Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!

Vhg மே 23, 2024
1000247285.jpg

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) பிரதமராக மீண்டும் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் பிரதமருக்கான தெரிவு நடைபெற்றது. 

அதேவேளை, மொத்தம் 91 தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளதுடன் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

spacer.png

spacer.png

https://www.battinatham.com/2024/05/blog-post_636.html

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது. 

உருத்திரகுமார் ஏற்கனவே ஒரு கையாளாகாத ஆள் என்று நிரூபித்தவர்.

இனிமேல், தான் ஒரு பொம்மை என்று நிரூபிப்பார். 

அம்புட்டுதே. 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் இருக்கின்றார்கள் என்ற விசயம் மறந்தே போய் இருந்தது...........இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஞாபகம் இருக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

இவர்களும் இருக்கின்றார்கள் என்ற விசயம் மறந்தே போய் இருந்தது...........இனிமேல் கொஞ்ச நாளைக்கு ஞாபகம் இருக்கும். 

எனக்கும் மறந்துவிட்டது! 

ஆனாலும் பிரதமரும் கூட்டுக்களவாணிகளும் இன்னும் ஓயவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கூட்டுக்களவாணிகளும்

 

13 hours ago, Kapithan said:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தற்போது முற்று முழுதாக இந்தியாவினதும் இலங்கை அரசினதும் நேரடிக் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டது.

 

செயற்பாடுகளில்   (அல்லது வேறு) ஆதாரம் இருக்கிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kadancha said:

 

 

செயற்பாடுகளில்   (அல்லது வேறு) ஆதாரம் இருக்கிறதா? 

ஆதாரம் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது நாள் வரை இந்த நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன செயற்பாடுகளைச் செய்துள்ளது? 

இதனைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியுமா?

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, P.S.பிரபா said:

இது நாள் வரை இந்த நாடு கடந்த அரசாங்கம் என்பது என்ன செயற்பாடுகளைச் செய்துள்ளது? 

இதனைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியுமா?

 

நாடு கடந்த அரசாங்கத்தில் பிரதமருடன் பல அமைச்சர்களும் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை முதன் முதலில் கேட்ட போது, பல வருடங்களின் முன், எப்படியாவது சிரிப்பை அடக்க வேண்டுமே என்று கொஞ்சம் கஷ்டமாகப் போய்விட்டது.

நாங்கள் எங்கள் பகுதியில் இருக்கும் சில நகரங்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் இணைந்து வருடா வருடம் ஒரு ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்திக் கொண்டிருக்கின்றோம். முக்கியமாக ஒரு கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி. இரண்டு நாட்கள் நடக்கும். பல வருடங்களின் முன் ஒரு வருடத்தில் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர் தான் இந்த அரசாங்கத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் என்று சொன்னார். இந்த இடத்தில் தான் எனக்கு நான் மேலே சொல்லியிருந்த அந்த அடக்க வேண்டிய கஷ்டம் ஏறபட்டது. எங்களின் இந்த விளையாட்டுகள் மற்றும் ஒன்றுகூடலிற்கு அரசாங்கமும் வரலாமா என்று என்னைக் கேட்டனர். கேட்டுச் சொல்கின்றேன் என்று சொன்னேன்.

நண்பர்களை கேட்ட போது, பலத்த எதிர்ப்பு. இவையெல்லாம் யார், இதுக்குள்ள ஏன் அரசியல் என்று எல்லோரும் மறுத்து விட்டனர். அத்துடன் இது முடியவில்லை.

முன்னர் இங்கு மாவீரர் தினம் பெரிதாக நடக்கும். பின்னர் அமெரிக்க அரசின் தடை மற்றும் சில கைதுகள் காரணமாக இங்கு மாவீரர் தினம் தடைப்பட்டது. உருத்திரகுமார் அவர்கள் நல்ல பேச்சு வல்லமை உள்ளவர். கொழும்பு சட்டக் கல்லூரி என்று நினைக்கின்றேன். இங்கு மாவீரர் தினங்கள் பெரிதாக நடைபெற்ற போது மேடையில் பேசியிருக்கின்றார்.

தடையின் பின்னரும் நாங்கள் சில குடும்பங்கள் மட்டும் ஒன்று சேர்ந்து மாவீரர் தினத்தை சிறிய அளவில் செய்து கொண்டிருந்தோம் ஒவ்வொரு வருடமும், இன்று வரையும். பெரும் பேச்சாளர்கள் எவரும் வருவதில்லை, நாங்களும் கூப்பிடுவதில்லை. சில வருடங்களின் பின், அமெரிக்க அரசு இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது. அத்தோடு நாங்கள் வெறும் 'பிள்ளைப் பூச்சிகள்' என்று அதற்கு தெரிந்தும் விட்டது போல. மீண்டும் மாவீரர் தினங்கள் பெரிதாக ஆரம்பித்தன.

எங்களின் ஒரு வருட நிகழ்விற்கு, அரசாங்கமும் வருவதாகச் சொல்லி, பிரதமரும், அமைச்சர்களும் வந்தனர். அவர்களின் வருடாந்திர கூட்டமும் நடந்தது. அங்கு நடந்தவையை நேரே பார்த்தால் தான் நீங்கள் நம்புவீர்கள். மொத்தத்தில் இது என்ன கூத்து என்றே பார்த்துக் கொண்டிருந்த எங்கள் எல்லோருக்கும் தோன்றியது.

இவர்களை இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும், அதே அரசுகள் என்னை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் ஒன்றே. அந்த அரசுகளுக்கு ஒரு சல்லிக்கு பிரயோசனம் கிடையாது என்று சொல்கின்றேன்.      

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2009 அவலங்களுக்கு பின் நாடு கடந்த தமிழ் அரசின் மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அது ஒரு நாடக கூட்டுகள் என்பதை சிறிது காலத்திலேயே உணர்ந்து விட்டேன்.

2 hours ago, ரசோதரன் said:

நாடு கடந்த அரசாங்கத்தில் பிரதமருடன் பல அமைச்சர்களும் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை முதன் முதலில் கேட்ட போது, பல வருடங்களின் முன், எப்படியாவது சிரிப்பை அடக்க வேண்டுமே என்று கொஞ்சம் கஷ்டமாகப் போய்விட்டது.

என்னது கெட்ட கேட்டுக்கு அமைச்சரவை வேற இருக்கா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

15வ‌ருட‌த்தை வீன் அடித்து விட்டார்க‌ள்

இவ‌ர்க‌ளை இனி ந‌ம்ப‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன்

உருத்திரகுமார் வாய் சொல் ந‌ப‌ர்

 

இவ‌ரின் மாவீர‌ நாள் உரைக்கு ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு இல்லை..........................நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றின‌து தான் மிச்ச‌ம்........................இவ‌ர்க‌ளை நானும் எட்டி பார்க்காம‌ விட்டு க‌ண‌ காலம்......................................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

2009 அவலங்களுக்கு பின் நாடு கடந்த தமிழ் அரசின் மீது ஓரளவு நம்பிக்கை வைத்திருந்தேன். அது ஒரு நாடக கூட்டுகள் என்பதை சிறிது காலத்திலேயே உணர்ந்து விட்டேன்.

என்னது கெட்ட கேட்டுக்கு அமைச்சரவை வேற இருக்கா? 🤣

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இலங்கை அரசின் நேரடி முகவர் ஒருவர் தேர்தலில் நிற்காமலேயே (?) தெரிவுசெய்யப்பட்டதுதான். 

இன்னொரு விடயம், ஒருவரை நீங்கள் உருத்திரகுமாருக்குப் போட்டியாக நிற்க வைக்கிறோம் என்று அறிவித்து அவரை முதுகின் பின்னால் குத்தியே தேர்தலில் தோற்கடிக்க வைத்தார்கள். 

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, Kapithan said:

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இலங்கை அரசின் நேரடி முகவர் ஒருவர் தேர்தலில் நிற்காமலேயே (?) தெரிவுசெய்யப்பட்டதுதான். 

இன்னொரு விடயம், ஒருவரை நீங்கள் உருத்திரகுமாருக்குப் போட்டியாக நிற்க வைக்கிறோம் என்று அறிவித்து அவரை முதுகின் பின்னால் குத்தியே தேர்தலில் தோற்கடிக்க வைத்தார்கள். 

🤣

ஒவ்வொரு  புலம் பெயர் அமைப்புகளும் தத் தம் நாடுகளில் பிள்ளையார் சிலை போல் தமிழீழ களிமண் சிலை அமைத்து மகிழ வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரசோதரன் said:

. அந்த அரசுகளுக்கு ஒரு சல்லிக்கு பிரயோசனம் கிடையாது என்று சொல்கின்றேன்

அப்படியெல்லாம் கூறமுடியாது.. அடிக்கடி இந்த மாதிரி அறிக்கைகள் விடுவதற்காகவது தேவைதானே.….

—..

உண்மையில் இந்த மாதிரி நடவடிக்கைகளால்தான் மக்கள் இன்று என்ன நடந்தாலும் ஆதரவு கொடுப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பொதுவான பதிவு.

கபிதன், அவர் கருதும்  எவர், சிங்களத்தின் முகவர் என்று வெளியில் சொல்லலாம்.

(தோற்றப்பாடுகளை  வைத்து முடிவுக்கு வருவது மிக கடினம்) 

வேறு பல நாடுகடன்ஹா அமைபுக்களும் இருக்கிறது எதை செய்தார்கள் என்ற கேள்வியும் இருக்கிறது.

ஆனால், நாடுகடந்த எந்த அமைப்போ, இந்த சூழ்நிலையில் தேவை.

நாடுகடந்த எந்த அமைப்பிலும் போட்டி,  இலகுவில் தலைமை கைமாறாது, எந்த  அளவு வெளிப்படை தன்மை இருந்தாலும்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kadancha said:

எல்லோருக்கும் பொதுவான பதிவு.

கபிதன், அவர் கருதும்  எவர், சிங்களத்தின் முகவர் என்று வெளியில் சொல்லலாம்.

ஏன்? 

என்னுடைய அடி நுனி தேடி பொதுவெளியில் போட்டுடைக்கவா? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

ஏன்? 

என்னுடைய அடி நுனி தேடி பொதுவெளியில் போட்டுடைக்கவா? 

😁

நாடு கடந்த அரசாங்கங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இரகசியம் இல்லை

யார் என்று சொல்வதில் ஏன தேவை இல்லாத ஆலாபரணம்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

நாடு கடந்த அரசாங்கங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் இரகசியம் இல்லை

யார் என்று சொல்வதில் ஏன தேவை இல்லாத ஆலாபரணம்?

பிரச்சனை அவர்களுக்கு இல்லை. எனக்கு. 
ஏனென்றால் யார் அவர்கள்  என்று உங்களுக்குத்  தெரிந்தும் எந்த மாற்றமும் நடைபெறப்போவதில்லை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழீழ அரசாங்கம்" என்ற பெயரை வைத்திருக்க யோக்கியதை இல்லாத "நட்டு கலண்டவங்கள்"  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.