Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/6/2024 at 17:47, குமாரசாமி said:

மதம் சம்பந்தமாக இறப்பவர்களை விட ஆறறிவு படைத்த மூர்க்கமானவர்களாலேயே உலகில் இறப்பவர்கள் அதிகம்..அதை விட தமக்கு எல்லாமே தெரியும்  என மார்தட்டிக்கொள்ளும் மானிடம் செய்யும் தவறுகளால் முழு உலகமே இயற்கை அழிவுகளை தினசரி அனுபவிக்கின்றது. காரணம் உலக வெப்பமயம்.

இதையெல்லாம் நாத்தீகவாதிகள் கிஞ்சித்தும் சிந்திக்க மாட்டார்கள்.

நீங்கள் ஜேர்மனியில் ஒரு கட்சியின் உறுப்பினர் என நினைக்கிறேன். அந்தக் கட்சியினர் புவி வெப்பமாதலைத் தடுக்கும் கொள்கைகளை வைத்திருக்கின்றனரா அல்லது நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவோம் எனக் கூறுகின்றனரா?

அப்படி ஒர் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த கிறெரா துன்பேர்க்கை நீங்களே யாழில் காய்ச்சி எடுத்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்களுக்கு மறந்து விட்டதா😎?

நீங்கள் ஆதரிக்கும் ட்ரம்ப், "இன்னும் எண்ணை தோண்டுவேன்" என்கிறார். நீங்கள் எதிர்க்கும் பைடன் கொண்டு வந்த சூழல் பாதுகாப்புச் சட்டங்களை ரத்துச் செய்வேன் என்கிறார்.

முரண்பாட்டின் மொத்த வடிவமா நீங்கள் அல்லது குழப்பத்தின் வடிவமா😂?

யார் புவியை வெப்பமாக்குகிறார்கள்? யார் பசுமைத் தொழில் நுட்பத்தால் உலகை அடுத்த சந்ததிக்கு விட்டு செல்ல முயல்கிறார்கள் என்ற தெளிவாவது இருக்கிறதா?

  • Like 1
Posted

 

இப்படியானவர்கள் உண்மையான செய்திகளை வெளியிடுகிறார்கள் என நான் நம்புகிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹஜ் யாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Hajj.jpg

சவுதி அரேபியாவிற்கு இந்த ஆண்டு புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்றவர்களில், கடும் வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளது.

சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு மரணித்தவர்களில் 83 சதவீதமானவர்கள் சட்டவிரோதமான முறையில் மக்காவிற்கு யாத்திரைக்குச் சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மக்காவிற்கான யாத்திரையை மேற்கொள்கின்றவர்கள், தங்குமிட வசதிகள் எதுவும் இன்றி நீண்ட தூரம் கடும் வெப்பத்தில் நடந்து செல்ல நேர்வதால், மரணங்களும் அதிகரிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Hajj pilgrims deaths: Toll mounts to 1,000 in Mecca amid heatwave - India Today

https://thinakkural.lk/article/304443



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.