Jump to content

குறுங்கதை 9 -- லவ் பேர்ட்ஸ்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லவ் பேர்ட்ஸ்

--------------------
'அன்பே வா' படத்தில் எம்ஜிஆர் நடிக்கவே மாட்டார் என்று சொல்லி விட்டாராம். ஒரு அம்மா, தங்கை செண்டிமென்ட், வில்லன்களை புரட்டி எடுத்தல், சில போதனைகள் இல்லாமல் என்னுடைய படம் எப்படி ஓடும் என்று நேரடியாகவே கேட்டார் என்பார்கள். வாத்தியார் நடிகர்களிலே மிகவும் தெளிவானவர். முன்னும் அவர் போல ஒருவர் இருக்கவில்லை, பின்னும் ஒருவரும் வரப் போவதில்லை. 'சரி, உங்களுக்காக நடிக்கிறேன்....... உங்களின் படம் என்றே சொல்லுங்கள்.....' என்று ஏவிஎம்மில் அவர் வைத்திருந்த மதிப்பு காரணமாக நடிக்க ஒத்துக் கொண்டார். படம் பெரிய வெற்றி. வாத்தியாரின் படங்களிலேயே வித்தியாசமான ஒரு படமாக இது என்றும் நிற்கின்றது.
 
சரோஜாதேவி 'லவ் பேர்ட்ஸ்.......லவ் பேர்ட்ஸ்........' என்று ஒரு பாடலுக்கு சுற்றி சுற்றி துள்ளிக் குதித்து ஆடுவார். கண்ணை கடகடவென்று வெட்டுவார். அவர் முகத்தை குளோஸ்அப்பில் காட்டுவார்கள். வெள்ளை பெயிண்ட் அடித்தது போல மேக்அப் அவருக்கு போடப்பட்டிருக்கும். எலுமிச்சை நிற எம்ஜிஆருக்கு சோடியாக கலர்ப் படத்தில் நடிக்க வைக்க இப்படி ஒரு ஒப்பனையை கன்னடத்து பைங்கிளிக்கு செய்தார்கள் போல.
 
படம் பார்த்த பின், எப்படியாவது லவ் பேர்ட்ஸ் வாங்குகின்றோம், வளர்க்கின்றோம் என்று முடிவெடுத்தோம். வீட்டில் அனுமதியும், காசும் கேட்கும் போது இன்னும் மேலதிகமாகவே சொன்னோம் - வாங்குகின்றோம், வளர்க்கின்றோம், பெருக்குகின்றோம், விற்கின்றோம் என்று. வீட்டுப் பொறுப்பாளர்களில் ஒருவர், வழமை போலவே, இதையும் நம்பவில்லை. மற்ற பொறுப்பாளர், அவரும் வழமை போலவே, இதையும் நம்பினார்.
 
முதலில் கூடு செய்தோம். தச்சு வேலை தெரிந்தவர் ஒருவர் வந்தார். நாங்கள் இருவர் அவருக்கு உதவியாளர்கள். அப்பொழுது கூட்டுக் கோழி வளர்ப்பது சரியான பிரபலம். கோழிக் கூடு செய்தது போக மிகுதியாக 'கோழி வலைகள்' சில தெரிந்தவர்களிடம் இருந்தது. இலவசமாகவே கொடுத்தார்கள்.
 
யாழ் கொட்டடியில் இருக்கும் ஒருவர் தான் மிகப் பிரபலமான லவ் பேர்ட்ஸ் விற்பனையாளர் என்று அறிந்து அங்கு போனோம். அவர் வீட்டில் இரண்டு கூடுகள். இரண்டும் பெரியவை. ஒன்றுக்குள் விற்பதற்கென்றே நூற்றுக் கணக்கில் வைத்திருந்தார். இன்னொன்றில் அவரின் ஆசைக் கிளிகள். அவை விற்பனைக்கு இல்லை என்றார். மொத்தமாகவே இரண்டு தான் வாங்கப் போயிருந்தோம்.
 
எப்படி ஆண், பெண் பார்ப்பது என்று தெரியவில்லை. கோழி, சேவல் போல தெளிவாக வித்தியாசங்கள் எதுவும் தெரியவில்லை. அவரே சொல்லித் தந்தார். மூக்கின் நிறம் தான் அந்தச் சூத்திரம். நீல மூக்கு ஆண், வெள்ளை மூக்கு பெண். ரோஸ் கலர் மூக்கும் வரும், அதுவும் பெண் தான். ஒரு நீல மூக்கும், ஒரு வெள்ளை மூக்கும் சிமெந்துப் பைக்குள் போட்டுக் கொடுத்தார். இரண்டிலிருந்து நாலாகி, நாலிலிருந்து பதினாறு ஆகி என்று பவளக்கொடி போலவே சிந்தனை ஓடியது.
 
பலர் வந்து பார்த்து போனார்கள். ஊரில் எவரிடமும் லவ் பேர்ட்ஸ் இருக்கவில்லை. கொட்டடியில் ஒரு குவியலாக இவை இருக்கின்றன என்ற விபரமும் ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. திணை மட்டும் தான் சாப்பிடும், சாமை சாப்பிடாது என்று நாங்கள் கொடுத்த விளக்கம் கேட்டு அவர்கள் மூக்கில் விரலை வைக்காத குறை. எது திணை, எது சாமை என்று கண்டு பிடிப்பதே ஒரு பெரிய இயற்கை அறிவாகிக் கொண்டிருந்தது. லவ் பேர்ட்ஸ் சோடி மாறாது, அவை ஒன்று போனால் மற்றதும் போய் விடும் என்ற விளக்கமும் நன்றாகவே விலை போனது.
 
ஒரு நாள் கூடு வெறுமாகக் கிடந்தது. குருவி இரண்டும் கோழி வலையின் கண்களுக்குள்ளால் வெளியில் வந்து பறந்து போய்விட்டது. 
 
கோழி வளர்த்திருந்தாலும் வீட்டிற்கு ஏதாவது பிரயோசனமாக இருந்திருக்கும் என்று ஒரு பொறுப்பாளர் அடிக்க வந்தார். 'பிள்ளைகள் ஆசைப்பட்டுதுகள்.......' என்று மற்ற பொறுப்பாளர் அன்றும் காப்பாற்றிவிட்டார்.
 
அந்தக் குருவிகள் லவ் பேர்ட்ஸ் இல்லை என்று வளர்ந்த பின்னர் தெரிய வந்தது. 'அன்பே வா' படத்தில் அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். அந்தக் குருவிகள் பரகீட். லவ் பேர்ட்ஸ் என்பவை வேறு. ஆனாலும் எங்கள் வீட்டில் எப்போதும் லவ் பேர்ட்ஸ் இருந்தது இப்போது தெரிகின்றது.
Edited by ரசோதரன்
  • Like 5
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஒரு நாள் கூடு வெறுமாகக் கிடந்தது. குருவி இரண்டும் கோழி வலையின் கண்களுக்குள்ளால் வெளியில் வந்து பறந்து போய்விட்டது. 

அதுசரி பார்க்க வந்த ஊர்மக்களை எந்தப் பொறுப்பாளர் சமாளித்தார்.

2 hours ago, ரசோதரன் said:

வெள்ளை பெயிண்ட் அடித்தது போல மேக்அப் அவருக்கு போடப்பட்டிருக்கும்.

அப்ப அது பொய்யா கோப்பாலு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

எங்கள் வீட்டில் எப்போதும் லவ் பேர்ட்ஸ் இருந்தது இப்போது தெரிகின்றது.

அது அடிக்க வந்த பொறுப்பாளர், காப்பாற்றி விடும் பொறுப்பாளர் ஜோடிதானே?

1966இல் வந்த படம்.  வீட்டில் அப்பா எதிர்த்தாலும் அம்மா அனுமதி தருகின்ற வயது.  ஓரளவு உங்களது வயதை கணிக்க இந்தப் படம்  உதவுகிறது.(திரும்ப திரையிட்ட போது பார்த்த படம் என்று சொல்லாமல் இருக்கும் மட்டும்)

படத்தைப் பார்த்து லவ் பேர்ட்ஸ் என்று வாங்கினீர்கள். உங்களுக்கு வித்தவனுக்கே அது தெரிந்திருந்திருக்குமா? அல்லது ஆளைப் பார்த்து வித்தனா? யாரறிவர்?

நல்ல நேரம், ஆட்டுக்கார அலமேலு, கோமாதா குலமாதா எல்லாம் பின்னாளில் வந்த திரைப்படங்கள் என்பதால் உங்கள் வீடும் தப்பியது, வீட்டில் இன்னொருவருக்கும் பிரச்சினை இல்லாமல் போயிற்று.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி பார்க்க வந்த ஊர்மக்களை எந்தப் பொறுப்பாளர் சமாளித்தார்.

அப்ப அது பொய்யா கோப்பாலு.

🤣.....

பொய் என்று சொன்னால் பிரச்சனை வந்தாலும் வரும் போல.... பல ரசிகர்கள் இங்கே இருப்பார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kavi arunasalam said:

அது அடிக்க வந்த பொறுப்பாளர், காப்பாற்றி விடும் பொறுப்பாளர் ஜோடிதானே?

1966இல் வந்த படம்.  வீட்டில் அப்பா எதிர்த்தாலும் அம்மா அனுமதி தருகின்ற வயது.  ஓரளவு உங்களது வயதை கணிக்க இந்தப் படம்  உதவுகிறது.(திரும்ப திரையிட்ட போது பார்த்த படம் என்று சொல்லாமல் இருக்கும் மட்டும்)

படத்தைப் பார்த்து லவ் பேர்ட்ஸ் என்று வாங்கினீர்கள். உங்களுக்கு வித்தவனுக்கே அது தெரிந்திருந்திருக்குமா? அல்லது ஆளைப் பார்த்து வித்தனா? யாரறிவர்?

நல்ல நேரம், ஆட்டுக்கார அலமேலு, கோமாதா குலமாதா எல்லாம் பின்னாளில் வந்த திரைப்படங்கள் என்பதால் உங்கள் வீடும் தப்பியது, வீட்டில் இன்னொருவருக்கும் பிரச்சினை இல்லாமல் போயிற்று.

🤣....

அவர்கள் இரண்டு பேரும் தான் அந்த ஜோடி....👍

இந்த படம் முதலில் வந்த போது நான் பிறக்கவேயில்லை.....😀.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kavi arunasalam said:

நல்ல நேரம், ஆட்டுக்கார அலமேலு, கோமாதா குலமாதா எல்லாம் பின்னாளில் வந்த திரைப்படங்கள் என்பதால் உங்கள் வீடும் தப்பியது, வீட்டில் இன்னொருவருக்கும் பிரச்சினை இல்லாமல் போயிற்று.

🤣...........

ஒரு 'ஆடு ஜீவிதம்' கூட எழுதலாம்.......... பள்ளிக்கூடம் விட்டு வரும் போது பருத்தித்துறைச் சந்தையிலிருந்து ஆட்டுக்கு குழை வாங்கி வரவேண்டும். அதில் இரண்டு சிக்கல்கள்: முதலாவது, அந்தக் கூட்டத்தில் குழையையும் காவிக் கொண்டு பஸ்ஸில் ஏறுவது. இரண்டாவது, 'என்னடா, உங்கள் ஊரில் குழையும் கிடையாதோ........' என்ற வேறு ஊர் நண்பர்களின் கேலி...........🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

ஆட்டுக்கு குழை சந்தையில் வாங்கும் நிலை யாழ்ப்பாணத்தில் இருந்ததை இன்று தான் அறிகிறேன். 

 லவ் பேர்ட், பரகீற் (அமெரிக்காவில் budgie என்பார்கள்), பச்சைக் கிளி (parrot) எல்லாம் Psittacine எனப்படும் பறவைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். இந்தப் பெரிய Psittacine குடும்பத்தின் உப பிரிவாக "சின்னக் கிளிகள்" குடும்பம் இருக்கிறது. சின்னக் கிளிகளில் முக்கியமானவை லவ் பேர்ட்டும், பரகீற்றும். 

வீட்டுப் பிராணியாக வளர்க்க உகந்தவையாக Psittacine பறவைகள் இருந்தாலும், சுகாதாரமான இடத்தில் இருந்து இவற்றை வாங்கா விட்டால் ஆபத்தான நோயான Psittacosis இனை மனிதர்களுக்குப் பரப்பக் கூடிய ஆபத்து இருக்கிறது. அண்மையில், இலங்கையில் ஒரு பெண்  வளர்ப்புக் கிளியில் இருந்து தொற்றிய Psittacosis நோயால் இறந்ததாக ஒரு செய்தி பார்த்தேன். 
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அண்மையில், இலங்கையில் ஒரு பெண்  வளர்ப்புக் கிளியில் இருந்து தொற்றிய Psittacosis நோயால் இறந்ததாக ஒரு செய்தி பார்த்தேன். 

அண்ணை நடிகை மீனாவின் கணவரும் புறா எச்சத்தால் வரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ஆட்டுக்கு குழை சந்தையில் வாங்கும் நிலை யாழ்ப்பாணத்தில் இருந்ததை இன்று தான் அறிகிறேன். 

 லவ் பேர்ட், பரகீற் (அமெரிக்காவில் budgie என்பார்கள்), பச்சைக் கிளி (parrot) எல்லாம் Psittacine எனப்படும் பறவைக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தான். இந்தப் பெரிய Psittacine குடும்பத்தின் உப பிரிவாக "சின்னக் கிளிகள்" குடும்பம் இருக்கிறது. சின்னக் கிளிகளில் முக்கியமானவை லவ் பேர்ட்டும், பரகீற்றும். 

வீட்டுப் பிராணியாக வளர்க்க உகந்தவையாக Psittacine பறவைகள் இருந்தாலும், சுகாதாரமான இடத்தில் இருந்து இவற்றை வாங்கா விட்டால் ஆபத்தான நோயான Psittacosis இனை மனிதர்களுக்குப் பரப்பக் கூடிய ஆபத்து இருக்கிறது. அண்மையில், இலங்கையில் ஒரு பெண்  வளர்ப்புக் கிளியில் இருந்து தொற்றிய Psittacosis நோயால் இறந்ததாக ஒரு செய்தி பார்த்தேன். 
 
ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள்.

பனம் ஓலைகளை, இவை மாடுகளிற்கு, ஒரு வண்டிலில் பின்னேரங்களில் பொலிகண்டிப் பக்கம் இருந்து கொண்டு வந்து விற்பார்கள். அதையும் ஊரவர்கள் வாங்குவார்கள்.

நீங்கள் சொல்லும் இந்தச் சின்னக் கிளிகள் பலவற்றை இங்கு கடைகளில், சந்தைகளில் பார்த்திருக்கின்றேன்.

ஆஸ்திரேலியாவில் இவைகளில் சில வகை சுதந்திரமாக பறந்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கு ஒரு பறவைகள் பூங்காவில் எத்தனையோ வகையான இந்தச் சின்னக் கிளிகள் இருக்கின்றன. கை பெருவிரல் அளவில் கூட அங்கு பச்சைக் கிளிகள் இருக்கின்றன. பல தனி வெள்ளை மயில்களும் அங்கு நின்றன. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அண்ணை நடிகை மீனாவின் கணவரும் புறா எச்சத்தால் வரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக நினைவு.

அவருக்கு சுவாசம் சம்பந்தமான ஒரு நோய் ஏற்கனவே இருந்தது என்றும், கோவிட் தொற்றால் வந்த பாதிப்பில் இருந்து பல காலம் மீள முடியாமல் அவதிப்பட்டார் என்றும் இருந்தது. பின்னர் நீங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கக்கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள்.

பனம் ஓலைகளை, இவை மாடுகளிற்கு, ஒரு வண்டிலில் பின்னேரங்களில் பொலிகண்டிப் பக்கம் இருந்து கொண்டு வந்து விற்பார்கள். அதையும் ஊரவர்கள் வாங்குவார்கள்.

நீங்கள் சொல்லும் இந்தச் சின்னக் கிளிகள் பலவற்றை இங்கு கடைகளில், சந்தைகளில் பார்த்திருக்கின்றேன்.

ஆஸ்திரேலியாவில் இவைகளில் சில வகை சுதந்திரமாக பறந்து திரிவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கு ஒரு பறவைகள் பூங்காவில் எத்தனையோ வகையான இந்தச் சின்னக் கிளிகள் இருக்கின்றன. கை பெருவிரல் அளவில் கூட அங்கு பச்சைக் கிளிகள் இருக்கின்றன. பல தனி வெள்ளை மயில்களும் அங்கு நின்றன. 

Budgericar என்று இவற்றை அழைப்பார்கள். இது நல்ல உணவு எனும் புச்செரிகா எனும் அபொரிஜின மொழியின் ஆங்கில வடிவம் ஆகும். இவை அவுஸ்திரேலிய பறவைகள். குளன், ஏரி போன்றவற்றின் கரைகளில், மரப்பொந்துகளின் வாழ்பவை. இவற்றின் குஞ்சுகள் அபோரிஜின் மக்களின் உணவாக ஒரு காலத்தில் இருந்தன. நான் இவற்றில் ஒன்றுக்குத் தமிழில் வணக்கம் சொல்லவும் பழக்கியிருந்தேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

❤️.....

இவைகளும் கதைக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.... அவைகளின் சைஸிற்கு ஒரு கதை வேற....🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலங்குழையை கட்டாக பருத்தித்துறை சந்தையில் விற்பார்கள். பள்ளிக்கூடம் முடிந்த பின் ஓடிப் போய் அதில் ஒரு கட்டை வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறவேண்டும். இன்னும் வேறு சிலரும் ஆலங்குழை வாங்குவார்கள்.

காட்லி மாணவந்தானே...எப்படியும் மெதடிஸ்ட் பெண்களுக்கு நூல் வீட்டிருப்பியள்...இதுக்கு இந்த ஆலங்குழைக்கட்டு...இடைஞ்சலா இருந்திருக்குமே...லவ் பேட்ட்ஸ் ..  வயது இதைப்பற்றியும் இரண்டு வசனம் சேர்த்திருக்கலாம்..

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

காட்லி மாணவந்தானே...எப்படியும் மெதடிஸ்ட் பெண்களுக்கு நூல் வீட்டிருப்பியள்...இதுக்கு இந்த ஆலங்குழைக்கட்டு...இடைஞ்சலா இருந்திருக்குமே...

நூல் என்ன? ஆசாமி கயிறு விட்டு கடலை போடக்க கூடிய ஆளெண்டு இன்னுமா தெரியேலை.

“மச்சான் இதை ஒருக்கால் பிடிடா”  எண்டு ஆலங்குழைக்கட்டை பக்கத்திலை இருக்கிறவனிற்றை நைஸா குடுத்திட்டு அண்ணாச்சி சுழட்ட ஆரம்பிச்சிருப்பார். சரோஜாதேவி எப்பிடி ‘மேக்கப்’ போடுறா எண்டு உன்னிப்பா கவனிக்கிற ஆள், லேசுப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

காட்லி மாணவந்தானே...எப்படியும் மெதடிஸ்ட் பெண்களுக்கு நூல் வீட்டிருப்பியள்...இதுக்கு இந்த ஆலங்குழைக்கட்டு...இடைஞ்சலா இருந்திருக்குமே...லவ் பேட்ட்ஸ் ..  வயது இதைப்பற்றியும் இரண்டு வசனம் சேர்த்திருக்கலாம்..

🤣...........

'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜.

ஊரில் எத்தனையோ பேர்கள் நூல்கள் விட்டார்கள் தான். நமக்கு துணிவும் இருக்கவில்லை, சோலியும் கூட... இப்ப சுற்றும் முற்றும் பார்த்தால், நூல் விடப்பட்ட பலர் நூலே விடாதவர்களை கட்டியும், நூல் விட்டவர்கள் வீட்டில் சொன்னவர்களைக் கட்டியும் என்று எல்லோரின் கதையும் முடிந்து விட்டது..........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

நூல் என்ன? ஆசாமி கயிறு விட்டு கடலை போடக்க கூடிய ஆளெண்டு இன்னுமா தெரியேலை.

“மச்சான் இதை ஒருக்கால் பிடிடா”  எண்டு ஆலங்குழைக்கட்டை பக்கத்திலை இருக்கிறவனிற்றை நைஸா குடுத்திட்டு அண்ணாச்சி சுழட்ட ஆரம்பிச்சிருப்பார். சரோஜாதேவி எப்பிடி ‘மேக்கப்’ போடுறா எண்டு உன்னிப்பா கவனிக்கிற ஆள், லேசுப்பட்டவராக இருக்க வாய்ப்பில்லை

🤣........

வெறும் அப்சவேர்ஷன் தானுங்க.......... மற்றபடி இந்த ஏரியாவிற்கு சுத்தமாக லாயக்கில்லாத ஆளுங்க.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

❤️.....

இவைகளும் கதைக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.... அவைகளின் சைஸிற்கு ஒரு கதை வேற....🤣

கூர்ப்பியலில் இருக்கும், மெல்ல அவிழ ஆரம்பித்திருக்கும் பல புதிர்களில் பறவைகளின் பேச்சுக் கற்கும் திறனும் (vocal learning) ஒன்று. பேச்சைக் கற்றுக் கொள்ளும் இன்னொரு குடும்பமான மனிதக் குடும்பத்திற்கும், பறவைக் குடும்பத்திற்கும் 150 மில்லியன் ஆண்டுகள் வித்தியாசம் இருந்தாலும், பல பறவையினங்களில் பேச்சுக்குக் காரணமான ஜீன்கள் மனிதக் குடும்பத்திலும் இருக்கின்றன. பேசக் கற்றுக் கொள்ளாத நாய், பூனை போன்றவற்றில் இந்த ஜீன்கள் இருந்தாலும் வேலை செய்யாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. இதனால், கிளி மட்டுமல்லாமல், பாடும் இயலுமை உடைய பல பறவை இனங்களிலும், மைனா (Starlings), கிளிக் குடும்பங்களிலும் பேச்சு அந்த மாதிரி வரும். கிளிகளின் புத்திக் கூர்மையும் சேர்ந்து கொண்டால், அவையிட பேச்சு அந்த மாதிரி இருக்கும்😂!

இதைப் பற்றிய மூலக்கூற்று உயிரியல் ஆய்வுகளை செய்த எரிக் ஜார்விசின் ஒரு ஆய்வுக் கட்டுரை இணைப்பு: https://www.jneurosci.org/content/24/13/3164.long

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Justin said:

பேசக் கற்றுக் கொள்ளாத நாய், பூனை போன்றவற்றில் இந்த ஜீன்கள் இருந்தாலும் வேலை செய்யாமல் அடக்கி வைக்கப் பட்டிருக்கின்றன.

நன்றிகள் ஜஸ்டின்.

நல்ல காலம், நாய் பூனைகளில் இந்த ஜீன்கள் அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

மரத்திற்கு மேலே இருந்து ஒன்று சவால் விட, மரத்திற்கு கீழே இருந்து இன்னொன்று பதில் சவால் விட.......... எப்படி இருக்கும் இவை எல்லாம் பேச ஆரம்பித்தால்.......😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'மகளிர் மட்டும்' என்று சில பேரூந்துகள் அப்பொழுது ஓடிக் கொண்டிருந்தது. நூல் விடு, நூல் விடு என்றால் இதில எங்க நூலை விடுகிறது, அந்த பேரூந்திற்கு கிட்டவே எங்களை விடமாட்டார்களே .............😜.

அப்படி எப்படி சொல்லுவீங்க...வேணுமென்றே ஸ்கூல் ,மகளிர் பஸ்சை விட்டடுட்டு..காங்கேசந்துறை ,யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறி இந்த வி.வி டி பொடியால் சேய்யிற ஆட்டகாசம் கொஞ்ச நஞ்சமே....இதுக்கு நேரடிச்சாட்சியம் ...நம்ம  ஆளுங்கோ...சொல்லவோ..?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

அப்படி எப்படி சொல்லுவீங்க...வேணுமென்றே ஸ்கூல் ,மகளிர் பஸ்சை விட்டடுட்டு..காங்கேசந்துறை ,யாழ்ப்பாண பஸ்ஸில் ஏறி இந்த வி.வி டி பொடியால் சேய்யிற ஆட்டகாசம் கொஞ்ச நஞ்சமே....இதுக்கு நேரடிச்சாட்சியம் ...நம்ம  ஆளுங்கோ...சொல்லவோ..?

🤣......

அப்ப பஸ்ஸூக்குள்ள இருந்த சிலர் பின்னர் ஒரு நாளில் இப்படி எதிர்க்கட்சி சாட்சிகளாக மாறுவார்கள் என்ற அறிவு அப்ப இருக்கவில்லை.........

ஒருவருக்கு பெண் நிச்சயமானது. என் நண்பன் ஒருவனுக்கு அந்தப் பெண் உறவினர். பெண் வீட்டார் பேசிய மாப்பிள்ளை எப்படி என்று நண்பனை விசாரித்தனர். 'அந்த ஆளுக்கு அக்காவை கட்டிக் கொடுப்பதை விட நீங்களே அக்காவை கிணத்துக்குள்ளே தள்ளி விடலாம்..........' என்ற மாதிரி நண்பன் நன்னடத்தை சான்றிதழ் ஒன்று கொடுத்தான். கல்யாணம் நின்று போனது........ அந்த மாப்பிள்ளையாகி இருக்க வேண்டியவர் 'எவண்டா, அவன்..........' என்று கொலைவெறியுடன் என் நண்பனைத் தேடிக் கொண்டிருந்தார்..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரசோதரன் said:

ஆமா..ஆமா..கட்சிமாறுவது..நம்மளுக்கு சகஜம்தானே...கோச்சுக்காதேங்கோ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.