Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Lyles wins men’s 100m gold, Mahuchikh takes women’s high jump, and more | Day 9 Athletics Highlights

https://youtu.be/vaNFOBQNdyM?si=_vb4pZprrMt10wfe

  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

ஒலிம்பிக் போட்டி மட்டுமா நடக்கிறது!!! ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, ஒரே ஒரு  வாரத்தில் மாத்திரம் விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஒலிம்பிக் கிராமங்களில் சுமாராக

இணையவன்

எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொத

ஏராளன்

பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்திச்செல்லவுள்ள புலம்பெயர் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா 10 MAY, 2024 | 01:11 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்ட

  • கருத்துக்கள உறவுகள்
Posted

“என்னை கல்யாணம் செய்துகொள்கிறியா?;”ஒலிம்பிக்கில் தங்கம்வென்ற சகவீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்

தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரிடம், அவரது காதலர் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரானது கடந்த ஜூலை 25அம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இந்தியா சார்பில், 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். களைகட்டி வரும் இந்த ஒலிம்பிக் திருவிழாவில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தங்கம் வென்ற சீன பேட்மிண்டன் வீராங்கனை ஒருவரிடம், அவரது காதலர் திருமணம் செய்துகொள்வதாக ஒப்புக்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

https://thinakkural.lk/article/307351

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் அரை இறுதிக்கு முன்னேறிய முதலாவது இலங்கையர் அருண தர்ஷன

Published By: VISHNU   05 AUG, 2024 | 12:28 AM

image

(நெவில் அன்தனி)

பிரான்ஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிமை (04) நடைபெற்ற ஒலிம்பிக் 2024 விளையாட்டு விழாவில் ஓர் அம்சமான ஆண்களுக்கான 400 மீற்றர் அரை இறுதிப் போட்டியில் பங்குபற்ற அருண தர்ஷன தகுதிபெற்றார்.

PHOTO-2024-08-04-23-47-09.jpg

இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதலாவது வீரர் என்ற சாதனையை அருண தர்ஷன படைத்தார்.

400 மீற்றர் தகுதிகாண் சுற்றின் 5ஆவது போட்டியில் பங்கேற்ற அருண தர்ஷன அப் போட்டியை 44.99 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்று அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

இது அவரது தனிப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுதியாகும்.

அப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (44.78 செக்.) முதலாம் இடத்தையும் கனடா வீரர் கிறிஸ்டோபர் மொரேல்ஸ் வில்லியம்ஸ் (44.96 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

அமெரிக்கர்களான மைக்கல் நோர்மன் (44.10 செக்.), குவின்சி ஹோல் (44.28 செக்.) ஆகிய இருவரும் தத்தமது தகுதிகாண் போட்டிகளில் முதலாம் இடங்களைப் பெற்றனர்.

தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகள் நடத்தப்பட்டதுடன் மொத்தம் 44 வீரர்கள் பங்குபற்றினர்.  அரை இறுதிக்கு தகுதிபெற்ற 18 வீரர்களில் இணை 14ஆவது இடத்தை  அருண தர்ஷன  பெற்றார்.

எவ்வாறாயினும் இரண்டாம் வாய்ப்பில் பங்குபற்றவுள்ள 3 வீரர்கள் அருண தர்ஷனவைவிட சிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/190280

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினேஷ் பொகாட்: பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான குரல் முதல் ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை

வினேஷ் பொகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 ஆகஸ்ட் 2024
புதுப்பிக்கப்பட்டது 42 நிமிடங்களுக்கு முன்னர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் பொகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அவர் அசத்தியுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ்(Yusneylis Guzman Lopez) என்ற வீராங்கனையை வினேஷ் பொகாட் எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் வென்றால் பதக்கத்தை உறுதி செய்யலாம் என்பதால் வினேஷ் பொகாட் தொடக்கத்திலேயே முழு தீவிரத்துடன் களம் கண்டார். கியூப வீராங்கனையின் சவாலை முற்றிலுமாக முறியடித்த அவர், 5-0 என்ற கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் வெள்ளி பதக்கத்தை வினேஷ் பொகாட் உறுதிப்படுத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் வெல்லும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை அவர் வெல்வார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஒரே நாளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

முதலில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வினேஷ் தோற்கடித்தார். பின்னர் காலிறுதியில் யுக்ரேனிய மல்யுத்த வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜப்பான் வீராங்கனை யுய் சுசாகி நான்கு முறை உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையும் ஆவார்.

சுசாகியின் சாதனைகள் பார்க்கும் போது, பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் யுய் சுசாகிக்கு எதிராக வினேஷ் பெற்ற வெற்றி எவ்வளவு பெரியது என்பதை கற்பனை செய்ய முடியும்.

பிபிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ், இந்தியா, வினேஷ் பொகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வினேஷ் போகட் 'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது 2022'க்கு பரிந்துரைக்கப்பட்டவர் ஆவார்.

'பிபிசி இந்திய சிறந்த விளையாட்டு வீராங்கனை' விருதின் நோக்கம், இந்திய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் சாதனைகளை கவுரவிப்பது ஆகும். வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்களை விவாதிப்பது மற்றும் உலகம் அறியாத அவர்களின் சொல்லப்படாத கதைகளை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் ஆகும்.

கடைசி 20 வினாடிகளில் மாறிய ஆட்டம்

ஜப்பானிய வீராங்கனை யுய் சுசாகி மல்யுத்த உலகில் மிகப்பெரிய வீராங்கனையாக கருதப்படுகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்பே வினேஷ் பொகாட்டிற்கு ஒரு கடினமான சவால் காத்திருப்பதாக கருதப்பட்டது.

இந்தப் போட்டிக்கு முன்பாக, சர்வதேச போட்டிகளில் யுய் சுசாகி தோல்வியையே சந்திக்காதவராக வலம் வந்தார். வினேஷுக்கு எதிரான ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி 2-0 என முன்னிலையில் சுசாகி இருந்தார். இதற்குப் பிறகுதான், மல்யுத்த உலகில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்டதை வினேஷ் செய்தார்.

தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த வினேஷ் ஆட்டத்தின் கடைசி 20 வினாடிகளில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

வெற்றிக்குப் பிறகு, வினேஷ் பொகாட் கண்களில் வடிந்த ஆனந்தக் கண்ணீர் தெளிவாகத் தெரிந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்குள், வினேஷ் காலிறுதி ஆட்டத்தில் விளையாடினார், இந்த ஆட்டத்தில் அவர் 7-5 என்ற கணக்கில் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்தார்.

இந்த போட்டியில், வினேஷ் ஆரம்பத்தில் 4-0 என முன்னிலை பெற்றார். பின்னர் ஒக்ஸானா சவால் கொடுத்தாலும் அது மிகவும் தாமதமான ஒன்றாகிவிட்டது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ், இந்தியா, வினேஷ் பொகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி போராட்டத்தில் இருந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து வீராங்கனைகளில் வினேஷ் பொகாட்டும் ஒருவர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பு, அவர் இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நீண்ட காலமாக போராடி வந்தார்.

கடந்த ஆண்டு, இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் சில இந்திய மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷன் மறுத்தார்.

பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்தன. இந்த நேரத்தில், விளையாட்டு வரலாற்றில் இதுவரை கண்டிராத காட்சிகளும் அரங்கேறின.

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாயும், வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு விருதுகளான 'கேல் ரத்னா' மற்றும் 'அர்ஜுனா விருது' ஆகியவற்றை டெல்லியில் நடைபாதையில் விட்டுச் சென்றனர். அதனை பிரதமரிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் இருவரும் போலிஸாரிடம் கேட்டுக் கொண்டனர்.

வினேஷ் போகட் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய திறந்த கடிதத்தில், பதக்கத்தை திருப்பித் தருவதாகக் கூறியிருந்தார். மேலும் அந்த கடிதத்தில், "இந்த விருதுகளுக்கு இனி என் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், மேலும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை அரசாங்கத்திடம் திருப்பி அளித்தார்.

இந்த வழக்கில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தனது கருத்தில் கூறியுள்ளது.

சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்து

பாரிஸ் ஒலிம்பிக்ஸ், இந்தியா, வினேஷ் பொகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் பொகட்டின் மாமா மற்றும் பயிற்சியாளரான மகாவீர் போகத் உட்பட பலர் வினேஷின் இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில்,''நான்கு முறை உலக சாம்பியனையும் , நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் இன்று அடுத்தடுத்த போட்டியில், இந்தியாவின் சிங்கமான வினேஷ் பொகாட் தோற்கடித்துள்ளார். மேலும்,காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை தோற்கடித்தார். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், வினேஷ் தனது நாட்டில் உதைத்து நசுக்கப்பட்டு, தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார். நாட்டின் அமைப்பால் தோற்கடிக்கப்பட்ட இந்த பெண்தான் உலகை வெல்லப்போகிறார்'' என பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த கிராமமே, இந்த சாதனையை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளதாக மகாவீர் போகத் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “2016 ஆம் ஆண்டில், வினேஷ் ஒலிம்பிக் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அது நடக்கவில்லை. இதே போலதான் 2020 ஆம் ஆண்டில் நடந்தது, அவர் ஒலிம்பிக் பதக்கத்தை தவறவிட்டார். முதல் சுற்றிலே மிகவும் வலுவான ஜப்பானின் வீராங்கனையை வினேஷ் தோற்கடித்து உள்ளார். தற்போது அவர் தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று நாங்கள் நம்புகிறோம்.’’ என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உலகையே ஆழப்போகும் இந்திய வீராங்கனை – குவியும் புகழாரம்

vinesh-phogat.jpg?resize=661,375

ஒலிம்பிக் போட்டிகளில் பல சுவாரஷ்யங்கள் , பல வரலாற்று வெற்றிகள் என்பன பதிவாகி கொண்டிருக்கும் நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

இதில், கியூபா வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெற்றிபெற்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.

வரலாற்றுச் சாதனை படைத்த வினேஷ் போகத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 

குறிப்பாக மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக முன்னாள் எம்.பி பிரிஜ் பூஷண் சிங் வீராங்கனைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய வீராங்கனைகள் பலர் டெல்லியில் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டங்களில் முன்னிலையில் நின்றவர் வினேஷ் போகத். இதனால் அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவரை அவமதித்தவர்களுக்கு எதிரான அடி என்று சக விளையாட்டு வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாளில் உலகின் தலைசிறந்த மூன்று மல்யுத்த வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார்.

வினேஷ் மற்றும் அவரது சக வீராங்கனைகளின் போராட்டத்தை விமர்சித்தவர்கள், அவர்களின் எண்ணம் மற்றும் திறன் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் ஆகிய அனைவருக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது.

இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டது. இதுதான் சாம்பியன்களின் அடையாளம், அவர்கள் களத்தில் இருந்துதான் பதிலளிப்பார்கள்.

வாழ்த்துகள் வினேஷ். பாரிஸ் நகரில் உங்கள் வெற்றியின் எதிரொலி டெல்லி வரை தெளிவாகக் கேட்கிறது” என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

முன்னதாக சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, சொந்த நாடே உதறித்தள்ளியது இப்போது அவர் உலகையே ஆளப்போகிறார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394966

 

####################   ##################   #############

 

 

3791803-vinesh.webp?resize=750,375&ssl=1

ஒலிம்பிக் 2024: வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி!

நீர்ச்சத்துக்  குறைபாடு காரணமாக பாரீசில் உள்ள மருத்துவமனையில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த வினேஷ் போகத்,  100 கிராம் எடை கூடுதலாக உள்ள காரணத்தினால் தகுதி  நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக  இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோயுள்ளது. குறித்த சம்பவம்  இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் பதக்கத்தைப்  பறிகொடுத்த வினேஷ் போகத்துக்கு அனைவரும் தமது  ஆறுதலைத்  தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை இரவு முழுவதும் உடல் எடையைக் குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால்  நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாரீசில் உள்ள மருத்துவமனையில் வினேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1394988

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் - என்ன காரணம்?

வினேஷ் போகத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 ஆகஸ்ட் 2024, 06:57 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மீண்டு வாருங்கள் வினேஷ் போகாட்' என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகளிர் மல்யுத்தம், 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது.

வினேஷ், தனது எடையைக் குறைக்க இரவு முழுவதும் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 50 கிலோவுக்கு மேல் சில கிராம்கள் கூடுதல் எடையுடன் இருந்தார்.” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் குழுவால் மேலும் கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாது என்றும், வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறும் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் அமைச்சர் பேச்சு

பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா பேசினார்.

மக்களவையில் பேசிய அவர், "வினேஷ் போகாட்டின் எடை இன்று 50 கிலோ 100 கிராம் கண்டறியப்பட்டது. அதன் பிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு உலக மல்யுத்த சம்மேளனத்திடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, பாரிஸில் இருக்கிறார். அவருடன் பிரதமர் பேசியுள்ளார். தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனிப்பட்ட உதவியாளர்கள் உள்பட வினேஷ் போகாட்டிற்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து கொடுத்தது." என்று கூறினார்.

வினேஷ் போகாட், பாரிஸ் ஒலிம்பிக்

பட மூலாதாரம்,SAMSAT

வினேஷ் போகாட் தகுதி நீக்கம்

நேற்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து இந்தச் சாதனையை அவர் படைத்திருந்தார்.

இந்த நிலையில், அவர் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால், அவரது பதக்க கனவு பறிபோயுள்ளது.

“வினேஷ் 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பது இன்று காலை கண்டறியப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என இந்திய அணியின் பயிற்சியாளர் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

'50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம்'

'50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம்'

பட மூலாதாரம்,EPA

புதன்கிழமை காலை பிபிசி இந்தி நிருபர் அபினவ் கோயலுடன் பேசிய, இந்திய மல்யுத்த பஜ்ரங் புனியாவும் வினேஷ் போகாட்டின் எடை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

"எந்த வீரரும் வெற்றியை முதலில் கொண்டாடுவதில்லை, முதலில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனத் தெரியும். ஆனால் 50 கிலோவுக்கு கீழ் எடையைக் கொண்டுவருவது கடினம். ஆண்களுக்கு விரைவில் உடல் எடை குறையும், காரணம் அதிகமாக வியர்க்கும். பெண்கள் தான் மிகவும் சிரமப்படுகிறார்கள். 50 கிலோவுக்கும் கீழ் எடையைக் கொண்டுவர அவர்கள் போராட வேண்டியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய பஜ்ரங் புனியா, "வினேஷ் கடந்த 6 மாதங்களாக உடல் எடையை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் தண்ணீர் மற்றும் ஒரு ரொட்டி அல்லது இரண்டு ரொட்டிகள் மட்டுமே சாப்பிட்டார். ஆனாலும் உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம் தான்" என்றார்.

வினேஷ் போகாட் இறுதிப்போட்டி வரை சென்றதே எங்களுக்கு பதக்கம் வென்றது போல தான் என்றும் அவர் கூறினார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு

பட மூலாதாரம்,@WEARETEAMINDIA

படக்குறிப்பு,இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிரதமர் மோதி கூறியது என்ன?

பிரதமர் மோதி கூறியது என்ன?

பட மூலாதாரம்,@NARENDRAMODI

பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர்.

இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் வேதனை உணர்வை, என் வார்த்தைகள் வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.

சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவிடம் பேசிய பிரதமர் மோதி, இந்த விவகாரம் மற்றும் வினேஷின் பின்னடைவை அடுத்து, இந்திய அணியின் முன் உள்ள வழிகள் குறித்து நேரடியாகத் தகவல்களைக் கேட்டறிந்தார் என பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வினேஷுக்கு உதவுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராயும்படி அவர் பி.டி.உஷாவிடம் கூறியுள்ளார்.

மேலும் வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கடும் எதிர்ப்பை பதிவு செய்யவும் அவர் பி.டி.உஷாவிடம் வலியுறுத்தியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

வினேஷ் போகாட்டின் குடும்பத்தினர் கூறுவது என்ன?

“நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நாடே தங்க பதக்கத்தை எதிர்பார்த்தது. இவ்வளவு தூரம் வந்தபிறகு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நான் மட்டுமல்ல நாடே வருத்தத்தில் உள்ளது. அவர் எதிர்காலத்தில் பதக்கம் வெல்வார்'' என வினேஷ் போகாட்டின் மாமா மகாவீர் போகாட் கூறியுள்ளார்.

அரசியல் தலைவர்களின் கருத்து

ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங், இந்த சம்பவம் இந்தியாவிற்கு அவமானம் என கூறியுள்ளார்.

தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது வினேஷ் போகாட்டுக்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே அவமானம். உலக சாதனை படைக்கவிருந்தார் வினேஷ் போகாட், 100 கிராம் எடை அதிகம் என்பதைக் காட்டி தகுதி நீக்கம் செய்தது மிகப்பெரிய அநீதி. ஒட்டுமொத்த நாடும் வினேஷுடன் நிற்கிறது. இந்திய அரசு இதில் தலையிட வேண்டும், தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஒலிம்பிக்கைப் புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

"வினேஷ் போகாட் இறுதிப்போட்டியில் விளையாட முடியாதது பற்றி விசாரிக்கப்பட வேண்டும், மேலும் அதன் உண்மையான காரணம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்." என எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க‌னுக்கும் சீன‌னும் தான் இந்த‌ ஒலிம்பிக்கில் அதிக‌ம் சாதிச்ச‌து ம‌ற்ற‌ நாடுக‌ள் எதிர் பார்த்த‌ அள‌வுக்கு ப‌த‌க்க‌ம் வெல்ல‌ வில்லை.......................எல்லா புக‌ழும் அமெரிக்க‌னுக்கே ஹா ஹா............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனாவைச் சேர்ந்த 11 வயது இளையவர் ஒலிம்பிக்கில் பங்கேற்று சாதனை

சீனாவைச் சேர்ந்த 11 வயது ஸ்கேட்போர்டிங் வீரர், இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்ற இளையவர் என்ற வரலாறு படைத்தார்.

அவருக்கு 11 வயது என்பதுடன், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டி நிறைவடைவதற்கு முன்தினம் பிறந்துள்ளார்.

Zheng Haohao தனது ஸ்கேட்போர்டிங் போட்டியில் 63.19 புள்ளிகளுடன் 18வது இடத்தைப் பிடித்தார்.

https://thinakkural.lk/article/307516

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஹாக்கி வெண்கல பதக்கப் போட்டி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணியினர்
8 ஆகஸ்ட் 2024

ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி. ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தன. ஆட்டத்தின் முதல் பகுதி வரை இரு அணிகளும் எந்த கோல்களையும் எடுக்கவில்லை.

இரண்டாம் பகுதியில் முதல் கோலை பதிவு செய்தது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்த சில நிமிடங்களிலேயே சமன் செய்யும் வகையில் இந்தியா ஒரு கோல் அடித்தது.

இலக்கை நோக்கி மூன்றாவது ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியா இரண்டாவது கோலை பதிவு செய்தது. அதன் பின்னர் ஸ்பெயின் அணியினருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தும், இந்திய அணியின் சாதுர்யமான ஆட்டத்தால், ஸ்பெயின் அணி கோல் அடிப்பது தடுக்கப்பட்டு பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

 

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். இரண்டாவது கோலையும் அவர்தான் அடித்தார். இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை அவர் 11 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன்பு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது ஸ்பெயின் அணி.

இந்திய அணியின் ஶ்ரீஜீஸுக்கு இது கடைசி சர்வதேச இறுதி போட்டி. பிரியாவிடை தரும் வகையில், அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் அவரை தோளில் தூக்கி வைத்து நடக்க, அவருக்கு அனைவரும் மரியாதை செலுத்தி போட்டி முடிவை மிகவும் நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டனர்.

இந்திய பிரதமர் வாழ்த்து

இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய தலைவர்கள் தங்களில் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில், "எதிர்கால சந்ததியினர் அனைவரும் கொண்டாட இருக்கும் வெற்றி," என்று குறிப்பிட்டார்.

"ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பிரகாசமாக ஜொலிக்கிறது. தாய்நாட்டுக்கு வெண்கலப் பதக்கத்துடன் திரும்பி வருகிறது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி பதக்கம் வென்றிருப்பது கூடுதல் சிறப்பு" என்றும் மேற்கோள் காட்டினார்.

வீரர்களுக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்த அவர், இந்திய ஹாக்கி அணியினருடன் ஒவ்வோர் இந்தியரும் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதாகவும், இந்த வெற்றி இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டை மேலும் பிரபலமடைய வைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒலிம்பிக் 2024: வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம்,TWITTER/NARENDRAMODI

படக்குறிப்பு,இந்திய அணியை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோதி

பதக்கங்களை வென்று குவித்த ஹாக்கி அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது.

இதுவரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 12 பதக்கங்களை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இன்றும் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நாஜி ஜெர்மனியில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண ஹிட்லர் நேரடியாக மைதானத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. 1960இல் வெள்ளிப் பதக்கத்தையும், நான்கு முறை வெண்கலப் பதக்கங்களையும் இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியா இறுதியாக 1980இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி; நதீமும் என் மகனே - நீரஜின் தாய் பெருமிதம்

நீரஜ் நதீம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

9 ஆகஸ்ட் 2024, 01:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் எறிந்தார். அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனையை படைத்தார்.

நீரஜ் சோப்ரா தனது ஆறு முயற்சிகளில் ஐந்தில் தவறிழைத்தார். இரண்டாவது முயற்சியில் அவர் எறிந்த 89.45 மீட்டர் தொலைவே அவருக்குப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது.

கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதையடுத்து, ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் உள்ள நீரஜ் சோப்ராவின் வீட்டில் இருந்தவர்கள் கொண்டாடத் தொடங்கினர்.

நீரஜ் சோப்ரா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார்.

டோக்கியோவில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

நதீம் தங்கப்பதக்கம் பற்றி நீரஜ் கூறியது என்ன?

வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு பேசிய நீரஜ் சோப்ரா, நாட்டிற்காக எப்போதெல்லாம் பதக்கம் வெல்கிறோமோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக உணர்வோம் என கூறினார்.

''நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால், இது அர்ஷத் நதீமின் நாள்'' எனவும் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டார்.

''இன்று போட்டி நன்றாக இருந்தது. ஆனால், ஒவ்வொரு தடகள வீரர்களுக்கும் அவர்களுக்கான நாள் இருக்கும். இன்று அர்ஷத் நதீமின் நாள். எனது சிறந்த திறனை வெளிப்படுத்தினேன். ஆனால் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும். நமது தேசிய கீதம் ஒன்று ஒலிபரப்பப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால், எதிர்காலத்தில் நிச்சயம் வேறு எங்காவது ஒலிபரப்பப்படும்'' என ஏஎன்ஐ செய்தி முகமையிடம் நீரஜ் சோப்ரா கூறினார்.

 
நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார்

நதீமும் என் மகனே - நீரஜ் சோப்ராவின் தாய் பெருமிதம்

நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி, மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

"வெள்ளி பதக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தங்கப் பதக்கம் வென்றவரும் (அர்ஷத் நதீம்) என் மகன்தான். அந்த வெற்றிக்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் மட்டுமின்றி அவரின் தாத்தா தர்ம் சிங் சோப்ரா, அப்பா சதீஸ்குமார் ஆகியோரும் நீரஜ் சோப்ராவின் வெள்ளிப் பதக்க வெற்றியை அவர்களின் கிராமத்தில் கொண்டாடி வருகின்றனர்.

நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார்

வரலாறு படைத்த அர்ஷத் நதீம்

நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் சரியாக வீசவில்லை. பாகிஸ்தானின் அர்ஷத் நதீமும் முதல் முயற்சியில் தவறிழைத்தார்.

இரண்டாவது சுற்றில் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதுநாள் வரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இது வரலாற்று சாதனையாகும்.

அவர் தங்கம் வென்றதன் மூலம் பாகிஸ்தானின் 40 ஆண்டுகளாக ஒலிம்பிக் தங்கக் கனவு நிறைவேறியுள்ளது.

இரண்டாவது முயற்சியில் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தொலைவு 89.45 மீட்டர். அவரது நெருங்கிய போட்டியாளரான பீட்டர்ஸின் தொலைவு 88.54 மீட்டர்.

ஜெர்மனியின் வெபரிடம் இருந்து அவருக்கு கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெபர் 87.40 மீ., புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

இறுதி முயற்சியில் நதீம் 91.79 மீ எறிந்தார், இது போட்டியின் இரண்டாவது அதிகபட்ச தொலைவாகும்.

26 வயதான நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் அதிகபட்சமாக 89.34 மீட்டர் தூரம் எறிந்து தொடர்ந்து இரண்டாவது ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை உயர்த்தினார்.

சோப்ராவின் கிராமத்தில் ஒரு பெரிய திரை அமைக்கப்பட்டது, அதில் அனைவரும் நிகழ்வைப் பார்த்து வெற்றிகரமான தருணத்திற்காக காத்திருந்தனர்.

நீரஜ் நதீம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிரெனடா நாட்டின் ஆண்டன்சன் பீட்டர்ஸ் 88.54 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்

ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில், ஆகஸ்ட் 6ம் தேதி பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

84 மீட்டர் தூரத்தை அடையும் பட்சத்தில் நேரடியாக போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற விதியின் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த சுற்றில் அவர் 89.34 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்தது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துகள் தெரிவித்த மோதி

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நீரஜ் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை படைத்தவர்.

மீண்டும் மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். ஒலிம்பிக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தைப் பெற்று வெற்றியுடன் வீடு திரும்புவதால் இந்தியா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, அவர்களின் கனவுகளை நனவாக்கி நமது தேசத்தை பெருமைப்படுத்துவார்," என்று குறிப்பிட்டார்.

நீரஜ் சோப்ராவின் தங்கக் கனவு

நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இந்த முறையும் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவர் களம் இறங்கினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 87.58மீ தொலைவிற்கு ஈட்டி எறிந்து தங்கத்தை உறுதி செய்தார். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் பெற்றது அதுவே முதல்முறை.

அந்த போட்டியில் ஜேக்கப் வாத்லேஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். விதேஸ்லாவ் வெசெலி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றார்.

துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்திராவை தொடர்ந்து தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். 120 ஆண்டு கால வரலாற்றில், ட்ராக்-அண்ட்-ஃபீல்ட் (track-and-field) பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் டோக்கியோ ஒலிம்பிக்கில் படைத்தார் நீரஜ் சோப்ரா.

 
நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளம் வயதிலிருந்தே பயிற்சி பெறும் நீரஜ்

நீரஜ் சோப்ரா, ஹரியானாவின் பானிபட்டில் உள்ள கந்த்ரா கிராமத்தில் பிறந்தவர். விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா.

உடல் எடை தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்வதற்காகவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் இந்த விளையாட்டை தேர்வு செய்தார் அவர் என்று ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக பானிபட்டில் உள்ளா சிவாஜி மைதானத்தில் ஈட்டி எறிதல் போட்டியை பார்த்து உத்வேகம் அடைந்தார் அவர்.

இந்திய ஈட்டி எறியும் வீரரான ஜெய்வீர் சவுத்ரி, நீரஜிடம் இருந்த திறமையை பார்த்து வியந்து போனார்.

பிறகு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தேவையான பயிற்சிகளையும் வழி காட்டுதல்களையும் வழங்கினார் ஜெய்வீர் சவுத்ரி.

 
நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,13 வயதில் இருந்தே ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகிறார் நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ராவின் நீளும் பதக்கப் பட்டியல்

அதன் பின்னர் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற துவங்கினார் நீரஜ்.

2016ம் ஆண்டு போலாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதினருக்கான ஐ.ஏ.ஏ.எஃப். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்தார் நீரஜ். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்றார். பிறகு 2018ம் ஆண்டு கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளிலும், 2018ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த அவர், 2022ம் ஆண்டு ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

2023ம் ஆண்டு புதாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்று அசத்தினார். அதே ஆண்டு ஹாங்க்ஜூவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்கம் வென்றார்.

 
நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல் - முழு விவரம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்

பாகிஸ்தான் வீரர் நீரஜ் பற்றி கூறுவது என்ன?

நீரஜ் மற்றும் அர்ஷத் பங்கேற்ற போட்டிகளில் இதுவரை 9-0 என்ற கணக்கில் மலைக்க வைக்கும் வெற்றியை பதிவு செய்திருந்தார் நீரஜ். முதல் முறையாக நீரஜுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது.

இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த போட்டி 2016-ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. தெற்காசிய போட்டிகளில் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். அதில் நீரஜ் முதல் இடம் பிடித்தார். அர்ஷத் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கூட, நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு ஆன நிலையில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் அர்ஷத்.

"தெற்காசியாவில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் இரண்டு வீரர்கள் நானும், நீரஜும் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறிய அர்ஷத், நாங்கள் தத்தம் நாடுகளுக்காக உலக அரங்கில் போட்டியிட்டு, நாட்டுக்கு உலக அரங்கில் பெயர் வாங்கித் தருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நீரஜ் சோப்ராவுடன் விளையாடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, பதில் கூறிய அர்ஷத், "ஒவ்வொரு தடகள வீரரும் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். நான் நீரஜுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் எங்களின் நாட்டுக்காக போட்டிகளில் பங்கேற்போம்," என்று கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற கியூபா வீரர்; வரலாற்று சாதனையுடன் ஓய்வையும் அறிவித்தார்!

ஒலிம்பிக் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று கியூபா வீரர் மிஜைன் லோபஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஒலிம்பிக் வரலாற்றில் அதிகப்படியாக 4 தனிநபர் தங்கங்களை வென்றிருந்த அமெரிக்காவின் மைக்கேல் ஃபெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லூயிஸ் (நீளம் தாண்டுதல்), ஆல்ஃபிரட் ஓர்டர் (வட்டு எறிதல்) மற்றும் டென்மார்க்கின் பால் எல்வ்ஸ்ட்ரோம் (படகோட்டம்) முதலிய சொற்ப வீரர்களின் சாதனை பட்டியலில் கியூபாவின் மல்யுத்த வீரர் மிஜைன் லோபஸ் என்ற வீரரும் இணைந்திருக்கிறார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பேசிய மிஜைன் லோபஸ், “நான் மீண்டும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தம் செய்ய வருகிறேன். 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் மல்யுத்த வீரராக என் விளையாட்டு வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்” என்று கூறியதாக யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் மேற்கோள் காட்டியது.

2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 130 கிலோ எடைப்பிரிவு கிரேக்க-ரோமன் மல்யுத்ததில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய கியூபா ஜாம்பவான் மிஜைன் லோபஸ், இறுதிப்போட்டியில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என தோற்கடித்து தங்கம் வென்றார்.

இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 5 முறை தங்கம் வெல்லும் முதல்வீரர் மற்றும் தொடர்ச்சியாக தனிநபர் பிரிவில் 5முறை தங்கம் வெல்லும் முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். போட்டிக்கு பிறகு தன்னுடைய ஷூவை கழற்றி மேடையில் வைத்த மிஜைன் லோபஸ், தங்கம் வென்ற மேடையிலேயே தன்னுடைய அதிகாரப்பூர்வ ஓய்வை அறிவித்தார்.

https://thinakkural.lk/article/307572

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒலிம்பிக் விளையாட்டும் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
கொஞ்ச நாட்களாக அந்தப் போட்டிகளை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.

இனி…? 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலாகலமாக நிறைவடைந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

மனு பாகர், ஸ்ரீஜேஷ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,நிறைவு விழாவில் மனு பாகர், இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது.

ஒலிம்பிக் 2024இன் நிறைவு விழா பாரிஸ் நகர மைதானத்தில் நள்ளிரவு 12.30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெற்றது.

இந்த நிறைவு விழாவில் அமெரிக்க இசைக்கலைஞர்களான பில்லி ஐலிஷ் (Billie Eilish), ஸ்னூப் டாக் (Snoop Dogg) மற்றும் பிரபல அமெரிக்க இசைக்குழுவான ரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் (Red Hot Chili Peppers) கலந்து கொண்டனர்.

நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு, தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

வெற்றி பெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் நிறைவு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2028இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் குழுவிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

இந்த அணிவகுப்பு விழாவில் இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர், வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

டாம் குரூஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நிறைவு விழாவில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கலந்து கொண்டு தனது பாணியில் ஒரு ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் (40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம்) முதலிடம் பிடித்துள்ளது. சீனா 91 பதக்கங்களுடன் (40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம்) இரண்டாவது இடத்தில் உள்ளது.

20 தங்கம் உட்பட மொத்தம் 45 பதக்கங்களைப் பெற்ற ஜப்பான் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.

இந்த ஒலிம்பிக்கில், இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களைக் கைப்பற்றி 71-வது இடத்தைப் பிடித்தது.

  • பெண்கள் மற்றும் கலப்பு அணிகள் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் பெற்ற 2 வெண்கலங்கள்
  • ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதலில் ஸ்வப்னில் குசாலே பெற்ற 1 வெண்கலம்
  • ஆண்கள் ஹாக்கியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி பெற்ற வெண்கலம்
  • ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா பெற்ற வெள்ளிப் பதக்கம்
  • ஆண்களுக்கான மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் பெற்ற வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் 2020இல், இந்தியா ஏழு பதக்கங்களுடன் (அதில் ஒன்று தங்கம்) பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மனு பாகர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை மனு பாகர் பெற்றார்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டுக்கு, இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 100 கிராம் எடை அதிகரித்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் அவரது மேல்முறையீட்டு மனு மீது இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை முடிவு வினேஷுக்கு சாதகமாக வந்தால் இந்தியாவுக்கு ஏழு பதக்கங்கள் கிடைக்கும்.

வினேஷ் போகாட் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் இதுகுறித்த முடிவு அறிவிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் ஒரு தங்கப் பதக்கத்துடன் அணி 62வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இந்த பதக்கத்தை வென்றிருந்தார்.

 
நீரஜ் சோப்ரா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா (இடது) தங்கம் வென்ற நதீம் (வலது)

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மைதானத்தின் மேற்கூரையில் இருந்து விழா மேடைக்கு குதித்து சாகசம் செய்த நடிகர் டாம் குரூஸ்
பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவுவிழா புகைப்படங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒலிம்பிக் 2024இல் எழுந்த சர்ச்சைகள்

வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்டின் தகுதி நீக்கம், குத்துச்சண்டை வீராங்கனைகள் இமானே கெலிஃப் மற்றும் லின் யூ டிங் தொடர்பான பாலினச் சர்ச்சை மற்றும் ஆர்மேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது போன்ற சில சர்ச்சைகள் தலைப்புச் செய்திகளாக மாறின.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் போட்டியிட்டார். ஆனால் இறுதிபோட்டி தொடங்குவதற்கு முன் அவரது எடையை அளவிடும்போது, அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக எடை இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகாட் இறுதிப் போட்டிக்கு வந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டது, ஆனால் அவரது 50 கிலோவுக்கு மேல் இருந்ததால் வெள்ளி பதக்கம் கூட கிடைக்கவில்லை.

பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை எதிர்த்து களம் இறங்கிய இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி 46 வினாடிகளில் ஆட்டத்தை விட்டு வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலின தகுதிச் சோதனையில் தோல்வியுற்றதால், கடந்த ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இருந்து நீக்கப்பட்ட இரு வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதில் இமானே கெலிஃப்பும் ஒருவர்.

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் அதிகம் பேசப்பட்ட இந்த சர்ச்சையைக் கடந்து இமானே கெலிஃப், சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

 
இமானே கெலிஃப்
படக்குறிப்பு,தைவானின் லின் யூ டிங் (இடது); அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் (வலது)

மற்றொருவரான, தைவான் குத்துச்சண்டை வீராங்கனை லின் யூ-டிங்கும்,போலந்து நாட்டின் குத்துச்சண்டை வீராங்கனை ஜூலியா ஸ்ஸெரெமெட்டாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்..

இந்த பாலின சர்ச்சை அடுத்த நடக்கவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கையும் பாதிக்கலாம், ஏனெனில் இரண்டு வீராங்கனைகளும் அதிலும் கலந்துகொள்வார்கள்.

மூன்றாவது பெரிய சர்ச்சை, அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், அவர் ஆரம்பத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்ட் அணியின் அறிவுறுத்தலின்படி, சிலிஸின் ஸ்கோர் 13.666 லிருந்து 13.766 ஆக மாற்றப்பட்டது, இதனால் அவர் ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.

ஆனால் அதற்கு முன்னரே, ருமேனியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான பார்போசுவின் ஸ்கோர் 13.7 ஆக இருந்தது. இதனால் ருமேனியாவின் ஒலிம்பிக் கமிட்டி சிலிஸின் ஸ்கோரில் செய்யப்பட்ட மாற்றத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இது பின்னர் நடுவர் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதனால் ஜோர்டான் சிலிஸிடம் இருந்து வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டது.

கடைசி நாளில் ஏற்பட்ட பரபரப்பு

ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஈபிள் கோபுரத்தின் மீது ஒருவர் ஏறியது பாதுகாப்பு முகமைகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

"ஒலிம்பிக் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை ஈபிள் கோபுரத்தில் ஏறியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்" என்று பாரிஸ் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகலில் (12-08-2024) சட்டை அணியாமல் ஒருவர் ஈபிள் கோபுரத்தில் ஏறியதைக் காண முடிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், அந்த நபர் குறித்து காவல்துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொளியில், சட்டை அணியாத நபர் ஒருவர் ஒலிம்பிக் வளையங்களுக்கு சற்று மேலே உள்ள கோபுரத்தில் ஏறுவதைக் காணலாம். மற்றொரு காணொளியில், கைகளை பின்னால் கட்டிய நிலையில் அந்த நபரை போலீசார் அழைத்துச் செல்வதையும் காணலாம்.

நிறைவு விழாவில் பாரிஸ் மேயர் ஆன் ஹிடால்கோ ஒலிம்பிக் கொடியை லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸிடம் ஒப்படைத்தார். விழாவின் கடைசி நிகழ்வாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ருமேனிய வீராங்கனை மேல் முறையீட்டில் வெற்றி - வினேஷ் போகாட் வெள்ளி வெல்ல வாய்ப்பு அதிகரிப்பா?

வினேஷ் போகாட், பாரிஸ் ஒலிம்பிக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு (இடது), இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் (வலது)
12 ஆகஸ்ட் 2024, 13:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பாரிஸ் ஒலிம்பிக் 2024இல் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நாளை வெளியாகும் (ஆகஸ்ட் 13).

கடந்த வாரம், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான ஜோர்டான் சிலிஸ், ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். ஆனால், ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அனா பார்போசு செய்த மேல்முறையீட்டில் சிலிஸின் வெண்கலப் பதக்கம் பறிக்கப்பட்டு பார்போசுக்கு வழங்கப்பட வேண்டுமென சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பின் தாக்கம் வினேஷ் போகாட் வழக்கிலும் எதிரொலிக்குமா என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிலிஸ் தொடர்பான வழக்கின் முழு விவரம் என்ன?

வெண்கலப் பதக்கத்தை இழந்த ஜோர்டான் சிலிஸ்

ஜோர்டான் சிலிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஜோர்டான் சிலிஸ்

பாரிஸில் கடந்த வாரம் திங்கட்கிழமை (05-08-2024) அன்று நடந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜோர்டான் சிலிஸ் தொடக்கத்தில் 13.666 புள்ளிகள் ஐந்தாவது இடத்தில் இருந்தார்.

அப்போது 13.7 புள்ளிகள் பெற்றிருந்த ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா பார்போசு மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அரங்கில் இருந்த டிஜிட்டல் திரையிலும் அனா பார்போசு பெயர் மூன்றாம் இடத்தில் தோன்றியது.

இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்தை வென்ற மகிழ்ச்சியில் கொண்டாடத் துவங்கினார் அனா பார்போசு. ஆனால் அந்த மகிழ்ச்சி வெகுநேரம் நீடிக்கவில்லை.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளர் சிசிலி லாண்டி, ஜோர்டான் சிலிஸ் பெற்ற புள்ளிகள் தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது என நடுவர்களிடம் முறையிட்டார். இதை பரிசீலித்த நடுவர்கள் சிலிஸ் பெற்ற புள்ளிகளை13.766 ஆக உயர்த்தினார்கள்.

இதையடுத்து ஜோர்டான் சிலிஸின் பெயர் திரையில் மூன்றாம் இடத்திற்கும், அனா பார்போசுவின் பெயர் நான்காம் இடத்திற்கும் நகர்ந்தது. இதைக் கண்டு, கண்ணீருடன் அங்கிருந்து வெளியேறினார் அனா பார்போசு.

இந்த மாற்றத்திற்கு ருமேனியாவின் ஒலிம்பிக் குழு கடுமையான எதிர்ப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் பதிவு செய்தது.

“இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்று கூறிய ருமேனியாவின் பிரதமர் மார்செல் சியோலாகு, ஒலிம்பிக் நிறைவு விழாவை புறக்கணிப்பதாகவும் அறிவித்தார்.

ஒலிம்பிக்கில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும், ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அணியின் பயிற்சியாளர் நான்கு நொடிகள் தாமதமாக மேல்முறையீடு செய்தார் என்பதை விளையாட்டுக்கான நடுவர் மன்றத்திடம் சுட்டிக்காட்டிய ருமேனிய ஒலிம்பிக் கமிட்டி, சிலிஸின் புள்ளிகள் மாற்றப்பட்டது தொடர்பாக மேல்முறையீடு செய்தது.

அனா பார்போசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அனா பார்போசு

இதை ஏற்றுக்கொண்ட நடுவர் மன்றம், ஜோர்டான் சிலிஸுக்கு 13.666 என்ற புள்ளிகளே இறுதியானது என அறிவித்தது. சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பும் (FIG) இதை உறுதிசெய்தது. வெண்கலப் பதக்கத்தை பார்போசுக்கு மீண்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

பதக்கத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியுடனும், மீண்டும் பதக்கம் வழங்குவதற்கான விழா நடத்துவது குறித்து ருமேனிய ஒலிம்பிக் கமிட்டியுடனும் ஆலோசனை நடத்தவுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூறியது.

கடந்த வாரம், அமெரிக்காவின் ஜோர்டான் சிலிஸுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்ட போது, அது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ருமேனியாவின் அனா பார்போசுக்கு ஆதரவு தெரிவித்தும், சிலிஸை தாக்கியும் பதிவுகள் வெளியாகின.

சிலிஸ் மீதான இணைய விமர்சனங்கள் குறித்து பேசிய அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி, “எந்தவொரு விளையாட்டு வீரரும் இத்தகைய மோசமான விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடாது. இழிவான இணையத் தாக்குதல்களையும், அதை ஆதரிப்பவர்களை அல்லது தூண்டுபவர்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நேர்மையுடன் நடந்துகொண்டதற்காக சிலிஸை நாங்கள் பாராட்டுகிறோம். நாங்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக நிற்போம்." எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பிரேசிலின் ரெபேகா ஆண்ட்ரேட் தங்கம் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனை சிமோனா பைல்ஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.

 

வினேஷ் போகாட் மேல்முறையீடு

வினேஷ் போகாட்டின் மேல்முறையீடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போது, அவருக்கான வெள்ளிப் பதக்கம் உறுதியானது.

அதுவும் ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று அவர் அசத்தியிருந்தார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை யுய் சுசாகி உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்து, அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

இறுதிப்போட்டிக்கு முன் மல்யுத்த வீராங்கனைகளின் எடை சோதனை செய்யப்படுவது வழக்கம். அவர்கள் எந்த எடைப் பிரிவில் போட்டியிடுகிறார்களோ, அதற்கான எடையுடன் இருப்பது அவசியம்.

பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் இறுதிப்போட்டி நடக்கவிருந்த நாளன்று காலையில் காலை எடையை அளவிடும்போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்திய குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எந்தப் பதக்கமும் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது.

அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ் (Yusneylis Guzman Lopez) என்ற வீராங்கனையை வினேஷ் போகாட் தோற்கடித்திருந்தார். வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவரது வெள்ளிப் பதக்கம் குஸ்மோனுக்கு வழங்கப்பட்டது.

 
வினேஷ் போகாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அரையிறுதியில் கியூபாவைச் சேர்ந்த யூஸ்னெனிலிஸ் குஸ்மோன் லேபெஸ் (இடதுபுறம்) என்ற வீராங்கனையை வினேஷ் போகாட் தோற்கடித்திருந்தார்.

தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து, விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், வெள்ளிப் பதக்கத்தை தனக்கும் குஸ்மோனுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை நடுவர் மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கில் சனிக்கிழமையன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் அது ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஜோர்டான் சிலிஸ் வழக்கின் தீர்ப்பு, வினேஷ் போகாட் வழக்கிலும் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால் இந்த இரு வழக்குகளிலும், சூழ்நிலைகள் வேறுபடுகின்றன. சிலிஸ் வழக்கில், மேல்முறையீடு நேரம் தொடர்பான சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் (FIG) விதிகள் மீறப்பட்டது கண்டறியப்பட்டதால், வெண்கலப் பதக்கம் திரும்பப் பெறப்படுவதாக நடுவர் மன்றம் அறிவித்தது.

இதற்கு நேர்மாறாக, வினேஷ் வழக்கில் மல்யுத்தத்தை மேற்பார்வையிடும் சர்வதேச அமைப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்தது. அதாவது வினேஷின் எடை குறித்த விவகாரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்கள் எதிர்பார்க்கும் இந்த மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு நாளை வினேஷுக்கு சாதகமாக வெளிவந்தால் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7ஆக உயரும்.

https://www.bbc.com/tamil/articles/c0e84w3nnv5o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌ ஒலிம்பிக்கும் ந‌ல்ல‌ ப‌டியா ந‌ட‌ந்து முடிந்து இருக்கு...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 11/8/2024 at 15:35, தமிழ் சிறி said:

ஒலிம்பிக் விளையாட்டும் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
கொஞ்ச நாட்களாக அந்தப் போட்டிகளை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.

இனி…? 🙂

மேற்கு ஜேர்மனியும் கிழக்கு  ஜேர்மனியுமாக இருந்த போது ஏட்டிக்கு போட்டியாக பதக்கங்களை அள்ளிக்குவித்தன.இருபக்கமும்  கறுப்பின போட்டியாளர்களை மருந்திற்கும் காணமுடியாது.ஆனால் இன்று கறுப்பினத்தவர்களும் சரிக்கு சமமாக நுழைந்து கொண்டிருக்கின்றார்கள்.   பெருமைப்படத்தக்க வெற்றிகள் எதுவுமில்லாமல்....
இரு நாடுகளும் ஒன்றிணைந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனி 10 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதை வெட்கப்பட வேண்டிய செயல்  என பல ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.

பாவம் ஜேர்மனி அவலை நினைத்து வெறும் உரலை இடித்துக்கொண்டிருக்கிறது.

ஜேர்மனிய மக்களிடம் அன்றிருந்த விளையாட்டு விவேகங்கள்/உற்சாகங்கள் இன்றில்லை. காரணம் அரசியலில் புதிய போக்கு மட்டுமே.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 12/8/2024 at 22:09, குமாரசாமி said:

மேற்கு ஜேர்மனியும் கிழக்கு  ஜேர்மனியுமாக இருந்த போது ஏட்டிக்கு போட்டியாக பதக்கங்களை அள்ளிக்குவித்தன.இருபக்கமும்  கறுப்பின போட்டியாளர்களை மருந்திற்கும் காணமுடியாது.ஆனால் இன்று கறுப்பினத்தவர்களும் சரிக்கு சமமாக நுழைந்து கொண்டிருக்கின்றார்கள்.   பெருமைப்படத்தக்க வெற்றிகள் எதுவுமில்லாமல்....
இரு நாடுகளும் ஒன்றிணைந்தபின் கொஞ்சம் கொஞ்சமாக ஜேர்மனி 10 இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இதை வெட்கப்பட வேண்டிய செயல்  என பல ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.

பாவம் ஜேர்மனி அவலை நினைத்து வெறும் உரலை இடித்துக்கொண்டிருக்கிறது.

ஜேர்மனிய மக்களிடம் அன்றிருந்த விளையாட்டு விவேகங்கள்/உற்சாகங்கள் இன்றில்லை. காரணம் அரசியலில் புதிய போக்கு மட்டுமே.

9 கோடி ம‌க்க‌ள் தொகையை வைத்து இருக்கும் ஜேர்ம‌னி  33 ப‌த‌க்க‌ங்க‌ள் 9தாவ‌து இட‌ம் தாத்தா

 

உல‌கில் அதிக‌ ம‌க்க‌ள் தொகையை வைத்து இருக்கும்

இந்தியா பெற்ற‌ ப‌த‌க்க‌த்தை பாருங்கோ...........................

 

 

டென்மார்க் சின்ன‌ நாடு 58ல‌ச்ச‌ ம‌க்க‌ள் வாழும் நாடு இர‌ன்டு த‌ங்க‌ ப‌த‌க்க‌மும் 7 ம‌ற்ற‌ ப‌த‌க்க‌ங்க‌ளும் வென்று இருக்கின‌ம் மொத்த‌ம் 9ப‌து ப‌த‌க்க‌ம் தாத்தா.................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

9 கோடி ம‌க்க‌ள் தொகையை வைத்து இருக்கும் 33 ப‌த‌க்க‌ங்க‌ள் 9தாவ‌து இட‌ம் தாத்தா

 

உல‌கில் அதிக‌ ம‌க்க‌ள் தொகையை வைத்து இருக்கும்

இந்தியா பெற்ற‌ ப‌த‌க்க‌த்தை பாருங்கோ...........................

 

 

டென்மார்க் சின்ன‌ நாடு 58ல‌ச்ச‌ ம‌க்க‌ள் வாழும் நாடு இர‌ன்டு த‌ங்க‌ ப‌த‌க்க‌மும் 7 ம‌ற்ற‌ ப‌த‌க்க‌ங்க‌ளும் வென்று இருக்கின‌ம் மொத்த‌ம் 9ப‌து ப‌த‌க்க‌ம் தாத்தா.................................

விடு...ராசா விட்டுத்தள்ளு.😂
ஜெய் கிந்த் சொல்லும் வீரம் அளவிற்கு அவர்களிடம் உலக விளையாட்டு திறன் இல்லை. 😜
 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, குமாரசாமி said:

விடு...ராசா விட்டுத்தள்ளு.😂
ஜெய் கிந்த் சொல்லும் வீரம் அளவிற்கு அவர்களிடம் உலக விளையாட்டு திறன் இல்லை. 😜
 

உண்மை தான் 

அன்டை நாடு சீன‌னை பார்த்தும் இதுக‌ளுக்கு ரோச‌ம் வ‌ர‌ வில்லை என்றால் இதுக‌ள் சோத்துக்கை உப்பை போட்டு தின்னாத‌ கூட்ட‌ம்.😁......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

.

Edited by குமாரசாமி



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
    • சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.