Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உகண்டா சில சாதனைகளில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றது.

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகள் 144 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள்  173/5
உகண்டா  39/10

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் ஓம் உங்கட கண்ணூறு தான்.

கொஞ்சம் கொஞ்சமாக கீழ வாறன்.

சந்தோசம் தானே.

ஆடத் தெரியாதவளுக்கு மேடை சரியில்லையாம்😁..............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்காவைப் பற்றி கேள்விப்பட்டது சரி தான்....நல்ல அணி....

சர‌சோத‌ர‌ன்  அண்ணா
உங்க‌ளை வேற இங்கை ஒருத‌ர் தொப்பி பிர‌ட்டியோ என்று கேட்டுபுட்டார்

தென் ஆபிரிக்கா வென்ற‌தால் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் தென் ஆபிரிக்கா தோத்து இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பிங்க‌ள்

சார் விளையாட்டில் ட‌வுள் கேம் இருக்க‌ கூடாது🤣😁😂..........................................

Edited by வீரப் பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பதினெட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி விக்கெட்டுகளை சடசடவென்று இழந்து, 12 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களுடன் சுருண்டது.

உலகக்கிண்ணப் போட்டியில் நெதர்லாந்து 2014 இல் சிறிலங்காவுக்கு எதிராக இதே 39 ஓட்டங்களுடன் சுருண்ட சாதனையோடு உகண்டா சேர்ந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் அஹீல் ஹொசெயின் 5 விக்கெட்டுகளை 11 ஓட்டங்கள் மட்டும் கொடுத்துக் கைப்பற்றியிருந்தார்.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 134 ஓட்டங்களால் வெற்றியீட்டிது

அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, கிருபன் said:

 

பதினெட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி விக்கெட்டுகளை சடசடவென்று இழந்து, 12 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 39 ஓட்டங்களுடன் சுருண்டது.

உலகக்கிண்ணப் போட்டியில் நெதர்லாந்து 2014 இல் சிறிலங்காவுக்கு எதிராக இதே 39 ஓட்டங்களுடன் சுருண்ட சாதனையோடு உகண்டா சேர்ந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் அஹீல் ஹொசெயின் 5 விக்கெட்டுகளை 11 ஓட்டங்கள் மட்டும் கொடுத்துக் கைப்பற்றியிருந்தார்.

முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 134 ஓட்டங்களால் வெற்றியீட்டிது

அனைவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

 

உற‌வுக‌ள் தெரிவு செய்த‌ 

அணிக‌ளின் பெய‌ரை

போடுங்கோ பெரிய‌ப்பு......................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் இப்ப எந்த இடத்தில் நிக்கிறேன்........!  😴

the-next-step-hug.gif

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

நான் இப்ப எந்த இடத்தில் நிக்கிறேன்........!  😴

the-next-step-hug.gif

த‌லைவ‌ர் என்ன‌ ந‌க்க‌லா............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ர் என்ன‌ ந‌க்க‌லா............................................

நக்கல் ஒண்டும் கிடையாது.......நெசமாத்தான் அப்பு........!  😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூக்கில் மைதான‌த்தில் ம‌ழையாம் விளையாட்டு சில‌ ம‌ணித்தியால‌ம் த‌டைப் ப‌ட‌க் கூடும்...............................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/6/2024 at 23:20, நீர்வேலியான் said:

எனக்கும் தொடர் முட்டை, விதி வளைச்சு வளைச்சு விளையாடுது. உங்களைதான் இப்போது மலைபோல நம்பியிருக்கிறேன். கோஷன்ஐ முதலிடத்தில் பார்க்க ரத்தக்கண்ணீர் வருகிறது, குதிரைக்கெல்லாம் கொம்பு முளைக்கும் என்று யார் கண்டார், இந்த அவமானம் எதிரிக்குக்கூட வரப்படாது  

பயப்படாதீங்கோ உங்களை வீரப்பன் தாங்குகிறார்.. விழவே மாட்டீங்கள்

IMG-3064.jpg

8 நீர்வேலியான் 20
19 வீரப் பையன்26 18

 

 

On 8/6/2024 at 23:34, ஈழப்பிரியன் said:

அப்ப கடைசியில் நிற்கும் போது சந்தோசமாக இருந்ததோ?

இப்படியெல்லாம் publicக்காக கேட்டு முதல்வரிட்ட போட்டுக் கொடுக்கிறது சரியா இல்லை😥

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ரசோதரன் said:

பிடிச்ச நம்பர், பிடிச்ச நம்பர் என்று சொல்லிக் கொண்டு அங்கேயே நிற்கிற மாதிரி தெரியுது.........😜.

யார் கண்பட்டதோ தெரியல்ல அந்த இடமும் போய்விட்டுது.. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, வீரப் பையன்26 said:

சர‌சோத‌ர‌ன்  அண்ணா
உங்க‌ளை வேற இங்கை ஒருத‌ர் தொப்பி பிர‌ட்டியோ என்று கேட்டுபுட்டார்

தென் ஆபிரிக்கா வென்ற‌தால் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் தென் ஆபிரிக்கா தோத்து இருந்தால் வேறு மாதிரி எழுதி இருப்பிங்க‌ள்

சார் விளையாட்டில் ட‌வுள் கேம் இருக்க‌ கூடாது🤣😁😂..........................................

🤣.........

நீங்க பார்க்காதா கிரிக்கெட்டா, குருஜீ................ 15 ஓவர் மட்டும் தென் ஆபிரிக்கா சொத்த சொதப்பல். வழமையாக அரை இறுதி, இறுதிப் போட்டிகளில் தான் இப்படி சொதப்புவார்கள், இப்ப புதிதாக முதல் சுற்றிலேயே சொதப்ப ஆரம்பித்து விட்டார்களோ என்று நினைக்க..........கடைசி ஐந்து ஓவரில் மீண்டு வந்தனர்......... அதால இந்த முறை இவை தான் கப்பை தூக்கப் போயினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ரசோதரன் said:

அவுஸ் இப்படி ஒரு பிட்ச் செய்து கொடுத்ததே கிவிஸ் குரூப்பை கவிழ்க்கவாக இருக்குமோ....

எப்படியும் Rugbyல All Blacksசிடம் வேண்டிக்கட்டிவினம் தானே அப்ப பார்த்துக்கொள்ளலாம் அவுஸை..spacer.png

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, வீரப் பையன்26 said:

நியூக்கில் மைதான‌த்தில் ம‌ழையாம் விளையாட்டு சில‌ ம‌ணித்தியால‌ம் த‌டைப் ப‌ட‌க் கூடும்...............................................

 

இந்த போட்டியை பார்க்க முடியாதே, வெளியில் போக வேண்டி இருக்கே என்ற நிலை......கடவுள் இருக்கார், சார்.....

4 minutes ago, P.S.பிரபா said:

எப்படியும் Rugbyல All Blacksசிடம் வேண்டிக்கட்டிவினம் தானே அப்ப பார்த்துக்கொள்ளலாம் அவுஸை..spacer.png

இது பெரிய மாயாண்டி குடும்பப் பகை போல......ஒன்றுமே தெரியாத அப்பாவி அமெரிக்கா குடும்பச் சண்டைக்கு நடுவில போய் மாட்டுப்பட்டிட்டுது...........

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழை குழப்பும் போல் தெரிகிறதே 40 ஓவரும் ஆடி முடிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வீரப் பையன்26 said:

உற‌வுக‌ள் தெரிவு செய்த‌ 

அணிக‌ளின் பெய‌ரை

போடுங்கோ பெரிய‌ப்பு......................................................................................

https://yarl.com/forum3/topic/291526-யாழ்-கள-t20-உலகக்-கிண்ண-கிரிக்கெட்-போட்டி-2024/?do=findComment&comment=1718194

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, புலவர் said:

மழை குழப்பும் போல் தெரிகிறதே 40 ஓவரும் ஆடி முடிப்பார்களா?

ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ ப‌ட‌தாம் புல‌வ‌ர் அண்ணா.........................................

4 minutes ago, கிருபன் said:

ம‌ன்னிக்க‌னும் பெரிய‌ப்பு நான் அதை க‌வ‌னிக்க‌ல‌ உற‌வுக‌ள் வேக‌மாக‌ எழுதுவ‌தால் ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளை தான்டுது அது

 

நேற்றே நீங்க‌ள் போட்டு விட்டிங்க‌ள்...................................................

Posted

பாகிஸ்தான் களதடுப்பை தெரிவு செய்துள்ளது.

முதல் ஆறு ரோகிட்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டு தொட‌ங்கி ஒரு ஓவ‌ர் போட்டு முடிந்த‌ பிற‌க்கு ம‌ழை வ‌ந்து விட்ட‌து....................................

Posted

மீண்டும் போட்டி 10  நிமிடத்தில் தொடங்கவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கோலி ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் 😄




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல ஒரு அலசல். இணைப்பிற்கு நன்றி விசுகர். அதிலும்… சென்ற தேர்தலில் பெற்ற வாக்கையும் இம்முறை பெற்ற வாக்கையும் ஒப்பிட்டமை சிறப்பு. 👍🏽
    • b யும் d யும்  சேர்ந்து வந்த போது . ..........!  😁
    • மிகச்சிறப்பான தேர்தலாக இந்தமுறை 2024 பொபதுத் தேர்தல் முடிவுகள் வந்து இருக்கிறது..  சிங்கள மக்களும் தமிழ்மக்களும் பல பாடங்களை அரசியல் வாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்கள்,  அத்தோடு யாழ்மக்கள் சில பாடங்களை ஒருசில அரசியல் வாதிகளிடமிருந்து கற்கவும் போகிறார்கள் (அது வேறுகதை)..   🏠 எகத்தாளமும், சுத்துமாத்தும், பலசதிகளை சிரித்து கொண்டே செய்து விட்டு மக்களை முட்டாள்களாக நினைத்து பேட்டி கொடுக்கும் சுமந்திரன், தன்மீதான வெறுப்பை நிறையவே சம்பாதித்து தனதும் தமிழரசு கட்சியினதும் தோல்வியை தானே உறுதிப்படுத்தி இருந்தார்..   🚴 24 கரட் தனமும் தனது பாரம்பரை கட்சியில் , தலைமை பதவியை பாதுகாப்பதே பிரதான நோக்கமாகவும், களத்தில் இறங்கி பணியாற்றும் செயற்றிறன் இன்றி ஓதுவார் தமது இருப்புக்காக பலதையும் சொல்லக்கேட்டு கட்சியை சீரழித்த கஜேந்திரகுமார்; சுமந்திரன் புராணம் பாடுவதை தவிர தமிழரசின் விரக்தி வாக்குகளை தனதாக்கி 2020 வளர ஆரம்பித்த மக்கள் அலையை மேலும் வளர்த்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்காது அவர் விரும்பியவாறே ஒரு ஆசனத்தை மட்டும் தக்க வைத்துள்ளார்.    🐚 தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து உருப்படியாக பாராளுமன்றத்தில் கதைக்க கூட தெரியாத பழைய அயுதக்குழுக்கள் எல்லாம் சேர்ந்து தாம் அறமற்றவர்கள் எனகாட்ட அடிப்படை அறமின்றி சங்கை திருடி பின்கதவால் பாராளுமன்றம் வரப்பார்தார்கள் கிடைக்கவில்லை   🦌 கிடைத்த குறுகிய காலத்தில் பல உள்ளக வெளியக நெருக்கடிகளுக்கு மத்தியில் நல்லூர் பிரதேச்சபை மற்றும் மாநரசபையை சிறப்பாக நடத்தினாலும், அடப்படை கட்டமைப்பு ஏதுமற்ற மிகப்புதிதாக தொடங்கப்பட்ட ஒரு கட்சியில் தமது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக தம்மை இணைத்த மணி அணி, சைக்கிளில் இருந்து பிரிந்தாலும் அவர்களை குறை சொல்வதையும் அவர்களது துரோகப்பட்டங்களுக்கு பதில் சொல்வதிலும் குறியாக இருந்தார்களே தவிர அவர்களை விட மேம்பட்டவர்களாக தம்மை நிறுவாது மக்களிடம் வாக்கு கேட்டார்கள்.. கிடைக்கவில்லை.   🥭 சுமந்திரனின் திமிர்த்தனத்தாலும் தனக்கு கட்சிக்குள் எடுபிடிகளாகவும் இல்லை என்பதற்காக தமது விலக்கப்பட்ட தனது வியாபாரத்திலேயே குறியாக இருக்குமர சரவணபவன், தவராசா போன்றோர் தமது ஈகோவுக்காக்கவும் அரசியல் இருப்புக்காகவும் மாம்பழத்தில் நின்றார்கள். கிடைக்கவில்லை   இதில் மக்களை பொறுத்தவரை ஒருகட்சிக்கு மட்டும் வாக்கினை அள்ளி வளங்குவதற்கு யாருமே ஒருவரை விட ஒருவர் திறமாக இருக்கவில்லை ..  ஆனால் எல்லோரும் தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் ஆணையை கோரி நின்றார்கள் மக்கள் குளத்தோடு கோவித்துகொண்டு கழுவாமல் இருக்கமுடியாதென அனைவருக்கும் தமது வாக்குகளை பகிரந்தளித்தார்கள்.     ஒட்டுமொத்தமாக இந்த 5 கட்சிகளுக்கும் இம்முறை யாழில் விழுந்த தமிழ்த்தேசிய வாக்குகள் -140,000. 2020 இல் கிடைத்தது 200,000 வாக்குகள். ஊசிக்கும், பல சுயேட்சைகளுக்கும், போக மிக சொற்ப வாக்குகளே அநுரபக்கம் போயிருக்கிறது.   அத்தோடு தமிழ்த்தேசியத்தின் பக்கம் திருப்பமுடியத சலுகைகளை நோக்கிய வாக்குதான் NPP பக்கம் சென்றிருக்கிறது.   2020 தேர்தலில் யாழில் டக்கிளஸ் உள்ளிட்ட தேசியக்கட்சிகள் பெற்ற வாக்குகள் 115,000 2024 இல் JVP+ டக்கிளஸ் மற்றய தேசியக்கட்சிகள் = 114,000   எங்கடசனம் தமிழ்த்தேசியத்தில் நின்று மாறாது தமிழ் அரசியல் வாதிகளுக்கும், அநுரவுக்கும் சிறப்பான செய்தியை சொல்லியிருக்கிறார்கள். Copied from Para https://www.facebook.com/share/1JW4gY83aL/பரன்
    • இரண்டெழுத்து என்றால் புலி என்றுதான் எனக்குத் தெரியும்😜 https://www.facebook.com/share/p/15HdbvCenB/?mibextid=WC7FNe
    • இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும்  நன்றிகள். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.