Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்கும் அறிவிப்பு ஒன்றினை நோர்வே முன்னெடுக்க உள்ளது. 

இதனை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக ஸ்பெயின் அயர்லாந்து போன்ற நாடுகளும் ஆதரிப்பதாக அறிவிக்க உள்ளன.

இஸ்ரெயில் தனது கண்டனத்தை எக்ஸ் இல் தெரிவித்துள்ளது.

 

பிரெஞ்சுச் செய்தி மூலம்

https://www.ouest-france.fr/monde/palestine/guerre-israel-hamas-plusieurs-pays-europeens-vont-reconnaitre-lexistence-dun-etat-palestinien-bd808140-17fc-11ef-89e1-9d0ea397ae43

  • தொடங்கியவர்

நோர்வே அயர்லாந்து நாடுகளிலிருந்து இஸ்ரெயில் தனது தூதுவர்களைத் திருப்பியழைத்துள்ளது.

28 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் பலஸ்தீனை அங்கிகரிக்கப்படும் என்று ஸ்பெயின் அறிவித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் , நத்தனுயாகு செவிடர் போல் செயற்படுவதாக தெரிவித்துள்ளது.
 

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் அறிவிப்பு - தூதுவர்களை மீள அழைக்கின்றது இஸ்ரேல்

Published By: RAJEEBAN   22 MAY, 2024 | 02:19 PM

image
 

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை  அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நாடுகளிற்கான தங்கள் தூதுவர்களை இஸ்ரேல் உடனடியாக மீள அழைத்துள்ளது.

பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்தியகிழக்கில் அமைதி நிலவாது  என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

மே 28ம் திகதி நோர்வே பாலஸ்தீன தேசத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசம் தீர்வே மத்தியகிழக்கில்  அமைதிக்கு அவசியமான விடயம் என தெரிவித்துள்ள பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரால்லாத நோர்வே இரண்டு தேசம் தீர்விற்கு உறுதியான ஆதரவை வெளியிட்டு வந்துள்ளது.

இரண்டு தேசம் கொள்கையை ஆதரிக்காத ஹமாஸ் அமைப்பும் ஏனைய பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேலுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/184227

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்தியகிழக்கில் அமைதி நிலவாது  என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஈழத்தீவிலும் இரண்டு தேசங்கள் அமையாது அமைதியும் திரும்பாது,இனவழிப்பும் முடிவுறாதென்பதை எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?

  • தொடங்கியவர்
2 minutes ago, nochchi said:

பலஸ்தீனத்தில் மட்டுமல்ல ஈழத்தீவிலும் இரண்டு தேசங்கள் அமையாது அமைதியும் திரும்பாது,இனவழிப்பும் முடிவுறாதென்பதை எப்போது ஏற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?

இலங்கையில் அமைதி இல்லையென்றும் இனவழிப்பு நடக்கிறது என்றும் அங்குள்ள எமது தலைவர்கள் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

இலங்கையில் அமைதி இல்லையென்றும் இனவழிப்பு நடக்கிறது என்றும் அங்குள்ள எமது தலைவர்கள் சொல்லவில்லை.

தலைவர்களுக்கு அரசபாதுகாப்பும் ஐந்துநட்சத்திர உணவும் வழங்கப்பட்டு,அப்பப்போ பெட்டிகளும் கைமாறுவதால் அவர்கள் கூறப்போவதில்லை. ஆனால், மக்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் அல்லவா? அது எதற்காக?

  • தொடங்கியவர்
19 minutes ago, nochchi said:

தலைவர்களுக்கு அரசபாதுகாப்பும் ஐந்துநட்சத்திர உணவும் வழங்கப்பட்டு,அப்பப்போ பெட்டிகளும் கைமாறுவதால் அவர்கள் கூறப்போவதில்லை. ஆனால், மக்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் அல்லவா? அது எதற்காக?

இதுவரை 146 நாடுகள் பலஸ்தீனை அங்கிகரித்தபோதும் அது தனிநாடாக்கப்படவில்லை.

நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, இணையவன் said:

இதுவரை 146 நாடுகள் பலஸ்தீனை அங்கிகரித்தபோதும் அது தனிநாடாக்கப்படவில்லை.

நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

 உண்மைதான்!

நாடுகளின் தோற்றம் என்பது தனியே போராடும் தேசத்தவரது வலுமட்டுமன்றி அனைத்துல சூழலும் தாக்கம் செலுத்தவல்லதே என்பதை யூகோஸ்லாவியாவின் உடைவும், புதிய நாடுகளின் தோற்றமும் புலப்படுத்தும் உண்மை. ஆனால், அனைத்துலகின் சமகால மாற்றத்தை கவனித்து நாமும் எமது விடுதலைக்கான குரலை அனைத்துலக அரங்கில் ஒலிக்கச் செய்யக்கூடிய தலையற்ற அனாதைகளாக நிற்கின்றோம் எனபதே தமிழினத்தின் துயரநிலையாகும். 
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

தலைவர்களுக்கு அரசபாதுகாப்பும் ஐந்துநட்சத்திர உணவும் வழங்கப்பட்டு,அப்பப்போ பெட்டிகளும் கைமாறுவதால் அவர்கள் கூறப்போவதில்லை. ஆனால், மக்கள் ஆங்காங்கே போராடுகிறார்கள் அல்லவா? அது எதற்காக?

இப்ப‌டியான‌துக‌ள் ப‌ண‌த்துக்காக‌ எந்த‌ கீழ் ம‌ட்ட‌த்துக்கும் போகுங்க‌ள்......................குள்ள‌ ந‌ரி ர‌னிலுட‌ன் கை குலுக்கின‌ ஆட்களுக்கு அவ‌ரின் ந‌ரி புத்தி இவ‌ர்க‌ளிலும் இருக்கும்.....................2009க்கு பிற‌க்கு ஈழ‌ அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து இல்லை

 

இந்த‌ காணொளிய‌ பாருங்கோ அமெரிக்கா பாராள‌ம‌ன்ற‌த்தில் எம‌க்கான‌ தீர்வு ப‌ற்றி இப்போது பேச‌ப் ப‌ட்டு இருக்கு....................................

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இருக்கும் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7 மணி நேரங்களுக்கு முன்னர்

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.

பாலத்தீன அரசை உருவாக்குவது இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகளை முன்னேற்றுவதற்கு உதவும் என பாலத்தீன நாட்டை அங்கீகரிக்க ஆதரவளிக்கும் நாடுகள் நம்புகின்றன. ஆனால் அது பதற்ற நிலையை அதிகரிக்கும் என்று இஸ்ரேல் கூறுகிறது.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலத்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறியதோடு, அதை மே 28ஆம் தேதி செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே இரு நாடுகள் தீர்வை இஸ்ரேல் ஆபத்தில் ஆழ்த்துவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறியுள்ளார். அதோடு பாலத்தீனம் தொடர்பான இஸ்ரேலின் கொள்கையை வலி மற்றும் அழிவுக்கான கொள்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை “ஹமாஸ் கொலையாளிகளுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதைப் போன்றது” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் வர்ணித்துள்ளார். மற்றொருபுறம், ஹமாஸ் மற்றும் பாலத்தீன அதிகாரம் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

இந்த அறிவிப்பிற்குப் பதிலடி கொடுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம், “பாலத்தீனிய அரசை அங்கீகரிப்பது அதிக பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும், பிராந்தியத்தில் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் அமைதிக்கான அத்தனை வாய்ப்புகளையும் பாதிக்கும்."

"ஹமாஸின் கைப்பாவையாக மாறிவிடாதீர்கள். ஒரு பரந்த பிராந்திய சூழலில் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே முன்னேற்றத்தை அடைய முடியும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 

நார்வே பிரதமர் கூறியது என்ன?

நார்வே மற்றும் அயர்லாந்து கூறியது என்ன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,செய்தியாளர்களிடம் பேசும் நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர்

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலத்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறினார்.

மேலும், “நிரந்தரத் தீர்வு என்பது இரு நாடுகளின் ஆதரவின் மூலம் மட்டுமே அடையப்படும். பாலத்தீனிய மக்களுக்கு ‘சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படை மற்றும் சுதந்திரமான உரிமை உள்ளது’. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் அந்தந்த நாடுகளில் நிம்மதியாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு," என்று கூறினார்.

“காஸாவில் நடந்து வரும் போர், பாலத்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில்தான் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என்பது தெளிவாகியுள்ளது”, என நார்வே பிரதமர் ஸ்டோர் கூறுகிறார்.

அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் பாலத்தீனிய அதிகாரத்தில் இருந்து பெறப்பட்ட ஓர் அரசை அடைவதே குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். இரு நாடுகளுக்கான தீர்வு என்பதில்தான் இஸ்ரேலின் ‘சிறந்த நலன்களும்’ அடங்கியிருப்பதாக நார்வே நம்புவதாக ஸ்டோர் கூறுகிறார்.

“பாலத்தீனிய அரசை அங்கீகரிப்பதுதான் மோதலுக்கு ஒரே மாற்றாக இருக்கும். இரண்டு நாடுகள், அருகருகே, அமைதி மற்றும் பாதுகாப்பில் வாழ்கின்றன. நார்வேவின் அடிச்சுவடுகளை ‘பின்தொடர’ மற்ற நாடுகளுக்கு இந்த நடவடிக்கை ஒரு ‘வலுவான’ செய்தியை அனுப்புகிறது" என்று நார்வே பிரதமர் கூறினார்.

ஸ்பெயின் பிரதமர் கூறியது என்ன?

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், மூன்று காரணங்களுக்காக பாலத்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகக் கூறினார்.

“அமைதி, நீதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய மூன்று வார்த்தைகளின் மூலம் இதை நாம் புரிந்துகொள்ள முடியும். இரு நாடு தீர்வுக்கு மதிக்கப்பளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்புக்கு பரஸ்பர உத்தரவாதமும் இருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

 
பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,DIEGO RADAMES/EUROPA PRESS VIA GETTY IMAGES

“இருதரப்பும் அமைதிக்காகப் பேசுவது ஸ்பெயின் உட்படப் பல நாடுகளுக்கு முக்கியமானது. அதனால்தான் நாம் பாலத்தீனத்தை அங்கீகரிக்கப் போகிறோம்.”

பெட்ரோ சான்செஸ் தனது உரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, “பாலத்தீனத்துக்கான அமைதித் திட்டம் எதுவும் பிரதமர் நெதன்யாகுவிடம் இல்லை,” என்று கடுமையாக விமர்சித்தார்.

“அக்டோபர் 7 நிகழ்வுகளுக்குப் பிறகு ஒரு பயங்கரவாதக் குழுவை எதிர்த்துப் போராடுவது சரியானது மற்றும் அவசியமானது. ஆனால், நெதன்யாகுவின் நடவடிக்கைகள் காஸா மற்றும் பாலத்தீனத்தின் பிற பகுதிகளில் வேதனையையும் அழிவையும் மிகுந்த விரோதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இது இரு நாடு தீர்வை ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

அயர்லாந்து பிரதமர் கூறியது என்ன?

இதற்கிடையில், அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸும், “அயர்லாந்து நாடு பாலத்தீன அரசை அங்கீகரிக்கும்” என்று கூறினார்.

டப்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், “பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது அமைதியைக் கொண்டு வருவதற்கு மிகத் தேவையான நடவடிக்கை” என்று விவரித்தார்.

“இது இருநாடு தீர்வுக்கான ஆதரவு. பாலத்தீனம், இஸ்ரேல் இடையே சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கான ஒரே நம்பகமான பாதை இதுதான். பாலத்தீனத்தை அங்கீகரிப்பதற்கான முடிவு, குறிப்பாக அது சரியான செயலாக இருக்கும்பட்சத்தில், காலவரையின்றி காத்திருக்கக்கூடாது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இஸ்ரேலின் பதிலடி என்ன?

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,OREN BEN HAKOON/AFP VIA GETTY IMAGES

தற்போது பாலத்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவது குறித்து மூன்று நாடுகள் பேசிவரும் சூழலில், இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்வினையாற்றியுள்ளது. இந்த மூன்று நாடுகளில் இருந்தும் தனது தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளது.

இது “ஹமாஸ் கொலையாளிகளுக்கு தங்கப் பதக்கம் கொடுப்பதைப் போன்றது” என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

"நான் ஒரு தெளிவான செய்தியை அனுப்புகிறேன். இஸ்ரேல் தனது இறையாண்மையைக் குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு எதிராக மற்றும் அதன் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக ஒருபோதும் பின்வாங்காது," என்று இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறினார்.

"இஸ்ரேல் இதை அமைதியாகக் கடந்து செல்லாது. வேறு கடுமையான விளைவுகளும் கண்டிப்பாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-கிவிரும் வெளியுறவு அமைச்சரின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசியுள்ளார்.

"இன்று பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாகப் பேசும் நாடுகள் நுக்பா படை (ஹமாஸின் உயரடுக்குப் படைகள்), கொலையாளிகள் மற்றும் ஒடுக்குமுறையாளர்களுக்கு வெகுமதி அளிக்கின்றன. பாலத்தீன அரசைப் பிரகடனப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்," என்று அல்-அக்ஸா வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்ரேலின் பதிலடி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்

இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் அவி ஹேமன் பிபிசியிடம் "இது எந்தத் தரப்புக்கும் உதவாது" என்று கூறினார்.

"இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. ஒருவேளை இஸ்ரேல் மக்கள் இந்த முடிவை எடுத்தால், பேச்சுவார்த்தை நடந்து இந்த முடிவுக்கு வந்தால், இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்.

"இது பாலத்தீனியர்களுக்கு உதவாது, இஸ்ரேலியர்களுக்கு உதவாது, அமைதிக்கு அருகில்கூட நம்மை அழைத்துச் செல்லாது," என்றும் அவர் தெரிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் தால் ஹென்ரிச், “உலகத்துக்கும், ஹமாஸுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும், அக்டோபர் 7ஆம் தேதி நடந்த படுகொலைக்குப் பணம் கொடுக்கப்பட்ட செய்தியை இன்று இந்த மூன்று நாடுகளும் வழங்குகின்றன,” என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் எதிர்வினை என்ன?

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகளின் முடிவுகளை ஹமாஸ் மற்றும் பாலத்தீன அதிகாரம் வரவேற்றுள்ளது.

இந்த முடிவு பாலத்தீன விவகாரத்தில் சர்வதேச சூழ்நிலையில் ‘முக்கியமான மற்றும் தீர்க்கமான’ திருப்புமுனையாக அமையும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், “பாலத்தீன மக்களின் வலுவான எதிர்ப்பின் காரணமாக இது சாத்தியமானது” என்று ஹமாஸின் மூத்த தலைவர் பாஸெம் நயீம் கூறினார்.

இந்தத் தொடர்ச்சியான அங்கீகாரங்கள் பாலத்தீன மக்களின் உறுதி மற்றும் எதிர்ப்பின் விளைவு என்று நயீம் கூறினார்.

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து - கொந்தளிக்கும் இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதற்கிடையில் பாலத்தீன அதிகார சபையின் உறுப்பினரும் ரமல்லாவில் உள்ள பலதரப்பு விவகாரங்களுக்கான உதவி அமைச்சருமான அம்மார் ஹிஜாசி, அமைதியைக் கொண்டு வர இந்த நடவடிக்கை மிக முக்கியமானது என்று கூறியுள்ளார்.

“எங்கள் கருத்துப்படி, மக்களிடையே அமைதியை மீட்டெடுப்பதற்கான சாத்தியங்களை இஸ்ரேல் அழிக்க முயலும் ஒரு முக்கியமான நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.”

“எனவே பாலத்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திரம், உரிமைகள் மற்றும் குறிப்பாக சுயநிர்ணய உரிமையை வழங்குவதுதான் பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான ஒரே வழி என்பதை இந்நாடுகள் ஒன்றாகக் காட்டுகின்றன,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சௌதி அரேபியா என்ன சொல்கிறது?

இந்த முடிவை வரவேற்றுள்ள சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் இதுவொரு நேர்மறையான நடவடிக்கை என்றும் மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

கடந்த 1967ஆம் ஆண்டு மாநாட்டின்படி, பாலத்தீன அரசை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை (இன்னும் பாலத்தீன அரசை அங்கீகரிக்காதவர்கள்) சௌதி வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது பாலத்தீன மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு உதவும் எனவும் அனைவருக்கும் நீதி மற்றும் விரிவான அமைதிக்கு வழி வகுக்கும் எனவும் வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

பாலத்தீனப் பகுதிகள் எவை?

பாலத்தீனப் பகுதிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாலத்தீனிய மக்கள் தொகை என்பது வரலாற்று பாலத்தீனத்தில் வாழ்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த புலம்பெயர்ந்தோர் முக்கியமாக அண்டை அரபு நாடுகளில் உள்ளனர்.

இஸ்ரேலுடனான தொடர் மோதலால் மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலத்தீன அரசை உருவாக்கும் முயற்சிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள பாலத்தீனியர்கள் 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். மேற்குக் கரையில் இஸ்ரேல் கட்டியுள்ள குடியேற்றங்களில் 500,000 மக்கள் வசிக்கின்றனர், மேலும் அவை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்ட விரோதமானவை எனக் கருதப்படுகின்றன. ஆனால் இஸ்ரேல் அதை மறுக்கிறது.

சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பாலத்தீனியர்கள், தங்கள் விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டை மட்டுமே அடைந்துள்ளனர்.

பாலத்தீனிய அரசியல் தலைமையானது மேற்குக் கரையில் உள்ள ஃபத்தா கட்சிக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே பிளவுபட்டுள்ளது. காஸா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலுடன் தற்போது ஒரு தீவிரமான போரில் ஈடுபட்டுள்ளது.

 

எத்தனை நாடுகள் பாலத்தீனத்தை அங்கீகரித்துள்ளன?

பாலத்தீன நாட்டிற்கு அங்கீகாரம் அளித்த நார்வே மற்றும் அயர்லாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

குறைந்தபட்சம் 140 நாடுகள் பாலத்தீன அரசை அங்கீகரித்துள்ளன என்று சமீபத்தில் ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 22 நாடுகளின் அரபுக் குழு, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் 120 உறுப்பினர்களைக் கொண்ட அணிசேரா இயக்கம் ஆகியவை அடங்கும்.

பாலத்தீன அரசை முறையாக அங்கீகரிக்காத நாடுகளில் பிரிட்டனும் அமெரிக்காவும் அடங்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் லார்ட் கேமரூன், “பிரிட்டன் அரசாங்கம், அதன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, பாலத்தீனிய அரசை அங்கீகரிப்பது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் அதைச் சேர்ப்பது பற்றிய பிரச்னையைப் பார்க்கலாம்" என்று பரிந்துரைத்தார்.

இஸ்ரேல் பாலத்தீனிய அரசை அங்கீகரிக்கவில்லை மற்றும் தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலத்தீன அரசை உருவாக்குவதை எதிர்க்கிறது. அத்தகைய அரசு இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அது கருதுகிறது.

https://www.bbc.com/tamil/articles/cx88nxd5ew3o

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது - அமெரிக்கா கருத்து

Published By: RAJEEBAN   23 MAY, 2024 | 12:22 PM

image
 

இஸ்ரேலிற்கு பாரம்பரியமாக ஆதரவை வெளியிட்டு வந்த நாடுகளால் இஸ்ரேல் தற்போது இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்படுவது  குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக  அறிவித்துள்ள நிலையிலேயே அமெரிக்க இஸ்ரேல் தனிமைப்படுவது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்படுவது  குறித்து கரிசனையடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம் என அவர் பதிலளித்துள்ளார்.

இது நியாயமான கேள்வி சர்வதேச அமைப்புகளில் இஸ்ரேலிற்கு ஆதரவாக செயற்படுகின்ற நாடு என்ற அடிப்படையில் நாங்கள் இஸ்ரேலிற்கு எதிரான குரல்கள் அதிகரிப்பதை பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கு கடந்த காலங்களில் ஆதரவை வெளியிட்ட குரல்கள் கூட வேறுதிசையில் பயணிக்கின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இது எங்களிற்கு கரிசனையளிக்கின்றது இது இஸ்ரேலின் நீண்டகால பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்யாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாக்கும் மனிதாபிமான உதவிகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை  ஹமாசை தோற்கடிக்கும் தந்திரோபாயத்தை முன்னெடுப்பதன் மூலமே இஸ்ரேல் சர்வதேச ரீதியில் தனிமைப்படுவதை தவிர்க்க முடியும் என சுலிவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும் ஒரு தலைப்பட்சமான பிரகடனங்கள் மூலம் அதனை அடைய முடியாது எனவும்  அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன்  தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/184298

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.