Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள்

02 MAR, 2024 | 06:58 PM
image

சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.

நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்)  புகழுடல் நாளை மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக அவரது தாய்மண்ணுக்கு எடுத்துவரப்படவுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் சாந்தனின் புகழுடல், மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலியின் பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

https://www.virakesari.lk/article/177766

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் கண்ணீருடன் அஞ்சலி!

03 MAR, 2024 | 10:35 AM
image

மறைந்த சாந்தனின் உடல் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் வைக்கப்பட்டு, வவுனியாவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது, பொதுமக்கள் திரண்டு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தினர். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் (01) எடுத்து வரப்பட்டு, பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் பின்னர், இன்று (03) காலை அவரது உடல் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சாந்தனின் உடலானது மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

IMG_20240303_083346.jpg

IMG_20240303_083440.jpg

IMG_20240303_083238.jpg

IMG_20240303_083323.jpg

IMG_20240303_083032.jpg

IMG_20240303_082901.jpg

IMG_20240303_082842.jpg

IMG_20240303_082823.jpg

IMG_20240303_082812.jpg

IMG_20240303_082728.jpg

IMG_20240303_082800.jpg

IMG_20240303_082753.jpg

https://www.virakesari.lk/article/177780

  • கருத்துக்கள உறவுகள்

பெருந்திரளானோரின் கண்ணீருடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணமாகும் சாந்தனின் பூதவுடல்

Screenshot-2024-03-03-at-11.45.50%E2%80%

இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இன்று யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து காலை 9 மணிக்கு மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினம் சாந்தனின் புகழுடல் காலை 8:00 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள அதே வேளையில் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாங்குளத்திலும் காலை 10:30 ற்கு கிளிநொச்சியிலும் அதனைத்தொடர்ந்து கொடிகாமம் ஊடாக புகழுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2: 00 மணி தொடக்கம் 3:00 மணி வரை வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நாளைய தினம் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டி தமிழ்த்தேசிய துக்கநாளாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை (திங்கட்கிழமை) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதி கிரியையில் உறவினர்கள் ஊர் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இடமளிக்குமாறு குடும்பத்தார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 

https://akkinikkunchu.com/?p=270107

  • கருத்துக்கள உறவுகள்

IMG_20240303_073022.webp

வவுனியாவில் சாந்தனின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை) காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும் இடம்பெறவுள்ளது.

இதனை தொடர்ந்து  மாங்குளத்திலும், காலை 10.30 இற்கு கிளிநொச்சியிலும் தொடர்ந்து 11.30 இற்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டள்ளது.

அத்துடன் கொடிகாமம் ஊடாக பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 2 மணிமுதல் வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதேவேளை சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371975

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

யாழை நோக்கிப் பயணிக்கும் சாந்தனின் பூதவுடல் – பெருந்திரளானோர் அஞ்சலி : துக்கதினமும் அனுஷ்டிப்பு!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் கடந்த 28.02.2024 அன்று சுகவீனம் காரணமாக அரச மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இதனையடுத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைகள் மற்றும் விமான நிலைய நடைமுறைகளையடுத்து நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியா கொண்டு செல்லப்பட்ட சாந்தனின் உடலுக்கு பெருந்திரளானோர் திரண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பின்னர் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருக்கு மத்தியில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக மாங்குளம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து 11 மணியளவில் கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்துச் செல்லப்படுவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இன்று மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்துமாறு அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், அனைத்து இடங்களிலும் துக்கதினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன், சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலிப் பதாதைகள் மற்றும் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

https://athavannews.com/2024/1371979

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சாந்தனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வ அஞ்சலி !

இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

தற்போது சாந்தனின் பூதவுடல் டிப்போ சந்தியில் அமைத்துள்ள அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மூத்த போராளியான காக்கா ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார்.

பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

இதேவேளை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

spacer.png

வவுனியா பழைய பேருந்து நிலையத்தினை சாந்தனின் பூதவுடல் தாங்கிய ஊர்தி நுழைந்தவுடன், ஊர்தி தரித்து நின்ற இடத்தில் வாகனத்தை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளதாகவும் , மீறி நிறுத்தும் பட்சத்தில் ஊர்தியின் சாரதி கைதுசெய்யப்படுவார் எனவும் வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்றநிலைமை உருவாகியதாகவும் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

spacer.png

https://athavannews.com/2024/1372002

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த பொலிஸாரால் வவுனியாவில் பதற்றம்!

03 MAR, 2024 | 03:12 PM
image

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழிமறித்த போக்குவரத்து பொலிஸார் ஊர்தியின் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

சாந்தனின் உடல் இன்று காலை வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது சாந்தனின் உடலை தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேருந்து நிலையத்தினுள் நுழைந்தது.

அவ்வேளை, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஊர்தி அருகே சென்று ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது. அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் என கூறியுள்ளனர்.

அத்தோடு, வாகன சாரதியினையும் வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவிக்க, அவ்விடத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

அதன் பின்னர், ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் பழைய பேருந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை நடத்தினர்.

 

unnamed.jpg

https://www.virakesari.lk/article/177807

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு செருப்படி. 

❤️

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு

IMG-5963.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல் ஊர்தி! 

03 MAR, 2024 | 05:52 PM
image

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜா என்கிற சாந்தனின் புகழுடல் ஊர்தி சற்று முன்னர் யாழ்ப்பாணம் வடமராட்சியை சென்றடைந்தது.

வவுனியாவில் இன்று (03) காலை 8 மணியளவில் சாந்தனின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, சாந்தனின் உடல் வைக்கப்பட்ட ஊர்தியானது ஏ9 வீதியூடாக சென்று, முல்லைத்தீவு, கிளிநொச்சி என பயணித்தது.

இதன்போது பொது மக்கள் அஞ்சலிக்காக சாந்தனின் உடல் வைக்கப்பட்டு, தற்போது யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் - நெல்லியடி ஊடாக சாந்தனின் பிறந்த ஊரான உடுப்பிட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இன்று மாலை சாந்தனின் வீட்டுக்கு கொண்டுசெல்லப்படும் அவரது பூதவுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

IMG-20240303-WA0013.jpg

இறுதிக் கிரியைகள் நடத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவில்லுக்கு மக்கள் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள், இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளைய தினம் குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

IMG-20240303-WA0011.jpg

இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

IMG-20240303-WA0012.jpg

https://www.virakesari.lk/article/177819

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் புகழுடலுக்கு அவரது சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார்

Published By: VISHNU   03 MAR, 2024 | 10:19 PM

image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தனுடைய புகழுடல் உடுப்பிட்டியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு ஆரத்தி எடுத்து கொண்டுவரப்பட்டது.

01__4___2_.jpg

இதன்போது அனைவரது நெஞ்சையும் கணக்கவைக்கும் வகையில், “அண்ணா வாறார் யாரும் அழ வேண்டாம்” என கூறிய சாந்தனுடைய சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

01__3_.jpg

இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில் ஒம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது.

மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்து நெல்லியடி மற்றும் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

01__1___1_.jpg

வவுனியாவில் இன்று காலை 8மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் – கிளிநொச்சி ஊடாக நகர்ந்து அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 28ம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சாந்தனுடைய வருகைக்காக அவரது குடும்பத்தினர் நீண்டகாலமாக காத்திருந்த நிலையில் இறுதியில் சடலமாகவே வீட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாந்தனின் இறுதிக் கிரியைகள், அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (4) காலை 10 மணியளவில் ஆரம்பமாகும்.

இறுதிக் கிரியைகள் நிறைவு பெற்றதும் வித்துடல் எடுத்து செல்லப்பட்டு ஊரில் உள்ள சனசமூக நிலையத்தில் நினைவேந்தல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வித்துடல் சாந்தன் அண்ணனின் பூர்வீக இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின் இறுதி யாத்திரை ஆரம்பமாகும்.

வல்வெட்டித்துறை, பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் இந்து மயானத்திற்கு புகழுடல் எடுத்துச் செல்லப்படும்.

https://www.virakesari.lk/article/177828

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இதன்போது கனத்த இதயத்துடன் யாரும் அழாது இருந்த நிலையில் ஒம் நமசிவாய சொல்லி ஆரத்தி எடுக்கப்பட்டது.

மனிதம் உள்ளவைக்கு இதனை வாசிக்கும் போது கண்ணீர் வரும். என்ன இந்த உலகம் இப்போ அதிக சுயநல மனிதப் பிசாசுகளால் ஆளப்படும் நிலைக்கு மக்களே கொண்டு வந்து விட்டிருப்பது தான் பரிதாபமாகிவிட்டது.

கண்ணீரஞ்சலி. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.