Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"நேர்மைக்கு கிடைத்தப் பரிசு!"
 
 
அது ஒரு அழகிய குக்கிராமம். அதனூடாகத்தான் தூர இடத்து பேரூந்துகள் போவது வழமை. பேரூந்து தரிப்பு நிலையம் முன்பாக பல வகையான பழத் தோட்டம் ஒன்று இருந்தது. அதன் முதலாளி அதற்கு முன்னால் ஒரு பெட்டிக் கடை திறந்து வெவ்வேறு பழங்களுடன், சிற்றுண்டிகளும், தேநீர் மற்றும் பானங்களும் விற்கத் தொடங்கினார். அதுமட்டும் அல்ல, மக்களை கவருவதற்காக அவர்களின் அடிப்படை தேவையான கழிப்பறை வசதியும் அங்கு அமைத்து இருந்தார். அதனால், பேரூந்து வந்து நிற்கும் ஒவ்வொரு தடவையும் அவரின் பெட்டிக் கடை மிக ஆரவாரமாக இருக்கும்.
 
இந்த ஆரவாரத்தை பாவித்து, அந்த கிராமத்து சில இளைஞர் யுவதிகள் அங்கு பழங்களை களவெடுத்து போகத் தொடங்கினர். அவரின் கடைக்கு அந்த ஊர்மக்களும் வந்து வாங்கி போவதும் வழமை என்பதால், ஆரம்பத்தில் அது முதலாளிக்கு பெரிதாக தெரியாவிட்டாலும் , காலம் செல்ல அவருக்கு அதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. தன் கடையில் அவருக்கு துணையாக வேலை செய்பவர்களிடம் இதைப் பற்றி சொல்லியும் வைத்தார். என்றாலும் அவர்களை கையும் களவுமாக பிடிக்க முடியவில்லை?
 
ஆகவே அவர் ஒரு நாள், தன் பழங்கள் எல்லாவற்றுக்கும் தனித்துவமான அடையாளம் ஒன்றை பதித்து வைத்தார். அது அவரை விட வேறு யாருக்கும் தெரியாது. அது மட்டும் அல்ல, பழங்களின் எண்ணிக்கையையும் குறித்து வைத்தார். அன்று அவர் தன் வேலையாட்களிடம் கடையின் பொறுப்பை கொடுத்து விட்டு, தானும் ஒரு கடைக்கு வருபவர் போல, கடைக்கு முன்னால் கொஞ்சம் தள்ளி நின்று அங்கு நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தார்.
 
வழமை போல அந்த ஒரு சில இளைஞர் யுவதிகள், கடை ஆரவாரமாக இருக்கும் தருவாயில் அங்கு வந்தனர். அவர்களுக்கு கடை முதலாளி முன்னுக்கு நிற்பது தெரியவில்லை. விரைவாக சில பழங்களை எடுத்துக் கொண்டு வெளியே போகத் தொடங்கினர். இதை நோட்ட மிட்ட , முதலாளி அவர்களை துரத்த தொடங்கினார். அவர்கள் குறுக்கு வீதியால் ஓடி, அந்த பழங்களை யாரோ ஒருவரின் வீட்டு வளவிற்குள் வேலியால் எறிந்து விட்டு, நல்ல பிள்ளைகள் மாதிரி, நடந்து போனார்கள்.
 
ஓடி வந்த முதலாளியை பார்த்து, என்ன நடந்தது என்று, ஒன்றும் தெரியாதவர்கள் மாதிரி கேட்டனர். முதலாளிக்கு அவர்களை சரியாக அடையாளம் காண முடியவில்லை . அவரும் நடந்ததை சொன்னார். அவர்கள், ஆமாம் நாமும் கண்டோம், சிலர் ஓடி, அந்த வளவுக்குள் போனார்கள் என்று, அவர்கள் வேலியால் எறிந்த அந்த குறிப்பிட்ட வளவுக்கு கூட்டிப் போனார்கள்.
 
இதற்கிடையில், தன் வளைவை துப்பரவாக்கிக் கொண்டு இருந்த ராமு என்ற பையன், அங்கு சில பழங்கள் விழுந்து இருப்பதைக் கண்டு, அதில் ஒன்றை எடுத்து கடிக்கத் தொடங்கினான். வந்து கொண்டு இருந்த முதலாளி, தான் கையும் களவுமாக பிடித்து விட்டேன் என்று ஓடி வந்து அவனை
பிடித்து வெருட்ட தொடங்கினார். ராமுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் எவ்வளவோ சொல்லியும், அவர் அந்த பழத்தில் உள்ள அடையாளத்தைக் காட்டி வாதாடத் தொடங்கினார்.
 
இதற்கிடையில் ராமுவின் பெற்றோரும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அவர்களை கண்டதும், முதலாளி இவன் தன் சில நண்பர்களுடன் என் கடையில் இருந்த பழங்களை திருடி வந்து விட்டான் என திட்டி பேச தொடங்கினார். அவர்களும், நாம் ஏழைகள் என்றாலும், களவு பொய் எம்மிடம் இல்லை. என் மகன் இன்று வெளியே கூட போகவில்லை என்றனர். முதலாளி கேட்ட பாடு இல்லை. தான் சொல்லுவதே சரியென அவனை ஒரேயடியாக கள்ளன் ஆக்கி விட்டார். மனம் ஒடிந்த பெற்றோர், அவன் பழத்தை கடித்ததால், அந்த பழத்தின் விலையை தருகிறோம் என்றனர். ஆனால் முதலாளி சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார். அதற்கிடையில் முதலாளியின் வேலையாட்களும் வர, ராமுவை இழுத்துக்கொண்டு தன் கடைக்கு போகத் தொடங்கினார்.
 
ராமுவின் பெற்றோர்களுக்கு முதலாளியின் செய்கையை பார்க்கும் பொழுது அரசன் நன்னனின் கதை ஞாபகத்துக்கு வந்தது. கேரளத்தில் உள்ள பூழி நாட்டின் ஒரு பகுதியை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். நன்னனது காவல் மரத்து மாம்பழம் ஒன்றை ஆற்று வெள்ளம் ஆடித்துக் கொண்டு வந்தது. அதை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒரு கோசர் குடி சிறுமி தன்னுடன் எடுத்து சென்று விட்டாள். மன்னனின் வேலையாட்கள் இதை மன்னனுக்கு தெரிவித்தார்கள். உடனடியாக எந்த முறையான விசாரணையும் இல்லாமல், ஆற்றில் மிதந்து வந்த மாம்பழத்தை சாப்பிட எடுத்ததுக்கு, அவளை களவு எடுத்ததாக சொல்லி, நன்னன் அந்தப் பெண்ணுக்குக் கொலை தண்டனை விதித்தான். கோசர் குடியினர் நன்னனிடம் முறையிட்டனர். அவனது மாம்பழத்தைத் தின்ற தவறுக்காக அவளது தந்தை 81 யானைகளை தண்டமாக கொடுக்க முன் வந்தார். நன்னன் அதற்கும் அசையவில்லை. இறுதியாக அவளது எடைக்கு எடை பொன்னு தருவதாக மன்றாடினான். ஆனால் நன்னன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்காமல் அவளைக் கொன்று விட்ட நன்னனைப் போலத்தான் இந்த முதலாளி அவர்களுக்கு தெரிந்தது!
 
 
"மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்ற தன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள் நிறை
பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்தெனப்
பகை முக ஊரின் துஞ்சலோ இலளே."
 
 
ராமுவின் பெற்றோர்களும் அழாக்குறையாக கெஞ்சியும் பார்த்தார்கள். முதலாளி அசையவில்லை. ராமுவை தன் கடைக்கு கொண்டுபோய், தொட்டாட்டு வேலை ஒரு மாதத்துக்கு செய்யும் படி பணித்தார், வேறு வழியில்லாமல், பெற்றோர்களும் சம்மதிக்க, ராமு அங்கு வேலை செய்யத் தொடங்கினான்.
 
இரண்டு நாள் கழிய, மீண்டும் அந்த இளைஞர் யுவதிகள் அங்கு வந்து, தம் கைவண்ணத்தை காட்டத் தொடங்கினார்கள், இதைக் கண்ட ராமு, பாய்ந்து அவர்களின் ஒருவனை பிடித்து விட்டான். அப்ப தான் முதலாளிக்கும், அங்கு வேலை செய்பவர்களுக்கும் உண்மை விளங்கியது. ராமுவின் நேர்மை புரிந்தது, உடனடியாக முதலாளி ராமுவைக் கூடிக்கொண்டு, அவனின் வீட்டுக்கு போய், தான் விட்ட தவறைக் கூறி மன்னிப்பு கேட்டதுடன், ராமுவின் நேர்மையை மெச்சி, அதற்கு பரிசாக, ராமுவை தானே தன் செலவில் படிப்பிக்க முன் வந்தார். ராமுவுக்கும் அவனின் பெற்றோருக்கும் பால் வார்த்தது போல் இருந்தது.
 
 
"நேர்மை என்றும் மாய்வதில்லை
உண்மை என்றும் ஓய்வதில்லை
வஞ்சனை என்றும் வாழ்வதில்லை
துணிவு என்றும் வீழ்வதில்லை
பணிவு என்றும் தாழ்வதில்லை"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
317463634_10222095651723087_7913240721293948697_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=lJUxQnmQy00Q7kNvgFsPO2v&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAHSYKjYOczvCnDvy6kXzZTLrbd6CTY_EYuNwj5p0ndYg&oe=665F042E  317326563_10222095648002994_4229626861229756554_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=uxnQZ-xNUwEQ7kNvgGxMwYK&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCocyUvUcbtn8_8olrovPTq4RjGalwND_DAzvmQv7dsag&oe=665EF765 317380294_10222095650163048_1629363088967272811_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=sUa4fKLpUDcQ7kNvgHliS-p&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYChUU9hr_7frA3Wb8gdbgJNHrN1ZIAlxPoQIQPIL8rPaQ&oe=665EF755
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் என் நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் முதலாளி கெட்டிக்காரன் என்றே நினைத்தேன்.

தொடர்ந்து செய்த வேலைகள் அவரை வெறுத்துவிட்டன.

ஆனாலும் கடைசியில் ராமுவை படிக்க வைத்து தனது கறையைப் போக்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாய்மை வெல்லும் .....நல்ல நன்னடத்தைக்  கதை........!   👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.