Jump to content

முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன் என்ற ஸ்ரீஹரன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் நாளைய தினம்(13) இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்னை மேல்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

முருகன், ஜெயகுமார், ரொபர்ட் பயஸ் 

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை பெறுவதற்காக இலங்கை உயர்ஸ்தானிகரகத்தினால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முருகன் , ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் நாளை இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் முன்னிலை | Santhan Death Rajiv Gandhi Murder India Srilanka

தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு மதியம் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகிய இவர்கள் 2022ஆம் ஆண்டளவில் விடுதலையாகியமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/santhan-death-rajiv-gandhi-murder-india-srilanka-1710243159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரையும் இலங்கை தூதரகத்திற்கு அழைப்பு

Published By: DIGITAL DESK 3   13 MAR, 2024 | 10:12 AM

image

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

https://www.virakesari.lk/article/178590

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

murugan-down-1651749606-1653393647-600x3

கடவுச்சீட்டுக்களை வழங்க முருகன் உள்ளிட்டோருக்கு இலங்கை துணைத் தூதரகம் அழைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஏனைய மூன்று பேருக்கான கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக இன்று இலங்கை துணை தூதரகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசாங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணல் இன்று இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கடவுச்சீட்டு பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதியை பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நேர்காணலுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று முருகனை நோகாணல் செய்வதற்கு அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

அத்துடன் ரொபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்வதற்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1373297

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்: இலங்கை பாஸ்போர்ட் கிடைத்ததும் எங்கே செல்கின்றனர்?

முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ்

பட மூலாதாரம்,HANDOUT

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் கடவுச் சீட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்லவிருக்கிறார்கள்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் பேரறிவாளனும் நவம்பர் மாதத்தில் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள். ஸ்ரீஹரன் என்ற முருகன் (நளினியின் கணவர்), சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் சாந்தன் இலங்கை பாஸ்போர்ட் மூலமாகவே இந்தியா வந்தவர். முருகனிடமும் இலங்கையின் பாஸ்போர்ட் இருந்தது. ராபர்ட் பயஸும் ஜெயக்குமாரும் 1990 செப்டம்பரில் தமிழகத்திற்கு வந்தவுடன் அகதிகளாகப் பதிவுசெய்து கொண்டவர்கள். ராபர்ட் பயஸின் மைத்துனர்தான் ஜெயக்குமார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்தியர்கள் என்பதால் தத்தம் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இலங்கை குடிமக்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

 
நளினி

பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES

முகாமில் இருந்து விடுவித்து தாங்கள் விரும்பும் நாட்டிற்குத் தங்களை அனுப்பி வைக்க வேண்டுமென தொடர்ந்து இவர்கள் கோரி வந்தனர். ஆனால், இவர்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட்கள் இல்லாத காரணத்தால், தொடர்ந்து திருச்சி சிறப்பு முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தனுக்கு உடல்நலம் குன்றியது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கான பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன. இருந்தபோதும், அவர் மருத்துவமனையிலேயே காலமானார். அவரது உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனக்கும் தன் கணவருக்கும் விசாவுக்காக விண்ணப்பித்து இருந்ததாகவும் நேர்காணலுக்காக ஜனவரி 30ஆம் தேதி அழைக்கப்பட்ட நிலையில், தான் மட்டும் நேர்காணலில் கலந்துகொண்டதாகவும் தெரிவித்திருந்தார். முருகன் சிறப்பு முகாமில் இருந்ததால் நேர்காணலில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள மோசமான சூழிலின் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் இரண்டு பேர் இறந்துவிட்ட நிலையில், தனது கணவருக்கு எதுவும் நடப்பதற்கு முன்பாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனவும் நளினி கோரியிருந்தார்.

 
சாந்தன்

பட மூலாதாரம்,HANDOUT

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் மார்ச் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மூவரின் நேர்காணலுக்காக புதன்கிழமையன்று சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்த முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். நண்பகல் 12 மணியளவில் அவர்கள் தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களைக் காண்பதற்கு, நளினி, ஜெயக்குமாரின் குடும்பத்தினர், அவர்களது வழக்கறிஞர்கள் ஆகியோர் வந்திருந்தனர். சுமார் 2 மணியளவில் விண்ணப்பிப்பதற்கான பணிகள் முடிந்து அவர்கள் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இவர்கள் எங்கே செல்லவிருக்கின்றனர்?

முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நளினிக்கு இந்திய குடியுரிமை இருப்பதால் விடுதலைக்குப் பிறகு அவர் இங்கேயே வசித்து வருகிறார். நளினி - முருகன் தம்பதியின் மகள் பிரிட்டனில் இருப்பதால், முருகனுக்கு பாஸ்போர்ட் கிடைத்தால் இருவரும் பிரிட்டன் செல்ல விரும்புகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை நளினி சமர்ப்பித்திருக்கிறார்.

ஜெயக்குமாரை பொறுத்தவரை அவருடைய மனைவி இந்தியாவை சேர்ந்தவர். அவர் தனது மகன் பார்த்திபன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்னையில்தான் வசித்து வருகிறார். ஆனால், பாஸ்போர்ட் கிடைக்கும் பட்சத்தில் ஜெர்மனியில் உள்ள தனது சகோதரருடன் சென்று வசிக்க ஜெயக்குமார் விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ராபர்ட் பயஸை பொறுத்தவரை, அவருடைய உறவினர்கள் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். ஆகவே அவர் நெதர்லாந்து செல்ல விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேர் தண்டிக்கப்பட்டனர். இதில் 13 பேர் இலங்கைத் தமிழர்கள். உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டபோது ஏழு பேரைத் தவிர மற்ற 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட 19 பேரில் 9 பேர் இலங்கைத் தமிழர்கள். இவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அகதிகளுக்கான சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

அவர்களில் பாஸ்போர்ட் வைத்திருந்த, முறையான விசாக்களில் இந்தியா வந்த 3 பேர் உடனடியாக இலங்கைக்குச் சென்றனர். மீதமிருந்தவர்கள் சில நாட்களில் இலங்கையிலும் அதன் பிறகு வெளிநாடுகளிலும் குடியேறினர்.

https://www.bbc.com/tamil/articles/cy6zdvd6056o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்கு முட்டுக்கட்டை!

1677855325.jpeg

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கு இந்தியா மறுப்பு

இந்திய முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டபோதும், திருச்சி சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலையில் இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்தும் முட்டுக்கட்டை போட்டுவருகின்றது விடுதலைக்கு இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்கும் நடவடிக்கையில் இந்திய ஒன்றிய அரசு பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து தம்மால் கடவுச்சீட்டு வழங்கமுடியாது என்று இலங்கை துணைத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்காக இலங்கைத் தூதரகத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்வில் பங்கேற்பதற்கு தமது கணவரை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடக் கோரி முருகனின் மனைவியான நளினி சென்னை மேல்நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்றுமுன்தினம் மீண்டும் சென்னை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் பங்கேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் முருகன், ரொபேர்ட் பயஸ் மற் றும் ஜெயக்குமார் ஆகியோரை திருச்சியில் இருந்து அழைத்துச் சென்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் முன்னிலைப்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
திருச்சி மத்திய சிறைவளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட் டிருக்கும் மூவரும் நேற்றுமுன்தினம் அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் துணைத் தூதரக அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

மூவரிடமும் நேர்முக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று முருகனின் வழங்கறிஞர் புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து அதனை தம்மால் வழங்க முடியாது எனவும் இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.திருச்சி சிறப்பு முகாமுக்குத் திரும்பியதன் பிற்பாடு சிறைத்துறை அதிகாரிகள் ஊடாக சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வேண்டுகைக் கடிதத்தை அனுப்பிவைத்தால் அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்திகொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்ட சாந்தனை இலங்கை அனுப்புவதில் இந்திய ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரை விடுவிப்பதிலும் இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது.

 

 

https://newuthayan.com/article/முருகன்,_ரொபேர்ட்_பயஸ்,_ஜெயக்குமார்_விடுதலைக்கு_முட்டுக்கட்டை!

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இவர்கள் மூவருக்கும் சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது என்றும், அவர்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காத விடத்து அதனை தம்மால் வழங்க முடியாது எனவும் இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது என்றும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார்.திருச்சி சிறப்பு முகாமுக்குத் திரும்பியதன் பிற்பாடு சிறைத்துறை அதிகாரிகள் ஊடாக சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வேண்டுகைக் கடிதத்தை அனுப்பிவைத்தால் அதைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் துணைத் தூதரக அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ராஜீவ்காந்திகொலை வழக்கில் விடுதலைசெய்யப்பட்ட சாந்தனை இலங்கை அனுப்புவதில் இந்திய ஒன்றிய அரசு இழுத்தடித்து வந்தநிலையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரை விடுவிப்பதிலும் இந்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது.

"சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது!"
இலங்கையல்லவா வழங்கவேண்டும்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

"சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசு தொடர்ந்து பின்னடித்து வருகின்றது!"
இலங்கையல்லவா வழங்கவேண்டும்?!

இலங்கை All countries passport கொடுப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்று நினைக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

இலங்கை All countries passport கொடுப்பதற்கு இந்தியா உடன்படவில்லை என்று நினைக்கின்றேன்

இலங்கை தனது நாட்டுப் பிரஜைக்கு  All countries passport வழங்குவதை இந்தியா தடுக்கும் சட்ட உரிமை உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

இலங்கை தனது நாட்டுப் பிரஜைக்கு  All countries passport வழங்குவதை இந்தியா தடுக்கும் சட்ட உரிமை உள்ளதா? 

ராஜதந்திர மட்டங்களில் அழுத்தம் கொடுக்கப்படலாம்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை இலங்கைக்குள் மட்டும் வைத்திருந்தால் மட்டுமே தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கலாம் அல்லது  எல்லை மீறினால் ஏதாவது செய்யலாம்  என இந்தியா நினைத்து வைத்திருக்கும். வேறு நாடுகளுக்கு சென்று உண்மைகளை உளறி விடலாம் என்ற பயம் கிந்தியாவிற்கு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒருபோதும் உயிருடன் விடமாட்டார்கள் .....ஏதாவது சாக்கு போக்கு சொல்லி காலத்தை இழுத்தடித்துக் கொண்டு போவார்கள் .........!  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM   பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/187350
    • சம்மபந்தர் மட்டுமா தூக்கிப் பிடிக்கிறார்????😳🤔 பாம்பின் நஞ்சு கொடியது உயிரைக் கொல்லும். ஆனால் அதுவே மனிதரின் கொடிய நோய்களைத் தீர்ப்பதற்கு ஒரு மருந்தும் ஆகிறது. சம்பந்தரின் தமிழின துரோகத் தலைமை வாழ்க்கையும் தமிழினத்திற்கு ஒரு மருந்தாகட்டும்.  சம்பந்தரின் ஆத்மா சாந்திபெற வேண்டுவதோடு, அவர்போன்றோர் இனிப் பிறவாதிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
    • 01 JUL, 2024 | 12:03 PM   எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றியதோடு, அவற்றில் இருந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளமையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் திங்கட்கிழமை (1) காலை கடலில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி பாம்பன் வீதியில்உள்ள பாலத்தில் மீனவர்கள் நடத்திய வீதி மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.  பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றினர்.  அத்துடன் அப்படகுகளில் நின்று மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்படவுள்ளனர். இந்நிலையில், பாம்பன் பகுதி நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மீனவர்களின் உறவினர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் மற்றும் ஏனைய மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.  கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். மீனவர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய  பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீனவர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ள நிலையில், மீனவர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/187368
    • Published By: DIGITAL DESK 7 01 JUL, 2024 | 11:05 AM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதியில் ஞாயிற்றுக்கிழமை (30) காலை இடம்பெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வைத்தியர் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏ-9 வீதியில் விபத்துக்குள்ளாகின.  இதன்போது, இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187356
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.