Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட
 
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி
"Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts
மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை,
 
உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக
 
- சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து -
 
தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். 
 
சமகாலத்தில், இந்தக் கட்டுரை என் முகநூலிலும், வலைத்தளத்திலும் பதிவிடப் படும்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
13557881_10206809775385732_2158402577440108355_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=BQ8j-6e7FpEQ7kNvgFgAJUv&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCyJoNfHrcv4MfvrrTAFq5tjA4OTpLW6eDnnPvCohmDMw&oe=6657A884 May be an image of text that says 'Inanna / Kali' 13521893_10206809776865769_3800176147586677136_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=oZ_ggBvrqgoQ7kNvgEZdNIn&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfChFzUwcri8lJKvjNKVCcaFQ_qECcLZO4SUUAuQ5QTC3w&oe=66579C0A
  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 01 
 

அண்மை காலத்தில் வெளி வந்த ஆதாரம், தடயம் வரை, தமிழர்களின் வரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துக்கு முன்1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. அனால், இப்போது தமிழர் / திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தை சேர்ந்த தொல்லியல் களங்களிலும் [பெருங்கல்லாலான இடங்களும் சின்னங்களும்], இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி அல்லது கதிரவெளி போன்றவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான  இலங்கை, சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள், இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.
 

ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமான வையாக கருதப்படுகின்றன. 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும், சுட்ட களி மண்ணினாலான தாழிகளும், தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொன்பரிப்பு அகழ்வாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றையும், பல ஈமத்தாழி [Burial urn for the dead in ancient times] களையும் இங்கு கண்டெடுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காக தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர். அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும், விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. கதிரவெளியில், அகழாய்வின் போது கி மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல தடையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ் வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது. இங்கு மண் பாண்டங்கள் பல கிடைத் துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளில் கதிரமலை [கந்தரோடை] முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது. முன்னைய காலத்தில் உக்கிரசிங்கன் என்ற தமிழ் மன்னன் கந்தரோடையை தலை நகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது. இவனுடைய காலப்பகுதியாக கி.பி. 785ம் ஆண்டுப்பகுதி குறிப்பிடப்படுகின்றது. இவன் கலிங்க தேசத்திலிருந்து குடியேறியவன் என்றும், விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவனென்றும் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் வைபவமாலையில் கூறுகிறார். மேலும் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவன் சோழ இளவரசியாகிய மாருதப்புரவல்லி மீது காதல் கொண்டு, மணம்புரிந்தான். இவன் தீவிர சைவனாக விளங்கியுள்ளான் என்பதை இவன் செய்த சைவத் திருப்பணிகள் நிரூபிக்கின்றன. இவ்வூரில் செய்யப் பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் அகழ் வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கி மு. 2000 ஆண்டை சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
 

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 மனித தலையோடு ,எலும்புக்கூடு, உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள் கொண்ட  சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் தோண்டியெடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அரிசி உமியும் தானியமும் கருகிய [தீய்ந்த] அரிசியும், வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி போன்ற கருவியும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என உறுதி கூறுகிறது. கல்வெட்டெழுத்துக்களையும் கலைத் தொழில் வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள், தமிழர் நாகரிகம் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளார்கள். 
 

[மேலே உள்ள படத்தில்,ஆதிச்சநல்லூரில் வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு காலத்திற்கு உரிய  அடக்கக் களத்தில், தாழி ஒன்று வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துடனும், மனித எலும்புக்கூடும்  மற்றும் சிற்றுருவ பாத்திரங்களும் காணப்படுகின்றன. இவை கி மு.20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள் ஆகும். மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள எழுத்துக்கள் வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அனிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன். ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார்]
 
 
தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வரும் அகழாய்வுகளின் மூலம் தமிழர் நாகரிகம் மிகவும் பழமையானது என்பது அடுத்தடுத்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மெய்ப்பிக்கப்பட்டுள்ள காலத்தை விடவும் தமிழர்கள் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பது இன்று தெரிய வருகிறது. குறிப்பாக கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் பல செய்திகளை வெளியே இன்று கொண்டு வருகின்றன. உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கிடைத்த நெல்லை கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது அதன் வயது 3,175 ஆண்டுகள் என்று தெரிய வந்திருப்பதாக தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 
 
கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரிகம்  இருந்ததை உறுதி செய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுவாக்கில் இருந்த நகரமயமாக்கம் (Urban Civilisation) தமிழ் நாட்டில் இல்லை என்பது தான் பொதுவான கருதுகோளாக இருந்தது வந்தது. அதேபோல, பிராமி எழுத்து மௌரியர் தோற்றுவித்தது என்றும் அங்கிருந்தே தமிழ் நாட்டிற்கு அந்த எழுத்துகள் வந்தன என்றும் கருதப்பட்டது. ஆனால், கீழடியில் நடந்த ஆய்வுகளின் முடிவுகள், நகரமயமாக்கம் குறித்த கருத்துகளை மாற்றின. அந்த காலகட்டத்திலேயே பிராமி எனப்படும் தமிழி பரவலாக எழுதப்பட்டதை, அங்கு கிடைத்த பானை ஓடுகள் உறுதிப்படுத்தின. உதாரணமாக, சிவகளை அகழாய்வில் விளிம்புடன் கூடிய மண் கிண்ணம் ஒன்றில் கிடைத்த தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆக்ஸிலரேட்டர் மாஸ் ஸ்பெக்ரோமெட்ரி [Accelerator mass spectrometry] முறையில் பகுப்பாய்வு செய்தபோது, அந்த பானை ஓடுகள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்திருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 
 
கீழடியில் தற்போது மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான செங்கல் கட்டுமானங்களும் தமிழி பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், கீறல்கள் எழுதப்பட்ட பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை தவிர, மணிகள், கற்கள், தாயக்கட்டைகள், கங்கைச் சமவெளிக்கே உரியவை என்று கருதப்பட்ட கறுப்பு நிறப் பானைகள், சீப்புகள் போன்றவையையும் கிடைத்துள்ளன.
 
இங்கு கிடைத்துள்ள கட்டுமானத்தையும் தொல்பொருட்களையும் வைத்துப் பார்க்கும் போது, கீழடி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கக்கூடும் என்றும் இந்தியாவுடனும் இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்றும் தெரிய வருவதாக மாநில தொல்லியல் துறையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
 
மேலும் இந்த அகழாய்வில் சந்திரன், சூரியன் மற்றும் வடிவியல் குறியீடுகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கிடைத்தது. இந்தக் காசை, குப்தர் காலத்தைச் சேர்ந்த ஹர்தேக்கர் வரிசை காசுகளுடன் ஆய்வு செய்த நாணயவியல் ஆய்வாளர் சுஷ்மிதா, இதனை மௌரியர் காலத்துக்கு முற்பட்ட காசு எனக் குறிப்பிட்டிருப்பதாக மாநிலத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. ஆகவே, கீழடி பகுதிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு இருந்திருப்பதை இந்தக் காசு உறுதி செய்திருப்பதாகக் கருதலாம்.
 
அதேபோல, கீழடியிலும் கொற்கையிலும் கிடைத்த கறுப்புநிற பானை ஓடுகளை கவனமாக ஆராய்ந்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரியும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரவீந்திர என் திவாரியும், கங்கைச் சமவெளிக்கும் இந்தப் பகுதிகளுக்கும் இடையில் வணிகத் தொடர்புகள் இருந்ததை உறுதி செய்வதாக மாநில தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
 
கீழடியில் கிடைத்த கரிமப் பொருட்களின் மீது ஏற்கனவே செய்யப்பட்ட கரிமப் பகுப்பாய்வின்படி, அதன் காலம் கி.மு. 585 என தெரிய வந்துள்ளதாகவும் தற்போதைய அகழாய்வில் கிடைத்த பொருட்களின் மீது செய்யப்பட்ட மேலும் இரண்டு கரிம ஆய்வுகளும் இந்தக் காலக் கணிப்பை உறுதிப்படுத்துவதாகவும் தொல்லியல் துறை கூறுகிறது.
 
மேல் கூறியவற்றால் நாம் அறிவது தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்  ஏறத்தாழ 3000 - 4000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது. ஆனால் இது தவறு. தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை. ஆகவே இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தார்கள் என்பதை நாம் காண வேண்டும்.
 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]



பகுதி 02 தொடரும்  


பி கு : 
 
படம் 01 : [ஆதிச்சநல்லூர் அகழாய்வில்  இரும்பு கலன்கள்]
 
படம் 02 : விளிம்புடன் கூடிய மண் கிண்ணம், சிவகளை அகழாய்வு
 
படம் 03 : அடுக்குகளுடன் கூடிய துளையிடப்பட்ட குழாய்கள், கொற்கை
 
படம் 04 :  Annaikottai (variant spelling Annaicoddai) seal inscription
 
படம் 05 : Inscribed potsherd from archaeological excavation at Tissamaharama, Hambantota District, Sri Lanka: From left to right the first letter is Li, second one is ra and the third one is ti. From right to left they are read as tiraLi. The fourth and fifth ones are symbols or graffiti marks. The sixth letter is mu and the seventh one is Ri. The last two are read from left to right as muRi. A little away is found a vertical line that perhaps marks the end of the legend. Thus evidences the presence of ordinary Tamil speaking people in the population of that region as early as at 2200 years before present, says archaeologist and epigraphist, Ponnampalam Ragupathy. The identification of the script of the legend as Tamil Brāhmi and the decipherment getting the reading Thira’li Mu’ri in Tamil by veteran epigraphist Iravatham Mahadevan in an article in The Hindu.
 
May be an image of 2 people May be an image of brass No photo description available. May be an image of text that says 'The Jaffna unilingual biscript Metal Seal: tivuko IN TAMIL DYY a 犬音學 + 人 አ tivu-island island tivu ti- ti i-VU-KÔ ti-VU-KOò- VU -KÔ ko king' May be an image of text May be an image of text that says 'Keeladi (A Sangam Age Habitation Site in in the Vaigai River Valley) DISTRICT SIVAGANGA, TAMIL NADU (2014 (2014-2015&2015-2016) 2015& 2015 2016) प्र्पवोहिय्यागुना κ. K.AmarnathRamakrishna Amarnath Ramakrishna SuperintendingArchacologist Superintending Archacologist Archacological Survey ArehacologicalSurveyofIndia of India Temple TempleSurveyProject(SR) Survey Project (SR) Chennai (January 2023' May be an image of text that says 'TISSAMAHARAMA INDUS A 206t SRI LANKA 56 TAMIL NADU' May be a graphic of ‎text that says '‎Indus scripts אשוך หำปบร 6 Chembiyankandiyur Chembi Kilvalai Anaikotai‎'‎ 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 02 

இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப் பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட - கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை அல்லது வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], திராவிடர்கள் இந்தியா முழுவதும் அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது. சில பன்மொழி அறிஞர்கள், இந்திய - ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள்.

திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்து விட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்கு திராவிடச் சொற்களுடன் [அல்லது பழைய ஆரம்பகால தமிழ் சொற்களுடன்] பேசப்படக் கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. உலகெங்கும் 85 திராவிட மொழிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள்.

நிலம், தீ, நீர், காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் 3000-2500 ஆண்டுகளுக்கு முன்


 
"நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்"

 

இப்படி படிப்படியாக உருப் பெற்ற உலகில், எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் 'ஹொமினினே' [Homininae] என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக் கொண்டே இருந்தது. மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, அது, இன்று இருக்கும் மனித இனமான 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ். [homo sapiens sapiens ,Actually, the root "homo" means "man" and the root "sapien" means "being." So, human being.Modern humans are the subspecies Homo sapiens sapiens] என்கிற இனமாக உருவானது என்கிறார்கள் அறிஞர்கள். அத்துடன் இந்த மனித இனம் தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் முதல் முதல் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். இந்த மனித இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்த வெளிகளை நோக்கி பயணித்தன. இந்த 'ஹோமோ சேப்பியன்' இனத்தவர் தான் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்படுகிறது. "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" [ஓரிடத் தோற்றக் கருதுகோள்] என்ற இந்த மாதிரி மிகவும் ஏற்றுக்கொள்ளப் பட்ட  விளக்கம் ஆகும். வெவ்வேறு  நிலவியற் பகுதிகளில் வாழும் மக்களில் இப்ப காணப்படும் வெவ்வேறு உருவ அமைப்பு, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கடைசி 60 ஆயிரம் வருடங்களாக படிப்படியாகத் தோற்றுவிக்கப் பட்டதாக நம்பப்படுகிறது [பரிணாமம் அடைந்தது என].

"பல்பிராந்திய"மாதிரி [பல்லிடத் தோற்றக் கருதுகோள்] இரண்டாவது ஆகும். இது மனிதர்களின் மூதையார்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி, பரவி முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா, ஆசிய, ஐரோப்பியா பிராந்திய குழுக்களாக தோற்றம் அடைந்தார்கள் என்கிறது. எனவே ஆசிய, ஐரோப்பியா நவீன மனிதர்கள் அதன் பின் ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் பரிணாமம் அடைந்ததாக கருதுகிறார்கள். [நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என] 

இதே மாதிரி, போட்டியிட்டுக் கொண்டு பல கருது கோள்கள், எங்கு, எப்போது தமிழன் அல்லது திராவிடன் தோன்றினான், பின் எவ்வாறு பரவினான் என பலதரப்பட்ட கல்விமான்களால் விளக்கம் கொடுக்கப் படுகின்றன. ஒரே மாதிரியான மொழியும் பண்பாடும் இரு வேறுபட்ட, ஒன்றோடு ஒன்று எந்த தொடர்பும் அற்ற இரு இடங்களில் வளர்ச்சி அடைய முடியாது என்பதால், நாம் ஒரு மாதிரியையே, - "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" என்ற உதாரணம் மாதிரி ஒன்றையே - தெரிந்து எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே தமிழ் மொழியும் அதனுடன் இணைந்த பண்பாடும் தமிழ் நாட்டிலேயே அல்லது தமிழ் நாடு, இலங்கை ஆகியவற்றை ஒருமிக்க கொண்ட ஒரு நிலப்பரபிலோ அல்லது இவையை தவிர்ந்த வேறு ஒரு நிலப்பரப்பில் தோன்றி, வளர்ந்து  4000-5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு. இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருத இடம் உண்டு. ஆகவே பல அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் படி, பல சாத்தியம் இன்று உண்டு. அவை:

[1] குமரிக் கண்டம் 


[2] சுமேரியா


[3] சிந்து வெளி நாகரிகம்  


[4] ஆஃப்ரிக்கா 

ஆகும். திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் போதாமையால், இது தொடர்பான சர்ச்சைகள் மேலே கூறிய யோசனைகள் படி முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இவர்களுட் சிலர் திராவிடர் மத்திய தரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்று வாதாடுகின்றனர். எப்படியாயினும், ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத் தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மனித பரிணாமம் என்பது குரங்கு போன்ற மூதாதையர்களிடமிருந்து மக்கள் தோன்றிய மாற்றத்தின் நீண்ட செயல்முறையாகும். இது  ஏறக்குறைய ஆறு மில்லியன் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன.

ஆரம்பகால வரையறுத்த மனிதப் பண்புகளில் ஒன்றான இரு கால்களில் நடக்கும் திறன் -- 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மற்ற முக்கியமான மனித குணாதிசயங்களான  -- ஒரு பெரிய மற்றும் சிக்கலான மூளை, கருவிகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் திறன் மற்றும் மொழிக்கான திறன் போன்றவை [large and complex brain, the ability to make and use tools, and the capacity for language ] -- சமீபத்தில் உருவாக்கப்பட்டது. பல மேம்பட்ட பண்புகள் -- சிக்கலான குறியீட்டு வெளிப்பாடு, கலை மற்றும் விரிவான கலாச்சார பன்முகத்தன்மை [complex symbolic expression, art, and elaborate cultural diversity] -- முக்கியமாக கடந்த 100,000 ஆண்டுகளில் வெளிப்பட்டன.

மனிதர்கள் முதலில் ஆஃப்ரிக்காவில் உருவாக்கி, மனித பரிணாமத்தின் பெரும்பகுதி அங்கேயே நிகழ்ந்தது உள்ளது. 6 முதல் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் புதைபடிவங்கள் முற்றிலும் இன்று ஆஃப்ரிக்காவில் இருந்து தான் கிடைக்கப் பெற்றுள்ளன.

பெரும்பாலான விஞ்ஞானிகள் தற்போது 15 முதல் 20 வெவ்வேறு வகையான ஆரம்பகால மனிதர்களை அடையாளம் காண்கின்றனர். எவ்வாறாயினும், இந்த இனங்கள் எவ்வாறு தொடர்புடையவை அல்லது எவை வெறுமனே இறந்துவிட்டன என்பது பற்றி விஞ்ஞானிகள் அனைவருக்கும் இடையில் ஒரு உடன்படவில்லை. பல ஆரம்பகால மனித இனங்கள் -- நிச்சயமாக அவற்றில் பெரும்பாலானவை - வாழும் சந்ததியினரை விட்டுவிடவில்லை. ஆரம்பகால மனிதர்களின் குறிப்பிட்ட இனங்களை எவ்வாறு அடையாளம் கண்டு வகைப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் பரிணாமம் மற்றும் அழிவை எந்த காரணிகள் பாதித்தன என்பது பற்றியும் விஞ்ஞானிகள் இன்னும் விவாதிக்கின்றனர்.

ஆரம்பகால மனிதர்கள் முதன்முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு 2 மில்லியன் முதல் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தனர். 1.5 மில்லியன் மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர். என்றாலும் நவீன மனிதர்களின் இனங்கள் மிகவும் பிற்காலத்தில் தான் உலகின் பல பகுதிகளிலும் குடியேறின. உதாரணமாக, மக்கள் முதலில் ஆஸ்திரேலியாவிற்கு கடந்த 60,000 ஆண்டுகளுக்குள் வந்திருக்கலாம் மற்றும் கடந்த 30,000 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாம். விவசாயத்தின் தொடக்கமும் முதல் நாகரிகங்களின் எழுச்சியும் கடந்த 12,000 ஆண்டுகளில் தான் நிகழ்ந்தன. 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி 03 தொடரும் 

441541551_10225124557283833_8629086934460597397_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=7UZyzu_K9EsQ7kNvgHflFrG&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCrxzqbuDMCNlpJE4DuP5ydnAbl116mXLPZI4ukFcdRLA&oe=663EC116 441503134_10225124557163830_3518573798368361040_n.jpg?stp=dst-jpg_p235x350&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Z9Oj_8gsyo8Q7kNvgHhvQ4n&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfBfQhx4XkGHj65xxERYCyt0kiQ7DAHOEFwgIXM3EplQAA&oe=663ECEAB 441456437_10225124557043827_7152550654564795127_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=W5sKok6WsskQ7kNvgF76lea&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCHzw6mmuybFVDAbB_EuaY8O79ysUQTlDRZECPfiJEPIw&oe=663EDBF8 441466751_10225124557683843_5099489647215833185_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3sEDS_l92cQQ7kNvgGyAMQT&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfDvd5HpNu9p8fpLsGLyX4LQecnzX68npvMtsXpnlO9D0A&oe=663EDF4A May be an image of map and text that says 'Ancient MESOPOTAMIA ASSYRIA ASSUR NINEVEH BUPHRATES RIVER TIGRIS RIVER BABYLON. URU SUMER -UR ERIDU phillijpmartin.com MARTIN' May be an image of map and text that says 'ஹரப்பா ப்பா ஹர மெஹெர் கர் மொஹெஞ்சதாரோ தாரோ லோத்தல் லோ த்தல்' May be an image of map and text 

 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 03 

 

"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு. கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது. ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன். என்றாலும் இது பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம், ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள் தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள உயிரணுக்கள் தொடர்பான மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான ஆய்வு மையத்தினர் [‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ / 'the Centre for Cellular and Molecular Biology / Hyderabad]. இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது. இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டு பிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000 இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர், பிபிசி [BBC] தொலைக்காட்சியில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

இந்தியாவின் பழமையான மக்கள் நெகிரிட்டோ (Negrito) க்களாகக் கருதப்படுகிறார்கள். இந்தியாவிற்கு 60,000 ஆண்டுகளுக்கு முன் வந்த இனக் குழுக்களில் முதன்மையானவர்கள் அவர்கள் தான். அவர்கள் கேரளா மற்றும் அந்தமான் தீவுகளின் மலைப்பகுதிகளில் குடியேறினர். ஆனைமலை காடுகளின் பூர்வகுடிகளான காடர், தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்திலும், கேரளத்திலும் வசிக்கும் இருளர், மற்றும் புலியன் போன்ற சில பழங்குடியினர் [Kadar, Irula and Puliyan tribes] நெகிரிட்டோக்களுடன் அதிக அளவில் ஒத்திருக்கிறார்கள். அவை  ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அவற்றின் அண்டை தீவுகளுடன் தொடர்புடையவை. நெகிரிட்டோக்கள் கருப்பு (கருமையான) தோல், கம்பளி முடி, அகன்ற மற்றும் தட்டையான மூக்கு மற்றும் சற்று நீண்டு சென்ற தாடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. பலாங்கொடை மனிதன் தெற்காசியாவில் இதுவரை கண்டு பிடிக்கப் பட்ட மறுக்க முடியாத பழமையான ஹோமோ சேபியன்ஸ் புதை படிவமாகும். அவை குறைந்தது 28,000 ஆண்டுகள் பழமையானவை மற்றும் அவை கண்டு பிடிக்கப்பட்ட இலங்கையின் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அந்த காலத்தில் இலங்கை தென் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அதாவது மகாவம்ச விஜயன் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது 25,500 ஆண்டுகளுக்கு முன்பு ஆகும்.  

 

அதே போல, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை [Harvard University] சேர்ந்த மரபணுவியலாளர் டேவிட் ரெய்ச்சின் [David Reich] ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள்.

 

அந்த ஆய்வானது கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளில் இரண்டு மிகப்பெரிய குடிப்பெயர்வு நடந்துள்ளது எனவும், முதல் குடிப்பெயர்வானது தென்மேற்கு இரான் பகுதியில் உள்ள ஜக்ரோஸிலிருந்து [when agriculturists from the Zagros region of Iran] நடந்திருக்கிறது. அதாவது, அங்கிருந்து இந்தியாவுக்கு விவசாயிகளாகவும், ஆடு மேய்ப்பவர்களாகவும் வந்திருக்கிறார்கள் எனவும், இந்த குடிபெயர்வானது 7000 மற்றும் 3000 ஆண்டுகளுக்கு (இயேசு பிறப்பதற்கு முன்பு) இடையேயான காலக்கட்டத்தில் நடந்திருக்கிறது என்றும். இந்த விவசாய மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள், இதற்கு முன்பு இந்திய பகுதிக்கு வந்த அதாவது 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி வந்த மக்களுடன் கலந்திருக்கிறார்கள். இவர்களே சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள் என்றும் அடையாளம் காட்டி உள்ளார்கள். 

 

இரண்டாவது குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 மற்றும் 1000 க்கு இடையில், மத்திய ஆசிய ஆயர்களால் [மேய்ச்சல் தொழில் செய்பவர் / Steppe pastoralists] நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்கள் வந்திருக்கிறார்கள். இது இன்றைய கஜகஸ்தான் [Kazakhstan] பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேத பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே என்கிறார்கள். 

 

எனவே ஆரியர்கள் இந்திய மண்ணில் கிறித்து பிறக்க 1500 ஆண்டுகளுக்கு முன் - இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்  - கால் வைத்தார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். ஆனால் சிந்து வெளியில் தோண்டிக் கண்டு பிடிக்கப்பட்ட நாகரிகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, அஃது ஆரியருக்கு முற்பட்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படையிலே அமைந்தது என்பது பொருந்தும். இதனாலும், மற்றும் சத்தி வழிபாடு, சிவன், லிங்க வழிபாடும் இன்னும் பல காரணங்களாலும்  உலகின் பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் சிந்து நாகரிகம் தமிழியம் (திராவிடம்) சார்ந்தென்று உறுதிப்பட மொழிந்துள்ளனர். மேலும் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணறுகள் சுமேரிய நாகரிகத்துடன் ஒப்பிட வாய்ப்பளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

 

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான இரண்டு  பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென் இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள். 

 

ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது. மொழியியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் திராவிட மொழி பண்டைய சமஸ்கிருதத்தை பாதித்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றனர், இது இந்தோ - ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் தோன்றும் ஏராளமான திராவிட கடன் வார்த்தைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. திராவிட மொழி [தொல் தமிழ்] குறைந்தது 4,500 ஆண்டுகள் பழமையானது, இது கிமு 2,500 க்கு முந்தையது, மேலும் இந்தோ - ஆரிய மொழிகளைப் பேசும் மக்கள் தோன்றுவதற்கு முன்பு இந்தியா முழுவதும் திராவிட மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர் என்றும் மொழியியலாளர்கள் நம்புகிறார்கள்.

 

"குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை
மயில் நடனம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை
உயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை"

 

என்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும். அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம், ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி:04 தொடரும்  

436299017_10225166415250256_8791973744341579216_n.jpg?stp=dst-jpg_p240x240&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=zoANru-oBrQQ7kNvgFcw9Ug&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDLqmqW_qx8u0HTDI6HQXhv-AU36NMtPISUAQKFW9O_CQ&oe=66483264 436266595_10225166414890247_7411040020724235580_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Ui98vC32gyYQ7kNvgEuSOaQ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD7HWm8HRNVtExLHR6caIBgEVwhBGMaBjGBA7keOTGkaQ&oe=6648244F 435961480_10225166415090252_2164208224420859580_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ANaX0x-YsjIQ7kNvgEa2A2N&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYARBggZ3GYV1TUvxWektsXF4BrtaU-2IgvqdeHNsrWfvg&oe=66483301 436096661_10225166415530263_1768553081833154108_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=U8Nc6l0Hj_cQ7kNvgHLwoZx&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYC6sopuBCxPxaMFFXlVDKfZRi1xh0PxfdWEnR6URXuk9Q&oe=66483407 436237066_10225166415810270_242869417184507741_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=ANRWl8HimmEQ7kNvgE_VsiW&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDAaU2rAffTkGtGUIVP13HR1DvCVEYEXrUenO-ak8Aw2g&oe=66483084

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 04 
 
 
 
60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் மரபணு [ஜெனடிகல் / genetical] ரேகைகளை விட்டு விட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இதற்கு மரபணு திட்டம் [ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் / Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனித உடல் மரபணுக்களின் [ஜீன்களின் / Gene] கட்டமைப்பாலானது. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் மரபணுக்களில்  இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும் மரபணுக்களை சார்ந்ததே. "நான் ராஜ பரம்பரையிலிருந்து வந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!, அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்'' இவையெல்லாம் நாடக அரங்கில் அல்லது திரை அரங்கில் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. நிறைய நிறைய தொடர்பு உண்டு. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது இந்த ஜீன் எனப்படும் மரபணுதான். அதாவது  மரபணு என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன. உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (குருதி வகை) இருக்கலாம். 
 
 
 
ஒருமுறை குலோத்துங்க மன்னனின் குலகுருவான ஒட்டக்கூத்தர், குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண் கேட்க சென்றார். அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர் பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் இப்படி பாடினார்.
 
 
 
"ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?"
 
 
 
அதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம் ஈடாகாது [ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?] என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது [வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?] என்றும் கூறியதின் அர்த்தம் இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும். 
 
 
 
உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்த, மரபணு திட்டம் ஆகும். மனிதர்களின் Y - நிறப்புரிகளை [குரோமோசோம் / Chromosome] அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம் ஆகும். ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா மற்றும் இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130  ஆகும். இது நடந்தது சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். அதன் பின், 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் [a narrow-pass between hills] வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும். 
 
 
நாம் இலங்கையை கருத்தில் எடுத்துக் கொண்டால், பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார். அது மட்டும் அல்ல, இவ்வற்றை மெய்ப்பிப்பது போல, இடைக் கற்காலஞ் சார்ந்த இரு பக்க மக்களும் ஒரேவித ஆயுதங்கள், கருவிகள் பாவித்து உள்ளார்கள் [There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka.] என்றும் கூறுகிறார். மேலும் சில காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த  R. L. கிர்க் [R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia] என்பவர் சிங்கள மக்கள் தென் இந்தியாவை சேர்ந்த தமிழ் மற்றும் கேரள மக்களுடனும் மற்றும் உயர் குல வங்கநாட்டவர்களுடனும் [பெங்காலி] நெருக்கமாக உள்ளன என்கிறார். இங்கு கேரள மக்கள் அன்று உண்மையில் சேர நாட்டு தமிழர் என்பது குறிப்பிடத் தக்கது. இதை விக்கிப்பீடியாவில் சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை மேலும் உறுதி படுத்துகிறது [Refer Genetic studies on Sinhalese / Wikipedia]
 
 
ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப்பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை கீழே தருகிறேன், இது இலங்கையில் தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்றே வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறது. மேலும் அப்பொழுது இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சிங்களம் என்றொரு ஒரு மொழி, மலையாளம் மாதிரி இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டு தான் தோற்றம் பெற்றது.  
 
 
"அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ,
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி 
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி,
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் 
வட புல வாடைக்குப் பிரிவோர்
மடவர் வாழி, இவ் உலகத்தானே!"
 
 
[நற்றிணை 366]  
 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
 
பகுதி :05 தொடரும் 
442412884_10225210106342506_3179864711905198701_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HPUdEMQZ0TQQ7kNvgE_ecSM&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDY1E0Oq3PvM-ohrMSvXXdzTEKRwa1POAj1oMGizuuPig&oe=6651D6D7 442414297_10225210106222503_1226869570805875127_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=nYZMjANOAxIQ7kNvgEmOmBL&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBYKCWWdmtH8_dnifJm4P43lVGAUtLc_OIfHitrdWqYUw&oe=6651D466 442477764_10225210106902520_5513865222974334084_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=l1-9c8Ffor0Q7kNvgH_1d7z&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAwLfpKO-Bh9ePZ9kQ8P4VtwLxpCyqoC2D_k3n4Naqhfg&oe=6651CD4B
 
442393499_10225210107022523_7997639227004263863_n.jpg?stp=dst-jpg_p370x247&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=3dNjmuK2mgQQ7kNvgF1L3Mj&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDawqjGeXdJ4B2XuBhz4cixZFFBTyO6WCKoJmfnQBl1MA&oe=6651B57C May be an image of ‎text that says '‎ඉබ්බන්කටුව මහාගිලා සුසානය வாய்ந்த இப்பன்கடுவ 9 J JL 」 இடுகாடு Ibbankatuwa Megalithic Ceretery متد カ: CENTRAL CULTURLFUND LFUND CULTUR‎'‎
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 05

இன்றைய நவீன மனிதன் என அழைக்கப்படும் ஹோமோசேப்பியன்ஸ் [Homo sapiens] ஆஃப்ரிக்காவில் [ஆப்பிரிக்காவில்] இருந்து ஏறத்தாழ 60,000 - 70,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களுடன் புலம்பெயரத் தொடங்கினார்கள் எனக் கருதப்படுகிறது. அவர்கள் பூமியின் எல்லா மூலைகளிலும் பரவும் வரை தமது பயணத்தை தொடர்ந்தார்கள். எவ்வளவு தூரம் அல்லது எவ்வளவு கெதியாக அவர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்பது, அங்கு நிலவிய கால நிலை, மக்களின் நெருக்கடிகள் மற்றும் படகு அல்லது மற்ற தொழில் நுட்பங்ககளின் கண்டு பிடிப்புக்கள் போன்றவற்றில் தங்கி இருந்தன.

அவர்கள் அதிகமாக கடற் கரை ஓரமாக பயணித்து இருக்கலாம்? அது குறிப்பாக செங்கடல், மத்திய தரைக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் [Red Sea, the Mediterranean Sea, and the Indian Ocean] ஆகும். இன்று அவர்கள் சென்ற பாதையை அல்லது வழித்தடத்தை மரபியல் [genetics] உதவியுடன் சரிபார்க்கவும் மற்றும் உறுதிப்படுத்தவும் முடிகிறது. அப்படி சரிபார்க்கப்பட்ட  அட்டவணை கீழே சுருக்கமாக தரப்பட் டுள்ளது. 

மனித மரபணு புலம்பெயர்வு பாதை [வழித்தடம்]:

நீடித்த வரட்சி காரணமாக ஹோமோ சேப்பியன்ஸ்  ஆஃப்ரிக்காவை விட்டு 60,000 - 70,000 வருடங்களுக்கு முன், M168, 'ஆஃப்ரிக்கா இனம் அடையாளம் காட்டியுடன்  வெளியேறியது [புலம்பெயர்ந்து] [The M168 lineage, the common male ancestor of practically all non-African people emerged in Sudan or Ethiopia in a rather imprecise time band of 79,000 to 31,000 years before present.]

அது கடற்கரையோர அடையாளம் காட்டியாக உருமாறி, M130 (M168-M130), அரேபியாவிற்குள் நுழைதலுடன், கடற்கரையோர மக்கள் [coastal people] கரையோரம் இடம் பெயர்ந்தனர். அவர்கள் விரைவாக ஆஸ்திரேலியாவை அடைந்தனர். இவை எல்லாம் 60,000 - 50,000 வருடங்களுக்கு முன் நடந்தேறி உள்ளன. [The first to branch of from the M168 lineage was defined by the M174 (around 50,000 years BP) lineage that travelled by the coastal route of Middle East to the Andamans, South East Asia and then turning upwards to Japan and Mongolia. About the same another branch emerged from M168, that is M130 that appears to have accompanied M174 in the same great coastal migration from Africa. M130 is found in India and Lanka in large numbers and represents one of the oldest substratum populations of India. It also reached Australia and founded the human population in that continent.]

இதற்கு ஆஸ்திரேலியாவின்  பூர்வீகக் குடிகள் [ஆதிவாசிகள்] இன்றும் சான்று கூறுகின்றனர். அந்தமான் பழங்குடிகள் இந்த இடபெயர்ச்சியின் எச்சமிச்சம்களே ஆகும். இன்று இந்த அடையாளம் காட்டி ஆக இந்தியாவின் குடித்தொகையில் 5% மட்டுமே உள்ளன. அவையும் தென் இந்தியாவின் கரையோரங்களில் மட்டுமே காணப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அதைத் தொடர்ந்து, 45,000 வருடங்களுக்கு முன், M89 [[M168 > M89]   மெசொப்பொத்தேமியன் அடையாளம் காட்டி மக்கள் மெசொப்பொத்தேமியாவில், இரு நதிகள் கொண்ட பெருநிலத்தில், போதுமான தண்ணீர் வசதியுடனும் உண்பதற்கு போதுமான காட்டு கால் நடைகளுடனும் [wild cattle] வேட்டையாடி சேகரித்து [hunter gatherer] வாழும் ஒரு நிலையில் அங்கு மகிழ்ந்து இருந்தார்கள். [M168 also gave rise to yet another lineage in north-east Africa or the Middle East- M89 around 45,000 years BP]

அதை தொடர்ந்து, 40,000 வருடங்களுக்கு முன் M9 [M168 > M89 > M9] துரேனிய இனக் குழு மக்கள் [Turan Basin Clan people], மெசொப்பொத்தேமியாவில் இருந்து வெளியேறி துரேனிய ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தக் கால கட்டத்தில் குடியேறினார்கள். [The major successor of the M89 lineage was the M9 lineage, which started migrating towards the steppes of central Asia and underwent a remarkable explosion there to spawn lineages in all direction. This M9 lineage may be termed the principal Eurasian ancestor.]

இதன் பின், M20 (M168 > M89 > M9 > M20) தொடக்க நாட்டுப்புற வாழ்க்கை வாழும் [Early pastoral Dravidian clan / கால்நடை வளர்ப்பில் வாழும்]  திராவிட இனக்குழு, 30,000 வருடங்களுக்கு முன், இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். தொடக்க திராவிடர்கள் வேடுவர்களாகவும் கால்நடை வளர்ப்பவர்களாகவும் இருந்தனர். தென் இந்தியரில் 50% வீதத்தினர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள, திராவிட மொழி பேசுபவர்கள் [தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், .... ]  இப்படி மாறுதலடைந்து [பிறழ்வு / Mutation] புது உயிரினமாக தோன்றியவர்களே. இந்த மாற்றம் [மாறுபாடு] M9 மக்கள் தொகையில் இருந்து தோன்றியது ஆகும். [One major descendent of M9 was the M20 lineage that moved south and brought about the first major colonization of India around 30,000 years ago. It is one of the dominant Indian Y- types accounting for about 50% or more of the South Indian Y-chromosomes. This population appears to have displaced the coastal migrant males on the large scale while acquiring their females enmasse. The connections of this group with the Dravidians is worth exploration.]  

இறுதியாக, 10,000  வருடங்களுக்கு முன், தென் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் [Southern Russia and Ukraine] தோன்றிய M17 (M168-M9-M173-M17) இந்தோ - ஐரோப்பியன் இனக்குழு [Indo Europeans people] துருக்கியின் அனடோலியன் மக்களுடன் [அனத்தோலியா அல்லது ஆசியா மைனர் மக்களுடன் / Anatolians] பண்பாட்டு கலப்பின் மூலம் விவசாயத்தை அறிந்தது. இவர்கள் குதிரையை வீட்டுச் சூழலுக்கு பழக்கி எடுத்தார்கள். ஆரிய கொள்கையின் கதாநாயகர்கள் இவர்களே ஆகும். [From M9 also emerged M45 which also moved northwards into the steppes around 35,000 years.  It split into two lineages, one of which moved eastwards – M242. Other one - Eastwards moving branch descending from M45 was M173 around 30,000 years BP. It started moving towards Europe where it spawned M343 the ancestor of most modern Europeans. Another branch of M173 that moved southeastwards was the M17 after arising in the steppes about 10,000 years BP. It is spread in central Asia and Europe and is very prevalent in India. It appears to be the marker of the Aryan invaders of India. The coalesence time of the M17 lineage suggests that Aryan invasion occured somewhere between 4000-2000 BC. ]

மேல் அட்டவணையில் இருந்து, நாம் சுருக்கமாக அறிவது என்னவென்றால், ஹோமோசப்பியன்ஸ் [Homo sapiens] என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்காவில் தோன்றி கடந்த 60,000 - 70,000 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இவர்கள் M168 எனப்படும் மரபுயிரியல் குறியீட்டை தங்கள் Y குரோமோசோமில் கொண்டிருந்தனர். Y குரோமோசோம் எனப்படுவது மனித இனத்தில் ஆண்களை அடையாளங் கானச் செய்யும் மரபுக் கூறுகளைக் கொண்டதாகும். இவர்களின் இடப் பெயர்தலின் முதல் கட்டமாக கிழக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து நீக்ரோய்ட் இனக் குழு [Negroid / கருப்பினத்தவர்] ஆதி மனிதர்கள் செங்கடல், அரேபிய குடா நாடுகள், பாரசீக வளைகுடா கடற்கரைகள் வழியாக தற்கால தமிழக - இலங்கைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இந்த பரம்பலின் மூலம் M130 என்ற புதிய மரபுயிரியல் குறியீடு [genetic code] இம் மக்களிடையே உருவாக்கியது. இவர்களைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் இருந்து ஏறத்தாழ 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் M20 என்ற மரபுயிரியல் குறியீட்டை கொண்ட திராவிடர்களின் மூதாதையர்கள் என்று கூறிக்கப்படும் மனிதர்கள், தற்கால தமிழக இலங்கை பகுதிக்கு புலம் பெயர்ந்தனர். பல ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் ஏறத்தாழ 3,800 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஆசிய பகுதிகளில் மந்தை மேய்க்கும் நாடோடிகளாக இருந்த இனக் குழுக்கள் ஈரான் வழியாக தற்கால இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தனர். இவர்களிடம்  M17 எனும் மரபுயிரியல் குறியீடு காணப்படுகிறது. இவர்களே இந்தோ –ஆரிய இனக்குழு மக்கள் ஆவார்.

அதாவது இந்தியாவின் குடியேறிய முதலாவது மனிதர்கள் மரபணுக் குறியீடு M130 உடையவர்கள் என நம்பப்படுகிறது. அவர்கள் கரையோரமாக ஆஃப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்துள்ளார்கள். அவர்களின் மரபினர் [வழித்தோன்றல்] இன்னும் அந்தமான் தீவுகளிலும் தமிழ் நாட்டிலும் இருக்கிறார்கள். உதாரணமாக இம் மனிதர்களின் இன்றைய வம்சாவழியினர் தென்னிந்தியாவின் நீலகிரி மலைச்சாரலிலும், இலங்கையில் வாழும் வேடர்களும் ஆவர். அதே போல M20 உடையவர்களும் திராவிட மொழியும் இன்னும் இந்தியாவில், இலங்கையில் உள்ளது. இவர்கள் 30,000 வருடங்களுக்கு முன் வந்தவர்கள். அது போல ஐரோப்பா ஆசியாக் கண்டங்களின் பெரும்பகுதிகளில் பேசப்படும் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும்  M17  உடையவர்களும் அங்கு இருக்கிறார்கள். இவர்கள் 4000 வருடங்கள் அளவில் அல்லது அதற்கு பின் வந்தவர்கள்.

பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியான [தேசிய புவியியல் ஒளியலை வரிசை / நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சி / National Geographic channel] "மனித இனத்தின் பயணம்"  என்ற தொடரில், அதன் தயாரிப்பாளர் "ஸ்பென்சர் வேல்ஸ்" [Spencer Wells], ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே, முற்காலத்திய மனிதனின் முதலாவது இடப் பெயர்வு 60,000 வருடங்களுக்கு முன்பு கிழக்கு கரையோரமாக, குறிப்பாக தமிழ் நாடு வழியாக நடை பெற்றது என்கிறது. உள்ளூர் மக்களின் மரபணு இதற்கு சாட்சியாக உள்ளது. மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் பிச்சப்பன் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள், 50000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட "எம்130 டி.என்.ஏ" யையும் 30000 வருடங்களுக்கு முன்பு மக்களில் காணப்பட்ட "எம்20 டி.என்.ஏ" யையும் கள்ளர் சமுதாயம் உட்பட, இன்றைய தமிழ் நாட்டின் உள்ளூர் மக்களிடம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு ஆஃப்ரிக்கா  மக்களிடமும் ஆஸ்திரேலிய பழங்குடியினர் மக்களில் [Australian aborigines] பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர் பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் குமரி கண்டம் கடலில் மூழ்கிய பொழுது, மனித இனம் ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது என கூறுபவர்களும் உண்டு? ஆனால் இதற்கு சரியான ஆதாரங்கள் இன்னும் இல்லை. 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி :06 தொடரும் 

445174907_10225257057316251_6041107631789098525_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=SWJhUFWjXO0Q7kNvgEDKMcZ&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDJRzmrtjLn6OjTeA6DEIT_MhhgMKt1ZONAWXZAkh5xOg&oe=665BE957 446990300_10225257057636259_307529261873742770_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=WIwOGCnZUb8Q7kNvgEALg6d&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCaS2R2ZhBTm4bhe_go2vje_A0oRhQLgry8FR_YHWiu3Q&oe=665BEFE2 447009293_10225257057796263_3207945478948617126_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=_kb5I84kCGcQ7kNvgFH2l_k&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYD4FJwche8MZsaP19VajFl7ACoS6Oj9Vb3P_DHi8-UsuA&oe=665BC890

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

தில்லை

கொஞ்சநாளா ஆளைக் காணோம்?

ஏதும் சுகயீனமா?விடுமுறையா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை, பேரப்பிள்ளைகளுடனும் மற்றும் ஒரு பேரப்பிள்ளையின் பிறந்த நாளுடனும் [25 / 05 / 2024] கொஞ்சம் நேரம் இல்லாமல் போய்விட்டது. மீண்டும் ஜூன் ஒன்று / இரண்டு இளைய மகளிடம் பயணம். 

நன்றி 

 

"இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில்
இரவு மெல்ல கீழே இறங்க
இனிய விடியலில் நானும் எழும்ப
இரு குழவிகள் இறங்கும் நேரம் இது!"
 
"சிறிய கால்களின் காலடி ஓசை
சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க
சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி,
சித்தம் குளிர என்னை தழுவுது!"
 
"கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன்
கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம்
கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை
கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"
 
"சில கிசுகிசு, பின்னர் மௌனம்
சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து
சிறுசதி ஒன்றை திட்டமிடுகிறார்கள்
சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தர"
 
"படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து
பதுங்கி இரண்டு கதவால் வந்து
பகலோன் நேரே வந்தது போல
பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"
 
"மடியின் மேல் ஒருவர் எற
மற்றவர் நாற்காலியின் கையில் எற
மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை
மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"
 
"முத்தங்களால் என்னை விழுங்கி விட
முதுகில் ஒருவர் ஏறி கொள்ள
முழக்கமிட்டு மற்றவர் துள்ளி குதிக்க
முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
100835295_10216989366309143_3188540946971099136_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=m_RBMSDRin4Q7kNvgEnxaEo&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYB8JCLqbJ6KDI3W5HmTpdkpJdBuovUWygU3y49_IcTe3Q&oe=667D7BBF  May be an image of 2 people

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06 
 
 
 
[1] குமரிக் கண்டம் 
 
 
 
தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??
 
 
 
ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.
 
 
தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது. 
 
 
இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.
 
 
"கலம் செய்கோவே கலம் செய்கோவே
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி
வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே." 
 
[புறநானூறு 256]
 
 
ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.
 
 
குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.
 
 
தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.
 
 
பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது. 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி :07 தொடரும்  
 
 
பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar
447641908_10225288452501111_927379481717036559_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-ZU8OgFIoCIQ7kNvgEcfXyQ&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAoK84at-Yj_vuGBMriFr1TRWe1A5_bPUglNBZTSnHG1A&oe=6663F8C4 447648408_10225288452701116_5840849818635568363_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=czQFKpaOlOsQ7kNvgEavjpL&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYBc5gqzHFAWgkuG8KLfhoYrPbnwPssmdy6mpE6Mp2Ad0w&oe=666412FC 447616327_10225288452301106_7561138351354541968_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=poJiN_BZySUQ7kNvgHQ9pqq&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYA4OyR8f5RQvxWVNYu5AMZXEhV7E_33UzBPKBzQDjNFcg&oe=66640ADE 447645003_10225288453061125_9202116316401836304_n.jpg?stp=dst-jpg_p75x225&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=2GOpaUFKUjwQ7kNvgFeFl2Z&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYAeJHYR_lUuoYLSahu-1jnTuC_uX6dfjiKc54R1TCfXEg&oe=6664062E 447506897_10225288453221129_2460720361587168302_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=FZwGuKh5ayYQ7kNvgGmpH5M&_nc_ht=scontent-man2-1.xx&oh=00_AYCrBql6phywMNkz3N3haXYIsB9jQ9P_m_LDX1MqzkcmKA&oe=666404AD
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 07


பண்டைய தமிழரின் வாழ்வையும் செழிப்பையும் ஓரளவு அறிய, சங்க காலத்து தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய பட்டினப் பாலையில் எப்படி தமிழர் அன்று, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர் என்பதை, காவிரிப்பூம் பட்டினத்தின் செல்வச் செழிப்பை விபரிக்கும் அடிகள் 20-27 மூலம் நாம் இலகுவாக ஊகிக்கலாம்.  


"அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக்கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்காற் சிறு தேர் முன் வழி விலக்கும்
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் (20-27)"


ஒளி பொருந்திய நெற்றியும், மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணி கலன்களையும் அணிந்துள்ள மகளிர், அகன்ற வீட்டின், பரந்த முற்றத்தில், உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட, வளைந்த அடிப் பாகத்தைக் கொண்ட கனத்த குழையினை (காதணி) எறிவர். அக்குழை, பொன்னாலான அணிகலன்களைக் கால்களிலே அணிந்துள்ள சிறுவர், குதிரையின்றி கையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறுதேரினை முன் செல்ல விடாமல் தடுக்கும். இவ்வாறு தடைகளாக வரும் பகையே அன்றி வேறு கலக்க முறுவதற்குக் காரணமான பகையை அறியாத காவிரிப்பூம் பட்டினம். இக் காவிரிப்பூம் பட்டினம் செல்வம் நிறைந்த, பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற, செழிப்பான கடற் கரையை ஒட்டிய ஊர் (பாக்கம்) என்கிறது.


தற் கால சரித்திரத்தை பொறுத்த வரையில் அப்படி செழிப்புற்ற ஒரு நாகரிகம், கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில், தென் இந்தியாவில் இருந்ததாக தெரியவில்லை. என்றாலும், மனிதரால் செய்யப்பட்ட [குதிரைலாட  வடிவத்திலான] U வடிவ கட்டுமான கண்டுபிடிப்பு, இன்னும் கண்டு பிடிக்கப்படாத, கடலில் மிக ஆழத்தில் புதையுண்ட ஒரு நாகரிகத்தின் அடையாளம் என ஓரளவு கருத அல்லது ஏற்றுக் கொள்ள இடமளிக்கிறது. தேசியக் கடலாராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.ஆர்.ராவ், மாசி மாதம் 2002 இல், இது எதோ ஒரு தனித்த கட்டிடம் என நம்பவில்லை என்றும், கூடுதலான ஆராச்சிகள், அதை சுற்றி உள்ள உண்மைகளை புலப்படுத்தும் என்றும் கூறுகிறார்.


சார்லஸ் டார்வின் பரிணாம கொள்கையில் கவரப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேடெர் [Philip Sclator] என்னும் ஆராய்ச்சியாளர், மடகாஸ்கர் தீவில் [Madagascar Islands] ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்படி ஆராச்சியில் இருக்கும் போது, அங்கு வாழ்கிற  இனங்களுக்கும் இந்தியாவில் வாழ்கிற  இனங்களுக்கும் ஒரு ஒத்த தன்மை உடையதை கண்டார். அவரின் ஆராச்சி விலங்குகளின் புதைவடிவம் [fossils / தொல் எச்சம்] ஆகும். அவைகள் பக்கத்தில் இருக்கும் ஆஃப்பிரிக்காவுடன் ஒத்து போகாமல், தூர இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போவதை கண்டார். ஆகவே ஒரு மிக பெரிய நிலப்பரப்பு ஆஃப்பிரிக்கா - ஆசிய கண்டங்களின் பாலமாக, இருந்திருக்க வேண்டும் என முடிவு எடுத்தார். இதன் அடிப்படையில்  இலெமூரியா [Lemuria] என்ற ஒரு கண்டத்தை முன் மொழிந்தார். 


உதாரணமாக ஒரு வகை முதுகில் கொண்டையுள்ள எருதை [Zebutype cattle] குறிக்கலாம். அப்படியே இன்று வாழும் இலெமூர் [Lemur / லெமூர் என்பது ஒரு விலங்கினம். பார்ப்பதற்கு நாயின் முகத்தோடு கூடிய குரங்கினம் போல தெரியும்] எனப்படும் புதுவின விலங்கினமும் ஆகும். இவ் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டி என் எ ஆராச்சி [DNA research]  இந்த முதுகில் கொண்டையுள்ள எருது  5000 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்தது என்கிறது. டி.என்.ஏ என்பது ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலம் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid - DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற் பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை 'இனக்கீற்று அமிலம்' எனத் தமிழில் கூறலாம். 


பண்டைய காலத்தில், ஒரு நிலப்பரப்பு அழிவிற்கு  உட்பட்டதாக, கிட்டத் தட்ட 2000-2700 வருடங்கள் பழமை வாய்ந்த, சங்க இலக்கியமும், மற்றும்   சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும் கூறிய, குமரி கண்டமே இதுவாகும் என பலர் நம்பினர். இவ்வாறு தான் குமரி கண்டக் கோட்பாடு உருவாகி, பின் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால் வளர்ச்சி அடைந்தது எனலாம், குமரி கண்டம் தான் 'மனித நாகரிகத்தின் தொட்டில்' [மனித நாகரிகத்தின் தொடக்கம்] என பாவாணர் உரிமை கோரினார்.


மேலும் மிகவும் நிலை நாட்டப் பட்ட  சுமேரியனைப் பற்றிய சரித்திர உண்மை என்ன வென்றால் அவர்கள் அந்த  நாட்டுப் பழங்குடி மக்கள் [சுதேசி] அல்ல, அவர்கள் கிழக்கில் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதே ஆகும் ["Ancient Sumeria "Primary Author:  Robert A. Guisepi / Portions of this work Contributed By: F. Roy Willis of the University of California 1980 and 2003]. இது  சுமேரிய நூலிலேயே பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அந்த கிழக்கு, ஒரு வேளை ஹரப்பா அல்லது  வெள்ளத்தால் மூழ்கிய  குமரி நாடாக இருக்கலாம்? கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh] ஒரு பெரும் வெள்ளத்தைப் பற்றிய குறிப்பு உண்டு. அது கூறுவது "கடவுள் வெள்ளத்தை கொண்டு வந்த்தார். அது பூமியை [மண்ணை] விழுங்கியது" [Epic of Gilgamesh - Sumerian Flood Story 2750 - 2500 BC] என்பதாகும். மேலும் சுமேரிய மொழி  என்பது தொன்மையான தமிழ், அது துருக்கிய மொழியின் வழித்தோன்றல் அல்ல என டாக்டர் கே.லோகநாதன், 2004 பல உதாரணங்களுடன் விளக்குகிறார். இவர் [முனைவர் கி. லோகநாதன் (11 ஆகத்து 1940 - 17 ஏப்ரல் 2015)] மலேசியத் தமிழறிஞர். மலேசிய கல்வி அமைச்சிலும், பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். 


நான் மேலும் "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" பற்றி அலசமுன்பு, எப்படி வரலாற்றை - தமது குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலை அல்லது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாற்றுகிறார்கள்  என்பதை ஒரு உதாரணம் மூலம் உங்கள் கவனத்துக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏனென்றால், எப்பவும் வரலாற்றை வாசிக்க முன் எழுதியவர் யார்? எழுதிய சூழல் என்ன? என்பதை அறிந்து நம்பகத்தன்மை சரிபார்த்து வாசிப்பதே நல்லது என்பதால்! இலங்கையினது வரலாற்றை குறிக்கும் மூன்று நூல்களை இதற்கு உதாரணமாக எடுக்கிறேன். முதல் இரண்டும் பாளி மொழியிலும் [அன்று சிங்கள மொழி என்று ஒன்றும் தோன்றாத நிலையில், ஆனால் புத்தமதம் இலங்கையில் பரவிய நிலையில், இரு வேறு சமூகங்களாக சைவ மதம் பின்பற்றுபவரும் மற்றும் புத்த சமயத்துக்கு மாறியபவரும் இருந்தனர். அங்கு சைவ சமயம் பின்பற்றுபவர்கள் முழுக்க முழுக்க தமிழ் பேசுபவர்களாக   இருந்தனர். மற்றவர்கள் தமிழ், பாளி, சமஸ்கிருதம் ... என கலப்பு மொழி பேசுபவர்களாக இருந்தனர்.] - தீபவம்சம் [கி.பி. மூன்றாம் நான்காம் நூற்றாண்டு], மகாவம்சம் [கி.பி. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு] - மற்றது இராசாவலிய [முதல் முதல் சிங்கள மொழியில் எழுதப்பட்ட பதினேழாம் அல்லது பதினெட்டாம் நூற்றாண்டு நூல்]. இவை மூன்றும் ஒரே வரலாற்றை வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 


"உண்மையை அறிதல், உண்மையை நேசித்தல், உண்மையுடன் வாழ்தல், மனிதனின் முழு கடமையாகும்"


சோழ நாடு, சோழ அரசன் அல்லது சோழ இளவரசன் பற்றி ஒன்றுமே 'தீபவம்சம்' கூறவில்லை. உதாரணமாக சேனன் மற்றும் குத்திகனை வெளியில் இருந்து அல்லது சோழ நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று கூறவில்லை. இதற்கு மாறாக ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு பின் எழுதிய 'மகாவம்சம்' அவ்விருவரையும் குதிரை விற்கும் வியாபாரிகள் என்றும், அதே நேரம் தீபவம்சம் போல் அவ்விருவரும் நீதி தவறாமல் ஆட்சி செய்தனர் என்றும் கூறுகிறது. தீபவம்சத்தில் இருந்த இரு இளவரசர்கள் இப்ப குதிரை வியாபாரிகளின் மகன்கள் ஆகிவிட்டார்கள் ?. அத்துடன் நிற்கவில்லை,  இரு குதிரை வியாபாரிகள் பெரும் படையுடன் வந்து, ஒரு நிலையான பெரும் அரசை கைப்பற்றினார்கள் என்கிறது. இது வெளிப்படையான பரிகாசம் போல் தெரியவில்லையா ?


அதேமாதிரி, தீபவம்சம் ஒப்பிடமுடியாத மன்னர் எல்லாளன் 44 ஆண்டுகள் நேர்மையாக நீதியாக பாகுபாடு இன்றி ஆட்சி செய்தான் என்கிறது. அதேவேளை எல்லாளன் தமிழன் என்றோ, சோழ நாட்டவன் என்றோ தீபவம்சம் கூறவில்லை. மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாம தேரரின் கருத்தின் படி எல்லாளன் ஒரு சோழ இளவரசன் அல்ல. ஆக  ஒரு சோழ உன்னத வம்சாவளி மட்டுமே [noble descent came from Cola-country]! அதேவேளை தீபவம்சம் எல்லாளனை துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி கொன்றதாக கூறவில்லை, ஆனால் துட்டைகைமுனு முப்பத்திரண்டு அரசர்களை கொன்று அரசை மீட்டு இருபத்திநாலு ஆண்டுகள் ஆண்டான் என்று மட்டும் கூறுகிறது. ஆகவே அதிகமாக எல்லாளன், மூப்பின் காரணமாக இயற்கையாக இறந்தபின், அவனின் அரசை முப்பத்தி இரண்டு சிற்றரசர்கள் பங்கு போட்டு இருக்கலாம். அதனால் ஏற்பட்ட  பலவீனத்தால் அவர்களை கொன்று  துட்டைகைமுனு ஒருவேளை அரசை முழுமையாக கைப்பற்றி இருக்கலாம்?. கட்டாயம் துட்டைகைமுனு கொன்று இருந்தால்?, தீபவம்சம் சொல்லி இருக்கும். ஏன் என்றால் எல்லாளன் மற்றும் துட்டைகைமுனு இரு முக்கிய கதா பாத்திரமாகும். இதனால் தான் மகாவம்சம் இந்த எல்லாளன் - துட்டைகைமுனு சிறுகதையை அளவுக்கு மீறிய அளவில் பல வளைவு நெளிவுகளுடன் பல திருப்பங்களுடன், உண்மைக்கு புறம்பாக  வடிவமைத்து இருக்கிறது எனலாம். என்றாலும் இந்த இரு காவியங்களும் எல்லாளன் நீதியாக ஆண்டான் என்கிறது. ஆனால், இராசாவலிய எல்லாளன் கொடுங்கோலாக ஆண்டான் என்று மேலும் ஒரு படி பொய்யிலும் துவேசத்திலும் ஏறி சொல்கிறது. அதாவது , காலப்போக்கில் நல்லவனை கெட்டவனாக்குவதும், தாய் நாட்டவனை வேற்று நாட்டவனாக்குவதையும் இங்கு காண்கிறோம். 


வட்டகாமணி [வட்டகாமிணி / Vattagamani] காலத்தில், ஐந்து தமிழ் அரசர்கள் பதிநான்கு ஆண்டுகள் ஏழு மாதம் ஆண்டதாக தீபவம்சம் கூறுகிறது. ஆனால் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றோ அல்லது சோழ நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றோ அல்லது நீதி அல்லது நீதியற்ற ஆட்சி என்றோ கூறவில்லை. இந்த ஐந்து ஆட்சியும் தமிழ் பழங்குடியை [Damila tribe] சேர்ந்தது என்கிறது. அவ்வளவுதான்! ஆகவே தமிழ் பழங்குடி என்பது இலங்கையில் வாழ்ந்த தமிழ் குடியையே குறித்து இருக்கும் [The Damila tribe could mean the Tamils who were resident of Ceylon.] மகாவம்சம் அதே நிகழ்வை ஏழு தமிழர்கள் தம் படைகளுடன் தலைமன்னாருக்கு அருகில் அன்று இருந்த மாதோட்டம் [மாதொட்ட அல்லது மகாதித்த / Mahatittha] என்ற துறை முகத்தில் இறங்கியதாக கூறுகிறது. இந்த வட்டகாமணி, இராசாவலியவில் வலகம்பாகுவாக [Valagambahu] மாறியதுடன், ஏழு தமிழர்களும் சோழநாட்டில் இருந்து ஏழாயிரம் வீரர்களுடன் வந்ததாக மேலும் விரிவு படுத்துகிறது. இவை எப்படி வரலாறு திரிக்கப்படுகிறது என்பதற்கு நான் உங்களுக்கு எடுத்துக் காட்டிய மிக சிறு உதாரணங்களே ஆகும்.


சோழ ஆட்சியை பற்றி பார்ப்போமாயின், மூன்றாவது நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரை பாண்டிய, பல்லவ மற்றும் களப்பிரர் முதன்மை வகுத்து, சோழர் ஆட்சி செயல் இழந்து, அதிகமாக பொதுக் காலம் தொடக்கத்தில் இருந்து தொள்ளாயிரம் [ஒன்பது நூறு] ஆண்டுகள் இருந்தது என்பது வரலாற்று உண்மை. அது மட்டும் அல்ல, அசோகா கல்வெட்டு பாண்டிய சோழரை பற்றி கூறினாலும், சோழரை பற்றிய வரலாற்று குறிப்புக்கள் பொதுக் காலம் தொடக்கத்திற்கு முன்பு இல்லை. ஆகவே விஜயன் இலங்கைக்கு வந்ததில் இருந்து நான்காம் கசபன் (Kassapa IV of Anuradhapura / 896 to 913 A. D.) வரை உள்ள கால பகுதியில் எந்தவொரு சோழ நாட்டு படையெடுப்பும் முழு புரளியே !  


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி :08 தொடரும் 

448112755_10225324851731069_5661622714667200723_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=j-ex-W_SOQAQ7kNvgHzUWNG&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCY7F4tIK-0uNodnHTcJ0FFgoZKfUqMwIMmxiTZDwrd0A&oe=666CB404 447898102_10225324851691068_744093601293778655_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=rCvnZBV68OUQ7kNvgFtejR8&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAGHiHuzvvB3OuzlW6DIqi_BjM9-s5sWFAsx9-HUj4uhw&oe=666CDA85 447973851_10225324851571065_5025121015387421515_n.jpg?stp=dst-jpg_p417x417&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=e2JmhIrQyykQ7kNvgG0htb8&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAbMsPpBeNE8fZQ3FB8cEqWAYYBOfbbr-d8-e62SqKPOw&oe=666CC0B0 448046683_10225324852771095_4246249645080000950_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=HXjfev4lPiYQ7kNvgHkM6Kp&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCxYpCPHsqCILODH6gL8Ot3pMAfGu1A3DySYE9P_tMfhQ&oe=666CCB16 447968273_10225324852051077_4201703809777389232_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Sx80yz_EFg0Q7kNvgFcw_k4&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDPabP3evWBCVFyS29ckgNdxOqjFrrmnU1pxF1Pe9OzZg&oe=666CDF0B

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 08 


குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள், முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது என்றும், அதாவது குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான் என்கின்றனர். 


“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே”


மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியை தொல்காப்பியர் மேலே கூறியவாறு 2000-2500 ஆண்டுகளுக்கு முன் சொல்லி சென்றார் [தொல்காப்பியம் /பொருளதிகாரம் / மரபியல்: 27-33]. அதாவது உயிரினங்களை ஓர் அறிவு முதலாக ஆறு அறிவு உள்ளனவாகப் பகுத்து,  "மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே" என மேலும் உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றி படிப்படியான பரிணாம வளர்ச்சி நிலைகளை அப்போதே கூறியுள்ளார். என்றாலும், அவர் கூற்றில் சில சில பிழைகள் உண்டு. உதாரணமாக தேனீக்கு மெய், வாய், மூக்கு, கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று கூறியது [தேனீக்கு மூக்கு இல்லை / Bees, Like All Insects, Do Not Have Noses With Nasal Passages]. மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக கூறியது [இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை] போன்றவை ஆகும். மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை ஆகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர் என்கிறது.


குமரிக் கண்டம் என்ற கோட்பாடை நம்புபவர்கள், அங்கு தமிழே, 12000 வருடங்களுக்கு முன்பே, உறுதிப் படுத்தப்பட்ட மொழியாக இருந்துள்ளது எனவும்  நம்புகிறார்கள். அத்துடன் அங்கு தலைமை தெய்வமாக சிவா இருந்ததாகவும் கூறுகிறார்கள். இந்திய சமுத்திரத்தின் திடீர் வெள்ளத்தால் தள்ளப்பட்ட இவர்கள், இரண்டு பிராந்தியத்திற்கு [நிலப்பரப்பிற்கு] போயிருக்கலாம் என்றும், அதில் ஒரு தொகுதி சரஸ்வதி ஆறு வழியாக வட இந்தியாவிற்கும் [சிந்து சமவெளி நாகரிகம்] மற்ற தொகுதி, பெர்சியன் கடல் வழியாக மெசொப்பொத்தாமியாவிற்கும் [இன்றைய ஈராக், துருக்கி, சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதியில் அமைந்து இருந்த சுமேரிய நாகரிகம் ] போயிருக்கலாம் அல்லது வட இந்திய ஊடாக அங்கு போயிருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். அவர்கள் இந்த கோட்பாட்டிற்கு பாகிஸ்தானில் உள்ள இடங்களின் பெயர்களை சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக: கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) & கோளி (Koli) ஆகும். அதே போல ஆப்கானிஸ்தானில் கொற்கை (Korkay. Gorkay), பூம்பகார் (Pumbakar) ஆகும். அவைகள் சங்க கால நகரங்களான, கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் என்பனவற்றுடன் ஒத்து போவதை சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். மொழியறிஞர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவு கூட கூட, அந்த மொழி திரியும் வாய்ப்பும், அதிகரிக்கும் என்கின்றனர். இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு ஒரு நல்ல சான்று என்று அவர்கள் எடுத்து காட்டுகின்றனர். இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.

ஈனும் -மா - எல் - இசு (Enuma-Elish) - எனப்படும் சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட  சுமேரிய இலக்கியமும், வீரனான அரசன் கில்கமெஷ் பற்றிய சுமேரிய செவிவழிக் கதைகளையும் செய்யுள்களையும் தொகுத்துப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கில்கமெஷ் (GILGAMESH) எனப்படும் மெசொப்பொத்தாமியா / பாபிலோனிய இலக்கியமும் உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள் ஆகும். மேலும் அதிசயம் என்னவென்றால், இவ்விரண்டு நூல்களுமே, வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மனிதனைப் பற்றியும் கூறுகின்றன. மெசொப்பொத்தாமியா என்ற நாடு இருக்கும் இடத்தில், இது வரை உலகமே அழிந்து போகும் வண்ணம், வெள்ளம் வந்து இருப்பதற்கு சாத்திய கூறுகளே கிடையாது. பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றி இரு இலக்கியங்களிலும் பேசுகின்றார்கள் என்பது ஒரு புதுமையே !. இது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மேலும் அவர்கள் எப்படி பேசினார்கள் என்பதை அறிய அந்த மெசொப்பொத்தாமியா வெள்ள கதையில் இருந்து ஒரு பந்தி கிழே தரப்பட்டுள்ளது. 


"அனைத்து காற்று புயல்களும் ஒன்றுகூடி, 
மிக சக்தியுடன் பொங்கி எழுந்தன [தாக்கின],
பூமியின் மேற்பரப்பில் வெள்ளம் பெருகியது,
ஏழு நாட்கள் மற்றும் ஏழு இரவுகளின் பிறகு,
நாடு முழுவதும் [நிலத்தில்] வெள்ளம் பெருகியது,
பெரிய நீரின் மேல், பெரிய படகு தூக்கி எறியப்பட்டது.
உத்து [சூரியக் கடவுள்] தோன்றினார் [வெளிவந்தது], 
அவர் வானத்திலும் பூமியிலும் ஒளி ஏற்றினார் [கொடுத்தார்]
ஜீசுத்ரா பெரிய படகின் ஜன்னலைத் திறந்தார்
மன்னர் ஜீசுத்ரா, உத்து முன் சிரம் பணிந்தார்" 
  

"All the windstorms, exceedingly powerful attacked as one. 
The deluge raged over the surface of the earth. 
After, for seven days and seven nights. 
The deluge had raged in the land. 
And the huge boat had been tossed about on great waters. 
Utu [Sun God] came forth, who sheds light on heaven and earth. 
Ziusudra opened a window of the huge boat. 
Ziusudra, the king. 
Before Utu prostrated himself."

[One passage from Mesopotamian Flood Story]


இங்கு கடவுளுக்குப் பயந்த ராஜா 'ஜியுசுத்ரா', அழியாத மூப்பரான 'உட்னாபிஷ்டிம்' மற்றும் பக்தியுள்ள தேசபக்தர் 'நோவா' ஆகியோர் ஒரே நபர், ஒரே பாத்திரம், சுமேரியர்கள், பாபிலோனியர்கள் மற்றும் பைபிளின் பண்டைய ஆசிரியர்களால் மட்டுமே வித்தியாசமாக பெயரிடப்பட்டுள்ளனர் என்பது மூன்று வெள்ளக் கதையிலும் உள்ள ஒற்றுமையில் இருந்து நாம் ஊகிக்கலாம். 


எவ்வாறாயினும், 'குமரிக்கண்டம்' என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற கேள்வி பலர் மனதில் இன்று எழுகிறது? குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் / முயற்சிகள் இந்தியாவால் அல்லது தமிழ் நாட்டால் தொடங்கப்பட்டதா?  2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி இதே பகுதியில் சுனாமி [Tsunami] அல்லது கடற்கோள் என்ற பெரும் ஆழிப் பேரலையில் இயற்கையின் கொடூரத்தை உலகம் கண்டது. சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். கடலின் அடியில் உள்ள டெக்கான் தட்டுகளின் [tectonic plate] விலகல் [அல்லது நகர்தல்] மூலம் இந்த ஆழிப் பேரலை உண்டானது. 8.6 ரிக்டர் அளவுகள் [richter scale] பூகம்பம் ஏற்பட்டது. ஆகவே ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டதாக கருதப்படும்  குமரிக்கண்டத்தை மூழ்கடித்த ஆழிப் பேரலை, நாம் 20 வருடங்களுக்கு முன்பு  கண்ட சுனாமியை விட பல பல மடங்கு கட்டாயம் பெரிதாக இருக்க வேண்டும் ? என்று எண்ணத்  தோன்றுகிறது. இது சாத்தியமா ? இல்லையா என்பதை மேலதிகமான ஆய்வுகள் தான் நிரூபிக்கும்.   

பண்டைய தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்ட, கடலில் மூழ்கிய குமரிக் கண்டம் பற்றிய உண்மையை உறுதிப் படுத்துவது இன்றைய அறிவு நிலையில் மிக மிக கடினம். அதற்கு நேரடியான சான்றுகள் இல்லை என்றே சொல்லலாம். எனினும் சில ஊகங்கள் அங்கொன்று  இங்கொன்றாக காணப்படுகிறது. அவையில் சிலவற்றை ஏற்கனவே கூறிவிட்டேன். மிகுதியை சுருக்கமாக கீழே தருகிறேன்


இந்த குமரி கண்டம் இன்று இலெமூரியா [Lemuria] என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் [Philip Scatler] இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு இலெமூரியா என்று பெயரிட்டார். இவர் தனது கூற்றுகளில் இலெமூர் [Lemurs] இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மற்றும் இவை இரண்டுக்கும் இடையில் உள்ள பகுதிகளில் இல்லை எனவும் கண்டார். ஆகவே இவை இரண்டையும் இணைக்கக் கூடியதாக ஒரு மாபெரும் நிலப் பரப்பு இருந்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 


கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் [Oceanographic Researchers] அறிக்கையின் படி,  கடந்த 14,500 ஆண்டுகளில், இந்திய தீபகற்பகத்தை [Indian peninsula] சுற்றி கடல் மட்டம் 100 மீட்டர் உயர்ந்துள்ளது. இது குமரிக் கண்டம் கடலில் மூழ்க எதுவாக இருந்து இருக்கலாம் ?


பதினைந்தாம் நூறாண்டு கந்த புராணத்தில், அண்டகோசப் படலத்தில், முதல் முதலாக குமரி கண்டம் என்ற சொற்பதம் பாவிக்கப் பட்டுள்ளது.


"மெய்ந்நெறிசேர் வதுகுமரி கண்டம் ஏனை மிலேச்சரிடம் ஓரெட்டும் வியப்பி லாவே." [- 47]  என்று.


இந்து தொன்மவியலின் படி, இந்தியாவின் 'தென்பகுதியின் அல்லது திராவிட' மன்னனாக மனு இருந்ததாகவும் [kingdom of Dravida, ruled by King Manu], அங்கு அப்பொழுது ஊழிவெள்ளம் வந்ததாகவும்,  வைணவ சமயக் கடவுள் விஷ்ணு தனது முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்து காப்பாற்றியதாகவும் கூறுகிறது.  சிலர் இதை குமரி கண்டத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள்.  


குமரி கண்டம் பற்றிய நம்பிக்கை இன்னும் பல தமிழ் புத்திஜீவிகள், மறுமலர்ச்சிவாதிகள் மற்றும் மேலாதிக்கவாதிகளிடம் இருந்தாலும், பிலிப் ஸ்க்லேட்டருக்கு பின், பல மாற்றம் அடைந்து, 1950 அளவில், கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) என்ற ஒரு புதிய யோசனை நடைமுறைக்கு வந்து, முன்மொழியப்பட்ட குமரி கண்டம் என்ற கருத்தை மீண்டும் சிந்திக்க வைத்துள்ளது. கண்டத்தட்டு இயக்கக் கோட்பாட்டின்படி புவியின் மேலோடு அடிக்கற்கோளம் (lithosphere), உள் மென்பாறைக்கோளம் (asthenosphere) எனும் இரண்டு அடுக்குகள் அல்லது படைகளால் ஆனது. கற்கோளம் மென்பாறைக்கோளத்தின்மீது மிதந்து கொண்டு போகக் கூடியது. [In plate tectonics, Earth’s outermost layer, or lithosphere — made up of the crust and upper mantle — is broken into large rocky plates. These plates lie on top of a partially molten layer of rock called the asthenosphere & can move over the the molten upper portion of the mantle from two to 15 centimetres (one to six inches) per year]  எனவே இந்த புதிய திருப்பம் பிலிப் ஸ்க்லேட்டரின் கொள்கையை மீண்டும் திருப்பி பார்க்க வைத்தது. அதாவது ஆபிரிக்க, மடகாஸ்கர், இந்தியா ஒரே நிலப்பரப்பாக இருந்து இருக்கும் என்றும், பின் இணைக்கப் பட்ட படத்தில் காட்டியவாறு, அவை பிளவுபட்டு வேறாக, எதிர் திசையில் சறுக்கி போய் இருக்கலாம் என நம்பப் படுகிறது.  எனவே  இலெமூர் [Lemurs] என்ற விலங்கு அவை ஒன்றாக இருந்த கால பகுதியில் மடகாஸ்கரில்  இருந்து இந்தியா சென்று இருக்கலாம் என்பது இப்போது அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. எனவே இது குமரி கண்டம் கடலில் மூழ்கியது என்ற கொள்கையை அல்லது யோசனையை முற்றாக  நீக்குகிறது அல்லது வலுவிழக்க செய்கிறது எனலாம். 


எப்படியாகினும்,  தமிழ் அறிஞர்கள், சிறந்த வானியலாளர்கள், மற்றும் கணித வல்லுநர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, உண்மையை அறியும் ஆய்வில் ஈடுபட்டு, குமரி கண்டம் என்ற கொள்கை உண்மையா பொய்யா என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்து இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது நல்லது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 09 தொடரும்  

May be an image of map and text No photo description available. May be an image of map and text that says '50° SOUTH SOUTHAMERICA AMERICA AND AFRICA 50° 30° MADAGASCAR SOUTHAMERICA SOUTH AMERICA AND AFRICA 30° INDIA, ANTARCTICA AUSTRALIA 170 million years ago MADAGASCAR 50° 162 mya INDIA, ANTARCTICA AND AUSTRALIA SOUTHAMERICA SOUTH AMERICA AND AFRICA 50° 30° MADAGASCAR AFRICA SOUTH AMERICA 30° 135 ya INDIA ANTARCTICA MADAGASCAR AUSTRALIA 50° INDIA 100mya 100 mya AFRICA AUSTRALIA 50° SOUTH AMERICA 30° AFRICA MADAGASCAR SOUTH AMERICA INDIA 30° 88 mya INDIA AU STRALIA 60 mya MADAGASCAR'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 09 


குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதை பற்றிய முழு வீச்சான ஆய்வுகள் அல்லது முயற்சிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற ஒரு கேள்வி பலரின் மனதில் எழுவது  இயற்கையே? இந்த நிலையில் பண்டைய இலக்கியங்களிலும் காவியங்களிலும் கூறிய தகவல்களையும் மேலும் மதுரை ஆதீனத்தின் [ஆதினத்தின்] அதிகாரப் பூர்வமான கணினி இணையத்தில் பதியப்பட்ட  தகவல்களையும் கிழே தருகிறோம். 


இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் மூழ்கிப் போன குமரிக் கண்டம் பற்றிய பல முக்கிய சான்றுகள் காணப்படுகின்றன. கிழே தரப்பட்ட குறிப்புகள் 2000 - 2700 ஆண்டு பழமை வாய்ந்த முன்றாவது சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும். உதாரணமாக, புறநானுறு 9, 6 & 67, கலித்தொகை 4 & 7 மற்றும் தொல் காப்பியமும், 1900-1800 ஆண்டு பழமை வாய்ந்த சிலப்பதிகாரமும் ஆகும். 


"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" 

(புறம் 9) 


சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு  வழங்கிய மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்கிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த [குமரி கண்டம் என கருதப்படும் பழந்தமிழ் நாடு] ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும்.


"வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்" 

(புறம் 6)


வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், என்கிறது.


"முகிழ்நிலா விளங்கும் 
மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் "

[புறம் 67]


முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், என்கிறது.


"மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின் 
மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப் 
புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட 
வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்" 

(கலித். 104)


முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது. 


 "வட வேங்கடந் தென்குமரி" [தொல்காப்பியம்]


"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் 
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள 
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு 
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி"
 
(சிலப். 11:19-22)


கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான் என்கிறது. 


ராவணனின் பேரரசு, 25 மாளிகைகளுடனும் 400000 வீதிகளுடனும், வரலாற்றின் ஒரு காலகட்டமான துவாபர யுகத்தில் [இந்து காலக் கணிப்பு முறையின் படி இதற்கு அடுத்த யுகம் தான் இப்ப நடக்கும் கலியுகம் ஆகும்] கடலில் மூழ்கியது என ராமாயணம் கூறுகிறது.


சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலிலும் பின்னர் "ராஜாவலிய" என்ற வரலாற்று நூலிலும் பாரிய கடற்கோள் ஒன்று ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.


ஆனால் 2004 சுனாமியின் தாக்குதலின் பின், இந்த உப கண்டத்தில் இன்று எலோருக்கும் நன்றாகத் தெரியும் சிலப்பதிகாரம் , கலித்தொகை, ராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றில் கூறிய 'கடற்கோள். என்றால், எப்படி இருந்து இருக்கும் என்று என நம்புகிறேன்.


நாம் மேலே சுட்டிக்காட்டியவாறு, பண்டைத்தமிழ் இலக்கியம், ஆகக் குறைந்தது 14 இடங்களில், கடலில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு பற்றி எடுத்து காட்டுகிறது. அது மாட்டு அல்ல, எல்லாம் ஒரே கருத்தையே முன் வைக்கிறது. அதாவது பாண்டிய அரசனால் ஆளப்பட்ட இந்த பண்டைய தமிழ் நாகரிகம், ஒரு பெரும் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அல்லது கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பதேயாகும். இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கட்டுக் கதையாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நிலத்தையும் கடலையும் தொடர்பு படுத்தி ஏதாவது ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் நடைபெற்று இருக்க வேண்டும். அதுவே பிற் காலத்தில் அவர்களை பல இடங்களில் பலரால் எழுத தூண்டி இருக்கலாம். இந்த சம்பவம் தலை முறை, தலை முறையாக கடந்து வந்து இருக்கலாம். அப்படி வரும் போது அந்த கதையே மாற்றம் அடைந்து இப்ப சங்க இலக்கியங்களில் கூறப்படும் வடிவத்தை அடைந்து இருக்கலாம், அல்லது இது இப்ப கூறப்படுவது போல உண்மையாகவே நடந்து இருக்கலாம். அது மட்டும் அல்ல, இது மாதிரியான கதைகள் வேறு இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக இலங்கையில் மகாவம்சம், இந்தியாவில் இராமாயணம், சுமேரியாவில் கில்கமெஷ் காவியம் போன்றவையாகும். இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை அனைத்தும் பண்டைய தமிழர்களுடனோ அல்லது அவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற இடங்களுடனோ தொடர்புடையது என்பதே ஆகும். ஆகவே நாம் இலகுவாக ஊகிக்க முடியும் அவர்கள் இந்த வெள்ளம் சம்பந்தமான கதையை அங்கு வாழ்ந்த அல்லது அங்கு குடியேறிய தமிழர்களான தமது மூதாதையர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பதாகும். இவை எல்லாம் சுட்டி காட்டுவது ஒரு நிலப்பரப்பு முன்பு ஒரு காலம் கடலில் மூழ்கியது என்பதாகும். அது குமரி நாடு போல் ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் அல்லது கரையோர கிராமமான ஒரு சிறு நிலப்பரப்பாக கூட இருக்கலாம் ? இவைகளை உறுதிப்படுத்த எம்மிடம் இன்னும் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. 

 
இது வரை, குமரி கண்டத்தை பற்றிய ஏதாவது நேரடியான தகவல்கள் இலக்கியம் மற்றும் இதிகாசங்களில் உள்ளனவா என்று பார்த்தோம். ஆனால், மகாவம்சத்தையும் மற்றும் 'Daily News 2020/08/10 › features › இல் We were here before the arrival of Vijaya' என்ற கட்டுரையையும் பார்த்தபின், ஏன் நாமும் மறைமுகமாக அவை மேலும் எதாவது கூடுதலாக சொல்கின்றனவா என தேடக் கூடாது என்று யோசிக்கிறேன்  உதாரணமாக, மகாவம்சத்தில், விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது, அங்கு ஏற்கனவே நான்கு முக்கிய இனம் அல்லது குலம் [clan] வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் இயக்கர், நாகர், தேவர் மற்றும் அரக்கர் [Yaksha (Yakku), Naga, Deva, and Raksha (Rakus)] ஆகும். இது அவர்களின் தொழிலை குறித்து காட்ட ஒரு உருவகமாகக் [metaphorically] கூறப்படுகிறது எனலாம். உதாரணமாக, இயக்கர்கள் இரும்பை உருக்கி வார்பவர்களாகவும் [mould iron], நாகர்கள் வர்த்தகர்களாகவும் [traders], தேவ[ர்] மக்கள் ஆட்சியாளர்களாகவும் [rulers], அரக்கர்கள் விவசாயிகளாகவும் [ farmers] நம்பப்படுகிறது. [Yakshas can be  believed lived on mountains where they had used monsoon wind to mould iron, because a derivative from the word yakka is yakaḍayā / යකඩයා means the iron.  Rakshas (Sanskrit: राक्षस, rākṣasa: Pali: rakkhaso) were supposed to be farmers who used the steel products of the Yaksha people in their farming endeavours (the name Raksha is derived from the two syllables ra+kus. In Sinhala, kus means stomach [කුස් - Stomach];] மகாவம்சத்தில் கூறப்படும் இயக்கர் [Yakkhas] தான் இன்றைய வேடர்களின் [Veddas] மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே, ஒரு நாகரிக சமுதாயத்திற்கு வேண்டிய அமைப்பை காண்கிறோம். இயக்கர்கள் தொழிற்சாலைகளை இயக்குவதையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கருவிகள் அரக்கர்களின் விவசாயத்திற்கு ஊக்கமளித்து உதவுவதையும், இரண்டிலும் உற்பத்தியாகும் பொருட்களை நாகர்கள் வர்த்தகம் செய்வதையும், இவை எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு படுத்தி, ஒரு கட்டுப்பாட்டுடன் தேவர்கள் ஆட்சி செய்வதையும், விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை மண்ணில் காண்கிறோம். மேலும் Veddas என்ற ஆங்கில, சிங்கள சொல்லின் மூலம் தமிழ் 'வேடர்' ஆகும். ஆரியர்களுக்கு முற்பட்ட ‘hunters’ ஐ குறிப்பிட  இங்கு தமிழ் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, கட்டாயம் இது ஒரு வரலாற்றை மறைமுகமாக எடுத்து கூறுகிறது என்றே எண்ணுகிறேன். இயக்கர்கள் உண்மையில் ஒரு மனித இனமே, ஏன் என்றால், விஜயன் குவேனியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அவளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி, வாளை உயர்த்தியபோது, அவள் பயந்துபோய் தன் உயிருக்காக கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயம் என்பது, மனிதரல்லாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் கொண்டதாக கருதப்படும் இயக்கர்களின் பண்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, அது மட்டும் அல்ல, குவேனியை யக்கினி [Yakkhini] என்று அழைக்கப்படுவது உண்மையெனில், அதாவது அவள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி என்றால், அவள் விஜயனின் பிடியில் இருந்து இலகுவாக வெளியேறியிருக்க முடியும்?, ஆனால் அவளால் முடியவில்லை, பயந்து கெஞ்சுகிறாள். மேலும்  2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி  துணி நூற்பதைக் காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து ,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது.   இவைகள் எல்லாம் இயக்கர்களும் மனிதர்கள் தான் என்பதை மெய்ப்பிக்கிறது ! 

மேலும் ஒரு உதாரணமாக நாகர்கள் யார் என்று கொஞ்சம் ஆழமாக பார்ப்போமானால், கார்த்திகேசு இந்திரபாலா (Karthigesu Indrapala, பிறப்பு: 22 அக்டோபர் 1938) போன்ற அறிஞர்கள் அவர்களைப் பழங்கால பழங்குடியினராகக் கருத்துவதுடன், அவர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைந்தனர் என்கிறார். 

வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒலியர், பரதவர், மறவர், பறையர் மற்றும் எயினார் [The Oliyar, Parathavar, Maravar, Paraiyar and Eyinar ] ஆகியோர் நாகர் பழங்குடியினர் ஆவார்கள். பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம் என்கிறது. சங்க இலக்கியங்களுக்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாகா முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு. உதாரணம்: மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகனார்,  முப்பேர் நாகனார் .... 

நாகர்கள் என்பவர்கள் தென்னிந்திய வம்சாவளியினரை சேர்ந்த பாம்புவை வணங்கும் மக்களாகும் என்றும் எச். பார்க்கர், [H. Parker] பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும், "பண்டைய சிலோன்" [“Ancient Ceylon”] ஆசிரியருமான இவர்,  நாகர்களை கேரளாவின் நாயர்களின் கிளையினராகக் கருதுகிறார். 

இவை எல்லாம் காட்டுவது, விஜயன் என்ற புராண தலைவன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட முன் அங்கு தமிழர்களும் பூர்விக குடிகளாக வாழ்ந்தனர் என்பதே!


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 10 தொடரும் 

449158658_10225411572539035_3122843333327097408_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=vT6TysDmEYsQ7kNvgFOp-i6&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD_TXBfl2sLjSu3JQbHIM4GClzmux2mQ_r_khPfZVH0Rg&oe=667F17EC 449055867_10225411571899019_7399262730163984280_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=jnXA3HBTkCgQ7kNvgGMA0ds&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYA7NGDLH4FU0nn3byGd0yx-ToRoy8MBp4Aar9-3hOUkoA&oe=667F239B 


449157874_10225411571859018_6083623329729018567_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=0jfoLYOXm-4Q7kNvgExiR3A&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDTweQE1zJOpuYRO0XkQ7x9Av30-I7__YU9_uCy4J5NYg&oe=667F142C 449054668_10225411572339030_792444964673764722_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Kwr9dA3PZxEQ7kNvgFqCyWw&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBEZrXmnHxp0SHKgfj62QV1il9psUd2ohVtU_Gyg2Ja7g&oe=667F0FFA

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 10

 


மதுரை ஆதீனத்தின் [ஆதினத்தின்] அதிகாரப் பூர்வமான ஆங்கில கணினி இணையத்தில் [The previous official website of Madurai Aadheenam  was taken over by Nithiyananda earlier, so please check: 'Madurai Aadheenam - Nithyananda Truth'], ஆதீனத்திற்கு [ஆதினத்திற்கு] இன்னும் ஒரு முக்கிய கருத்தை சுட்டிக் காட்டுகிறார்கள். அது எமக்கு ஒரு வியப்பையே கொடுக்கிறது. மேலும் Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary யில், ஆதீனம் என்பதற்கு: s. [commonly ஆதினம்.] என்றும்  கொடுக்கப்பட்டுள்ளது அதாவது ஆதீனம் என்பதை ஆதினம் எனவும் பொதுவாக குறிக்கலாம் என பொருள் படுகிறது. இந்த அடிப்படையில் ஆதினம் என்பதை மேலும், ஆதி+இனம் என பிரித்து பார்த்து இந்த கணினி இணையம், நாகரிகம் முதல் முறையாக குடியேறிய இடம் ஆதினம் என்கிறது. அதாவது ஆதினம் என்னும் சொல் பண்டைய சமூகம் அல்லது குடியேற்றத்தை குறிக்கிறது என்கிறது. அது மதுரையில் உள்ளது. ஆகவே அந்த பண்டைய குடியேற்றம் முதல் முறையாக அங்கு நடைபெற்றது என்கிறது. அதாவது மதுரை ஆதினம் ஒரு பண்டைக் காலத்திய புராதன [மூல] நாகரிகம் என்கிறது. ஆகவே மதுரை ஆதினம் ஒரு மறுக்க முடியாத மிக பண்டைய மனித நாகரிகத்தின் குடியேற்றம் என்கிறது. இதன் தோற்றுவாயும் காலமும் பதியப்பட்ட எல்லா சரித்திர காலத்தையும் அதற்கு முந்திய பதியப்படாத காலத்தையும் கடந்தது என்கிறது. அதாவது  இதன் சரித்திரம் இரண்டாக உள்ளது. ஒன்று பதியப்பட்ட வரலாறு, இது கிபி 700 அளவில் திருஞானசம்பந்தருடன் தொடங்குகிறது. மற்றது அதற்கு முந்தியது.

 

நாம் முன்பு எடுத்து காட்டியவாறு, சங்க காலப் பாண்டிய அரசின் தலை நகரமாக இருந்த கொற்கையில் இருந்து 15 கி மீட்டார் தூரத்தில் அமைந்த ஆதிச்ச நல்லூரில் மேற் கொண்ட அகழ்வு ஆராச்சியில் குறைந்தது கி மு 2000 ஆண்டுகளில் இருந்து அங்கு ஒரு பண்டைய தமிழர் நாகரிகம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் பாண்டிய என்ற சொல் ஒரு பண்டைய அல்லது பழைய நாட்டை குறிப்பதாக அறிகிறோம். கலித்தொகை என்ற சங்க பாடல் பாண்டிய சேர மன்னர்கள் 10,000 ஆண்டுகள் ஆண்ட  குமரி கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பை குறிக்கிறது. அது கடலில் மூழ்க, இன்றைய தமிழகத்தில் முதலில் கொற்கையையும் பின்பு மதுரையையும் தலை நகராக கொண்டு அவர்கள் குறைந்தது கி மு 600ஆண்டுகளில் இருந்து கி பி 1700 ஆண்டு வரை ஆண்டார்கள் என இலக்கிய ஆதாரங்களை முன் வைத்து ஒரு கருத்தும் பொதுவாக உண்டு. அது மட்டும் அல்ல பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் தமிழ் சங்கம் மூன்று கால கட்டத்தில் செழிப்பாக வளர்ந்தது என அறிகிறோம். முதலாவது [தலைச்சங்கம்] பழைய மதுரையிலும் [கடல் கொண்ட தென் மதுரையிலும்] இரண்டாவது [இடைச்சங்கம்] கபாடபுரத்திலும் மூன்றாவது தற்கால மதுரையிலும் இருந்ததாக இலக்கிய குறிப்புகள் உண்டு. ஆனால் மூன்றாவது அல்லது கடைச் சங்கத்திற்கு மட்டுமே வரலாற்று குறிப்புகள் உண்டு. அதாவது, இதில் முதல் இரண்டும் கடலால் மூழ்கடிக்கப்பட்டது என நம்பப்படும் குமரி கண்டத்தில் இருந்ததாக இலக்கிய குறிப்புகள் மட்டுமே உண்டு. மேலும் இன்னும் ஒரு குறிப்பு சிந்து சம வெளி நாகரிகம் அழிவிற்கு உட்பட்ட போது, அங்கு இருந்த தமிழர் / திராவிடர் அதன் பின் அங்கிருந்து புலம் பெயர்ந்து தென் இந்தியா வந்து குடியேறியதாக சொல்கிறது. அதுமட்டும் அல்ல, இன்னும் ஒரு சாரார், சுமேரியாவில் இருந்து சிந்து சமவெளிக்கு இடம் பெயர்ந்த சுமேரிய தமிழரே இவர்கள் என்கிறார்கள். எப்படியாயினும் அவர்கள் அங்கு மதுரையில், ஆதி காலத்திலேயே 3000 / 4000 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறினவர்கள் என்பது மட்டும் உண்மை. மேலும் மகாவம்ச என்ற பாளி மொழி  தொடர் கதை கி மு 543 அளவில் இலங்கை தீவின் - வட இந்தியாவில் இருந்து இடம் பெயர்ந்த - ஆரிய அரசனான விஜயன் தென்மதுரை பாண்டிய மன்னனின் மகளை கல்யாணம் செய்தான் எனவும், அதன் பின் ஒவ்வொரு வருடமும் பாண்டிய மன்னனுக்கு உயர்தரமான பரிசுகள் அனுப்பினான் எனவும் குறிக்கிறது. அது மட்டும் அல்ல, கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகஸ்தெனஸ் (Greek traveler Megasthenes / கிமு 350 - கிமு 290) பாண்டிய பேரரசை குறிப்பிட்டுள்ளார்.

 

பண்டைய மதுரை நகரம் எப்படி அன்று செல்வச் செழிப்புடனும்  பெருமையுடனும் காணப்பட்டது என்பதை அறிய, புகழ் பாடும் - 2700-2000  ஆண்டுகள் பழமை வாய்ந்த - சங்க பாடல்கள் சிலவற்றை கீழே பார்ப்போம்:

 

"வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்;"


[புறநானுறு 32]

 

வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியு முடைய விறலியர்விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான் என்கிறார்.

 

"தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண் குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலை பெற்ற தாங்குஅரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று" 


[சிறுபாணாற்றுப்படை:62-67]

 

அலை கடலை எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்கு அரசனாகிய பாண்டியன், தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும் பாதுகாப்பவன். பாண்டியர்கள் மரபில் வந்தவன். பகைவரை வென்று அவர் நாட்டைத் தன தாக்கி முத்து மாலை சூட்டப் பெற்ற வெண் கொற்றக் குடையும், கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும் அணிந்தவன். விரைந்து செல்லும் தேர்ப் படையினை உடையவன். அப்பாண்டிய மன்னனின், தமிழ் மொழி நிலை பெற்ற பெருமையினையும், மகிழ்ச்சியான தெருக்களையும் உடைய மதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும், அதாஅன்று – அது மட்டும் இல்லை என்கிறார்.

 

"மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது."


[மதுரைக் காஞ்சி / Mathuraikkanci ]

 

சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றி விடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவது மில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.

 

நாம் இலங்கையின் பண்டைய பாளி மொழி இதிகாகசமான மகாவம்சமும் மதுரையின் புகழ் பேசுவதை காண்கிறோம். உதாரணமாக, மகாவம்சம்  / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA]  46 - 50 இல்:

 

அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது.

 

இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையென கருதப்படும் - ஆனால் சிங்களம் என்ற ஒரு மொழியே உலகில் எங்கும் இல்லாத அந்தக் காலத்தில் - விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரசியை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். அதே நேரத்தில் நாம் இன்னும் ஒன்றையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது தென் இந்தியா தமிழருக்கும், இலங்கை மக்களுக்கும் விஜயன் காலத்திலும், அதற்கு முதலும் நேரடி தொடர்பு நன்றாக இருந்து உள்ளது என்பதும், மற்றும் வட இந்தியாவுடன் பெரிதாக நேரடி தொடர்பு இல்லை என்பதும் ஆகும். அப்படி இருந்து இருந்தால், கட்டாயம் விஜயன் தனது நாட்டில் இருந்து தான் மணம் முடிப்பதற்கான பெண்களை எடுத்து இருப்பான்? அது மட்டும் அல்ல விஜயன் அனுப்பிய கடிதம் மற்றும் அவனின் தூதுவர்களுடன் தமிழ் மதுரை அரசன் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருந்தது தமிழருக்கும் இலங்கைக்கும், விஜயனுக்கு முன்பே உள்ள தொடர்பை எடுத்து காட்டுகிறது. 

 

"பல பெண்களைத் திரட்டிய பின்னர்  .... பதினெண்குடி மக்களின் ஆயிரம் குடும்பங்களும் செல்வதற்கு ஏற்பாடாயிற்று. விஜயனுக்கு ஒரு செய்தியும் மதுரை மன்னன் அனுப்பினான்."

 

ஆகவே தமிழ் மதுரை மன்னனுக்கும் விஜயனுக்கு இடையில் மொழி பிரச்சனை இருக்கவில்லை. மற்றது விஜயனும் அவனது எழுநூறு ஆரிய நண்பர்களின் தொகையை விட , இலங்கைக்கு அனுப்பி வைக்கப் பட்ட  மதுரை தமிழ் குடிமக்களின் தொகை பல மடங்கு பெரிது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது , விஜயனுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளின் பின், உருவாகிய சிங்கள இனம் இவர்களின் கூட்டில் இருந்து தான் [மற்றும் இலங்கையில் இருந்த நாகர்களும் மற்ற குடிகளும் கலந்து]  உண்டாக்கியது என்பதாகும் !! 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி : 11 தொடரும்

449517331_10225468755648577_7521218875451774623_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=gEDjjb4yOdMQ7kNvgHoRJS5&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAdgEEawsqGxa0FbjsHRLulxrESSxpcDVzHnVF56nsEDg&oe=6688D6B1 449697343_10225468755808581_529514038495541180_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Y2NuFA_LVVwQ7kNvgEmEw4J&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAOXo_7v5P4YBXel3U2iG6xcYZ83bnjiwh24gWV2pxcyw&oe=6688C0D6 449686255_10225468756488598_3799264982952862748_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MM6d1GkA0PkQ7kNvgHMGtOb&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCp25QTGFHwSg2hIKMfbyaWFeZtK0z9NxHOAwM4aaX35A&oe=6688D479 

 

449689140_10225468756688603_935725248617396114_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=RNttRLbRhiQQ7kNvgGfycQW&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDGZEGeI7Lhn6-9mQc1MpGI9aYo7Ac5EQpMCClzVILUsw&oe=6688B077

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 11

 

 

இந்தியாவினதோ அல்லது தமிழ் நாட்டினதோ தொல் பொருளியல் துறையினர் ஒரு முழுமையான முறையான எந்த ஆய்வும் பூம்புகார் பற்றி இது வரை செய்யவில்லை. ஒரு மிக சிறிய ஆய்வே இதுவரை எவராலும் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் [Graham Hancock] தற்போதய பூம்புகாரின் கிழக்கே கடலுக் கடியில் செய்த ஆய்வு, கரையில் இருந்து 5 கில்லோ மீற்றர் தூரத்தில், 23 மீற்றர் ஆழத்தில் குதிரை லாட  வடிவத்தில் அமைந்த ஒரு கட்டுமானமும் அதன் பக்கத்தில் அமைந்த இன்னும் ஒரு கட்டுமானத்துடன் மட்டுமே நின்று விட்டது. ஆனால் அதே பகுதியில் 100 மீற்றர் ஆழத்திற்கு மேல் 20 இற்கு மேற்பட்ட பெரிய கட்டுமானம் அங்கு இருப்பதாக அறிந்தது பரபரப்பூட்டுகிறதாக உள்ளது. அவை ஒரு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதே தவிர சுழியோடியால் இன்னும் ஆய்வு  செய்யப்படவில்லை. அவை ஒரு அழிந்த நாகரிகத்தின் பகுதியா?என்பதை  கூடுதலான, முழுமையான ஆய்வு மூலம் நாம் அறியலாம். அது மட்டும் அல்ல குமரி கண்டம் என்று ஒன்று உண்மையில் இருந்ததா அல்லது அது ஒரு கட்டு கதையா என்பதற்கும் இது விடை கொடுக்கும். எனவே, இன்றைய நிலையில், குமரிக் கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. 

கன்னியகுமரி பகுதியில் கடலுக்கடியில்  ஒலிச்சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing]  நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக ஒரு ஆராச்சி உரிமை கோருகிறது. ஆகவே நாம் மீண்டும் இந்த வேலை திட்டத்தை தொடங்க வேண்டும். அதன் மூலம் பல சாட்சிகளை முன் நிறுத்தி உண்மையை உலகத்திற்கு எடுத்து கூறலாம். குமரி கண்டம் உண்மையா பொய்யா என்பதை. நிரூபிக்க அல்லது சான்று பகிர, பண்டைய பேச்சு, கவிதை தவிர எம்மிடம் உருப்படியான வேறு அறிவியல் சாட்சிகள் இன்னும் இல்லை. எவ்வாறாயினும் குமரி கண்டத்தை  நம்புபவர்கள் சுட்டி காட்டும் காரணங்களை கீழே ஒரு பட்டியலாகத் தருகிறேன்.

1) மடகாஸ்கர் தீவிலும் [Madagascar Islands], இந்தியாவிலும் வாழ்கிற விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இடையில் ஒரு பெரும் ஒத்த தன்மை [great similarity] காணப்பட்டது. அது மட்டும் அல்ல, அந்த ஒற்றுமைகள், மடகாஸ்கர் தீவிற்கு அருகில் இருக்கும் ஆப்ரிக்காவுடன் ஒத்து போகாமல், 2,500 மைல் தூரத்தில் இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போனது.

2) அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் மற்றும் ஆப்ரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல். [The language of aboriginal Australians & aboriginal Africans have some similarity / Connection with Tamil] இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம். உதாரணமாக அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள். இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.

4) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.

5) பூம்புகார் என்று பெயர் பெற்ற, மாபெரும் நகரமான காவேரிப்பூம்பட்டினம் கடலினுள் மூழ்கிய வரலாறு.

6] அவ்வாறே தனுஷ்கோடியின் [Dhanushkodi] ஒரு பகுதி கடலினுள் மூழ்கிய வரலாறு. இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. 

தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை, வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது.

7) தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ [Sheep grazing rock] என்று பெயரிட்டு அழைக்கின்றனர். காரணம் என்னவெனில் ஒரு காலம் அந்த பாறை இருந்த இடம் தரையாக இருந்தது என்றும், அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்தனர் என்றும் கூறுகின்றனர்.

8] மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களும்.

9] ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் (Graham Hancock)கின் ஆராச்சி முடிவு.

10] கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒலிச்சமிக்ஞை [sound signal] அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக கண்டறியப் பட்டது    

இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுவோம் 

1] அறிவியல் ஆராய்ச்சிகள் குமரி கண்ட கொள்கையை ஆதரிக்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை. புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற குமரி கண்டம் / இலெமூரிய புனைக்கோள் கைவிடப்பட்டாலும், அறிவியல் முடிந்த முடிவாக தேவையான சாட்சிகளை இன்னும் முன் வைக்கவில்லை. ஆகவே முறையான ஆய்வுகள், கடல் அடி பரிசோதனைகள் பூம்புகார் கடல் பகுதியிலும் அதற்கு அண்டிய பகுதியிலும் செய்யப்பட்டு, அங்கே புதையுண்டு கிடக்கும் மனிதனால் செய்யப்பட்ட கட்டு மானங்கள், பொருட்கள் மற்றும் ஏதாவது முக்கிய சாட்சிகள், அது ஒரு மூழ்கிய நிலப்பகுதி என காட்டக் கூடியதாக அல்லது நிராகரிக்க கூடியதாக அமைந்தால், மேலும் அவைகளின் காலம் சரியாக கணக்கிடப்பட்டால் அன்றி நாம் ஒரு அறிவியல் முடிவிற்கு வரமுடியாது. அப்படியான ஒரு U வடிவ மனிதன் செய்ததாக கருதப்படும் ஒரு கட்டு மானம் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் பின் எந்தவொரு ஆய்வும் அங்கு இதுவரை செய்யப் படவில்லை. அப்படி மேலும் பல ஆய்வுகள் செய்யும் வரை, யாரும் ஒருவர் ஏதாவது ஒரு உலகத்தின் மூலையில் இருந்து இதைப் பற்றி கதைத்துக் கொண்டே இருப்பர். 

2] இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரிகங்கள்  சுமேரியாவிலோ அல்லது  சிந்து சமவெளியிலோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரிகங்கள் இருந்தனவா? அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் ? போன்றவற்றிற்கு விடை காண, இன்னும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் தொடங்கவில்லை. இது ஒரு குறைபாடே? 

3] தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டத்தைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா? உண்மை வெளிப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்? 

திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த, ரிமோட் சென்சிங் துறையில் உள்ள இரு பேராசியர்கள் [Professor of Eminence Somasundaram Ramasamy and colleague J. Saravanavel, at the Department of Remote Sensing at Bharathidasan University in Tiruchirappalli], Current Science 25 June 2019 அன்று ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையை, GEBCO [The General Bathymetric Chart of the Oceans] என்ற இணையதளத்தில் கடல் கீழ் தரை மட்ட செயற்கைகோள் படங்கள் மற்றும் Geographical software ஐ பயன்படுத்தி, கடலுக் கடியில் நதிகள் ஓடிய தடங்களை பற்றி ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வு அறிக்கையின் படி வைகை நதி பற்றிய குறிப்பு கிடைத்தது. தற்போதுள்ள முகத்துவரங்களிலிருந்து கிழக்கு பக்கமாக பாய்ந்த வைகை நதி, ராமேஸ்வரத்திற்கு வடக்காக சென்று பிறகு தெற்கு நோக்கி திரும்பியுள்ளது. அதன்பின் அங்கிருந்து 400 கிமீ தூரம் ஓடி இருக்கிறது. அதாவது இலங்கையின் தென் பக்கம் இருக்கும் காலி வரை நீட்சி காணப்படுவதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றது. அந்த இடம் தான் இப்ப மன்னார் வளைகுடாவாக இருக்குது. கடலுக் கடியில் தரை மட்டத்தை காட்டும் செயற்கைகோள் படங்களில் தாமிரபரணி நதி ஓடிய பள்ளங்களும் தெளிவாக இருக்கு. இந்த இடம் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாக கடல் சீற்றத்தில் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் லெமுரியா கண்டம் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும்  என்றும் இதன் மூலம் தெரிகிறது . கடலின் அடிப் பகுதி தரையை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்த போது, அதில் ராமேஸ்வரத்திற்கு கிழக்கே இருந்து இலங்கையின் காலிவரை ஒரு பெரிய பள்ளத்தாக்கு தெளிவாக தெரிகிறது. தற்போதைய மன்னார் வளைகுடாவில் இருக்கும் கடல்பகுதியில் தான்  இந்தப் பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கில் வைகைநதி ஓடிய தடம் தெளிவாக காணப்படுகிறது. அது போல தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்திலிருந்தும் ஒரு நீட்சி காணப்படுகிறது . அந்த பள்ளத்தாக்கு ஒரு இடத்தில் கடலுக்கு அடியில் வைகை நதியோடு இணைகிற காட்சி தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது. இந்த நதிகளின் பாதைக்கு மேற்கே மற்றுமொரு நதிப்பள்ளத்தாக்கு தெரிகிறது. இதுவே இலக்கியங்களில் கூறப்படும் பஃறுளி ஆறாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது? இந்த நிலப்பரப்பு மேற்கில் மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியாவரை பறந்து விரிந்து இருந்திருக்கிறதென சொல்லப்பட்டாலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுமார் 3 லட்சம் சதுரகிலோமீட்டர் அளவுக்குத்தான் தெளிவாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்படுகிறது [References; Ramasamy, S. M. & Saravanavel, J. Drowned valleys of Vaigai and Tamiraparani rivers in the Gulf of Mannar region, India. Current. Science. (2019) Article].

லெமுரியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் கோட்பாடு. கண்டப்பெயர்ச்சி [continental drift] அதை எதிர்த்தது மட்டும் அல்ல, குளோமர் சேலஞ்சர் [Glomar Challenger / குளோமர் சேலஞ்சர் ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் கடல்சார் மற்றும் கடல் புவியியல் ஆய்வுகளுக்கான அறிவியல் துளையிடும் கப்பல் ஆகும்] ஆய்வு அறிவியல் ரீதியாக 'கண்டம் சறுக்கல்லை' உறுதிப்படுத்தியது. மற்றொரு அறிவியல் ஆய்வின்படி, தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு  தரைப்பாலம் இருந்துள்ளது உள்ளது, ஆனால் குமரி கண்டம் என கருதப்படும் பெரிய கண்டம் அல்ல.

உதாரணமாக தமிழ்ச் சங்கங்கள் என்று ஒன்று 10,000 ஆண்டுகளாக இருந்திருந்தால் அதற்கு முன்னரும் ஓரளவு முன்னேறிய நாகரிகம் அங்கு  இருந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் அப்படி இருந்ததாக இதுவரை விஞ்ஞான, தொல்பொருள் தரவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. நாயே 12,000 ஆண்டுகளுக்கு முன்புதான் வீட்டு மிருகமாக வளர்க்கப்பட்டது (domesticated (hunter / gatherer society) / வேட்டையாடி சேகரிக்கும் சமூகம்) என அறிகிறோம். அதற்கு முன் எப்படி ஒரு மேம்பட்ட நாகரிகம்  இருந்தது, அதுவும் அறிவியலால் கண்டுபிடிக்கப் படாமல்?

சங்க காலக் கவிதைகளில் மூழ்கிய "கண்டத்தை" சுட்டிக்காட்டும் ஒரு துப்பு கூட அங்கு நம்மால் காண முடியாது - மாறாக அவை மூழ்கிய பகுதிகள் மற்றும் சுனாமி பற்றி மட்டுமே பேசுகின்றன. இதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டனர் என நம்புகிறேன் 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் ஒருவேளை மாவட்டங்களின் அளவைப் போன்றது; இது கடலுக்கு அடியில், குமரியில் மனிதர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் பற்றி பேசுகிறது

நிலங்கள் கடல்களால் சூழப்பட்டதாகவும், அதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினார் எனவும், அவர்கள் மாற்று நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எனவும் கூறுகிறது. அவ்வளவு தான். [இந்த சங்க இலக்கியம் (கிமு 600க்கு முற்பட்டது)]

பாண்டியர் செப்புத் தகடுகளிலிருந்து ~700 CE: "உயரமான கடல் அலையைத் தடுக்க பாண்டியன் ஈட்டியை எறிந்தான்" என்றும் ~ 1000 CE: "பாண்டிய மன்னன் வானத்தைப் போல உயரமான அலைகளை நிறுத்தினான்" என்றும் மிகைப்படுத்திய தகவல் அறிகிறோம், 

குமரிக்குக் கீழே அது ஒரு ஒரு கண்டம் என பண்டைய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் எங்கும் காணவில்லை. மாறாக 2 ஆறுகள் கொண்ட சில நிலங்கள் (மாவட்டங்கள்) மற்றும் கடல்களால் சூழப்பட்ட ஒரு கரையோரம் என்று மட்டும் அங்கு குறிப்பிடுகிறார்கள்.

எனவே தவறான குமரிக் கண்டம் என்ற விளக்கம் எங்கிருந்து தொடங்கியது?

ஐரோப்பிய விலங்கியல் வல்லுநர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா இடையே ஒரு நீரில் மூழ்கிய நில இணைப்பு இருப்பதாக கருதினார். ஏனென்றால் மடகாஸ்கர் மற்றும் தென் இந்தியாவில் ஒரே வகை லெமூர் என்னும் புதை படிவம் இருப்பதை கண்டறிந்தார். அதை ஒரு கோட்பாடாக பதிவு செய்தார். அந்த நிலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார். அதை தமிழ் ஆர்வலர் சிலர், சங்க இலக்கியத்தில் கூறிய குமரிக் கோடுவை [குமரிக் கோடு என்பதற்கு குமரிமலை என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் முதல் போ.வே.சோமசுந்தரனார் வரை (உ. வே.சா .உட்பட ) அனைவரும் கூறுகின்றனர். ஆனால் தென் தமிழகத்தைப் பொறுத்த வரை '-கோடு 'என்னும் பின்னொட்டு இடம் பெறும் ஊர்களெல்லாம் நீர்க்கரைகளில் அமைந்துள்ளன. உதாரணமாக: அதங்கோடு [தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும்], புதாங்கோடு [சேர நாட்டில்], திருவிதாங்கோடு [கன்னியாகுமரி மாவட்டம்], கோழிக்கோடு [கேரள மாநிலத்தில்], அழிக்கோடு [கேரளம்], காரிக்கோடு [கேரளா, இடுக்கி மாவட்டம் தொடுபுழா] இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.] குமரிக் கண்டம் என, லெமுரியாவை உரிமை கொண்டாடினர்.  

என்றாலும் லெமூரியா கருதுகோள், கண்டப்பெயர்ச்சி  கோட்பாடு அறிமுகம் ஆகிய பின் வழக்கற்றுப் போனது. 

இந்தியச் சூழலில்,  பனி உருகுவதால் ஏற்படும் ஒப்பீட்டளவில் ஆழமற்ற நீரின் பகுதியின் கீழ் மூழ்கியிருக்கும் ஒரு பகுதியின் படங்கள் சில முக்கிய கண்டுபிடிப்புககளுடன் - மரபணு, தொல்பொருள் மற்றும் கடல் படுக்கை ஆய்வுகள் - இணைக்கப்பட்டுள்ளன. அவை சுய விளக்கம் தரும் என்று நம்புகிறேன்.

எனவே இன்று லெமுரியா அல்லது குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு கற்பனையான நிலப்பரப்பு / கண்டமாகும் என ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதே உண்மையாகும்.  

பண்டைய நாகரிகங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், மறைநூல் வல்லுநர்கள் [அமானுஷ்ய வல்லுநர்கள்] மற்றும் அனைத்து வகையான எழுத்தாளர்களும் [believers in ancient civilizations, occultists and writers of all sorts] இதைப் பற்றி எழுதத் தொடங்கியபோது இந்த கற்பனையான நிலப்பரப்பு கல்வி வட்டங்களுக்கு வெளியே அறியப்பட்டு பிரபலமானது. அவ்வளவுதான்.   

இருப்பினும், 1950 களின் முற்பகுதியில், கண்டப்பெயர்ச்சி [கான்டினென்டல் டிரிஃப்ட் / continental drift] கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இன்று இது புராணங்களாக மாறிவிட்டன.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி : 12 தொடரும் 

பி கு : படம் 03 :: மடகாஸ்கர் மூதாட்டி
            படம் 04 : ஆஸ்திரேலிய பழங்குடி சிறுமி 
            படம் 05 : கிராமப்புற தமிழ் சிறுமி

450400738_10225521686371812_263858891598518776_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ZU2X7gYg9Z8Q7kNvgHa8gWf&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCxYeCLqQ8ZlHeOlpqt6v2Lb2JB0HSMjTy9R5YUzqXKxw&oe=6691EF59 450539953_10225521686131806_9088974892598495930_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=LadmzLoXA4gQ7kNvgH3_CEA&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBSbb99oPyGknjpqDzl30T3LqaC24xPIuC4r7d439m1yA&oe=6691ED31 450390038_10225521686011803_6490471888694944960_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=NzSo0_jB-xEQ7kNvgFnbrft&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYA6l2NEijaPtu7G9saph1wQ5SPMhH_0O9jv2Hv7EtWuMw&oe=6691FFEA

 

450387524_10225521686691820_8474116154830231742_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=u6bvFtV3W-8Q7kNvgFRXNAd&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBhcmY2cINuFRUjDvgRFIfibhCgJW6-IbLe4ric6yfjWQ&oe=6691ECA2 450485170_10225521686931826_7047293531465973519_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=tQ77voqirygQ7kNvgFPmoLm&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAIYokoun_quEYdRHDFkEvmUgKwRtGOXOk9Eqwp1oIZSQ&oe=66922226 May be a graphic of map and text


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 12


[2] சுமேரியா


தமிழ் இனத்தின் தோற்றத்தின் மூல அல்லது ஆதி இடமாக நாலு யோசனைகள் வெவ்வேறு அறிஞர்களால், வெவ்வேறு கால கட்டத்தில் முன்மொழிந்ததின் அடிப்படையில், முதல் ஜோசனையான, குமரி கண்டம் பற்றிய சில கருத்துக்களை பகுதி 11 வரை அலசிய பின், பகுதி 12 இல் இருந்து இரண்டாவது ஜோசனையான சுமேரியாவை [சுமேரியா / மெசொப்பொத்தேமியா / Ancient Mesopotamia, corresponding to modern-day Iraq] பற்றி இயன்ற அளவு, விரிவாக ஆய்வு செய்ய உள்ளோம்.  


பேராசிரியர் மீவ் லீக்கி [Professor meave leakey / இவர் தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கியின் இரண்டாவது மகனை திருமணம் செய்தவர்] தலைமையிலான குழு, கிழக்கு ஆஃப்ரிக்காவில் கண்ட முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்களை (fossil) தொடர்ந்து, உலகில் இரண்டு மிகப் பெரிய மனித இடப் பெயர்வு நடந்து இருக்கலாம் என தெரிய வந்தது. இன்றைய மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படும் ஹோமோ எரெக்டஸ் [Homo erectus /  இதன் கருத்து நிமிர்ந்து நிற்கும் அல்லது நன்கு நிமிர்ந்து நடக்கும் மனிதன்] இன மக்களின் பெரிய மனித புலப்பெயர்வு 1.5 மில்லியன் வருடங்களுக்கு முன், முதல் முதல் ஆரம்பமானது. இந்த இனம் ஆஃப்ரிக்காவில் தோன்றி ஜார்ஜியா [Georgia / இது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் நாடு] இந்தியா, இலங்கை, சீனா, ஜாவா [Java / இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவு] வரை பரவியது. இது [ஹோமோ எரெக்டஸ்] கல்லால் செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்ததுடன், நெருப்பை தமது கட்டுப் பாட்டில் வைக்கக் கூடிய ஆற்றல் உடைய முதல் மனித இனமாகவும் இருந்துள்ளது. இதுவே இன்றைய நவீன மனிதனின் நேரடியான மூதாதையர் ஆகும். இது எம்மைப் போல உடல் அமைப்பை கொண்டுள்ளது ஆனால் சின்ன கையுடனும் நீண்ட காலுடனும் ஆகும். இது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 200,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்துள்ளது. இதன் பிரதான உணவு இறைச்சி ஆகும். இது ஒரு வேடுவர் சமூகமாக இருந்துள்ளது. அதன் பின்பு, நீண்ட இடை வெளியின் பிறகு, ஹோமோசப்பியன்ஸ் [Homo sapiens] என்று சொல்லப் படுகின்ற நவீன மனிதர்கள் ஆஃப்ரிக்கா முழுவதும் 150,000 வருடங்களுக்கு முன் குடியிருந்து, 70,000 வருட அளவில் ஆஃப்ரிக்கா விட்டு வெளியேறியதாக தெரிகிறது.

                       
அதன் பின்பு, ஒரு நீண்ட இடை வெளியின் பின், கோமோ சப்பியன்ஸுக்கு உரிய ஆதிமுன்னோர் சார்ந்த திராவிடர்கள் [proto Dravidians belonging to Homo sapiens] ஆஃப்ரிக்காவில் இருந்து உணவு, புகலிடம் தேடி சுற்றித்திரிந்து மத்தியத் தரைக்கடல் [Mediterranean / மெடிடேரியன் கடல்] பகுதியை அடைந்தார்கள். கூட்டமாக வாழ்ந்து. மிருகங்களை வேட்டையாடியும், சைகை மூலம் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டும், மற்றும் நெருப்பை கண்டு பிடித்து இருந்தாலும் அவர்களை நாகரிகம் அடைந்தவர்கள் என அழைக்க முடியாது. இவர்கள் மினாஸ் பக்கத்தில் இருந்த பண்டைய கோஸ் தீவை [The old island of “Cos” near MINAS] தமது வாழ்விடமாக அமைத்தார்கள் என கிமு 5 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க  வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [கி.மு484-425 / Egyptian historian Hiridotus] சான்று கூறுகிறார் [The old island of “Cos” near MINAS was abode of these proto Dravidians as attested by the old Egyptian historian Hiridotus.]. பின் அது எரிமலை வெடிப்பால் அழிந்து போக, அங்கு வாழ்ந்தவர்கள் சிதறி, கிமு  4000 ஆண்டு அளவில், சுமேர் [southern Mesopotamia area called sumer] என அழைக்கப்படும் தெற்கு மெசொப்பொத்தேமியா பகுதிக்குள் நுழைந்தார்கள். இவர்கள் திராவிடர்கள் தான் என்பது பின்வருவன வற்றில் இருந்து நம்பப்படுகிறது. 

 

தென் இந்தியாவில் / இலங்கையில்  பேசப்படும் தமிழைப் போன்ற திராவிட மொழியுடன் சுமேரியன் மொழி ஒரு சேய்மை தொடர்பு [remote relationship] கொண்டுள்ளது. சுமேரியர்கள் முதலாவது சிறப்பு மிக்க பாரிய கோயிலையும் நகரத்தையும் மேலும் எழுத்தையும் கண்டு பிடித்தவர்கள். அந்த நகரத்தை 'ஊர்' என்றே அழைத்தனர் என்பது கவனிக்கத்தக்கது. ஆலய வழிபாடு, குன்றில் 'சந்திரன் தெய்வம்' வழிபாடு போன்றவை சுமேரியனுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

 

சுமேரியன் தங்களை கறுத்த தலையர் ["Sag-giga" meaning the “black-headed"] என அழைக்கின்றனர். கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் இரண்டு விதமான எதியோபியனை குறிப்பிடுகிறார். ஆஃப்ரிக்காவில் வாழும் மேற்கு எதியோபியனும் இந்தியாவில் வசிக்கும் கிழக்கு எதியோபியனும் கறுத்த நிறத்தவர் எனவும், ஆக ஒருவர் சுருட்டை மயிரையும் மற்றவர நேரான மயிரையும் கொண்டவர் என்கிறார் [Herodotus wrote in his celebrated History that both the Western Ethiopians, who lived in Africa, and the Eastern Ethiopians who dwelt in India, were black in complexion, but that the Africans had curly hair, while the Indians were straight-haired.]. மேலும் "The Ancient History of the Near East, pp. 173–174, London, 1916." இல் சுமேரியனை கறுத்த தலையர் அல்லது கறுத்த முகம் உடையவர் என்கிறது. நினைவுச் சின்னங்கள் தாடி இல்லாமலும் மொட்டை தலையாகவும் உள்ளது. இது இவர்களை செமிடிக் பபிலோனியர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது [செமிடிக் பாபிலோனியர்கள், தாடி மற்றும் நீண்ட கூந்தலுடன் காட்டப் படுகிறார்கள் / Semitic Babylonians, who are shown with beards and long hair.]. பபிலோனியாரின் இதிகாசத்தில் இருந்தும், பாரம்பரியத்தில் இருந்தும், நாம் அறிவது அவர்களுடைய [சுமேரியர்களின்] பண்பாடு தெற்கில் இருந்து வந்தது என்று. ஆகவே சேர் ஹென்ற ரோலின்சன் [Sir Henry Rawlinson] என்பவர் சுமேரியர் ஆஃப்ரிக்கா எதியோபியன் என்று, இதில் இருந்தும் வேறு சான்றுகளில் இருந்தும், முடிவுக்கு வருகிறார். ஆனால் இந்த கொள்கையை டாக்டர் எச்.ஆர். ஹால் [Dr Henry Reginald Holland Hall, of the Dept. Of Egyptian & Assyrian Antiquities of the British Museum,] முற்றாக நிராகரிக்கிறார். இந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மெசொப்பொத்தேமியாவை நாகரிகமாக்கினார்கள் என வாதிடுகிறார்? சுமேரியர்களின் 'இன' மாதிரி அவர்களின் உருவச் சிலைகளில் காணக்கூடியதாக உள்ளது என்றும், அவை அவர்களை சுற்றி இருந்தவர்களிடம் இருந்து முற்றாக வேறுபடுவதாகவும் அப்படியே  மொழியிலும் என்கிறார் [“The ethnic type of the Sumerians, so strongly marked in their statues and reliefs,” says Dr. H.R. Hall, “was as different from those of the races which surrounded them as was their language from those of the Semites, Aryans, or others]. இந்தியா 'திராவிட இன' மாதிரியுடன் அவர்கள் ஒத்து போவதுடன் செமிடிக் அற்ற, ஆரியர் அற்ற இவர்களே, மேற்கை நாகரிகமாக்க, கிழக்கில் இருந்து வந்தவர்கள் என்றும், இதை நாம் எமது கண்களாலேயே எப்படி இந்தியனும் சுமேரியனும் உருவ ஒற்றுமையில் ஒன்றுபடுகிறார்கள் என காண முடியும் என்றும் கூறுகிறார்.

 

உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்றான, "ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேற்றம்" மாதிரியின் படி, ஹோமோ எரெக்டஸை [நிமிர்நிலை மாந்தர்] ஆப்ரிக்காவிற்கு வெளியே பரவிவிட்டு, பின் அது திரும்பி வந்து அல்லது ஆஃப்ரிக்காவில் மீதியிருந்த ஹோமோ எரெக்டஸ் மீண்டும் ஆஃப்ரிக்காவிலேயே ஹோமோசப்பியன்ஸ் [சாரநிலை மாந்தர்] ஆக படிவளர்ச்சியுற்று, மீண்டும் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறியது, என்பது ஒரு விந்தையாக உள்ளது. அதாவது ஹோமோசப்பியன்ஸ் எல்லாம் ஒரே இடத்தில் தோன்றியது என்று சொல்லுவது எனக்கு புரியவில்லை? ஏனென்றால் அதற்கு முதல் ஹோமோ எரெக்டஸை இந்தியா, இலங்கை உட்பட பல இடங்களுக்கு பரவி விட்டது என்று கூறிவிட்டு, பின் இது வேறு இடங்களில் உயர் படிவளர்ச்சி அடைய ஒரு சந்தர்ப்பமும் இல்லை என கூறுவது போலவும் அல்லது மீன் முழுவதும் ஒரு கடலிலோ அல்லது ஒரு குளத்திலோ படிவளர்ச்சியுற்றது என கூறுவது போலவும் உள்ளது? பூமத்திய ரேகை பகுதியில் பல இடங்கள் படிவளர்ச்சி அடையக்கூடிய சூழ் நிலையை கொண்டுள்ளன. இந்த கருத்தே முன்பு தொடக்கத்தில் நாம் சுட்டிக்காட்டிய இன்னும் ஒரு கொள்கைக்கு வழி வகுத்தது. இது பல்பிராந்திய மாதிரி [பல்பிரதேசத் தோற்றம்] ஆகும். முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா, ஆசிய, ஐரோப்பியா பிராந்திய குழுக்களில் இருந்து ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் நவீன மனிதர்களாக பரிணாமம் அடைந்ததாக கருதுகிறது [Saying Homo sapiens ["wise man"] all evolved from one place even after first migration of Homo erectus covering India, Sri Lanka etc could not be understand by me, Like there is no chance for life on other places or all fish evolved from one ocean, lake or bay? We all know that the environment has to be perfect for any evolution and there are hundreds of perfect places near the equator for hominids to live & evolve. This Idea create the multiregional model / hypothesis, which says there were parallel lines of evolution in each inhabited region of Homo erectus to become origin of modern humans (Homo sapiens sapiens). இந்த இரண்டாவது மாதிரி தான், பரிணாமம் அடைந்தது என்றால், நாம் மிக இலகுவாக டாக்டர் எச்.ஆர். ஹால் இன் மேல் கூறிய கூற்றையும் புரிந்து கொள்ள முடியும்.

 

"நவீன மனிதரின் ஆஃப்ரிக்காத் தோற்றக் கோட்பாடு" அல்லது " ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியேற்றம் கோட்பாடு", ஆஃப்ரிக்காவில் தோன்றிய நவீன மனிதர், ஒற்றைப் புலப்பெயர்வு அலையொன்றின் மூலம் ஆஃப்ரிக்காவை விட்டு வெளியேறி ஏற்கெனவே வாழ்ந்த பிற மனித இனங்களை மாற்றீடு செய்து உலகம் முழுதும் பரவினர் என்று கூறுகின்றது. முதற் பரம்பல், ஆஃப்ரிக்காவில் இருந்து இடம் பெற்றதாயினும், அவர்கள் முற்றாக அழிந்துவிட்டனர் அல்லது மீண்டும் திரும்பிச் சென்று விட்டனர் என்று இந்த கொள்கையில் கருதப்படுகிறது. இங்கு இரண்டாவது பரம்பல் மூலம், ஆசியாவின் தெற்குக் கடற் கரையூடான தெற்குப் பாதையூடாகச் சென்ற மனிதர் அவுஸ்ரேலியா [ஆஸ்திரேலியா] வரை சென்று குடியேறினர். இதிலிருந்து பிரிந்த ஒரு குழுவினர் அண்மைக் கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் குடியேறினர் என்கிறது. இந்த ஒற்றைத் தோற்றக் கோட்பாட்டுக்குப் போட்டியாக உள்ள முக்கியமான இன்னொரு கருதுகோள் தான் நாம் மேலே சுட்டிக்காடிய, நவீன மனிதரின் பல்பிரதேசத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும்.

 

படம் 01 , கொஞ்சம் விபரமாக பார்ப்போமானால், நவீன மனிதர்களின் தோற்றம் குறித்து இரண்டு போட்டிக் கருதுகோள்கள் உள்ளன: 'ஆஃப்ரிக்காவிலிருந்து வெளியே என்ற மாதிரி [கருதுகோள்]' மற்றும் 'பல பிராந்திய  மாதிரி [கருதுகோள்]'. ஹோமோ எரெக்டஸ் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு யூரேசியாவிற்கு [ஐரோப்பா மற்றும் ஆசியாவை உள்ளடக்கிய நிலப்பரப்பு / Eurasia] விரிவடைந்தது என்பதை இரு மாதிரிகளும் ஒப்புக்கொள்கி றது, ஆனால் அவை நவீன மனிதர்களின் (ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ்) தோற்றத்தை விளக்குவதில் வேறுபடுகின்றன. முதல் கருதுகோள் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டாவது இடம்பெயர்வு சுமார் 100,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்று முன்மொழிகிறது, இதில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த நவீன மனிதர்கள் தொன்மையான மனித இனத்தை முற்றாக ஈடு செய்தது. (ஹோமோ சேபியன்ஸ்; மாதிரி  A). பல்பிராந்திய மாதிரி Model D , ஒவ்வொரு பிரதேசத்திலும், முன்பு பரவிய ஹோமோ எரெக்டஸ், அந்தந்த இடங்களிலேயே தன்பாட்டில் [சுயாதீனமாக] நவீன மனிதனாக  தோற்றம் பெற்றன [பரிணாமம் / படிப்படியான மாற்றம் (GRADUAL TRANSFORMATION) அடைந்தது ] என்கிறது. பங்கிட்டுக்கொடுக்கும் பல்பிராந்திய மாதிரி Model C என்பது அந்தந்த இடங்களில், மாதிரி Model D மாதிரி பரிணாமம் அடைந்தாலும், கண்டங்களுக் கிடையில், படத்தில் காட்டியவாறு, [மக்களிடையே] மரபணு ஓட்டமும் காணப்படுகிறது. இதை டிரெல்லிஸ் கொள்கை (the trellis theory) என்கிறார்கள். ஒரு சமரச இணக்கம் கொண்ட ஆஃப்ரிக்கா வெளியே மாதிரி Model B என்பது பெரும்பாலான மனித மக்கள் தொகையின் பரிமாணத்தில் ஆஃப்ரிக்காவில் இருந்து நவீன மனிதனின்   தோற்றத்தை, மாதிரி Model D மாதிரி வலியுறுத்துவதுடன், சிறிய உள்ளூர் பங்களிப்புகளின் சாத்தியத்தையும்  அனுமதிக்கிறது.  [ Broadly speaking, there are two competing hypotheses on the origin of modern humans: the Out-of-Africa hypothesis and the multiregional hypothesis. Both agree that Homo erectus originated in Africa and expanded to Eurasia about one million years ago, but they differ in explaining the origin of modern humans (Homo sapiens sapiens). The first hypothesis proposes that a second migration out of Africa happened about 100,000 years ago, in which anatomically modern humans of African origin conquered the world by completely replacing archaic human populations (Homo sapiens; Model A). The multiregional hypothesis states that independent multiple origins (Model D) or shared multiregional evolution with continuous gene flow between continental populations (Model C) occurred in the million years since Homo erectus came out of Africa (the trellis theory). A compromised version of the Out-of-Africa hypothesis emphasizes the African origin of most human populations but allows for the possibility of minor local contributions (Model B).]

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 13 தொடரும் 


பி கு : 

படம் - [07]:
1935 இல் ஒல்டுவை பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஆய்வுப்பயணம். தொல்பொருள் ஆய்வாளர் லுயிஸ் லீக்கி [மத்தியில்], மற்றும் தொல்பொருளியல் மாணவி மேரி நிகோல் [வலது பக்கம்]. இவர்கள் பின் 1936 இல் திருமணம் செய்து கொண்டார்கள். / A 1935 expedition to Olduvai. Louis Leakey (center) and archaeology student Mary Nicol (right). They wed in 1936 


படம் - [06]: ஆரம்ப  மனிதக் குடும்பத்தின் எச்சங்களின் புதை குழிகள் நிரம்பிய முக்கியமான இடங்கள் / Major early hominin sites

படம் - [05]: ஹோமோ எரெக்டஸ் / Homo erectus 

படம் - [04]: எசுன்னா நகரத்தின் ஒரு பகுதியான காபாஜேயிலும் [கி மு 2500], லகாஷ் நகரத்திலும் [கி மு 2350] கண்டுபிடிக்கப்பட்ட சுமேரியன் உருவச் சிலைகள் / Left - 2500 BC Sumerian statue from Khafaje  / part of the city-state of Eshnunna; Right - Sumerian scribe circa 2350 BC from Lagash.

May be an image of 2 people and text May be an image of map and text May be an image of text that says 'A 1,000,000- 1,000,000-H.crectus H. crectus years ago 100,000- H. S. sapiens years ago Africa Europe Asia Oceania Nature Reviews Genetics' May be an image of 1 person No photo description available. May be an image of map and text May be an image of 2 people

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 13


மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படும் 'ஹோமோ எரெக்டஸ்' (Homo erectus), 'ஹோமோ ஹபிலிஸ்' (Homo habilis) போன்றவையில் இருந்து பரிமாணவளர்ச்சி அடைந்தே 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo sapiens / வாழும் மனித இனம்) என்ற இன்றைய மனித இனம் உருவானது. பரிணாம வளர்ச்சியில் ஒரு செல் உயிரிகளில் இருந்து பல வகையான உயிர்கள் உருவாயின என்பது டார்வின் [Charles Robert Darwin] கோட்பாடு. மாணிக்கவாசகரும் இதே போன்ற ஒரு கருத்தை பாடியிருக்கிறார் . 


"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்" 


அதில் அவரின் கருத்து அல்லது ஊகம் இன்றைய பரிணாம வளர்ச்சி கோட்பாடுடன் ஒத்து போகாவிட்டாலும், அவரின் முயற்சி பாராட்டுக்கு உரியதே.


மேலும் 0.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இப்போதைய மனித இனமான 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்' [Homo sapiens sapiens] உருவானது என்கிறது பரிணாமவிதி எனப்படும் பரிணாம கொள்கை  [evolution theory]. இங்கு 'ஹோமோ' என்றால் மனிதன், 'சேப்பியன்ஸ்' என்றால் அறிவாளி. ஆகவே 'அறிவாளி மனிதன்' என்று கூறலாம். உண்மையில் 'ஹோமோ சேப்பியன்ஸ்' மற்றும் 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்' இற்கு இடையில் பெரிதாக ஒரு வேறுபாடும் இல்லை, மானுடவியல் மற்றும் பழங்காலவியலில், இன்றைய நவீன மனிதர்களில் இருந்து மிகவும் தொன்மையான மனித உறுப்பினர்களை வேறுபடுத்த இப்படியான சொற்பிரயோகம் செய்யப்படுகிறது. [Homo sapiens sapiens, in anthropology and palaeontology, the subspecies of Homo sapiens that consists of the only living members of genus Homo, modern human beings. Traditionally, this subspecies designation was used by palaeontologists and anthropologists to separate modern human beings from more-archaic members of Homo sapiens]. அதற்கு முன், இடையிடையே பல மனித இனப் பிரிவுகள் கால மாற்றத்திற்கு உட்பட்டு அழிந்துவிட்டன, உதாரணமாக ‘நியான்டர்தால்’[Neanderthal] மற்றும் ‘ஆஸ்த்ராலோபித்திக்கஸ் ’ [Australopithecus] மனிதப்பிரிவுகள் ஆகும். 

பல நூலாசிரியர்கள் சுமேரியனுக்கும் திராவிடனுக்கும் இடையே உள்ள இனம், மொழி, பண்பாட்டு ஒற்றுமையை [உறவை] அடிப்படையாக கொண்டு இரு இனமும் ஒரே இன குழுவை [குடும்பத்தை] சார்ந்ததாக முடிவு செய்துள்ளார்கள். அதாவது ஈலம் [Elam], சுமேரியா மக்கள் திராவிட [தமிழ்] இனத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் முடிவு. 

டாக்டர் எச்.ஆர். ஹால் (Dr. H.R. Hall) என்ற வரலாற்று அறிஞர், மெசொப்பொத்தேமியாவிற்கு திராவிடர்கள் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தார்கள் என்கிறார். அதே நேரம் வேறு அறிஞர்கள், திராவிடர்கள் தமது முன்னைய குடியிருப்பான மத்தியத்தரைக் கடல் பகுதியில் இருந்து இந்தியா புலம் பெயர்ந்தார்கள் என்கிறார்கள். KP பத்மநாபா மேனன் திராவிடர் - சுமேரியர்களின் நெருங்கிய தொடர்புகளைப் பற்றி எழுதியுள்ளார். இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர், நீதிபதி, வரலாற்றாசிரியரும் ஆவார். பல கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் [Orientalists] சுமேரியர்கள் தொடக்க கால திராவிடர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். அங்கு இருந்து திராவிடர்கள் இந்தியாவின் வட மேற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள். எனினும், அங்கு அவர்கள் பல காலம் வாழ முடியவில்லை. அவர்களை அங்கு ஏற்பட்ட பலதரப்பட்ட சூழ்நிலை மாற்றங்கள், அவர்களை தெற்கு நோக்கி புலம்பெயர்ச் செய்து, நிரந்தரமாக, தென்இந்தியாவில் தங்க வைத்து விட்டது. இதை, இந்த கருது கோளை, நம்பகமான அறிஞர்கள் வலிமையாக ஆதரித்து வாதாடுகிறார்கள். 

சுமேரியர்களின் நூலின் பொருள் கண்டு பிடிக்கப்பட்டு அதன் உட் பொருளை சரிவர வெளிப்படுத்தி உள்ளார்கள். சுமேரியனுக்கும் தமிழனுக்கும் இடையே உள்ள மொழி, பண்பாட்டு, இனவொற்றுமைகள் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட கால இடை வெளி என்பது இங்கு  சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. பன்மொழிப்  புலவரும், பேராசிரியருமான இலங்கையை சேர்ந்த மறைந்த ஆறுமுகம் சதாசிவம், மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு போன்றோர் இதில் பல ஆய்வுகள் அல்லது முயற்சிகள் செய்துள்ளார்கள். பேராசிரியர் ஆ. சதாசிவம் மற்றும் முனைவர் கி.லோகநாதன் போன்றோர்கள், சுமேரிய மொழியையும், திராவிட [தமிழ்] மொழியையும், ஒப்பியல் முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிடமொழி [தமிழ் மொழி] என நிறுவினார்கள். இந்திய வரலாற்றாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான, கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாத்திரி அவர்கள், கோயில் வழிபாட்டில் உள்ள ஒத்த தன்மையை சுட்டிக் காட்டியுள்ளார். திராவிடர்களின் மூதாதையர்களை மத்தியத்தரைக்கடல் பகுதியுடன் இணைக்கும் இந்த கருது கோளை, நம்பகமான அறிஞர்கள் இன்னும் ஆதரித்து வாதாடுகிறார்கள்.

பேராசிரியர் ஆ.சதாசிவம் சமஸ்கிருதம், மலையாளம், பாளி, தெலுங்கு, கன்னடம்,ஜேர்மன் முதலிய மொழிகளிற் புலமை சான்றவராக விளங்கினார். ஞானப்பிரகாச அடிகளாரின் பின், பன் மொழிப் புலமையில் தலையாயவராக விளங்கியவர் இவரே. சுமேரிய மொழியையும், திராவிட மொழியையும், ஒப்பியல்முறையில் ஆராய்ந்து சுமேரிய மொழியையும் திராவிட மொழி என நிறுவினார். மேலும், 1964 முதல் 1987 வரை ஈழத் தமிழறிஞர் மறைந்த பேராசிரியர் ஆ. சதாசிவம் அவர்களால் எழுதப்பட்ட பழங்கால சுமேரியருக்கும் தமிழுக்கும் உள்ள திராவிட தொடர்புகள் குறித்த நான்கு முன்னோடி ஆய்வுக் கட்டுரைகள் இப்போது நூலாகக் கிடைக்கின்றன. 1965 ஆம் ஆண்டில், புகழ்பெற்ற மொழியியலாளர் பேராசிரியர் டி. பர்ரோ [linguist Prof T. Burrow], திராவிடத்தை சுமேரியனுடன் தொடர்புபடுத்தும் முயற்சியில் சதாசிவம் புதிய தளத்தை ஏற்படுத்தி உள்ளாரென கூறினார், மேலும் அதை ஏற்றுக் கொண்டால், அந்தக் கோட்பாடு திராவிடம் மற்றும் சுமேரியர்களின் வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கு [prehistory of both Dravidian and Sumerian] கணிசமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினார். “Proto Sumero Dravidian: The Common Origin of Sumerian and Dravidian Languages” என்ற புத்தகம் 2017 ஆண்டு தமிழ் தகவல் வரலாறு மற்றும் மரபுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. 

ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்து இப்பொழுது உலகப் பண்பாட்டின் சிறப்பாக விளங்கும் பல கலைகளை வளர்த்து உதவினர். பிறகு இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று, பாபிலோனிய நாகரிகத்தை வளர்த்தனர். சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்து விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் அது அழிந்து விடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்று முனைவர் கி.லோகநாதன் கூறுகிறார். மேலும், சுமேரு மொழி பழந் தமிழே! என்று, சுமேருத் தமிழைப் பற்றி எளிமையான பல கட்டுரைகளை படைத்தும் உள்ளார். அவற்றில் ஒன்றே ஏண் உடு அன்னா [En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய The Exalatations of In-Anna. இதை  சுமேருத் தமிழில் "ஈனன்னை சீர்பியம்"ஆக மிகவும் எளிமையாகத் தந்துள்ளார். ஏண் உடு அண்ணா எனும் இந்த அம்மையார்தான் கி.மு மூன்றாம் மில்லென்னியத் தின் தலை சிறந்த மெய்ஞானியாக போற்றப் படுகிறார். இவர் தான் சிறைப்பட்டு கிடந்த போது ஈனன்னையின் அருளை வேண்டிப் பாடிய பாடலே இது. அதன் மூலம் சுமேரிய மொழி, தொல் தமிழ் என்று மட்டும் அல்ல, சுமேருத் தமிழ் பண்பாட்டிற்கும் இன்றைய தமிழர்களின் பண்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இத்தொடரில் ஆழமான மெய்யறிவுச் சிந்தனைகள் மிளிரும் வரிகளையே தேர்ந்து எடுத்து, அவற்றின் பொருளை விளக்கி, எவ்வாறு திராவிட மெய்யறிவு சிந்தனைகளோடு அது இன்றும் தொடர்பு கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் கண்டு மகிழும் வகையில் விளக்கியும் உள்ளார்.

 "ஆதித் தமிழரின் அதி உன்னத வழர்ச்சிக்கு காரணமாக இருந்தது பொறி முறையாக்கப்பட்ட நீர்ப்பாசன முறை" என்பது பலரும் அறிந்ததே. அந்த முறையை  தான் நாம், சுமேரியாவிலும், சிந்து சமவெளியிலும், மூவேந்தர்கள் ஆண்ட பண்டைய தமிழகத்திலும் காண்கிறோம். மேலே கூறிய இரண்டு இனங்ககளின் மொழிகளுக்கு  இடையே உள்ள ஒத்த தன்மைக்கு அப்பால், மேலும்  வாற் கோதுமை [பார்லி], கோதுமை பயிர் செய்கை [வேளாண்மை], மெசொப்பொத்தேமியாவில் (இன்றைய தென் ஈராக்) இருந்து சிந்து சம வெளிக்கு பரவியது என்பதை பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அது மட்டும் அல்ல, மரபியல். மக்கள் தாவரத்தொடர்பியில் சம்பந்தமான தரவுகளின் கண்காணிப்பின் அடிப்படையிலும் ["ethno-botanical data tracking" / Ethnobotany is the study of a region's plants and their practical uses through the traditional knowledge of a local culture and people] இது உறுதிபடுத்துகிறது. மேலும் இந்த வேளாண்மை மெசொப்பொத்தேமியாவில், இயூபிரட்டீசு [Euphrates] ஆறு பகுதியில், கி மு 8500 அளவில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின் அது சிந்து சம வெளிக்கும் இந்திய துணை கண்டத்திற்கும் கி மு 6500 அளவில் அடைந்தது எனவும், மரபியல். மக்கள் தாவரத்தொடர்பியில் [Ethnobotany] ஆய்வுகள் மூலம்  நம்புகிறார்கள்.  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 14 தொடரும் 


பி கு : படம்-[01]: நம்மு [Nammu] (கி. மு 2100) எனும் மன்னனால் ஊர் பட்டணத்தில் சந்திரக் கடவுளுக்கு கட்டப்பட்ட, சிகுரத் எனப்படும்  பெரிய கோவிலின் பெரிய படிகட்டுகள் / The original "Stairway to Heaven". The grand staircase of the great ziggurat at Ur. The temple was dedicated to Nanna, the moon god

452440651_10225626814279944_6100425379240382793_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=Ex-f9bke4awQ7kNvgGH5ZRF&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAzNmOR0gbzikOhyd6dfLAHykKH-PrM1lmbBDcTWjxM5g&oe=66A45B0B 452168848_10225626814079939_1738208644321711381_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=MgvV7JpnP8YQ7kNvgGMdG9X&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAQkDmfUEFz5k73DrYyhZPwzjk4OcHim-d_NO5cRCKKMQ&oe=66A4342D 

 

452622791_10225626814479949_62420660077074839_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=vjYzywRP-WEQ7kNvgGpzup6&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBGJZLlj1k0ia8k3f-YT52Pd_Pa-71qfaw4lWGI9h19Cg&oe=66A44967 452544601_10225626814639953_8907433759030685069_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=U8GaobEvkZkQ7kNvgE2r2Xs&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCVvYDdLV_uUsi-798NS-rE-54ABqmP-iJ-uKXmUduaRg&oe=66A436C9

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 14] 


உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் என்று இன்று அழைக்கப்படுவது, இப்போதைய ஈராக் ஆகும். அங்கு தான் பண்டைய மெசொப்பொத்தேமியா நகரம் இருந்தது. அங்கு வாழ்ந்த பண்டைய சுமேர் மக்களை, அதாவது சுமேரியனை உள்ளடக்கிய அந்த முதல் நாகரிகத்தை, சிலவேளை திடீர் நாகரிகம் என வரலாற்று அறிஞர்கள் கூறுவர். மெசொப்பொத்தேமியாவில் உள்ள டைகரிஸ் மற்றும் யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் [Tigris and Euphrates rivers] இடைப் பட்ட பகுதியில், கிறிஸ்துக்கு முன், கிட்டத்தட்ட 4000 ஆண்டு அளவில் திடீர் என உண்டாகிய நாகரிகம் இது ஆகும். 5000  ஆண்டுகளுக்கு முன், சுமேரியர்களே உலகின் முதல் எழுத்து வடிவத்தை உண்டாக்கியவர்கள் என, இதுவரை அறிவியல் ரீதியாக கிடைத்த சான்றுகளில் இருந்து நம்பப்படுகிறது. இந்த எழுத்துக்களின் வடிவம் ஆப்பு எழுத்து அல்லது கூனிபோம் எழுத்து [Cuneiform script] என்று அழைக்கப்படும். இவை முக் கோண வடிவம் கொண்டவை ஆகும். அவர்களே முற்காலத்திய நகர் சார்ந்த நாகரிகத்தை, தெற்கு மெசொப்பொத்தேமியாவில் அமைத்தவர்கள். இங்கு தான், கிறிஸ்துக்கு முன், 3500 க்கும் 3000 ஆண்டுகளுக்கு இடையில் விவசாய குடியிருப்பாளர்களான இவர்கள், இந்த நகர் சார்ந்த நாகரிக அமைப்பை நிறுவினார்கள். இதில் மிகவும் சிறந்து விளங்கியது 'ஊர்' என்ற நகரமாகும். ஆனால் குழப்ப மூட்டும் ஒரு கேள்விக்கு, அதாவது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதற்கு நாம் விடை தேட  வேண்டி உள்ளது. அப்போது தான், இந்த திடீர் சுமேரியர்களைப் பற்றிய மர்மம் தீர்க்கப் படும். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான மொழி இருந்தது. ஆனால் அது அவர்களை சுற்றிய பகுதி எதன் உடனும் ஒத்து போக வில்லை. அவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்கள் என நம்பப்படுகிறது .ஆனால் கடல் வழியாகவோ தரை வழியாகவோ எனத்தெரியாது? என்றாலும் சில உண்மைகள், அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டக் கூடியவையாக உள்ளன. உதாரணமாக சுமேரியன் கடவுள் அடிக்கடி குன்றில் நிற்பது போலவே, அவர்களின் இலக்கியத்தில் எடுத்துச் சொல்லப் படுகிறது. இதை தமிழ் கடவுள் முருகனுடன் ஒப்பிடலாம். மேலும் அவர்களுடைய முன்னைய கட்டிடங்கள் மரக் கட்டைகளை அடிப் படையாக கொண்டவை ஆகும். ஆகவே, மரங்கள் செறிந்து இருக்கும் ஓர் இடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

தொல் பொருளியலின் படி, அவர்கள் [சுமேரியர்கள்], தங்களை கறுத்த தலையினர் என அழைத்ததுடன், அவர்கள் நாடோடியினர் எனவும் எங்கு இருந்து வந்தார்கள் என சரியாக இன்னும் அடையாளம் காணப்படாதவர்கள் எனவும் அறியப்படுகிறது. அவர்கள் மெசொப்பொத்தேமியாவில் இருந்த இரண்டு ஆறுகளுக்கு, அதாவது  யூபிரிடிஸ் மற்றும் டைகிரிஸ் ஆறுகளுக்கு [the Tigris and the Euphrates] இடையிலும் அருகிலும் குடியேறி, சகல கூறுகளையும் கொண்ட, சிறப்புடைய நாகரிகத்தை மேம்படுத்தினார்கள். அவர்கள் வேளாண்மையை ஒரு ஒழுங்கு முறை படுத்தி, நீர்ப் பாசனத்தை விருத்தி செய்து, முதலாவது சக்கரத்தையும் குயவர் பயன் படுத்தும் சக்கரத்தையும் செய்து ஒரு தொழில் நுட்ப முன்னேற்றம் அடைந்தார்கள். அது மட்டும் அல்ல, ஒரு வித குடியாட்சி நிலை நாட்டி, கிறிஸ்துக்கு முன் 4000 ஆண்டளவில், நகரங்கள் அமைத்தார்கள். பேராசிரியர் சாமுவேல் நோவா கிராமர் [professor Samuel Noah Kramer (September 28, 1897 – November 26, 1990)] அவர்களது வாழ் நாள் உழைப்பால், சுமேரியர்கள் நல்லதோர் கவிதைகளும் இலக்கியங்களும் எழுதியது தெரிய வந்தது. எப்படியாயினும் அவர்களும் அவர்களை வென்று அங்கு வாழ்ந்தவர்களும் அதாவது பாபிலோன், அசிரிய மக்கள் போன்றோர்களும் [Babylon and Assyria] அந்த நாகரிகத்தை, நகரத்தை கைவிட்டு தீடீரென மறைந்து போனார்கள். அவை, அந்த சிறப்பு மிக்க முதல் நாகரிகம், 2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் மூடப்பட்டு விட்டது.

சுமேரியன் முதலில், படம் எழுத்துகளுடன் எழுத ஆரம்பித்தான். அங்கு ஒவ்வொரு உருவ வடிவமும் ஒரு முழு சொல்லை குறித்தது. உதாரணமாக, 'டு' [du] என்ற சொல், பாதத்தின் [foot] படம் மூலம் குறிக்கப்பட்டது. ஆனால் பாதத்தின் படம் மேலும்  நில், போ, வா, கொண்டு வா, போன்ற வற்றையும் குறிக்கலாம். ஒருவினைச் சொல்லை தெரிவிக்க, இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சின்னம் அல்லது குறியீடு ஒன்றாக போடப்பட்டன. உதாரணமாக, ஒரு தலை கிண்ணத்திற்கு பக்கத்தில் இருந்தால், அது 'தின்' அல்லது 'சாப்பிடு' [eat] என்பதை குறிக்கும். சுமேரு எழுத்து மிகவும் சிக்கலானது. அதனால் ஒரு சில எழுத்தாளர்கள் தான், அதில் தேர்ச்சியடைந்தார்கள். கிட்டத்தட்ட  250 பேர் அளவில் இருக்கலாம் என மதிக்கப்பட்டுள்ளது. இவர்களை சுமேரிய அறிஞர்கள் [sumerologist] என அழைப்பர்.

சுமேரியன் தனது நிலத்தை அல்லது நாட்டை "கி .என் .கிர்" [KI.EN.GIR, the "Land of the Lords of Brightness"] என அழைத்தார்கள். இதன் பொருள் 'ஒளி மயமான கடவுளின் நாடு' ஆகும். சுமேரிய மொழியில் சமயத்தை  குறிக்கும் சொல் கிடையாது. ஏனென்றால், அங்கு ஆலயத்தின் வழிபாடு குடும்ப வாழ்வின் அடிப்படையாக இருக்கிறது. இயற்கை வழிபாடே அங்கு காணப்படுகிறது. என்றாலும் நாளடைவில் மனித உருவம் இந்த இயற்கை சக்தியுடன் இணைந்து விட்டது. பண்டைய சுமேரியன் தனது பல நேரங்களை கடவுளுக்கு அற்பனித்தார்கள். இது, இந்த அற்பனிப்பு, வழிபாட்டாலும் தியாகம் அல்லது பலியாலும் கையாளப்பட்டது. ஆலயம் பல வேறு பட்ட நோக்கத்திற்காகவும் பாவிக்கப் பட்டது. என்றாலும், அங்கு முக்கிய செயல்பாடு, வழிபாடும் கல்வியும் ஆகும். ஒவ்வொரு ஆலயமும் கல்வி நிலையம் வைத்திருந்தன. அங்கு மாணவர்கள் கணிதமும் எழுத்தும் படித்தார்கள். சுமேரியரின் ஆசிரியர் 'உம்மை' [ummia] என்று அழைக்கப்பட்டார். ஒரு துணை அல்லது ஒருதார மணம் அங்கு நிலவியது. என்றாலும், காமக்கிழத்தி அல்லது வைப்பாட்டி, அவர்களின் சமூகத்தில், பொறுத்துக் கொள்ளப் பட்டது அல்லது ஏற்றுக் கொள்ளப் பட்டது [Monogamy was the normal practice, although concubines were tolerated]. பொதுவாக, குடுப்பத்தின் மூத்தவர் மண வாழ்க்கையை ஏற்பாடு செய்தனர். மேலும் சுமேரியரின் வீடுகள் பொதுவாக ஓர் அடுக்கு வீடு. இது சுட்ட  அல்லது சூரிய ஒளியில் காய்ந்த களிமண் செங்கல்லால் கட்டப் பட்டது. இது நவீன வீட்டிற்கு உரிய எல்லா வசதியையும் கொண்டுள்ளது. மேலும் செல்வந்தர்கள் ஈரடுக்கு வீடு கட்டி வாழ்ந்தார்கள். இசை அவர்களின் வாழ்க்கையுடன் ஒட்டியிருந்தது. அது மட்டும் அல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கும் கவிதைகளும் பாடல்களும் தாராளமாக  காணப்பட்டன.

மேலும்  ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட போது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். ஆயினும் பல  வருடங்களுக்கு பின்பு தான் பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான, சாமுவேல் நோவா கிராமர் [samuel noah kramer], இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இக் காதல் கணவனுக்காக, முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு [sumerian king Shu-sin [Cu-Suen]] உரைக்கப்பட்டது.  இந்த காதல் கடித கவிதை, அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே, உலகின் மிகப் பழைய காதல் பாட்டும் ஆகும். இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ["Man of my heart, my beloved man, your allure is a sweet thing, as sweet as honey......."]


இதனை என்னால் இயன்ற வரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன். கட்டாயம், உங்களுக்கு இது, சங்க கால காதல் பாடல்களை ஒரு வேளை, நினைவூட்டலாம்? 

"அன்பு மணாளனே! என் பிரியமான தோழனே !
உன் கவர்ச்சி இனிமையானது, தேன் போல் இனிமையானது
ஆண்மையுள்ள சிங்கமே, என் இதயத்திற்கினிய காதலனே!
உன் வசீகரம் இனிமையானது, அமுதம் போல் இனிமையானது"


"நீ என்னை வயப்படுத்தி விட்டாய், எனவே
எனது சுய விருப்பத்தில், நான் உன்னிடம் வருவேன்
ஆண்மையுள்ள வீரனே! பள்ளி அறைக்குள் என்னைக் 
உன்னுடன் கொண்டு போ"


"நீ என்னை மயக்கி விட்டாய், எனவே
எனது கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்
காதல் தோழனே! படுக்கையறைக்குள் என்னை
உன்னுடன் தூக்கிப்  போ"


"மணாளனே! உனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என் மதிப்புள்ள காதற் கண்மணியே! உனக்கு என்னை தேன் தர விடு
தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம், இனிய இன்பமே!"


"இளைஞனே! உனக்கு என்னை மகிழ்வு கொடுக்க விடு
என் அரிதான காதலனே! உனக்கு என்னை அமிர்தம் ஊட்ட விடு
வீரனே! நீ என்னை கவர்கிறாய், எனவே
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன்
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்"


"உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது எனக்குத் தெரியும்
மணாளனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு
உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது எனக்குத் தெரியும்
இளைஞனே! விடியும் வரை எமது வீட்டில் உறங்கு"


"வீரனே! நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால்
எனது எஜமானே! கடவுளே!! பாதுகாவலனே!!!
"என்லில்" கடவுளின் இதயத்தை மகிழ்ச்சிபடுத்தும்
எனது "ஷு-சின்" அரசனே!
உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின்,
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல,
அங்கே உன் கையை எனக்காக மூடு [வை]
மரச் சீவல் சாடியின் மூடி போல
அங்கே உன் கையை எனக்காக விரி [பரப்பு]"


[தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

குறிப்பு:

ஷு சின்: கி.மு 2037 - 2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.
என்லில்: மழை மற்றும் காற்று கடவுள்

[Shu - sin or Cu - Suen: was king of Sumer and Akkad, and was the penultimate king of the Ur III dynasty.
"Lord (of the) Storm" / Ellil is one of the most important gods of Mesopotamia.]

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 15 தொடரும் 

            படம்-[01]: நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமேரியர்கள் வாய்க்கால் முறையை பாவித்தார்கள்

            படம்-[02]: மெசெப்பொத்தோமியா கல்வி

            படம்-[03 & 04]: பண்டைய மெசெப்பொத்தோமியா

            படம்-[05]:  ஊர் நகரத்தின் மாதிரி.ஊரில் உள்ள அரச சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைவினை கலைப்பொருள் இதுவாகும்

            படம்-[06]: காதலர்கள் [கோவலன் கண்ணகி]

453049492_10225665518007513_2642113599201233363_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=INJ4V8FUMKAQ7kNvgFoxw1t&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=AIU0hNOC5ecA5IXe6SbX6ET&oh=00_AYCna0Kh_kWFvNH-9W5eSZJBizdOqJQKnoLyLW6bA_kypw&oe=66AAAE45 May be an image of 3 people May be a doodle 

 

May be an image of golf course May be an image of text 

 

No photo description available.

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு கட்டுரை.  பகிர்விற்கு நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 15
 
 
பொதுவாக சுமேரியன், ஆன்மீக விடயங்களில் கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொரு நகரமும் குறைந்தது ஒரு கடவுளை வழி பாட்டிற்கு வைத்திருந்தார்கள். உதாரணமாக, நன்னா [Nanna] கடவுளை ஊர் நகரம் வைத்திருந்தது. தெய்வத்தின் கோபத்தை தவிற்பதற்கு என்று ஒழுங்காக தாரளமாக காணிக்கை செலுத்தினார்கள். சிலவேளை, தேவைக்கு அதிகமாகவே கொடுத்தார்கள். உதாரணமாக ஷ்தார் [Ishtar, சுமேரியன் கடவுள், "ஈனன்னா"வின் மறுபடிவம் ஆகும்] ஆலயம், அங்கு வணங்கும் பெண் பக்தர்களிடம் அவர்களின் கன்னிமையையே [virginity] வற்புறுத்தியது. கிரேக்க வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ் [Herodotus, கி மு 490-425] தனது குறிப்பில் ஒரு பெண் கல்யாணம் செய்யும் முன், ஆலயத்தில் தேவதாசியாக கடமையாற்ற நிரபந்திக்கப் பட்டார்கள் என குறிப்பிடுகிறார். இது அவர்கள் ஒரு நல்ல சிறந்த ஆண்மகனின் [சற்புருஷனின் / a good or pious man] கவனத்தை தங்கள் மேல் இழுக்கும் வரை தொடரும் என்கிறார். அந்த சற்புருஷன் தனது சம்மதத்தை, தான் விரும்பும் அந்த பெண்ணுக்கு நாணயங்களையோ அல்லது ஆபரணங்களையோ சுண்டி ஏறிவதால் [கொடுப்பதால்] வெளிபடுத்துகிறார் என்கிறார். இதனால் அழகிய பெண்கள் சில நாட்களிலேயே தமது தேவதாசி கடமையை முடித்து வெளியேறி விடுவார்கள் என்றும் எளிய ஆடம்பரமில்லாத பெண் வருடக்கணக்காக காத்திருக்க வேண்டி வரும் என்றும் ஆகவே, இது ஒரு நியாயமற்ற முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 
கன்னிப் பெண் ஒருவரை ஆண்டவனுக்கு பணி செய்ய கோயிலுக்கு கொடுக்கும் வழக்கம், பண்டைய தென் இந்தியாவிலும் அன்று இருந்தது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துபாட்டு, போன்ற சங்க இலக்கியங்களில் தேவதாசி பாரம்பரியம் இருந்ததிற்கான மேற்கோள்கள் காணப்படுகின்றன. அங்கு பலவிதமான தேவதாசிகளை குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக "கொண்டிமகளிர்", "விறலியர்", "கூத்தியர்", "பரத்தையர்" ஆகும். நமதுபண்டைத் தமிழ் கலாசாரத்தில், பரம்பரையாகப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு நேர்ந்து விட்ட யுவதிகளை, ‘தேவரடியாள்’ [தேவிடிச்சி] என்பர். இதே முறை சில ‌வித்தியாசங்களுடன் வட‌ இந்தியாவில் ‘தேவதாசி’ என்று அழைக்கப்படும். சங்க இலக்கியம் தேவதாசிகளின் கதைகளை, செய்யுள் வடிவில் விவரிகிறது. சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை மற்றும் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் போன்றவை, தேவதாசிகளின் வாழ்க்கையை விளக்கமாக விவரிகிறது. அதாவது சங்கப் பாடல்களில் வரும் பரத்தையும், சிலப்பதிகாரம் கூறும் மாதவியும் இவ்வினமே. இவர்கள் பிரதானமாக ஆடும் கலையையும், பின், நிதானமாக கூடும் கலையையும் கைக்கொண்டு இருந்தார்கள்.
 
 
"பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை
வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின்
வில்லக விரலில் பொருந்தியவன்
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே."
[குறுந்தொகை 370]
 
 
பரத்தை தலைவனை விடாமல் தன்னோடு இருத்திக் கொண்டாள் என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை, ”தலைவன் என்னிடம் வருவதும் வராமல் இருப்பதும் அவன் விருப்பத்தைப் பொறுத்தது” என்று தலைவியின் தோழியர்களுக்குக் கேட்கும்படி, ஆம்பலின் அரும்புகளின் அழகாலும் செழிப்பாலும் ஈர்க்கப்பட்டு, தக்க சமயத்தில் தானாகவே வந்து மொய்த்து, வண்டுகள் அவ்வரும்புகளை வாய்திறக்கச் செய்வதைப் போல், தலைவன் தன் அழகையும் இயல்பையும் விரும்பித் தன்னிடம் வந்தான், நான் அவனைக் கூப்பிடவில்லை என்று பரத்தை கூறினாள்.
 
 
லியோனாட் வூல்லே [Sir Leonard Woolley, the British archaeologist], 1930 ஆண்டு, ஊர் நகரத்தில் அகழ்வாராய்ச்சி செய்தபோது, ஒரு கொடிய மர்மத்தை அம்பலப்படுத்தினார். ஊர் நகரத்தின் அரசனோ அல்லது இராணியோ இறக்கும் போது, பல பணியாளர்கள் அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு பணி செய்யவென, அவர்களை தொடர்ந்து அங்கு, அந்த கல்லறையில் விஷம் அருந்தி, தமது உயிரையும் விட்டார்கள் என்ற உண்மை வெளி வந்தது. ஆனால் இவர்கள் தாமாகவே உயிர் துறந்தார்களா அல்லது துறக்க வைக்கப் பட்டார்களா என்பது தெரியாது.
 
 
இதே போன்ற எண்ணங்களை, சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். இங்கு சங்க கால மகளிர், இம்மை மட்டுமின்றி மறுமையிலும், அதாவது அடுத்த பிறவியிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் என்ற மனநிலையை குறுந்தொகை-49 போன்ற வற்றால் காண்கிறோம்.
 
 
‘இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே’
(அம்மூவனார், குறுந்தொகை-49.)
 
 
இம்மை மாறி = இந்த பிறவி போய், மறுமை யாயினும் = மறு பிறவி வந்தாலும், நீயாகியரென் கணவனை = நீயே என் கணவராக வர வேண்டும், யானா கியர் = யான் + ஆகியர் =நானே, நின் னெஞ்சுநேர் பவளே = நின் நெஞ்சு நேர்பவளே = உன் மனதில் இருப்பவளே என்கிறது.
 
 
சுமேரியர்கள் தமக்கிடையில் ஒரு பொது மொழி, பண்பாடு இருந்தும், தங்களுக் கிடையில் சமாதானத்தில் வாழ கற்றுக் கொள்ளவில்லை. அதாவது, ஒற்றுமை சுமேரியருக்கிடையில் நிரந்தரமாக நிகழவில்லை. முதல் ஒரு நகரத்தின் அரசன் மற்ற நகரத்தின் அரசர்களை வென்று எல்லா நாட்டிற்கும் அரசனாவான். அதன் பின் இன்னும் ஒருநாட்டின் அரசன் அப்படியே செய்வான். இப்படி மாறி மாறி அங்கு நடைபெற்றன.
 
 
சுமேரிய அரசர்கள் தமக்கிடையில் ஒற்றுமை இன்றி, தங்களுக்குள் போர் புரிந்தது மட்டும் இன்றி, இதனால் அவர்கள் பலம் இழந்து, எப்படி தங்களை சுற்றியிருந்த செமிட்டிய மக்களிடம் தோற்று கி மு 2000 ஆண்டளவில் முற்றாக அங்கிருந்து மறைந்தார்களோ, அப்படித் தான் சங்க காலத்திலும் இந்த ஒற்றுமையின்மை தொடர்ந்தது என்பதை சங்க பாடல்கள் மூலம் அறிகிறோம்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி : 16 தொடரும்
453047851_10225682416869974_2054704558485278758_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=x2E6VvUePgoQ7kNvgFdwDGC&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYA6-fUB9wuJzrJMNMbKaXD3_o2tZTVv2VWf3KK_qMc5qA&oe=66AD15FA  453047572_10225682416549966_7431851355499433648_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BS5DBOOIJZMQ7kNvgE_IpL_&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBvRWM56f7FrwCjlZD_Usu-CBnMvYmIENP_oKjKU1cSpg&oe=66AD27FC  453228812_10225682416789972_8619391095207724156_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=LLU156NU3TgQ7kNvgEIjEo7&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYANPlDyKNo3FF6Dzwvd8DzUGqglnIjXFRvx3yAouRRsag&oe=66AD1501  453249027_10225682417189982_2493986228201042234_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ngfjz4AkpJIQ7kNvgHNQFhf&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCgLQz_SZgSEf6l3H8rQdhwEc2AZjS-u2Z34qEK94_4OA&oe=66AD1D1C
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 16

 

சுமேரியர்கள் மகன், டில்முன், மேலுஹா [Magan, Dilmun, and Meluhha] போன்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்தார்கள் என அவர்களின் இலக்கியத்தில் திரும்ப திரும்ப குறிக்கப்பட்டுள்ளது. பல கல்விமான்கள் மேலுஹாவை சிந்து சம வெளி என சுட்டிக் காட்டுகின்றனர். பின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா, சிம்மோ பர்போலா [Asko and Simo Parpola], 'மேலுஹா'வை மே-லா-க எனஅடையாளம் கண்டு அதை "மேல் அகம்" என விளக்குகிறார்கள். உண்மையில் பல வர்த்தக பொருள்களான மரம், கனிப்பொருள்கள், நவரத்தினக் கல் என்பன சிந்து சம வெளியில் உள்ள குன்று அல்லது மலைசார் பகுதியில் இருந்தே எடுக்கப் பட்டுள்ளன. மேலும் கி மு 2200 ஆண்டளவிலான சுமேரியா நூல், 'மேலுஹா'வை கிழக்கில் இருப்பதாக குறிப்பிடுகிறது. ஆகவே அது சிந்து சம வெளியையோ அல்லது இந்தியாவையோ பரிந்துரைப்பதாக நாம் இலகுவாக கருதலாம். அது மட்டும் அல்ல, சிந்து சமவெளி முத்திரைகள் ஊர் [Ur] மற்றும் பல மெசெப்பொத்தோமியா நகரங்களில் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. இவைகள் மேல் கூறிய பரிந்துரையை ஆதரிக்கின்றன. மேலும் மெசெப்பொத்தோமியா கைவினை பொருள்கள், அதாவது மனிதனால் செய்யப்பட்ட பொருள்கள், சிந்து சம வெளியில் காணப்பட்டது. இவை மெசெப்பொத்தோமியா ஒரு பழமை வாய்ந்ததாக, தனது வர்த்தக நாடான சிந்து சம வெளி காலத்துடன் ஒத்ததாக அல்லது அதற்கும் முந்தியதாக, இருக்கலாம் என எடுத்து காட்டுகிறது. மேலும் 'டில்முன்' எந்த நாட்டை அல்லது இடத்தை குறிக்கிறது என்பதில் பல கருத்துகள் இன்றும் உண்டு. 'சாமுவேல் நோவா கிராமர்' என்ற புகழ் பெற்ற அறிஞர் இதையும் சிந்து சம வெளியுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு சுமேரிய இலக்கியத்தில் [கில்கமெஷ் காப்பியம்] இது சூரியன் உதிக்கும் திசையில் இருப்பதாக எழுதியிருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் 'தில்முன்' [டில்முன்] என்பது 'தில்', 'முன்' ஆகிய இரண்டு சொற்களின் கூட்டு. ‘தில்’ என்ற சொல் சங்கஇலக்கியத்தில் ‘வாழ்க தில்' என்றவாறு காணப்படுகிறது. இங்கு ‘தில்’ என்றால் வாழ்தல் ஆகும்." வாழ்க தில் அம்ம" என்பன போன்ற சங்கத் தமிழ் வழக்குகளை உதாரணமாக கூறலாம்.  "நலமே வாழ்க" என்பதாக இதன் பொருள் இருக்கலாம். இந்த சொல் இப்ப 'தின்' என காணப்படுகிறது. அதாவது  தில்>தின்: உயிர் வாழதற்கு உதவும் உணவு ஆகும் மேலும் ‘தீனி’= தீன்= சாப்பாடு, இரை ஆகும். இவ்வாறாக ‘வாழ்க தில் / தின்' என்பதை நலமுடன் வாழ்க [நல்ல சாப்பாடு உண்டு] என கருதலாம். 'முன்' என்பது முன்னுக்கு என்பதாகும். இது மேலும் 'முன்னைய, முன்னர், ஆரம்ப' என்பதையும் குறிக்கும். இதன் படி, தில்-முன் என்பதை வாழ்ந்த முன்னைய இடம் என எடுக்கலாம். எனவே இந்த கருத்தின் படி நாம் இன்றைய வழக்கத்தில் கூறும் 'தாய் நாடு' என இதற்கு பொருள் கொள்ளலாம். அதாவது நாம் முதல் தோன்றிய இடம் என கருதலாம். ஆகவே சுமேரியன் சிந்து சமவெளியில் இருந்து வந்தவர்கள் என எடுத்து கொண்டால், சாமுவேல் நோவாகிராமர் [S. N. Kramer] மற்றும் டாக்டர் க்ளைட் வின்டர்ஸ் (Dr Clyde Ahmad Winters] போன்றோர் தில்முன் என்பதை ஹரப்பா என உரிமைகோரியது  சரி போல இருக்கும். ஏனென்றால், தங்களது மூதாதையார் பிறந்த, வாழ்ந்த இடத்தின் ஞாபகார்த்தமாக ஹரப்பானை 'தாய் நாடு' எனபொருள் படும் 'தில்முன்' என்ற சொல்லால் அழைத்திருக்கலாம் என நாம் கருத இடமுண்டு. மேலும் தொல் பொருள் சான்றின்படி, திராவிட மக்களால், அதாவது ஆதிதமிழர்களால் குடியேறிய சிந்து சமவெளியில் வைடூரியம் இருந்தது தெரிய வருகிறது. இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சுரங்கம் வெட்டி எடுக்கப் பட்டுள்ளது. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ நாகரிகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த வைடூரியம் தான் தில்முன்னை முதன்மை ஆக்கியது. அது மட்டும் அல்ல இந்த இரண்டு நாகரிகங்களுக்கும் இடையில் வலுவான பண்பாட்டு தொடர்பு / பரிமாற்றம் இருந்ததை தொல்பொருள் ஆராச்சி மேலும் உறுதிப் படுத்துகிறது.

சுமேரியன் நூலில் பதினொன்று இடங்களில் 'மேலுஹா' என்ற சொல்வருகிறது [சம்பவிக்கிறது]. அதன் ஒரு உதாரணம் கிழே தரப்படுகிறது.

"என்னை காண [அறிய] மேலுஹா, மகன், டில்முன்  மக்களை விடு. 
டில்முன்னுடன் வர்த்தகம் செய்யும் படகுகளில், மரக் கட்டைகளை ஏற்ற விடு. 
மகனுடன் வர்த்தகம் செய்யும் படகுகளில், வாண் உயரத்திற்கு  ஏற்ற விடு. 
மேலுஹாவுடன் வர்த்தகம் செய்யும், மகிழும் [magilum] படகுகளில், 
பெரும் மதிப்புள்ள தங்கம், வெள்ளிகளை அனைத்து நாட்டின் அரசனான என்லில்லுக்கு கொடுப்பதற்காக, நிப்பூருக்கு  கொண்டு வர விடு" 
[என்கியும் உலக விதிமுறையும் / Enki and the world order 123-130 ] 

"Let the land of Meluha, Magan, and Dilmun look upon me. 
Let the boats that trade with Dilmun be loaded with timber. 
Let the boats that trade with Magan be loaded sky high. 
Let the magilum [ma-gi-lum] boats that trade with Meluha, 
transport gold and silver and bring them to Nibru for Enlil, king of all lands."
[Enki and the world order 123-130 ]

சார் C.லியோனர்ட் வூல்லே [Sir Charles Leonard Woolley (17 April 1880 – 20 February 1960)] தனது "சுமேரியன்" என்ற புத்தாகத்தில், மெசெப்பொத்தோமியாவில் கடைசியாக குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்றும் அவர்கள் கறுத்த முடியுள்ளவர்கள் என்றும் ஒட்டு நிலை மொழியை (Agglutinative language / நேரடியாக ஒட்டும் இயல்புடைய, சொற்களை கொண்ட ஒரு மொழி] பேசினார்கள் என்றும் குறிப்பிடப் பட்டு உள்ளது. ஒட்டு நிலை மொழி, ஒருவகைப் பிணைப்பு நிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்பு நிலை மொழிகளில் ஒவ்வொரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. உதாரணமாக திராவிட மொழிகள் ஒட்டு நிலை மொழிகள் ஆக கருதப் படுகின்றன. மொழியில் பொருள் உடையதாக அமைந்த மிகச் சிறந்த சொல் கூறு 'உருபன்' ஆகும். இதனுடன் ஒட்டுகள் சேரும். ஒட்டும் உருபன்கள், ஒட்டு உருபன்கள் எனப்படும். உதாரணமாக "செய்தான்" என்றசொல்லில்

செய்- வினை நிகழ்ச்சியைக் குறிக்கும் உருபன்.
த்       - இறந்த காலத்தைக் காட்டும் ஒட்டுருபன்
ஆன்  - ஆண்பாலைக் காட்டும் ஒட்டுருபன்.

எனவே, செய்+த்+ஆன் - என்று உருபன்கள் ஒட்டி நின்று ‘செய்தான்’ என்ற சொல் உருவாகிறது. 

சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி [hebrew language], அக்காத் மொழி [Akkadian language], அறமைக்மொழி [Aramaic  language], போன்ற செமிடிக் மொழி (Semitic languages) களிலிருந்து வேறுபட்டதாகும். பண்டைய துருக்கிமொழி (Turanian) போன்று காணப்பட்டாலும் சொற்பிறப்பியலில் (etymology) அப்படி அல்ல. தொடக்கத்தில் இந்த எழுத்து அமைப்பு முறைக்கு வரலாற்று ஆசிரியர்களால் பொருள் கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டது. இறுதியாக அவர்கள் அங்கு ஒரு நாகரிகம் இருந்தது என்றும் சுமேரியன் என்ற ஒரு மொழி பேசப் பட்டதாகவும் உறுதி படுத்தினார்கள்.

மிக முந்தய தமிழ் சங்கம் பழமை [தொடக்கநிலை] தமிழையே பாவித்தது. சுமேரிய மொழி ஒரு பண்டைய அல்லது பழைய முதல் சங்கத்திற்கு உரிய தமிழ் என இப்ப ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அது மட்டும் அல்ல இவர்கள் சுமேரியானை சுமேரிய தமிழ் எனஅழைக்கின்றனர். J.V.கின்னியர் வில்சன் [J.V.Kinnier Wilson] என்பவர்  ஹரப்பானும் சுமேரியானும் ஒரே இன மக்கள் என கூறுகிறார். சுமேரியன் ஒரு இந்தோ- சுமேரியன் என்றும், மூல கூட்டமான ஹரப்பானில் இருந்து பிரிந்த ஒரு சிறு கூட்டமே அங்கு குடியேறி சுயாதீனமாக வளர்ந்தது எனவும் கூறுகிறார். மேலே நாம் கூறிய 'தில்முன்' விளக்கத்துடன் ['தாய் நாடு'] இது ஒத்து போவதைக் கவனிக்க.

பண்டைய சுமேரியா திராவிட மொழிகளுக் கிடையில் ஒரு ஒற்றுமை இருப்பதாக அருட் தந்தை ஞான பிரகாச அடிகளார் நம்புகிறார். அப்படியான ஒற்றுமைகளை AS தியகராஜா, மலேசியா முனைவர் கி.லோகநாதன் ஆகியோர் சுட்டிக் காட்டி உள்ளார்கள். மேலும் ராமசுவாமி ஐயர், ஒரே மாதிரியான தொடர்புகள் உடைய  சுமேரியா, தமிழ் நிலவியற் சொற்களை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளார். நான் இப்ப அப்படியான ஒற்றுமையுள்ள 15 சொற்களை கிழே தருகிறேன். இப்படி ஏராளமான சொற்கள் உள்ளன. 

கருத்து / மொழி: சுமேரியன்    திராவிடன்

Tie/bind                       KAD                      கட்டு
house/family               GUD                      குடி 
mother                        ama                       அம்மா  
house                         bitu                        வீடு  
five                             ia                           ஐ [ஐயிரண்டு பத்து]
the land /place           kalam                    களம் 
sheep                         udu                       ஆடு 
city                            ur                           ஊர் 
love                           am                         அன்பு
love                          aka                         அகம் 
to grind                     ara                         அரை
boat                         kalam                     கலம்
quay                        kar-ra                     கரை
to make, do             ag, ak                    ஆக்கு 
what                        a-na                       என்ன

மலேசியாவை சேர்ந்த முனைவர் கி.லோகநாதன் [Malaysian professor, Dr. K. Loganathan], சுமேரு மொழி பழந் தமிழே! என்று நம்புகிறார். தென் இந்தியாவில் புழக்கத்தில் இருப்பது இந்த தமிழ் மொழியே, அதாவது சுமேரியனுக்கும் தமிழனுக்கும் மூதாதையர் பொதுவான ஒருவரே. அமலாசிங்க் [Amala Singh] மற்றும் சிலரும் தமிழுக்கும் சுமேரு மொழிக்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக் காட்டி உள்ளார்கள். எப்படி யாயினும், சாமுவேல் நோவா கிராமர், "சுமேரு மொழி - துருக்கி மொழி, ஹங்கேரி மொழி, சிலகவ்காசியன் மொழிகளை போல ஒரு ஒட்டு மொழி என்றும், எது எவ்வாறாயினும் சொல் அகராதி [சொற்றொகுதி], இலக்கணம், சொற்புணர்ச்சி [வசனம் அமைத்தல்] ஆகியவற்றில் ஒரு மொழியையும் சாராது தனித்தே நிற்கிறது என்கிறார். தமிழும் ஒரு ஒட்டு மொழி என்பது கவனிக்கத் தக்கது. டாக்டர் அசோக் மல்ஹோத்ர, மனித நாகரிகத்திற்கான சுமேரியர்களின் முதன்மையான பங்கு, அந்த பண்டைய சுமேரியன், எங்கிருந்து வந்தான் என்பதை ஆராயத்  தூண்டுகிறது என்கிறார். இந்த சுமேரியர்கள் மனித நாகரிகத்தை 5500 ஆண்டுகளுக்கு முன்பு மெசெப்பொத்தோமியாவில் விதைத்தார்கள் என எடுத்து உரைகிறார். மேலும் இவர்கள் இந்தியாவின் மேற்கு கரையோரம் இருந்து அங்கு குடியேறினார்கள் என்கிறார். Dr Clyde Ahmad Winters  கறுத்த ஆபிரிக்க மக்கள், திராவிடர், எலமைட்மக்கள், சுமேரியர் இவர்களுக் கிடையில் ஒரு வம்சாவளி தொடர்பு இருப்பதாக கூறுகிறார். Dr David Neiman சுமேரியர்கள் காரகோரம் (Karakoram Mountains) மலைத்தொடரில் இருந்து வந்ததாக கூறுகிறார். இது  பாகிஸ்தான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத் தொடர். மேலும் இது ஒரு முக்கியமான சாத்து வழி [caravan route] யாகவும் இந்த மூன்று இடங்களுக்கும் அமைந்துள்ளது. எங்களுக்கு தெரியும், சிந்து சம வெளி நாகரிகம் சிந்து ஆற்றுடன் தொடர்புடையது என்று. இந்த சிந்து ஆறு தெற்காக காரகோர, இமய மலைத் தொடரில் இருந்து ஓடுகிறது. மேலே கூறிய அனுமானங்களை ஆய்வு செய்து உறுதி படுத்துவதற்கு, இரண்டு வழிகளை பின்பற்ற வேண்டும். முதலாவது இந்தியாவில் இப்ப உள்ள ஏதாவது ஒரு மொழி குடும்பத்துடன் [தமிழ்] பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக சுமேரு மொழி ஒத்து உள்ளதா என அறிய வேண்டும் ? இரண்டாவது சுமேரு மக்களின் கிடைக்கப் பெற்ற எலும்பு மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவை அந்த மொழி குடும்பத்துடன் ஒத்து போகுது என்பதை கண்டுபிடித்தல் வேண்டும் ?

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 17 தொடரும்


படம் 01 : என்லில்லும் அவரின் மனைவி நின்லில்லும் / Enlil with his wife, Ninlil]

453407835_10225694067961244_8809672837451227622_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=T1_yTJXX6-oQ7kNvgE4E2sQ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCOf48eG24mT6VdPU78lycdb894-tir6F6R2elww_bDAQ&oe=66AE979A  453429517_10225694068281252_3051519291384718633_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=04ywJ9ITKVgQ7kNvgHPLaes&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYALLWBoKtPm4lSR4eXOytYQrRHne8vtO1z0kdnf_MBYRg&oe=66AE6CBD 

453508937_10225694068201250_4856139432471570170_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=id6e7-R48QoQ7kNvgFZkUJy&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCK5OgkPAOX6EC1YIfY2rsg0MbQG_-bU-_RsgZXIx-WLQ&oe=66AE9494 453196047_10225694068921268_2559503674453198003_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=KnI7BE9n4MgQ7kNvgGp6UiD&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBDm8_Y4XwxWv3klB0_u4pEGTic47GY2Gu1QMGfGnn8_Q&oe=66AE7943

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 17

 

சைவ சித்தாந்தம் தான் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும். டாக்டர் போப் "சரித்திரத்திற்கு முற்பட்ட  மதமாக, சைவம் தென் இந்தியாவில் வளர்ச்சி பெற்று, தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது என்று கூறியுள்ளார். ஏறக்குறைய கி.மு.3000 ஆண்டு தொடங்கி கி.மு.1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து, அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக் கொணர்ந்து, வாசித்து பொருளும் கண்டு, அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்றே "ஏண் உடு அன்னா [Enheduanna] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும். கொற்றவையே இங்கு 'ஈனன்னா' [Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார். கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும், பின்னர் சிவாவுடன் இணைத்து, விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள் கூறுவார்கள். பிராமண வேதத்தில் எங்கும் சிறந்த பெரிய பெண் தெய்வம் என்று ஒன்றையும் அல்லது அப்படியான ஒரு பொதுக் கருத்தையும் காணவில்லை. ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும் மற்றும் பின்னைய இந்து சமயத்திலும் அவ்வாறான நிலைப்பாடு உண்டு. அஸ்கோ பர்போலா [Asco Parpola] என்ற அறிஞர்  தமது புத்தகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார். மிக அற்புதமான தெய்வீகப் பாடலாகிய 'ஏண் உடு அன்னா' எனும் அம்மையாரின் 'ஈனன்னை சீர்பியம்' என்ற பாடலை தமிழ் படுத்தி, சில குறிப்புக்களையும் தந்து, அறிவிற்கு ஓர் விருந்தாகப் படைக்கிறார் முனைவர் கி.லோகநாதன். இந்த அம்மையார் ஏறக்குறைய கி.மு. 2200வாக்கில் சார்கோன் (Sargon) எனும் பேரசனின் புதல்வியாக விளங்கியவர். மேற் கூறிய 'ஈனன்னா' பாடலின் மூலத்தை களிமண் பலகையில் இருந்து வாசித்து, மொழி பெயர்த்தவர்கள் வில்லியம்  W.ஹல்லோ [William W.Hallo] மற்றும் J.J.A. வான் டிஜிக் [J.J.A. Van Dijk] ஆகும். 'The Exaltation of Inanna' என்பதே இங்கு சுமேருத்தமிழில் 'ஈனன்னை சீர்பியம்' எனப்படுகின்றது. இது 18 பாடல்களை கொண்டது. பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின், நல்லவோர் வளர்ந்த நிலையை இப் பாடல்கள் காட்டுகின்றது. இதின் முதல் பாட்டை மட்டும் [முதல் 8 வரிகளை மட்டும்] கீழே தருகிறேன்.

 

"சர்வ சக்திகளின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்
மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;
விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவள்.

ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் [தலைமுடியில்] பெரும் பெரும் அணிகளை  சூட்டியவள்.
மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.

ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;  [மெய் -  சக்தி]

என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயே தான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:
மெய்களை திரட்டி மெய்யான உன் கவசமாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"

 

Lady of all divine powers!
Lady of the resplendent light!
Righteous Lady adorned in heavenly radiance!


Beloved Lady of An and Uraš!
Hierodule of An, sun-adorned and bejeweled!
Heaven’s Mistress with the holy diadem,
Who loves the beautiful headdress befitting the office of her own high priestess!


Powerful Mistress, seizer of the seven divine powers!
My Heavenly Lady, guardian of the seven divine powers!
You have seized the seven divine powers!
You hold the divine powers in your hand!
You have gathered together the seven divine powers!
You have clasped the divine powers to your breast!

[The Exaltation of Inana (English and Sumerian translation) by The University of Oxford Library. Also loose translation / interpretation by Michael R. Burch]

 

மேலே கூறிய பாடலின் முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக இருக்கும் மெய் ஞானத்தை விளம்புகின்றது. இதன் முதல் இரண்டு வரிகளைப் பாருங்கள்.


1. nin-me-sar-ra u-dalla-e-a
Lady of all the me's resplendent light
நின் மெய் சர்வ உள் தெள்ளிய


(சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்;  Nin நின்: உயர்ந்து நிற்றல். உயரிய நீண்ட நெடிய அம்மை என்று பொருள் படும், சங்க இலக்கியங்களில் இதுவே அடையாகி நல் என்றாகி உள்ளது போலும், காண்க நல்-கீரன், நல்- செல்லை என்றவாறு. சர்ர [sar-ra] > சர்வ: சர்வம், இது வடமொழியில் வழக்கொழியாது இன்றளவு இருக்கின்றது . மெய்: சக்தி.u> ஊ, உள். ஒள் , ஒளி; dall-e-a > தெள்ளிய: சுத்தமான, அழுக்கற்ற தூய)


2. mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a
Righteous woman clothed in radiance, beloved of heaven and earth
மை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய


(மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது; விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப் படுகின்றவள்.
mi> மை: உயர்ந்த பெண்மகள்' zi> சீ : திரு நிறைந்த. சீ> சீர்>ஸ்ரி > திரு. me-lam: மெருகு> மேரம்> மேலம்: பிரகாசமான, மெருகுடைய. gur-ru> கூறு, கூறை: கூறு செய்யப் பட்டு உடுக்கப் படும் ஆடை; ki-aga> காங்க> காமம்; an> வான்; uras-a> ஊரத்திய: இங்கு " as>அத்து" சாரியை ஆகும். வடமொழியில் இதுவே ‘அஸ்ய' என்று மிக விரிவாக வழங்கி வருகின்றது.)


இதன் கருத்து என்ன?


அன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதோடு  தெள்ளிய ஒளியானவள் என்றும், சீர் மிகு பெண் (மை) என்பதோடு தூய வெள்ளொளியையே அணிந்திருப்பவள் (கூறு) என்றும், உலகில் (ஊர்) விண்ணில் உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவள் (காங்க> காம) என்றும் பொருள் படும். சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவநாயகி” என்போம். ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை”என்றெல்லாம் கூறுவோம்'


சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் என்னும் போது அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே இந்த அம்மையார் கண்களுக்கு காட்சி தந்துள்ளது மெய்யாகின்றது. எல்லாத் தத்துவங்களின் நாயகியாக விளங்கும் அம்மை பரஞ்சுடராக தூய வெள்ளொளியில், தெள்ளிய ஒளியில் சுடரும் அவளை மாந்தர்களும் தேவர்களும் விரும்புகின்றார்கள் என்றால் என்ன பொருள்?


வெள்ளொளிப் பிழம்பு வீடுபேறு அளிக்கும் ஞானத்தின் வடிவு, யார் இறைவனை ஒளி வடிவில் தரிசிக்கின்றார்களோ அவர்களே மேலானஞானிகள் ஆகின்றார்கள்.


இந்த ஞான தரிசனத்தைப் பெற்று உய்ய வேண்டும் என்ற வேட்கை எல்லா உயிர்களுக்கும் இருக்கின்றது என்பதே இங்கு அம்மையார் விளம்பும் மெய்ஞானக் கருத்து ஆகும் என்கிறார் முனைவர் கி.லோகநாதன்.


இதனை சிவன் மேல் ஏற்றிக் கூறுகின்றார் ஏறக்குறைய 2700 ஆண்டுகட்குப் பிறகு நம்  திருமூலர் கிழ் வரும் பாட்டில்:


நான்காம் தந்திரம்-889


"தானே பரஞ்சுடர் தத்துவமாய் நிற்கும்
தானே அகர் உகரமாய் நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே"


சிவன் என்றாலும் பரஞ்சுடர் என்று தான் பொருள்படும். ‘உள் (ஒள்) தெள்ளிய” என்பதும் அதுதானே. ‘சர்வ மெய்களின் அன்னை’ என்றாலும்‘ தானே தத்துவமாய் நிற்கும்’ என்பதும் ஒன்றுதானே?


தானே ஆதி என்றும் ஆகவே அநாதி என்றும் ‘நின், நின்னா” என்ற சொல்லின் பொருள் காட்டும்.  அவளே எல்லா தத்துவங்களின் தலைவி எனும் போது, தானே மண்ணிலும் விண்ணிலும் நடக்கும் எல்லா தத்துவக் கூத்துகட்கும் தராதலமாக [தராதலம் - தாங்குகின்ற இடம். தத்து வக் கூத்து - தத்துவங்களை ஆக்குகின்ற கூத்து] அமைகின்றாள் என்று மேலும் முனைவர் கி.லோகநாதன்கூறுகின்றார்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 18 தொடரும்

453484627_10225704011169818_2747632454221354653_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=b25L72R3UVUQ7kNvgFvUiFB&_nc_ht=scontent-lhr8-2.xx&gid=AGUXnP4doUwwuYtdo85El30&oh=00_AYBY3R_c2VsD9_T5STPIuaB9Dr8qBsOy7YYuDGDcZAZ-tQ&oe=66AFF048  453654061_10225704010969813_7552978500360891265_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=JuEsOrQrqqUQ7kNvgFSl6T_&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=AGUXnP4doUwwuYtdo85El30&oh=00_AYDGwNsrwanVGOH0T_6yhrbdVbT52MZEXYlE_304bOXwFA&oe=66AFD19A 

 

453776197_10225704024930162_654465952223566950_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Ctq847mzMzcQ7kNvgHTgs2n&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=AGUXnP4doUwwuYtdo85El30&oh=00_AYAWdWYIUib_YRvKo4HxcBkFVwxUR__GbM5pYuFFgJ-ueA&oe=66AFE98C  


 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 18

 

துருக்கியில் அமைந்துள்ள மிகப் பழமை வாய்ந்த கோபெக்லி தேபே (Göbekli Tepe) என்ற கோயிலின் மூல புனித இடத்தின் மேல் கூரையில் பல்லியின் சிற்ப வேலை [lizard- carvings] காணப்படுகிறது. நாட்டுப்புறவியல் [Folklore] என்பது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பாதுகாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மக்களின் அல்லது நாட்டினுடைய அல்லது ஓர் இனத்தினுடைய பண்பாடாகும். அந்த வகையில் இன்றும், பல்லி தமிழர்களின் / இந்தியர்களின் நாளாந்த வாழ்க்கை உடன் இணைந்த ஒன்றாகப் காணப்படுகிறது. வரும் காலத்தைப் பற்றிய சகுனம் அறியும் முக்கிய சாதனமாக, பல்லியை, அவர்களில் பலர் கருதுகின்றார்கள். பல்லி தலையில் விழுந்தால், கலகம் (சண்டை) உண்டாகும் என்பது போன்று, உடலில் எந்த இடத்தில் பல்லி விழுந்தால், என்னென்ன பலன் என சொல்வதே, பல்லி சொல்லும் பலன் ஆகும். பல்லி சத்தமிடுவதை “கௌளி” என்பர். பல்லி “கௌளி” சொன்னால் தரையில் மூன்று முறை விரல்களால் தட்டுவது, இன்றும் பலரிடம் உள்ள பழக்கம் ஆகும். இதனை மூத்த குடியாகிய தமிழர்கள் நம்பி வந்தனர். 2700-2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கபாடல்களிலும், இந்த நிமித்தம் காணலாம்.

"மையல் கொண்ட மதனழி யிருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி
நல்ல கூறென நடுங்கிப்
புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே".


(அகநானூறு 289)

மயக்கம் கொண்டமையின் வலியற்ற இருக்கையளாகி; பிளந்த வாயினையுடைய பல்லி ஒலிக்குந்தொறும் தெய்வத்தைத் தொழுது, நல்ல மொழியினைக் கூறுவாயாக என அதனை வேண்டி, மனம் நடுங்கி, பொலிவற்ற மாலைக் காலத்தொடு மாறுபடுவளோ? [பல்லி ஒலிக்கும் ஒலி கேட்கும்போதெல்லாம் “நல்லது கூறு” என்று வேண்டிக்கொண்டு மாலை வேளையில் பொருமிக்கொண்டிருப்பாள்] என்கிறது.

இந்த நோக்கில், ஆலயத்தில் பல்லியின் இருப்பு முக்கியம் என்பதை ஊகிக்க முடிகிறது. ஏனென்றால்,வழிபடும் ஒருவர், தனது  பிரார்த்தனை நிறைவேறுமா அல்லது இல்லையா என்பதை, பல்லி உண்டாக்கும் சத்தம் மூலமோ அல்லது ஒருவர் மேல் அந்த பல்லி விழும் சகுனம் மூலமோ அறியலாம் என்பதால் ஆகும்.

பல்லி பண்பாடு ஒரு தமிழ், வேத பண்பாடாகும். இது இந்தியாவில் 10000  வருடங்களுக்கு முன் ஆரம்பமாகி இருந்தால், இந்த பல்லி பண்பாடு, இந்தியாவில் இருந்து சுமேரிய போய் இருக்கலாம் என ஊகிக்க இடம் உண்டு. இல்லாவிட்டால் அது அங்கு இருந்து இந்தியா வந்திருக்கலாம்? ஏனென்றால் கோபெக்லி தேபே கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகள் பழமையானது.

பிற் காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்ல தோர் வளர்ந்த நிலையை சுமேரிய இலக்கியமான ஈனன்னை சீர்பியத்தில் [The Exaltations of Innana by Enhudu Anna, இதை சுமேருத் தமிழில் ஈனன்னை சீர்பியம் / sir-bi-im என்று முனைவர் கி. லோகநாதன் குறிப்பிடுகிறார்] காணக்கூடியதாக இருந்ததை முன்பு நாம் சுட்டிக்காட்டினோம். இனி சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சிலவரிகளை அதாவது சூல்கியின் முதரீபியத்தில் [வரி 5-இல் மிக அழகிய 'முதரீபியம் அதாவது முது+அரி+பியம்: முதுமையாவதை அரிப்பது, அதாவது அழிப்பது. என்றும் நிலவச் செய்வது, என்ற சொல்லையேத் தேர்ந்தெடுத்து இந்த அகவலுக்கு முனைவர் கி. லோகநாதன் பெயர் வைத்துள்ள்ளார் / 5. gal-an-zu nig sag-bi-se e-a-na mu-da-ri-bi-im  /  Of the wise, in all things foremost, this is the lasting record / கலஞ்-சு நிக சான்பிசே ஏயன்ன முதரீபியம்] வரும் வரிகள் எழுபத்தி மூன்றை, எழுபத்தி  நான்கை [73-74] முனைவர் கி. லோகநாதன் எடுத்து அலசுகிறார்.  இங்கு சிவா குறிக்கப் பட்டிருப்பது மட்டும் அல்ல தமிழ் பண்பாடான 'உண்மையில்  மட்டும் வாழு' என்பதும் தெரிவிக்கப் பட்டுள்ளது என வாதாடுகிறார். [73. sipa ildum-ma-bi su-bi hu-mu-dug & 74. u-me-da u-ul-li-a-se]  

மேலும் சுமேரியாவில் ஒரு வித வர்ணாசிரம தர்மம் நிலவியது போல தோன்றினாலும், அதாவது அதி உயர் மேல் வகுப்பினராக அரசனும் அவன் குடும்பமும் அதே போல, அதி கீழ்வகுப்பினராக அடிமைகள் அமைந்தாலும், சுமேரு இலக்கியத்தில் எந்த ஒரு வருணாசிரம தருமமும் [மனுவாதம்] எடுத்துக் கூறப்படவில்லை என்கிறார் மலேசியத் தமிழறிஞர முனைவர் கி லோகநாதன் [Brief History Sumero Tamil / Dr K. Loganathan (25-4-04) ]. அது மட்டும் அல்ல, அப்படி ஒன்றை ஆதரிக்கவும் இல்லை என்றும், ஆனால், தனிப்பட்டவர்களின் வித்தியாசம் அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்றும், சுமேரிய சமூகத்தில், எவரும் 'ur-sag' அதாவது சான்றோன் / தலைவன் ஆகவோ அல்லது 'ulu-gula', அதாவது குரவனாகவோ அல்லது குருவாகவோ வரலாம் என்கிறார். பண்டைய தமிழரின் சமுக அமைப்பும் வருணாசிரம தருமம் அற்றதாகவே இருந்தது. அவர்கள் குலத்தை அதாவது, செய்யும் தொழிலை அடிப்படையாக கொண்டே தமது சமுக அமைப்பை அமைத்திருந்தார்கள். தொல்காப்பியம் மரபியலில் அந்தணர், வைசிகர் ... என மக்களை வகை படுத்தினாலும் (தொல். மரபு. 71,72,78,81), [மக்களில் இந்த நான்கு வகைப் பாகுபாட்டைப்  பொருத்தமில்லா இடத்தில் பிற்கால இடைச் செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்], அது முனைவனை [அறிவு விளக்கம் பெற்றவன் முனைவன்] "வினையின் நீங்கி விளங்கிய அறிவு" (தொல். மரபு. 95)  என குறிப்பாக உணர்த்துவதில் இருந்து யாரும் முனைவனாக வரலாம் என்பது தெரிகிறது. இது பிறப்பில் அல்லாமல் அறிவாற்றலில் உள்ளது என்கிறது.

பண்டைய சுமேரியன் மொழியில் இருந்து தமிழுக்கு ஒலிப்பு வடிவத்திலும் மற்றும் கருத்திலும் மாறாமல் [unchanged in phonetic shape and meaning] பல சொற்கள் வந்திருப்பதாகவும், பல உதாரணங்கள் மூலம்  விளக்கியுள்ளார். 

சுமேரிய ஆய்வாளர்களின் கருத்துப்படி சுமேரிய மொழி தனித்த மொழி. இக்கால மொழிகளோடு எத்தகைய தொரு தொடர்பும் இல்லாத மொழி. அப்படிப்பட்ட ஆணித்தரமான ஆய்வாளர்களின் முடிவுரைக்குப் பின்னர், அது பற்றிய எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடம் குறைவு. ஆயினும், ஒரு மாபெரும் நாகரிகத்தை உருவாக்கிய ஒரு மொழி எப்படி தனித்து அழிந்த மொழியாகி இருக்கும் என்ற கருத்தோடு, அம் மொழியை உள் நோக்கம் இல்லாமல் உற்று நோக்கின், நாம்  ஒரு வேளை இந்த குழப்பத்திற்கு முனைவர் கி. லோகநாதன் போன்றோர்களின் ஆய்வுகளின் துணை மூலம் விடை காணலாம்?

சுமேரிய சொல் 'ur' -தமிழிலும் ஊர்- நகரத்தையே குறிக்கிறது. சுமேரிய சொல் 'Ama' - தமிழிலும் அம்மா - தாயையே குறிக்கிறது  சுமேரிய இலக்கணத்தை படிக்கு எவரும் தமிழுடன் உள்ள ஒற்றுமையை இலகுவாக புரிந்து கொள்வார்கள். உதாரணமாக En [என்], nin [நின்], aba  [Sumerian. aba / apa and Tamil.அப்பா],  ama [அம்மா], Ur [ஊர் ] போன்றவை ஆகும், இந்த அடிப்படை சொல்களை வாசிக்கும் போது எந்த தமிழனும் இதை மறுக்க மாட்டார்கள். ஆச்சிரியமான விடயம் என்னவென்றால் தமிழ் மொழியும் இந்த அடிப்படை சொல்களை கொண்டே உருவாக்கப்பட்டவை என்பதே.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


பகுதி : 19 தொடரும்


பி கு : படம்-[01]: 
            படம்-[02]: கோபெக்லி தேபே / Göbekli Tepe 

            படம்-[03]: göbekli tepe temple
            
            படம்-[04]: சூல்கி மன்னன் / king Shulgi 

            படம்-[05]: துலாபாரம் / Tulabharam

453630718_10225714487751726_5618505837350621992_n.jpg?stp=dst-jpg_p417x417&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=QqA9vIaWRvEQ7kNvgHgC3Fi&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDmMNGmG36Olr2iG9sk85aNWBUIXF5m60s841__KXkQrA&oe=66B0F38E 453416033_10225714487591722_170674705173510264_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=idKIg0LF62MQ7kNvgFJ3dNg&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDiF0fPTeDdkfBjYAlF9kpvpnmrfwgacvx2t_d6944GLw&oe=66B11CDE 453186341_10225714487431718_4952951706462098417_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=LiHIezLFtuAQ7kNvgGFDmsG&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDMh2TYL6u47ENK4MV_2wynlc7lRCXuUAm1FuHuZ-BOMA&oe=66B0FE92 

453880729_10225714488271739_4445006685396362795_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ldS_3Lw-wyoQ7kNvgEy9wPg&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDneqff5kGjnY91bc90ueFQ0w_GSUCVl9EtRMMDOANhXA&oe=66B0EC41 453657145_10225714488511745_2105498846868187396_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=4yWXDX9ZKXEQ7kNvgFiLSV4&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAHn18JqnNhk0HPX_7gLSDdZQUoJ9QSRLFFmiFsAEMG8Q&oe=66B0FEBA

 

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.