உள்ளீட்டு செயல்முறை ஆக்குநர், நிர்வாக உதவியாளர்கள் மற்றும் நிர்வாக செயலாளர்கள் ஆகியோர் இதில் அடங்குவார்கள்.

இந்த வீழ்ச்சியடைந்து வரும் போக்கால் மிகவும் பாதிக்கப்படும் மற்றொரு வேலை கிராஃபிக் டிசைனர். ஏ.ஐ உபயோகம் ஒவ்வொரு நாளும் அதன் மாயாஜாலத்தை புதிய உயரத்திற்கு உயர்த்துவதால், இந்த படைப்பு நிபுணர்களின் வேலை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

வேலையில் தேவைப்படும் திறன்களில் கிட்டத்தட்ட 40 சதவீத மாற்றம் ஏற்பட உள்ளது. ஏற்கனவே, 63 சதவீத முதலாளிகள் அதை தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாக குறிப்பிடுகின்றனர். ஏ.ஐ. நம் வாழ்க்கையை இருண்டதாக மாற்றிவிடும் என்று எண்ண வேண்டாம்.

ஏனெனில், எதிர்காலத்தில் தேவையான மற்றும் விரும்பத்தக்கதாகக் கருதப்படும் திறன்களின் பட்டியலில், முன்னணியில் இருப்பவை மனிதர்களுக்கே உரிய பின்வரும் திறன்களாகும். அதில் பகுப்பாய்வு சிந்தனை முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மீள்தன்மை(resilience), நெகிழ்வுத்தன்மை(flexibility), சுறுசுறுப்பு(agility) ஆகியவை வரும் ஆண்டுகளில் தேவைப்படும் சில முக்கிய திறன்களாகும்.

மேலும் தலைமைத்துவம் மற்றும் சமூக செல்வாக்கு, படைப்பு சிந்தனை, ஊக்கம் மற்றும் சுய விழிப்புணர்வு கொண்டிருத்தல், தொழில்நுட்ப கல்வியறிவு, பச்சாதாபம் காட்டுதல், ஆர்வம், வாழ்நாள் முழுவதும் கற்றல், திறமை மேலாண்மை, சேவை நோக்குநிலை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவை முக்கிய திறன்களாகும்.

எனவே, வரும் ஆண்டுகளில் உலகளாவிய வேலை சந்தைப் புரட்சியின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது தான் ஒரே வழியாகும்.

பீதி தேவையில்லை. எல்லோரும் சொல்வது போல், ஏ.ஐ உங்கள் வேலையை எடுத்துக் கொள்ளாது, ஆனால், எவ்வாறு ஏ.ஐ-யை பயன்படுத்துவது என்று தெரிந்த ஒருவர் உங்கள் வேலையை எடுத்துக்கொள்ளலாம்.

(கேணல் ஹரிஹரன், தெற்காசிய பாதுகாப்பு விவகார வல்லுநர், சென்னை)

https://www.virakesari.lk/article/208671

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2024 at 11:34, உடையார் said:

இந்த வேலைகளை கற்று இருந்தால் என்றுமே பிரச்சனையில்லை:

1) விவசாயம்

2) சமையல் முறைகள்

3) தலை மயிர் வெட்டுதல்

3 வதை தான் கற்க முடியவில்லை, அது ஒரு தனி கலை👍

கோவிட் காலத்தில் மனிசிதான் எனக்கு முடிவெட்டு.பரவாயில்லை ரகம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.