Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..

78492581.jpg

வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில்   முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்காகக்  கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அவை கடந்த மாதம் இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவற்றில், பெரும்பான்மை இனப் பேராசிரியரின் விண்ணப்பம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கேற்பச் சமர்ப்பிக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது. 

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூவரும் நேற்று, 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர். பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் இலத்திரனியல் மற்றும் மின்னியல் துறைப் பேராசிரியர் அ. அற்புதராஜா முதல் நிலையிலும், வவுனியா பல்கலைக்கழகப் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் திருமதி அனந்தினி நந்தகுமாரன்,  வியாபாரக் கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ. புஸ்பநாதன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர்.  

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக அரசதலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். 

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி அரசதலைவருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக அரசதலைவர் தெரிவு செய்து, நியமனம் செய்வார்.
 

https://newuthayan.com/article/வவுனியாப்_பல்கலைக்கழகத்_துணைவேந்தர்_பதவிக்கான_தெரிவில்___அற்புதராஜா_முன்னிலை..

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ragaa said:

அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice. 

👍....

உண்மையில் அவர் ஒரு அற்புதம் தான். 

நான் அவருக்கு இன்ஸ்ரக்டராக இருந்திருக்கின்றேன். எதையும் விளங்கிச் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார். பொதுவாக பலர் முந்தைய வருடங்களில் இருந்து பிரதி எடுத்து வேலையை முடித்து விட்டு போய் விடுவார்கள்.....😀

மேலே படித்து முடித்து விட்டு நாட்டிற்கு திரும்பிப் போன வெகு சிலர்களில் அவரும் ஒருவர்...🙏

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragaa said:

அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice. 

 

25 minutes ago, ரசோதரன் said:

👍....

உண்மையில் அவர் ஒரு அற்புதம் தான். 

நான் அவருக்கு இன்ஸ்ரக்டராக இருந்திருக்கின்றேன். எதையும் விளங்கிச் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார். பொதுவாக பலர் முந்தைய வருடங்களில் இருந்து பிரதி எடுத்து வேலையை முடித்து விட்டு போய் விடுவார்கள்.....😀

மேலே படித்து முடித்து விட்டு நாட்டிற்கு திரும்பிப் போன வெகு சிலர்களில் அவரும் ஒருவர்...🙏

 

இது ஒரு முகாமைத்துவம் சம்பந்தப்பட்டதல்லவா? இதற்கு நல்ல தலமைப்பண்புள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறப்பாகும் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

 

இது ஒரு முகாமைத்துவம் சம்பந்தப்பட்டதல்லவா? இதற்கு நல்ல தலமைப்பண்புள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே சிறப்பாகும் என கருதுகிறேன்.

👍........

இவர் கிளிநொச்சியில் உள்ள பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த பொழுது நன்றாகவே செயற்பட்டார் என்று நினைக்கின்றேன். சமூக ஊடகங்களில் சிறு சலசலப்புகள் ஒன்றோ, இரண்டோ வந்திருந்தன. மற்றபடி நான் வேறு எதுவும் கேள்விப்பட்டதில்லை.

ஒரு தடவை இவரும், அங்கு பணியாற்றும் சில விரிவுரையாளர்களும் இங்கு அமெரிக்கா வந்து சில சந்திப்புகளை நடத்தினர். நானும் பங்குபற்றியிருக்கின்றேன். பின்னர் ஒரு தடவை நாங்கள் சில பேர்கள் கிளிநொச்சி போயிருக்கின்றோம். 

உங்களிடம் பொதுவெளியில் பகிரக் கூடிய தகவல்கள் எதுவும் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை அவர் ஒரு உண்மையான நேர்மையானவர் . பேராதனை பொறியியல் பீடத்தில் நான் படித்த காலத்தில் அவர் உதவி விரிவுரையாளராக இருந்தவர். முதுமாணி படிப்புக்காக ஆயத்த நிலையில் இருந்த தருணம். அவர் வருவது சாலச்சிறந்தது .

  • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2024 at 00:10, ரசோதரன் said:

உங்களிடம் பொதுவெளியில் பகிரக் கூடிய தகவல்கள் எதுவும் இருந்தால், உங்களுக்கு ஆட்சேபணைகள் எதுவும் இல்லாமலும் இருந்தால், அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.

இல்லை, எனக்கு யாரிவர் என்றே தெரியாது, சும்மா பொதுவாகக்கூறினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2024 at 20:23, ragaa said:

அற்புதராஜா ஒரு அருமையான மனிதர்.. எனக்கு instructor ஆக இருந்தவர். It will be good and wise choice. 

உண்மையிலேயே மிகவும் அருமையான மனிதர், எனக்கும் instructorஆக இருந்தவர், நீங்களும் நானும் ஒரே காலத்தில் அங்கே இருந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். இங்கு அவர் வேறு விரிவுரையாளர்களுடன்  வந்தபோது ஒன்று கூடல் ஒன்று வைத்தோம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.