Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்!

Published By: DIGITAL DESK 3   23 FEB, 2024 | 03:54 PM

image

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. 

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். 

நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங் கோரல் நிறைவடைந்த வேளையில் வவுனியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழப் பேராசிரியர் ஒருவரும், ருகுண மற்றும் ரஜரட்ட பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் நால்வரது விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

பேரவை விண்ணப்பங்களை ஆராய்ந்த பின்னர் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய விசேட பேரவைக் கூட்டத்துக்கான திகதியைத் தீர்மானிக்கும். அன்றைய விசேட பேரவைக் கூட்டத்தில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். 

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வார்.

https://www.virakesari.lk/article/177136

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் அவர்களின் நீண்ட நாள் திட்டத்தில் ஒன்று ...வெகு விரைவில் யாழ் பல்கலைகழகத்திற்க்கும் இந்த நிலை வரலாம்....கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியின் பெரியவர் நம்ம சகோதரயா...

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இதுவும் அவர்களின் நீண்ட நாள் திட்டத்தில் ஒன்று ...வெகு விரைவில் யாழ் பல்கலைகழகத்திற்க்கும் இந்த நிலை வரலாம்....கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியின் பெரியவர் நம்ம சகோதரயா...

சில வேளைகளில் தமிழர்களை விட சிங்களவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முன்னர் யாழில் லயனல் பெர்னாண்டோ என்னும் சிங்கள அரச அதிபர் இருந்தார். அவரை அங்கிருந்து மாற்றலாகி செல்வதட்கு அங்குள்ள மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களால் மிகவும் நேசிக்க படடார்.

எனவே எல்லோரையும் எடுத்தவுடன் இனவாதி, கெடடவர், துரோகி என்று சொல்ல கூடாது. எப்படி இருந்தாலும் அவர் அங்கு போட்டியிட வேண்டும், தெரிவு செய்யப்பட வேண்டும், பேரவை முடிவு செய்ய வேண்டும் போன்ற பல படிகள் உண்டு. அங்குள்ளவர்கள் அவர் தகுதியானவர் என்று கருதினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நானும் இதை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ன நடக்குமென்று.

யாழ்ப்பாண பல்கலைக்கு, பரமேஸ்வரன் கோவிலில் தீபமேற்றி திருநீறு அணியாத ஒருவர் துணைவேந்தராக வர முடியாது. சில ஆண்டுகள் முன்பு, பேராசிரியர் சாம் தியாகலிங்கம் என்ற மிகத் திறமையான அமெரிக்காவின் ஹொப்கின்ஸ் பல்கலைப் பேராசிரியர் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த போது, "அவர் தன் திணைக்களத் தலைவரின் அத்தாட்சியைச் சமர்ப்பிக்கவில்லை" என்று விண்ணப்பத்தை நிராகரித்தார்களாம் -அமெரிக்கப் பல்கலையில் திணைக்களத் தலைவர் பதவியின் தன்மை பற்றித் தெரியாத பன்னாடைகள் தேர்வுக் குழுவில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி இது.

இப்படி சக தமிழனுக்கே பாகுபாடு காட்டி ஆப்பு வைத்தால் சிங்களவன் வந்து ஆப்பு வைக்கும் போது ரசிக்கத் தான் முடிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தரப்படுத்தல் வரிசையில் கொழும்பு மற்றும் பேரதெனியா பல்கலைக்கழகங்கள் 1100, மற்றும் 1600 க்குள் உள்ளது உண்மையிலேயே வருத்தம் தான்.

ஆனால் நாங்கள் பெருமை அடிக்கும் யாழ்ப்பாண university இருக்கும் நிலையோ அதள பாதாளத்தில். உலக தர வரிசையில் 7695 ஆவது இடத்தில் உள்ளது Jaffna university.

வேப்பிலை அடித்தால் மலேரியா போய்விடும், கந்த புராணம் படித்தால் காய்ச்சல் போய் விடும் என்று கதை விடும் பேராசிரியர்களை உருவாக்கும் இடம் அந்த இடத்தில் இருப்பது தானே சாலவும் சிறந்தது!!

நிற்க

எத்தியொப்பியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகதியிலும் விட நன்கே முன்னுக்கு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகிடி said:

இவர்கள் எல்லாம் இனவாதம் , மத வாதம் என்று மற்றவர்களை தூற்றுவார்கள். தங்கள் யார் என்பதை ஒரு நாளும் எண்ணியது கிடையாது. வெள்ளையடிக்கப்படட  கல்லறைகள். இவர்கள் தங்களது நிலையை, தாங்கள் எங்கேயிருக்கிறோம் என்று  முதலில் உணரும் வரைக்கும் தமிழனுக்கு விடிவில்லை. 

எத்தியோப்பிய பல்கலை கழகத்தை குறிப்பிட்டிருந்தீர்கள். சில வேளைகளில் அவர்களை பிழையாகா நாம் விளங்கி இருந்தாலும் நம்மைவிட ஒருபடி மேலேதான் இருக்கிறார்கள்.  

ஒரு பழமொழி சொல்லுவார்கள் அது இந்த தமிழர்களுக்கு நன்றாகவே பொருந்தும்.  எத்தியோப்பியன் தன் தோலையும் சிவிங்கி தன் புள்ளியையும் மாற்றினாலும்  மாற்றும் இவர்களோ மாற மாடடார்கள் என்று.  

21 hours ago, Justin said:

நானும் இதை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ன நடக்குமென்று.

யாழ்ப்பாண பல்கலைக்கு, பரமேஸ்வரன் கோவிலில் தீபமேற்றி திருநீறு அணியாத ஒருவர் துணைவேந்தராக வர முடியாது. சில ஆண்டுகள் முன்பு, பேராசிரியர் சாம் தியாகலிங்கம் என்ற மிகத் திறமையான அமெரிக்காவின் ஹொப்கின்ஸ் பல்கலைப் பேராசிரியர் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த போது, "அவர் தன் திணைக்களத் தலைவரின் அத்தாட்சியைச் சமர்ப்பிக்கவில்லை" என்று விண்ணப்பத்தை நிராகரித்தார்களாம் -அமெரிக்கப் பல்கலையில் திணைக்களத் தலைவர் பதவியின் தன்மை பற்றித் தெரியாத பன்னாடைகள் தேர்வுக் குழுவில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி இது.

இப்படி சக தமிழனுக்கே பாகுபாடு காட்டி ஆப்பு வைத்தால் சிங்களவன் வந்து ஆப்பு வைக்கும் போது ரசிக்கத் தான் முடிகிறது!

நிறையபேர் இந்த பாகுபாடடை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையை எழுதும்போது தாம் தூம் என்று துள்ளு குதிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2024 at 12:38, Cruso said:

சில வேளைகளில் தமிழர்களை விட சிங்களவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முன்னர் யாழில் லயனல் பெர்னாண்டோ என்னும் சிங்கள அரச அதிபர் இருந்தார். அவரை அங்கிருந்து மாற்றலாகி செல்வதட்கு அங்குள்ள மக்கள் அனுமதிக்கவில்லை. மக்களால் மிகவும் நேசிக்க படடார்.

எனவே எல்லோரையும் எடுத்தவுடன் இனவாதி, கெடடவர், துரோகி என்று சொல்ல கூடாது. எப்படி இருந்தாலும் அவர் அங்கு போட்டியிட வேண்டும், தெரிவு செய்யப்பட வேண்டும், பேரவை முடிவு செய்ய வேண்டும் போன்ற பல படிகள் உண்டு. அங்குள்ளவர்கள் அவர் தகுதியானவர் என்று கருதினால் யாரும் எதுவும் செய்ய முடியாது. 

வரலாறு பல பாடங்களை விட்டு சென்றுள்ளது ...ஒரு லயனல் பெர்ண்டோ வைத்து மொத்த சிறிலங்கா இனவாத செயல்களையும் மறைக்க  முடியாது....சிங்கள அதிகாரிகள் நல்லவர்களாக இருப்பார்கள் ...ஆனால் சட்டங்கள் ஊடாக மக்கள் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்....அதற்குறிய அதிகாரங்கள் பிர்தேச மக்களுக்கு தேவை.... 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

வரலாறு பல பாடங்களை விட்டு சென்றுள்ளது ...ஒரு லயனல் பெர்ண்டோ வைத்து மொத்த சிறிலங்கா இனவாத செயல்களையும் மறைக்க  முடியாது....சிங்கள அதிகாரிகள் நல்லவர்களாக இருப்பார்கள் ...ஆனால் சட்டங்கள் ஊடாக மக்கள் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும்....அதற்குறிய அதிகாரங்கள் பிர்தேச மக்களுக்கு தேவை.... 

ஒரு பானை சோற்றிட்கு ஒரு சோறு பதம்.

பேராசிரியர் துரைராஜா பேராதனை பல்கலையில் இருக்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்கள பேராசிரியர்களைவிட இவரைத்தான் மரியாதைக்குரியவராக பார்த்தார்கள். இவரைத்தான் ஆதரித்தார்கள். அவர் புற்று நோயால் பாதித்திருந்த வேளை அவருக்கு எந்த விதமான உதவியையும் செய்ய ஆயத்தமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக புலிகளுக்கு நிலக்கீழ் கட்டிடங்களை அமைக்க வடிவமைப்பு செய்தார் என்ற குற்ற சாட்டுக்களும் இருந்தது. அதை எல்லாம் அவர்கள் பார்க்கவில்லை. நல்லவர்கள்  கெடடவர்கள் எல்லா இடமும் இருக்கிறார்கள்.

நீங்கள் சட்ட்ங்கள், நிலங்கள், அதிகாரங்கள் பற்றி பேசுகிறீர்கள். இதெல்லாம் அரசியல்  தீர்மானங்களினால்தான் நடைமுறை படுத்தலாம். எத்தனையோ தசாப்தங்களாக பேசி விட்டொம்.

இப்போது தீர்க்கமான தமிழ் தலமைகிடைத்திருக்கிறது. டெல்லியிலும் அலுவலகம் திறக்க போகிறார்களாம். பொறுத்திருப்போம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2024 at 21:52, Justin said:

நானும் இதை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ன நடக்குமென்று.

யாழ்ப்பாண பல்கலைக்கு, பரமேஸ்வரன் கோவிலில் தீபமேற்றி திருநீறு அணியாத ஒருவர் துணைவேந்தராக வர முடியாது. சில ஆண்டுகள் முன்பு, பேராசிரியர் சாம் தியாகலிங்கம் என்ற மிகத் திறமையான அமெரிக்காவின் ஹொப்கின்ஸ் பல்கலைப் பேராசிரியர் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த போது, "அவர் தன் திணைக்களத் தலைவரின் அத்தாட்சியைச் சமர்ப்பிக்கவில்லை" என்று விண்ணப்பத்தை நிராகரித்தார்களாம் -அமெரிக்கப் பல்கலையில் திணைக்களத் தலைவர் பதவியின் தன்மை பற்றித் தெரியாத பன்னாடைகள் தேர்வுக் குழுவில் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி இது.

இப்படி சக தமிழனுக்கே பாகுபாடு காட்டி ஆப்பு வைத்தால் சிங்களவன் வந்து ஆப்பு வைக்கும் போது ரசிக்கத் தான் முடிகிறது!

1990-95 களில் US ல் இருந்து கணவன் மனைவி இருவரும்   யாழ் பல்கலையில் (Linguistics Department)ல் English கற்பிக்க வந்திருந்தனர். அவர்கள் அங்கே நிரந்தர விரிவுரையாளர்களாக நியமிக்கப்படவில்லை. காரணம், அவர்கள் துறைத் தலைவராகும் தகுதியுள்ளவர்கள் என்பதுடன் நீண்ட காலப்பகுதியில் அவர்கள் துணை வேந்தராகும் வாய்ப்பு அவர்களுக்கு தகுதி அடிப்படையில்  நிறையவே  உண்டு  என்பதினாலாகும் என பின்னர் அறிந்துகொண்டேன். 

அவர்கள் இருவரும் கிறீஸ்தவர்கள் என்பது அதில் உள்ள சாராம்சம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

ஒரு பானை சோற்றிட்கு ஒரு சோறு பதம்.

பேராசிரியர் துரைராஜா பேராதனை பல்கலையில் இருக்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்கள பேராசிரியர்களைவிட இவரைத்தான் மரியாதைக்குரியவராக பார்த்தார்கள். இவரைத்தான் ஆதரித்தார்கள். அவர் புற்று நோயால் பாதித்திருந்த வேளை அவருக்கு எந்த விதமான உதவியையும் செய்ய ஆயத்தமாக இருந்தார்கள். அந்த நேரத்தில் அவருக்கு எதிராக புலிகளுக்கு நிலக்கீழ் கட்டிடங்களை அமைக்க வடிவமைப்பு செய்தார் என்ற குற்ற சாட்டுக்களும் இருந்தது. அதை எல்லாம் அவர்கள் பார்க்கவில்லை. நல்லவர்கள்  கெடடவர்கள் எல்லா இடமும் இருக்கிறார்கள்.

நீங்கள் சட்ட்ங்கள், நிலங்கள், அதிகாரங்கள் பற்றி பேசுகிறீர்கள். இதெல்லாம் அரசியல்  தீர்மானங்களினால்தான் நடைமுறை படுத்தலாம். எத்தனையோ தசாப்தங்களாக பேசி விட்டொம்.

இப்போது தீர்க்கமான தமிழ் தலமைகிடைத்திருக்கிறது. டெல்லியிலும் அலுவலகம் திறக்க போகிறார்களாம். பொறுத்திருப்போம். 

துரைராஜாவுக்கு மட்டுமல்ல, அவரது மகளுக்கும் அதே அளவு மரியாதையை அவருடைய சீனியர்களும் விரிவுரையாளர்களும் கொடுப்பார்களாம். 

😀

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

தனி நபர்கள் நல்ல செயல்களை செய்வார்கள் ...அதில் தமிழர் ,சிங்களவர் என்ற வேற்றுமை இல்லை....
சில தனிநபர்கள் செய்யும் இனவாத செயல்களுக்கு கூட்டாக ஆதரவளிக்கும் மக்களும் உண்டு ....
ஆகவே இங்கு அதிகாரத்தை கையாளும் வர்க்கம் சிந்திக்க வேண்டும்..நாட்டு நலன் கருதி ....இன்று நாடு இந்த நிலைக்கு சென்றதற்கு காரணமே இந்த இனவாத அரசியல் தான்....பட்டியலிடலாம் ஆயிரம் நல்ல சிங்களவர்களை ......ஆனால் அந்த நாடு முன்னேற வேண்டுமென்றால் அதிகார பகிர்வு முக்கியம் அதை செய்தால் ஏனைய வெளிநாட்டு தலையீடுகளும் குறையும்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

துரைராஜாவுக்கு மட்டுமல்ல, அவரது மகளுக்கும் அதே அளவு மரியாதையை அவருடைய சீனியர்களும் விரிவுரையாளர்களும் கொடுப்பார்களாம். 

😀

அதை எழுத நினைத்தாலும் எழுதவில்லை. அப்படிதான் அவர்கள் அவரது மகளுக்கு எந்தவித பிரச்சினையும் வராதபடி பார்த்து கொண்டார்கள்.

இன்னும் சொல்லலாம். அங்குள்ள ஒரு மாணவனின் சகோதரன் கொழும்பில் ஒரு நடவடிக்கையின்போது  இறந்து விடடார். அதை விரிவாக இங்கு எழுதவில்லை. அவரும் பொறியிலாளர்தான். அப்போது  அந்த விடயம் அங்கு தெரிய வந்து அந்த மாணவன் விசாரணைக்கு செல்ல வேண்டி இருந்தது.

இருந்தாலும் சிங்கள மாணவர்களும் விரிவுரையாளர்களும் அதையெல்லாம் சமாளித்து அந்த மாணவன் படிப்பை முடித்து வெளியேறும் வரைக்கும் உறுதுணையாக இருந்தார்கள். இப்போது அவர் வெளிநாட்டில் வசதியாக வாழ்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

தனி நபர்கள் நல்ல செயல்களை செய்வார்கள் ...அதில் தமிழர் ,சிங்களவர் என்ற வேற்றுமை இல்லை....
சில தனிநபர்கள் செய்யும் இனவாத செயல்களுக்கு கூட்டாக ஆதரவளிக்கும் மக்களும் உண்டு ....
ஆகவே இங்கு அதிகாரத்தை கையாளும் வர்க்கம் சிந்திக்க வேண்டும்..நாட்டு நலன் கருதி ....இன்று நாடு இந்த நிலைக்கு சென்றதற்கு காரணமே இந்த இனவாத அரசியல் தான்....பட்டியலிடலாம் ஆயிரம் நல்ல சிங்களவர்களை ......ஆனால் அந்த நாடு முன்னேற வேண்டுமென்றால் அதிகார பகிர்வு முக்கியம் அதை செய்தால் ஏனைய வெளிநாட்டு தலையீடுகளும் குறையும்..

இங்கு ஒன்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் யார் என்று சிந்திக்க வேண்டும். எந்த இனத்தை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் இனவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். பொதுவாக சிங்கள இனத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள்.

நேர்மையாக சிந்திக்கிற , மனிதாபிமானத்துடன் அணுகும் அரசியல்வாதிகள் அரசியலில் மிகவும் குறைவு. அப்படியானவர்கள் இதில் களம் இறங்க முடியாத நிலைமையும் காணப்படுகின்றது. ஒன்று மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றது பணம் வேண்டும்.

எனவே உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இனி ஒரு யுத்தம் வராது என்பது எல்லோரும் கருதும் ஒரு விடயம். நானும் அப்படிதான் நினைக்கிறேன். எனவே அதிகார பகிர்வு எல்லாம் எழுதவும், கதைக்கவும் மட்டுமே.

வெளிநாட்டு தலையீடுகள் என்று கூறினாலும் நிலைமையை பொறுத்து இலங்கை அதைசமாளிக்கும். சீனா, ருசியா  இருக்கும் வரைக்கும் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.  

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Cruso said:

அதிகார பகிர்வு அவசியம் தமிழர்களுக்கு மட்டுமல்ல சிங்களவர்களுக்குமது நல்லது...யுத்தம் எம்மினத்திலிருந்து வராது ஆனால் தேவை ஏற்படின் வேறு நாடுகள் நடத்த வாய்ப்புக்கள் உண்டு ,,,

அபிவிருத்தி வேணுமென்றால் அதிகார பகிர்வு தேவை ...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

உங்களாசை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Cruso said:

உங்களாசை நிறைவேற எனது வாழ்த்துக்கள். 

நம்பிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

நம்பிக்கை

நம்பினோர் கைவிடப்படுவதில்லை. கண்டு நம்பினவர்களைவிட காணாமல் நம்பியவர்கள் உயர்ந்தவர்கள். வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

😃

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.