Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பல பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது!

05 APR, 2024 | 06:18 AM
image
 

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 15  ம் திகதி வரையில் சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்கின்றதென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் வலப்பிட்டிய, எல்பிட்டிய, மொறவக்க மற்றும் திஸ்ஸமகராம போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

வடமேல்  மாகாணத்தின்  சில இடங்களிலும் அத்துடன் மன்னார் மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மத்திய,சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  

 

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/180474

  • Replies 51
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • சில அமைப்புக்கள்,தனிநபர்கள் செய்கின்றனர்..... ஐங்கரநேசனின் பசுமை புரட்சி அமைப்பு மற்றும் சில யூ டியுப் இளைஞர்கள் செய்கின்றனர் ... யாழ்கள புத்தன் என்ற இளைஞனும் வருடத்திற்கு 75 மரம் என்ற வகையில் கடந

  • யாரப்பா அந்த புத்தன்? 🙂 புத்தனின் வழியை எம்மக்கள் பின்பற்ற வேண்டும்.

  • ஏராளன்
    ஏராளன்

    சிட்னி புத்திரன் என்ற பெயரில் பொன்னாலைப் பகுதியில் மரக்கன்றுகள் வழங்கியது புத்தன் அண்ணா தான். அகரம் யுரியூப்பில் பார்த்தனான். யாழிலும் புத்தன் அண்ணா இணைத்திருந்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வானிலை 

07 APR, 2024 | 06:35 AM
image
 

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல்,  சப்ரகமுவ,மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும்  மொனராகலை மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் கடவத்த, பதுளை, லுனுகல, கொங்கஸ்பிட்டிய, வக்மிட்டியாவ மற்றும் கொத்மலே  போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா,  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை,  காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/180608

  • மோகன் changed the title to இன்றைய வானிலை
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கும்!

too-much-heat-300x200.jpg

நாட்டின் சில இடங்களில் இன்று மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்த நிலையில், பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் கடும் வெப்பம் நிலவும் நேரத்தில், அதிகளவான நீராகாரங்களைப் பருகுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அத்துடன், வீட்டில் இருக்கும் நாட்பட்ட நோயாளர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/298864

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வானிலை

13 APR, 2024 | 06:21 AM
image
 

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் குமுளமுனை, முறிகண்டி, கேந்திரமடு போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். 

மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன்  நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களிலும்  பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்  மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/181041

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம், திருகோணமலையில் கடும் வெப்பநிலை நிலவும் !

14 APR, 2024 | 07:01 AM
image

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, ஹம்பகா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சூரியனின் வடக்கு நோக்கியநகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.10 மணியளவில் நைனாதீவு, புங்குடுதீவு, மணல்காடு மற்றும் உடுத்துறை போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கிழக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  

 

காங்கேசன்துறை  தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி  வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல்  பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 15 ‐ 25 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/181060

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Clean and Safe Water Projects: UNICEF's Mission | UNICEF USA

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரைப் பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

https://thinakkural.lk/article/299313

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு!

too-much-heat-300x200.jpg

நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/299507

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை தீவிரமாகும் - வானிலை ஆய்வாளர் பிரதீபராஜா

27 APR, 2024 | 01:18 PM
image

டக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி நாட்களிலும் (28, 29, 30) அடுத்த மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் குறிப்பாக மே மாதம் 12ஆம் திகதி வரை வெப்பநிலை தற்போது உள்ளதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

வெப்ப அலைச் சுட்டெண்ணின் (Heatwave Index) ஆபத்தான வகைப்பாட்டுக்குள் நாம் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்வரும் 30.04.2024க்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பகல் பொழுதின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இக்காலத்தில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு உண்மையான வெப்பநிலையை விடவும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேவேளை இந்துக்களின் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் காண்டாவனம் அல்லது அக்கினி நாள் / அக்கினி நட்சத்திரம் என்பது எதிர்வரும் 04.05.2024 சனிக்கிழமை முதல் 28.05.2024 செவ்வாய்க்கிழமை வரை நிலவும் என குறிப்பிடப்படுகிறது. (காண்டாவனம் /அக்கினி நாள் /அக்கினி நட்சத்திரம் என்பது பரணி நட்சத்திரத்தின் 3ஆம், 4ஆம் பாதங்களையும் (கால்), கார்த்திகை நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களையும், ரோகிணி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தையும் சூரியன் கடக்கும் நாட்களே ஆகும்). 

கடந்த சில நாட்களாக இரவு பொழுது  வளிமண்டல சாரீரப்பதனின் அளவு உயர்வாக உள்ளது. இது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எமது உடல் அசௌகரியமான நிலைமையை உணரும் வாய்ப்புண்டு. 

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆவியாக்க அளவு உயர்வாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, எமது நீர்ப் பயன்பாட்டினை வினைத்திறனாக மேற்கொள்வது சிறந்தது. 

எதிர்வரும் 27, 28, 29 மற்றும் 30ஆம் திகதிகளில் வட மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும், இம்மழை அதிகரித்த வெப்பமான வானிலையை தணிக்க போதுமானதல்ல. 

எனவே, இக்காலப்பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளை தவிர்ப்பதுடன், நோயாளர்கள், வயதானவர்கள், விசேட தேவையுடையவர்கள் பகல் பொழுதுகளில் பிரயாணங்களை தவிர்ப்பது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/182089

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடும் இடி, மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்கவும்!

Published By: DIGITAL DESK 3   30 APR, 2024 | 04:17 PM

image

இன்று மாலை புத்தளம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மேல்மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அதிகளவான இடி மின்னல் தாக்கம் ஏற்படக்கூடுமென வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திங்கட்கிழமை (29) பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக மாத்தளை இரத்தோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் மற்றும் தங்கை உயிரிழந்துள்ளனர். இதேவேளை,  முல்லைத்தீவு துணுக்காய் அய்யன்குளம்  பகுதியைச் சேர்ந்த  49 வயதுடைய நபர் ஒருவரும்  மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3fa9b3db-a764-4922-bd58-68a211650878.jpg

596.JPG

https://www.virakesari.lk/article/182344

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெப்பமான வானிலை 2 வாரங்களுக்கு நீடிக்கும்

too-much-heat-300x200.jpg

நிலவும் வெப்பமான வானிலை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பருவப்பெயர்ச்சி மழையும் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மாத்திரமே பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/300663

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை!

too-much-heat-300x200.jpg

நாட்டின் பல பகுதிகளில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதிக வெப்பம் நிலவும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அடிக்கடி நிழலில் ஓய்வு எடுப்பது சிறந்ததாகும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடிக்கடி நீராகாரங்களைப் பருகுவதுடன், வீட்டில் உள்ள நாட்பட்ட நோயாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/300794

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை "கடும் அவதானம்" செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று(06.05.2024) வெப்பமானது மேலும் உயர்ந்து அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்

இதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை | Cilmate Change Weather Alert

 

போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டீஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

https://tamilwin.com/article/cilmate-change-weather-alert-1714953906?itm_source=parsely-detail

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

feels-like.jpg

இன்று 3.23 அளவில் மேலுள்ளவாறு உணரப்படும் வெப்பநிலை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (08) முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் நாளை பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/301025

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை!

weather-3-300x200.jpg

இன்று (08) முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

குறித்த பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் இன்று காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/301096

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாட்டிவதைக்கும் வெப்பநிலை குறையும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப் பருவமழை மே 20க்குப் பிறகு எதிர்பார்க்கப் படுவதால் ‘எச்சரிக்கை நிலைக்கு’ உயர்ந்துள்ள வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பெய்யும் என அவர்கள் தெரிவித்தனர். அதன்படி, குறைந்த வளிமண்டல குழப்பம் காரணமாக, பிற்பகல் 1 மணிக்குப் பிறகு 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இதன்படி, மாத்தளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்கள் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அதிக அபாய மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளன.

எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://thinakkural.lk/article/301574

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையுடனான வானிலை தொடருமாம்......

16 MAY, 2024 | 06:01 AM
image

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில்  வளிமண்டலவியல் இடையூறு தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆனபடியினால் நிலவுகின்ற  மழையுடனான வானிலை மேலும்  தொடர்க்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின்  பல இடங்களில் பிற்பகல் ஒரு  மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேல், தென் மற்றும் கிழக்கு  மாகாண கரையோரப் பிராந்தியங்களில்  காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில்  தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/183652

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வீடுகளிலையும் மின்விசிறி சுத்தோ சுத்தென்று சுத்திக்கொண்டு உள்ளது. 

இலங்கையில் மின்விசிறி விற்பனை, மின்விசிறி உதிரி பாகங்கள், மின்விசிறி திருத்தல் சம்மந்தமான வியாபாரம் நல்லாய் ஓடும் போல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நியாயம் said:

எல்லா வீடுகளிலையும் மின்விசிறி சுத்தோ சுத்தென்று சுத்திக்கொண்டு உள்ளது. 

இலங்கையில் மின்விசிறி விற்பனை, மின்விசிறி உதிரி பாகங்கள், மின்விசிறி திருத்தல் சம்மந்தமான வியாபாரம் நல்லாய் ஓடும் போல. 

வீட்டை சுற்றி நிழல் தரும் மரங்கள் நடுங்கள். இது என் கிராமத்து அனுபவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

rain-1.jpg

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்

காலி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்

திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

https://thinakkural.lk/article/301800

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனமழை காரணமாகச் சிவப்பு அறிவித்தல் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

19 MAY, 2024 | 01:58 PM
image
 

கனமழை காரணமாகச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 

இந்த அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.30 மணி முதல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் படி, நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

களனி ஆறு, மகாவலி ஆறு, நில்வலா ஆற்றின் கரையோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தண்டுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, பெந்தர கங்கை, கிராம ஓயா, உறு போகு ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183947

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காற்றும் மழையுடனான வானிலை தொடரக்கூடும்.....

20 MAY, 2024 | 06:23 AM
image
 

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய  காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடுமென சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறியதாவது,

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் சூழ்ந்து காணப்படும். 

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென்  மாகாணங்களிலும் அத்துடன் மன்னார்  மாவட்டத்திலும்  அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ, மேல்  மற்றும் வடமேல்   மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார்  மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டிற்கு மேலாக  மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  

 

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சிலஇடங்களில் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கல்பிட்டி தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

பேருவளை தொடக்கம் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி  காற்று அதிகரித்து வீசக்கூடும்.   இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் மிகவும்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள  கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றராக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

https://www.virakesari.lk/article/183997

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

களுத்துறையில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

Published By: DIGITAL DESK 3   21 MAY, 2024 | 09:23 AM

image

நாட்டில்  சப்ரகமுவ, மேல்  மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,  காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த  மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (20) காலை 8.30 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை  8.00 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர பகுதியில் 107 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,   களுத்துறை - இங்கிரிய பகுதியில் 79 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பண்டாரகம பகுதியில் 77 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, புத்தளம் மாவட்டத்தில்  மாதம்பே பகுதியில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 72 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

97.jpg

https://www.virakesari.lk/article/184099

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய வானிலை

25 MAY, 2024 | 06:48 AM
image

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக  நிலவுகின்ற காற்றும் மழையுடனான  வானிலையையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். 

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்  நுவரேலியா மாவட்டத்தின்  சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த மழை பெய்யக்கூடும். 

மேல் மற்றும்  வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு  பலத்த மழை பெய்யலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.  

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும்  தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும்    மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி  பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார்  30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

மன்னார்  தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். 

சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60  கிலோமீற்றர் ஆக அதிகரித்தும் காணப்படும். 

மன்னார் தொடக்கம் கொழும்பு,  காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

மன்னார்  தொடக்கம் கல்பிட்டி,  கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார். 

https://www.virakesari.lk/article/184425

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

150 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாக கூடும்

image

இலங்கைக்கு மேலாக தென்படுகின்ற வளிமண்டலவியல் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற  மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும்  என வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய,சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லி மீற்றர்‌  இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 மில்லி மீற்றர்‌  வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு , காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். இக் காற்றின் வேகமானது அடிக்கடி மணித்தியாலத்திற்கு 55 - 65 km ஆக அதிகரித்தும் காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 - 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

https://www.virakesari.lk/article/195994

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.