Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
gaza-1024x614.jpg

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ள நிலையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை அங்கீகரித்து போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்புக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்ற ஹமாஸ் அமைப்பு முக்கிய முடிவை அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள படைகளை முழுவதுமாக திரும்பப்பெறுவது, ஹமாஸ் – இஸ்ரேல் ஆகிய இரு தரப்பிலும் பிடித்துவைத்துள்ள கைதிகளை விடுதலை செய்வது, நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய கூறுகளை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் அமைப்பிடம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது.

காசாவில் 36,000 மக்களை கொன்று குவித்த பிறகு, தற்போது ரஃபாவில் உள்ள அகதி முகாம்கள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்துவதாக இல்லை.

இந்நிலையில் பாலஸ்தீனிய சுதந்திர அரசும், ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பும் ஐ.நாவின் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் தங்களிடம் உள்ள கைதிகளை விடுவிக்கவும் தாயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்று பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்த இந்த இரக்கமற்ற போரை முடிவுக்கு கொண்டுவருமா என்பதே இப்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. இதற்கிடையில் காசா தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி காண்ட்ஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

https://thinakkural.lk/article/303489

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காஸா போர் நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி?

பைடனின் போர் நிறுத்த முன்மொழிவால் நெதன்யாகுவின் ஆட்சிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெரிமி போவென்
  • பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி
  • 21 நிமிடங்களுக்கு முன்னர்

சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திரிகள், தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது உணர்ந்ததைப் போலவே அவர்களும் உணர்வார்கள்.

பிளிங்கனின் விமானம் தரையிறங்கும் போது, அவர் சோர்வாகவும் சலிப்பாகவும் உணர்ந்திருக்கக் கூடும். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களில் மத்திய கிழக்கிற்கு பிளிங்கன் மேற்கொண்ட எட்டாவது பயணம் இதுவாகும்.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் அரசியல் மற்றும் பாலத்தீன கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது ஆகியவை மிகவும் சிக்கல் நிறைந்த செயல்பாடுகள்.

ஆனால் தற்போது அது முன்னெப்போதையும் விட மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது, ஏனெனில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தனது அரசியல் கூட்டாளியான காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) உடன் அதிபர் நெதன்யாகுவின் போர்க்குழு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இருவருமே ஓய்வுபெற்ற ஜெனரல்கள், அவர்கள் தலைமைத் தளபதிகளாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையை வழிநடத்தினர்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்காவின் முன்மொழிவு மற்றும் நெதன்யாகுவுக்கு நெருக்கடி

பென்னி காண்ட்ஸ் போர்க்குழு அமைச்சரவையில் அமெரிக்காவின் விருப்பமான பிரமுகராக இருந்தார். ஆனால் இப்போது அவர் மீண்டும் எதிர்க்கட்சியில் இருப்பதால், நாட்டில் புதிய தேர்தல்களைக் கோருகிறார்.

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்று வாக்கெடுப்பு நடத்துபவர்கள் மத்தியில் முதன்மையான தேர்வாக இருப்பது பென்னி காண்ட்ஸ் தான். ஆனால் நெதன்யாகு தனது கூட்டணியுடன் சமரசமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார். ஏனெனில் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 64 இடங்களை இந்த கூட்டணி அவருக்கு வழங்குகிறது.

இந்த கூட்டணி, தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் தலைமையிலான இரண்டு தீவிர தேசியவாத பிரிவுகளின் ஆதரவை சார்ந்துள்ளது. இதை குறிவைத்து தான் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனின் வியூகம் இஸ்ரேலிய அரசியலுடன் மோத நினைக்கிறது.

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்புகிறார். அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது பிளிங்கனின் வேலை. அதே சமயம் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் நெதன்யாகுவின் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்று பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் அச்சுறுத்தியுள்ளனர்.

பைடனின் போர் நிறுத்த முன்மொழிவால் நெதன்யாகுவின் ஆட்சிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த தலைவர்கள் தீவிர யூத தேசியவாதிகள், எனவே ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

காஸா உட்பட மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடையே உள்ள அனைத்துப் பகுதிகளும் யூதர்களின் நிலம் என்று அவர்கள் நம்புகிறார்கள். யூதர்கள் அங்கே குடியேற வேண்டும் என்றும் பாலத்தீனர்கள் தானாக முன்வந்து காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

முந்தைய போர் நிறுத்தத் திட்டங்களைப் போல இந்தத் திட்டமும் வீண் போகக் கூடாது என்பதற்காக ஆண்டனி பிளிங்கன் இம்முறை மத்திய கிழக்கை அடைந்துவிட்டார். இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மூன்று போர்நிறுத்த தீர்மானங்களை தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிறுத்தத்தை விரும்புகிறார்.

 

இது அமெரிக்காவின் ஒப்பந்தமா?

பைடனின் போர் நிறுத்த முன்மொழிவால் நெதன்யாகுவின் ஆட்சிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிபர் பைடன், மே 31 அன்று, ஒரு உரையில், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் புதிய முன்மொழிவை ஏற்குமாறு ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது ஐநா தீர்மானத்தின் ஆதரவை பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் மூன்று பகுதிளாக உள்ளது. முதலாவதாக, ஆறு வார போர்நிறுத்தத்தை பற்றியது. அந்த சமயத்தில், காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் மற்றும் சில இஸ்ரேலிய பணயக்கைதிகளும் பாலத்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள்.

அதன் பிறகு, ஒப்பந்தத்தின்படி அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். இறுதியில் காஸாவின் மறுசீரமைப்புப் பணிகள் நடக்கும்.

பைடன் கூறுகையில், இஸ்ரேலியர்கள் இனி ஹமாஸை எண்ணி பயப்பட வேண்டாம். ஏனெனில் அவர்களால் இனி அக்டோபர் 7-ஐ போன்ற சம்பவத்தை (தாக்குதல்) மீண்டும் நிகழ்த்த முடியாது என்றார்.

அதிபர் பைடனும் அவரது ஆலோசகர்களும் இந்த பணியில் சிக்கல்கள் இருக்கும் என்பதை அறிவர். காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறி, போருக்கு முடிவு கட்டுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், காஸாவின் நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் நான்கு பணயக்கைதிகளை விடுவித்தது. இதில் பல பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அதிகாரிகள் கூற்றுபடி 274 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இறந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருப்பதாக கூறுகிறது. இந்த சம்பவம் ஹமாஸ் முன்வைக்கும் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள பல தரப்பினர் தனது முன்மொழிவை எதிர்ப்பார்கள் என்பதும் பைடனுக்குத் தெரியும்.

எனவே, "இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைமையை வலியுறுத்தியுள்ளேன். எவ்வளவு அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை” என அவர் தனது உரையில் தெரிவித்தார்.

 

அமைதி காக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்

ஜோ பைடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கா எதிர்பார்த்தது போல், பைடனின் போர்நிறுத்த முன்மொழிவை பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் கடுமையாக எதிர்த்தனர். இந்த ஒப்பந்தம், தாங்கள் அங்கம் வகிக்காத போர்க்குழு அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல.

இருப்பினும், பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்த பின்னரே, பென் க்விர் போர்க்குழு அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்தார்.

ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று அவர் எச்சரித்தார்.

இதுவரை, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இரண்டும் பைடனின் போர்நிறுத்த முன்மொழிவில் எந்த உறுதிப்பாட்டையும் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும், போர் நிறுத்த முன்மொழிவின் சில பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை, இறுதி செய்யப்பட வேண்டும் என்று பைடன் ஒப்புக்கொண்டார்.

முன்மொழிவின் சில பகுதிகளில் உள்ள தெளிவின்மை, ராஜதந்திர சூழ்ச்சிக்கு இடம் அளிக்கலாம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது, போரை நீடிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்ற பொதுவான புரிதல் இருக்க வேண்டும்.

காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் அவ்வாறு செய்ய ஒப்புக்கொள்வார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அக்டோபர் 7ம் தேதியில் இருந்து தான் பின்பற்றி வரும் அதே பாதையையே பின்பற்ற அவர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

பெருமளவில் பாலத்தீன மக்கள் உயிரிழந்தது, ஹமாஸை பலவீனப்படுத்தவில்லை, மாறாக அதன் நோக்கத்தை வலுப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது அவர்களைப் பொறுத்தவரை, ஹமாஸின் இருப்பே அவர்களின் வெற்றி.

37,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டது (காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி) இஸ்ரேலுக்கு உலகளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

நெதன்யாகுவுக்கு கடினமான பாதை

நெதன்யாகு

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலில், நெதன்யாகு தனது போர்க்குழு அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை இழந்துள்ளார். காண்ட்ஸ் மற்றும் இசென்கோட் இருவரும் பணயக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏதுவாக தற்காலிக போர் நிறுத்தத்தை விரும்பினர்.

இப்போது அவர்கள் இருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்காததால், நெதன்யாகு, பென்-க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோரால் பாதிக்கப்படலாம்.

ஒருவேளை ஆண்டனி பிளிங்கன் அவர்களுடன் பேசி, லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தும் வகையில், பணயக்கைதிகளை மீட்கும் ஒரு உடன்பாட்டை எட்டலாம்.

நெதன்யாகு தனது அரசாங்கத்தைப் பணயம் வைத்து, தேர்தலில் சவாலை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்படும். எட்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதன் காரணமாக என்ன அரசியல், உளவுத்துறை மற்றும் ராணுவத் தவறுகள் நடந்தன என்பதை அந்த ஆணையம் ஆராயும்.

அல்லது நெதன்யாகு இஸ்ரேலின் நீண்ட காலம் பிரதமராக இருந்த காலத்தில் கற்றுக்கொண்ட சூழ்ச்சி மற்றும் பிரசாரத்தின் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.

நெதன்யாகு ஜூலை 24 அன்று வாஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cv22vl4pv6vo

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் போகக்கூடாது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் தம்மை மீள்கட்டமைக்க முயல்கின்றார்கள். பாலஸ்தீன பயங்கரவாதம் துடைத்தழிக்கப்படவேண்டும் இஸ்ரேல் அதைச் செய்யும்!

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வாலி said:

பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் போர்நிறுத்தத்துக்கு இஸ்ரேல் போகக்கூடாது. இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி ஹமாஸ் பயங்கரவாதிகள் தம்மை மீள்கட்டமைக்க முயல்கின்றார்கள். பாலஸ்தீன பயங்கரவாதம் துடைத்தழிக்கப்படவேண்டும் இஸ்ரேல் அதைச் செய்யும்!

நீங்கள் கூறிய இந்த வசனத்தில் இஸ்ரேலுக்குப் பதிலாக இலங்கை அரசையும், ஹமாசுக்குப் பதிலாக புலிகளையும் பிரதியீடு செய்து பாருங்கள். அப்போதும் இதையே கூறுவீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ரஞ்சித் said:

நீங்கள் கூறிய இந்த வசனத்தில் இஸ்ரேலுக்குப் பதிலாக இலங்கை அரசையும், ஹமாசுக்குப் பதிலாக புலிகளையும் பிரதியீடு செய்து பாருங்கள். அப்போதும் இதையே கூறுவீர்களா? 

புலிகளை ஆதரிக்கின்றேன் என்று கூறிக்கொண்டு படுபயங்கரவாதிகள் ஹமாசை அவர்களுக்கு நிகராக ஒப்பிடுகிறீர்கள். 

இங்கு இந்த ஒப்பீடே பிழை. ஈழத்தமிழ் போராளிகளின் கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் பயங்கரவாதிகள் கால்தூசிக்கும் வரமாட்டார்கள். பாலஸ்தீன களம்வேறு ஈழக் களம்வேறு!  இதில் வேறு சொல்லிக்கொள்ள எதுவுமில்லை!

  • Like 1
Posted

இஸ்ரேலிய அரச பயங்கரவாதிகள்  உலகத்தால்  ஒதுக்கப்பட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, வாலி said:

பாலஸ்தீன களம்வேறு ஈழக் களம்வேறு!

பலஸ்த்தீன மக்களின் போராட்டத்திற்கும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கும் இடையிலான அந்த வேறுபாட்டினை சற்று விளக்குங்களேன் கேட்கலாம்.

நான் ஒற்றுமைகளை மட்டுமே இங்கு கூறிவிடுகிறேன். 

1. இரு இன மக்களும் தமது தாயகத்தில் சர்வதேசத்தின் உதவிகளையும் ஆதரவையும் கொண்ட இரு கொடூரமான‌ இனக்கொலையாளிகளால் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகிவருகிறார்கள்.

2. இந்த இரு இனங்களினதும் தாயகம் நாள்தோறும் சிங்கள பெளத்த இனவாதிகளாலும், யூத மத வெறியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.

3. பலஸ்த்தீனப் போராளிகளைக் கொல்கிறேன் என்ற போர்வையில் ஒன்றிற்குப் பத்து என்கிற விகிதத்தில் பலஸ்த்தீனப் பொதுமக்களை இஸ்ரேலிய அரசு கொன்று வருகிறது. இதே வாய்ப்பாட்டையே மொசாட் உளவிப்பிரிவு 80 களில் சிங்களத்திற்குக் கற்றுக்கொடுத்து தமிழினக்கொலையினை ஆரம்பித்து வைத்தது. 

4. பலஸ்த்தீனர்களின் அகதி முகாம்கள், வைத்தியசாலைகள், நிவாரண உணவு விநியோக மையங்கள், ஐ.நா உதவியாளர்களின் கட்டடங்கள், சர்வதேசப் பத்திரிக்கையாளர்களின் நிலைகள் என்று இலக்குவைத்து இஸ்ரேலிய அரசால் தாக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான பலஸ்த்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே வகையான படுகொலைகளையே இலங்கை அரசும்  தமிழர்களின் வைத்தியசாலைகள், யுத்த சூனியப் பிரதேசங்கள், அகதி முகாம்கள், நிவாரண பணியகங்கள், ஐ.நா அமைப்புக்களின் நிலைகள், பத்திரிக்கையாளர்கள் என்று இலக்குவைத்து நடத்தி வந்தது. 

5. இஸ்ரேல் தான் ஆக்கிரமிக்கும் பலஸ்த்தீன மக்களின் நிலங்களில் இராணுவ நிலைகளை அமைத்து இஸ்ரேலியர்களைக் குடியேற்றி அவர்களை ஆயுதமயப்படுத்தி வருகிறது. இதே சதியைத்தான் தமிழர் தாயகத்தில் சிங்களவர்களை குடியேற்றி, இராணுவமயப்படுத்தி, இராணுவ முகாம்களை இலங்கையும் அமைத்து வருகிறது. 

6. காசாவையும், ரபாவையும் ஆக்கிரமித்து, பலஸ்த்தீன தாயகத்தை இரண்டாகக் கூறுபோட்டு நிரந்தரமான தனது இராணுவப் பிரசன்னத்தை அப்பகுதியில் இஸ்ரேல் அமைத்திருக்கிறது. தமிழர் தாயகத்தில் வடக்கையும் கிழக்கையும் கூறுபோட்டு திருகோண‌மலையிலிருந்து முல்லைத்தீவுவரை சிங்களவரை குடியேற்றி இராணுவமயப்படுத்தியிருக்கிறது சிங்களம். 

7. இலங்கையில் தமிழரென்றாலே இரண்டாம்தர குடிமக்கள் என்று பார்க்கும் நிலையும், கைதுசெய்து ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து காணமலாக்கும் அதிகாரம் சிங்கள இராணுவத்திற்கு இருக்கிறது. இஸ்ரேலும் தன் பங்கிற்கு ஆயிரக்கணக்கில் பலஸ்த்தீனர்களை சிறைகளில் அடைத்துவைத்து சித்திரவதை செய்கிறது. 

8. தமிழருக்கெதிரான போரில் உணவு, மருந்து, அத்தியாவசியப் பொருட்கள், கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்பன சிங்கள மிருகங்களால் ஆயுதங்களாகப் பாவிக்கப்பட்டன. இன்று இஸ்ரேலும் இதனையே செய்துவருகிறது. 

9. தமிழர் மீதான போரில் ஒரு கையில் ஐ, நா சாசனத்தையும் மறு கையில் துப்பாக்கியையும் ஏந்தி மனிதாபிமான மீட்பு நடவடிக்கையொன்றினைச் செய்ததாக சிங்களம் கூறியது. இஸ்ரேலோ தான் மனிதவுரிமை மீறல்களில் ஈடுப‌டவேயில்லை என்று சத்தியம் செய்கிறது.  

10. இரு தேசக் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் இஸ்ரேல், பலஸ்த்தீனர்கள் தமது தலைநகர் என்று உரிமை கோரும் கிழக்கு ஜெருசலேமை தனது புதிய தலைநகர் என்று உரிமை கோருகிறது. தமிழருக்கு சமஷ்ட்டி தரப்போவதில்லை, உரிமைகளையோ அதிகாரங்களையோ பகிரப்போவதில்லை என்று கூறிக்கொண்டு தமிழரின் தலைநகரான திருகோணமலையினை முற்றாகச் சிங்களமயப்படுத்தி வருகிறது சிங்களப் பேரினவாதம். 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழினத்திற்கெதிரான போரில் 80 களின் ஆரம்பத்தில் இருந்து அமெரிக்காவினூடாக இஸ்ரேலின் மொசாட்டும், சின்பெட்டும் இலங்கையினுள் கால்பதித்து சிங்களப் பேய்களின் விசேட அதிரடிப்படைக்கும், இராணுவத்திற்கும் பயிற்சிகளும், ஆயுதங்களும், பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை எனும்பெயரில் முற்றான இனக்கொலைக்கான பாதையினையும் வகுத்துக் கொடுத்திருந்தன. போரின் இறுதிக்காலம்வரை டோரா பீரங்கிப்படகுகள், கிபிர் மிகையொலி விமானங்கள், தானியங்கித் துப்பாக்கிகள், கவச வாகனங்கள் என்று மிகப்பெரிய அளவில் இஸ்ரேலிய ஆயுதங்கள் தமிழர்கள் மீது பாவிக்கப்பட்டன. 2009 இல் இலங்கை நடத்திமுடித்த சாட்சியங்களற்ற இனக்கொலையிலிருந்து தான் கற்றுக்கொண்ட உத்திகளை இஸ்ரேல் இன்று பலஸ்த்தீனத்தில் பாவித்துவருகிறது. 

23 hours ago, வாலி said:

ஈழத்தமிழ் போராளிகளின் கண்ணியத்துக்கும் நேர்மைக்கும் பயங்கரவாதிகள் கால்தூசிக்கும் வரமாட்டார்கள்.

மறுக்கவில்லை. முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மக்களின் அவலங்களைப்  பாருங்கள். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • PadaKu TV     சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது. சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார். அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார். “கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,” சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார். “அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.          
    • நான் அவனை நேரில் பார்த்தேன்    கழுத்து பகுதியிலும்  பெக்கிலுக்கு கீழேயும். வெட்டி தைத்த. அடையாளம் உண்டு   அவன் தான் சொன்னார் மெல்லிய கம்பியை விட்டு விட்டு எடுத்தாதகா.  நீங்கள் நம்புவதும் விடுவதும். உங்கள் இஸ்டம்.    சுரண்டவில்லை 
    • சிறிய நாட்டுக்கு… 25 - 30 லட்சம் குரங்குகள் மிக அதிகம். சீனாக்காரனும் தனக்கு கொஞ்ச குரங்குகளை தரும் படி கேட்டுக் கொண்டு இருக்கின்றான். அவனுக்கும் கொடுத்து அன்நிய செலவாணியை டொலரில் சேமிக்கலாம்.
    • டக்ளஸ்…. காசு சம்பாதிக்க, கால் வைக்காத இடமே இல்லை. அதுகும் சொந்தக் கட்சிக்காரனையே கொலை செய்து, காசு சேர்த்திருக்கின்றார்.
    • stent ஒன்றை அடைபட்ட இடத்தில் வைத்திருப்பார்கள், அண்ணா.............. பின்னர் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது....................
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.