Jump to content

'கறுப்பு ஜூலையில்' ஒரு பத்திரிகையாளர் குடும்பத்தின் அனுபவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 JUL, 2024 | 02:09 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான வன்முறை சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு அத்தியாயம். அந்த இருண்ட மாதத்தின் பெருங்கேடான நிகழ்வுகள் இலங்கையில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்களின் வாழ்வை கடுமையாகப் பாதித்தன.

இலங்கையின் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளன்  என்ற வகையில், கறுப்பு ஜூலை என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில்சார் அடிப்படையிலும் பாதித்தது. மேலும், ஆயிரக்கணக்கான ஏனைய தமிழ்க் குடும்பங்களைப் போன்று எனது குடும்பமும் கொந்தளிப்பான அந்த நாட்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தது.

அப்போது நான் வடக்கில் மன்னார் சென்றிருந்ததால் அந்த வன்முறையின் முழுத் தாக்கத்தையும் நான் அனுபவிக்கவில்லை. மனானாரில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டு செய்திகளை சேகரிக்கும் பணிக்காக நான் மன்னாருக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். எனது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வேறு சில தமிழ்க் குடும்பங்கள் அனுபவித்ததைப் போன்ற கொடூரங்களையும் அவலங்களையும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக அனுபவிக்கவில்லை. எமது குடும்பத்தில் எவரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை. அந்த வகையில் ஏதோ ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தோம்.

c0c7abb0-fbbb-430c-9f5c-8c7db2b018c4.jpg

சுமார் நான்கு தசாப்தங்களாக கறுப்பு ஜூலை குறித்து தனிப்பட்ட நோக்கில் நான் ஒருபோதும் எழுதவில்லை. வேதனையான நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க நான் விரும்பவில்லை.ஆனால் கறுப்பு ஜூலையின் 40 வது வருடாந்த நினைவாக  கடந்த வருடம் எழுதியிருந்தேன். தங்களுக்கு நேர்ந்த சோதனைகள் பற்றி எனது குடும்பத்தவர்கள் கூறியவற்றின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.

1983ஆம் ஆண்டில் எனது குடும்பம் ஆறு பேரைக்( எனது பெற்றோர், இரு சகோதரிகள், சகோதரன், நான்)  கொண்டதாக இருந்தது. அப்போது பிள்ளைகளில் எவரும் திருமணம் செய்திருக்கவும் இல்லை. எனது தந்தையார் குருநாகலையில் இருந்து செயற்பட்ட ஒரு சட்டத்தரணி.எனது தாயார் ஒரு ஆசிரியை. எனது இரு சகோதரிகளில் முத்தவரும் ஒரு ஆசிரியையே. எனது சகோதரனும் நானும் கொழும்பில் வேலை செய்துகொண்டு தனித்தனியாக தங்கியிருந்தோம். எனது இளைய சகோதரி கல்வி பொதுத்தராதர பரீட்சைக்காக படித்துக்கொண்டிருந்தார்.

எனது தாயார்  1982  ஆம் ஆண்டில் குருநாகலையில் ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்கு பிறகு தனது பிற்ளைகளுடன் அவர் கொழும்புக்கு குடிபெயர விரும்பினார். முன்னதாக கொழும்பில் பதினேழு வருடங்கள் படிப்பித்ததால் அதை அவர் எப்போதும் சொந்த ஊர் போன்று உணர்ந்தார். அதனால் இரத்மலானையில் கசீயா அவனியூவில் உள்ள ஒரு வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்தோம்.தாயாரும் சகோதரனும் இளைய சகோதரியும் அங்கு வசித்தனர். 

bee646b0-9ae1-4422-bbf0-26d65fd9f6b2.jpg

குருநாகலையில் தொடர்ந்தும் தங்கியிருந்த தந்தையாரும் மற்றைய சகோதரியும் வார இறுதிகளில் கொழும்புக்கு வந்துபோவார்கள். ' த ஐலண்ட் ' பத்திரிகையில் நான் இரவு கடமைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் கொட்டாஞ்சேனையில் உள்ள அறையிலேயே தங்கியிருந்தேன். இரத்மலானைக்கும் கொட்டாஞ்சேனைக்கும் இடையே நான்  155 ஆம் இலக்க பஸ்ஸில் சென்றுவருவேன்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மகாநாட்டுக்காக 1983 ஜூலை  22 வெள்ளிக்கிழமை காலை நான் மன்னாருக்கு புறப்பட்டுச் சென்றேன். தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் வெடித்த வார இறுதியில் நான் மன்னாரில் இருந்தேன். குருநாகலை தமிழ்ப்பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருந்த எனது சகோதரி குருநாகலைக்கு திரும்புவதற்காக ஜூலை 25 காலை புறக்கோட்டையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டார். செவ்வாய்க்கிழமை குருநாகலைக்கு திரும்பும் எண்ணத்தில் தந்தையார் கொழும்பிலேயே இருந்தார்.

இரத்மலானை 

இரத்மலானையில் எமது வீட்டு உரிமையாளரான சிங்களவர் அருகாக ஒரு்பகுதியில் வசித்துவந்தார். பொரளையிலும் திம்பிறிகஸ்யாயவிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக கேள்விப்பட்டதாக அவர் எமது குடும்பத்தவர்களிடம் கூறினார்.  குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தால் வீட்டின் பின்முறமாக பற்றைகள் நிறைந்த சதுப்புநிலப் பகுதியில் மறைந்திருக்குமாறு அவர் எமது குடும்பத்தவர்களுக்கு ஆலோசனை கூறினார். யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தினால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட செய்தியை காலையில் பத்திரிகைகள் பிரசுரித்திருந்தன. அதே தினம் அந்த செய்தி தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அறிவிக்கப்பட்டது. வன்முறை தீவிரமடைந்து பரவியது.

குண்டர்கள் இரத்மலானையிலும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள். காசீயா அவெனியூவில் குண்டர்களுக்கு தலைமைதாங்கி வந்தவர் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன். எனது பெற்றோரும் சகோதரனும் சகோதரியும் சதுப்புநிலப் பகுதிக்கு சென்று பற்றைகளுக்குள் மறைந்திருந்தனர். அங்கு கபறக்கொய்யாவும் பாம்புகளும் ஊர்ந்துகொண்டு திரிந்தன. எனது தந்தையாரும் சகோதரரும் பெரிய சமையலறைக் கத்தியையும் மண்கிண்டியையும் ஆயுதமாக எடுத்துக் கொண்டனர். தாயார் சில வாரங்களுக்கு முன்னர் சிறிய விபத்தொன்றில் சிக்கியதால் பற்றைக்குள்  பதுங்கியிருப்பதற்கு பெரிதும் கஷ்டப்பட்டார்.

குண்டர்களின் தலைவர்கள் எமது வீட்டு உரிமையாளரிடம் வந்து எமது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களின் விபரங்கள் அவர்களிடம் இருந்தன. தனது வீட்டு வாடகைக் குடியிருப்பாளர்கள் குழப்பங்கள் பறாறி கேள்விப்பட்டதும் காலையிலேயே அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாக உரிமையாளர் குண்டர்களிடம் கூறினார். எமது வீட்டு வாயிலுக்கு சென்ற குண்டர்கள் கதவை உடைக்க முயற்சித்தனர். தீவைக்கும் ஒரு முயற்சியாக தரைவிரிப்புக்கு பெற்றோலை ஊற்றினர். அதை உரிமையாளர் ஆட்சேபித்தபோது எமது தளபாடங்களை எரிக்கப்போவதாக குண்டர்கள் கூறினார்கள்.  அவையெல்லாம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு சொந்தமானவை அல்ல தன்னுடையவை என்று அவர் கூறவே எமது குடும்பம் திரும்பிவந்தால் தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று அவரை எச்சரித்துவிட்டு குண்டர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இரவானதும் எனது குடும்பம் சதுப்பு நிலப்பகுதியில் இருந்து வெளியே வந்து பின்பக்கத்தால் வீட்டுக்குள் நுழைந்தனர். மின்விளக்கு எதையும் போடாமல் இரவு முழுவதும் அவர்கள் அங்கே இருந்தனர். ஜூலை 26  செவ்வாய்கிழமை விடிந்ததும் எல்லாமே அமைதியாக இருப்பதைப் போன்று தோன்றியது. தனது வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்று உரிமையாளர் விரும்பினார். எனது பெற்றோரும் சகோதரங்களும் பாதுகாப்பு தேடி கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு நடந்து சென்றனர். அது அதிகாலை வேளை.  வழியில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. பல தமிழ்க் குடும்பங்கள் பொலிஸ் நிலையத்தில் இருந்தன. 

சிறிது நேரம் கழித்து பொலிசார் எனது குடும்பம் உட்பட சகல குடும்பங்களையும் இரத்மலானை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமுக்கு கூட்டிச் சென்றனர். எதிர்பார்க்கப்பட்தைப் போன்றே ஆட்கள் நிரம்பிவழிந்த விமான  நிலைய முகாமில் நிலைமை படுமோசமானதாக இருந்தது. போதிய இடவசதியின்மை,  மலசலகூட வசதிகள் போன்ற சுகாதார வசதிகள் இல்லாமை, போதிய உணவின்மை ஆகியவை பெரிய பிரச்சினையாக இருந்தது.

குருநாகல் 

குருநாகலையில் இருந்த எனது சகோதரி பற்றியே எமது குடும்பம் அப்போது பெருங்கவலை கொண்டிருந்தது. தமிழ்பேசும் மக்கள் வாழும் மன்னாரில் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். கொழும்பில் இருந்து குருநாகலை நோக்கி சென்ற பஸ் ஒன்று அளவ்வ பகுதியில் இடைமறிக்கப்பட்டு அதில் இருந்த சகல தமிழ்ப் பயணிகளும் கொல்லப்பட்டதாகவும் சடலங்கள் பாலத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதாகவும்  செய்திகள் வெளியாகின. அதனால் எனது சகோதரி பாதுகாப்பாக இருப்பாரா இல்லையா எமது குடும்பம் கவலைப்பட்டது. என்னைப் பொறுத்தவரை  நான் மன்னாரில் பாதுகாப்பாக இருக்கும்போது எனது குடும்பத்துக்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று பெரும் வேதனையாக இருந்தது.

ஆனால், எனது சகோதரி பாதுகாப்பாக குருநாகலை போய்ச் சேர்ந்தார். வெளியில் தலைகாட்டாமல் அவர் வீட்டுக்குள்ளேயே அமைதியாக இருந்தார். குடும்பத்தின் ஏனையவர்கள் பற்றியே அவருக்கு கவலை. குருநாகலையில் எமது அயலவர் ஒரு சிரேஷ்ட சிங்கள பொலிஸ் அதிகாரி. அதனால்  அயலில் இருந்த தமிழர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டார்கள்.

மன்னார்

எனது குடும்பத்தின் கதி பற்றியே எனக்கு மனக்கலக்கமும் அச்சமும். அந்த நாட்களில் கைத்தொலைபேசி இருக்கவில்லை. கொழும்பு போன்ற தொலைதூர இடக்களுக்கு தொலைபேசி அழைப்பு  ஒன்றை எடுப்பதும் மன்னாரில் ஒரு பிரச்சி னயாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக நான் அன்றைய மன்னார் மாவட்ட அமைச்சராக இருந்த மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஈ. எச். மஹ்ரூப்பின் செயலாளராக இருந்த ரெறன்ஸ் பிலிப்புப்பிள்ளை என்ற தமிழ் அரசாங்க அதிகாரியுடன் தொடர்புகொண்டேன்.

அந்த நாட்களில் நான் ' சண்டே ஐலண்ட் '  பத்திரிகையில் ' கிடுகு வேலிக்கு பின்னால் ' ( Behind the Cadjan Curtain) என்ற வாரஇறுதிப் பத்தியொன்றை எழுதிக்கொண்டிருந்தேன்.  மன்னார் மாவட்ட அமைச்சரின் செயலாளர் ரெறன்ஸ் அதை தவறாது வாசிக்கும் ஒரு எனது ரசிகர் என்பதை அறிந்ததும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. அதற்கு பிறகு தொலைபேசி அழைப்பை எடுப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.

மன்னாரில் இருந்து ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்பில் இருந்தேன். வன்முறை வெடித்தபோது  பத்திரிகையின் ஆசிரியர் நாட்டில் இருக்கவில்லை. அன்றைய பிரதி ஆசிரியர் காமினி வீரக்கேன்  பொறூப்பாக இருந்தார். ஆசிரிய பீடத்துடன் கிரமமாக தொடர்புகொண்டு எ்்ன நடக்கிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். எனது ஆசிரிய பீடச் சகாக்களும் நண்பர்களுமான அஜித் சமரநாயக்கவும் பிரசாத் குணவர்தனவும் அலுவலக  வாகனத்தில் இரத்மலானைக்கு சென்று எனது குடும்பத்தவர்கள் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை வீட்டு உரிமையாளரின் மூலமாக அறிந்து கொண்டனர்.

அதேவேளை , இரத்மலானை விமான நிலைய அதிகாரிகள் ஆட்கள் உள்நாட்டு தொலைபேசி அழைப்புக்களை எடுப்பதற்கு அனுமதிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் அந்த நாட்களில் பிரதமர் ரணசிங்க பிரேமதாசவுக்கு நெருக்கமாக இருந்தவருமான எமக்கு  சகோதரர் உறவுமுறை கொண்ட  நோபல்  வேதநாயகத்துடன் எனது பெற்றோர் தொடர்பு கொண்டனர். நோபல்அண்ணா பம்பலப்பிட்டியில் புதிய வீட்டு்க்கு மாறி புதுக்கடையில் இருந்த  முன்னைய வீட்டை தனது அரசியல் அலுவலகமாக மாற்றியிருந்தார்.

அவரின் புதுக்கடை வீடு ஒரு மினி அகதிமுகாமாக மான்றப்பட்டிருந்தது. உறவினர்கள் அங்கு ' தஞ்சம் ' அடைந்தார்கள். அதற்கு பொலிஸ் பாதுகாப்பு இருந்தது. கொழும்பு  12 இல் இருந்த நோபல் அண்ணாவின்  அந்த வீட்டுக்கு எனது குடும்பத்தை கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

எனது குடும்பமும் உறவினர்களில் பெரும்பாலானவர்களும் மெதடிஸ்காரர்கள். ஜூலை 29 வெள்ளிக்கிழமை மூன்று மெதடிஸ் மதகுருமார் எனது குடும்பத்தை புதுக்கடைக்கு கூட்டிச் செல்ல ஒரு வானில் வந்திருந்தனர். வாகனத்தில் நிறைய ஆட்கள் இருந்ததால் தாயாரும் சகோதரியும் அதில் செல்வது என்றும் தந்தையாரும் சகோதரனும் பஸ்ஸில் பின்தொடர்ந்து செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜூலை  28  வியாழக்கிழமை கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வன்முறை தணிந்து நிலைவரம் மெல்லமெல்ல வழமைக்கு திரும்புவதைப் போன்று தோன்றியது. ஆனால் திடீரென்று நிலைவரம் மாறியது.

மயிரிழையில் உயிர்தப்பினர்

விடுதலை புலிகள் கொழும்புக்கு வந்து தாக்குதல் நடத்துவதாக வதந்தி ஒன்று பரவத்தொடங்கியது. இது வதந்தி மாத்திரமே. ஆனால் தமிழர்களை மீண்டும் தாக்குவதற்கு சாக்குப்போக்காக அமைந்தது. ஓரளவு பாதுகாப்பாக இருந்த அகதி முகாம்களை விட்டு வெளியேறிய பல தமிழர்கள் அந்த களங்கம் மிக்க 'கொட்டி தவசவ' வில் (புலிகள் தினத்தில்) கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவை  பெருங்கவலைக்குரிய சம்பவங்கள். அந்த வெள்ளிக்கிழமை எனது தந்தையாரும் சகோதரரும் மயிரிழையில் உயிர்தப்பினர்.

விமான நிலைய முகாமில் இருந்து புறப்பட்டு, புதுக்கடைக்கு வருவதற்கு பஸ்ஸையோ, டாக்சியையோ அல்லது முச்சக்கர வண்டியையயோ பிடிப்பதற்காக  அவர்கள் இருவரும் காலி வீதி நோக்கி நடந்துவந்தனர். ஆனால் காலி வீதியை அவர்கள் அடைந்தபோது தமிழர்களை மீண்டும் ஆவேசத்துடன் தேடிக்கொண்டிருந்த குண்டர்கள் கூட்டத்துக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த களேபரத்தில் தந்தையாரும்  சகோதரரும் பிரிந்துவிட்டனர்.

சகோதரர் வன்முறைக் கும்பலுக்குள் கலந்து சிறுது நேரம் அதன் ஒரு்பகுதியாகவே மாறியிருந்தார். வன்முறைக் கும்பலில் ஒரு பிரிவினர் தமிழ்்அகதிகளை ஒழித்துக்கட்டப்போவதாக  அச்சுறுத்திக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். எனது சகோதரரும் அவர்களுடன் சேர்ந்து சுலோகங்களை எழுப்பிக்கொண்டு சென்றார். கும்பல் விமான நிலையத்தை அடைந்ததும் எனது சகோதரர் கும்பலிடமிருந்து நழுவி தனது முகாம் அடையாள அட்டையைக் காண்பித்து முகாமுக்குள் சென்றுவிட்டார். கும்பல் சீற்றத்துடன் அங்கு காவல் கடமையில் இருந்த கடற்படை வீரர்களை நோக்கி தூஷண வார்த்தைகளினால் திட்டியது. ஆனால் கடற்படை வீரர்கள்உறுதியாக நிற்கவே கும்பல் படிப்படியாக கலைந்து சென்றது.

எனது தந்தையார் இன்னொரு பிரிவு கும்பலுடன் மோசமான அனுபவத்தைச் சந்தித்தார். சிலர் அவரைத் தமிழர் என்று சந்தேகித்து பயமுறுத்தினர். அவர் சரியான உச்சரிப்புடன் கச்சிதமாக சிங்களத்தை பேசியதால் அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதை குண்டர்களினால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. பௌத்த கதை ஒன்றைக் கூறுமாறு அவர் கேட்கப்பட்டார். தான் ஒரு பௌத்தர் அல்ல கிறிஸ்தவர் என்று உண்மையாக அவர் பதிலளித்தார். சிலர் அவரது கழுத்தை நெரித்தனர்." என்னைப் போன்ற வயோதிபனைக் கொலை செய்வதில் உங்களுக்கு  என்ன பிரயோசனம்" என்று மூச்சுவிடக் கஷ்டப்பட்ட வண்ணம் தந்தையார் சிங்களத்தில் அவர்களைக் கேட்டார். அவர்கள் விடுவித்ததும் அவரும்  நேரடியாக விமானநிலைய முகாமுக்கே சென்றார்.

மெதடிஸ் மதகுருமார்

மெதடிஸ் மதகுருமாருடன் சென்ற வாகனத்தையும் குண்டர்கள் வழிமறித்து பயமுறுத்தினர். சிங்கள போதகர் பேசி ஒருவாறாக பேசி அவர்களிடமிருந்து விடுபடக்கூடியதாக இருந்தது. ஆனால் கொழும்பு நோக்கிப் போவது ஆபத்து என்ற உணரப்பட்டதால் தசையை மாற்றி வாகனம் மொரட்டுவையைச் சென்னடைந்தது. வார இறுதி முழுவதும் தாயாரும் சகோதரியும் சிங்கள  மெதடிஸ் வீடொன்றில் தங்க வைக்கப்பட்டனர். ஜூலை 31 ஞாயிற்றுக்கிழமை மாலை மெதடிஸ் மதகுருமார் தாயாரையும் சகோதரியையும் புதுக்கடைக்கு கூட்டிவந்தனர். அவர்களுக்கு அங்கு மகிழ்ச்சியும் இன்ப அதிர்ச்சியும் காத்திருந்தது. குருநாகலையில் இருந்த எனது மற்றைய சகோதரி நோபல் அண்ணாவின் பாதுகாப்பான  புதுக்கடை வீட்டுக்கு வந்துவிட்டார். குருநாகலையில் அயலில் இருந்த சிங்கள பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் சகோதரி பொலிஸ் ஜீப் ஒன்றில் அங்கு கடடிவரப்பட்டார். தந்தையாரும் சகோதரரும் கூட புதுக்கடைக்கு திங்களன்று வந்துசேர்ந்தனர். என்னைத் தவிர முழுக் குடும்பமும் மீண்டும் இணைந்துவிட்டது.

மேலும் உறவினர்கள் படையெடு்க்கவே புதுக்கடை வீடு நிறைந்துவிட்டது. அதனால் பெண்களையும் சிறுவர்களையும் மாத்திரம் அங்கு தங்கவைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தந்தையாரும் சகோதரனும்  அங்கிருந்து  வெளியேறி கல்கிசை சென். தோமஸ் கல்லாரியில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் தங்குவதற்கு வாய்ப்பைத்  தேடிக்கொண்டனர்.

தாங்கள் சகலரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தாயாரும் சகோதரியும் புதுக்கடையில் எமது நோபல் அண்ணாவின் வீட்டில் தங்கியிருப்பதாகவும் எனது குடும்பம் ' த ஐலண்ட் ' ஆசிரிய பீடத்துக்கு அறிவித்தது. மன்னார் மாவட்ட அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து நான் தொலைபேசியில் அவர்களுடன் பேசினேன்.

கொழும்புக்கு திரும்பினேன்

1983  ஆகஸ்ட் 4 ஆம் திகதி நான் கொழும்புக்கு திரும்பினேன். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு உள்ளூர் நிருபராக இருக்கும் மன்னாரைச் சேர்ந்த முஹமட் என்ற ஒரு பத்திரிகையாளர் நண்பர் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடன் பேசி அவரது சொந்த இடமான கண்டிக்கு என்னை வாகனத்தில் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார். வழியில் பிரச்சினை ஏதாவது வருமென்றால் நான் அவரின் ஒரு முஸ்லிம் உறவினராக என்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். 

அந்த நேரம் வன்முறை தணிந்திருந்தது. அதனால் மன்னாரில் இருந்து கண்டிக்கான கார்ப்பயணம் சம்பவம் எதுவுமின்றி இனிதே அமைந்தது. கண்டியில் இருந்து கொழும்பு பஸ் ஒன்றில் ஏறி நேரடியாக கொட்டாஞ்சேனையில் புளூமெண்டால் வீதியில் அமைந்திருக்கும் ' த ஐலண்ட் '  அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டதும் சகாக்களும் நண்பர்களும்  மகிழ்ச்சியடைந்தனர்.

நான் உடனே வேலையில் மூழ்கி உடனடியாகவே எனது பெயரில் எழுதத் தொடங்கினேன். நடந்துமுடிந்த சம்பவங்களைச்  சமாளிப்பதற்கு  நான் கையாண்ட வழி அது. பத்திரிகையில் எனது பெயரைக் கண்டதும் நண்பர்களும் என்னுடன் தொடர்புகளைப் பேணுகிறவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னுடன் பேசத்தொடங்கினர்.

நான் 'த ஐலண்ட்'  வளாகத்திலேயே தங்கியிருந்து அலுவலகத்துக்கு அருகாமையில் இருந்த சிங்கள, முஸ்லிம் உணவகங்களில் சாப்பிட்டேன். சாரதிகளின் விடுதியில் குளித்தேன். செய்திப்பத்திரிகைக் கோவைகளை தலையணையாக பயன்படுத்தி ஆசிரியபீட மேசைகளில் இரவில் நித்திரைகொள்வேன். இரவில் என்னுடன் அஜித்,பிரசாத் மற்றும் குலே (  கே.சி. குலசிங்க ) ஆகியோர் என்னுடன் கூட இருப்பர்.

நாடு்திரும்பிய ஆசிரியர் விஜிதா யாப்பா அலூவலகத்தில் இரவில் தங்குவதையும் சாதிகளின் விடுதியில் குளிப்பதையும் கண்டு பெரிதும் கவலையடைந்தார். எம்.ஆர்.ஏ. (Moral Re - armament)  அமைப்பின் ஒரு நீண்டகால உறுப்பினரான விஜிதா எனது பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டினார். அவர் ஒரு மற்றவர்களின் துன்பங்களைக் கண்டு இரங்குகின்ற சுபாவமுடைய உணர்ச்சிபூர்வமான ஒரு ஆன்மா.  என் முன்னால் கண் கலங்கி அழுது சில சிங்களவர்களினால் தமிழர்களுக்கு செய்யப்பட்ட கொடுமைக்காக மன்னிப்புக் கேட்டார்.

விஜிதா தனது மாமாயாரின் வீட்டில் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு அறையில் என்னை தங்கவைத்தார். காலையில் தனது காரில் அலுவலகத்துக்கு என்னை கூட்டிச்சென்று பிறகு  இரவில் கொண்டுவந்து இறக்கிவிடுவார்.இது பண்பட்ட ஒரு ஆசிரியரின் நல்லெண்ண வெளிப்பாடு. அவரது மாமியாரும் கூட பரிவிரக்கம் கொண்ட ஒரு பெண்மணி. அவர்களது இரக்ககுணத்தை நான் மெசிசினாலும் , அங்கு தொடர்ந்தும் தங்கியிருப்பது எனக்கு எதோ அசௌகரியமானதாக இருந்தது.

அதனால் நான் எனது கொட்டாஞ்சேனை அறைக்கு திரும்பினேன். அது முப்பதுக்கும் அதிகமான தமிழர்கள் தங்கியிருந்த ஒரு பெரிய விடுதியின் ஒரு பகுதி. இப்போது தனந்தனியனானேன்.  எனது அறையில் தனியாக படுத்திருந்து 'த ஐலண்ட்'  ஆசிரிய பீடத்துக்கு தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்தேன். படிப்படியாக விடுதிக்கு மற்றையவர்களும் வரத்தொடங்கினார்கள்.

கட்டைவேலி

அதேவேளை எனது குடும்பம் இரத்மலானைக்கு திரும்பிச் செல்வதற்கு முயற்சித்தது. ஆனால் எங்களது இருப்பிடம் குறித்து தன்னிடம் அடிக்கடி விசாரிக்கப்படுவதாகவும் அதனால் திரும்பிவரவேண்டாம் என்று வீட்டு உரிமையாளர் எச்சரிக்கை செய்தார். அதனால் தாயாரும் இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் உள்ள தாயாரின் பூர்வீக கிராமமான கரவெட்டிக்கு ரயிலில் சென்றார்கள். எமது முன்னாள் வீட்டு உரிமையாளர் எமது தளபாடங்களை அப்புறப்படுத்துமாறு கேட்டதால் சில வாரங்கள் கழித்து அவற்றை நாம் இரத்மலானையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் சென்றோம்.

தந்தையார் குருநாகலைக்கு திரும்பிய அதேவேளை நானும் சகோதரனும் கொழும்பில் தங்கியிருந்து வேலை செய்தோம். சில மாதங்கள் கழித்து எனது சகோதரி குருநாகலையில் வேலைக்கு வரவேண்டியிருந்தது. அல்லது ஆசிரியை தொழிலை அவர் இழக்கவேண்டி வந்திருக்கும். இந்த சூழ்நிலைகளில் தாயாரும்  இரு சகோதரிகளும் யாழ்ப்பாணத்தை விட்டு மீண்டும் குருநாகலைக்கு திரும்பிவந்தனர்.

இதுவே எனது குடும்பத்தின் கறுப்பு ஜூலை அனுபவம் பற்றிய கதை. இது அந்த நாட்களின் பல கதைகளில் ஒன்று. ஒவ்வொன்று வெவ்வேறு விபரங்களைக் கொண்டவை. ஆனால் சாராம்சத்தில் ஒரே மாதிரியானவை.எமது குடும்பத்தின் கதையை அக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கூறுவதற்கு நான் முயற்சித்திருக்கிறேன். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது அது உணர்ச்சிவசப்பட வைப்பதாகவும் வேதனையானதாகவும் இருக்கும்.

https://www.virakesari.lk/article/189003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம் - 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு - 2

Published By: RAJEEBAN

25 JUL, 2024 | 05:08 PM
image
 

Sri Lanka, Island of Terror - An Indictment

 

by Thornton, E.M. & Niththyananthan, R.

தமிழில் - ரஜீபன்

thornton.jpg

 

வீதியின்  மறுபக்கத்திலிருந்து பௌத்த மதகுருமார்  பேரணியாக அந்த சந்தியை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் கைககளை அசைத்து சத்தமிட்டனர்,அவர்களில் ஒருவர் அனைத்து தமிழர்களையும் கொலை செய்யவேண்டும் ஒருவரை கூட தப்பவிடக்கூடாது என காடையர்களை நோக்கி கூச்சலிட்டார்.

நான் கடும் அச்சத்தின் பிடியில் சிக்குண்டேன்-சில நிமிடம் சிந்தித்த பின்னர் விரைவில் வீட்டுக்கு செல்வதே சிறந்த விடயம் என தீர்மானித்தேன்.

பேருந்து மூலம் பயணி;ப்பது மிகவும் ஆபத்தான விடயம் என்பதால் நான் நடந்தே வீட்டிற்கு செல்ல தீர்மானித்தேன்.

9.30 -நுகேகொட சந்தியிலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவிலிருந்த எனது வீட்டை நோக்கி நான் நடக்கதொடங்கினேன்- வீதியின் இரு மருங்கிலும் இருந்த கடைகளை மக்கள் சூறையாடிக்கொண்டிருந்தார்கள்.கடைகளை முழுமையாக கொள்ளையடித்த பிறகு அவற்றை தீயிட்டு கொழுத்தினார்கள்.

தொலைவில் இராணுவத்தினரின் ஜீப்பினை பார்த்தேன்.ஒருவித நிம்மதியுடன் நான் அதனை நோக்கி நடந்தேன், ஆனால் எனக்கு அதிர்ச்சி  காத்திருந்தது,ஜீப்பின் மேற்பகுதியில் ஆறு ஏழு  இராணுவத்தினர் அமர்ந்திருந்தார்கள் அவர்கள் காடையர் கும்பல் சூறையாடுவதற்கான கொள்ளையடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்,நான் திகைத்துப்போனேன்.

10.45- நான் மஹரகமவில் உள்ள எனது வீட்டை சென்றடைந்தேன்.அங்கு இன்னமும் எதுவும் நடக்கவில்லை.நான் வீட்டிற்குள் சென்றதும் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.அதன் பின்னர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் சென்று நிலத்தை ஆழமாக தோன்றி அதற்குள் பெறுமதியான பொருட்களை துணி பொலித்தீனால் மூடி புதைத்தேன்.

11.30- எனது வீட்டிற்கு வெளியே பெரும் சத்தங்கள் கேட்டன,கூச்சல் குழப்பமான நிலை காணப்பட்டது.ஜன்னலால் எட்டிப்பார்த்தேன்.

அரசாங்கத்திற்கு சொந்தமான பல ஜீப்கள்,இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேருந்துகள் திடீரென அந்த பகுதிக்கு வந்தன.

அந்த பேருந்துகள் ஜீப்புகளில் இருந்து பலர் கத்திகள் வாள்களுடன்  இறங்கினார்கள்.சுமார் 200 பேர் இருப்பார்கள் அவர்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் தமிழ் மக்களின் வீடுகளை நோக்கி ஒடினார்கள்.

அவர்களின் தலைவர்கள் போன்று தோற்றமளித்த ஒரு பத்துபேரின் கரங்களில் பேப்பர் போன்ற ஆவணங்கள் காணப்பட்டன,( அவை தேர்தல் வாக்காளர் பதிவேடுகள் என பின்னர்தான் தெரியவந்தது)அவர்கள் தமிழர்களின் வீடுகளை நோக்கி காடையர்களை வழிநடத்திக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இருவரை என்னால் அடையாளம் காணமுடிந்தது,ஆளும் கட்சியின் தேர்தல் கூட்டங்களில் நான் அவர்களை சமீபத்தில் பார்த்திருக்கின்றேன்( ஐக்கிய தேசிய கட்சி)

எனது வீட்டிற்கு நேரே தமிழர்களின் வீடுகள் இருந்தன,காடையர்கள் ஜன்னல்களை உடைத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.அந்த வீடுகள் தீப்பிடித்தன,தீ வானளவிற்கு உயர்ந்தது.உள்ளேயிருந்தவர்கள் அலறினார்கள்.

11.45- நான் ஜன்னலை மூடிவிட்டு உள்ளே சென்றேன் - மெழுகுதிரியை கொழுத்தி அந்தோனியரை வணங்கினேன்  தமிழர்களை பாதுகாக்குமாறு மன்றாடினேன்.

12.25 நான் வானொலியி;ல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் செய்தியை செவிமடுக்க ஆரம்பித்தேன்.பாதுகாப்பு அமைச்சின் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளியானது.

 1.30 மணி  நான் தொடர்ந்தும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவேளை வெளியே பெரும் அலறல்கள் சத்தங்கள் கேட்டன.

பலர் இரண்டு யுவதிகளை கூந்தலில் பிடித்து இழுத்து வந்துகொண்டிருந்தனர். எனது வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்தவர்கள் என நான் அடையாளம் கண்டுகொண்டேன்.'

 

_108010108_blackjuly03.jpg

 

மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள்.

திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள்.

அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின்  பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள்.

பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன

காடையர்கள் கைகளில் சிக்கிய தமிழ் சகோதரிகள்; காடையர்களுக்கு உத்தரவு பிறப்பித்த இராணுவம் - 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு - 2 | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்- 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-3

Published By: RAJEEBAN

26 JUL, 2024 | 05:39 PM
image
 

Sri Lanka, Island of Terror - An Indictment

 

by Thornton, E.M. & Niththyananthan, R.

 

தமிழில் - ரஜீபன்

thornton.jpg

 

மூத்த சகோதரிக்கு 18 வயதிருக்கும் இளைய சகோதரிக்கு 11 வயதிருக்கும். அவர்களை எனது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்தார்கள்,காடையர்கள் கும்பல் அவர்களை சூழ்ந்துகொண்டது.அவர்களை என்ன செய்யலாம் என அவர்கள் விவாதித்தார்கள்.

திடீரென ஒருவன் அந்த சிறுமியை தனது கையில்பிடித்து இழுத்து தனது கையிலிருந்த கத்தியால் வெட்ட தொடங்கினான்.நான் மிகுந்த அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

மூத்த சகோதரி அச்சத்தினால் பேச்சு இழந்து ஒரு சிலையை போல காணப்பட்டாள்.

 

அதன் பின்னர் அவள் அந்த காடையர்களின்  பைத்தியக்காரத்தனமான சிரிப்பிற்கு மத்தியில் அவர்களின் காலில் விழுந்து தனது சகோதரியை எதுவும் செய்யவேண்டாம் என மன்றாடினாள்.

 

பின்னர் அங்கிருந்த ஒருவன் கோடாரியை எடுத்து சிறுமியின் தலைiயை கொத்தினான்.மூத்தவள் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவளுடைய தங்கை கொல்லப்பட்ட கொடுரமாக கொல்லப்பட்டவேளை அவள் அனுபவித்த அளவிடமுடியாத அச்சம் பயங்கரம் ஆகியவற்றின் கலவையான உணர்வுகள் உதவியற்ற அமைதியற்ற தன்மையின் தெளிவற்ற உணர்வுகளாக மாற்றம்பெற்றன

அவர்கள் தனது ஆடைகளை பலவந்தமாக அகற்றியவேளையிலும் அவள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தனக்கு  ஏற்படுத்தப்பட்ட வலிகள் தன்னை பாதிக்காத நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள்.

தன்மீது சுமத்தப்பட்ட ஈடு செய்ய முடியாத அவமானம் குறித்து அவள்வெட்கப்படவில்லை.

ஏறைக்குறைய 20 ஆண்கள் அவளை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய பின்னரே ஒருவன் ஏனையவர்களை எச்சரித்தான் . அவளை மூர்க்கத்தனமாக உலுப்பினான்.

அவள் கத்தவும் போராடவும் தொடங்கினாள்,சுற்றிலும் பார்த்த அவள் தனது உடலில் இருந்து குருதி வெளியேறிக்கொண்டிருப்பதை முதல்தடவையாக உணர்ந்தாள்.

நான் உதவியில்லாத பார்வையாளனாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் திடீரேன தனது முஷ்டிகளை இறுக்கிக்கொண்டாள்,பின்னர் அவளது முகத்த்தில் உதவியற்ற சரணடைதல் தென்பற்றது.அவள் வானத்தை அண்ணாந்து பார்த்து தனக்குள் முணுமுணுக்க ஆரம்பித்தாள்.

ஆண்டவரே அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களிற்கு தெரியாததால் அவர்களை மன்னியுங்கள்

அவள் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு மயக்கத்திலாழ்ந்தாள்.அவர்கள் பின்னர் அவள்மீது பெட்ரோலை ஊற்றி எரித்தனர்.

உயிருடன் ஒருவர் எரிக்கப்படுவதை இரண்டாவது தடவையாக நான் அன்றைய தினம் பார்த்தேன்.

நாங்கள் மத்திய காலத்திற்குள் நுழைந்துவி;ட்டோமோ என நான் சிந்தித்தேன்.

இன்றைய காலத்து சிங்கள பௌத்தர்களை விட வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் - காட்டுமிராண்டிகள் மிகவும் நாகரீகமானவர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

3.15- இரண்டுமணிக்கு ஊரடங்கு உத்தரவு அமுலிற்கு வந்திருக்கவேண்டும் ஆனால் அந்த பகுதி களியாட்ட நிகழ்வு இடம்பெறும் பகுதி போல காணப்பட்டது. சூறையாடப்பட்ட பொருட்களை மக்கள் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்.

ஆடைகள் முதல் தளபாடங்கள் வரை சூறையாடப்பட்டன.

இராணுவ டிரக் அங்கு வந்தவேளை சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பிச்செல்ல முயலவில்லை.

அவர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள் என்ற செய்தி அவர்களிற்கு சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

_108010106_blackjuly05.jpg

4.30  - வரை இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தன.சூறையாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் ஆறுதலாக அவசரமின்றி தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஆச்சரியமளிக்கும் விதத்தில் அவர்கள் இன்னமும் எனது வீட்டை தாக்கவில்லை.மஹரகம வாக்காளர் பட்டியலில் நான் என்னை பதிவு செய்யாததே இதற்கு காரணம்;.

நான் ஒரு தமிழன் என யாரோ காடையர்களிற்கு தகவல் வழங்கப்போகின்றார்கள்.

எனது குடும்பத்தவர்கள் உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததால் நான் மாத்திரம் வீட்டிலிருந்தேன்.

6.15 - அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது எனினும் அவர்கள் தொடர்ந்தும் சூறையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

பெடெஸ்டல் மின்விசிறியொன்றை யுவதியொருவர் கொண்டு செல்வதை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இன்னுமொரு குழுவினர் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட யுவதிகள் பல பொதிகளை கொண்டுசென்றுகொண்டிருந்தனர்.உடைகளாகயிருக்கவேண்டும்.

 

7மணி இன்னமும் இருள் விலகவில்லை எனது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்- 1983 ஜூலை கலவரத்தை நேரில் பார்த்த ஒருவரின் மனதை கலங்கவைக்கும் நாட்குறிப்பு-3 | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • குற்றம் புரியாதவர்களை பொலிஸ் ஏன் தேடி வரபோறான் கோஷான், சுவிசிலும் பொலிஸ் அடியில் பிரபலமான அரோ, செங்காலன் என்று ஒரு சில கன்ரோனுகள் உண்டு   அடி வெளியில் தெரியாது. பிரான்சில் பொலிஸ் போகமுடியாத அடையார் கறுவல்  ஏரியாவுகளுமுண்டு என்று சொல்வார்கள். அடி பின்ன்னி எடுப்பதில் GIGN   எனப்படும் பிரெஞ்ச் பொலிஸ் பிரிவு பெயர் போனது என்றும் சொல்வார்கள்,    எதுக்கும்  GIGN   கிட்ட அந்தகாலத்தில் தவணை முறையில் கேட்டு வாங்கின நம்ம @விசுகு அண்ணா வந்து விளக்கம் தருவார் என்று நம்புகிறேன்,  சும்மா கலாய்க்கிறேன் டென்ஷன் ஆகுறாரோ தெரியல. இஸ்லாமியர்களுக்கு எதிராக உலகம் முழுவதும் வெறுப்புணர்வு தோன்றியதோ அதேபோல இந்தியர்களுக்கெதிராக மேற்குலகில் தோன்றிக்கொண்டிருக்கிறது. இந்த இரு சமூகமும் ஓரிடத்தில் தமது எண்ணிக்கை அதிகமானால் புறசூழல்பற்றி எதுவும் சிந்திக்காது ஒரு நாட்டிற்குள்  தமக்கென்று ஒரு தனிநாடு உருவாக்குவார்கள். அமெரிக்கா கனடாவில் எப்போதோ தோன்றிவிட்டது. இந்தியர்கள் பெரும்பான்மையான இடத்தில் இஸ்லாமியர்களைபோலவே அவர்கள் ஆட்களை தவிர வேறு எவருக்கும் வேலை கொடுக்கமாட்டார்கள் பகுதிநேர வேலைக்குகூட  எடுக்க மாட்டார்கள்,  அதனால் வெள்ளைக்காரர்கள்கூட வேலை வாய்ப்பு பெறமுடியாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதுதான் சோகம். இந்த சம்பவங்கள் மட்டுமல்ல இந்தியாவில் புளூ பிலிமைபார்த்துவிட்டு  இங்கு வந்து வெள்ளைக்காரிகள் என்றால் எல்லோருமே படுக்கைக்கு உரியவர்கள் என்பதுபோல் நடந்து கொள்வது அவர்களை பார்த்து ஹிந்தி பாட்டு பாடுவது, சில வருடங்களின் முன்பு பாதாள ரயிலில்பயணம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது, எதிரே ஒரு வெள்ளைக்காரி அமைதியாக  புத்தகம் படித்துக்கொண்டிருந்தார் பார்த்தாலே ஏதோபெரிய உத்தியோகத்திலிருப்பதுபோல் தெரிந்தது, சைட் சீட்டில் இருந்த இந்தியர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் அவ கவனிக்கவே இல்லை ,  திடீரென்று எழுந்து நேரம் என்னமேடம் என்று கேட்டார் அவரும் சிரித்தபடியே சொன்னார் ,இத்தனைக்கும் அவனிடமும் போன் இருந்திருக்கும், ரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றபோது தேங்க்யூ மேடம் என்று சொல்லிட்டு அந்த பெண்ணின் தலையை பிடித்து உதட்டில் அழுத்தி கிஸ் பண்ணிட்டு இறங்கி போனான். கதவை பூட்டிட்டு ரயில் கிளம்பிவிட்டது அந்தபெண் அப்படியே நிலை குலைந்து போனார் இயல்புக்கு வரவில்லை , ரிசு எடுத்து வாயை துடைத்துக்கொண்டே இருந்தார். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் நான் ஜம்ப் பண்ணி அடுத்த பெட்டியில ஏறிட்டன், அவனில உள்ள கோபத்தில் எனக்கு ஒரு காட்டு காட்டிவிட்டால் என்னாகும் மானம்?   
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல் பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
    • கிழக்கை மண்ணை காப்பாற்றுவதற்காக மக்களுடன் இனைந்து கடந்த 15 வருடமாக  போராடிவருகின்றோம். எனவே கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் சைக்கிளுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போது தான் கிழக்கை காப்பாற்ற முடியும் என இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் கிழக்கு மண்ணிலிருந்து அறைகூவல் விடுத்துள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சந்தியில் புதன்கிழமை(06) மாலை சைக்கிள் சின்னதில் தேர்தல் பிரச்சாரத்துக்கான கட்சி காரியாலயம் திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.   இந்த தேர்தலை இதுவரைக்கும் நடந்த தேர்தல்போல எங்கள் மக்கள் கையாளக் கூடாது என ஆரம்பத்திலிருந்தே தெரிவித்துவருகின்றோம். இந்த தேர்தல் தமிழ் மக்களுக்குப் பேரம் பேசக்கூடிய இறுதி சந்தர்ப்பமாக அமையப் போகின்ற இந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களுடைய வாழ்வு  இந்த தீவிலே ஒரு அடிமைத்தனமாக இருக்கப் போகின்றதா? அல்லது சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் சம உரிமையோடு வாழப்போகின்றோமா? என்ற ஒரு கேள்வி எழுப்புகின்ற ஒரு தேர்தல் அமையப் பெற்றிருக்கின்றது. தமிழர்களை பொறுத்தமட்டில் தமிழர்கள் ஒரு நீண்ட நெடிய வரலாற்று ரீதியாகப் போராடி ஒரு மரபுவழியாக தமக்கான ஒரு தனித்துவத்தை பெற்றிருக்கும் ஒரு இனம் அதனடிப்படையில் தமிழர்கள் இந்த தீவிலே சுதந்திரமாக வாழ்வதற்காக அதிக விலை கொடுத்துள்ளனர், உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர், கோடான கோடி சொத்துக்களை இழந்துள்ளனர் நிலங்களைப் பறிகொடுத்துக் கட்டமைக்கப்பட்ட இனழிப்புக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் இந்த தேர்தல் தொடர்பாக மிகுந்த ஆர்வத்துடனும் கரிசனையுடனும் கையாளவேண்டும். வடக்கு கிழக்கிலே சைக்கிள் அணி மிகப் பெரும் பலமாக வந்து கொண்டிருக்கின்றது. தென்பகுதியை பொறுத்தமட்டில் ஒரு ஊழல் அற்ற நேர்மையான ஒரு அரச தலைவராக அனுரகுமார திசாநாயக்காவை  ஜனாதிபதியாக அந்த மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஆனால் வடகிழக்கிலே அவ்வாறான ஒரு தலைவரை இதுவரைக்கும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை ஆனால் இந்த தேர்தல் அந்த சந்தர்ப்பத்தை மக்களுக்குக் கொடுத்திருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளைச் சர்வதேச மட்டத்தில் பெற்றுக் கொடுப்போம்  அதற்கு தலமைதாங்க வேண்டும் என்ற அடிப்படையிலே தமிழர்கள் நம்பி யுத்தத்தின் பின்னர் மூன்று தடவைகள் வாக்களித்து அறுதி பெரும்பான்மையான ஆணைகளைப் பெற்று தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனழிப்புக்கு சந்தர்பம் கிடைக்கின்ற போதெல்லாம் அதனைத் தட்டிக்களித்து எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்காது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்ததை தவிர வேறு எந்தவொரு வேலையையும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்யவில்லை. அதனால் நாங்கள் கடந்த 15 வருடங்களாக தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வடகிழக்கிலே நடைபெறுகின்ற கட்டமைப்புசார் இடம்பெறும் இன அழிப்பை மக்களுடன் இணைந்து தடுத்து நிறுத்தி வருகின்றோம் அப்படிப்பட்ட எங்கள் தலைமைக்கும் அணிக்கும் ஒரு தடவை இந்த தேர்தலில் சந்தர்ப்பம் தாருங்கள். எந்த நோக்கத்தோடு எங்களைச் சிங்கள தேசம் அழித்ததோ அதற்கான பரிகாரத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் பேரம் பேசி .நா. மனித உரிமை இனழிப்பு தொடர்பான பொறுப்புக்கூறலை சரியான இடத்துக்கு கொண்டு செல்ல ஆணையை தாருங்கள் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்காகச் செயற்படுகின்ற சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் இந்த அணியைப் பலப்படுத்தப் போகின்றீர்களா? இல்லை வழமைபோன்று சாராயம் அரிசி மாவுக்கும் வெறும் சலுகைகளுக்கும் நீங்கள் வாக்களித்து இனிமேல் உரிமை என்றால் என்ன என்று கேட்கமுடியாத ஒரு நிலைக்கு இட்டுச் சென்று நிரந்தரமாகத் தமிழர்கள் அடிமையாகப் போகின்றோமா? என்ற கேள்வியைப் பெருவாரியான மக்கள் விளங்கி வடக்கிலும் கிழக்கிலும் சைக்கிள் அணிக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக கடந்த 15 வருடங்களாக இந்த மண்ணில் இருந்து போராடி செயற்பட்டு வருகின்றோம் கிழக்கில் மக்கள் நிச்சயமாக ஆணையை தரும் அதேவேளை வடக்கில்; எங்கள் கட்சி மீது மக்கள் திசை திரும்பியுள்ளனர் அதனால் ஏனைய சிங்கள கட்சிகளும் அவர்களுடன் சோந்திருக்கின்ற கட்சிகளும் குழப்புவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலே கூடியளவு சாராயம் மற்றும் பணங்களையும் கொடுத்து இந்த மக்களை திசைதிருப்புவதற்கான வேலைத் திட்டங்களை செய்கின்றனர். வீடு, சங்கு, சின்னத்திலே போட்டியிடுகின்ற அந்த அரசியல்கட்சிகளின் கடந்தகால செயற்பாடு பற்றி எங்கள் மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் கிடையாது பிறிந்து செயற்படும் அத்தனை பேரும் இந்த இனத்தை அழிப்பதற்காக 2015ம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கான இடைக்கால யாப்பை உருவாக்கி வைத்துள்ளனர் எனவே  இந்த மண்ணிலே தமிழ் மக்கள் நிம்மதியாக சிங்கள மக்கள் போன்று ஒரு சுபீட்சத்துடன் வாழவேண்டும் என்றால் இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/198140
    • மக்களுக்கு அரசியலில் ஈடுபாடு குறைவடைந்து விட்டது – பெப்ரல். பொதுத் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை வெளிப்படுத்துவதோடு, மக்களிற்கு அரசியல் ஈடுபாடு குறைவடைவதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மாற்றமடைந்துள்ளமையும், பாராம்பரிய கட்சி கட்டமைப்பு குறித்த அதிருப்தியும் இதற்கு காரணம் என ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். வழமையாக வாக்காளர்களை உள்வாங்குவதற்காக 6,00,000 கட்சி அலுவலகங்களை அமைப்பார்கள், ஆனால் இம்முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் துஸ்பிரயோகம் போன்றவை தற்போதும் காணப்படுகின்ற போதிலும் ஆபத்தான கட்டத்தை அவை நெருங்கவில்லை, 25 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன அவை ஆபத்தான கட்டத்தை அடையவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1407705
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.