Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழில் பதியப்பட்டிருந்த ஷோபா சக்தியின்சித்திரப் பேழைவாசித்தேன். 2014இல் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவத்தை அவரது கதை எனக்கு நினைவூட்டியது. அதைத்தான், அப்பா அது நீதானா?” என இங்கே தந்திருக்கிறேன்

 

தற்குமேல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்க முடியாது என்று அன்றியாவுக்கு புரிந்து விட்டது. ஆனாலும் படுக்கையில்தான் இருந்தாள். அன்றியாவுக்கு அதிகம் பிடித்த இரவுகள் என்றால் அது  ஞாயிறு  இரவுகள்தான். அந்த இரவுகளில்தான் அடுத்தநாளின் சுமைகள் இல்லாமல் அன்றியா அதிகமாகத் தூங்குவாள். திங்கட் கிழமைகளில், ஏறக்குறைய நண்பகலை பொழுது நெருங்கும் நேரத்தில்தான் படுக்கையைப் பிரிந்து அவள் எழுந்து வருவாள்.

இந்தத் திங்கட்கிழமை மட்டும் அவளுக்கு சுகமானதாக இருக்கவில்லை.

திங்கட்கிழமைகளில் அன்றியாவுக்குச் சொந்தமான, ‘டீ மற்றியோ பிட்ஸாரெஸ்ரோறண்ட்டுக்கு ஓய்வுநாள். வாரம் ஆறு நாட்கள் சுறுசுறுப்பாக ரெஸ்ரோறண்ட்டில் இருக்கும் அவளுக்கு, வாரத்தில் திங்கள் ஒருநாள் மட்டும்தான் ஓய்வு. ‘டீ மற்றியோ பிட்ஸாரெஸ்ரரோறண்ட், அவளது தந்தை அல்போன்ஸோ அவளுக்கு விட்டுப்போன சொத்து.

‘ஒரு உணவு விடுதி பத்து வருடங்கள் நன்றாகப் போகும் அதற்குப் பின்னால் ஆட்டம் காணத் தொடங்கும்என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்ரோறண்ட் முப்பது வருடங்களாக வளர்ந்து கொண்டேதான் இருந்தது. உழைப்பை மட்டுமல்ல தனது ஆயுளையும் அதற்குத்தான் அல்போன்ஸோ அர்ப்பணித்திருந்தார்.

‘அரக்கனின் உயிர் ஏழு கடல்தாண்டி, ஒரு பெரிய மலையில் ஒரு பொந்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததுஎன்று  சின்ன வயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். அதுபோல்தான் அல்போன்ஸின் உயிரும், ‘டீ மற்றியோ பிட்ஸாரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான் அது இருந்தது. அல்போன்ஸுக்கு, பொழுது புலர்ந்து மறைவது எல்லாம்  டீ மற்றியோ பிட்ஸாரெஸ்ரரோறண்ட்டுக்குள்தான்.

ஒருநாள் வேலை முடிந்து நள்ளிரவில் அல்போன்ஸ் வீட்டுக்கு வந்த போது, பத்து வயதான அவனது மகள் அன்றியா தனது கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனது மனைவி அஞ்சலிக்கா வீட்டில் இல்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேடிக் கொண்டு இன்னொருவனிடம் போய்விட்டாள் என்று அல்போன்ஸுக்கு அடுத்த நாள்தான் தகவல் கிடைத்தது. அதற்குப் பிறகு அன்றியாவுக்கு எல்லாமே அல்போன்ஸ்தான்.

 

ப்பா அது நீ இல்லையா? எப்போதும் என்னுடன் இருப்பாய் என்று நம்பினேனே? ஏமாந்து விட்டேனா?” அன்றியாவால் அதற்குமேல் படுக்கையில் புரள முடியவில்லை. எழுந்து கொண்டாள். கட்டிலின் அருகே இருந்த அலுமாரியில் இருந்து அந்தக் குடுவையை எடுத்துக் கொண்டாள்

வரவேற்பறையின் ஷோபாவில் அமர்ந்திருந்த அவளது பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையிலேயே இருந்தது. அந்தப் குடுவைக்குள்தான் அல்போன்ஸ் இருந்தான். அதற்குள்ளேதான் அன்றியாவும் தன் உயிரை வைத்திருந்தாள்.

 

Untitled Artwork

ரண்டு வருடங்களுக்கு முன்னர் அல்போன்ஸ் இறந்து போய்விட, அன்றியா தன் பலம் எல்லாம் இழந்து விட்டதை உணர்ந்தாள். எத்தனைபேர் வந்து ஆறுதல் சொல்லி இருப்பார்கள். அத்தனையும் அவளைத் தேற்றவில்லை. அவளது அப்பா இல்லாத வீடு அவளுக்குப் பிடிக்கவில்லைஎங்காவது ஓடி விடலாமா? என யோசித்து, தனியாக, சோகத்தில் விழுந்திருந்த போதுதான், தன் தந்தையின் உடலை அடக்கம் செய்வதில்லை, மாறாக எரித்து விடுவது என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. நண்பர்கள், உறவினர்கள் எல்லாம், “அடக்கம் செய்து விடுஎன்று சொல்லிப் பார்த்தார்கள். அன்றியா, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

யேர்மனியில், பொதுவாக, இறந்தவரின் சாம்பலை மயானத்தில்தான் புதைப்பார்கள். அது மயானத்தில் உடலத்தைப் புதைப்பது போல ஒரு இடத்தில் புதைக்கப்படும். அதற்கான செலவு சில ஆயிரங்கள் ஆகும். அந்தப் பணத்தைச் செலுத்த வசதியில்லாதவர்கள் அதற்கென்று இருக்கும் குறிப்பிட்ட இன்னொரு மயானத்தில் பலரது சாம்பல் குடுவைகளுடன் ஒன்றாகப் புதைப்பார்கள்.  இவ்வளவையும் சம்பந்தப்பட்ட அலுவலகர்களே உரியவர்களின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்வார்கள். அவர்களே நிர்ணயிக்கப்பட்ட நாளில்  சாம்பலைக் கொண்டு வந்து தருவார்கள். அவர்கள் முன்னிலையிலேயே சாம்பல்க் குடுவை அடக்கம் செய்யப்படும் 

இறந்தவரின் சாம்பலை வீட்டுக்குக் கொண்டு சென்று வைத்திருக்கவோ, கடலிலோ,ஆறுகளிலோ கரைக்கவோ,  தோட்டத்தில் தாக்கவோ துளியும் அனுமதிக்க மாட்டார்கள். அது சட்டப்படி பிழையானதொரு செயலாகும்.

“இது சட்டப்படி பிழையானது. பிடிபட்டால் பெரும் சிக்கலாகி விடும்இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனத்தின் முதலாளி ஜோகன், அன்றியாவுக்கு அறிவுரை சொன்னார்.

“என்னால் உங்களுக்கு ஒரு சிக்கலும் வராதுசொல்லிக் கொண்டே தனது பணப்பையை அன்றியா திறந்தாள்.

அல்போன்ஸின் உடல் எரிக்கப்பட்டு, அவனது சாம்பல் அழகான ஒரு குடுவைக்குள் அடக்கப்பட்டு அவளிடம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து அன்றியாவின் கட்டிலோடு சேர்ந்திருந்த அலுமாரிக்குள் அவளது தந்தை அல்போன்ஸ் இருந்தார்

வெள்ளி,சனிக்கிழமைகளில்தான் டீ மற்றியோ பிட்ஸா ரெஸ்டோரண்ட் நிறைந்திருக்கும். மற்றைய நாட்களில் ஓரளவு வாடிக்கையாளர்கள்தான் உணவருந்த வருவார்கள். ஞாயிற்றுக் கிழமையான அன்றும் வாடிக்கையாளர்கள் பெரும் அளவில் இல்லை. அன்றியா, உணவுகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த செய்தி அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் செய்தியைச் சொன்னவர் உணவருந்த வந்த ஒரு வாடிக்கையாளர்.

 “ கேள்விப் பட்டனீயோ அன்றியா? ஜோகனை அறெஸ்ற் செய்திட்டாங்களாம்

“எந்த ஜோகன்?”

“இறுதிச் சடங்கு நடத்துற ஜோகன்

“ஏன்? அவருக்கு என்ன பிரச்சினை?”

“தில்லு முல்லுதான். ஏகப்பட்ட விசயங்கள். நூறு யூரோப் படி சவப் பெட்டிகளை வாங்கி, அப்பிடி இப்பி டி சோடிச்சு, ஏமாத்தி ஆக்களைப் பாத்து விலையை ஆயிரம், இரண்டாயிரம் எண்டு கூட்டிக் குறைச்சுக் குடுத்துப் பணம் பாத்திருக்கிறான்..”

“இதிலை என்ன பிழை இருக்கு? அது வியாபாரம். வாங்கிறாக்களை அவர் ஒண்டும் கட்டாயப் படுத்த இல்லையே

“இல்லைத்தான். ஆக்களுக்கு நல்ல விலையான சவப்பெட்டிகளைக் காட்டிப் போட்டு, அடக்கம் செய்யிற போது சாதாரண பெட்டியை மாத்திப் போடுவான். சவப் பெட்டிக்கான காசும் கொம்பனிக் கணக்குக்குப் போகாது. அவன்ரை தனிப்பட்ட எக்கவுண்டுக்குத்தான் போகும்

“அப்பிடி இருக்குமெண்டோ? என்னைப் பொறுத்த வரையிலை அவர் ஒரு  நல்ல மனுசன்

“ நீ அப்பிடிச் சொல்லுறாய். கனக்க விசயம் இருக்கு அன்றியா. உடலை எரிச்சுப் போட்டு, ஆக்களின்ரை அவசரத்துக்கு, ஆளாளுக்கு சாம்பல்களை  மாத்தியும் குடுத்திருக்கிறான். அங்கை வேலை செய்தவன் பொலிஸுக்கு அறிவிச்சுப் போட்டான். ஆள் மாட்டிட்டான்

ஷோபாவில் இருந்த அன்றியாவின் பார்வை கண்ணாடி மேசைமேல் இருந்த அந்தக் குடுவையில் இருந்தது

“அப்பா உள்ளே இருப்பது நீதானா?” 

 

 

இது ஒரு உண்மைச் சம்பவம்

ஸ்வேபிஸ் ஹால் நகரத்தைச் சேர்ந்த, இறுதிச் சடங்கு நிறுவனத்தின் பொறுப்பாளர் ஜோகன் (33), அதிக பணத்தைப் பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளில், மலிவான சவப்பெட்டிகளில் இறந்தவர்களை அடக்கம் செய்தார் என்பதும், 60 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு இறந்தவர்களின் சாம்பல்களை மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்பதும், நிரூபிக்கப்பட்டு  இருக்கிறது. இது மனித நேயம், உணர்வுகள், உறவினர்களின் துக்கம் பற்றியது. இவை அனைத்தும் இங்கே மதிக்கப்படவில்லை, குற்றவாளி உறவினர்களின் நம்பிக்கையை மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். 102 குற்றங்களை அவர் செய்திருக்கிறார் என்பது நிரூபணமாகி இருக்கிறது. இவற்றுக்காக மூன்று வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறதுஎன்று தலைமை நீதிபதி 15.10.2014, புதன்கிழமை தனது தீர்ப்பில் கூறினார்

 

Untitled Artwork

 

  • Like 9
  • Sad 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கும் சில குளறபடிகள் நடக்கிறதாக அறியக் கூடியதாகவும் இருந்தது.இறந்தவரின் அஸ்த்தியை வைத்துக் கொண்டே இன்னும் அஸ்த்தி வரவில்லை. நீங்கள்  கடசியாக எங்கே கொண்டு போய் ஈமைக்கிரியை செய்தீர்களோ  அந்த மண்டபக்காரரிடம் போய் கேழுங்கள் என்று சொல்லும் சம்பவங்களும் நடந்திருக்கிறது.இறந்து பொடியான பின் எந்த அடையாளத்தை வைத்து நாம் உரிமை கொண்டாட முடியும்.என்ன இந்த யாயினி இப்படி எல்லாம் எழுதுறா என்று நினைக்க கூடாது.நானும் வருடம் தோறும் இறப்புக்களை சந்தித்துக் கொண்டே வருகிறேன்.கடந்த 3 1/2 ஆண்டுகளுக்குள்  அம்மா, அண்ணா, அப்பா, என்று 3 பேர் போய் விட்டார்கள்.மன அமைதிக்காக ஏதோ ஒன்றை செய்து விட்டு போகிறோம்.🙏

  • Sad 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மை சம்பவத்தை மிகவும் அருமையாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள் ...நன்றிகள் 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, putthan said:

உண்மை சம்பவத்தை மிகவும் அருமையாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்

Putthan,  இறுதிச்சடங்கு நிறுவனத்தில் நடந்த விடயங்களும் அதனால் உரிமையாளர்  ஜோகன், தண்டனை பெற்று சிறைக்குப் போனதும்தான் உண்மையான சம்பவம். மற்றும்படி, அன்றியா, அல்போன்ஸ் எல்லாம் புனைவு.

  • Like 1
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புனைவு நன்றாக இருக்கின்றது. ஏன் அஸ்தியை (இறந்தவரின் சாம்பலை) வைத்திருப்பது ஜேர்மனியில் குற்றமாக உள்ளது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, கிருபன் said:

புனைவு நன்றாக இருக்கின்றது. ஏன் அஸ்தியை (இறந்தவரின் சாம்பலை) வைத்திருப்பது ஜேர்மனியில் குற்றமாக உள்ளது?

எனக்கும் தெரியவில்லை கிருபன்.

சுகாதாரம் மற்றும் உடல்நலக் கேடுகள் வராமல் தடுப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.

இறந்து போனவரின் ஆன்மா(?)வை  அமைதியாக இருக்க விட வேண்டும் என்ற மத ரீதியான காரணங்களாகவும் இருக்கலாம்.

ஆனால் இறந்தவரின் சாம்பலை பொது இடங்களில் பரவ விடுவது யேர்மனியில் குற்றச் செயல். 20,000 யூரோக்கள்வரை அதற்கு தண்டனை கிடைக்கலாம்.

யேர்மனியில், பிறேமன் மாநிலத்தில் மட்டும் இறந்தவர்களின் சாம்பலை, அவர்களது தோட்டத்தில் புதைப்பதற்கோ, பரவவிடுவதற்கோ அனுமதி இருக்கிறது. வைத்திருக்க முடியாது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இன்னும் தொடரும் என்று பார்த்தால் இப்படி உடனே முடித்துவிட்டீர்களே அண்ணா. எனக்குத் தெரிந்த ஜேர்மன் பெண் கணவரின் அஸ்தியைக் கரைக்காது பொதுவான ஓரிடதில் ஒரு பெட்டியில வைத்திருந்தார். ஒவ்வொரு வாரமும் சென்று பார்த்துவிட்டு வருவதாகக் கூறினார். 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆழிப்பேரலையின் போது கனேடிய படைய மருத்துவர்களோடு படைய மருத்துவர் தணிகை அம்பாறை 2004/2005                   கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது.
    • அமரர் சிவசாமி அவர்கள் எங்கள் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படவேண்டியவர். பலாலியில் வந்திறங்கிய இந்திய இராணுவம் இராட்சத டாங்கிகள் சகிதம் பலாலியில் இருந்து யாழ் குடாநாட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை அவர்களின் முயற்சியுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் மக்களால் பாரிய வழிமறிப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் முன்னின்றவர்களில் அமரர் சிவசாமி அவர்கள் முதன்மையானவர்.💪 இந்த நடவடிக்கைக்கு எங்கள்ஊரைச் சேர்ந்த மற்றுமொரு இன உணர்வாளரும் முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இந்தப்போராட்டம் நடந்த இடம் சரியாக நினைவில்லை. நான் நினைக்கிறேன் வயாவிளான் அச்சுவேலி வீதியில் அன்பகம்/அமலிவனம் அருட்சகோதரிகளின் இல்லத்திற்கு முன்பாகவே இந்த போராட்டம் நடந்திருக்கவேண்டும். பின்னர் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஒரு குழுவால் அமரர் சிவசாமி அவர்களும் மற்றைய இன உணர்வாளரும் காட்டிக் கொடுக்கப்பட்டு இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடிய காங்கேசன்துறை தடுப்பு முகாமில் பலநாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்தார்கள். எங்கள் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணிப்புக்களையும் பல துன்ப துயரங்களை சுமந்த அமரர் சிவசாமி அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் மண்ணில் குடும்பத்தோடு வீழ்ந்த வித்துக்களில் ஒருவராகிவிட்டார்.    அமரர் சிவசாமி அவர்கட்கும் அவரோடு வித்தான அவர்தம் குடும்பத்தினருக்கும், இறுதி யுத்தத்தில் சாவடைந்த அனைத்து உறவுகளிற்கு மீண்டும் ஒருமுறை புகழ் வணக்கம் செலுத்துவோம்.🙏   -சிற்சபேசன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து..
    • அசாத் மற்றும் அசாத் போன்ற கொடுங்கோலர்கள் இல்லாது போக வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம் என்று நினைக்கின்றேன்.  அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம். கிளர்ச்சியாளர்கள் செய்வதாக நீங்கள் சொல்வது தமிழில் ஆதவனுக்கு ஈடான உலக ஊடகங்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கிளர்ச்சியாளர்களில் எந்தப் பகுதியாவது அந்த அப்பாவி மக்களை இப்படிச் செய்கின்றார்கள் என்று தோன்றினால், அன்றே அவர்களுக்கு எதிராகவும் சொல்வேன், அவர்களை மூடி மறைக்கப் போவதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடித்தளத்தில் இருந்து எங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் உருவாக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அடித்தளங்கள். என்னுடைய அடித்தளமானது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்..........................' என்பதில் இருக்கின்றது. என்னுடைய பார்வையும், கருத்தும் இங்கிருந்தே வருகின்றது. தேசியம், நாடு, மதம், இனம், பக்கச்சார்பு போன்றவற்றில் இருந்து அல்ல. குருநாகல் வைத்தியர்  மொகமட் ஷாஃபி, அந்த ஈரான் பெண், கழுத்தில் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர் (George Floyd), சிரியாவின் Mazen Al-Hamada, ரஷ்யாவின் Alexei Navalny மற்றும் கோடிக்கணக்கான அப்பாவிகள், பலமற்றவர்கள் .............. இப்படியான ஒவ்வொரு மனிதர்களுக்காக வேண்டியே கண்கள் கலங்குகின்றன. அதையே தான் நான் முன்வைக்கின்றேன். மேற்குலகையோ அல்லது அமெரிக்காவையோ நான் சார்வதில்லை. 'அவர்கள் செய்தார்களே, அதைத்தானே இவர்களும் செய்கின்றார்களே..................' என்ற நியாயங்களும் என்னிடம் இல்லை. ஒருவரை அறிய ஒரு புள்ளியை, ஒரு கணத்தை மட்டும் பார்க்காமல், அவரின் தொடர்ச்சியை முழுவதுமாகப் பார்க்கவேண்டும்.
    • படைய மருத்துவர் திரு தணிகை             களமுனை முன்மாதிரி மருத்துவமனையில் சேவையில் அன்னார்         தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில்   தியாக தீபம் திலீபன் மருத்துவமனையில்       லெப். கேணல் தரநிலையுடையவர்
    • நீலம்   - வ.ஐ.ச.ஜெயபாலன்   தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.