Jump to content

தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

03-8-593x375.jpg

தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா !

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன்

அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது.

இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1380126

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே ........!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன்

28 APR, 2024 | 11:22 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு வர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான அனுமதியை மறுத்துள்ள அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதியளிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அமெரிக்கா, அத்தியாவசிய தேவைகளின் நிமித்தமே கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரியதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி மறுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த அமெரிக்க ஆய்வுக்கப்பலில் பல்கலைக்கழக மாணவர்கள் இருப்பதாகவே இராஜாங்க தினைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான  தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை. மாறாக எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும் குறித்த தேவைகளை சர்வதேச கடல்பரப்பிற்கு சென்று குறித்த கப்பலின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதே வேளை குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரையில் அனுமதி அளிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் இலங்கை தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம் எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இலங்கைக்குள் வர இனி அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/182132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க, ஜேர்மனி ஆய்வு கப்பல்கள் தடை ஏன்? பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

April 29, 2024
 
 

அமெரிக்காவின் ஆய்வுக் கப்பல் இலங்கையின் கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியிலான தீர்மானத்திற்கு அமைய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

எனினும், எரிபொருள் மற்றும் ஏனைய வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கப்பல் நாட்டின் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த மேற்படி கப்பல் 22 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனாவின் எதிர்ப்பை மீறி ஜெர்மனி ஆய்வுக் கப்பல் இரண்டாவது தடவையாகக் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக வார இறுதிப் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த கப்பலுக்கு கடந்த மார்ச் மாதத்தில் முதலில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி மீண்டும் அந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கப்பல் பணியாளர்களை மாற்றம் செய்யவும் எரிபொருள் உள்ளிட்ட சேவை வசதிகளைப் பெறவும் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தமது நாட்டிற்கு சொந்தமான கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதி வழங்கப்படாத நிலையில் சீனா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

ஜனாதிபதியின் தீர்மானத்தின் பிரகாரம் வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு ஒரு வருட காலத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி கவனம் செலுத்துவதே இதற்குக் காரணமாகும்.

2023 ஆம் ஆண்டு முதல் 14 மாதங்களுக்குள் 2 சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்தமையினாலேயே இரு நாடுகளும் இது தொடர்பிலான கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தது.


 

https://www.ilakku.org/அமெரிக்க-ஜேர்மனி-ஆய்வு-க/

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காத்திருப்பேன் உனக்காக"       படை படையாக ஒன்றின் பின் ஒன்றாக பொங்கி எழுந்து வரும் கடல் அலைகளின் அசைவிலே, அவ்வற்றின் அசைவிற்கு தாளம் போடுவது போல, அங்கு கடற்கரையில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்கள், தம் பனை ஓலைகளை அசைத்தன. அது மாலை நேரம், பகல் முழுவதும் உழைத்து சோர்வு அடைந்த தொழிலாளியின் பெரு மூச்சு போல, கதிரவனும் ஓடிக் களைத்து பிரியா விடை பெற்றுக் கொண்டு இருந்தான். வீசி வந்த கடற்கரை காற்று, அள்ளி வந்த வெண் மணலையும் சருகுகளையும், கவிதாவின் மேல் கொட்டி. அது எதோ ரகசியங்களை கவிதாவிடம் கிசுகிசுத்தது போல் இருந்தது. காலத்தின் ஆழத்தில் தொலைந்து போன காதலின் எதிரொலிகளை அலைகளும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டு இருந்தன. அவள் கரையோரம் அசையாமல் வெறுத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.   அர்ஜுன் இல்லாதது அவளது உள்ளத்தில் ஒரு குழியை செதுக்கியிருந்தது, அது காலப்போக்கில், கடலின் மென்மையான தாலாட்டுகளால் நிரப்ப முடியாத வெற்றிடமாகியது. பகல்களை அவளுக்கு இரவுகளாகவும், இரவுகளை முடிவில்லாத தனிமையாகவும் மாற்றியது, கடற்கரை மணலில் நிழலாடிய நினைவுகளில் அவள் இன்று சங்கமித்து விட்டாள். அவர்களின் கடந்த கால நெருக்கமான காட்சிகள் அவள் கண்களுக்கு முன்பாக நடனமாடின - சிரிப்பு மற்றும் மென்மையின் தருணங்கள், நிலவொளிக்கு அடியில் திருடப்பட்ட முத்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் அலைகளின் தழுவலில் அவள் நெஞ்சில் கிசுகிசுத்தன. ஆனால் அவள் விரல்களில் மணல் துகள்கள் போல, நழுவிச் சென்ற அன்பின் கொடூரமான நினைவூட்டலாக அது இன்று அவளுக்கு இருந்தது.   காகங்கள் கூட அவளுடன் கலக்க விரும்பாதது போல, கெந்திக் கெந்திக் மண்ணில் தாவி பறந்து கொண்டு இருந்தன. மனோரம்மியமான அந்த கடற்கரை மாலைப் பொழுது அவளுக்கு எரிச்சல் ஊட்டியது போலும், அவள் அந்த கடற்கரையின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு பாறையில் ஏறி குந்தி இருந்தாள். சில சின்ன சின்ன கற்களை எடுத்து, கரை நோக்கி வரும் அலைகளுக்கு குறி பார்த்து எறிந்தாள். ஆனால் அலைகள் ஓயவில்லை. அது ஒவ்வொரு முறையும் அவளது மென்மையான பாதங்களை தழுவி முத்தமிட்டு சென்றன.   கவிதாவின் இன்றைய பைத்தியக்காரத் தனத்தின் ஆழத்தில், மனம் உடைந்த எண்ணங்கள் மற்றும் சிதைந்த கனவுகளின் எச்சங்கள் இன்னும் இருந்தன. கடலோரத்தில் புராணங்களில் வரும் பேயாக அலைந்து திரிந்தாள், அலையினால் அடித்துச் செல்லப் பட்ட மணலில் தடம் பதித்த அவளது காலடிகள், மீண்டும் இன்னும் ஒரு அலையால் அடித்து அழிக்கப் படுவதை பார்த்து தனக்குள் சிரித்தாள்.   காற்றினால் கலைந்த தலைமுடியை அவள் பொருட்படுத்தவில்லை. அவளது கண்கள் அன்பை, காதலை, தன் அழகை தேடுவதை நிறுத்தி விட்டது . அது பல ஆண்டுகளாக அவளுக்கு இரக்கமற்றவையாக இருந்தன, ஒரு காலத்தில் துடிப்பான, வசீகரமான பெண்ணாக இருந்த அவளது வாழ்வு, பழங்கதையாகி விட்டது. முணுமுணுப்புகளுக்கும் பரிதாபப் பார்வைகளுக்கும் நடுவே கவிதா கடலோரத்தில், இடிந்து விழும் அலைகளுக்கும், உப்பு முத்தமிட்ட தென்றலுக்கும் நடுவே, தன் காதலனின் கரங்களில் அவள் மிகவும் மகிழ்வுடன் இருப்பது போல ஒரு புன்சிரிப்புடன் இருக்கிறாள். என்றாலும் நீண்ட காலமாக மறைந்து போன ஒரு அன்பின் நினைவுச் சின்னம் போல இன்று அவளுடைய தலைமுடி வெள்ளி நிறமாக இருக்கிறது. அவளுடைய தோல் சுருங்கியுள்ளது, ஆனால் அவள் கண்கள் வானம் கடலை சந்திக்கும் அடிவானத்தில் நிலைத்திருந்து, இன்னும் அவனுக்காக காத்திருக்கிறாள். என்றும் தணிக்க முடியாத ஏக்கத்தில் அவள் இதயம் வலிக்கிறது, அவள் காற்றில் கிசுகிசுத்தாள், "என் அன்பே, நான் காத்திருப்பேன் உனக்காக, காலம் முடியும் வரை."   வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ள, யாழ்ப்பாண குடா நாட்டின், கடற்கரையின் வசீகரத்தை அனுபவிக்க வரும் ஒவ்வொரு பார்வையாளர்களையும் ஈர்க்கும் அமைதியான ஒரு அழகிய கடற்கரை நகரத்தில், கவிதா என்ற இந்த பெண், இளமைப் பருவம் பூத்துக் குலுங்க வாழ்ந்து வந்தாள்.   "நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை! கோல முழுதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ?"   என்று பாரதிதாசன் நிலவின் அழகை வர்ணித்தான். ஆனால் இவளோ அன்று அந்த நிலவே நாணும் அளவுக்கு வசீகரமாக இருந்தாள். அழகிலும் மட்டும் அல்ல, ஒரு இரக்கத்திற்கான மனோபாவத்திலும், அறிவிலும் கூட சிறந்து விளங்கினாள். அவள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முதல் படிப்பை தொடரும் பொழுது, நடந்த பகிடிவதையின் (ragging, ரேகிங்க்) பொழுதுதான் நான்காம் ஆண்டு அர்ஜுனை சந்தித்தாள்.   "ஜூன் பிறக்கும் ஜூலை பிறக்கும் சீனியருக்கும் ஜூனியருக்கும் கல்லூரிச் சாலை எங்கும் ராக்கிங் நடக்கும்   ஸ்டூடண்ஸ் மனம் ஒரு நந்தவனமே ரோஜா இருக்கும் முள்ளும் இருக்கும் நட்புக்கு ராக்கிங் கூட பாதை வகுக்கும்"   கவிஞர் வாலியின் வரி இவர்கள் இருவருக்கும் பொருந்தும். அவர்கள் இருவரும் அன்றில் இருந்து நட்பில் பின்னிப்பிணைந்தனர். தேன் போன்ற இனிய சொற்களைப் பேசும், திரண்ட, மென்மையான தோள்களைக் கொண்ட கவிதாவின் குளிர்ச்சியான பூப்போன்ற கண்கள் அம்புகளைப் போல் அவன் நெஞ்சை துளைத்தது. அவளும், அவனின் அலைகளைப் போல நடனமாடும் சிரிப்புக்கும், அவனின் கடல் ஆழத்தின் மர்மங்களைப் போன்ற கண்களுக்கும் அந்த கணமே தன்னை முழுதாகக் கொடுத்து விட்டாள். அவள் அவனை, தன்னைப் போலவே நம்பிவிட்டாள். அவளின் காதல், குளத்தில் தாமரை போல தூய மற்றும் நம்பிக்கைக்குரியதாக மலர்ந்தது.   சிறப்பான பட்டப்படிப்புக்குப் பிறகு, அர்ஜுன் அமெரிக்காவிற்கு உயர் படிப்பிற்காக ஒரு பயணத்தைத் தொடங்கினான், அவனைப் பிரிய போகிறோமே என்ற ஏக்கத்தால் கவிதாவின் இதயம் கனத்தது, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்பியது. ஒரே ஒரு ஆண்டுதான் அவர்களின் நேரடியான நெருக்கமான காதல் வாழ்வு பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் கடற்கரையிலும் இருந்தது. ஆனால் அவளைப் பொறுத்தவரையில் அது மாற்ற முடியாத, மறக்க முடியாத இணைந்த வாழ்க்கை. அனல் பறக்கும் காற்றும், சுட்டெரிக்கும் மணலும், விடியும் வெண்ணிலவும், தன் விருந்துக்கு வரவேற்க, அலைகளோ, ஒன்றன் மேல் ஒன்றாய், முந்தி வந்து முத்தமிட, முன்னும் பின்னுமாய் கை கோர்த்தும் கோர்க்காமலும் நடந்து, அர்ஜுனும் கவிதாவும் கால்கள் நீரில் நனைய தம்மை மறந்து அனுபவித்த நாட்களை அவள் நினைத்துப் பார்த்தாள். ஏன் இந்த அவசரம் என்னவனுக்கு என்று அவளுக்குள் ஒரு ஊடலும் வந்தது. என்றாலும் அவனின் வாக்குறுதியிலும் அவன் மேல் இருந்த நம்பிக்கையிலும், அந்த கடைசி நாளை அவனின் விருப்பத்தின் படியே தன்னை முழுமையாக சமர்ப்பித்தாள். மெல்லிய பூங்காற்று மென்மையாய் மேனி மேல் ஊடுறுவ, மெய் சிலிர்த்து நின்றாள், அவன் பேரழகினைக் கண்டு! பிரிய மனமில்லாமல் அவனும் பிரிந்தான், கவிதாவிடம் பிரியா விடைப்பெற்று!!!   முதலில், அவர்களுக்கிடையில் இலங்கை - அமெரிக்கா என்று தூரம் பெரிதாக இருந்தாலும், இன்றைய இணையத்தள மேம்பாட்டால் அது வெல்லக் கூடியதாகத் அவளுக்கு தோன்றியது. காதல் மற்றும் ஏக்க வார்த்தைகளை சுமந்து கொண்டு தினம் தினம் வீடியோ அழைப்பு கண்டங்கள் கடந்து முன்னும் பின்னுமாக பறந்தன. ஆனால் காலப் போக்கில், அவை, அவனிடம் இருந்து அரிதாகவே வரத் தொடங்கின. தனக்கு படிப்பு, ஆராச்சியென காரணம் சொல்லிக் கொள்வான். அதுமட்டும் அல்ல, அந்த சில அழைப்புகளும் அவற்றின் உள்ளடக்கங்கள் ஒரு காலத்தில் இருந்ததைப் போன்று இல்லாமல் வெறும் சம்பிரதாயமாக எதிரொலித்தன. இறுதியில், முற்றிலுமாக திடீரென நின்று விட்டது. அவனின் தொலை பேசியோ, ஈ மெயிலோ, முகநூலோ எல்லாமே முடங்கிவிட்டது.   காதல் மழை பொழிந்த அந்தி நேரம் அமைதி பெற்று விட்டது. கடற் கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்து விட்டது. ஓடங்களும், மீன்பிடி படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் மீன் தேடச் சென்ற பறவைகள் கூட இருள் வருகிறதுவென கரைநோக்கி பறந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்த வெளியைக் கொடுத்தது. அதற்கு அப்பால் பனை மரங்களும் புதர்ச்செடிகளும் கொஞ்சம் இருந்தன. பனை ஓலைகள் மற்றும் பற்றைகள் ஆடவில்லை; அசையவில்லை. நாலா பக்கமும் அமைதி நிலவியது. கதிரவன் சிவந்து, கடலும் வானும் கலக்கும் அடிவானத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில கதிரவனின் செங்கதிர்களை பட்டும் படாமலும் மறைத்தன. கவிதா ஒரு பாறையில் இருந்தபடி கடலை பார்த்தாள். கடலின் மெல்லிய அலையில் ஒரு சிறிய ஓடம் மிதந்து வந்து கொண்டு இருந்தது, அது அலையுடன் மெள்ள மெள்ள மேலும் கீழும் ஆடி ஆடி அசைந்தது. அந்தப் படகில் அவன், அர்ஜுன், அவளை வா வா என்று அழைப்பது போல கை அசைத்துக் கொண்டு இருக்கிறான். கொஞ்சம் வயது போய், முறுக்கு மீசையுடனும் ஆனால் மிடுக்கான தோற்றத்திலும், கொஞ்சம் வெளிறிய தலை முடியுடனும் அவன், அவனே தான்!   கவிதா பாறையில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு எதோ முணுமுணுத்தாள். தூரத்தில் தெரிந்த ஓடம் அசையாமல் நின்று அவளுடைய முணுமுணுப்பை கவனமாகக் கேட்டது. ஏன் வானமும், பூமியும் கூட அந்த முணுமுணுப்பைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றது! கதிரவன் கூட அந்த முணுமுணுப்பை கேட்க கடலை அடைந்தும் முழுகி மறையாமல் தயங்கி கொஞ்சம் நின்றது.   "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?"   பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் பாடல் வரிகள் அது. கவிதாவின் உள்ளத்தில், அவளின் சோகத்தை அது காட்டியது. அப்பாடலின் சொற்களோடு அவள் கண்ணீரும் கடலில் கலந்து அர்ஜுனிடம் சென்றது, ஆனால் அவன் ஓடத்தில் இருந்து மறைந்து விட்டான். அதில் யாரோ ஒரு முதியவர் மீனுடன் திரும்பிக் கொண்டு இருந்தார், அவன் இப்படி இனி எத்தனை தடவை ஏமாற்றுவானோ? வருடங்கள் கரையில் மோதிய அலைகளைப் போல உருண்டோடின, ஆனால் கவிதா தன் காதலில், நம்பிக்கையில் உறுதியாக இருந்தாள். அவளுடைய பெற்றோர் மற்றும் மூத்தவர்கள் முன்வைத்த வரன்களையும் அவள் மறுத்துவிட்டாள், அவளுடைய இதயம் தன் ஆன்மாவில் அழியாத முத்திரையை பதித்த அர்ஜுனனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டது.   ஒவ்வொரு மாலையும், அவள் கடற்கரையோரம் நடந்து செல்வாள், அவள் அந்த கடைசி நாளில் அவனுடன் அனுபவித்த அந்த ஒதுக்குப்புறத்தில், அந்த பாறையின் மேல் குந்தி இருப்பாள். அவளுடைய பார்வை வெறிச்சோடி இருக்கும். படபடத்து வேலைக்கு ஓடும் மனிதர்களில் சிலர் அவளை எட்டிப் பார்ப்பார்கள். வண்டி இல்லாத பாதையும் மக்கள் இல்லாத வீதியும் தான் இப்ப அவளை வரவேற்கிறது. ஒவ்வொரு சூரிய அஸ்தமனத்திலும் அவள் இன்னும் மெல்லிய குரலில் "நான் காத்திருப்பேன் உனக்காக" என்று சொல்ல மட்டும் மறக்க மாட்டாள்!   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]          
    • மேற்குலகில் சுகபோகமாக வாழ்ந்துகொண்டு அந்த நாடுகளுக்கெதிராக வரிந்துகட்டிகொண்டுவரும் அடிப்புல்லன்றிமேய்பவர்கண் இந்த இரானின்  பயங்கரவாதம் இன்னும் கண்ணிற்படாமலிருப்பது பேராச்சரியமொன்றுமல்லவே!
    • இலங்கை ஜனாதிபதி தேர்தல் செப்17-ஆக் 16 இடையே நடக்கும் என இலங்கை தேர்தல்கள் ஆணையம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக இலங்கை ஆங்கில, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.thehindu.com/news/international/sri-lanka-to-hold-presidential-election-between-september-17-and-october-16-election-commission/article68156936.ece/amp/ டிஸ்கி இந்த முக்கியமான செய்தி இரெண்டு நாட்களாகியும், யாழில் பகிரபடவில்லை என நினைக்கிறேன். பகிரபட்டிருபின் - திரியை நூத்து விடவும்🙏. தமது பிடியை தளரவிட விரும்பாத இராஜபக்சேக்கள் பாராளுமன்ற தேர்தலை முதலாவதாக நடத்துமாறு ஜனாதிபதிக்கு அளுத்தம் கொடுத்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
    • பதில் சொன்னே. சரி கொஞ்சம் நீட்டி சொல்கிறேன். சிங்கப்பூர், தாய்லாந்து இரெண்டுமே மட்டுபட்ட சுதந்திரம் உள்ள நாடுகள். ஆனால் இரெண்டுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. சிங்கபூரில் அரச கொள்கை நடைமுறையை எதிர்த்து செயல்பட முடியாது. ஆனால் தாய்லாந்தில் இந்த இடம் அரச கொள்கைகளுக்கு அன்றி, அரச குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிங்கபூரில் முதலாளிதுவ அமைப்பின் நலனை பேணவும், மக்களின் பொது நன்மைக்காகவும், மக்களின் சுதந்திரத்தை அரசு பரவலாக மட்டுப்படுத்துகிறது. தாய்லாந்தில் அரச குடும்பம், இன்னும் பல தனியார் கூட்டுகளின் நலனை பேண குறிப்பிட்ட விடயங்களின் மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்தினாலும், பாலியல் சுந்தந்திரம் உட்பட பலதில் மிகவும் தாராளவயமாக இருக்கிறனர். இப்படி இருப்பது கூட மக்களை கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையே. இலங்கையிலும் சட்டபூர்வ கஞ்சா பாவனை, ஏற்றுமதி, சட்ட பூர்வ பாலியல் தொழில், இரவு நேர பொருளாதாரம், கசினோ தீவுகள் என தாய்லாந்து பாணி பொருளாதாரத்தை நிறுவி, தொடர்ந்தும் தற்போதுள்ள ஆளும் வர்க்கத்தின் இருப்பை தக்க வைக்கும் முறை ஒன்றை டயனா முன்னெடுத்தார். மக்கள் நலனை பொறுத்தவரை தாய்லாந்து சிஸ்டத்தைவிட சிங்கபூர் சிஸ்டம் சிறந்தது. ஆகவே டயனா முன்வைத்த, இலகுவில் நடைமுறை படுத்த கூடிய தாய்லாந்து பாணியா? அல்லது….. இதுவரை இலங்கை அரசியல்வாதிகள் வாயால் வடைசுட்ட சிங்கப்பூர் பாணியா? இதைத்தான் நான் சுட்டினேன்.
    • அனைவரும் ஒரு மாதிரி இல்லை. உண்மையில் தம்மை தமிழர் என உணர்வோர் சொற்பமாக இருக்கத்தான் செய்கிறனர். ஆனால் இவர் அணுகிய சூழமைவை வைத்து பார்த்தால் - காரியம் நடக்க கதை விட்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.