Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-b51096514c43f1ac30668122c0595f

இலங்கையில் ஏழுமலையான் கோவில் !

இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2024/1374722

  • கருத்துக்கள உறவுகள்

தமது பிரதேசத்தின் உற்பத்தி வளர்சசி, வர்ததக வளர்சசி அதன்மூலமான வேலைவாய்ப்பு மக்களின் வாழ்ககைத்தர உயர்வு ஆகியவற்றை விட இவ்வாறான கோவில்களுக்கு வாரியிறைப்பதில் ஈழத்தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்கள் உட்பட)  அதிக  அக்கறையுடன் இருப்பதை அவதானித்த ஏழுமலையான் இந்த ஏமாளித்தனம் உடைய மக்களே தனது வாடிக்கையாளர்கள் என்பதை துல்லியமாக சந்தைஆய்வு (marketings analysis)  செய்து இலங்கைக்கு எழுந்தருளி வருகிறார் போலும். 

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துக்கு இன்றைய நிலையில் பணம் தேவை....... நாடு நாடாக தண்டித்திரிகிறதை விட அது உண்டியல் மூலமாக வந்தாலும் சரிதானே என்றுதான் அவர்கள் நினைப்பார்கள் ......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அரசாங்கத்துக்கு இன்றைய நிலையில் பணம் தேவை....... நாடு நாடாக தண்டித்திரிகிறதை விட அது உண்டியல் மூலமாக வந்தாலும் சரிதானே என்றுதான் அவர்கள் நினைப்பார்கள் ......!  😁

சிறீலங்கா அரசினூடாக இந்திய அரசை அணுகியுள்ளது….🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன.

 

2 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக

ஏழுமலையான் ஏற்கனவே பணக்கார கடவுள் என்று அழைக்கப்படுகிறார், என்னமோ நிறுவன கிளைகள் போன்று  பல்வேறு இடங்களீல் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது என்று செய்தியிடுகிறார்கள், 

ஏற்கனவே கொழும்பில் பிரமாண்டமான பல கோவில்கள் அன்றுதொட்டு உண்டு ,அதையும்மீறி இன்னுமொன்று கட்டி தாருங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

திருப்பதி நிர்வாகத்தினால் கட்டி கொடுக்கப்படும் இந்த கோவிலின் ஒரு பகுதி வருமானம் கண்டிப்பா இந்தியாவுக்கு போக வழி உண்டு.

தமிழன் எது கேட்டாலும் செய்து தராத சிங்கள், கோவில் கேட்டால் மட்டும் உடனடி அனுமதி வழ்ங்கிறான், இதன் பின் உள்ள சூட்சுமம் இனிமே வாய் திறந்து வடக்கு கிழக்கில் விகாரைகள் அமைப்பது பற்றி  எவரும் எதிர் கருத்து எழுப்பினால் அதற்கு  சர்வதேசத்துக்கும் இந்தியாவும் பதில் சொல்ல கைவசம் பதில் தயார் செய்துவிட்டார்கள் என்றே கூறலாம். 

ஏழுமலையான் கோவில் கொழும்பில் எழுப்பப்படும் ஏக காலத்தில் மட்டு,யாழ்நகரத்தின் நடுவில் இலங்கையின் மிக பிரமாண்டமான விகாரைகள் எழுப்படலாம் எழுப்பப்பட்டால் எவரும் கேள்வி கேட்க முடியாது ஏனென்றால் அவனிடம் பதில் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

ஈழத்தமிழர்கள் (புலம்பெயர் தமிழர்கள் உட்பட)  அதிக  அக்கறையுடன் இருப்பதை அவதானித்த ஏழுமலையான் இந்த ஏமாளித்தனம் உடைய மக்களே தனது வாடிக்கையாளர்கள் என்பதை துல்லியமாக சந்தைஆய்வு (marketings analysis)  செய்து இலங்கைக்கு எழுந்தருளி வருகிறார் போலும். 

உள்ளம் கையில் இருக்கும் அப்பிள் போன்ற உண்மை இது இதை சக்தி கொண்ட ஏழுமலையான் உணர்வது அவருக்கு ஒரு தூசு.  இலங்கையில் தங்கம் விலை அதிகரிக்கும்.இலங்கை செல்கின்ற வெளிநாட்டு தமிழர்கள் அங்கே போய் மொட்டை அடித்து திரும்புவார்களா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.