Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம் - உருத்திரகுமாரன்

Published By: RAJEEBAN   06 JUN, 2024 | 09:55 AM

image
 

தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம் -

என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்காலத்தின் முதலாவது தொலைத்தொடர்பு அமர்வு ஜூன் மாதம் 1ந் திகதி நடைபெற்றது.

அதில் சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது இதில் பல உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். பேசியவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்தினார்கள்.

இந்த அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளதாவது

1972 அரசியல் அமைப்புச்சட்டத்திற்கோ 1978 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ நாங்கள் தமிழர்கள் பங்குதாரர்கள் அல்ல அதற்கு நாங்கள் சம்மதமும் கொடுக்கவில்லை எனவே அது எங்களைக்கட்டுப்படுத்த முடியாது. 

கடந்த 14 வருடங்களாக பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அவையைக் கூட்டி அத் தேர்தல்களை எவ்வாறு எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகப் பாவிக்கலாம் என்ற அடிப்படையிதான் நாங்கள் முடிவுகள் எடுத்துள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் இவ்வாறாகவேதான் இருந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டுசந்திரிக்காவின் தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் பகிஷ்கரிக்கவில்லை. 2005 இல் ரணில் விக்கிரமசிங்க எங்களிற்கு எதிராக சர்வதேச சதிவலைப் பின்னலை பின்னுவதன் காரணமாக அவர் ஜனாதிபதியாக வருவது தமிழர்களிற்கு நன்மை பயக்காது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்ததனர். 

சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு எப்போதுமே ஒரு உத்தி சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது. நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் அவ் அடிப்படையிலேயே சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது.

 இன்று மூன்றுதெரிவுகள் சிறிலங்கா தேர்தல் தொடர்பாக தமிழ்மக்களிடையே வைக்கப்பட்டுள்ளன.

1- சிங்களத்துடன் பேரம் பேசி எமக்கு அதிக உரிமைகளைதருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

2- ஜனாபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.

3- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும்

70 ஆண்டு கால அரசியல் வரலாறு சிங்களத்துடன் எவ்வளவுபேரம் பேசினாலும் சிங்களம் எதனையுமே அமுல் நடத்தாது.

 

சிங்கள புத்திஜீவிகள் மாறிவிட்டார்கள் என்ற ஒது கருத்து இன்றைக்கு முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்று 15 ஆண்டுகள்ஆகிவிட்டன. இன்றுவரை ஒரு சிங்கள புத்திஜீவியோ ஒருசிங்கள அரசியல் தலைவரோ ஒரு சிங்கள மாணவத்தலைவரோ தாங்கள் செய்த பிழையை ஏற்றுக் கொள்ளவும்இல்லை மன்னிப்பும் கேட்கவும் இல்லை.

“அறகளவில்” சிங்களவர்கள் போட்ட கோஷம் கோத்தபாய ஒரு திருடன்என்று ஆனால் கோத்தபாய ஒரு கொலைகாரன் என்றுகூறவில்லை. பேரினவாதம் சிங்கள அரசியல் கலாச்சாரம்தமிழர்களுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்க சம்மதிக்காது. எனவே பேரம் பேசுவது என்ற கதையை தமிழ்த்தலைவர்கள் கைவிடவேண்டும். சிங்களத்துடன் பேசிய பேரத்தை இந்தியாவினால் கூட அமுல் நடத்த முடியவில்லை.

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது  மற்றும் இரண்டாவது தெரிவு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் 

 தமிழ் பொது வேட்பாளர் மூலமாக நாங்கள் ஒரு அரசியல் திரட்சியைக் கொண்டுவரலாம்இ சுயநிர்ணயத்திற்கான திரட்சியைக் கொண்டு வரலாம் எனக் கூறினார்.

தமிழ் பொதுவேட்பாளரைக் கொண்டுவருவதன் மூலம் எங்களுடைய பிரச்சனைகளை சிங்கள தொலைக்காட்சியில் பேசலாம்என்று கூறி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை சிறுமைப்படுத்தவேண்டாம் என அரசியல் தலைவர்களைகேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன் நாங்கள் இன்று பேசவேண்டிய சமூகம் உலக சமூகம்.

மேலும் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாடு எமது அடுத்த கட்ட அரசியல் நிகழ்வான பொதுவாக்கெடுப்பிற்கு உதவும் எனவும் கூறினார்.

நாங்கள் சிங்களத் தலைமையை பகிஷ்கரிக்கின்றோம் என்ற அடிப்படையில் இரண்டாவது தெரிவை தமிழர்கள் பகிஷ்கரிக்கவேண்டும் எனக் கூறினார்.

இதன் மூலம் தமிழ்பொதுவேட்பாளர் நிலைப்பாட்டையும் தமிழ் தேசிய மக்கள்முன்ன்ணியின் பகிஷ்கரிப்பின் நிலைப்பாட்டையும் இணைக்கலாம்

தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளை தமிழ்மக்களிடம் இருந்து பெறமுடியாமல் இதுக்கக்கூடும். ஆனால் நாங்கள் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கத்தான் வேண்டும். சிலர் சர்வதேச சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை விரும்பமாட்டார்கள் எனக் கூறலாம்.

நாங்கள் சர்வதேச சக்திகளின் விருப்பிற்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கத் தேவையில்லை.

எங்களுடையஅரசியல் விருப்பங்களை நாங்கள் சர்வதேச சக்திகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

 

இன்றுவரை சர்வதேச சக்திகள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தங்களுடைய பூகோள அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்றார்களேயொழிய தமிழர்களிற்கு நீதி வழங்க வேண்டிய செயற்பாடுகளில்ஈடுபடவில்லை.

 

2015 ஆம் ஆண்டு மகிந்தா சீனாவின் பக்கம்சாய்வதால் நல்லாட்சி வரும் என்று சொல்லி தமிழர்களை பாவித்து சர்வதேச சமுதாயம் மகிந்தாவை நீக்கியது

 

சர்வதேச சமுதாயத்திடம் நாம் பேரம் பேச வேண்டுமேயொழிய அவர்களை சந்தோஷப் படுத்திக் கொள்ளக்கூடாது.

https://www.virakesari.lk/article/185418

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கோமாளிக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? 

நுணலும் தன் வாயால் தானும் கெட்டு, தான் ஆதரிக்கின்றவர்களையும் கெடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எங்கட மக்கள் ஏதோ ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நினைத்து தங்களுக்குள் கலந்து பேசி ஒன்றை செய்ய நினைக்க!! இவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, P.S.பிரபா said:

இப்பதான் எங்கட மக்கள் ஏதோ ஒற்றுமையாக இருக்கவேண்டும் என நினைத்து தங்களுக்குள் கலந்து பேசி ஒன்றை செய்ய நினைக்க!! இவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. 

நாடுகடந்த அரசாங்கம் இதுவரையில் செய்ததென்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ருத்திரகுமாரைத் தவிர வேறு எவராவது இந்த அரசில் இருக்கிறார்களா என்றும் தெரியாது. இவர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் வாயிலாகத்தான் இப்படியொரு அமைப்பு இன்னமும் இருக்கிறதென்றே தெரிகிறது. 

ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து இவர் கூறும் விடயங்களை நான் எதிர்க்க விரும்பவில்லை. ஏனென்றால்,  நானும் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பதைக் கொள்கையளவில் ஆதரிக்கிறேன்.

பலருக்கு தமிழ் வேட்பாளர் எனும் கருதுகோள் தேர்தல் அரசியல் அடிப்படையிலே மட்டும் அமைந்ததாகவே தெரிகிறது. ஏனென்றால், தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் தமிழருக்கு அரசியலில் அல்லது தேர்தலில் வரப்போகும் ஒரு சிங்கள வேட்பாளரினூடான சலுகைகள் மட்டுமே தெரிகின்றன. ஆனால், தமிழ் வேட்பாளர் எனும் கொள்கை தேர்தல் அரசியலுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளுடன், கருத்துக்களுடன், அபிலாஷைகளுடன் சம்பந்தப்பட்டது. அப்படி இல்லையென்றால், அதனை சம்பந்தப்படுத்துவது தமிழர்களின் அனைவரினதும் கடமையென்றே நான் நினைக்கிறேன். 

இத்தேர்தலை தமிழர்கள் தமது உண்மையான அபிலாஷைகளை, ஒற்றுமையினை, தமது அடையாளத்தை நிரூபிக்கும் சர்வஜன வாக்கெடுப்பாக கருதுவது அவசியம். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எந்தச் சிங்கள வேட்பாளர் வருவார், அல்லது எவர் வருவதற்கான வாய்ப்பு இல்லாதுபோய்விடும் என்று நாம் கவலைப்படுவது அநாவசியமானது. ஏனென்றால், நாம் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவது சிங்கள தேசத்தின் இன்னொரு சிங்கள பெளத்த இனவாதியைத் தலைவராக்குவதற்காக அல்ல. இந்தத் தெளிவு இருந்தால்ப் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏன் அவசியம் என்பதை தாயகத்தில் உள்ள மக்களிடையே தெளிவினை உண்டாக்குவது இப்போது மிகவும் அவசியமானது. இதற்கான  அவசியத்தினை உணரவைப்பதன் மூலமே தமிழ் மக்கள் இந்த பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலையினை உருவாக்கிக்கொள்ள முடியும். தமிழ்ப் பொது வேட்பாளருக்கான அவசியத்தை உணரவைக்கும் அதேவேளை, இதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோர், எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் உண்மையான நோக்கத்தையும், அவர்கள் எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்பதனையும் மக்களுக்கு புரியவைப்பதும் அவசியம்.

அடுத்ததாகச் செய்ய வேண்டியது, இலங்கையில் ஜனாதிபதி தேதல் நடைபெறும் நாளில், அதற்குச் சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் அதே நோக்கத்தை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது. இதற்கு, புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழர் நலன்சார்ந்த, தேசியம் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம், தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் தமது அபிலாஷைகளை ஒற்றுமையுடன் வெளிப்படுத்த முடியும். 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் என்பது இன்றய தேவை. அவரை பிடிக்காவிட்டாலும் கூறுகின்ற விடயம் சரிதானே. கஜேந்திரன் மாதிரி தேர்தலை புறக்கணிக்க சொல்லவில்லை தானே. கோமாளி மக்கள் முன்னணி தான். கண்டவுடன் ஒருவரை எதிர்க்காமல் சரியான விடயங்களை தெரிந்து அதன் வழி நகர்வதே இன்றய தேவை. புலிகள் முடிவெடுக்கின்ற மாதிரி யாரும் இப்ப செய்ய முடியாது. மலையும் மடுவும் ஒன்றல்ல.
சாம் , சுமா, டாக்கி  மாதிரி நக்கி பிழைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2024 at 11:30, ரஞ்சித் said:

ருத்திரகுமாரைத் தவிர வேறு எவராவது இந்த அரசில் இருக்கிறார்களா என்றும் தெரியாது. இவர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் வாயிலாகத்தான் இப்படியொரு அமைப்பு இன்னமும் இருக்கிறதென்றே தெரிகிறது.

இதுதான் பிரச்சனையே.. இவர்கள் தமிழ் மக்களுடன் எத்தகைய தொடர்பினை வைத்திருக்கிறார்கள்? இந்த அரசாங்கத்தில் அவுஸ்ரேலியாவிற்கான பிரதிநிதி யார் என்றாவது தெரியுமா?

இவரது அறிக்கையில் கூறும் விடயங்கள் சரியென்றாலும் கூட மக்களோடு சேர்ந்து இயங்காத அல்லது மக்களால் அறியப்படாதவர்களின் கூற்றினை மக்கள் கவனத்தில் எடுப்பார்கள் என நம்புகிறீர்களா? 

 

Edited by P.S.பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2024 at 02:10, ஏராளன் said:

தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை

கட்டாயம்!

நாங்க அடுத்த ரவுண்டுக்கு ரெடி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.