Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீரருக்கு இந்திய விசா தாமதமானதால் டெஸ்டையே புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா?

ஷோயப் பஷீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம்

55 நிமிடங்களுக்கு முன்னர்

இங்கிலாந்தின் புதிய சுழற்பந்து வீச்சாளரான சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 20 வயதான, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் தற்போது இந்திய விசாவைப் பெற்றுள்ளார். அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைவார்.

எனினும், அவர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாட முடியாது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அபுதாபியில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் பங்கேற்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தபோது, சோயப் பஷீர் மட்டும் அபுதாபியில் இருந்தார்.

செவ்வாய்க்கிழமை அன்று, பஷீர் இங்கிலாந்து சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, புதன்கிழமை அவருக்கு இந்திய விசா கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

ஷோயப் பஷீர்
படக்குறிப்பு,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார் ஷோயப் பஷீர்

யார் இந்த ஷோயப் பஷீர்?

உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடும் சுழற்பந்து வீச்சாளரான ஷோயப் பஷீர், இங்கிலாந்தின் சர்ரேவில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தார்.

அவர் இதுவரை ஆறு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாட திடீரென தேர்வு செய்யப்பட்டார். இதில் வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது முதல் சர்வதேச போட்டியை இந்தியாவில் விளையாடுவார்.

சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்ததற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

 
ஷோயப் பஷீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்த விவகாரம் இப்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று அவ்வாரியம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. "சோயபிற்கு விசா கிடைத்துவிட்டது, அவர் இந்த வார இறுதியில் இந்தியா சென்று அணியில் சேருவார்".

எனினும், வியாழக்கிழமை ஐதராபாத்தில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் பஷீர் விளையாடும் வாய்ப்பு முடிந்துவிட்டது.

ஷோயப் பஷீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது

இந்தியா, இங்கிலாந்து அரசுகள் கூறுவது என்ன?

பஷீருக்கு லண்டனில் விசா வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் அவர், “இந்திய விசா வழங்குவது தொடர்பாக சில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் இந்த வழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

"இங்கிலாந்து குடிமக்கள் இந்தியாவில் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தனது அரசாங்கம் எதிர்பார்க்கிறது" என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர், செவ்வாய்கிழமையன்று கூறியிருந்தார்.

மேலும், “இதுகுறித்த விவரங்களைப் பற்றி பேச முடியாது. ஆனால் இந்திய தூதரகத்திடம் இதுபோன்ற பிரச்சினைகளை பல முறை எழுப்பியுள்ளோம்" என்று இங்கிலாந்து செய்தி தொடர்பாளர் கூறினார்.

அந்த அறிக்கையில், “பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா வழங்குவதில் இந்தியா எப்போதும் நேர்மையை கடைபிடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 
ஷோயப் பஷீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை

முதல் டெஸ்டை புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா?

கடந்த புதன்கிழமை, பஷீருக்கு விசா கிடைக்கவில்லை என்ற செய்தி வந்தபோது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "பஷீரின் பங்களிப்பு இல்லாமல் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட வாய்ப்பில்லை" என்றும் "போட்டி புறக்கணிக்கப்படும்" என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்கும் யோசனையை அணிக்கு முன்வைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் அது சர்ச்சையாக மாறியது.

“ஒரு தலைவராக, ஒரு கேப்டனாக, குழு உறுப்பினர்கள் இவ்வாறு பாதிக்கப்படும் போது, நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள், நான் அவருக்காக (பஷீர்) வருத்தப்படுகிறேன்", என்று தெரிவித்தார் பென் ஸ்டோக்ஸ்.

அதே நேரத்தில், பஷீருக்கு விசா கிடைக்காதது குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்தார்.

அவர், "பஷீருக்காக நான் வருந்துகிறேன். அவர் இங்கிலாந்து அணியுடன் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார். இது யாருக்கும் எளிதானது அல்ல" என்றார்.

"துரதிர்ஷ்டவசமாக இது பற்றிய கூடுதல் தகவல்களை வழங்க நான் விசா அலுவலகம் இல்லை. அவர் விரைவில் நம் நாட்டிற்கு வந்து, கிரிக்கெட் விளையாடுவார் என்று நம்புகிறேன்" என்றார் ரோகித் சர்மா.

 
ஷோயப் பஷீர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பாகிஸ்தானிய வீரர்களுக்கு விசாவில் சிக்கல்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நெடுங்காலமாக இருக்கும் பதற்றம் விளையாட்டுத் துறையையும் பாதித்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர், இந்தியா செல்வதில் சிரமப்படுவது இது முதல் முறையல்ல.

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்தார். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டி சுற்றுப்பயணத்திற்காக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் விசா பெறுவதில் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்தார்கள்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பிபிசியின் சிறப்பு வர்ணனையாளரான ஆதிப் நவாஸும் உலகக்கோப்பைக்காக இந்திய விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவரது குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரால் இந்தியா செல்ல முடியவில்லை.

இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது பாகிஸ்தானை வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு அவருக்கு விசா கிடைத்ததால், அவர் உலகக்கோப்பை போட்டியில் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/cx8jn34zp1yo

  • கருத்துக்கள உறவுகள்

ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

ஸ்ரொக்கை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ரியா விளையாட‌ வில்லை...........இந்திய‌ பிச்சில் விளையாடும் போது ப‌ல‌ வ‌ந்தை வீன் அடித்து விட்டு தான் மெதுவாய் அடிச்சு ஆட‌னும்...........

இந்தியா இங்லாந்தை சிம்பிலா வெல்ல‌ போகுது.................

  • கருத்துக்கள உறவுகள்

175ர‌ன் முன் நிலையில் இந்தியா கைவ‌ச‌ம் மூன்று விக்கேட் இருக்கு..........இந்த‌ போட்டியில் இந்தியா இங்லாந்தை ஈசியா வெல்ல‌ போகுது...............

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ப‌டு தோல்வி அடையும் நிலையில் இருந்து வென்று விட்டார்க‌ள்............இங்லாந் அணிக்கு வாழ்த்துக்க‌ள்😁...............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போப் துடுப்பாட்டத்திலும் ஹாட்லி பந்துவீச்சிலும் அசத்தல்; இந்தியாவை 28 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து

28 JAN, 2024 | 10:13 PM
image

(நெவில் அன்தனி)

ஹைதராபாத் உப்பல் ரஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று முடிவடைந்த இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஒலி போப் மிக நிதானத்துடன் குவித்த 198 ஓட்டங்கள், ஜோ ரூட் கைப்பற்றிய 4 விக்கெட்கள், அறிமுக சுழல்பந்துவீச்சாளர் டொம் ஹாட்லி பதிவு செய்த 7 விக்கெட் குவியல் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் நிலையில் முதலிடத்தில் உள்ள நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவும் இரண்டாம் இடத்திலுள்ள இந்தியாவும் ஒரே நாளில் சில மணித்தியாலங்கள் இடைவெளியில் இரு வேறு டெஸ்ட்களில் தோல்வி அடைந்தன.

அந்த இரண்டு அணிகளும் தத்தமது சொந்த நாட்டில் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இந்தியாவை விட 190 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்ததால் இங்கிலாந்து தொல்வி அடையலாம் என கருதப்பட்டது.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஒலி போப் 6 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 278 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகளுடன் 196 ஓட்டங்களைக் குவித்தமை போட்டியில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

அவரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து, 2ஆவது இன்னிங்ஸில் டொம் ஹாட்லியின் துல்லியமான பந்துவீச்சைக் கொண்டு இந்தியாவை 202 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்து அற்புதமான வெற்றியை ஈட்டியது.

இப் போட்டி 25ஆம் திகதி ஆரம்பமாகி இன்று 28ஆம் திகதி மாலை முடிவடைந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 246 (பென் ஸ்டோக்ஸ் 70, ஜொனி பெயாஸ்டோவ் 37, பென் டக்கட் 35, ரவிச்சந்திரன் அஷ்வின் 68 - 3 விக்., ரவிந்த்ர ஜடேஜா 88 - 3 விக்.)

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 436 (கே.எல். ராகுல் 86, யஷஸ்வி ஜய்ஸ்வால் 80, அக்சார் பட்டேல் 44, அறிமுக வீரர் ஸ்ரீஹர் பாரத் 41, ஜோ ரூட் 79 - 4 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 420 (ஒலி போப் 196, பென் டக்கட் 47, ஜஸ்ப்ரிட் பும்ரா 41 - 4 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 126 - 3 விக்.)

2801_ollie_pope_196_man_of_the_match...p

2801_tom_hartley_7_wkts_vs_india.png

இந்தியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 231 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 202 (ரோஹித் ஷர்மா 38, ஸ்ரீஹர் பாரத் 28, ரவிச்சந்திரன் அஷ்வின் 28, டொம் ஹாட்லி 62 - 7 விக்)

ஆட்டநாயகன்: ஒலி போப்

https://www.virakesari.lk/article/175021

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் Test Cricket' Ollie Pope, Tom செய்த 'Magic'; தவறை ஒப்புக்கொண்ட Rohit | India vs England

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. காபாவில் வெஸ்ட் இண்டீஸ், ஐதராபாத்தில் இங்கிலாந்து... என வெளிநாட்டு மண்ணில் மகத்தான வெற்றியை படைத்திருக்கிறது இரண்டு அணிகள்...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

62 ரன்னுக்கு 7 விக்கெட்: இந்திய அணியின் வெற்றியை இங்கிலாந்து அறிமுக வீரர் தட்டிப் பறித்தது எப்படி?

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை

ஐதராபாத்தில் இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆலி போப் பேட்டிங்கில் வலு சேர்க்க டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் இந்திய அணியை சுருட்டியிருக்கிறார். என்ன நடந்தது?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஐதராபாத்தில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.

அடுத்து களமிறங்கிய இந்தியா 436 ரன்களை சேர்த்தது. யசஷ்வி ஹெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86, ஜடேஜா 87 ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

2-வது இன்னிங்சில் தனி ஆளாக சாதித்த ஆலி போப்

190 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஒருபக்கம் இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுபுறம் களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தார் ஆலி போப். அவரைத் தவிர்த்து இங்கிலாந்து தரப்பில் எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை.

நிதானமாக விளையாடி சதத்தை பதிவு செய்தார் ஆலி போப். இந்திய அணியின் பவுலர் ஆலி போப்பை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டாகத்தான் அவரை இந்திய வீரர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. அப்போது ஆலி போப் 196 ரன்களை விளாசியிருந்தார். பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டான அவர் வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை நழுவவிட்டார்.

ஆலி போப்பின் சிறந்த பங்களிப்பால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களை சேர்த்தது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பந்துவீச்சில் அசத்திய அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே

231 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார் இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே. யஷஸ்வி ஹெய்ஷ்வால், சுப்மன் கில், ரோஹித் சர்மா, அக்சர் படேல் என அவர் வரிசையாக விக்கெட்டுகளை சாய்த்தார்.

42 ரன்னில் தொடக்க விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி அடுத்த 78 ரன்களில் 7 விக்கெட்டுகளை தாரை வார்த்துவிட்டது.

மிடில் ஆர்டரில் வந்த வீரர்களாலும் நிலைத்து ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பர் பரத்தும் ஆல் ரவுண்டர் அஷ்வினும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஆனால் அந்த கூட்டணியையும் உடைத்துவிட்டார் டாம் ஹாட்லே.

இந்தியாவின் இறுதி நம்பிக்கையாக அஷ்வின் மட்டுமே இருந்தார். அவரும் டாமின் பந்துவீச்சில் அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். பும்ராவும் சிராஜும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் டாம் ஹார்ட்லே மூலம் விக்கெட் எடுக்கச் செய்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்ட நாயகன் ஆலி போப்

இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல்முறை.

இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே அறிமுக ஆட்டத்திலேயே கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லே 131 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை அளித்தார். வெறும் 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி 5 மெய்டன் ஓவர்களை வீசியதோடு 7 இக்கெட்களையும் சாய்த்து அமர்க்களப்படுத்தினார்.

இதேபோல, சரிவில் இருந்து அணியை மீட்டு பேட்டிங்கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலி போப் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்திய மண்ணில் 2வது இன்னிங்ஸ்களில் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே 230 ரன்களை சேசிங் செய்ய முடிந்திருக்கிறது.

கேப்டன் ரோகித் பேசியது என்ன?

முதல் டெஸ்டில் கிடைத்த தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, டாப் ஆர்டர் சரிந்ததே தோல்விக்கு காரணம் என்றார்.

"190 ரன்கள் முன்னிலையில் இருந்தவரை ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ஆலி போப் மிகச் சிறப்பாக விளையாடினர். நான் பார்த்ததிலேயே இந்திய ஆடுகளத்தில் அவர் ஆடியது சிறப்பான ஆட்டங்களில் ஒன்று. 230 ரன்களை எடுத்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் முடியவில்லை. எங்கள் பேட்டிங் நன்றாக இருக்கவில்லை. லோயர் ஆர்டரில் வந்தவர்கள் போராடினார். டாப் ஆர்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்த்தினர்" என்று ரோகித் குறிப்பிட்டார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இங்கிலாந்து கேப்டன் கருத்து

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியில் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "நான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த வெற்றிகளிலேதே இந்த வெற்றிதான் மகத்தானது" என்று தெரிவித்தார்.

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

https://www.bbc.com/tamil/articles/cd1942034plo

  • கருத்துக்கள உறவுகள்
On 26/1/2024 at 01:23, பையன்26 said:

ப‌டு சுத‌ப்ப‌ல் விளையாட்டு

ஸ்ரொக்கை த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ரியா விளையாட‌ வில்லை...........இந்திய‌ பிச்சில் விளையாடும் போது ப‌ல‌ வ‌ந்தை வீன் அடித்து விட்டு தான் மெதுவாய் அடிச்சு ஆட‌னும்...........

இந்தியா இங்லாந்தை சிம்பிலா வெல்ல‌ போகுது.................

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ள முன்னாள் நியுசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மக்கலத்தின் ஆடுமுறை உத்தி, வழமையான 5 தின போட்டிகளில் ஆடும் பாதுகாப்பு முறையுடன் கூடிய  5 நாளிற்குரிய நேர்த்தியான ஆட்டம் போலில்லாமல் வழமைக்குமாறான ஆட்டமுறைமை, இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது குறிப்பாக கை மாற்றி ஆடுவது, நிலை மாற்றி ஆடுவது என.

இதே போலவே மக்கலம் ஆக்கிரோசமாக இந்த மைதானத்திலே 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார் என கருதுகிறேன், இவரது பாணியினை இங்கிலாந்து அணிக்கு கடத்தியுள்ளார், இந்த வெற்றிகளின் பின்னே சத்தமின்றி இருந்த வீரராக மககலத்தினை கருதுகிறேன்.

https://en.wikipedia.org/wiki/Bazball

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிராக வெளிப்பட்ட பலவீனம் - 'பேஸ்பால்' நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா?

ரோகித் ஷர்மா

பட மூலாதாரம்,EPA

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, மூத்த விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி ஹிந்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய அணி சொந்த மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளில் எளிதில் தோல்வியடையாது.

எட்டு ஆண்டுகளாக விராட் கோலியின் தலைமையில், இந்திய மண்ணில் இந்தியா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது, ஆனால் ரோகித் சர்மாவின் தலைமையில், ஒரே ஆண்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்திய அணி இந்தூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இப்போது ஹைதராபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராகவும் தோல்வியடைந்தது.

சொந்த மண்ணில் தோல்வியடையாத சாதனையை இந்திய அணி எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பேஸ்பால் வியூகம், இந்திய அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றத்தின் காலகட்டத்தை கடந்து செல்லும் தற்போதைய அணிக்கு வரும் காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சவால்கள் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.

தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி இதில் விளையாடாவிட்டாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஷாந்த் சர்மா, விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே போன்ற அனுபவமிக்க வீரர்கள் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறினர்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா மற்றும் கோலி கூட டெஸ்ட் போட்டியில் இருக்க மாட்டார்கள்.

இங்கிலாந்தின் 'பேஸ்பால்' நுட்பத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லையா?

ரோகித் சர்மா

பட மூலாதாரம்,REUTERS

இந்த வீரர்கள் இல்லாத பட்சத்தில், ஹைதராபாத் போட்டியில் நடந்த தோல்வியைப் போன்ற ஒரு தோல்விக்கு இந்திய அணி ரசிகர்கள் வேதனைப்பட மாட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தும், இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறை.

690 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனை விளையாடும் பதினொன்று பேரில் இருந்து வெளியேற்றியது இங்கிலாந்து அணி.

போட்டி தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கப் போவதாக இங்கிலாந்து அணி அறிவித்தது. இதில், இரண்டு வீரர்கள் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவத்தைத்தான் பெற்றிருந்தார்கள்.

உண்மையில், பந்து மற்றும் மட்டைக்கு பதிலாக ஆக்ரோஷமான சிந்தனையால் இங்கிலாந்து அணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. இதுவே பேஸ்பால் விளையாட்டின் அடிப்படைத் தத்துவம்.

சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், தோல்வியைப் பொருட்படுத்தாமல் வெற்றி பெற விளையாடுவதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்த வார்த்தைகள் காகிதத்தில் படிக்கும் போதும் காதுகளால் கேட்கும் போதும் நன்றாகத் தோன்றலாம், ஆனால், ஆடுகளத்தில் இந்த சிந்தனையை செயல்படுத்துவது மிகவும் கடினம்.

 
இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம்,REUTERS

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த வகை கிரிக்கெட்டை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.

ஒரே ஒரு தோல்விக்குப் பிறகு, அதுவும் இவ்வளவு நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள இந்திய அணியை அதிகம் விமர்சிக்க முடியாது.

இந்த தோல்விக்குப் பிறகு அணி நிர்வாகம் வெவ்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

நான்காவது இன்னிங்ஸில் 230 ரன்களை சேஸ் செய்வது அவ்வளவு கடினம் அல்ல என்று கேப்டன் ரோகித் சர்மா உணர்ந்தார். ஆனால், அவரது பேட்ஸ்மேன்கள் தைரியத்தை வெளிப்படுத்தவில்லை.

முதல் இன்னிங்ஸில் 500 ரன்கள் என்ற இலக்கை பேட்ஸ்மேன்கள் எட்டியிருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்பினார். ஏனெனில், இந்தியாவில் கடைசி இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு மேல் எடுப்பது சவாலானது.

ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் எப்படி இருக்கு?

ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம்,REUTERS

போட்டி முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஷுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்பாக பயிற்சியாளர் டிராவிட்டிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்த வீரர்கள் ஹைதராபத்தில் நடைபெற்ற இரண்டு இன்னிங்ஸிலும் சொற்ப ரன்களிலியே அவுட் ஆகி வெளியேறினர். அதேபோல, சமீபத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் அவர்கள் தங்களது திறனை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.

இந்த இரண்டு வீர்களின் டெஸ்ட் கிரிக்கெட் புள்ளி விவரங்களைப் பார்த்தால், அவர்களே அதிர்ச்சியடைவார்கள்.

விசாகப்பட்டினத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அணியில் மாற்றம் செய்து, இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை உட்கார வைத்து, ரஜத் பட்டிதாரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறைாக களமிறக்கினால், அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுவார்.

 

வெஸ்ட் இண்டீஸ் வெற்றி சொல்லும் செய்தி என்ன?

மேற்கிந்தியத் தீவுகள் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதன் மூலம், எப்போதும் எதிர் அணியினரை இலகுவாகப் பார்ப்பது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்ற செய்தியை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு கூறியுள்ளது.

இங்கிலாந்து தனது வலிமையான எதிரியை தோற்கடித்த விதம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியதை நினைவுபடுத்தியது.

ரஹானே அணி முதலில் காபாவில் நடந்த டெஸ்டில் எளிமையாக வெற்றி பெற்றது. பின்னர் தொடரையும் வென்றது.

இங்கிலாந்து 2012ல் செய்த அதே சாதனையை மீண்டும் செய்ய முடியுமா?

இந்திய மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமா?

இது அவ்வளவு சுலபமாக இருக்காது. ஏனென்றால் 2017-ல் இதேபோல் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியாவின் தொடரை வெல்லும் கனவு தகர்ந்துவிட்டது.

இந்த தொடரில் இந்தியாவின் சாதனையை எப்படியும் தக்க வைக்க ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோருக்கு அழுத்தங்கள் இருக்கும்.

இந்தியா மீண்டும் களமிறங்கி இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வெற்றி பெற்றால், இந்திய மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற மற்ற அணிகளின் ஆசை இன்னும் சில ஆண்டுகளுக்கு நிறைவேறாது என்று அர்த்தம்.

https://www.bbc.com/tamil/articles/c51w6wxxwndo

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ ம‌ச்சில் 

இந்தியா த‌ங்க‌ளுக்கு சாத‌க‌மான‌ பிச் அமைச்சு சூழ்ச்சி முறையில் வெல்ல‌ பாப்பின‌ம்..............விளையாட்டில் நேர்மை இருக்க‌னும் ஆனால் இந்தியாவில் விளையாட்டு ந‌ட‌ப்ப‌தால் அதை எதிர் பார்க்க‌ முடியாது.....................

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணியை பொறுத்தவரை பில்டப்பு கூட ..இது ஒரு அணீயை முன்னேற விடமாட்டது...ரோகித்து விளைய்யாடும்போது ..பட்டிங்கில்...சுயநிலையில் விளையாடுகிறாரா என்பதில் சந்தேகம்...இதேபோல் கில் ,இய்யரிடமும் இருக்கிறது...இந்த மூவரும்..ஆட்டமிழப்பது..அதிவிரைவு....அதன் பின் அணிசீட்டுக்கட்டுப்போல்..நிலை குலைந்துவிடும்...பந்துவீச்சாளர்களூக்கு..துடுப்பாட்டம் -000...எப்படி ரீம் உருப்படும் ..முழிப்பிருந்து டெஸ்டு மச் பார்த்தால் மனுசனுக்கு ..விசர்தான் வரும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்: பானிபூரி விற்ற சிறுவன் கிரிக்கெட்டில் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

25 ஜூன் 2023
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் விளாசி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் சேர்த்திருந்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும் அஸ்வின் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இருவரும் தொடங்கினர். இரண்டாவது நாள் ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் மூர்க்கமாக விளையாடி தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடிய 290 பந்துகளில் 7 சிக்சர்கள், 19 பவுண்டரிகளை விளாசி 209 ரன்களை சேர்த்தார். தனது இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்யத் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர் என அடித்து விளாசினார்.

இந்த இரட்டை சதத்தின் மூலம், டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இந்திய பேட்ஸ்மேனாக இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக யஷஸ்வி தனது முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த ஜூலை 2023இல் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 21 வயதே ஆன யஷஸ்வி புபேந்திர குமார் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். அந்தப் போட்டியில் அவர் 171 ரன்கள் சேர்த்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதேபோல் ஐ.பி.எல். தொடரிலும் தனது சரவெடியான ஆட்டம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஜெய்ஸ்வால் ஈர்த்தார். ஐபிஎல் போட்டியில் வளர்ந்து வரும் வீரர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மிக உயர்தர ஆட்டங்களை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

இப்படியாக பல சவால்களைக் கடந்து கிரிக்கெட்டில் சாதித்து வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், களத்துக்கு உள்ளே மட்டுமல்ல, களத்துக்கு வெளியேயும் அவர் சந்தித்த சவால்கள் ஏராளம். எத்தகைய சவால்கள் வந்தாலும் சளைக்காமல் தனது இலக்கை அவர் அடைந்துள்ளார்.

 

யார் இந்த ஜெய்ஸ்வால்?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உத்தர பிரதேசத்தில் உள்ள பதோஹியை சேர்ந்தவர் ஜெய்ஸ்வால். மும்பைக்கு வந்து, மைதானத்தில் கூடாரம் போட்டு வாழ்ந்து, பானிபூரி விற்று தற்போது இந்த நிலையை அடைந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த புகழ்பெற்ற கில்ஸ் ஷீல்ட் போட்டியில் யஷஸ்வி ஆட்டமிழக்காமல் 319 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் அவர் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

2019ல் ஜார்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில், ஜெய்ஸ்வால் 154 பந்துகளில் 203 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை தனது 17 வயதில் அவர் பெற்றார்.

இதேபோல், 2020ல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் யஷஸ்வி 400 ரன்களை குவித்திருந்தார். தொடர் நாயகன் வருதும் அவர் வசமானது. இதற்கான பலன் அதே ஆண்டில் கிடைத்தது. ஐபிஎல் தொடரில் தங்கள் அணியில் ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேர்த்துக் கொண்டது. 2022 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் ஜெய்ஸ்வாலை 4 கோடி ரூபாய் சம்பளத்துடன் அணியில் தக்க வைத்துக் கொண்டது.

முதல் தர கிரிக்கெட்டில் வெறும் 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஜெய்ஸ்வால் அமோல் மஜும்தார் மற்றும் ரஸ்ஸி மோடியின் சாதனையை சமன் செய்தார். ஜெய்ஸ்வால் 7 போட்டிகளில் 91 சராசரியுடன் இந்த மைல்கல்லை கடந்துள்ளார்.

ரஞ்சி கோப்பையின் காலிறுதி மற்றும் அரையிறுதியில் சதம் அடித்துள்ள அவர், துலீப் டிராபியின் காலிறுதியிலும் இரட்டை சதம் அடித்தார்.

 

திரும்பிப் பார்க்க வைத்த ஐபிஎல் 2023

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் முதல் மூன்று வீரர்களில் ஜெய்ஸ்வாலின் பெயரும் இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அவர், தொடரின் தொடக்கத்தில் இருந்தே ரன்களை குவித்தார். தொடக்க ஆட்டக்காரரான அவர், முதல் பந்தில் இருந்தே தனது தாக்குதலை தொடங்கி எதிரணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதிலும் ஜெய்ஸ்வாலின் பங்கு உள்ளது, ஆனால், இந்த ஆண்டு அவரது ஆட்டம் `வெறித்தனம்` ஆக இருந்தது. 1 சதம், 5 அரைசதம் உட்பட 625 ரன்களை அவர் குவித்திருந்தார். அவரது சராசரி 48.08 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 164ஆகவும் இருந்தது. மொத்தமாக 82 பவுண்டரிகள், 26 சிக்ஸர்களை ஜெய்ஸ்வால் விளாசி இருந்தார்.

இந்திய அணிக்காக விளையாட வீரர்களில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் வசம் உள்ளது. வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

முதன்முதலாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு 2020ல் கிடைத்தது. அதன் பின்னர் அவரது ஆட்டத்திறன் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. 2020 ஐபிஎல் தொடரில் விளையாட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை. 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்திருந்தார். அதன்பின், 2021 ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய அவர் 249 ரன்களையும், 2022 தொடரில் 10 போட்டிகளில் 258 ரன்களையும் அடித்திருந்தார்.

 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு சீசன்களிலும் , ஜெய்ஸ்வாலின் தொடக்கம் நன்றாகவே இருந்தது, ஆனால் விக்கெட்களை விரைவாக இழந்துவிடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்பட்டது. ஆனால், 2023 ஐபிஎல் தொடர் அவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரன்களை குவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோற்றாலும் தனிஆளாக இருந்து 124 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். அவரது ஆட்டத்தை பார்த்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா வாயடைத்து போனார். ஆட்டம் முடிந்த பின்னர் தனது பேச்சில் ரோகித் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

“ஜெய்ஸ்வால் இன்று மிகவும் மறக்கமுடியாத ஆட்டத்தை விளையாடினார். போட்டி முழுவதும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்கிருந்து இந்த பலம் வந்தது என்று நான் அவரிடம் கேட்டேன்.

பல மணி நேரத்தை ஜிம்மில் செலவிடுவதாக அவர் கூறினார். இதே ஃபார்மை அவர் தொடர வேண்டும். இது அவருக்கும் நல்லது, இந்திய அணிக்கும் நல்லது, ராஜஸ்தான் ராயல்ஸுக்கும் நல்லது’’ என்றார்.

 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பானிபூரி விற்று, பட்டினியாக தூங்கி சாதித்தவர்

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளத்தின் கூற்றுபடி, "மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் கூடாரம் போன்று ஜெய்ஸ்வால் மூன்று ஆண்டுகள் தங்கியுள்ளார். தொடக்கத்தில் பால் கடை ஒன்றில் அவர் தூங்கியுள்ளார். அதன்பின்னர் தூங்க இடம் இல்லாமல் கூடாரத்தில் தூங்கியுள்ளார். அப்போது அவருக்கு 11 வயதுதான். அவரின் கனவு முழுவதும் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது மட்டுமே”

ஜெய்ஸ்வாலின் தந்தை பதோஹியில் சிறியளவில் வியாபாரம் செய்து வந்துள்ளார். அதை வைத்து தனது இரண்டு குழந்தைகளையும் பார்த்துகொள்வது என்பது அவருக்கு கடினமாக இருந்தது. அதோடு, ஜெய்ஸ்வாலும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பினார். எனவே, அவர் மும்பை செல்ல முடிவெடுத்தப் போது அவருடைய தந்தை குறுக்கே நிற்கவில்லை.

மும்பைக்கு வந்த ஜெய்ஸ்வால், வோர்லியில் உள்ள தனது உறவினர் சந்தோஷிடம் சென்றார். ஆனால், அவரது வீடு பெரிதாக இல்லாததால், ஜெய்ஸ்வால் அங்கு தங்க வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக பால் கடையில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அதையும் பின்னர் விட வேண்டியதாயிற்று. எனவே அவர் முஸ்லிம் யுனைடெட் கிளப்பின் உரிமையாளர்களிடம் கேட்டு கூடாரத்தில் தங்க அனுமதி பெற்றார்.

ஆசாத் மைதானத்தில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் பானிபூரி விற்கும் வேலையை ஜெய்ஸ்வால் செய்து வந்தார். இதனால் அவருக்கு நல்ல பணம் கிடைத்தது. கிரிக்கெட் விளையாட பொருட்களை வாங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்கும் இந்த பணத்தை அவர் பயன்படுத்தினார்.

11 வயதாக இருக்கும்போதே, இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு அவரிடம் இருந்தது. இந்த கனவு அவருக்கு உந்துதலை கொடுத்தது. இதற்கிடையே, மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளர் சதீஷ் சமந்த், ஜெய்ஸ்வாலை உன்னிப்பாக கவனித்துவந்தார்.

ஜெய்ஸ்வாலுக்கு ஜ்வாலா சிங் நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவரின் வழிகாட்டுதலின் கீழ், ஜெய்ஸ்வால் தனது இலக்கை நோக்கி ஒரு வலுவான நகர்வை மேற்கொண்டார்.

மும்பையின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இந்தியாவின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் ஜெய்ஸ்வாலுக்கு வெறும் 17 வயதுதான்.

 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

தோனிக்கு வணக்கம் வைத்த ஜெய்ஸ்வால்

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஜெய்ஸ்வால் மகேந்திர சிங் தோனியை நோக்கி கையெடுத்து கும்பிடுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. அப்போது, சென்னை கேப்டன் தோனியும், ராஜய்ஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் டாஸ் போடுவதற்காக சென்றனர். டாஸ் போட்டு இருவரும் திரும்பியபோது, தோனியை பார்த்த ஜெய்ஸ்வால் அவரை கையெடுத்து கும்பிட்டார். தோனி அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்துவிட்டு சென்றார்.

ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்த ரஹானே

துலீப் டிராபி இறுதிப் போட்டியில் மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஒரு தனித்துவமான நடவடிக்கையை கொண்டு வந்தார், நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதும், நீங்கள் களத்தில் என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியம் என்பதை காட்டும் விதமாக இது இருந்தது. ரஹானே தனது அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் மேற்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியின் 5வது நாள் ஆட்டம் நடைபெற்றுகொண்டிருந்தது. எப்படியும் வென்று கோப்பையை கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆசையில் மேற்கு மண்டலம் அணி இருந்தது. இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து மேற்கு மண்டல அணியை வலிமைப் பெற செய்த ஜெய்ஸ்வாலுக்கு ஒழுக்கத்தின் முக்கியத்தை கற்றுக் கொடுத்த முயன்றார் கேப்டன் அஜிங்க்யா ரஹானே.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது தென் மண்டலம் 154/6 என்று இருந்தது. 529 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு அவர்கள் முன் இருந்தது. மேற்கு மண்டலத்தின் வெற்றிக்கு நான்கு விக்கெட்டுகள் தேவை.

 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கு மண்டலத்தில் இருந்து சுழற்பந்து வீச்சாளர்கள் தனுஷ் கோட்டியன் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் பந்து வீசினர். இந்த நேரத்தில் ஜெய்ஸ்வால் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டிருந்தார்.

பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வால், தென் மண்டல பேட்ஸ்மேன்களிடம் ஏதோ சொன்னது தெளிவாக தெரிந்தது. இது தொடர்பாக பேட்ஸ்மேன்கள் நடுவர்களிடம் புகார் அளித்தனர். மேற்கு மண்டல கேப்டன் அஜிங்க்யா ரஹானேவுடன் நடுவர்கள் விவாதித்தனர். அமைதியாக இருக்குமாறு ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே அறிவுறுத்தினார். அவரும் ஏற்றுக்கொண்டார்.

 

சிறிது நேரத்தில் பேட்ஸ்மேனுக்கும் ஜெய்ஸ்வாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரஹானே தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெய்ஸ்வாலை மைதானத்தை விட்டு வெளியேற சொன்னார் ரஹானே. அவரும் கேப்டடன உத்தரவையடுத்து களத்தில் இருந்து வெளியேறினார். சில ஓவர்களுக்கு பின்னர் ஜெய்ஸ்வால் மீண்டும் களத்துக்குள் வந்தார். இந்த முறை ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கிற்கு பதிலாக தூரத்தில் அவரை ஃபில்டிங் செய்ய வைத்தார் ரஹானே.

வீரரை விட ஆட்டம் பெரியது என்பதையும், விளையாடும்போது ஒருவர் வரம்புகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் அன்று ஜெய்ஸ்வாலுக்கு ரஹானே புரிய வைத்தார்.

https://www.bbc.com/tamil/articles/ce5n403j275o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜய்ஸ்வால் இரட்டைச் சதம், பும்ரா 6 விக்கெட் குவியல்; இங்கிலாந்தை திணறச் செய்தது இந்தியா

03 FEB, 2024 | 10:27 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக விசாகபட்டினம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த இரட்டைச் சதமும் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவு செய்த 6 விக்கெட் குவியலும் இந்தியாவை பலமான நிலையில் இட்டுள்ளது.

முதலாம் நாளான வெள்ளிக்கிழமை (02) ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 336 ஓட்டங்களைப் பெற்றிருந்த இந்தியா, இரண்டாம் நாளான இன்று ஜய்ஸ்வாலின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 396 ஓட்டங்களைப் பெற்றது.

ஆறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஜய்ஸ்வால் குவித்த முதலாவது இரட்டைச் சதம் இதுவாகும்.

290 பந்துகளை எதிர்கொண்ட ஜய்ஸ்வால் 19 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 209 ஓட்டங்களைக் குவித்தார்.

ஷுப்மான் கில் 34 ஓட்டங்களையும் ராஜாத் பட்டிடார் 32 ஓட்டங்களையும் அடுத்த அதிகூடிய எண்ணிக்கைகளாக பெற்றனர்.

பந்துவீச்சில் ஜேம்ஸ் அண்டர்சன் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரெஹான் அஹ்மத் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷொயெப் பஷீர் 138 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஜஸ்ப்ரிட் பும்ராவின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 253 ஓட்டங்களைப் பெற்றது.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் ஸக் க்ரோலி 76 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

மிகத் துல்லியமாக பந்துவீசிய ஜஸ்ப்ரிட் பும்ரா 45 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பதிவு செய்த 10ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும்.

அவரைவிட குல்தீப் யாதவ் 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 143 ஒட்டங்களால் முன்னிலையில் இருந்த இந்தியா, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் 2ஆவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களும் மீதம் இருக்க இந்தியா 171 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜய்ஸ்வால் 15 ஓட்டங்களுடனும் ரோஹித் ஷர்மா 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 1ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

https://www.virakesari.lk/article/175490

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IND vs ENG : ரோகித் கேரியர் காலி.. முடிவுரை எழுதிய ஆண்டர்சன்.. கடுப்பான ராகுல் டிராவிட்!

விசாகப்பட்டினம் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் இருந்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் 143 ரன்கள் முன்னிலை பெற்றதோடு, 2வது நாள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பவுலர்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் விரக்தியடைய வைப்பதே இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என்று பார்க்கப்பட்டது.

screenshot14821-1707022242.jpg

இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தை ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடங்கியது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோ ரூட் அட்டாக்கை தொடங்கினார். முதல் ஓவரிலேயே ஜோ ரூட் மெய்டன் செய்த நிலையில், 2வது ஓவரை வீச ஆண்டர்சன் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 4வது பந்தில் ரோகித் சர்மா டிஃபென்ஸை கடந்து ஆஃப் ஸ்டம்பை தகர்த்தார் ஆண்டர்சன். இதனால் ரோகித் சர்மா 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 17 ரன்களில் மீண்டும் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3வது நாளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததை இங்கிலாந்து வீரர்கள் ஆரவாரமாக கொண்டாடிய நிலையில், இந்திய ஓய்வறையில் இருந்த ராகுல் டிராவிட் அதிர்ச்சியில் எழுந்து நின்றார். இதன் மூலம் இந்திய அணியின் கைகளில் இருந்த ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் 190 ரன்கள் முன்னிலை எடுத்த போதும், அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இதனால் 2வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கவனமாக விளையாடவில்லை என்றால் மீண்டும் பேஸ் பால் அணுகுமுறை காரணமாக இன்னொரு ஆட்டத்தில் தோல்வியை சந்திக்க நேரிடும். பிட்சில் பெரியளவில் உதவி இல்லாத போதும், இங்கிலாந்து பவுலர்களை எதிர்த்து இந்திய பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபடுவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.mykhel.com/cricket/ind-vs-eng-rohit-sharma-got-out-for-13-runs-to-anderson-in-2nd-innings-of-the-second-test-against-049073.html

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டாவ‌து ரெஸ்ரில் ப‌ல‌ கோளாறுக‌ள் ந‌ட‌ந்த‌து ஏராள‌ன் அண்ணா
ஜ‌ந்து நாள் தொட‌ரில் 90ஓவ‌ர் ம‌ட்டும் தான் போட‌னும்...........ம‌ழை இடையில் வ‌ந்து விளையாட்டு ப‌ல‌ ம‌ணி நேர‌ம் த‌டை ப‌ட்டால் அடுத்த‌ ம‌ச் விளையாடும்  போது 90ஓவ‌ருக்கு ப‌தில் 7ஓவ‌ர் கூட்டி 97 கொடுப்பின‌ம் விளையாட

ஆனால் இந்த‌ விளையாட்டின் முத‌ல் நாளே 93ஓவ‌ர் வ‌ரை விளையாடின‌வை...........இதில ஏதோ உள் குத்து இருக்கு..............

இந்தியாவில் கிரிக்கேட் விதிமுறைக‌ளை ம‌திப்ப‌து கிடையாது அவ‌ங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு விளையாடுவாங்க‌ள்..............உல‌க‌ கோப்பை என்றால் ஒட்டு மொத்த‌ உல‌க‌ ர‌கிக‌ர்க‌ள் பார்ப்ப‌தால் அதை நேர்மையாய் ந‌ட‌த்துவாங்க‌ள்...........ஆனால் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இந்தியா விதிமுறைக‌ளை பின் ப‌ற்றுவ‌து கிடையாது.........அதும் ந‌டுவ‌ர் இந்தியாவை சேர்ந்த‌வ‌ர்க‌ள் என்றால் சொல்லாவா வேனும்.................

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் 'பேஸ்பால்' சவாலை முறியடித்த இந்தியா - ஆட்டத்தை புரட்டிப் போட்ட அந்த 'ரன் அவுட்'

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

5 மணி நேரங்களுக்கு முன்னர்

'இன்னும் 180 ஓவர்கள் மீதமிருக்கின்றன. ஆனால், நாங்கள் ஆட்டத்தை 60 முதல் 70 ஓவர்களில் முடித்துவிட முயற்சிப்போம்'

- இது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் நேற்றைய பேட்டி.

இன்றைய ஆட்டமும் அவரது கூற்றை அப்படியே மெய்ப்பித்திருக்கிறது. ஆனால், முடிவு அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இங்கிலாந்துக்கு பாதகமாக கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தை 69.2 ஓவர்களில் ஆல் அவுட் செய்து இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணிக்கு பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் கைகொடுக்க, பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகிய இருவரும் மிரட்டினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நூலிழையில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை தவறவிட்டார்.

விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட்

ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி இரண்டாம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி இரட்டை சதத்தின் உதவியுடன் 396 ரன்களை சேர்த்தது. 290 பந்துகளில் 209 ரன்களை குவித்த அவர் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசினார். சதத்தை சிக்சர் அடித்தும், இரட்டை சதத்தை பவுண்டரி விளாசியும் அவர் கடந்தது சிறப்பம்சம்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர் கிராவ்லி மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் ஏமாற்ற, மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் சதம் கடந்து இந்திய அணியை கரை சேர்த்தார். வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்களை சேர்த்த இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இரு அணிகளுக்குமே வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில், 2 நாள் ஆட்டம் எஞ்சியிருந்தாலும் இங்கிலாந்து அணியோ அதிரடியாகவே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாவது நாள் முடிவில் தொடக்க வீரர் பென் டுக்கெட் விக்கெட்டை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி 67 ரன்களை எடுத்தது.

இதனால், அடுத்த 2 நாட்களில், அதாவது 180 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில்தான் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இக்கட்டுரையின் முதலில் இடம் பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார். அதாவது, 180 ஓவர்கள் இருந்தாலும் கூட தங்களது பிரத்யேகமான 'பேஸ்பால்' உத்தி மூலம் 332 ரன்களை 60 அல்லது 70 ஓவர்களில் ஆட்டத்தை முடித்துவிட முயற்சிப்போம் என்பதே அவரது கூற்றாக இருந்தது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

பரபரப்பான 4-வது நாள் ஆட்டம்

ஜேம்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டது போலவே, இங்கிலாந்து வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் தொடக்கம் முதலே அதிரடியை தொடர்ந்தனர். இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் மேலாக எடுப்பது என்பதே அரிதான நிகழ்வு என்று புள்ளிவிவரம் கூறினாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இங்கிலாந்து வீரர்கள் அடித்தாடினர். இதனால், ஒருநாள் போட்டிகளைப் போலவே இங்கிலாந்து அணியின் ஸ்கோர் போர்டு எகிறியது.

ஆனால், இங்கிலாந்து அணியின் வேகத்திற்கு இந்தியாவின் அஸ்வின் - குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சு கூட்டணி அணை போட முயன்றது. இருவருமே அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கூட இங்கிலாந்து வீரர்கள் அச்சமின்றி அதிரடியைத் தொடர்ந்தனர்.

ஆலி போப், ஜோ ரூட் ஆகிய இருவரின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினர். மறுபுறம் நிலைத்து ஆடி இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை குல்தீப் யாதவ் சாய்த்தார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

500 விக்கெட் மைல்கல்லை தவறவிட்ட அஸ்வின்

9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் என்று அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஜோ ரூட்டை அஸ்வின் காலி செய்தார். அது டெஸ்ட் போட்டிகளில் அவரது 499-வது விக்கெட்டாக அமைந்தது. ஜோ ரூட் நான்காவது விக்கெட்டாக வீழ்ந்தார். இங்கிலாந்து அணிக்கு மேலும் 6 விக்கெட்டுகள் எஞ்சியிருந்ததால் அஸ்வின் 500 விக்கெட் என்ற மைல்கல்லை இந்த போட்டியில் எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த மைல்கல்லை எட்டிவிட்டதாகவே ரசிகர்கள் கருதினர். அஸ்வின் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் டாம் ஹாட்லி ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல, பந்து அவர் மீது பட்டு விக்கெட் கீப்பர் பரத் கைகளில் தஞ்சம் புகுந்தது. இந்திய வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்ய நடுவரும் கையை உயர்த்திவிட்டார். ஆனால், இங்கிலாந்து அணி ரிவியூ செய்த போது பந்து ஹாட்லியின் மணிக்கட்டுக்கு மேலே உரசியபடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நடுவர் தனது முடிவை திரும்பப் பெற்றுவிட்டார்.

இதனால், இந்திய வீரர்கள் அதிருப்தியடைந்ததால், கேப்டன் ரோகித், பவுலர் அஸ்வின் மற்றும் பீல்டர்களிடம் தனது முடிவு குறித்து நடுவர் விளக்கம் அளித்தார். அதாவது, கேட்ச் என்று கருதியே அவுட் கொடுத்ததாகவும், பந்து கையுறையில் படாமல் மணிக்கட்டுக்கு மேலே பட்டதால் தனது முடிவை திரும்பப் பெற்றதாகவும், எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கவே இல்லை என்றும் நடுவர் கூறினார்.

இதனால், 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அஸ்வின் ஏமாற்றம் அடைந்தார். அதனை எட்டும் அவரது முயற்சி இந்த போட்டி முடியும் வரை கைகூடவில்லை.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்டத்தை புரட்டிப் போட்ட அந்த 'ரன் அவுட்'

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 52 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்சும் களத்தில் இருந்தனர். 53-வது ஓவரில் ஃபொக்ஸ் செய்த தவறு அந்த அணியையே ஒட்டுமொத்தமாக தடம்புரளச் செய்துவிட்டது. நான்காவது பந்திதை ஷாட் மிட்விக்கெட் திசையில் தட்டிவிட்டு, விரைவாக ஒரு ரன்னை எடுத்துவிட அவர், கேப்டன் பென் ஸ்டோக்சை அழைத்தார்.

பென் ஸ்டோக்சும் ஒரு ரன்னுக்காக விரைந்து செல்ல, அங்கே பந்தை விரைவாக பீல்டிங் செய்த ஸ்ரேயாஸ் குறி தவறாமல் எறிந்து ஸ்டம்புகளை தகர்க்க, ஸ்டோக்ஸ் ரன் அவுட்டானார். அவரது பேட்டிற்கும் கிரீசுக்கும் இடையே வெறும் 3 இன்ச் இடைவெளியே இருந்தது. இதனால், 399 ரன் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக நடைபோட்ட இங்கிலாந்து அணியின் நம்பிக்கை அத்துடன் குலைந்து போனது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்களும் துரிதமாக ரன்களை சேர்த்தாலும் வெற்றிக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. கடைசி விக்கெட்டாக டாம் ஹாட்லியை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கிளீன் போல்டு செய்தார். இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் 292 ரன்களை எடுத்து ஆல்அவுட்டானது. இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் டெஸ்டில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் 'பேஸ்பால்' அதிரடிக்கு அணை போட்டது பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும், அவரது ரிவர்ஸ் ஸ்விங்கும் தான் என்றால் மிகையாகாது.

 
இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால்

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட உதவிய இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

https://www.bbc.com/tamil/articles/c4n68mmp8d5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

106 ஓட்டங்களால் வெற்றியீட்டி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை சமப்படுத்தியது இந்தியா

Published By: VISHNU  05 FEB, 2024 | 11:08 PM

image
 

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது.

022.png

இந்தப் போட்டி நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்தது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

இளம் துடுப்பாட்ட நட்சத்திரம், புதிய அதிரடி நாயகன் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த கன்னி இரட்டைச் சதம், ஜஸ்ப்ரிட் பும்ராவின் 9 விக்கெட் குவியல், இரண்டாவது இன்னிங்ஸில் ஷுப்மான் கில் குவித்த சதம் என்பன இந்தியாவை வெற்றிபெறச் செய்தன.

003.png

நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 1196 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன.

004.png

இந்த மொத்த எண்ணிக்கையில் இரண்டு அணிகளிலும்  இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் பகிர்ந்த 90 ஓட்டங்களே அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

அத்துடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் குவித்த 396 ஓட்டங்களே நான்கு இன்னிங்ஸ்களிலும் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக அமைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் பிற்பகல் 399 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து, நேற்றை நான்காம் ஆட்டத்தில் சகல விக்கெட்களையும் இழந்து 292 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

எண்ணிக்கை சுருக்கம்

இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 396 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 209, ஷுப்மான் கில் 34, ராஜாத் பட்டிடார் 32, ஜேம்ஸ் அண்டர்சன் 47 - 3 விக்., ரெஹான் அஹ்மத் 65 - 3 விக்., ஷொயெப் பஷிர் 138 - 3 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 253 (ஸக் குரோவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47, ஜஸ்ப்ரிட் பும்ரா 45 - 6 விக், குல்தீப் யாதவ் 71 - 3 விக்.)

இந்தியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 255 (ஷுப்மான் கில் 104, அக்சார் பட்டேல் 45, டொம் ஹாட்லி 77 - 4 விக்., ரெஹ்மான் அஹ்மத் 88 - 3 விக்., ஜேம்ஸ் அண்டர்சன் 29 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 399 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 292 (ஸக் குரோவ்லி 73, பென் ஸ்டோக்ஸ் 36, டொம் ஹாட்லி 36, ஜஸ்ப்ரிட் பும்ரா 46 - 3 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 72 - 3 விக்.)

ஆட்டநாயகன்: ஜஸ்ப்ரிட் பும்ரா

இன்னும் பத்து தினங்களில் இந்த இரண்டு அணிகளும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளன. அந்த டெஸ்ட் போட்டியில் ஜேம்ஸ் அண்டர்சனும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பந்துவீச்சில் மைல்கற்களை எட்டிப்பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேம்ஸ் அண்டர்சன் இதுவரை 695 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 500 விக்கெட்களையும் டெஸ்ட் போட்டிகளில் கைபற்றியுள்ளனர்.

https://www.virakesari.lk/article/175666

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி தரவரிசை: வரலாற்று சாதனை படைத்த பும்ரா

Capture-3-1.jpg

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.

2 ஆவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 6 விக்கெட், 2 ஆவது இன்னிங்சில் 3 விக்கெட் என 9 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இதன்மூலம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசயைில் முதல் இடத்தை பிடித்துள்ளார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார்.

ரபடா 2 ஆவது இடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 3 ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். கம்மின்ஸ் 4 ஆவது இடத்தில் உள்ளார். ஹேசில்வுட ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார்.

https://thinakkural.lk/article/290939

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

இதற்கிடையே, 3 ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் 15 ஆம் திகதி தொடங்குகிறது. 4 ஆவது டெஸ்ட் ராஞ்சியில் 23 ஆம் திகதியும், கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் திகதியும் தொடங்குகிறது.

5-10.jpg

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டி ருந்தது. இதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி விலகி இருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக எஞ்சியுள்ள 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயஸ் அய்யர் இடம்பெறவில்லை.

காயம் காரணமாக 2 ஆவது டெஸ்டில் விளையாடாத பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். அதே வேளையில் இருவரும் போட்டியில் விளையாடுவது குறித்து மருத்துவ குழுவின் உடற்தகுதி அறிக்கை அடிப்படையில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் வருமாறு:-

ரோகித் சர்மா (கெப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல்.ராகுல், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ்.பரத், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

https://thinakkural.lk/article/291306

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசா சர்ச்சையினால் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் ரெஹான் அஹமத்

Published By: DIGITAL DESK 3   14 FEB, 2024 | 12:41 PM

image
 

(ஆர்.சேதுராமன்)

இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவரான ரெஹான் அஹமத், விசா பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார்.  இந்தியாவிலிருந்து அபுதாபிக்கு சென்று மீண்டும் அவர் இந்தியாவுக்கு சென்றபோது விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இங்கிலாந்து அணி, 5 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வென்றது. கடந்த 5 ஆம் திகதி முடிவடைந்த 2 ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ஓட்டங்களால் வென்றது. 3 ஆவது போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

2 ஆவது போட்டிக்கும் 3 ஆவது போட்டிக்கும் இடையில் 10 நாட்கள் இடைவெளி இரந்த நிலையில், இங்கிலாந்து குழாத்தினர் ஓய்வுக்காக அபுதாபிக்கு சுற்றுலா மேற்கொண்டனர். அதன்பின் அவர்கள் நேற்றுமுன்தினம் ராஜ்கோட் நகரிலுள்ள  ஹிராசார் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, ரெஹான் அஹமத்தை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

ரெஹான் அஹ்மத்துக்கு ஒற்றை நுழைவு விசாவே வழங்கப்பட்டிருந்தது. அதனால் இந்தியாவிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் அந்த விசா மூலம்  மீண்டும் இந்தியாவுக்கு வர முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், நிலைமையைக் கருத்திற்கொண்டு 2 நாட்களுக்கு மாத்திரம் உள்ளுர் அதிகாரிகள் விசா வழங்கியதுடன், விசா பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுமாறு இங்கிலாந்து குழாமை அறிறுத்தினர்.

இங்கிலாந்து குழாத்தில் 31 பேர் பயணித்தனர் எனவும் அவர்களில் ரெஹான் அஹ்மத் மாத்திரமே விசா பிரச்சினையை எதிர்கொண்டார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து அணியினர் இந்தியாவுக்கு வரும்போது அவ்வணியின் மற்றொரு வீரரான ஷொயீப் பஷீருக்கு உரிய நேரத்தில் விசா வழங்கப்படவில்லை. இதனால் ஏனைய வீரர்கள் இந்தியாவுக்கு சென்ற பின்னரும் பஷீர் சில தினங்கள் அபுதாபியில் காத்திருக்க நேரிட்டது. அப்போ ரெஹான் அஹ்மத் பிரச்சினையை எதிர்நோக்கவில்லை.

19 வயதான ரெஹான் அஹ்மத், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 15 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/176349

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ஃபராஸ் கான்: பெருங்கனவு நிறைவேறிய நாளில், ஜடேஜா மன்னிப்புக் கோரும் அளவுக்கு ரசிகர்களின் அன்பைப் பெற்றது எப்படி?

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 16 பிப்ரவரி 2024, 03:21 GMT
    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

அபுவின் நெடுங்காலப் பெருங்கனவு நிறைவேறி இருக்கிறது. இதில் அபு வேறுயாருமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முதன் முதலாக களமிறங்கிய மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கானின் தந்தைதான்.

தொடக்கப் போட்டியிலேயே சிறப்பாக ஆடி தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் சர்ஃபராஸ் கான்.

சர்ஃபராஸ் கானுக்கு தந்தையாகவும், சிறுவயதிலிருந்தே பயிற்சியாளராகவும், கிரிக்கெட்டில் வழிகாட்டியாகவும் இருந்து இந்திய அணிக்குள் செல்ல மூலகாரணமாக இருந்தவர் அபு என்ற நெளசத்கான் கான்.

இந்திய அணிக்காக பல போராட்டங்களுக்குப்பின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெற்றார் மும்பையைச் சேர்ந்த வலதுகை பேட்டர் சர்ஃபராஸ் கான். முன்னாள் கேப்டன் அணில் கும்ப்ளே கரங்களால் இந்திய அணியின் தொப்பியைப் பெற்று களமிறங்கியபோது, மைதானத்தில் இருந்த தந்தை நெளசத் கானும், சர்ஃபராஸ் கான் மனைவியும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இந்த தருணத்துக்காகத்தான் நெளசத்கான் நீண்டகாலம் காத்திருந்தார். தேசத்துக்காக தன் மகன் விளையாட வேண்டும், இந்திய அணிக்குள் இடம் பெற வேண்டும் என்ற பல ஆண்டுகள் கனவு நேற்று நெளசத்கானுக்கும், சர்ஃபராஸ் கானுக்கும் நிறைவேறி இருக்கிறது.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நினைக்கும் நேரத்தில் சூரியன் உதிக்காது"

போட்டி நடந்து கொண்டிருக்கும்போது வர்ணணையாளர் பகுதிக்கும் சர்ஃபராஸ்கான் தந்தை நெளசத் கான் சென்றார். அங்கு வர்ணணையாளர் பணியில் இருந்த ஆகாஷ் சோப்ரா, நெளசத் கானிடம் “ இந்திய அணியில் உங்கள் மகன் அறிமுகத்துக்கு நீண்டகாலம் ஆகிவிட்டதா, அதிக காலம் காத்திருக்க வேண்டியது இருந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நெளசத்கான் பதில் அளிக்கையில் “ நம்முடைய விருப்பப்படி சூரியன் உதயமாகாது. இரவைக் கடந்தால்தான் சூரியன் உதயமாகும், ஆதவனைப் பார்க்க முடியும்” என்று ஆழ்ந்த பதிலைத் தெரிவித்தார்.

அற்புதமான பேட்டிங்

நெளசத் கானின் பதிலைப் போலவே, ஆழ்ந்த அர்த்தமுள்ளதாகவும், இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போலவும், சர்ஃபராஸ் கான் பேட்டிங் நேற்று அமைந்திருந்தது.

ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுக போட்டியேலேயே சர்ஃபராஸ் கான் 96 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து, 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜாவின் தவறால் சர்ஃபராஸ் கான் 62 ரன்களில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், நிச்சயமாக அறிமுகப் போட்டியேலேய சதம் கண்டிருப்பார்.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்திக் சாதனை சமன்

இங்கிலாந்து அணியில் நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் மார்க் வுட், ஆன்டர்சன், ஹார்ட்லே, ரூட் ஆகியோரின் பந்துவீச்சை மிகவும் அனாசயமாகக் கையாண்டு சர்ஃபராஸ் கான் ரன்களைச் சேர்த்து அரைசதம் கடந்தார். அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சர்ஃபராஸ்கான் சமன் செய்தார்.

சர்ஃபராஸ்கானின் பேட்டிங் செய்யும் போது ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஸ்வீப் ஷாட், ஃபுல் ஷாட், ஸ்குயர்கட், லேட் கட், ஸ்கொயர் ட்ரைவ் என பல கோணங்களில் ஷாட்களை அடித்து ரன்களைச் சேர்த்தார். குறிப்பாக ஃபேக் ஃபுட்டில் சென்று சுழற்பந்துகளை தேர்டு மேன் திசையில் தட்டிவிடும் நுட்பத்தை சர்ஃபராஸ்கான் அருமையாகச் செய்தார்.

ரசிகர்கள் ஆதங்கம்

இப்படிப்பட்ட பேட்டருக்கா இத்தனை ஆண்டுகள் இந்திய அணியில் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்படாமல் இருந்தது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தையும் காண முடிந்தது.

உண்மையில், ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் பட்டிதர் போன்ற வீரர்கள் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் அதிகமாக விளையாடாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்குள் வந்தனர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சர்ஃபராஸ் கான் மீதான ரசிகர்களின் அன்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால், அரைச் சதம் அடித்த பிறகு ரன் அவுட் ஆனபோது, அதற்கு காரணமான ரவீந்திர ஜடேஜாவை திட்டித் தீர்க்கும் அளவுக்கு இருந்தது. தனது தவறுக்காக ஜடேஜாவை சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரி பதிவிடும் வகையில் ரசிகர்கள் தங்களது அன்பை சர்ஃபராஸ் கானுக்கு தெரிவித்தனர்.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் ரன்மெஷின்

ஆனால், சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்குள் வருவதற்கு முன் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர், மும்பை அணிக்காக பல போட்டிகளில் பல சதங்களையும், ஏராளமான ரன்களையும் குவித்து மும்பையின் ரன்மெஷின் என்று வர்ணிக்கப்பட்டவர்.

குறிப்பாக 2019 முதல் 2022 சீசன் வரை ரஞ்சிக் கோப்பைத் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்து, சர்ஃபராஸ் கான் அனைவரையும் வாயைப் பிளக்க வைத்தார். கடைசியாக 2022-23 சீசனில்கூட ரஞ்சிக் கோப்பையில் 6 போட்டிகளி்ல 500 ரன்களுக்கு மேல் குவித்து தனது சராசரியை 90 ரன்களுக்கு மேல் வைத்திருந்தார்.

தனது பேட்டிங்கில் எந்தவிதமான குறையும் பெரிதாகக் கூற முடியாத அளவுக்கு சர்ஃபராஸ் கான் ஆட்டம் அமைந்திருந்தும் அவருக்கான வாய்ப்புக் கதவுகள் இந்திய அணியில் திறக்கப்படவில்லை.

இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என்பதை முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா என பலரும் தங்களின் ஆதங்கங்களை பல நேரங்களில் வெளிப்படுத்தினர்.

45 முதல் தரப்போட்டிகளில் விளையாடிய சர்ஃபராஸ் கான் 14 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 3,912 ரன்கள் சேர்த்தபின்புதான் இந்திய அணி அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. இதில் சர்ஃபராஸ் கான் ஒருமுறை முச்சதம், இரட்டை சதமும் அடித்துள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் சர்ஃபராஸ் கான் 70 ஸ்ட்ரைக் ரேட்டும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 94 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். பிராட் மேனுக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் அதிகமான ரன் சராசரி கொண்ட வீரர் என்ற பெருமையை சர்ஃபராஸ் கான் பெற்றிருந்தார்.

இருப்பினும், சர்ஃபராஸ் கானின் பேட்டிங் திறமை மீது இந்திய அணித் தேர்வாளர்கள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருந்தபோது, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சர்ஃபராஸ் கானை தேர்ந்தெடுத்துள்ளது.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிக்கெட்டுக்காக படிப்பு நிறுத்தம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கார்க் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது சர்ஃபராஸ் கான் குடும்பம். ஆனால், ஒரு கட்டத்தில் சர்ஃபராஸ் கான் தந்தை மற்றும் குடும்பத்தினர் மும்பைக்கு வந்து அங்கு தங்கிவிட்டனர்.

1997, அக்டோபர் 22ம் தேதி மும்பையில் பிறந்தவர் சர்ஃபராஸ் கான். வலது கை பேட்டர், வலது கை சுழற்பந்துவீச்சாளர், தேவைப்பட்டால் மட்டும் விக்கெட் கீப்பிங் செய்யும் பழக்கம் கொண்டவர்.

சர்ஃபராஸ் கானுக்கு சிறுவயதிலேயே கிரிக்கெட் திறன் இருப்பதை அவரின் தந்தை நெளசத் கான் கண்டறிந்தார். குறிப்பாக பந்தை டைமிங் பார்த்து தட்டிவிடும் திறன் சர்ஃபராஸ் கானுக்கு அதிகம் இருந்தது. இதையடுத்து, இந்தத் திறமையை மேம்படுத்தும் நோக்கில் சர்ஃபராஸ் கானுக்கு தீவிரமாக பயிற்சியை நெளசத் கான் அளித்தார்.

ஆனால், காலநிலை சரியில்லாதது, மழை போன்றவற்றால் மைதானத்துக்கு செல்ல முடியாத சூழல் பல நேரங்களில் இருந்தது. இதனால் தனது வீட்டின் அருகே, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, செயற்கை பிட்ச் அமைத்து அதில் மகனுக்கு நெளசத் கான் பேட்டிங் பயிற்சி அளித்து உருவாக்கினார். தீவிரமான கிரிக்கெட் பயிற்சி காரணமாக, சர்ஃபராஸ் கான் படிப்பு 4 ஆண்டுகள் பாதித்தது. வீட்டிலேயே ஆங்கிலம், இந்தி, கணித வகுப்புகள் சர்ஃபராஸ்கானுக்கு எடுக்கப்பட்டன.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சச்சின் சாதனையை முறியடித்தவர்

பள்ளிக்களுக்கான கிரிக்கெட் போட்டியான ஹாரிஸ் ஷீல்ட் போட்டியில் சர்ஃபராஸ் கான் தனது 12 வயதில் 2009ம் ஆண்டு பங்கேற்றார். அந்த போட்டியில் 12 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகல் உள்பட 421 பந்துகளில் 439 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை சர்ஃபராஸ் கான் முறியடித்தார். இந்த ஆட்டம்தான் சர்ஃபரஸ் கான் யார் என்பதை வெளி உலகிற்கு வெளிச்சம் பாய்ச்சியது.

அதன்பின் மும்பை அணியில் 19 வயதுக் குட்பட்டோருக்கான பிரிவில் சர்ஃபராஸ் கான் இடம் பெற்று, இந்திய அணியின் 19வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இடம் பெற வாய்ப்பளித்தது.

இதுவரை சர்ஃபராஸ் கான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்று 2 உலகக் கோப்பை(2014, 2016) தொடர்களில் விளையாடியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக அரைசதங்கள் (7அரை சதம்) அடித்த வீரர் என்ற பெருமையையும், 2016ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 355 ரன்கள் குவித்து 2வது அதிக ரன் சேர்த்த வீரர் என்ற சிறப்பையும் சர்ஃபராஸ் கான் பெற்றார்.

ஆனாலும், சர்ஃபராஸ் கானின் கிரிக்கெட் வாழ்க்கை சர்ச்சையோடுதான் தொடங்கியது. 2011ம் ஆண்டு 12 வயதுக்குட்பட்டோருக்கான பள்ளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் பங்கேற்றபோது அவருக்கு 15 வயது இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு எலும்பு வளர்ச்சி பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்பின் சர்ஃபராஸ் கானுக்கு நடத்தப்பட்ட எலும்பு வளர்ச்சி பரிசோதனையில் அவர் அதிக வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை அவரின் பயிற்சியாளரான நெளசத்கான் ஏற்கவில்லை. எனவே 2வது அதிநவீன பரிசோதனைக்குச் சர்ஃபராஸ் உட்படுத்தப்பட்டார். இதில் நடத்தப்பட்ட பரிசோதனையில் சர்ஃபராஸ் கான் சான்றிதழில் அளித்த வயதும், அவரின் எலும்பு வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருப்பதாக உறுதியானது.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சூர்யகுமார், சர்ஃபராஸ் சர்ச்சை

இது தவிர 2015ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வென்றது. அந்த வெற்றிக்குப்பின், சர்ஃபராஸ் கானும், சூர்யகுமார் யாதவும் சர்ச்சைக்குரிய வகையில் செய்கையில் ஈடுபட்டும், தகாத வார்த்தைகளில் பேசியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவர் மீதான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, சர்ஃபராஸ் கான், சூர்யகுமார் யாதவ் இருவரும் உடனடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர், 2 ஆண்டுகளுக்கு இருவருக்கும் போட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களின் ஒழுக்கம் கண்காணிக்கப்பட்டது.

திரும்பிப் பார்க்க வைத்த ரஞ்சி சீசன்

சர்ஃபராஸ் கான் ரஞ்சி தொடரில் முதன்முறையாக மும்பை அணிக்காக 2014ம் ஆண்டு மேற்கு வங்க அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் 2015-16 சீசனில் உத்தர பிரதேச அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார். 2019-20ம்ஆண்டு ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக ஆடிய சர்ஃபராஸ் கான் உத்தர பிரதேச அணிக்கு எதிராக முச்சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

2022ம் ஆண்டு நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் சர்ஃபராஸ் கான் மும்பை அணிக்காக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார். சிறுவயதில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள சர்ஃபராஸ் கான், சீனியர் அணிக்காக விளையாட வந்தபோது முதன்முறையாக விக்கெட் கீப்பிங்கில் ஈடுபட்டு புதிய அவதாரமெடுத்தார்.

 
சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிராட் மேனுக்கு அடுத்ததாக ரன் சராசரி

கடந்த 3 ரஞ்சி சீசன்களிலும் சர்ஃபராஸ் கான், ஏறக்குறைய 2,500 ரன்களுக்கு குறைவில்லாமல் சேர்த்துள்ளார். 2019 முதல் 2022 வரை ஒவ்வொரு சீசனிலும் 900 ரன்களுக்கு குறையாமல் சேர்த்து முதல் தரப்போட்டியில் புதிய வரலாற்றை சர்ஃபராஸ் கான் படைத்துள்ளார்.

டான் பிராட்மேனுக்கு அடுத்தாற்போல் உள்நாட்டுப் போட்டிகளில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள இளம் வீரர் எனும் பெருமையும் சர்ஃபராஸ் கானுக்கு இருக்கிறது.

இளம் வயதில் ஐபிஎல் அறிமுகம்

ஐபிஎல் டி20 தொடரில் தனது 17வயதிலேயே சர்ஃபிராஸ் கான் அறிமுகமாகினார். 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் சர்ஃபராஸ் கான் ஆட்டத்தைப் பார்த்த ஆர்சிபி அணி அவரை ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. 2015 சீசன் முதல் 2018 சீசன் வரை ஆர்சிபி அணிக்காக சர்ஃபராஸ் கான் ஆடினார்.

2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், அதன்பின் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சர்ஃபராஸ் கானை விலைக்கு வாங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்த சீசனில் சர்ஃபராஸ் கான் விக்கெட் கீப்பர் பேட்டராகவும் செயல்பட்டார்.

https://www.bbc.com/tamil/articles/c1e1d44490eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டைச் சமாளிக்கும் இந்தியாவின் 'ஜெய்ஸ்பால்'

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சஞ்சய் கிஷோர்
  • பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இங்கிலாந்தின் 'பேஸ்பால்' கிரிக்கெட்டுக்கு பதிலாக இந்தியா 'ஜெய்ஸ்பால்' கிரிக்கெட்டை களமிறக்கியிருக்கிறது.

ஆம், இந்தியாவின் இளம் இடது கை தொடக்க பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியை ஐ.சி.யு.வுக்கு அனுப்பியதாகத் தெரிகிறது. அதிலிருந்து இங்கிலாந்து அணி மீள்வதற்கு சாத்தியமில்லை என்றும் தெரிகிறது.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்தியா இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 322 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இன்றைய காலகட்டத்தில், டி-20 போன்ற வேகமான கிரிக்கெட்டின் ஆக்ரோஷம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரம் ஒரு வீரரிடம் அரிதாகவே காணப்படுகிறது.

உலக கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போல் டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட்டை இவ்வளவு சிறப்பாக சமநிலையில் வைத்திருக்கும் ஒரு வீரர் இல்லை.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி எச்சரிக்கையுடன் தொடங்கி முதல் 39 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு அவர் விரைவில் தனது ஆட்டத்தை மீட்டெடுத்து, பவுண்டரிகளை விளாசி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

ஸ்பின்னர்களின் பந்துகளை விளாசிய ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் இங்கிலாந்தின் அனுபவமிக்க பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை குறிவைத்தார்.

ஆட்டத்தின், 27வது ஓவரில் ஆண்டர்சன் பந்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார். லாங் ஆன் ஆஃப் ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி ஓவரில் சிக்ஸர் அடித்து தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

ஜெய்ஸ்வாலைக் கட்டுப்படுத்துவது இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஜெய்ஸ்வாலின் ஆக்ரோஷத்தில் இருந்து, பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட் மற்றும் ரெஹான் அகமதும் தப்பவில்லை

இருவரின் பந்துகளிலும் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்தார். அவரது ஆக்ரோஷத்தில் டி-20 போட்டியின் தன்மை வெளிப்பட்டாலும், அவர் ஆடித்த ஒவ்வொரு பவுண்டரியும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

யஷஸ்வி தான் ஆடிய டெஸ்ட் போட்டிகளில், 122 பந்துகளில் மூன்றாவது சதத்தையும், தொடரில் தொடர்ச்சியாக இரண்டாவது சதத்தையும் அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், அவர் 209 ரன்கள் எடுத்திருந்தார்.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களையும் யஷஸ்வி விட்டுவைக்கவில்லை.

அவரது ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் ஷாட்கள் மிக அழகாக இருந்தன. அவரது இன்னிங்ஸைப் பார்த்த முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது சமூக ஊடகப் பக்கமான 'எக்ஸ்' தளத்தில், "யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு சதத்திற்குப் பின் சதம். சுழற்பந்து வீச்சாளர்கள் நடத்தப்பட வேண்டிய விதத்தில் நடத்தப்படுகிறார்கள். கொடு கொடு கொடு," என பதிவிட்டிருந்தார்.

 

சிக்சருடன் அரை சதம், நான்குடன் சதம்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 39-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.

நேற்றைய ஆட்டத்தில், 133 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து, 104 ரன்கள் எடுத்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 78.19 ஆகும். இதையடுத்து முதுகு வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

சதம் அடித்த யஷஸ்வி, டேவிட் வார்னரைப் போல் காற்றில் குதித்து கொண்டாடினார். ஒருவேளை முதுகு வலிக்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், இந்த காலகட்டத்தில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விராட் கோலிக்கு பிறகு 400 ரன்கள் எடுத்த இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார்.

விராட் 2018-இல் 593 ரன்களும், ரோஹித் சர்மா 2021-இல் 368 ரன்களும் எடுத்திருந்தனர்.

 
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹைதராபாத் டெஸ்டின் முதல் நாளில், ஜெய்ஸ்வால் 70 பந்துகளில் 76 ரன்கள் எடுத்திருந்தார்.

அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த, இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்லே ஆகியோர் டெஸ்டில் இருந்து டி20க்கு மாறுவது அல்லது டி20யில் இருந்து டெஸ்டுக்கு மாறுவது கடினமா என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

யஷஸ்வி, டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார். அதன் பிறகு அவர் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்ததன் அடிப்படையில் அவர் கூட்டாக ஏழாவது இடத்தில் உள்ளார். இந்த விஷயத்தில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை சமன் செய்துள்ளார்.

 

ஜெய்ஸ்வால் இதுவரை எத்தனை சதங்கள் அடித்துள்ளார்?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்நாட்டு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார். 2019-ஆம் ஆண்டில், ஹசாரே டிராபியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இவர் வெளிச்சத்திற்கு வந்தார்.

ஜெய்ஸ்வால் இன்னிங்சில் 113, 22, 122, 203 மற்றும் 60 ரன்கள் எடுத்தார்.

2020-ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். இவர் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் முதல் சீசனில் சரியாக விளையாடவிட்டாலும், படிப்படியாக அவர் முன்னேறினார். கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 163.61 ஸ்ட்ரைக் ரேட்டில் 625 ரன்கள் எடுத்தார்.

ஜோஸ் பட்லருடன் இவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. 13 பந்துகளில் அரை சதம் அடித்து அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

யஷஸ்வி 2019-இல் ரஞ்சி விளையாடத் தொடங்கினார். 2021-22ல், அவர் தொடர்ந்து மூன்று சதங்கள் அடித்து மும்பையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இதுவரை, அவர் 37 முதல் தர இன்னிங்ஸில் 73 சராசரியுடன் 2482 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 11 சதங்கள் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும்.

அதனால்தான் அவருக்கு ஒருநாள் மற்றும் டி-20க்கு முன் டெஸ்ட் கேப் வழங்கப்பட்டது.

 

இரவில் சமையல், பகலில் பயிற்சி!

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது நண்பர் ராஜு பாயுடன் மும்பையில் (ஜூலை 2018)

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் சூரியவான் கிராமத்தைச் சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் தந்தை சிறிய ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார்.

கிரிக்கெட் மீதான ஆர்வம் அவரை 11 வயதில் மும்பைக்கு இழுத்தது. தனியாகப் போராடினார். பால் பண்ணையில் கூட வேலை செய்ய வேண்டியிருந்தது.

பல ஆண்டுகளாக, மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் யஷஸ்வியும் வசித்து வந்தார்.

இங்கு இரவில் உணவு சமைத்துவிட்டு, பகலில் கிரிக்கெட் பயிற்சி செய்து வந்தார். இது தவிர கோல் கப்பாவும் விற்கப்பட்டது.

இவை அனைத்திற்கும் மத்தியில், அவர் தொடர்ந்து கடினமாக உழைத்தார். கடின உழைப்பு பலன் தந்தது, மற்றவை வரலாறானது.

https://www.bbc.com/tamil/articles/c4nj42w77elo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஜெய்ஸ்வால், ஜடேஜா, சர்ஃபராஸ் கான் - பதிவான சாதனைகள் என்ன?

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

40 நிமிடங்களுக்கு முன்னர்

ராஜ்கோட் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது, கேப்டன் ரோகித் சர்மா சர்ஃபராஸ் அகமதுவை கட்டிப்பிடிக்க, ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா பந்தை முத்தமிட்டார்.

அதே பந்தில், தனது சுழற்பந்து வீச்சால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் சாதனை படைத்துள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், 33 ரன்களுக்குள் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிய நேரத்தில், அவர் அணிக்காக களத்தில் நிலைத்து ஆடினார்.

கேப்டன் ரோகித் சர்மாவுடன் 100 ரன் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிய அவர் நான்காவது டெஸ்ட் சதத்தையும் அடித்தார்.

 

இந்தியாவின் முதல் இன்னிங்சில் 112 ரன்கள் குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை பாதி ஆட்டக்காரர்களை பெவிலியன் திருப்பி அனுப்பிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்கோட் டெஸ்டில், இந்தியா தொடர்ந்து நான்கு நாட்கள் வலுவான நிலையில் இருந்தது. இதில், 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஐந்து டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்காக மார்க் வுட் 33 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்கள் கூட எடுக்க முடியவில்லை.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவைத் தவிர குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நான்காவது நாளில் நடந்தது என்ன?

முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களையும், இங்கிலாந்து 319 ரன்களையும் எடுத்தன. 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட் நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்திருந்தது.

இரண்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்த நிலையில் நான்காம் நாள் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 430 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 557 ரன்களை இந்தியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாச, ஷுப்மான் கில் 91 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

தனது வாழ்க்கையில் முதல் சர்வதேச டெஸ்டை விளையாடிய சர்ஃபராஸ் கான், இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியால் எந்த நிலையிலும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போட்டி கொடுக்க முடியவில்லை.

இங்கிலாந்துக்கு முன்னால் மிகப்பெரிய இலக்கு இருந்தபோதிலும், ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருந்ததால், இந்தப் போட்டியில் அந்த அணி தோல்வியைத் தவிர்க்கும் வாய்ப்பு இருந்தது, ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவில்லை.

அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 50 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், இரண்டாவது இன்னிங்சில் 122 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்களையும், பென் ஃபோக்ஸ் மற்றும் டொம் ஹார்ட்லி ஆகியோர் தலா 16 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களையும், ஜேக் கிராலி 11 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியை சுருட்டினர்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆட்ட நாயகன் ஜடேஜா என்ன சொன்னார்?

போட்டி முடிந்ததும், அவரது பேட்டிங் குறித்து ஜடேஜாவிடம் கேட்டபோது, "நாங்கள் கடினமான சூழ்நிலையில் இருந்தோம். நான் ரோஹித்துடன் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தேன். நான் எனது திறமையை நம்பி ஷாட்களை இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியிருந்தது." என்றார்.

ஆடுகளம் குறித்து ஜடேஜா கூறுகையில், ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், "இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும் போது ரன்களை எடுப்பது எளிது. படிப்படியாக அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும்" என்றார்.

"ரோகித் டாஸ் வென்றபோது, நாங்கள் என்ன விரும்பினோமோ அதனைப் பெற்றோம். இந்த ஆடுகளத்தில் விக்கெட்டுகளை எளிதாகப் பெற முடியாது, இதற்காக நீங்கள் களத்தில் அதிகம் உழைக்க வேண்டும். பந்தை நீங்கள் சரியாக பிட்ச் செய்ய வேண்டும், நீங்கள் கடினமாக உழைத்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும்." என்று ஜடேஜா கூறினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ஃபராஸுக்கு முன் ஜடேஜா ஏன் அனுப்பப்பட்டார்?

இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி டாஸ் வென்றது. ஆனால் அதன் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் 33 ரன்களுக்குள் ஆட்டமிழந்தனர். அப்படிப்பட்ட நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா 4வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்தார்.

பேட்ஸ்மேனாக தனது வாழ்க்கையில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி கொண்டிருந்த சர்பராஸ் கானுக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா ஆடுகளத்திற்கு அனுப்பப்பட்டார்.

இதற்குப் பின்னால் உள்ள காரணம் நிச்சயமாக அவரது அனுபவத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது மற்றும் சர்ஃபராஸ் தனது முதல் போட்டியிலேயே இதுபோன்ற அழுத்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் ரஜத் படிதார் தனது அறிமுகப் போட்டியில் பூஜ்ஜியத்திற்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பியிருந்தார்.

போட்டி முடிந்ததும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஜடேஜாவுக்கு அனுபவம் அதிகம், அதிக ரன்கள் எடுத்தது, லெப்ட்-ரைட் கூட்டணி வேண்டும் என்பதால் அவரை முதலில் அனுப்பினோம். சர்ஃபராஸ் இந்த போட்டியில் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டினார்.

எதிர்காலத்திலும் இது இப்படியே தொடருமா? இது குறித்து ரோகித் கூறுகையில், "இது நீண்ட காலத்துக்கானது அல்ல. தேவைக்கு ஏற்ப, அன்றைய தினம், அணி மற்றும் பந்துவீச்சை பார்த்து, மதிப்பீடு செய்து முடிவெடுப்போம்," என்றார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

முத்திரை பதித்த ஜெய்ஸ்வால்

இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய பங்கு வகித்தார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 214 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, அவர் சில சாதனைகளை செய்தார். இது மிகவும் விவாதிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய அணிக்காக தனது முதல் டெஸ்டில் விளையாடிய யஷஸ்வியின் பேட் தொடர்ந்து களத்தில் ரன்களை குவித்து வருகிறது.

யஷஸ்வி இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் 71.75 சராசரியில் 861 ரன்கள் எடுத்துள்ளார்.

சதத்துடன் தனது டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கிய அவர் தற்போது தொடர்ந்து இரண்டு டெஸ்ட்களில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இந்தியாவின் மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இந்த இன்னிங்ஸில் யஷஸ்வி 12 சிக்சர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டின் எந்த இன்னிங்ஸிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை இதுவாகும்.

யஷஸ்வியின் மூன்று சதங்களும் 150க்கும் அதிகமான ஸ்கோராகும். முதல் டெஸ்டில் 171 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 209 ரன்களும், ஏழாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 214 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாதனை படைத்த ஜெய்ஸ்வால் என்ன சொன்னார்?

போட்டிக்கு பிறகு பேசிய அவர், "முதல் இன்னிங்சில் ரோகித் மற்றும் ஜடேஜா பேட்டிங் செய்த விதம் எனக்கு மிகவும் உத்வேகம் அளித்தது. மேலும் அனைத்து சீனியர்களும் என்னிடம் கூறியது போல், நீங்கள் செட் ஆனவுடன், பெரிய ஸ்கோரை அடிக்க முயல வேண்டும்" என்றார்.

"எனவே நான் ஆடுகளத்தில் இறங்கும் போதெல்லாம், நான் பெரிய இன்னிங்ஸ் விளையாட முயற்சிக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது. எனவே நான் ஒருமுறை செட்டில் ஆனவுடன் என்னால் முடிந்தவரை விளையாட முயற்சிக்கிறேன்."

தொடக்கத்தில், யஷஸ்வி அதிக பந்துகளில் விளையாடி குறைவான ரன்களையே எடுத்திருந்தார். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "ஆரம்பத்தில் ரன்களை எடுப்பது சற்று கடினமாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு செஷன் மற்றும் பந்துவீச்சாளர் மீது கவனம் செலுத்தினேன். ஆடுகளத்தில் நன்றாக செட்டில் ஆனதும் பந்துகளை எங்கே அடிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் வைத்திருந்தேன்." என்றார்.

சதம் அடித்ததும் காயத்தால் களத்தில் இருந்து வெளியேறியது குறித்து, அவர் கூறுகையில், "சிறிது நேரம் பேட்டிங் செய்த பிறகு, என் முதுகு சரியில்லை. நான் வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் என் முதுகில் இருந்த பிரச்னை மிகவும் பெரியது. நான் செல்ல வேண்டியிருந்தது. " என்று கூறினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ஃபராஸ் குறித்து கேப்டன் ரோகித் கூறியது என்ன?

போட்டிக்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “சர்ஃபராஸ் பேட்டிங் செய்வதை நான் பார்த்ததில்லை. ஆனால் கடினமான சூழ்நிலையிலும் அவர் அற்புதமாக செயல்பட்டார் என்று அனைத்து மும்பை வீரர்களும் கூறினார்கள். அவர் பெரிய ரன்கள் எடுத்தார்." என்றார்.

"அவர் 300 ரன்கள், இரட்டை சதம் அடித்துள்ளார். அடிக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உள்ளது. நான்கைந்து வருடங்களாக உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருகிறார். அறிமுக வீரர்கள் பதற்றமாக இருப்பது வழக்கம். ஆனால் சர்ஃபராஸ் கான் பதற்றமாக இருந்ததாக நான் உணரவில்லை. அவர் தனது பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் விளையாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார். பார்க்க நன்றாக இருந்தது." என்று கூறினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜடேஜா, ஜெய்ஸ்வால் குறித்து ரோகித் என்ன சொன்னார்?

போட்டி முடிந்ததும், இந்திய வீரர் ரோகித்திடம் இந்த ஆட்டம் குறித்து கேட்டபோது, "டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமானது அல்ல. ஐந்து நாட்கள் விளையாடுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இங்கிலாந்து சிறப்பாக விளையாடியதால் எங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. எங்களது பந்துவீச்சு வலுவாக உள்ளது. மறுநாள் நாங்கள் திரும்பி வந்த விதம் ஆச்சரியமாக இருந்தது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்." என்றார்.

போட்டியின் திருப்புமுனைகள் குறித்து பேசிய ரோஹித், "பல திருப்பு முனைகள் இருந்தன. டாஸ் வெல்வது நல்லது, ஏனென்றால் அதன் முக்கியத்துவம் எங்களுக்குத் தெரியும். பந்துவீச்சாளர்கள் வலுவாக மீண்டு வந்தனர். ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான் ஆகிய இரண்டு இளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்றி, எங்கள் வேலை பாதி முடிந்தது. அந்த முன்னிலையை எங்களுக்குக் கொடுத்தார். அதுதான் எங்களுக்குத் தேவை. நிச்சயமாக இரண்டாவது இன்னிங்ஸில், ஜடேஜா பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்டார்." என்று கூறினார்.

ஜெய்ஸ்வால் குறித்து கேப்டன் ரோகித் கூறுகையில், "நான் அவருடன் இங்கும், விசாகப்பட்டினத்திலும் நிறைய பேசியுள்ளேன். அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. அவர் தனது கேரியரை சிறப்பாக தொடங்கினார், அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகத் தெரிகிறார்” என்றார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடரை வெல்ல விரும்புகிறேன்: பென் ஸ்டோக்ஸ்

இந்த தொடரில் இங்கிலாந்து அணி 1-2 என பின்தங்கியிருந்தாலும், தனது அணி வலுவாக மீண்டு வந்து தொடரை வெல்ல விரும்புவதாக அந்த அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகிறார்.

தொடரில் 1-2 என பின்தங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், "பென் டக்கெட் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். இன்னிங்ஸ் முழுவதும் நாங்கள் அப்படித்தான் விளையாட விரும்பினோம். இந்தியாவின் ஸ்கோரை நெருங்க விரும்பினோம். சில நேரங்களில் எங்கள் திட்டம் வேலை செய்கிறது. எப்போது அது நடக்காது." என்றார்.

தனது அணி இங்கிருந்து மீண்டு வர விரும்புவதாகவும், இந்தத் தொடரை வெல்ல விரும்புவதாகவும் ஸ்டோக்ஸ் கூறினார்.

"தற்போது தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளோம், மீண்டும் மீண்டும் தொடரை வெல்ல எங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடரை வெல்ல அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும், அதையே செய்ய விரும்புகிறோம்" என்றார் அவர்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி

  • இந்த டெஸ்டில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
  • முன்னதாக, 2021ல் நியூசிலாந்துக்கு எதிராக (372 ரன்கள் வித்தியாசத்தில்) ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
  • ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணிக்கு இது இரண்டாவது பெரிய தோல்வியாகும். தவிர, டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் எட்டாவது பெரிய வெற்றி இதுவாகும்.
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்னிங்ஸின் போது 12 சிக்ஸர்களை அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையை சமன் செய்துள்ளார்.
  • வாசிம் அக்ரம் 1996 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 257 ரன்கள் எடுத்திருந்த போது அதே எண்ணிக்கையிலான சிக்ஸர்களை (12) அடித்திருந்தார்.
  • அதேசமயம், இந்தியாவைப் பொருத்தவரை, இந்த சாதனை இதற்கு முன்பு நவ்ஜோத் சிங் சித்து (எட்டு சிக்ஸர்கள்) பெயரில் இருந்தது.
  • இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இரண்டாவது இந்திய மற்றும் 9வது சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.

https://www.bbc.com/tamil/articles/cyx72p9rngko

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்ஃபராஸ் கான் தனித்துவமான பேட்டிங் பாணியை வளர்த்தது எப்படி? ஒருநாள் போட்டிகளிலும் சாதிப்பாரா?

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விமல் குமார்
  • பதவி, மூத்த பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தனது முதல் டெஸ்டிலேயே 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 130 ரன்கள் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான்.

ராஜ்கோட் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதம் அடிக்காமல் ஒரே இன்னிங்சில் ஒரு சதம் மூலம் சர்பராஸ் கான் இந்த சாதனையை செய்திருந்தால், சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த அதே கைதட்டல் இவருக்கும் கிடைத்திருக்கும்.

26 வயதான இந்த மும்பை பேட்ஸ்மேன், தனது டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகத்திற்காக பல ஆண்டுகள் காத்திருந்ததை வேறு எந்த கிரிக்கெட் வீரரின் பயணத்தோடும் ஒப்பிட முடியாது.

ராஜ்கோட் டெஸ்டின் முதல் நாளில் சர்ஃபராஸ் கானின் வேகம் மற்றும் அவரது பேட்டிங் பாணி இந்த வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பதைப் போல அமைந்திருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் பல பகுதிகளில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் தனது மகன் கலந்து கொள்ள, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் சர்ஃபராஸ் கானை அழைத்துக் கொண்டு காரில் பயணித்திருக்கிறார் தந்தை நெளஷத் கான். அவர் பார்க்க, இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் கான் விளையாடியது தந்தையின் பல ஆண்டு கால தவத்தைப் பூர்த்தி செய்வது போல அமைந்தது.

தந்தையின் தவம்

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

சர்ஃபராஸ் கான் தனது தந்தையுடன்

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விஜய் யாதவின் ஃபரிதாபாத் அபிமன்யு கிரிக்கெட் அகாடமி, முகமது ஷமியின் சொந்த அகாடமி, டேராடூன் கிரிக்கெட் அகாடமி, கான்பூரில் குல்தீப் யாதவின் பயிற்சியாளர் நடத்தும் அகாடமி, காசியாபாத்தில் உள்ள டிஎன்எம் கிரிக்கெட் அகாடமி, மதுராவின் அச்சீவர்ஸ் அகாடமி, மீரட்டில் புவனேஷ்வர் குமாரின் பயிற்சியாளர் சஞ்சய் ரஸ்தோகியின் கிரிக்கெட் அகாடமி, டெல்லி பாரத் நகரில் உள்ள கவுதம் கம்பீரின் கிரிக்கெட் அகாடமி, லக்னோவில் விஸ்வஜித் சின்ஹாவின் கிரிக்கெட் அகாடமி அல்லது ஆக்ரா, லக்னோ, கோரக்பூர் என எத்தனையோ நகரங்கள்....

சர்ஃபராஸின் தந்தை சளைக்காமல் அவரை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் பயணித்தார்.

தந்தை நெளஷத் கான் தான் சர்ஃபராஸ் கானின் முதல் பயிற்சியாளர். நெளஷத் கானின் அர்ப்பணிப்பு குறித்து பல கதைகளை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் அகாடமிகளின் பயிற்சியாளர்கள் கூறுவார்கள்.

சர்ஃபராஸ் கானின் பல ஆண்டுகால போராட்டத்தைப் பார்த்த எல்லோரும், "உங்கள் மகன் நிச்சயமாக இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவார்" என தந்தை நெளஷத்திற்கு ஆறுதல் கூறினார்கள்.

கடவுள் கொடுத்தால் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பார் என்று சொல்வார்கள். நெளஷத்துக்கும் அப்படித்தான் நடந்தது.

இந்த மாதம், தென்னாப்பிரிக்காவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் அவரது இளைய மகன் முஷீர் கான் சதம் அடித்ததை அனைவரும் பார்த்தனர். மறுபுறம் மூத்த மகன் சர்ஃபராஸுக்கும் இறுதியாக அவர் எதிர்பார்த்த டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பு கிடைத்தது.

 

தனித்துவமான பேட்டிங் பாணியை வளர்த்தது எப்படி?

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுனில் கவாஸ்கரைத் தவிர்த்து, இந்திய கிரிக்கெட்டில் திலாவர் ஹுசைன் (1964) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (2021) ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே தங்கள் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து சாதனை படைத்திருந்தனர்.

இப்போது அதையே செய்ததன் மூலம், மும்பையின் புகழ் பெற்ற பேட்டிங் குடும்பத்தின் மூன்றாவது உறுப்பினராக மாறியிருக்கிறார் சர்ஃபராஸ்.

ஆனால், சர்ஃபராஸின் பேட்டிங்கில் அந்த வழக்கமான மும்பை ஸ்டைல் இல்லை. சிறிய நகரங்களில் இருந்து வந்து ஆடக் கூடிய ஒரு வீரரின் கவலையற்ற, மகிழ்ச்சியான பேட்டிங் பாணி தென்பட்டது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்ஃபராஸ் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து இந்த இடத்தை அடைந்துள்ளார். இரண்டாவது காரணம், சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கைப் பார்த்து வளர்ந்தது மட்டுமல்லாது ரோகித் சர்மாவின் அதிரடி பேட்டிங் ஸ்டைலையும் ரசிப்பவர் சர்ஃபராஸ்.

சர்ஃபராஸின் இந்த தனித்துவமான பேட்டிங் பாணியைப் பார்த்த கவாஸ்கர், வர்ணனை செய்யும் போது ஒரு புதிய அடைமொழியை உருவாக்கினார்.

ஜெய்ஸ்வால்-சர்ஃபராஸ் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை ஏதோ பள்ளி அல்லது கிளப் பந்துவீச்சாளர்களை போல கையாண்டு, திணறடித்த போது, "இது நவி மும்பை ஸ்கூல் ஆஃப் பேட்டிங் ஸ்டைல்" என்றார் கவாஸ்கர்.

இதுகுறித்து ஆங்கில வர்ணனையாளர் கிரேம் ஸ்வானிடம் விளக்கம் அளித்த கவாஸ்கர், "கடந்த சில ஆண்டுகளில் மும்பை நகரம் எப்படி நவி மும்பை வரை விரிவடைந்ததோ அதேபோல, பிரபல மும்பை குடும்பத்தின் ஸ்கூல் ஆஃப் பேட்டிங்கிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

 

ஒருநாள் போட்டியிலும் சாதிப்பாரா?

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ஃபராஸின் தந்தைக்கு கவிதைகள் மிகவும் பிடிக்கும். தன் காரில் கிரிக்கெட் போட்டிகளுக்காக இரு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு போகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கவிதைகள் சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

சர்ஃபராஸ் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். பல வல்லுநர்கள் அவரது ஆட்டத்தில் 1990களின் மற்றொரு திறமையான மும்பை பேட்ஸ்மேனான வினோத் காம்ப்ளியின் ஒரு சாயலைப் பார்க்கிறார்கள்.

காம்ப்ளி ஒரு இடது கை பேட்ஸ்மேன். டெண்டுல்கர் போன்ற சமகால ஜாம்பவான்களுக்கு முன்னால் கூட அவர் தனக்கென ஒரு தனி பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு ஆடிய விதத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

இன்று, சர்ஃபராஸின் முன்னால் இருப்பவர் ஜெய்ஸ்வால். இவர் மும்பையைச் சேர்ந்தவர், நான்கு ஆண்டுகள் இளையவர். இப்போது சர்ஃபராஸ், ஜெய்ஸ்வாலுடன் ஒப்பிடப்படுவார்.

ஜெய்ஸ்வால் இந்த கிரிக்கெட் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏனெனில் அவர் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு சிறப்பான தொடக்கம் கண்டுள்ளார்.

சர்ஃபராஸ் இந்தியாவுக்காக கிரிக்கெட்டின் குறுகிய வடிவமான டி20-யில் விளையாட முடியாமல் போகலாம். ஆனால், ஒருநாள் கிரிக்கெட்டில் சர்ஃபராஸ் போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்புகிறார்.

 

சர்ஃபராஸ் எந்தளவு திறமையானவர்?

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,INSTAGRAM/SARFARAZKHAN

ஆரம்ப கால வெற்றிக்குப் பிறகு, தனக்கு கிடைத்த புகழ் போதையில் இருந்தும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தும் காம்ப்ளியைக் காப்பாற்ற யாரும் இல்லை. ஆனால், 26 வயதான சர்ஃபராஸ், இந்தியாவுக்காக விளையாடுவதற்கு முன்பே கிரிக்கெட் களத்தில் பல பின்னடைவுகளைச் சந்தித்து, மனதளவில் வலிமையானவராக மாறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சி, தர்மசாலாவில் நடக்கவுள்ள போட்டிகளிலும் சர்ஃபராஸின் அதிரடி பேட்டிங் தொடர்ந்தால், இந்திய அணிக்காக விளையாட பல நாடுகளுக்கு பல லட்சம் கிலோமீட்டர்கள் கடந்து விமானத்தில் பயணிப்பார் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

சர்ஃபராஸின் கிரிக்கெட்டுக்காகவே இதுவரை 1.5 லட்சம் கிலோமீட்டரில் 90 சதவீத தூரத்தை தனது காரில் பயணித்துள்ள அவரது தந்தைக்கு இதுவே மிகப்பெரிய குருதட்சணையாக இருக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c6p914n4y3eo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ ரூட்; அறிமுக வீரர் தீப் அபாரம், அஷ்வின் மைல்கல் சாதனை

Published By: VISHNU   23 FEB, 2024 | 10:25 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தோடரில் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் ரஞ்சி விளையாட்டரங்கில் நான்காவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்ட இங்கிலாந்து, முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட்டின் அற்புதமான சதத்தின் உதவியுடன் சிறந்த நிலையை அடைந்துள்ளது.

2302_akash_deep_getting_family_blessings

photo:- akash deep getting family blessings 

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆகாஷ் தீப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் தனது குடும்பத்தினரிடம் ஆசி பெறுவதைப் படத்தில் காணலாம்.

இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய ஜோ ரூட் இந்தப் போட்டியில் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடி தனது 31ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

2302_akash_deep_ind_vs_eng.png

அதேவேளை, இந்த டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு வழங்கப்பட்ட ஜஸ்ப்ரிட் பும்ராவுக்குப் பதிலாக அணியில் இடம்பெற்ற அறிமுக வீரர் ஆகாஷ் தீப் எதிரணியின் முதல் 3 வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்து அணியினரின் பாராட்டைப் பெற்றார். ஆனால், அதன் பின்னர் அவரால் சாதிக்க முடியாமல் போனது.

இது இவ்வாறிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் மைல்கல் சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

2302_ashwin_1st_india_to_take_100_wkts_v

ஜொனி பெயாஸ்டோவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிராக 100 வீக்கெட்களை வீழ்த்திய முதலாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் நிலைநாட்டினார்.

ஸக் க்ரோவ்லி, பென் டக்கெட் (11) ஆகிய இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்கள் ஆகாஷ் தீப்பினால் வீழ்த்தப்பட்டன.

மூன்றாவதாக ஆட்டம் இழந்த ஸக் க்ரோவ்லி 42 ஓட்டங்களைப் பெற்றார். இதனிடையெ ஒலி போப் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் ஜோ ரூட், ஜொனி பெயாஸ்டோ ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஜொனி பெயாஸ்டோ (38), அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் (3) ஆகிய இருவரும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (112 - 5 விக்.)

இதன் காரணமாக இந்திய அணியினர் பூரிப்பில் மிதந்தனர்.

ஆனால், ஜோ ரூட், பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 113 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

பென் ஃபோக்ஸ் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 126 பந்துகளை எதிர்கொண்டு 47 ஓட்டங்களைப் பெற்றார்.

அடுத்து களம் நுழைந்த டொம் ஹாட்லி 13 ஓட்டங்களுடன் வெளியேற இங்கிலாந்து மீண்டும் ஆட்டம் கண்டது.

ஆனால், ஜோ ரூட், ஒலி ரொபின்சன் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தின் மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

ஜோ ரூட் 226 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள் உட்பட 106 ஓட்டங்களுடனும் ஒலி ரொபின்சன் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 70 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/177160

STUMPS
4th Test, Ranchi, February 23 - 27, 2024, England tour of India
England FlagEngland             353
India FlagIndia     (73 ov) 219/7

Day 2 - India trail by 134 runs.

Current RR: 3.00

 • Last 10 ov (RR): 15/0 (1.50)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.