Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட செயற்பாடுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாக அலகுப் பகுதிகளில் விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை சர்வதேசத்துக்கான விடுதலைப்புலிகளின் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபச்சாரம் மட்டுமன்றி.. போதைப் பொருள் பாவனை.. கள்ளச்சாராயம் உட்பட சமூக நலனுக்கு பாதிப்பை உண்டு பண்ணத்தக்க செயற்பாடுகளுக்கு தாம் தடை விதித்துள்ளதை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கான காரணங்களையும் சர்வதேசத்தின் முன் கூறியுள்ளனர்.

2.The policy of the Liberation Tigers is that drugs are dangerous to humanity and hence all sources of its traffic should be destroyed. Due to the untiring effort of the LTTE in the past, there were no sellers or users of drugs in the regions under its control. Even illicit arrack (liquour) and prostitution are banned [by the LTTE civil administration] because they are detrimental to the well-being of society. In contrast, the use of drugs and child prostitution are an everyday occurrence in Colombo and other Sinhalese areas in the south of the island. The child prostitution is carried out with the blessings of those with direct links in the higher echelons of the Sri Lankan Government.

Manivannan

Head of LTTE International Coordinating Office, Tamil Eelam,

Courtesy: 'Kalathil' (12-Feb-1997 & 26-Feb-1997)

Official Tamil periodical of the LTTE International Secretariat

http://www.tamilnation.org/ltte/97international.htm

http://www.eelam.com/analysis/international.html

http://www.totse.com/en/politics/terrorist...s/libtiger.html

இங்கு இன்னொரு தலைப்பில் வலைஞன் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க இத்தகவல் தரப்படுகிறது.

தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றுக்காக.. சமூக அங்கீகாரம் தேட முனைவது.. சமூகத்துக்கு தவறான திசையில் அறிவுறுத்துவது..தேசவிரோதக் குற்றமாகவே நோக்கப்பட வேண்டும். யாழ் களம் அதற்கு எனியும் துணைபோகுமானால்.. பல தடை செய்யப்பட்ட விடயங்களை இங்கு அனுமதிக்க தயாரா என்ற கேள்வி எழும்..??! தமிழ் தேசிய ஆதரவு.. என்ற நிலைக்குள் இருந்து கொண்டு.. இப்படியான தடை செய்யப்பட்ட விடயங்களுக்கு உரிமைப் பாதுகாப்பு என்ற போர்வையில் அவற்றின் சமூக இருப்பை பாதுகாக்க முனைவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகவும் இல்லை.

அறிந்தோ அறியாமலோ விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அதிலிருந்து மீட்கவும்.. அவர்களுக்கு மீளவும் விபச்சாரத்துக்குள் தள்ளாத வகையில் மறு வாழ்வளிப்பது பற்றியும் பேசுங்கள். நிச்சயம் வரவேற்கலாம். ஆனால் விபச்சாரத்தின் இருப்புக்கு.. சட்டப்பாதுகாப்பு கோருவதும்.. அதைப் பெண்ணுரிமையாக சித்தரிப்பதும்.. தமிழீழ தேசவிரோதச் செயற்பாடாகவே காணப்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan

அதுசரி. :lol:

பாலியல் தொழில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் இல்லை. ஆகவே அது குறித்த கேள்விகளும் இங்கு அவசியம் இல்லை.

தமிழீழம் சுதந்திரம் அடைந்து பல கட்சிகள் கொண்ட நாடாக மாறி பல ஆண்டுகள் கழித்து, பாலியல் தொழில் பற்றிய சட்டங்கள் பற்றி விவாதங்கள் தோன்றலாம்: எதையும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது.

பாலியல் தொழில் தமிழீழத்தில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள நிலைமைக்கு ஏற்றபடி சட்டம் இருக்கும்.

நாம் பொதுவான பார்வையில் பேசுகிறோம்.

பாலியல் தொழில் மிக அதிகளவில் நடைபெறுகின்ற நாடுகள் உண்டு. அங்கு பாலியல் தொழில் சட்டரீதியாக தடை செய்யப்பட்டும், அதையும் மீறி அந்த நாடுகளில் அதிகமாக நடைபெறுகிறது.

சட்டத்தினால் பாலியல் தொழிலை தடுக்க முடியவில்லை.

பாலியல் தொழில் தடை செய்யப்பட்டுள்ளதால், அதை சில முதலாளிகள் தமது சுரண்டலுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் எய்ட்ஸ் மிக அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழில் அல்ல. எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததன் காரணத்தால்தான் அவ்வாறு பரவுகிறது.

எய்ட்ஸ் நோய் பற்றி எங்கே போய், எப்படி பரப்புரை செய்வது? காவல்துறைக்கும், ரவுடிகளுக்கும் லஞ்சம் கொடுத்து விட்டு, வாடிக்கையாளருக்காக பற்றைக்குள் பதுங்கியுள்ள பெண்ணிடம் போய் எய்ட்ஸ் பற்றி பேச முடியுமா?

பற்றைகளுக்குள் இருந்து அந்தப் பெண்கள் வெளியே வரவேண்டும் என்றால், அவர்களின் அச்சத்தை போக்க வேண்டும். அதன் பிறகு எய்ட்ஸ் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளலாம். அப்படிச் செய்தால்தான் எய்ட்ஸ் பரவுவது குறையும்.

பாலியல் தொழிலை கட்டுப்படுத்துகின்ற நிலையை எத்தனையோ நாடுகள் கடந்துவிட்டன. நாம் யதார்த்தத்தைதான் பேச வேண்டும்.

பாலியல் தொழில் செய்யும் பெண்களை வதைப்பதற்குத்தான் இந்த சட்டங்கள் பயன்படுகின்றன. அந்தப் பெண்களை மிருகங்களிடம் இருந்து காக்க வேண்டியதுதான் ஒரு மனிதன் செய்ய வேண்டிய பணி

முக்கிய குறிப்பு:

"ஒரு நாட்டில் பல இலட்சம் பாலியல் தொழிலாளிகள் இருக்கின்ற போது, அவர்கள் சில முதலாளிகளால் கொடுரமாக சுரண்டப்படுகின்ற போது, சட்ட மாற்றம் செய்வதே சரி" என்ற ஒரு கருத்தை நான் சொல்வதை தமிழீழச் சட்டம் தடை செய்யவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எய்ட்ஸ் மிக அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழில் அல்ல. எய்ட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததன் காரணத்தால்தான் அவ்வாறு பரவுகிறது.

விழிப்புணர்வு உள்ள மேற்குலகில் கூட விபச்சாரம் மூலம் எயிட்ஸ் உட்பட்ட பால்வினை நோய்கள் பரவி வருகின்றன என்ற கவலை இன்னும் இருக்கிறது.

மேற்குலக நாடுகளில்.. விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியும்.. அதன் மீதான சுரண்டல்.. வன்முறை.. குற்றவியல் தன்மை அகன்றதாக இல்லை.

எயிட்ஸ் தொற்றுவதைத் தடுக்க 100% பாதுகாப்பு முறை என்பது பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய ஒருவருடனான பாலுறவு என்பதுதான்.

விபச்சாரிகள் என்போர் நம்பிக்கைக்குரிய பாத்திரமானவர்களாக நோக்கப்பட முடியாதவர்கள். எயிட்ஸ் தொற்றில் விபச்சாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கிறது.

விழிப்புணர்வுக்கும் அப்பால் விபச்சாரத்தை நடைமுறையில் இருந்து அழிப்பதால்.. அதிக பாதுகாப்பை அளிக்கலாம். விழிப்புணர்வுக்குரிய செலவீனங்களையும் மட்டுப்படுத்தலாம்.

தமிழீழம் எதிர்காலத்தில் கூட விபச்சாரத்துக்கு சட்டப் பாதுகாப்பளித்து குடிமனைகளில் குடியேற்றும் என்று கனவு காண்பது.. அநாவசியமானதாகவே தென்படுகிறது. எந்த ஒரு சமூகமும்.. தனக்கு நன்மையான ஒரு பண்பாட்டுக் கோலத்தை இழந்து.. பாதகமான.. செலவு கூடிய.. வெற்றிக்கான வாய்ப்புக் குறைந்த ஒன்றுக்கு.. சட்ட அங்கீகாரம் வழங்கி சமூகத்தைச் சீரழிக்காது. தமிழீழக் கொள்கை வகுப்பாளர்கள்.. தமிழீழத்தில் ஏலவே தடைசெய்யப்பட்டவற்றுக்கு தடை நீக்கி அங்கீகாரம் வழங்கி.. தெருக்களில் அலைய விடுவர் என்பது கனவிலும் நடக்க முடியாது. தமிழீழம்.. கட்சிகளின் கொள்கைகளுக்காக சட்டம் இயற்றுவதிலும் சமூகத்தின் நிலை நோக்கியே இவ்வகை விடயங்களில் சட்டம் இயற்றும்.

விபச்சாரிகள்.. விபச்சாரத்தைக் கைவிட்டு.. வேறு வளமான துறைகளினூடு.. நாட்டின் அபிவிருத்திக்கு தங்கள் மனித வலுவை பாவிக்கும் வகையில் தங்களை மீள் வாழ்வியலுனூடு ஈடுபடுத்தவே ஊக்குவிக்கப்படுவர். அந்த வகையில் சட்டங்கள் மிக இறுக்கமாகுமே தவிர இவ்விடயத்தில் தளர வாய்ப்பே இல்லை எனலாம். :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.