Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !"  
 
"மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே
மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் ?
மனதை பறிக்குதே காதல் கொட்டுதே
மந்திர சத்தியோ காந்தமோ உன்பார்வை ?"
 
"மகரிகை தொங்கும் வீட்டு முன்றலில்
மகத்துவம் பொருந்திய அழகு உடல்
மகிழ்ச்சி பொங்கி துள்ளி குதிக்குதே
மலர் விழியால் ஜாடை காட்டுதே !"
 
"மறைப்பு கொடுத்த தாவணி விலக
மகிழ்வு தரும் வனப்பு மயக்க
மவுனமாய் திகைத்து நானும் நிற்க
மங்கையும் நோக்கினாள் கண்களும் பேசின !"
 
"மருண்டு விழித்து நாணி குனிய
மஞ்சள் பொட்டும் வெள்ளி சலங்கையும்
மஞ்சர மாலையும் ஒல்லி இடையும்
மஞ்சுளம் காட்டி காதல் வீசின !"
 
"மது உண்ட வண்டாக நானும்
மனம் கொண்டு மையல் கொண்டு
மன்மதன் போல் ஆசை கொண்டு
மன்றாடி அவள் தோளில் சாய்ந்தேன் !"
 
"மங்கல வாழ்வும் மங்காத உறவும்
மனங்கள் ஒன்றி மலர வேண்டுமென
மனமார வாழ்த்தி தன்னையே தந்து
மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள் !"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
109682544_10217344415025139_1737405642468292385_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=ACBMioE0GoQQ7kNvgET8ifu&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYASb6bOJeQF6h57tpOXz5N79QYDw4TTXIF22up-orhZIg&oe=66B9C2BA 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

அத்தியடி

என்ன இது கொஞ்சம் செக்ஸியாய் இருக்குது.  😂

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கலக்குது.........ம்..........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

என்ன இது கொஞ்சம் செக்ஸியாய் இருக்குது.  😂

கம்பராமாயணத்திலும் கந்தபுராணத்திலும் இல்லாததா இங்கு இருக்குது ? 

நன்றிகள் குமாரசாமி 

Edited by kandiah Thillaivinayagalingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, kandiah Thillaivinayagalingam said:

மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்

முரட்டு ஆண்மையைத்தான் பெண்மை விரும்பும் என்று உடற்கூற்று நிபுனர்கள் வெளியிட்ட செய்தியைப் படித்துள்ளேன். இங்கு ஆண்மை மலராகி பெண்மையை சாய்க்கிறது. டைவேசில்தான் முடியுமோ…..😳😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

முரட்டு ஆண்மையைத்தான் பெண்மை விரும்பும் என்று உடற்கூற்று நிபுனர்கள் வெளியிட்ட செய்தியைப் படித்துள்ளேன். .😳😩

இது தமிழ் சினிமாவில் வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் காட்சிகள் 

ஆனால் உண்மையில் , 

ஆண்மை என்றால் என்ன ?

ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.

Masculinity (also called manhood or manliness) is a set of attributes, behaviors, and roles associated with men and boys. Masculinity can be theoretically understood as socially constructed, and there is also evidence that some behaviors considered masculine are influenced by both cultural factors and biological factors.

அதாவது, ஆண்மை என்பது ஆண் தன்மை, வலிமை மற்றும் வீரத்தை குறிக்கும். இது பொதுவாக ஆண்களின் உடல் மற்றும் மன வலிமையை குறிக்கின்றது என்றும் குறிக்கலாம்.  பெண்கள் [மனைவி, காதலி என்ற பெண்கள்] விரும்புவது உண்மையான நேர்மையான ஒழுக்கமான ஆண்மையை, முரட்டு ஆண்மையை அல்ல?? 

நன்றி  

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

இது தமிழ் சினிமாவில் வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் காட்சிகள் 

ஆனால் உண்மையில் , 

ஆண்மை என்றால் என்ன ?

ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.

Masculinity (also called manhood or manliness) is a set of attributes, behaviors, and roles associated with men and boys. Masculinity can be theoretically understood as socially constructed, and there is also evidence that some behaviors considered masculine are influenced by both cultural factors and biological factors.

அதாவது, ஆண்மை என்பது ஆண் தன்மை, வலிமை மற்றும் வீரத்தை குறிக்கும். இது பொதுவாக ஆண்களின் உடல் மற்றும் மன வலிமையை குறிக்கின்றது என்றும் குறிக்கலாம்.  பெண்கள் [மனைவி, காதலி என்ற பெண்கள்] விரும்புவது உண்மையான நேர்மையான ஒழுக்கமான ஆண்மையை, முரட்டு ஆண்மையை அல்ல?? 

நன்றி  

விளக்கம் அருமை. 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

விளக்கம் அருமை. 🙏

நன்றிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

விளக்கம் அருமை. 🙏

2 hours ago, kandiah Thillaivinayagalingam said:

நன்றிகள் 

எனது தவறான புரிதலைச் செம்மைப் படுத்திய இருவருக்கும் நன்றிகள்.🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

?.

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Paanch said:

என் தவறான புரிதலைச் செம்மைப்படுத்த உதவிய ராசவன்னியன் அவர்களுக்கும், கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அவர்களுக்கும் இதயம்நிறைந்த நன்றிகள்!!🙏🙏

எல்லோருக்கும் நன்றிகள் 

5 hours ago, kandiah Thillaivinayagalingam said:

இது தமிழ் சினிமாவில் வரும் விசிலடிச்சான் குஞ்சுகளின் காட்சிகள் 

ஆனால் உண்மையில் , 

ஆண்மை என்றால் என்ன ?

ஆண்மை (Masculinity) (ஆணியல்பு அல்லது ஆண் தன்மை) என்பது சிறுவர், ஆடவர் தொடர்பான இயற்பண்புகள், நடத்தைகள், பாத்திரங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகும்.

Masculinity (also called manhood or manliness) is a set of attributes, behaviors, and roles associated with men and boys. Masculinity can be theoretically understood as socially constructed, and there is also evidence that some behaviors considered masculine are influenced by both cultural factors and biological factors.

அதாவது, ஆண்மை என்பது ஆண் தன்மை, வலிமை மற்றும் வீரத்தை குறிக்கும். இது பொதுவாக ஆண்களின் உடல் மற்றும் மன வலிமையை குறிக்கின்றது என்றும் குறிக்கலாம்.  பெண்கள் [மனைவி, காதலி என்ற பெண்கள்] விரும்புவது உண்மையான நேர்மையான ஒழுக்கமான ஆண்மையை, முரட்டு ஆண்மையை அல்ல?? 

நன்றி  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, kandiah Thillaivinayagalingam said:

கம்பராமாயணத்திலும் கந்தபுராணத்திலும் இல்லாததா இங்கு இருக்குது ? 

நன்றிகள் குமாரசாமி 

அதெண்டால் உண்மைதான் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.