Jump to content

போதை பாவனைக்கு எதிரான செயற்திட்டம்- மரதன் மூலம் நிதி சேகரிப்பு - முடிந்தால் உதவிடவும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது.

இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில்  டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார்.

அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே.

OUR STORY: 

Dear all, 
Greetings!   வணக்கம்!
Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. 
In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected.  
This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA
The money raised would be used 
''SAY NO TO DRUGS'' and 
''GO GREEN GLOBE''
projects. 
I am here to appeal for your generous help. 
RUN FOR A BETTER FUTURE
MASSIVE THANK YOU!. மிக்க நன்றி.

https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share
 
  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவர்கள் உதவி செய்வதில் பிரச்சனை இல்லை கோசான்..பணம் அனுப்பினால் போல் ஊரில் பாடசாலைகள் தோறும் இருக்கும் போதைக் காரர்கள் திருந்தப் போகிறார்களா...அதற்கு என்ன உத்தரவாதம்...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

முடிந்தவர்கள் உதவி செய்வதில் பிரச்சனை இல்லை கோசான்..பணம் அனுப்பினால் போல் ஊரில் பாடசாலைகள் தோறும் இருக்கும் போதைக் காரர்கள் திருந்தப் போகிறார்களா...அதற்கு என்ன உத்தரவாதம்...?

உத்தரவாதம் இல்லைத்தான்.

ஆனால் இந்த பணம் நேரடியாக போதை பாவிப்பவர்களுக்கு இன்றி, அவர்களை மீட்கும், போதை பழகாமல் தடுக்கும் செயற்திட்டங்களில் பயன்படுத்த படும். ஆகவே கொஞ்சப் பலனாவது வரும் என நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

https://www.justgiving.com/campaign/kilipeople-jmfoa-uk-emf2024

https://www.justgiving.com/search?includeBoostedQuery=true&q=KILIPEOPLE%20

https://www.justgiving.com/search?includeBoostedQuery=true&q=KILIPEOPLE%20

மொத்தமா எத்தனை பேர் ஓடுராய்ங்க. ஏன் ஆளாளுக்கு ஒரு கணக்குத் திறந்து சேகரிக்கினம்..?!

இது இவைட நோக்கம் நல்லமா இருந்தாலும்.. கேள்விக்குரியதாக்குகிறது..!!

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் எங்கள் பங்களிப்பையும் வழங்கி உதவி இருக்கிறோம். ஏதோ நல்லது நடந்தால் சரி. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, nedukkalapoovan said:

மொத்தமா எத்தனை பேர் ஓடுராய்ங்க. ஏன் ஆளாளுக்கு ஒரு கணக்குத் திறந்து சேகரிக்கினம்..?!

இது இவைட நோக்கம் நல்லமா இருந்தாலும்.. கேள்விக்குரியதாக்குகிறது..!!

நன்றி. தமிழர் எல்லோ அதான் மூண்டா பிரிஞ்சு ஓடினம் போல🤣

நான் நினைக்கிறேன் பலர் ஓடும் போது reach அதிகமாக இருக்கும் என்பதால் ஆக்கும்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை உணவிற்கு உதவிக்கரம் தாருங்கள் எனும் பூமியில் போதை பாவனையாளரை திருத்தவும் உதவிக்கரம்......!!!!! சர்வதேச அளவிற்கு வளர்ந்துவிட்டது எமது சமூகம்!    

எப்படியிருந்த தமிழ் மண் ??????? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஒருவேளை உணவிற்கு உதவிக்கரம் தாருங்கள் எனும் பூமியில் போதை பாவனையாளரை திருத்தவும் உதவிக்கரம்......!!!!! சர்வதேச அளவிற்கு வளர்ந்துவிட்டது எமது சமூகம்!    

எப்படியிருந்த தமிழ் மண் ??????? 

மாறாதது என்பது மாறாதது என்ற்ஃ வார்த்தை மட்டுமே.

சர்வதேச பிரச்சனைகளை ஒத்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடலாம், அல்லது சர்வ தேசங்களும் எதிர் கொள்ளும் பாணியில் எதிர் கொள்ள முயலலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

மாறாதது என்பது மாறாதது என்ற்ஃ வார்த்தை மட்டுமே.

சர்வதேச பிரச்சனைகளை ஒத்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விடலாம், அல்லது சர்வ தேசங்களும் எதிர் கொள்ளும் பாணியில் எதிர் கொள்ள முயலலாம்.

எமக்குள் இருக்கும் ஒரு சிறிய பிரச்சனையை களைய முடியாமல் சர்வதேச பிரச்சனையாக்கி ஓட்டம் வேற....
ஒரு சிறிய நாட்டுக்குள் இன்னொரு நாடா என கேட்கும் மேலைதேயத்தவரிடம் அந்த சிறிய மண்ணில் போதைப்பொருள் பிரச்சனை பெரிய பிரச்சனை என சொல்லி பாருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எமக்குள் இருக்கும் ஒரு சிறிய பிரச்சனையை களைய முடியாமல் சர்வதேச பிரச்சனையாக்கி ஓட்டம் வேற....
ஒரு சிறிய நாட்டுக்குள் இன்னொரு நாடா என கேட்கும் மேலைதேயத்தவரிடம் அந்த சிறிய மண்ணில் போதைப்பொருள் பிரச்சனை பெரிய பிரச்சனை என சொல்லி பாருங்கள்...

இது சர்வதேச பிரச்சனை இல்லை.

சர்வதேசங்களிலும் உள்ள பிரச்சனை.

அதை சர்வதேசங்களிலும் கையாளும் முறையை பாவித்து நாமும் கையாள முயல்வதில் தப்பில்லை.

இல்லாமல் “ முன்னர் போல் இப்போ இல்லையே” என கையை பிசைந்த படி, பழங்கதை கதைத்துத்தான் காலத்தை ஓட்டப்போகிறோம் என்றால் அதுவும் சரியே.

தவிரவும் இது சிறிய பிரச்சனை இல்லை.

அரச இயந்திரம் வேணும் என்றே ஊக்குவிக்கும், அல்லது பாரமுகமாக இருக்கும் ஒரு பாரிய பிரச்சனை. இதை எந்த சட்ட வலுவோ அல்லது அதிகாரமோ இல்லாமல் சரி செய்வது என்பது லேசுப்பட்ட விடயம் அல்ல.

இயக்கம் இருந்த போது அவர்கள் போதை பொருளை 100% கட்டுப்பசுத்தினார்கள். அவர்களிடம் 100% அதிகாரம் இருந்தது - முடியுமாய் இருந்தது.

இப்போ இதை கட்டுப்படுத்த முயல்வோருக்கு 1% அதிகாரம் கூட இல்லை. ஆகவே இது சிறிய பிரச்சனையும் அல்ல, இதை பழைய முறைகளை பாவித்து கட்டுப்படுத்தவும் இயலாது.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.