Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
24 JUN, 2024 | 02:40 PM
image
 

''தமிழகத்தில் சாதி வாரியிலான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பேசும் போது, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாளாக கிடப்பிலுள்ளது என்றும், சாதி வாரியிலான கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்''  என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ''வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த தரவுகள் இல்லாததால் உயர்நீதி மன்றமும், உச்ச நீதிமன்றமும் நிறுத்தி வைத்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இல்லை. சாதி வாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த எளிதாக இருக்கும்'' என பதிலளித்தார்.

தொடர்ந்து இது குறித்து பாமக உறுப்பினர் ஜிகே மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் மு க ஸ்டாலின், ''சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் கொண்டுவரப்படும் அதுவும் இந்த கூட்டத்தொடரிலேயேத் தீர்மானம் கொண்டுவரப்படும்'' என உறுதியளித்தார்.

இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு போதிய அளவு பேசுவதற்கு வாய்ப்பு தரப்படவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/186835

  • கருத்துக்கள உறவுகள்

நாசமா போங்க 😡

  • கருத்துக்கள உறவுகள்

சாதி ஒழிப்பு திருமணம் செய்பவர்களும் இந்த திராவிடர்கள்தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பதில் சரியான அணுகுமுறை.

சும்மா சாதி இல்லை (அல்லது புலிகள் போல  தடை செய்து) என்று சட்டம் போட்டு செய்யும் விடயம் அல்ல.

அப்படி செய்வது (அள்ளது புலிகள் செய்தது) சாதியை பதுங்கு  குழிக்குள் தள்ளியது, காற்றழுத்தமாக அடைத்தது ; அந்த காற்றழுத்த மூடியான புலிகள் அகன்றவுடன் வீறு கொண்டு எழுந்துள்ளது.

தமிழ் நாட்டில்  எல்லா சாதிகளும் அவை பிற்றப்படுத்தப்பட்டவை என்ற அரச முத்திரையை வலிந்து வரவேற்றுக்கும் போக்கு இருக்கிறது.

ஏனெனில், இட  ஒதுக்கீடு, சலுகைகளுக்காக.

எனவே, உண்மையாக (பொருளாதாரத்தில்) பின்னுக்கு சமூக மட்டத்தில் இருக்கும் சாதிகளை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, Kadancha said:

இருப்பதில் சரியான அணுகுமுறை.

சும்மா சாதி இல்லை (அல்லது புலிகள் போல  தடை செய்து) என்று சட்டம் போட்டு செய்யும் விடயம் அல்ல.

அப்படி செய்வது (அள்ளது புலிகள் செய்தது) சாதியை பதுங்கு  குழிக்குள் தள்ளியது, காற்றழுத்தமாக அடைத்தது ; அந்த காற்றழுத்த மூடியான புலிகள் அகன்றவுடன் வீறு கொண்டு எழுந்துள்ளது.

தமிழ் நாட்டில்  எல்லா சாதிகளும் அவை பிற்றப்படுத்தப்பட்டவை என்ற அரச முத்திரையை வலிந்து வரவேற்றுக்கும் போக்கு இருக்கிறது.

ஏனெனில், இட  ஒதுக்கீடு, சலுகைகளுக்காக.

எனவே, உண்மையாக (பொருளாதாரத்தில்) பின்னுக்கு சமூக மட்டத்தில் இருக்கும் சாதிகளை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை எல்லோரும் ஒரே மொழி ஒரே இனம் என்ற சட்டத்தை பொதுவாக கொண்டுவர வேண்டும். சாதி என்ற இடத்திற்கே இடமளிக்கக்கூடாது.

மேலை நாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் பின்பற்றினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

இருப்பதில் சரியான அணுகுமுறை.

சும்மா சாதி இல்லை (அல்லது புலிகள் போல  தடை செய்து) என்று சட்டம் போட்டு செய்யும் விடயம் அல்ல.

அப்படி செய்வது (அள்ளது புலிகள் செய்தது) சாதியை பதுங்கு  குழிக்குள் தள்ளியது, காற்றழுத்தமாக அடைத்தது ; அந்த காற்றழுத்த மூடியான புலிகள் அகன்றவுடன் வீறு கொண்டு எழுந்துள்ளது.

தமிழ் நாட்டில்  எல்லா சாதிகளும் அவை பிற்றப்படுத்தப்பட்டவை என்ற அரச முத்திரையை வலிந்து வரவேற்றுக்கும் போக்கு இருக்கிறது.

ஏனெனில், இட  ஒதுக்கீடு, சலுகைகளுக்காக.

எனவே, உண்மையாக (பொருளாதாரத்தில்) பின்னுக்கு சமூக மட்டத்தில் இருக்கும் சாதிகளை பொருளாதாரத்தில் உயர்த்த வேண்டும்.

இல்லை 

இது நாமே நம் தலையில் மண்ணை அள்ளி அள்ளி போடுமாப்போல் ஆகி பல நூற்றாண்டுகளாக இதை நாமே  கடத்தி சுமக்கவே வழி வகுக்கும்.  

இதை அழிக்க வேண்டுமானால் முதலில் நாம் சில தியாகங்களுக்கு தயாராக வேண்டும். சலுகைகளுக்காக குனிந்தபடி போராட முடியாது.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இல்லை 

இது நாமே நம் தலையில் மண்ணை அள்ளி அள்ளி போடுமாப்போல் ஆகி பல நூற்றாண்டுகளாக இதை நாமே  கடத்தி சுமக்கவே வழி வகுக்கும்.  

அதை தானே சாதி முத்திரை குத்தி தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அங்கே  என் இனம் என் இனம் என்று சொல்லி கதைப்பார்களாம். தமிழர்கள் தமிழ் இனத்தை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்படி இல்லை அவர்கள் தங்கள் சாதியை தான் இனம் என்று ஆசையாக  சொல்வார்களாம். (பல வருடங்களுக்கு முன்பு அங்கே படித்த எனது உறவினர் சொன்னது)

மேலே தெரிவிக்கபட்ட கருத்து  போல் மேலைநாட்டு வாழ்க்கை முறைகளையும் சட்ட திட்டங்களையும் நடைமுறைபடுத்துவதே சரியான தீர்வு

Edited by விளங்க நினைப்பவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாதிவாரி கணக்கெடுப்பு: மோதி தயங்குவது ஏன்? ஸ்டாலின் முன் உள்ள தடைகள் என்ன? - 6 கேள்வி பதில்கள்

ஸ்டாலின் மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

37 நிமிடங்களுக்கு முன்னர்

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வலியுறுத்தி சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

’’இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்."

"எனவே, 2021ஆம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும், அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்’’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஏன் அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன? மாநில அரசால் இந்தக் கணக்கெடுப்பை நடத்த முடியாதா? மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

 

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை?

ஸ்டாலின் மோதி

பட மூலாதாரம்,DIPR

மக்களுக்குக் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம வாய்ப்பு, சம உரிமை வழங்க சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் எனக் கருதப்படுகிறது.

சாதி ரீதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதால் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.

"இட ஒதுக்கீடு அளிக்கச் சரியான தரவுகள் தேவை. அடுத்தபடியாக, பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்கிறது. அப்போது ஒவ்வொரு சமூகத்தின் சமூக - பொருளாதார பின்னணி தெரிய வேண்டும். அடுத்ததாக, பல்வேறு சாதிகள் தங்கள் எண்ணிக்கை சார்ந்து பல கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகள் சரியா என்பதை அறிய இந்தக் கணக்கெடுப்பு உதவும்" என்கிறார் அவர்.

இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அரசுகள் நீண்ட காலமாக இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி வருகின்றன. ஆனால், இந்த நடைமுறையில் நீதிமன்றங்கள் பல முறை குறுக்கிட்டுள்ளன.

"இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்கிறது. பரந்துபட்ட மக்கள் எல்லா அதிகாரங்களையும் பெற சாதிவாரி கணக்கெடுப்பு தேவை" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து.ரவிக்குமார்.

WHATSAPP

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு கடைசியாக எப்போது எடுக்கப்பட்டது?

கடந்த 1865ஆம் ஆண்டில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு மாகாணமான வட-மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.

கடந்த 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பாகக் கொள்ளப்படுகிறது.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிகள் விவரம் சேகரிக்கப்படவில்லை. ஆனால், பட்டியல் பிரிவில் இருக்கும் பழங்குடியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால், அவர்களது எண்ணிக்கை மட்டும் சேகரிக்கப்பட்டது. மற்ற சாதியினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படவில்லை.

ஆகவே, மற்ற சாதியினரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 1931ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இருந்த விகிதமே இப்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011இல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கடுத்த கணக்கெடுப்பு, 2021இல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தருணத்தில் கோவிட் பரவல் இருந்த காரணத்தால், மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

 

சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசால் மேற்கொள்ள முடியுமா?

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், "புள்ளிவிவர சட்டம் 2008இன் படி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் மாநில அரசுகள் மக்களின் சமூக, பொருளாதார புள்ளி விவரங்களைச் சேகரிக்க மட்டுமே வழிவகை செய்யப்பட்டுள்ளது."

"இந்தச் சட்டத்தின் பிரிவு 3இல் உள்ள உட்பிறவு ஆ-வின் படி, இந்திய அரசமைப்பு சட்டத்தின் 7வது அட்டவணையில் உள்ள இனங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை மாநில அரசால் சேகரிக்க இயலாது. அதாவது 7வது அட்டவணையில் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 69வது இனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது." என்றார்.

மேலும், "இச்சட்டத்தின் பிரிவு 32இன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948இன் கீழ் மக்கள் தொகை தொடர்பான புள்ளிவிவரங்களை (census data) மாநில அரசால் சேகரிக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது,’’ என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்தால் என்ன பிரச்னை?

பாமக கெளரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே மணி, "மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு காத்திருக்க வேண்டாம். பிகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏன் நடத்தவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசமைப்பு சட்டம் 246இன் படி மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் உள்ளது. சட்டப்படியாக நிலைக்கக்கூடிய சாதிவாரி கணக்கெடுப்பு என்றால், அது மத்திய அரசு பட்டியலில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் மூலமே மேற்கொள்ள முடியும்.

மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டு, கிடைக்கப்பெறும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் பணிகளுக்குத்தான் சட்டப்படியான பாதுகாப்புகள் இருக்கும். இதைத் தவிர்த்து, அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளும் சர்வே மூலம் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினால் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன.

பிகாரில் கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீடு சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அரசின் 2 திருத்தச் சட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

 

2011 கணக்கெடுப்பு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை?

சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியிடப்படவில்லை.

அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோதி தலைமையிலான அரசும் கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடவில்லை. இந்தக் கணக்கெடுப்பு பல குறைபாடுகள் கொண்டது என்றும், நம்பகத்தன்மையற்றது என்றும், இட ஒதுக்கீடு மற்றும் கொள்கையின் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியாதது என்றும் அரசு கூறியது.

தரவுகளில் உள்ள குறைபாடுகள் காரணமாக, நிதி ஆயோக்கின் அப்போதைய துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசு முடிவு செய்தது. ஆனால் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் பெயர் அறிவிக்கப்படாததால், அந்தக் குழு ஒருபோதும் மக்களைச் சந்திக்கவில்லை. இதன் விளைவாக, மூலத் தரவுகளைத் தொகுத்து, வெளியிடக்கூடிய கணக்கெடுப்பாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

கடந்த 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்தியாவில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் பற்றிய தரவுகளைச் சேகரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கு மத்திய அரசு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தது. அதில், சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாக ரீதியாகக் கடினமானது மற்றும் சிக்கலானது(வழக்கமாக எடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி பிரிவினரின் கணக்கெடுப்பைத் தவிர) எனக் கூறியது.

மேலும் தனது பதிலில், "வெவ்வேறு பட்டியல்களின்படி சாதி வகைகளில் உள்ள வேறுபாட்டை மத்திய அரசு சுட்டிக்காட்டாது. மத்திய பட்டியலில் 2,479 பிற்படுத்தப்பட்ட சாதிகள் உள்ளன, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியல்களின்படி 3,150 சாதிகள் உள்ளன" என்று மத்திய அரசு கூறியது.

மேலும், "மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி தொடர்பான கேள்வியைக் கேட்டால், அதற்குப் பல ஆயிரம் சாதிப் பெயர்கள் பதிலாக வரும். ஏனெனில், சாதி குறித்துக் கேட்கும்போது மக்கள் தங்கள் குலம், கோத்ரம், துணை சாதி என ஒன்றுக்கொன்று மாறுபட்ட வகையில் பயன்படுத்துவதால் கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பம் ஏற்படும்" என்று தனது பதிலில் மத்திய அரசு கூறியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/6/2024 at 10:07, விளங்க நினைப்பவன் said:

அங்கே  என் இனம் என் இனம் என்று சொல்லி கதைப்பார்களாம். தமிழர்கள் தமிழ் இனத்தை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் அப்படி இல்லை அவர்கள் தங்கள் சாதியை தான் இனம் என்று ஆசையாக  சொல்வார்களாம். (பல வருடங்களுக்கு முன்பு அங்கே படித்த எனது உறவினர் சொன்னது)

இலங்கையில் (ஈழத்தமிழர்கள்) பாவிக்கும் பதம் எங்கடை ஆக்கள் (மொழி அடிப்படையில் சரியானதும் கூட), குறித்த நபர்கள் சொல்லுபவரின் சாதியை சேர்ந்தவர் என்பதற்கு. 

இனம் என்ற பதப்பிரோயோகத்தில்   இலங்கை (ஈழத்தமிழர்கள் பெரும்பாலோனோர்) மிக தெளிவானர்வகள்.


தமிழ்நாட்டில் இனம் சாதியை குறிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்


பொதுவாக , இங்கே சிலர் சொல்லி இருப்பது, நடந்தால் நல்லது, அனால் யதார்த்தம் இல்லை.

சட்டங்கள் போடுவது ஒரு பகுதி தான். அனால், அது கூட பெயர் அளவிலேயே விளைவு.

பொருளாதாரத்தை உயர்த்துவதும் ஒரு பகுதி தான்.

அனால், பொருளாதாரத்தை உயர்த்தும் போது மிக முக்கியமான விளைவு - ஒரு சாதியில் இருக்கும் பெரும்பான்மையோர், இன்னோர் சாதியில் வாழ்வாதாரத்துக்காக தங்கி இருப்பது குறைக்கப்படும் (உண்மையில் நீக்கப்பட வேண்டும், அனால், உடனடியாக சாத்தியம் இல்லை).
 

இது இரண்டு விளைவுகளுக்கு ஈட்டி செல்லும் - ஒன்று சாதியால் ஒரு சாதியனர் இன்னொரு சாதியை சமூக, பொருளாதார அடிப்படையில் ஒதுக்குவது, அடக்குவது குறையும்; மற்றும் எந்த சாதியும் தைரியமாக ஒதுக்குவத்து, அடக்குவதை எதிர்க்கும்.

இது மிக முக்கியமானது.

குறிப்பிட்ட சாதி வளங்கள், சமூக, அரசியல்  வெளியை கட்டுப்படுத்துவதிலேயே, ஒரு குறிப்பிட சாதிக்கு மற்ற்ற சாதிகளை   அடக்குவது, ஒதுக்குவது செய்ய முடிகிறது. 

இதை முற்றாக உடனடியாக நீக்க முடியாது; அனால் எவ்வளவு குமுடியுமோ அவ்வளவு செய்யப்பட வேண்டும் 

பொருளாதார கட்டமைப்பை மாற்றுவது (இங்கே சொல்லப்பட்ட மேற்கு முறைகள்) நீண்ட காலா திட்டம்.

அதுவும் வெளியில் சொல்லி செய்ய முடியாது.  (வெளியில் சொல்லி ) முனையும்  அரசியல் கட்சி அடிபட்டு போகும் வாய்ப்பு இருக்கிறது . இப்படி பல பிரச்சனைகள்.  

(சாதி வரலாறு அறிந்தது தான்  சொல்கிறேன்).
 

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

இலங்கையில் (ஈழத்தமிழர்கள்) பாவிக்கும் பதம் எங்கடை ஆக்கள் (மொழி அடிப்படையில் சரியானதும் கூட), குறித்த நபர்கள் சொல்லுபவரின் சாதியை சேர்ந்தவர் என்பதற்கு. 

ஈழத்தமிழர்கள் எங்கடை ஆக்கள் என்ற சொல்லை சாதியை குறிப்பிட பாவிக்கின்றனரா.அப்படி இல்லை. மேற்குலக நாடுகளில் ஈழத்தமிழர்கள் சாதாணரமாக  பாவித்து கேட்க கூடிய சொல்  எங்கடை ஆக்கள்.   
எங்கடை ஆக்கள் கடையில் உணவு வகை வாங்கும் போது முடிவு திகதி பற்றி அக்கறை கொள்வதில்லை.
எங்கடை ஆக்கள் இலங்கை கோவில் திருவிழாவுக்கு இங்கே விரதம் இருப்பார்கள் இப்படி  எங்கடை ஆக்கள் என்று அவர்கள் சொல்வது இலங்கையில் இருந்து மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழத்தமிழர்களை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மேற்குலக நாடுகளில் ஈழத்தமிழர்கள் சாதாணரமாக  பாவித்து கேட்க கூடிய சொல்  எங்கடை ஆக்கள்.   

ஆம், நீங்களே சொல்லி விட்டீர்கள்  மேற்கு  நாடுகளில் எங்கடை ஆக்கள் என்பது  - அது ஏனைய ஈழத்தமிழரை குறிக்கும்.

அனால், அந்தந்த ஊரில் எங்கடை  ஆக்கள் என்பது பொதுவாக, அநேகமான எல்லா சந்தர்ப்பத்திலும்  குறிப்பிட்ட சாதியை குறிக்கும்.


சந்தர்ப்பம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும் ஏனெனில், (இப்பொது) மேற்கில் எங்கடை ஆக்கள் என்பது ஈழ தமிழரை குறிக்கும்.

அனால், மேற்கிலும் எனந்த சந்தர்ப்பத்தில் எங்கடைஆக்கள் என்பது பாவிப்படுகிறது - அவர்களின் சொந்த பந்தங்களை குறிப்பதற்கா அல்லது ஈழத்தமிழரை குறிப்பதற்கா என்பது சந்தர்ப்பத்தில் தங்கி இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் சொல்லி இருப்பது , மேற்கு முறைகளை அறிமுகப்படுத்துவது, அனால் அதை தடுப்பது சாதி 

ஏன் கிந்தியா, மற்ற நாடுகளில் எவ்வளவு சாதி என்பது பின்பற்றப்படுகிறது என்பதை பொறுத்து, மேற்கு, சென் போல வளர முடியாது என்பதை வீடியோ சொல்கிறது.

(இதில் பிராமணர் மட்டும் அல்ல, வேறு உயர் சாதிகள் என்று மார்தட்டுபவையம் உள்ளடக்கம்).  

இந்த வீடியோ இ பாருங்கள் (இதில் எந்த விதமான உணர்ச்சிகரமாக சாதியை பார்க்காமல், மொத்தத்தில் உணரசிகரமற்ற ஆய்வு நோக்கில், பொருளாதாரம், உள்ளூர் ஆட்சி, வெளிநாட்டு முதலீடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட ஆய்வு.

(பொதுவாக வெளியாரின் ஆய்வு காணோட்டம் , எமது கண்கள், மதி  காண மறுப்பதை போட்டு உடைத்து காட்டும். முழு வீடியோ ஐயும் பார்த்தல் மேலதிக விளக்கம் ஏற்படும் ) 

இதனால் தான் சொல்கிறேன், பொருளாதர தங்கி இருப்பதாய் இளக்கினால், சாதி பிடி இளகுவாதற்கு வாய்ப்புகள் கூட.  

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.