Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   21 FEB, 2024 | 05:55 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது, விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர், நாலக கொடஹேவா ஆகியோரின் ஆலோசனைகளினால் தான் கோட்டபய ராஜபக்ஷ பாரிய நெருக்கடிக்கு உள்ளானார் என சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

எனது வீட்டுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்திரமல்ல, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை எஸ்.எம்.மரிக்கார் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

வெளிநாட்டு முதலீடுகளுடனான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது தற்போதைய கலாச்சாரமாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அதிவேக நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் நடு வீதியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் அவர்கள் தான் இன்று அதிகளவில் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் 'காலத்தை வீணடிப்பவர்களை' வைத்துக் கொண்டு நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்களுக்கு இடமளிக்கக் கூடாது, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் இவ்வாறான காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகள் ஏதும் கிடையாது.

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வருகை தர கூடாது, அவர்கள் விகாரைகளில் இருந்து தர்மத்தைப் போதிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார். அன்று ஆளும் தரப்பிலிருந்தார். இன்று எதிரணியில் இருக்கிறார். நாளை எங்கிருப்பார் என்று தெரியவில்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் கட்சி தாவுவதை பிரதான அறமாக கொண்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் கசினோ நிலையங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் ஒரு சிலரிடம் சென்று 'வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமா கசினோ அனுமதி வழங்கப்படும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி இல்லையா ?'  என்று கேட்டுத் திரிகிறார். ஆகவே இனிவரும் காலங்களில்' காவி உடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. விகாரையில் இருந்து தர்மத்தை போதியுங்கள்' என்று குறிப்பிட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சேதன பசளை தொடர்பான தவறான ஆலோசனையைப் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரே, அப்போதைய ஜனாதிபதி  கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார்.

அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவாவும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி அவரை வீட்டுக்கு அனுப்பினார். தற்போது எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளார். நாலக கொடஹேவாவின் ஆலோசனைகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டால் அவருக்கும் கோட்டபய ராஜபக்ஷவின் நிலையே ஏற்படும்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சிங்கள வாக்குகளில் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து விட்டு சிங்கள தலைவரை தாக்குகிறார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  எனது வீட்டுக்கு இரவில் வருகை தந்ததாக குறிப்பிட்டுள்ளார். எனது வீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளார்கள். எனது வீடு ஒன்றும் தடை செய்யப்பட்ட பகுதியல்ல. அரசியலில் எனக்கு யாரும் எதிரிகளல்ல, ஆகவே கீழ்த்தரமான கருத்துக்களை குறிப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/176991

  • கருத்துக்கள உறவுகள்

Madam இப்படி பொங்குகிறார். ஒரு சட்டத்தை அமுலாக்க பிக்குகளிடம் ஆசீர்வாதத்துக்கு போகிறார்கள் நாட்டு தலைவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, nunavilan said:

Madam இப்படி பொங்குகிறார். ஒரு சட்டத்தை அமுலாக்க பிக்குகளிடம் ஆசீர்வாதத்துக்கு போகிறார்கள் நாட்டு தலைவர்கள்.

மடம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவேன் என அடம் பிடித்தால் நாம் என்ன செய்ய....

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

Madam இப்படி பொங்குகிறார். ஒரு சட்டத்தை அமுலாக்க பிக்குகளிடம் ஆசீர்வாதத்துக்கு போகிறார்கள் நாட்டு தலைவர்கள்.

உண்மை. இருந்தாலும் அவர் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. மத தலைவர்கள் மத கடமைகளுடன் இருந்திருந்தால் நாட்டில் இந பிரச்சினையும் எப்போதோ தீர்ந்திருக்கும்.

அதாவது காவிகள் வீதிக்கு இரங்கி அரசியல் செய்யவிடடாள் மக்களும் வீதிக்கு இறங்க மாடடார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு இறங்கு முன்னர் அவர்களிடம் மண்டியிடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க

வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது.

விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள்.]


நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளார்.புத்த குருக்குகள் மட்டுமல்ல எந்த ஒரு மத குருக்களும்

அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களுடைய மத வேலையை பார்க்க வேண்டும்.

நல்லகருத்தை அவர் சொன்னதால் அவர் கொடுக்கபோகும் விலை

11 hours ago, putthan said:

மடம் அடுத்த தேர்தலில் தோல்வியடைவேன் என அடம் பிடித்தால் நாம் என்ன செய்ய....

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விளங்க நினைப்பவன் said:

பௌத்த பிக்குகள் பாராளுமன்றத்துக்கு வர கூடாது. விகாரைகளில் இருந்து அறத்தை போதிக்க

வேண்டும். காவியுடை அணிந்து வருபவர்களுக்கு மக்கள் இனிமேல் வாக்களிக்க கூடாது.

விகாரையிலேயே இருக்க சொல்லுங்கள்.]


நல்லதொரு கருத்தை சொல்லியுள்ளார்.புத்த குருக்குகள் மட்டுமல்ல எந்த ஒரு மத குருக்களும்

அரசியலுக்கு வரக்கூடாது. அவர்களுடைய மத வேலையை பார்க்க வேண்டும்.

நல்லகருத்தை அவர் சொன்னதால் அவர் கொடுக்கபோகும் விலை

 

நல்ல கருத்தை சொல்வதால் நாங்களும் பகல் நேரத்தில் போய் சந்திக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நல்ல கருத்தை சொல்வதால் நாங்களும் பகல் நேரத்தில் போய் சந்திக்கலாம்

புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புத்தன் அண்ணா சந்திக்கும் போது தமிழர்களுக்கு தீர்வுக்கு ஆலோசனையையும் கேட்டுகொள்ளுங்கோ😄

நான் கொண்டு செல்லும் தீர்வு திட்டம் 
1..ஒரு நாடு இரு தேசம்...
2...தமிழ் பிரதேசம் ஈழம் என்று ,சிங்கள பிரதேசம் சிறிலங்கா என்றும் அழைக்கப்பட வேண்டும் 
3.சிங்கள தேசத்திற்கு இருக்கும் சகல உரிமைகளயும் தமிழ் தேசத்திற்கு வழங்க வேண்டும்..

இந்த திட்டங்களுடன் முதல் நாள் போய் பகலில் சந்திப்பேன் ..
அவர் எல்லாவற்றையும் வாசித்து விட்டு ஒம் நல்ல திட்டம் இதனால் நாட்டு மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் ..இன்று இரவு இராப்போசனவிருந்துக்கு வாருங்கள் கையொப்பம் இடுகிறேன் என சொல்லி என்னை வழியனுப்புவார்...

நானும் இராப்போசன விருந்தில் கலந்து கொண்டு படங்கள் எடுத்து பத்திரிகை,வட்சப்,முக புத்தகம் போன்றவற்றில் போடுவேன்....
1 ஒரு நாடு இரு தேசம்...சூப்பர்
2நீங்கள் குறும் தேசியவாதியாக இருக்க வேண்டாம் இலங்கை முழுவதையும் ஈழம் என்று அழையுங்கள் ,நாங்கள் சிறிலங்கா என அழைப்போம்...
3மூவின மக்களுக்கு சகல உரிமைகளும் சட்டத்தில் உண்டு கண்ணா .....என கூறி ஒர் பார்வை நான் என்னை மறந்திடுவேன்

அடுத்த நாள் 
அறிக்கை விடுவேன் .மடம் ...கூறுகின்றார் நான் கூறிய யாவும் சட்டத்தில் உண்டு என ...
ஆகவே நான் தொடர்ந்து மடத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவேன்....மடத்தின் வீட்டுக்கு பக்கத்தில் ஒர் வீடு வாங்கி அவருடன் நல்லிணக்க அரசியல் செய்ய முடிவு செய்துள்ளேன்...

  • கருத்துக்கள உறவுகள்

இவ கிட்டடியில் ஏதாவது ஒரு விபத்தில காணமால் போக போகிரா ? அல்லது  இனம் தெரியாத புற்றுநோயால் இறந்து போவா நாங்களும் எதிர் காலம் பற்றி சொல் வம் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இவ கிட்டடியில் ஏதாவது ஒரு விபத்தில காணமால் போக போகிரா ? அல்லது  இனம் தெரியாத புற்றுநோயால் இறந்து போவா நாங்களும் எதிர் காலம் பற்றி சொல் வம் .

உங்கள் நாட்டில் நடப்பவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் எழுதுகிறீர்கள். இலங்கையொரு மக்கள் ஜனநாயக குடியரசு என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Cruso said:

உங்கள் நாட்டில் நடப்பவற்றை கருத்தில் கொண்டு நீங்கள் எழுதுகிறீர்கள். இலங்கையொரு மக்கள் ஜனநாயக குடியரசு என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போல தெரிகின்றது. 

இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பகிடி உங்கள் கருத்து .😀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பகிடி உங்கள் கருத்து .😀

 புத்தரின் போதனைகளை பின்பற்றும் எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத மக்கள் வாழும் ஜனநாயக நாடு இது. உங்களுக்கு பகிடியாக இருக்கலாம். ஆனால் இங்குள்ள மக்கள் புத்தரின் போதனையை தவறாமல் பின்பற்றுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. 😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.