Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாடு: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB

படக்குறிப்பு,ஆர்ம்ஸ்ட்ராங்
48 நிமிடங்களுக்கு முன்னர்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தாக்குதல் நடத்திய நபர்களை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, இன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். உடனிருந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

 

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி
படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி

மொத்தம் ஆறு பேர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்துள்ள காவல்துறை, தனிப்படை அமைத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க செம்பியம், பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?

காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாகக் குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்" என எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பிஎஸ்பியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை

பட மூலாதாரம்,@EPSTAMILNADU

சென்னையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவ்ல் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், "இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுடன் உள்ளன. நம் சமூகத்தில் வன்முறைக்கும் மிருகத்தனத்துக்கும் இடமில்லை. ஆனால் திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது."

மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைத்து விட்டு, மு.க.ஸ்டாலின் மாநில முதலமைச்சராகத் தொடரும் தார்மீகப் பொறுப்பு அவருக்கு இருக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்," என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு கட்சியின் மாநிலத் தலைவரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:
 

சமீபத்தில் சேலத்தில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு கட்சியின் மாநிலத் தலைவரும் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🫣............

எத்தனை கொலைகளும், சாவுகளும் தமிழ்நாட்டில்.....

ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடி போன வருடம் கொல்லப்பட்டிருக்கின்றார். அவரின் கூட்டாளி ஒருவரும் சில மாதங்களின் முன்னர் கொல்லப்பட்டிருக்கின்றார். பின்னர் அதற்கு ஒரு பழி வாங்கும் கணக்கில் இவர் இப்பொழுது கொல்லப்பட்டிருக்கின்றார் என்று இன்னொரு செய்தியில் இருக்கின்றது.......... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Armstrong: Ambedkar மீதான நேசம் முதல் Police Cases வரை; ஆம்ஸ்ட்ராங் BSP மாநில தலைவரானது எப்படி?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், பட்டியலின மக்களுக்கான அரசியலில் கீழ் மட்டத்திலிருந்து மேலே வந்தவர்.

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்தான் ஆம்ஸ்ட்ராங். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

மாநில தலைவரானது எப்படி?

மாநில தலைவரானது எப்படி என்பதை விட

எப்படி கொல்லப்பட்டார் என்று ஆராயலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்ரோங்கின் கடைசி பேச்சு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி

பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB

7 ஜூலை 2024, 05:29 GMT
புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பெரம்பூரிலிருக்கும் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

 

மாயாவதி பேசியது என்ன?

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய அவர், "தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியைப் பலப்படுத்த சிறப்பாகப் பணியாற்றியவர் ஆம்ஸ்ட்ராங். பல ஏழைகளுக்காக இலவசமாக வழக்கை வாதாடியவர்."

"அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலிக்காகக் கொலை செய்தவர்கள் மட்டுமே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு கைது செய்ய வேண்டும். இந்த வழக்கில் எங்களுக்கு நியாயம் வேண்டும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்கள் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துடன் துணை நிற்கும்" என்று கூறினார்.

மேலும் கட்சித் தொண்டர்கள் இந்தத் தருணத்தில் அமைதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும் மாயாவதி அறிவுறுத்தினார்.

என்ன நடந்தது?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வருகிறார். இதற்கு அருகிலேயே தனது பழைய வீட்டை இடித்துக் கட்டி வருகிறார். தினமும் மாலையில் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றும் அவர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டுவிட்டு, சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவரை அரிவாளாலும் கத்தியாலும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். உடனிருந்த இரண்டு பேருக்கும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அது அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டுசெல்லப் படுகிறது. அங்க்கிருந்து அவரது உடல், பெரம்பூரிலிருக்கும் பந்தர் கார்டன் பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வடசென்னை கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னையின் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், “தற்போது 8 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இது முதல் நிலை விசாரணைதான்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினால்தான் கொலை குறித்த முழுமையான காரணம் தெரிய வரும். 10 தனிப்படைகளை அமைத்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கொலையில் சில கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து எழுப்பாத கேள்வி

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிவாங்குவதா, அவருக்கு நியாயமான முறையில் அடக்கம் பண்ண விடாமல் திமுக பாகுபாடாக நடந்துகொண்டதா, ஆம்ஸ்ட்ராங் உண்மையில் ஒரு போராளியா, அரசியல் தலைவரா அல்லது தாதாவா, இது ஆருத்திரா மோசடிப் பண கட்டப்பஞ்சாயத்து விவகாரத்தின் போதான மோதலின் விளைவாக நடந்ததா போன்ற கேள்விகள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன என நினைக்கிறேன்.

இன்னொரு பக்கம், சூத்திரர்கள் vs தலித்துகள் எனும் முரணும் கூர்தீட்டப்பட்டு மக்களிடம் பிரிவினையை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இதை வேறெவரையும் விட பாஜக பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறது - அடுத்தடுத்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தலித்துகள் திமுக - அதிமுக என வாக்களிப்பது பாஜகவை மிகவும் சோர்வடைய வைக்கிறது (அண்மையில் நடந்த மக்களைத் தேர்தலிலும் இந்தியாவின் வேறு மாநிலங்களிலும் பழங்குடியினரைத் தவிர தலித்துகள் இவ்வாறே பாஜகவுக்கு எதிராக வாக்களித்தார்கள்.). இந்த களேபரத்தில் நாம் கேட்காத ஒரு முக்கிய கேள்வி உண்டு:

இந்த படுகொலை காவல்துறைக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த படுகொலை என்றல்ல எல்லா முக்கிய பிரமுகர்களின் கொலையும் ஏற்கனவே தெரிந்துதான் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்ததும் காவல் துறை வந்து நிமிஷ நேரத்தில் லபக்கென்று குற்றவாளிகளைப் பிடிக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலையின் போதும் இது நடந்தது. இந்த துரிதமும் சுலபத்தன்மையும் இயல்புமீறியவை, சந்தேகத்துரியவை. அதுவும் குற்றவாளிகள் உடனே சரணடைவது எல்லாம் எதார்த்தத்தை மீறியது. ஏதோ போன் பண்ணி வரச்சொல்வதைப் போல இது நடக்கிறது.
 
சரி, தெரிந்தே நடந்தது எனில் ஏன்? எப்போதுமே இதற்கான பதில் பணம் மற்றும் அதிகாரத்துக்காக என்பதே. இதை குற்றவாளிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் கொடுத்தது - அதாவது குற்றத்திற்கு நிதியளித்தது - யார்? ஆனால் இந்த கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள் (திருமா லேசாக இதை எழுப்பினார், ஆனால் ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.). எந்த பத்திரிகையாளரும் சற்று விசாரித்து இதைக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். ஸ்வாதி படுகொலையைப் போன்றே இந்த கொலையும் பல ஊகங்களுடன் முடிந்துபோகும்.
 
இதற்குப் பின்னிருக்கும் அந்த பெரிய கை இந்நேரம் இங்கு நடக்கும் விவாதங்களைப் பார்த்து கால் மேல் காலிட்டு சிரித்துக் கொண்டிருப்பார். பெரும் பணமும் அதிகாரமும் படைத்தவராக இருப்பது ரொம்ப ஜாலியானது தான் - நீங்கள் மனிதர்களின் சிந்தனையை, நடத்தையை கட்டுப்படுத்த முடியும். கிட்டத்தட்ட ஒரு கடவுளைப் போல.
அந்த கிட்டத்தட்ட கடளுக்காக நாம் நமது நேரத்தையும் ஆற்றலையும் ஏன் வீணடித்து முட்டாளாகிறோம்?
  • கருத்துக்கள உறவுகள்

 திராவிட மாடலே, பஞ்சமி நிலம் எங்கே?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் பத்தே நாளில் என்கவுன்ட்டர் - கேள்விகளும் சந்தேகங்களும்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்

பட மூலாதாரம்,POLICE

படக்குறிப்பு,திருவேங்கடம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 47 நிமிடங்களுக்கு முன்னர்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவரை அழைத்துச் சென்ற போது, தப்ப முயன்ற அவர் தாக்கியதாகவும், தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையான பத்தே நாட்களில் அந்த வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

அதிகாலையில் அழைத்துச் சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அவரை போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனரா என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. அதேசமயம், “குற்றமே செய்திருந்தாலும் மனித உயிரை பறிப்பதற்கு காவல்துறைக்கு உரிமை இல்லை” என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டன குரல்களை எழுப்புகின்றனர். என்ன நடந்தது?

சுடப்பட்டது எப்படி?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்

பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB

படக்குறிப்பு,ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி தலைநகர் சென்னையில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இக்கொலைக்குக் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆற்காடு சுரேஷ் என்பவர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளது என ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தேகித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியே தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய, மணலியில் திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அதிகாலையில் அவரை அழைத்துச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். அப்போது திருவேங்கடம் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் திருவேங்கடம் போலீசாரை சுட முயன்றதாகவும் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

காவல்துறை கூறுவது என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்

பட மூலாதாரம்,POLICE

இதுதொடர்பாக, போலீசார் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். பாதுகாவலராக சென்ற காவலர்கள் உடனடியாக அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை.”

புழல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்த போது தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு,திருவேங்கடம் தப்பியோட முயற்சித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “சரணடைந்த திருவேங்கடத்தை வேகவேகமாக அதிகாலையில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அவரை அழைத்து சென்றபோது கைவிலங்கிட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும். இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது" என தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் வலைதளத்தில், “கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

அதிருப்தியை மட்டுப்படுத்தும் முயற்சியா?

“இதுபோல் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும். வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் தான் அதனை பறிமுதல் செய்வார்கள். தற்காப்புக்காக முதலில் அவருடைய முட்டிக்குக் கீழ் சுடப்பட்டதா என்பதும் தெரியவில்லை” என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிசெல்வன்.

சட்டம் - ஒழுங்கு குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மட்டுப்படுத்த இந்த என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு,அதிகாலையில் திருவேங்கடம் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

அதிகாலையில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

திருவேங்கடத்தை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அதிகாலையில் அழைத்து சென்றதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

“குற்றம்சாட்டப்பட்டவர்களை போதிய வெளிச்சம் உள்ள நேரத்தில் அழைத்து செல்லவேண்டும். இதற்கான நேர வரையறை இல்லை என்றாலும் அதிகாலையில் செல்ல வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுகிறது” என்கிறார் வழக்கறிஞர் வெற்றிசெல்வன்.

போலீஸ் காவலில் உள்ளவர்களின் உயிருக்கும் உடமைக்கும் முழுமையான பொறுப்பு காவல்துறை தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

போலீஸ் காவலில் உள்ளவரை சுட்டது ஏன்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு,"சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும்?"

இந்த கொலை வழக்கில் தானாக சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதாக, ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம் கூறுகிறார். போலீஸ் காவலில் உள்ளவரை சுடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அவர் குறிப்பிடுகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட போது, ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சமீபத்தில் கூறியிருந்தார். காவல்துறை உயரதிகாரிகளின் இத்தகைய பேச்சுகளை சுட்டிக்காட்டுகிறார் மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம்.

போதிய தகவல்களை வழங்காதது ஏன்?

“என்கவுன்ட்டர்” நடந்ததிலிருந்து திருவேங்கடத்தின் குடும்பத்தினரை தொடர்புகொள்ள தான் முயற்சிப்பதாக ஆசீர்வாதம் கூறுகிறார். “இதுவரை அவர்களை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை, இப்போதுவரை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை” என்கிறார் அவர்.

திருவேங்கடத்திடம் ஆயுதம் வந்தது எப்படி, போலீசார் சரியாக பரிசோதிக்கவில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுவதாக, ஆசீர்வாதம் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகங்களை முன்வைக்கின்றனர்.

திருவேங்கடம் சுட்டதாக கூறப்படும் காவலர் யார், திருவேங்கடத்தை சுட்ட காவல் ஆய்வாளர் யார் என்பதில் வெளிப்படையான தகவல்கள் செய்திக்குறிப்பில் இல்லை என்றும் ஆசீர்வாதம் கூறுகிறார்.

இனி என்ன செய்ய வேண்டும்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு,"கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்"

இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து அரசு சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக,

  • குடும்பத்தார் திருவேங்கடத்தின் உடலை அடையாளம் காண்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
  • இரு மருத்துவர்களின் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • உடலை புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதுகுறித்த புகைப்படம், வீடியோக்களை குடும்பத்திடம் வழங்க வேண்டும்.

“நடுநிலையான குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

“முழு விஷயமும் தெரியாத வரையில் இது கொலையா அல்லது தற்காப்புக்காக செய்யப்பட்டதா என்பதை சொல்ல முடியாது. குற்றம் செய்திருந்தால் கைது செய்வதற்கும் அவர்களுக்கு கூடுதல் தண்டனைகள் பெற்று தருவதற்கும் சட்டத்தில் வாய்ப்புண்டு. ஆனால், இப்படி என்கவுன்ட்டர் செய்வது கண்டிக்கத்தக்கது” என்கிறார் அவர்.

இந்த வழக்கை சந்தேக மரணம் என்று பதிவு செய்யாமல், பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது போன்று கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் வெற்றிசெல்வன்.

காவல்துறை மீது எழும் கேள்விகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி, “காவலர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதையை கழிக்க செல்கிறோம் என்று கூறினால், கைவிலங்கை அகற்ற வேண்டிய நிலைதான் ஏற்படும். என்கவுன்ட்டர் தவறு என இப்போது சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையில் இதற்கான காரணத்தை சொல்லும்போதுதான் அதை ஏற்பதா, இல்லையா என்பது தெரியவரும்” என்கிறார்.

தற்காப்புக்காக முதலில் முட்டிக்குக் கீழ் சுடுவதற்கான வாய்ப்பு இருக்காது, தப்பி செல்வதற்காக ஒருவர் ஓடும்போது, குறி தப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முடிக்கப்பட்ட டெலிவரி பாய்! 
யார் இந்த ரவுடி திருவேங்கடம்? கணக்கை தொடங்கிய காக்கிகள்!

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 30 நாட்கள் கடந்தும் முடிவே தெரியாத கேள்விகள் - வழக்கு என்ன ஆகும்?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 30 நாள்கள் கடந்தும் முடிவே தெரியாத கேள்விகள் -வழக்கு என்ன ஆகும்?

பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், தினசரி கைதுகள், விசாரணை என வழக்கு நீண்டு கொண்டே செல்கிறது. தனிப்படை போலீசாரின் விசாரணை, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருமா?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் அவர் புதிதாகக் கட்டி வந்த வீட்டின் முன்பு வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்தார். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழக்கில் கைதான திருவேங்கடத்தை மாதவரம் ஏரிக்கரை அருகே உள்ள பகுதிக்குப் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் அவர் என்கவுன்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து, கொலை வழக்கில் சரணடைந்த நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். அதில், திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் ஹரிதரனும் ஒருவர்.

கொலைக்குப் பயன்படுத்திய 6 செல்போன்களை அவரிடம் கொலையாளிகள் ஒப்படைத்ததாக கூறப்பட்டது. இவற்றில் 3 செல்போன்களை கொசஸ்தலை ஆற்றில் இருந்து போலீசார் மீட்டனர். இவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 30 நாள்கள் கடந்தும் முடிவே தெரியாத கேள்விகள் -வழக்கு என்ன ஆகும்?

பட மூலாதாரம்,BSP - TAMIL NADU UNIT/FB

தொடரும் கைதுகள்

இதன்பின்னர், அ.தி.மு.க., முன்னாள் பிரமுகர் மலர்க்கொடி, பா.ஜ.க முன்னாள் பிரமுகர் அஞ்சலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய பொன்னை பாலு, அருள், ராமு உள்பட 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், தமிழக இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 7) தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் வியாசர்பாடியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் மகன் ஆவார்.

வேலூர் சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக நாகேந்திரன் அடைக்கப்பட்டுள்ளார். நிலத் தகராறு ஒன்றில் ஆம்ஸ்ட்ராங்குடன் அஸ்வத்தாமனுக்கு முன்விரோதம் இருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் 'சம்போ' செந்தில் என்ற ரவுடியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்னதாக, 'சம்போ' செந்திலின் கூட்டாளியும் சேலம் சிறைக் கைதியுமான ஈசாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவரிடம் 3 நாள்கள் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 30 நாள்கள் கடந்தும் முடிவே தெரியாத கேள்விகள் -வழக்கு என்ன ஆகும்?
படக்குறிப்பு,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலரும் வழக்கறிஞருமான எஸ்.ரஜினிகாந்த்

200 பேரிடம் விசாரணை

தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 5 பேர் வழக்கறிஞர்கள். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

"இந்த வழக்கில் இன்னமும் விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நபர்கள், கொலைக்காகப் பெரும் தொகையைச் செலவு செய்யக் கூடியவர்கள் கிடையாது. ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல பெரும் தொகை செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலவழித்த நபர் யார் என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம்," என்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலரும் வழக்கறிஞருமான எஸ்.ரஜினிகாந்த்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது, அவர்களிடம் வாக்குமூலம் பெறுவது என இந்த நிமிடம் வரையில் சரியான திசையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது,” என்கிறார்.

ஒன்று சேர்ந்த பகையாளிகள்

மேலும் பேசிய ரஜினிகாந்த், "தனிப்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இதன் பின்னணியில் பலம் வாய்ந்த சக்தி ஒன்று உள்ளது. அந்த நபர் தான், ஆம்ஸ்ட்ராங்குக்கு எதிரான பகையாளிகளை ஒன்றிணைத்துள்ளார்,” என்கிறார்.

"தொடக்கத்தில் இந்தச் சம்பவத்தில், தங்க நகை மோசடியில் சிக்கிய ஆருத்ரா நிறுவனத்தின் பெயர் அடிபட்டது. அந்நிறுவனத்திடம் பேசி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் பணம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்பட்டது. இந்நிறுவனத்தின் பின்னணியில் சில அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அடிபட்டன. இதன் பின்னணியில் கொலை அரங்கேற்றப்பட்டதா என்பதை போலீஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்," என்கிறார்.

"கூலிப்படை கலாசாரத்துக்கு சாதி, மதம், கட்சி ஆகியவை கிடையாது. அவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம். அதற்காக உறவினர்கள், சொந்த சாதி, மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். கைதான தாதாக்களும் ரவுடிகளும் ஓராண்டாக ஆம்ஸ்ட்ராங்கை பின்தொடர்ந்துள்ளனர். வெடிகுண்டுகள் கைமாற்றப்பட்டுள்ளன. அவரின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. இதை உளவுத்துறை கவனிக்கத் தவறியதா என்ற கேள்வியும் எழுகிறது," என்கிறார், ரஜினிகாந்த்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை
படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ்

சிக்கல் மிகுந்த வழக்கு

"ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஏராளமான கைது சம்பவங்கள் நடக்கின்றன. கொலையின் பின்னணியில் இவர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது முக்கியமானது," என்கிறார், மூத்த பத்திரிகையாளர் செல்வராஜ்.

"நேரடி சாட்சியங்கள் இல்லாவிட்டால், அதை ஈடுசெய்வதற்கு கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் தான் வழக்கு நீதிமன்றத்தில் எடுபடும். ஆனால், இந்த வழக்கு சிக்கல் மிகுந்ததாக இருக்கிறது" எனக் குறிப்பிடும் செல்வராஜ், "ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை விசாரித்து தொடக்கத்திலேயே 13 பேரை கைது செய்துவிட்டனர். அதன்பின்னர், அஞ்சலை, மலர்க்கொடி என கைதுப் படலம் விரிவடைந்து, அடுத்தகட்டத்துக்கு வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது,” என்கிறார்.

மேலும், "காவல்நிலையங்களில் எழுதி வாங்கப்படும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் எடுபடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள முடியாது. நீதிமன்றத்துக்கு வலுவான ஆதாரம் தேவைப்படும். அதை நிரூபிக்காதவரை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

"உதாரணமாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்.ஏ.ராஜா என்பவரை கைது செய்தனர். நேரடியாக அவர் யாரையும் வெட்டவில்லை. ஆனால், அவர் கூறித் தான் வெட்டியதாக நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தனர். அதனால் அவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

"கொலையின் பின்னணியை விவரிக்கும் சாட்சியங்கள் சரியாக இல்லாவிட்டால், தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அது ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கும் பொருந்தும்" என்கிறார் செல்வராஜ்.

 

தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதா?

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகள் இன்று புளியந்தோப்பு போலீசார் முன்னிலையில் செயலிழக்க வைக்கப்பட்டதாக, போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், "ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கொலையாளிகளும் பணத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் இயங்கியவர்கள் குறித்தும் சட்ட உதவிகளை செய்தவர்கள் பற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அதுகுறித்த விவரங்கள் வெளிவரும்," என்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.