Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_7577-Copy-scaled.jpg?resize=750,375&

யாழில் ஊடகவியலாளாின் வீட்டின் மீது தாக்குதல் : சொத்துக்களுக்கும் சேதம்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியை சேர்ந்த  ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் குறித்த கும்பல் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

அச்சுவேலிஇ பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டினுள் இன்றையதினம் (வியாழக்கிழமை) அதிகாலை 12.15 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் அடங்கிய வன்முறைக் கும்பல் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் , மீன் தொட்டியை அடித்து உடைத்து, வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டின் வெளியே நின்ற ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளுக்கும் , அவரது சகோதரனின்  முச்சக்கரவண்டி மீதும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்ட பின்னர் அவற்றிற்கும் தீ வைத்துள்ளனர்.

அதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன.

“திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களை வீட்டினுள் வீசி விட்டு குறித்த கும்பல் தப்பி சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

IMG_7567-scaled.jpg?resize=600,338&ssl=1

IMG_7586-scaled.jpg?resize=600,338&ssl=1

https://athavannews.com/2024/1387567

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்!

adminJune 13, 2024
Pratheeban-Home-attack1.jpg

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்றைய தினம் வியாழக்கிழமை (13.06.24) அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பலே குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
“திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Pratheeban-Home-attac4-800x450.jpgPratheeban-Home-attack2-800x450.jpgPratheeban-Home-attack3-800x450.jpg

 

https://globaltamilnews.net/2024/204200/

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்  வீட்டின் மீது தாக்குதல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

(மாதவன்)

ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின்  வீட்டுக்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
மேலும் அவ் அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும். 

இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலிசாஸார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்றுள்ளது. (ஞ)

ஊடகவியலாளர்  வீட்டின் மீது தாக்குதல் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் ; நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் - பலரும் கண்டனம் தெரிவிப்பு

Published By: VISHNU

14 JUN, 2024 | 02:56 AM
image
 

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

அதனால் சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டமேற்படுத்தப்பட்டுள்ளது.

"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் காலை பொலிசாரின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடயங்களைச் சேகரித்தனர்.

அத்துடன் பொலிஸ் விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெற்றோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீதியூடாக தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டும்  பொலிசார் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டதுடன்,  குறித்த தாக்குதல் சம்பவம் ஊடகவியலாளருக்கு அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே குறித்த விடயம் தொடர்பில் அரச தரப்பினர், உரிய அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே.சிவஞானம், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலே குற்றவாளிகள் இனம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரச்சனை தொடர்பில் நேரில் பேசி ஆராயப்பட வேண்டும் வன்முறை என்றும் தீர்வாகாது என்ற கருத்தினை முன் வைத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் குறித்த தாக்குதலுக்குக் கண்டனம் வெளியிட்டதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/186039

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2024 at 16:32, ஏராளன் said:

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

ம்ம்.... கைது செய்து விடுவார்கள். செய்தவன் காசு கொடுத்தால் தலை கீழாய் நின்றாடுவார்கள். சட்டம் ஒழுங்கு தன் கடமையை சரிவர செய்திருந்தால் இதுபோன்ற செயல்கள் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்குமா? இது எத்தனையாவது சம்பவம்? சம்பந்தப்பட்டவர்கள் தமது கடமையை சரிவர செய்யாமல் லஞ்சம் பெறுவதாலும், திறமை அற்றவர்களாலுமே குற்றங்கள் அதிகரிக்கின்றன, குற்றவாளிகள் தப்பிக்கின்றனர், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தை கையிலெடுத்து தம்மை பாதுகாக்க முயல்கின்றனர். ஏதோ ஒரு செயலுக்கு பழிவாங்க வேறொரு காரணத்தை சொல்லி சொத்துக்களை அழிப்பது சொத்து சேர்க்க வக்கற்ற சோம்பேறிகளின் செயல். ஏன் நேருக்கு நேர் நின்று எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
On 14/6/2024 at 02:32, ஏராளன் said:

"திருநங்கைளை தவறாக சித்தரிக்காதே" என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டிருந்தது.

 

இந்த ஊடகவியலாளர் எந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றார் அல்லது யூரியூப்பரோ?

அவர் என்ன கருத்தை கூறினார் என்பதை அறியத்தரலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதை ஏற்கமுடியாது – அமைச்சர் டக்ளஸ்

15 JUN, 2024 | 09:27 PM
image
 

நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்தகைய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

யாழ் பிராந்திய ஊடகவியலாளரான பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,  

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. கடந்த காலங்களில் நாட்டில் எத்தனை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் கொலைகள் எல்லாம் நடந்திருந்தது என உங்களுக்கு தெரியும்.

அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது. இதுதான் கடந்த காலங்களில் நடந்தது.

அதேபோன்றுதான் இன்றைக்கும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் துரதிஸ்ரவசமாகவோ அதிர்ஷ்டவசமாகவோ ஈ.பி.டிபியின் பெயர் இன்று அத்தகைய செயற்பாடுகளில் பயன்படுத்துவது இல்லாது போய்விட்டது.

அது உணர்வினுடைய வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது அந்த வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் இன்று அடியோடு இல்லாமையாகவும் இருக்கலாம். 

கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றிக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாமல் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில அழிக்க முற்பட்டார்கள்.

குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மற்றது ஈ.பி.டிபியுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள். அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன். 

அந்தவகையில் எல்லாரும் விழிப்பாக இருந்து உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல்செய்யலாம் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடததக்கது.

https://www.virakesari.lk/article/186151

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதல் : பின்னணியில் இராணுவத்திரே - சிவஞானம் சிறீதரன்

Published By: VISHNU

16 JUN, 2024 | 09:09 PM
image

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார்.

IMG-20240616-WA0145.jpg

அச்சுவேலியில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளரின் இல்லத்தை 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதனை தெரிவித்தார்.

IMG-20240616-WA0144.jpg

மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலத்திற்கு பின்னர் ஊடகவியலாளரை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

IMG-20240616-WA0140.jpg

தாக்குதல் கடந்த 13 ம் திகதி நடைபெற்று இன்றுடன் மூன்று நாள்களாகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸார் ஆகியோர் தேடுகிறோம் பிடிக்கிறோம் என்கிறார்கள். எதுவும் நடப்பதாக இல்லை.

IMG-20240616-WA0135.jpg

இதே ஜனாதிபதியை பற்றியோ அரச உயர் அதிகாரிகள் பற்றியோ யாராவது பதிவு போட்டால் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்படுவார்.

IMG-20240616-WA0134.jpg

யாழ் மாவட்டத்தில் மூலைக்கு மூலை இராணுவம், கடற்படை, விமானப்படை பொலிஸார் குவிக்கப்பட்டு இருக்கும்போது எவ்வாறு இவர்களுக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிள்களில் துணிகரமாக வாள்கள் பொல்லுகளுடன் வரமுடிகிறது.

வீட்டுக்கு வெளியே நின்ற பேருந்து, முச்சக்கரவண்டியை தாண்டி ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளை இனங்கண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த விடயத்தை திசைதிருப்புவதற்காக திருநங்கைகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி பலாலி வசாவிளான் பகுதியில் காணி துண்டு விடுவிப்புக்காக வந்தபோது, காணி விடுவிக்கப்படவில்லை மக்கள் கூடியநிலையில் அது தொடர்பாக  செய்தி சேகரிக்க சென்ற த.பிரதீபன், க.பரதன் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் இராணுவத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்பட்டு இராணுவப் புலனாய்வாளர்களால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் திறந்தவெளி சிறைச்சாலைக்குள் அடக்குறைகளை விரிவுபடுத்தி பிரயோகிப்பதையே இதன்மூலம் பார்க்கமுடிகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/186220

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது!

யாழில் ஊடகவியலாளரின்  வீட்டின் மீது அண்மையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் மூன்று பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், நேற்றைய தினம் மூன்று பேரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து,
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2024/1388695

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.