Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

16 APR, 2024 | 07:48 PM
image
 
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தேவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்ட அவர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

https://www.virakesari.lk/article/181258

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை…!

Former MP Palitha Thewarapperuma passes away - DailyNews

மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித தெவரப்பெரும நேற்று (16) காலமானார்.

இறக்கும் போது 64 வயதான தெவரப்பெருமவின் மரணத்திற்கு மின்சாரம் தாக்கியதே காரணம் என மருமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

1960 ஆம் ஆண்டு பிறந்த பாலித குமார தெவரப்பெரும இலங்கை அரசியலில் பேசப்பட்ட ஒரு புரட்சிகர பாத்திரம்.

2002 ஆம் ஆண்டு மத்துகம பிரதேச சபையின் தலைவராக இருந்த பாலித தெவரப்பெரும மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றினார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டு அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும், வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

பாலித தெவரப்பெரும அவர் உயிருடன் இருக்கும் போதே அவரது புதைகுழியை வடிவமைத்துள்ளார் என்பதும் நாட்டில் பேசப்பட்ட மற்றுமொரு விடயமாகும்.

https://thinakkural.lk/article/299317

அண்மையில், தன் இறப்பு குறித்து, தான் இறக்கப் போவதாக அண்மையில் ஒரு YouTube காணொளியில் தெரிவித்து இருந்தார். தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் தான் இறந்து போவதாகவும், அப்போது ஒரு பாடல் ஒலித்தது எனவும், அந்த பாடலை முடிந்தளவு ஞாபகப்படுத்தி பாடி இருந்தார்.

ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல உதவிகள் சேவைகள் செய்த ஒருவர் இவர். சிங்கள மக்கள் இவரையும் நிராகரித்து மகிந்த கட்சிக்கு வாக்களித்து இவரை தோற்கடித்து இருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

பாலித தேவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை  மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வனவிலங்கு இராஜாங்க அமைச்சரும் ஆவார்.

மக்களுடன் சகஜமாக மின நெருங்கி பழகுபவர் என்று கூறுவார்கள்.

கொரோனா காலத்திலும் வன்னியில் இயந்திரங்கள் ஆளணிகளுடன் வந்து கிணறுகள் இறைத்து கொடுத்ததாக ஞாபகம்.

ஆழந்த அஞ்சல்கள்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அண்மையில், தன் இறப்பு குறித்து, தான் இறக்கப் போவதாக அண்மையில் ஒரு YouTube காணொளியில் தெரிவித்து இருந்தார். தான் கனவு கண்டதாகவும், அந்தக் கனவில் தான் இறந்து போவதாகவும், அப்போது ஒரு பாடல் ஒலித்தது எனவும், அந்த பாடலை முடிந்தளவு ஞாபகப்படுத்தி பாடி இருந்தார்.

ஏழை எளிய மக்களுக்கு பல நல்ல உதவிகள் சேவைகள் செய்த ஒருவர் இவர். சிங்கள மக்கள் இவரையும் நிராகரித்து மகிந்த கட்சிக்கு வாக்களித்து இவரை தோற்கடித்து இருந்தனர்.

அவரின் இறுதி உரை. 👇

//என் இறுதி பயணத்தை தயார்படுத்தி உள்ளேன்,
நான் இப்போது எனது கடைசி இறுதி பயணத்தை தயார் செய்துள்ளேன்.  இப்போது, நம் மதத்தின்படி, இறப்பதற்கு முன் மெழுகுவர்த்தியைக் கொடுக்கலாம்.

எனது உடலை தூக்கிக் கொண்டு செல்லும் சவப்பெட்டியை இலட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து வாங்காமல் அந்தப் பணத்தில்   ஏழைப் பிள்ளைகளுக்கு புத்தகம் கொப்பி  உணவு என்பனவற்றை வாங்கி தருமாறு கூறியுள்ளேன்.

எனது மயானத்திற்கு வருபவர்கள் யாரும் அழுது கொண்டு என் பின்னால் வர மாட்டார்கள்.
அதற்காக நான் ஒரு பாடலை எழுதியுள்ளேன். 

பழகிய பாதையில் இன்றும் செல்கின்றேன் ஆனாலும் வேறு பயணம்.அதிகமான மக்கள் என் பின்னால் வருகின்றார்கள் நான் தனியாக செல்கின்றேன் என்று  நினைத்து. எப்பொழுதுமே  எனது பாரத்தை உனது தோளில் இறக்கி வைக்கவில்லை மகனே. கூடுதலான பாரமாக இருந்தால் பூமியில் வைக்கவும் உனது தோல் வலிக்கும்  என் மகனே. எமது தோட்டத்தின் பக்கத்தில் உள்ள குளத்தின் அருகில் எனக்கான இறுதிக் குழியை நானே அமைத்து வைத்துள்ளேன் என் சிறிய மகனே..

என்னை விட்டு செல்லும்போது உனது அம்மாவின் மருந்து பற்றுச் சீட்டை மறக்காமல் சென்று கொடுத்து விடு என் மகனே.. எனது பெரிய மகன் ஏற்கனவே இறந்து விட்டான் என் தனிமைக்கு அவன் அங்கு இருப்பான் அவன் என்னை பார்த்துக் கொள்வான் நீ என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம்.

எனது ஆசை சாதாரண ஏழையைப் போல் என்னை நல்லடக்கம் செய்ய வேண்டும். அதை விட்டு மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தாரை போல் மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை சீரழித்து ஏழை மக்களின் வயிற்றில் அடித்து இறப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் தேடியது நான் உழைத்தது என் அரசியல் பயணம் இறுதி வரை ஏழை மக்களுக்காகவே இது நான் எனது சுயநினைவோடு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

சென்று வருகின்றேன். நான் நேசிப்பது என்னை நேசிப்பது ஏழை மக்கள். எனது மூச்சிலும் பேச்சிலும்  ஏழை மக்களின் நினைவோடு உயிர் பிரிவேன்.//
Translation by Paul ✍️✍️

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

அஞ்சலிகள். மிக வித்தியாசமான, மானிட நேயம் காட்டிய அரசியல்வாதி.

—————

இது தான் உயிருடன் இருக்கும் போதே இவர் தனக்கென கட்டிய கல்லறை. மொழிபெயர்காமைக்கு வருந்துகிறேன். நிலையாமையை பொட்டில் அடித்த மாதிரி சொல்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM

image
 
மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

WhatsApp_Image_2024-04-19_at_18.16.33_7f

வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார்.

WhatsApp_Image_2024-04-19_at_18.16.33_86

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

https://www.virakesari.lk/article/181481

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.