Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாங்க தமிழர்!
நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.
நாங்க தமிழர்!
கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம்.
நாங்க தமிழர்!
கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம்.
நாங்க தமிழர்!
குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம்.
நாங்க தமிழர்!
என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம்.
நாங்க தமிழர்!
எங்கட பிள்ளை கனடாவில் நல்லாய் படித்து நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லுவம். மற்றவன் பிள்ளை வந்தா இங்கே பாடசாலை கூட சேர முடியாது சொல்லுவம்.
நாங்க தமிழர்!
Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் .
நாங்க தமிழர்!
கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம்.
நாங்க தமிழர்!
கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம்.
நாங்க தமிழர்!
நாங்கள் அகதியாய் வந்து ஐயா சாமி என்று கெஞ்சி மண்டாடி காட் எடுத்து படம் காட்டுவம். அதை கூட மற்ற தமிழன் செய்ய விட மாட்டம்.
நாங்க தமிழர்!
நாட்டுக்கு வந்து வெளிநாடு என்று படம் காட்டுவம். ஆனால் எவனாவது வெளிநாடு வருவதை விரும்பவே மாட்டம்.
நாங்க தமிழர்… எங்கள் கதை சொல்லி கொண்டே போகலாம் பாக்கிற உங்களுக்கு bour அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்துறன்.
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கோ நல்ல அவியல் நடந்திருக்கு. 😀

  • கருத்துக்கள உறவுகள்

வம்பனுக்கும்  அதை இங்கு ஒட்டிய வருக்கும் ஒரு சில வார்த்தைகள்...... .

நாங்கள் தமிழர் கனடாவில் வாழ்கிறோம். ஆனால் எமது வருகையின் ஆரம்பம் நாற்பது ஐம்பது,ருடங்களுக்கு முன்பே ஆரம்பித்தது; 

செல்லடியிலும் உயிரிழப்பிலும் உயிர் காக்க ஓடிவந்த கதை தெரியுமா ?  
கடலிலும் அலையிலும் கடுங்குளிரிலும் உயிரை பயணம் வைத்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி  அச்சத்துடனும் நடுங்கிய படி பசிக்களையில்   கப்பலில் வந்த கதை தெரியுமா ?

விமானப்பயணத்துக்காக ஏஜென்சிக்காறனுக்கு  காணிபூமி விற்று  ஏமாந்த கதை தெரியுமா?  நாட்டுக்கு அண்மையில் வந்து (deport ) திரும்பி அனுப்பிய
 கதை தெரியுமா ? ஏஜென்சி காரனுடன் "மனைவி "என்ற பெயரில் இம்சைகளை தாண்டி நாடு நாடாய் அலைந்து உயிரை கையில் பிடித்து,வந்து சேர்ந்த இளம் பெண்களின் கதை தெரியுமா?

வந்து அசைலம் அடித்து  அப்ளை பண்ணி  லாயருக்கு (கேஸ்)க்கு வட்டிக்கு, கடன் எடுத்து கட்டிய பணம் எவ்வ்ளவு தெரியுமா?

எட்டுமணி நேரம் நின்ற நிலையில் இயந்திரத்தோடு இயந்திரமாய் மாறி களைத்து வீடுவந்து உண்டு உறங்கிய கதை தெரியுமா? மனைவி பகல் வேலையிலும் கணவன் இரவு வேலையிலும் கஷ்ட பட்டு வாழ்ந்த வாழ்க்கை தெரியுமா ?

பெற்ற குழந்தை யை பால் மறக்கடித்து  பால்வாடி (டே கேர் )அனுப்பிய கதை தெரியுமா? லீவு கேடடால் முதலாளியின் கடின வார்த்தைகள் வேலையை விட்டுப்போ என்றகண்டிப்பு  கேட்டு கலங்கி அழுத கதை தெரியுமா? கொட்டுகின்ற பனி யில்  விறைக்க குளிர் (-30) எலும்பை  ஊடுருவ  பஸ் தரிப்பில் நின்ற கதை தெரியுமா ?

வந்த கடன், கடனுக்கு வட்டி ,வீட்டாருக்கு  செலவுக்கு காசு என ஓடி ஓடி வேலை செய்து  இளமையை துறந்தது  நாற்பதுக்கு அன்மித்த  வயதில் துணையை தேடிய  கதை தெரியுமா? எத்தனை குமரிகள்    கரைசேரவேண்டுமென  அண்ணா தம்பி  யாய் பிறந்த குற்றத்துக்காக தும்படி அடித்த கதை தெரியுமா ?

ஒரு அறை கொண்ட மாடிக் கட்டிடத்தில் பகலில் நால்வர் தூங்க  அவர் இரவு வேலைக்கு செல்ல இரவில் நால்வர் தூங்கி படாத பாடெல்லாம் படட கதை தெரியுமா ?

வாருங்கள் ...வாருங்கள் இதை எல்லாம் பட்டு தெளிய ரெடியா ?  வெளிநாட்டு காசு  ஊருக்கு என்ன துயரப்பட்டு அனுப் பினார்கள்  தெரியுமா?

கடன் மடடையில்  காசு எடுத்து அங்கு வந்து செலவழிக்கிறார்கள் அதைக் கட்டிட என்ன பாடு படவேண்டும்  தெரியுமா ? 
எல்லாம் படங் காடடல், வேஷம்.. இழந்ததை பார்த்து விட வேண்டும் இன சனத்தை பார்க்க வேண்டும் என்ற ( தாகம்) ஆவல்  மட்டுமே. 

 தற்போது ...கோடிக் கணக்கில் கொடுத்து வருகிறார்கள் தெரியுமா ? வந்து எயர் போட்டில் திருப்பி  அனுப்பிய கதை தெரியுமா ?  விசிட் விசாவில் வந்து  வந்தவர்களை கேளாமல் அசைலம் அடித்து ..கணவன் மனைவி பிரிந்து  விவாக ரத்து வரை போனகதை தெரியுமா ? 
வேலை தேடி அலையும் வலி  புரியுமா ? அங்கு ஏ சி யில் வேலைபார்த்து இங்கு கோப்பை கழுவ  மனம் வருமா ? மருத்துவ காப்புறுதியின்றி ..வந்த பின் நோய் நொடி வந்தால்   ? என்ன கதை தெரியுமா ?

லாயரை பிடித்து  அவருக்கும் காசாக இறைக்க தென்பு இருக்கா ? ஒரு காலம் இருந்தது .."அகதி " என யுத்தம் காரணமாக  அனுமதிக்க ..இப்பொது எதை சொல்லி அகதி கேட்பீர்  ? இதை எல்லாம் எதிர் நோக்க ரெடியா ?  படட துன்பத்தின் ரணம் இன்னும்  மறக்க வில்லை .

வாங்கோ ...வாங்கோ.. வந்து பட்டுத்தெளிவீர். வந்த கடனுக்கு   வட்டி கட்டிட ரெடியா ?    என்ன வளம் இல்லை என் நாட்டில் ? தற்போது யுத்தமும் இல்லை ..வெளி நாட்டு காசு  தாராளமா அங்கு வருகிறது . காணி நிலம் உண்டு  அபி விருத்தி உண்டு அங்கு உடல் வருத்தி உழைக்காத காளை   இங்கு வந்து உழுமா ? இக்கரைகள் பச்சை இல்லை .சொன்னாலும் புரியாது . புரிய வைக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கனடாவில் யாழ்ப்பாணம் முஸ்லிம்களும் அகதிகளாகப் போய் இருக்கினம். சிங்களவர்கள் ஜே வி பி மற்றும் அரசியல் பழிவாங்கல் என்று போய் இருக்கினம். கொழும்பான் அண்ணாவுக்கு மாலைக்கண்ணோ. காண்பதெல்லாம்.. பேய் என்கிறார். 

ஆனால்.. ஒரு உண்மை உண்டு. தமிழர்கள் என்றில்லை தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களே இப்படித்தான். அது அவர்களின் டிசைன். அதில் எல்லா மதம் மொழி இனம் அடங்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2024 at 02:53, நிலாமதி said:

 

வாங்கோ ...வாங்கோ.. வந்து பட்டுத்தெளிவீர். வந்த கடனுக்கு   வட்டி கட்டிட ரெடியா ?    என்ன வளம் இல்லை என் நாட்டில் ? தற்போது யுத்தமும் இல்லை ..வெளி நாட்டு காசு  தாராளமா அங்கு வருகிறது . காணி நிலம் உண்டு  அபி விருத்தி உண்டு அங்கு உடல் வருத்தி உழைக்காத காளை   இங்கு வந்து உழுமா ? இக்கரைகள் பச்சை இல்லை .சொன்னாலும் புரியாது . புரிய வைக்க முடியாது. 

இதைதான் நானும் இங்கு சொல்கின்றேன் அக்கா கேட்க மாட்டர்கள். சமீபத்தில் என்னுடய சிங்கள நண்பன் என்ன்டிடம் கூறினான் யாழில் அந்த மாதிரி உழைக்கலாமாம். கொழும்புடன் ஒப்பிடும்போது  செலவு குறைவு அங்குள்ள இளைஞர்களும் பெரிதாக உழைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். தன்னுடைய ஈபிஎஃப் ப‌ணம் வந்தவுடன் அங்கு ஏதாவது வியாபரமுயற்சியை ஆரம்பிப்பதாக  கூறினான்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.