Jump to content

புலத்தில் இருந்துகொண்டு ஊரில் வாங்கிய காணியை பெயர் மாற்றம் செய்வது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ன மாதிரி? காணியளின்ர உறுதியளையும் கையோட தரோணுமோ 😂

ஹி ஹி.... விலை படிந்து விட்டதா? அண்மையில்  நான் அறிந்த செய்தி; வெளிநாட்டில் வசிப்பவர் ஒருவர் தன் காணியை தாயகத்தில் இருக்கும் ஒருவரிடம் நம்பிக்கையின்பேரில் அதிகாரப்பத்திரம் (power of attorney)  கொடுத்திருந்தார், சில காலத்தின்பின் அந்த நபிக்கைக்குரியவர், அந்தக்காணியை மூன்றாக பிரித்து ஒன்றை விற்றுவிட்டார், அடுத்ததை உறவினருக்கு நன்கொடையாக கொடுத்தாராம், மற்றயதை வங்கியில் காட்டி பணம் பெற்றிருக்கிறாராம், இதற்கும் ஒரு துணிவு வேண்டும்! இப்போ காணியின் சொந்தக்காரர் வழக்கு போட்டுள்ளாராம். இது தேவையா? அதிகாரம் கொடுப்பதைவிட, பராமரிப்புக்கு கொடுத்து வருடாவருடம் சென்று கண்காணிப்பது, அப்போதைய சட்டப்பிரகாரம் மாற்றங்களை செய்யலாம். ஆனா காணியில் பொது அதிகாரம் கொடுப்பது, வினையை விலைக்கு வாங்குவது போலாகும். இன்றைய உலகில் நம்பிக்கைக்குரியவர் என்று யாருமில்லை. சொந்தச் சகோதரங்களையே நம்ப முடியவில்லை, மற்றவரை ஏவி காரியம் சாதிக்கிறார்கள். "உயிரோடு போகாத  நட்பு, சில பொருளோடு உறவாட கெடும்." என்பார்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக சட்டத் திருத்தங்கள் பின்னோக்கிப் பாய்வதில்லை….. ( ஆனால் சிறீலங்காவில் எதுவும் நடக்கும்)

தற்போது காணி விற்பவரும் காணி வாங்குபவரும் கட்டாயம் TIN- Tax Identification Number வருமான வரி இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

அண்மையில் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் உள்ள நண்பர் ஒருவர் தனது வீட்டு உறுதியைத் தொலைத்ததால் ஏதோ செய்து அதனைப் புதுப்பித்திருந்தார். அதனைத் தனது வெளிநாட்டில் பிரஜாவுரிமையோடு வழும் தனது பிள்ளையின் பெயருக்கு மாற்றியிருந்தார். இந்த இரு பத்திரங்களையும் பார்த்தபோது ஒரு சந்தேகம் வந்தது. இதில் ஒட்டப்பட்ட முத்திரை தவிர அரசாங்க இலச்சினை எதிலும் இல்லை. நொத்தாரிசின் பெயர் விலாசம் கூட மொட்டைக் கடிதம் போன்று சாதாரண ஒற்றையில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இது தவிர 4 தானத்தில் ஒரு இலக்கம் போடப்பட்டிருந்தது. கீழ்ப்புறம் அடிக்கப்பட்ட சீல் கூட Land Regisry - Jaffna என்று மட்டுமே இருந்தது.

இந்த உறுதிப் பத்திரத்தை எப்படி நம்புவது ? இது என்ன விதத்தில் சட்ட ரீதியான உறுதிப்படுத்தலாக இருக்கும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

அண்மையில் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் உள்ள நண்பர் ஒருவர் தனது வீட்டு உறுதியைத் தொலைத்ததால் ஏதோ செய்து அதனைப் புதுப்பித்திருந்தார். அதனைத் தனது வெளிநாட்டில் பிரஜாவுரிமையோடு வழும் தனது பிள்ளையின் பெயருக்கு மாற்றியிருந்தார். இந்த இரு பத்திரங்களையும் பார்த்தபோது ஒரு சந்தேகம் வந்தது. இதில் ஒட்டப்பட்ட முத்திரை தவிர அரசாங்க இலச்சினை எதிலும் இல்லை. நொத்தாரிசின் பெயர் விலாசம் கூட மொட்டைக் கடிதம் போன்று சாதாரண ஒற்றையில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது. இது தவிர 4 தானத்தில் ஒரு இலக்கம் போடப்பட்டிருந்தது. கீழ்ப்புறம் அடிக்கப்பட்ட சீல் கூட Land Regisry - Jaffna என்று மட்டுமே இருந்தது.

இந்த உறுதிப் பத்திரத்தை எப்படி நம்புவது ? இது என்ன விதத்தில் சட்ட ரீதியான உறுதிப்படுத்தலாக இருக்கும் ?

மிகவும் நம்பிக்கையான ஒருவரிடம் ஒரு photocopy ஐக் கொடுத்து காணிக்கந்தோரில் தேடினால் போயிற்று,.😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமரவேலு குமரகுருபரன் அவர்களிடம் இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். உங்களது உறவினர் யாராவது யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்களிடம் சொல்லவும் நேரடியாகப்போய்க் கதைக்கச்சொல்லி.

ஒப்புகை கொடுக்கும்போது வரையறுக்கப்பட்ட உரிமையையும் குறிப்பிட்ட காலக்கெடுவுடன் கூடியதானதாகக் கொடுக்கலாம்  எனக்கு வெளிநாட்டு குடியுரிமைதான் முதலில் இருந்தது இப்போது இரட்டைக்குடியுரிமை ஆனால் நான் ஒரு சொத்து வாங்கும்போது வெளிநாட்டுக்குடியுரிமைதான் இருந்தது ஆனால் எனது மனைவி இலங்கைக்குடியுரிமையை இதுவரை இழக்காததனால் அவரது பெயரையும் இணைச்சு உறுதி முடித்ததால் எதிர்காலத்தில் சிக்கல் எதுவும் வராது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் நாடுகளில் தமிழ்த் தேசியப்  புலிப் பினாமிகள். அவர்களுக்குப் போட்டியாக நிலத்தில் தமிழ் தேசிய அ ரசியல்வியாதிகள்.  தமிழனின் நிலை  கல்லில் நாருரித்த மாதிரித்தான்.  😏
    • இந்த செய்தி ...தோழர் அணுராவுக்கு எதிராக இந்திய‌ அரசும் ,அவர்களுடன் சேர்ந்து  செயல் படும் புலம்பெயர்ஸும் செய்த திட்டமிட்ட சதி என நான் நினைக்கிறேன்  இலங்கையில் இருந்து இந்த காற்று வருகிறது நாங்கள் நெற் போட்டு தடுக்கிறோம் என இந்தியா பழைய சீலைகளை கொண்டு வந்து தடுத்து நிறுத்தும் முயற்சியில்iடுபட போயினமோ தெரியவில்லை
    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.