Jump to content

என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே


Recommended Posts

“என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே”

 

எஸ்.  தில்லைநாதன்

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

“பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே”  போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது

குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

image_621bbe9816.jpgimage_410f5316c3.jpgerror####Image%20Size%20is%20too%20large

https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம்.

அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா?  அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். 

எங்களது ஆட்களுக்கு இவைகள் நன்றாக பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

கடல்நீரால் பேப்பர் கொஞ்சம்கூட ஈரமாகாமல் கரையொதுங்கியது நாகர் கோயிலில் மட்டுமே நடக்க கூடிய அதிசயம்.

அந்தியேட்டி கிரியைக்கு இப்போ இங்கிலீஷில் எல்லாம் எழுதுவாங்களா?  அந்தியேட்டியின் அசுர வளர்ச்சி.


நாகர்கோயில் கடலை நாங்கள் ஆண் கடல் என்று சொல்லுவோம். எப்போதும் அலை அடிக்கும் கடல். அப்பவும் நனையவில்லை....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே”

No No No

நின்மதி.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 03 JUL, 2024 | 10:14 AM   யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர். அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், நால்வரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/187556
    • முன்னாள் பா.உ. அரியநேத்திரன் ஒரு வாட்ஸப் குழுமத்தில் பதிந்தது.. — சம்பந்தன் ஐயா தொடர்பாக அறிந்தும் அறியாத உண்மைகள்..! 1. இலங்கை தமிழரசுக்கட்சியின்  முன்னாள் தலைவரும் அப்போது அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயாவுக்கு தாயகத்தலைமகன் எனும் பட்டம்  2014, செப்டம்பர்,27, ம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வாழும் வீரர்' விருது -2016, ஜனவரி,14, கனேடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 50 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். 👉புலிக்கொடியும் சிங்கக்கொடியும்.. ! 3. சம்பந்தன் ஐயா 2012, மே,01, ல் யாழ்ப்பாண மேதினத்தில் மேடையில் வைத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தன் ஐயாவின் கையில் பிடிக்கவைத்தார்.இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த கொடி ரணிலால் சம்பந்தன் ஐயாவுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை. 4. ஆனால் சம்பந்தன் ஐயா திருகோணமலையில் 2004, அக்டோபர்,17, ல்  ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார் அந்த நிகழ்வில் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டோம். 5. 2004,மாவீரர் நாள் 2004, நவம்பர்,27 அன்று சம்பந்தன் ஐயா தலைமையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் மாவீரர்களுக்கு 22, உறுப்பினர்களும் தீபம் ஏற்றி நினைவுகூரப்பட்டதுடன்.       சம்பந்தன் ஐயா மாவீரர்கள் தொடர்பாக புகழந்தும் பேசினார் என்பதும் வரலாறு. -பா.அரியநேத்திரன்- 03/07/2024    
    • தேர்தலை வைத்து பிரெஞ்சுமக்களை துவேசிகளாக்காதீர்கள். இங்கே வந்தவரும் கலந்தவரும் தான் அதிதீவிர வலதுசாரி. இதில் நம்மவர்களும் அடக்கம்.
    • உயிரிழந்த 4 மீனவர்களின் சடலங்களும் தங்காலை துறைமுகத்தை வந்தடைந்தது! கடலில் மிதந்த போத்தலில் இருந்து திரவத்தை குடித்து உயிரிழந்த Dovon Son 5 மீன்பிடிக் கப்பலின் நான்கு மீனவர்களின் சடலங்களையும் ஏற்றிச் சென்ற மீன்பிடி கப்பல் இன்று தங்காலை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.   இதேவேளை தங்காலை நீதவான் அங்கு வருகை தந்து  விசாரணைகளை மேற்கொள்ளும் வரை மீனவர்களின் சடலங்கள் கப்பலிலேயே இருக்கும் எனவும், பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2024/1390773
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.